• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி......பாகம் -33

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal

ரகசிய கொலையாளி......

பாகம் -33

அந்த வீடியோவை ஆன் செய்து பார்த்தாள் மாயா.

ஒரு சேரில் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தான் மணிகண்டன்.

மணிகண்டன்..... சொல்லுங்க..... இன்னைக்கு மாயா கிட்ட என்ன பேசனீங்க?

என் மாயா இன்னைக்கு என் பிறந்தநாள் ன்னு கால் பண்ணி விஷ் பண்ணினா.....

ஹலோ.....

ஹேப்பி பர்த்டே டா......

தேங்க்ஸ் டி......

முதலிலேயே கால் பண்ணேன்..... ஏன்டா கட் பண்ணின.....

கிரைம் சீன் ஸ்பாட்ல இருக்கேன் டி.....

அதனால..... என் ஃபோனையே கட் பண்ணுவியா...... அவ்வளவு தைரியமா உனக்கு.....

அம்மா தாயே..... தெரியாம கட் பண்ணிட்டேன்..... இப்போ வேலையா இருக்கேன்..... ஆளை விடு......

மாமா.... மாமா.....

சொல்லுடி......

நான் இந்த வாரம் ஊருக்கு வரேன்...... உனக்காக ஒரு பர்த் டே கிஃப்ட் வாங்கி வரேன்.....

என்னது.....

அது சர்ப்ரைஸ்......

சரி ஓகே......

எனக்கு என்ன ரிட்டன் கிஃப்ட்?

ரிட்டன் கிஃப்டா?

ஆமாம்..... கிஃப்ட் கொடுக்கிறவங்களுக்கு ரிட்டன் கிஃப்ட் கொடுக்கனும்.....

கிஃப்ட் தான..... கொடுத்திட்டு போச்சு.....

கிஃப்ட் இல்ல..... ரிட்டர்ன் கிஃப்ட்.....

என்ன கிஃப்ட் வேண்டும் சொல்லு.....

உன் இஷ்டம் மாமா..... நீ என்ன கிஃப்ட் கொடுத்தாலும் எனக்கு பிடிக்கும்.....

சிரித்தான் மணிகண்டன்.
சரி சரி மாயா..... நான் அப்புறமா பேசறேன்..... வேலை இருக்கு.....

ஓகே மாமா..... லவ் யூ ஸோ மச்......

ஓகே டி..... பை.....

மாமா.....

என்ன டி......

நீ லவ் யூ சொல்லவே இல்லையே.....

ஏய்..... கிரைம் சீன்ல நின்னுக்கிட்டு..... லவ் யூ சொன்னா நல்லா இருக்காது டி.....

சரி சரி..... இப்போ சொன்ன இல்ல அது போதும்.....

எப்போ.....

லவ் யூ சொன்னா நல்லா இருக்காது ன்னு சொன்ன இல்ல...... அது லவ் யூ மட்டும் நான் எடுத்துக்கிறேன்...... என்றாள் என் மாயா.

ஓகே மாயா..... எனக்கு இன்னொரு கால் வருது..... பை.... பை..... என்றேன் நான்.

என்று சொல்லி முடித்தான்.

மாயாவிற்கு அந்த வீடியோவை பார்த்ததும் கண்கள் கலங்கியது.

இன்னொரு வீடியோவை ஆன் செய்து பார்த்தாள்.

இன்னைக்கு மாயா வரலையாம்...... மாமா மாமிக்கு தெரிஞ்சு அவளை திட்டினாங்களாம்..... அதனால சத்தியமா என்னோட பர்த் டேல பார்க்கலாம் ன்னு சொன்னா..... இதனால அவங்க அப்பா அம்மா கூட சண்டை பிரச்சனை வந்தாலும் அவ எனக்காக எல்லாத்தையும் எதிர்த்து சமாளித்து வரேன் ன்னு சொல்லி இருக்கா.... நான் அந்த நாளைக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்..... அவளுக்கு இரண்டு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன்..... ஒண்ணு என் பர்த்டேவோட ரிட்டர்ன் கிஃப்ட்..... இன்னொன்று அவ பர்த்டேவுக்காக நான் வாங்கி இருக்கும் கிஃப்ட்.... என்றான் மணிகண்டன்.

என்ன கிஃப்ட் மணிகண்டன்...... என்றார் டாக்டர் மதனகோபால்.

இல்ல..... நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்..... என் மாயா தான் முதல் முதலாக அதை பார்க்கனும்..... என்றான் மணிகண்டன்.

இதையும் கேட்டவுடன் மணிகண்டன் மேல் கருணையும் பாசமும் வந்தது மாயாவிற்கு.

மீனாவிற்கு கால் செய்தாள் மாயா.

தியேட்டரில் தன் கணவனுடன் இருந்தாள் மீனா.

கால் வருவதைப் பார்த்து விட்டு தன் கணவனிடம்.....

குமார்..... ஒரு நிமிஷம் டா..... முக்கியமான கால்.... நான் பேசிட்டு வரேன்.... என்றாள் மீனா.

இருடி..... நானும் கூட வரேன்.....

இல்லடா.... வேண்டாம்..... என்று சொல்லி விட்டு ஃபோனை எடுத்து கொண்டு வெளியே வருவதற்குள் கட் ஆகி விட்டது. மீனாவே மறுபடியும் கால் செய்தாள்.

ஹலோ சொல்லுங்க மேடம்.....

எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா மீனா...

சொல்லுங்க மேடம்.....

மணி மாமா நம்பர் கொஞ்சம் அனுப்ப முடியுமா?

கண்டிப்பா மேடம்..... என்று சந்தோஷமாக சொன்னாள்.

நாளைக்கு நான் உங்க மணி சாரை மீட் பண்றேன்..... போதுமா?

சந்தோஷமா இருக்கு மேடம்...... தேங்க்ஸ்.....

அவர் எனக்கும் மாமா தான்.... அதனால அவர் மேல எனக்கும் அக்கரை இருக்கு.....

சரி சரி மேடம்.... உடனே அனுப்பறேன்..... என்று சொல்லி தன் ஃபோனில் இருந்து மணிகண்டன் நம்பரை மாயாவிற்கு அனுப்பினாள் மீனா.

பின்னர் தன் கணவனுக்கு கால் செய்தாள்.

அவன் பதறி அடித்து கொண்டு வெளியே வந்தான்.

என்னடி..... என்னாச்சு......

ஒண்ணும் இல்லை குமார்..... தூக்கம் வருது படம் வேற போரிங்.... வீட்டிற்கு போகலாமா?

சரி வா.... என்று சொல்லி விட்டு அவளை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றான் குமார்.

அந்த நம்பரை மணி மாமா என்று இந்தியில் ஸேவ் செய்தாள் மாயா. ஏனோ தன் அம்மா அதைப் பார்த்து விட்டாள் பிரச்சனை வரும் என்று நினைத்து அப்படி செய்தாள்.

முதலில் வாட்ஸ் அப்பில் மெஸேஜ் செய்தாள்.

மாமா.... நான் மாயா.... அந்த பழைய நம்பர் நான் வழக்கமாக உங்க கிட்ட பேசுவேனே அதுல இதுக்கு மேல பேச வேண்டாம்..... இந்த நம்பரிலேயே கால் பண்ணுங்க.... மெஸேஜ் பண்ணுங்க.... இது தான் என் ரீசென்ட் ஃபோட்டோ.... உங்க ஃபிரெண்ட்ஸூக்கு காட்டுங்க.... என்று டைப் செய்து அனுப்பினாள் மாயா.
முதல் முறை மட்டும் இவ்வாறு சொல்ல சொன்னார் டாக்டர். அப்போது தான் அவன் மனதளவில் கற்பனை செய்து கொண்டு இருந்த மாயாவும் மற்றும் அவளுடைய ஃபோன் நம்பரையும் முதலில் அவன் மூளையில் இருந்து அழிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

மணிகண்டன் தூங்கி கொண்டு இருக்கவே அவன் மெஸேஜை பார்க்கவில்லை.

###############

நவீன் அந்த கேமராவில் பாரு ..... யாரோ அந்த பக்கம் போறாங்க டா.... என்றான் இளங்கோ.

உடனே அவன் பார்த்த போது....
யாரோ ஒருவன் மறைந்து மறைந்து காவேரியின் வீட்டின் உள்ளே செல்ல நினைத்தான்.

சிவா சார்..... என்றான் இளங்கோ.

அவர் உடனே எழுந்து..... அந்த ஆளை பிடிக்க ஓடினார்.

சிவா வருவதை பார்த்த அவன் தப்பி ஓட நினைத்தான்..... இளங்கோ மற்றும் நவீன் இருவரும் வெளியே ஓடி வந்தனர்..... இந்த பக்கமாக ஓட நினைத்தவன் இளங்கோ மற்றும் நவீன் இருப்பதைப் பார்த்து விட்டு அந்த பக்கமாக ராஜாவின் வீட்டைத் தாண்டி ஓடினான்.

அவனை ஓடி விரட்டி பிடித்தனர் மூவரும்.

உடனே மணிகண்டனிற்கு கால் செய்தான் இளங்கோ.

தூக்க கலக்கத்தில் ஃபோனை எடுத்த மணிகண்டன்.

சொல்லுங்க இளங்கோ..... என்றான்.

சார்..... காவேரி வீட்டிற்குள் நுழைய நினைத்த ஒருவனை பிடிச்சிட்டோம்..... என்றான்.

வாட்.....

ஆமாம் சார்..... நீங்க போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆயிடிச்சு..... நாங்க அந்த வீட்ல வாடகைக்கு ஈவினிங் வந்து தங்கிட்டோம்..... இப்போ தான் அவன் மறைஞ்சு மறைஞ்சு காவேரி வீட்டிற்குள் செல்லப் பார்த்தான்..... நாங்க கையும் களவுமா பிடிச்சிட்டோம்....
என்றான் இளங்கோ.

நான் இப்பவே அங்கே வரேன்..... நீங்க உங்க வீட்ல அவனை கட்டிப் போட்டு வையுங்க..... இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.....

சாக்ஷிக்கு.....

இல்ல.... வேண்டாம்..... முதல்ல நாம என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்..... அதுக்கு அப்புறம் விஷயம் உண்மையாக இருந்தால் சாக்ஷிக்கு சொல்லலாம்.

ஓகே சார்..... என்று சொல்லி விட்டு அவன் கை கால்களை கட்டிப் போட்டு விட்டனர்.

சிவா சார்.... நீங்க போய் அங்கே டியூட்டி பாருங்க..... வேற யாராவது வரப் போறாங்க.... இவன் கூட‌ யாராவது இருந்து அவங்க உள்ளே போயிடப்போறாங்க.... என்றான் ராஜேஷ் ஆன்லைன் வீடியோவில் இருந்து.

ஆமாம் சார்.... என்றான் இளங்கோ.

சரி.... சார் வர வரைக்கும் இவன் கிட்ட நீங்க எதுவும் பேசாதீங்க..... அவன் வாயைத் திறக்காம செல்லோ டேப்பை போட்டு ஒட்டிடுங்க.... என்றான் சிவா.

ஓகே சார்.... என்று சொல்லி நவீன் அவன் வாயை மூடினான்.

இவை அனைத்திற்கும் அவன் அமைதியாகவே இருந்தான்.

#############

தொடரும்.......

அ. வைஷ்ணவி விஜயராகவன்.