• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் 47

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
269
137
43
Maduravoyal

ரகசிய கொலையாளி.....

பாகம் 47


என்ன சார் இது..... இந்த கேஸ் இவ்ளோ சப்புனு முடிஞ்சிடுச்சு..... என்றான் இளங்கோ.

இல்ல இளங்கோ..... அந்த கோபி கிருஷ்ணன் சொல்றது எல்லாமே உண்மைன்னு தோணல..... அவர் எதையோ மறைக்கிறார்...... என்றான் மணிகண்டன்.

என்ன உங்க இன்டராகேஷன் அவ்வளவுதானா..... என்றாள் மாயா.

இல்ல இல்ல..... கேசை இப்பதானே ஒத்துக்கிட்டார்..... டீடைல் அப்புறம் கிரைம் சீன் கூட்டிகிட்டு போயி எப்படி எல்லாம் நடந்துச்சு..... என்ன நடந்துச்சுன்னு..... வீடியோ சூட்டோட.... கோர்ட்ல சப்மிட் பண்ணனும்..... என்றான் மணிகண்டன்.

என்னதான் பிளாக்மெயில் பண்ணி இருந்தாலும்..... அவங்கள கொன்ன உடனே அவரோட ஆத்திரம் தீந்துட்டு இருக்கும்..... எதுக்கு தலைய துண்டா வெட்டி அவங்க மடியில வைக்கணும்..... இது ஏதோ வெஞ்சென்ஸ் மாதிரி இல்ல இருக்கு..... என்றாள் மீனா.

சரி ரஸியாவை எதுக்கு வந்து அட்டாக் பண்ண பாக்கணும்..... அப்படியே ரஸியாவை கொல்றது அவனுடைய எண்ணமா இருந்தா..... காவிரியை கொண்ட அன்னைக்கே அவங்களும் அங்க தானே இருந்தாங்க..... அப்பவே கொன்னு இருக்கலாமே...... எதுக்கு ஐவிட்னஸை வீட்ல கொண்டு போய் விட்டுட்டு அப்புறமா கொள்ள நினைக்கணும்...... என்றான் ராஜேஷ்.

நீங்க சொல்றது எல்லாமே கரெக்டு..... நெக்ஸ்ட் இன்ட்ராகேஷன்ல தான் எல்லாமே தெரியும்....... இப்ப எல்லாரும் போய் அடுத்த கேசஸ்ஸ கவனிங்க......

ஓகே சார்..... என்று சொல்லிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

அவர்கள் அனைவரும் சென்றதும் மாயா மணிகண்டனிடம் பேசினாள்.

சார் இந்த கேஸ பத்தி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்....

ஓகே கம் டு மை கேபின்...

இருவரும் பார்மாலாகவே பேசிக்கொண்டனர்.

கேஸ் விஷயமா என்ன தெரியணும்..... சொல்லுங்க மேடம்......

ஏன் இப்போதே இன்ட்ரொகேஷன் பண்ண வேண்டாம்......

நாளைக்கு..... லை டிடெக்டர் டெஸ்ட் ஆட்களை வரவழைத்து..... டெஸ்ட் செய்து பார்த்து..... இந்த கேசை ஃபர்தரா ப்ரோசீட் பண்ணலாம்..... ஏற்கனவே இந்த கேஸ்..... ரொம்ப நாளா..... இழுத்துக்கிட்டு இருக்கு...... அதனால எவ்வளவு சீக்கிரமா இந்த கேஸ இழுத்தடிக்காமல் முடிக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லது.

நமக்கு நல்லதா? என்ன சார் சொல்றீங்க எனக்கு புரியல...

தன் தலையில் இருந்து கேப்பை கழட்டி டேபிளில் மேல் வைத்து விட்டு..... இந்த கேஸ் முடிஞ்சதும் நான் மாமி கிட்ட வந்து நம்ம கல்யாணத்தை பத்தி பேச போறேன்.

அவள் பார்மல் டிரஸ் எதுவும் போடாததால்..... வெட்கத்தில் சிரித்தாள்.

அம்மாவே உங்க கிட்ட பேசணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.....

இப்ப எப்படி இருக்காங்க.....

ஓகே..... டாக்டர் ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்ன்னு சொல்லி இருக்கார்.

ஓ சூப்பர்..... டிஸ்டார்ஜ் ஆனதும்..... நீயும் மாமியும் எங்க வீட்டுக்கு வாங்க...... நீ டெய்லி கேஸ் விஷயமா என் கூட வந்துட்டா..... குவாட்டர்ஸ்ல மாமி தனியா இருப்பாங்க..... அதனாலதான் சொல்றேன்..... எங்க அம்மாவும் அவங்களும் வீட்ல இருக்கட்டும்.....

ஆனா மாமா அம்மா ஒத்துப்பாங்களான்னு தெரியல......

நான் உங்க உடம்பு சரி ஆகுற வரைக்கும் சொல்லல..... எப்பவுமே சொல்றேன்..... நீ கல்யாணம் ஆகி வந்துட்டா அவங்க தனியாவா இருப்பாங்க..... அவங்களும் எனக்கு அம்மா தான்..... அவங்களும் எங்க அம்மாவும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்....

கண்கள் கலங்க தேங்க்ஸ் மாமா என்றாள் மாயா.

என்னடி தேங்க்ஸ் எல்லாம் சொல்ற....
கல்யாணம் ஆனா பையன் உங்க அப்பா அம்மாவோட இருக்கலாம்..... பொண்ணு அவங்க அப்பா அம்மாவோட இருக்கக் கூடாதா என்ன.... இது யாரு போட்ட சட்டம்......

ஸ்மைல் செய்தாள் மாயா.

#############

கோபி கிருஷ்ணனுடைய ஃபோன் அடித்தது.

எடுத்து மணிகண்டன் பேசினான்.

ஹலோ.... நான் எஸ் ஐ பேசுறேன்...... என்றான்.

ஹலோ நான் கோபிகிருஷ்ணன் ஓட வைஃப் பேசுறேன்..... என்னாச்சு அவருக்கு இன்று பதட்டமாக பேசினாள் மஞ்சுளா.

நீங்க கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வர முடியுமா..... என்றான் மணிகண்டன்.

ஐயோ என்னாச்சு சார் அவருக்கு.....

அவருக்கு ஒன்னும் ஆகல நீங்க கவலைப்படாதீங்க...... ஸ்டேஷன் வரைக்கும் வாங்க நான் லொகேஷன் அனுப்புறேன் இந்த நம்பர்ல இருந்து.

ஓகே சார்.....

அடுத்த அரை மணி நேரத்தில் மஞ்சுளா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாள்.

தன்னுடன் அவளுடைய தம்பி கோவிந்தை அழைத்து வந்தாள்.

சார் சார்..... என் பெயர் மஞ்சுளா...... என் ஹஸ்பண்ட் போனுக்கு கால் பண்ணா...... இங்க இருந்து எஸ்ஐ சார் பேசுறதா சொன்னாரு...... அவருக்கு என்னாச்சு ஆக்சிடென்ட் ஏதாவது..... என்று மிகவும் பதட்டமாக பேசினால் மஞ்சுளா.

மேடம் டென்ஷன் ஆகாதீங்க வாங்க உட்காருங்க....
என்றார் பன்னீர்செல்வம்.

என்ன சார் ஃபோன போட்டா வேற யாராவது எடுத்தாலும் பரவால்ல....
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எடுத்து பேசுறாங்கன்னா பதட்டப்படாமல் எப்படி இருப்பாங்க..... என்றான் கோவிந்தன்.

நீங்க யாரு..... என்றார் பன்னீர்செல்வம்.

நான் இவளோட தம்பி......

உங்க பேரு......

கோவிந்தன்......

எங்க வேலை பார்க்கிறிங்க......

சார் நாங்க என்ன விஷயமா வந்தா நீங்க என்ன கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க......

பன்னீர் சார் என்ன அங்க பிரச்சனை என்றான் மணிகண்டன் உள்ளிருந்து.

சார் மஞ்சுளா என்று ஒருத்தவங்க வந்து இருக்காங்க உங்கள பாக்க......

உள்ள அனுப்புங்க சார்.... என்றான் மணிகண்டன்.

உள்ள போங்கம்மா...... என்றார் பன்னீர்செல்வம்.

உள்ளே நுழைந்ததும் வணக்கம் சார் என்றனர் மஞ்சுளா மற்றும் கோவிந்தன்.

வணக்கம் வாங்க உட்காருங்க என்று சேரை காட்டினான் மணிகண்டன்.

சேரில் உட்காரும்போது தன் கணவனின் ஃபோன் டேபிள் மீது வைத்திருந்ததை பார்த்துக் கொண்டே அமர்ந்தாள் மஞ்சுளா.

நீங்கதான் கோபிகிருஷ்ணனின் மனைவியா....

ஆமா சார்....

இவரு.....

என் தம்பி கோவிந்தன்....

உங்களுக்கு பசங்க...

ஒரே ஒரு பையன் இருக்கான்..... இப்பதான் காலேஜ் சேர்த்திருக்கோம்..... பேரு வினோத்.

ஓகே மேடம்..... ஒரு கேஸ் விஷயமா உங்க ஹஸ்பண்டை அரெஸ்ட் பண்ணி இருக்கோம்.

என்னது அரெஸ்ட் பண்ணி இருக்கீங்களா...... என்று அதிர்ச்சியானாள் மஞ்சுளா.

என்ன சார் ஒரு அரெஸ்ட் வாரண்ட் எல்லாம் இல்லாம எப்படி எங்க மாமாவ நீங்க அரெஸ்ட் பண்ணலாம்..... என்றான் கோவிந்தன்.

உங்க மாமா போலீஸ் அட்டாக் பண்ணி அவருக்கு ஆறு தையல் போட்டு இருக்காங்க..... இதுக்காகவே அரெஸ்ட் பண்ண முடியும்...... ஆனா ஒரு கொலை கேஸ் விஷயமா அவர் அரெஸ்ட் பண்ணி இருக்கோம்......

கொலை கேஸா..... என்று இருவரும் ஷாக்கா ஆனார்கள்.

என்ன சார் சொல்றீங்க......

ஆமா அவரே ஒத்துக்கிட்டாரு...... என்றான் மணிகண்டன்.

சார் என் புருஷன் ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யாதவர்..... அவர போய் ஒரு கொலை செஞ்சுட்டாருன்னு சொன்னா நான் எப்படி சார் நம்புவேன்......

உங்களுக்கு காவேரி தெரியுமா...... என்றாள் மாயா.

ஹாங்.....கேள்விப்பட்டேன் யாரோ அந்த பொண்ண கொலை பண்ணிட்டாங்கன்னு..... ரொம்ப நல்ல பொண்ணு..... நாங்க அவங்க வீட்டு பக்கத்துல குடி இருந்தோம்...... என்றாள் மஞ்சுளா மாயாவை பார்த்து.

யாரோ பண்ணல உங்க புருஷன் தான் பண்ணி இருக்காரு..... அதை அவரே ஒத்துக்கிட்டாரு..... என்றாள் மாயா.

என்ன மேடம் வேற ஆள் கிடைக்கவில்லை என்று என் மாமாவை தூக்கி உள்ள போட்டு இந்த மாதிரி கேஸ் எல்லாம் ஒத்துக்க வைக்கிறீர்களா.......

இறந்து போன காவேரி பிரக்னண்டா இருந்தாங்க..... அவங்க வயித்துல வளர குழந்தையோட டி என் ஏ டெஸ்ட் உங்க மாமாவோட ஓட மேட்ச் ஆகுது..... அப்போ அவர் தானே அந்த குழந்தைக்கு அப்பா...... இந்த ஒரு காரணம் போதாதா அவர் கொலை பண்றதுக்கு..... என்றாள் மாயா.

அதிர்ச்சியில் கண்கள் விரித்தாள் மஞ்சுளா.

#############

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.