• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி, பாகம்-5

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal
ரகசிய கொலையாளி.....

பாகம் - 5

மணிகண்டன் ஃபோனை எடுத்து அந்த கால் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் கால் செய்ய சொல்லி ரவியிடம் கொடுத்தான்.

ஓகே சார்..... என்று சொல்லி அவர் கால் செய்ய ஆரம்பித்தார்.

ரவி சார்.....

சொல்லுங்க சார்.....

கால் பேசும் போது சஸ்பீஷியஸா இருந்தா அந்த நம்பரை நோட் பண்ணி என் கிட்ட கொடுங்க..... மத்தபடி எல்லாரோட டீடெயில்ஸூம் எழுதி தனியா ஒரு ஃபைல் பண்ணி கொடுங்க..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்..... என்றான் ரவி.

ராஜேஷ் வண்டி எடுங்க அந்த செயின் ஸ்னாட்சிங் கேஸ்..... அந்த லேடிக்கு மயக்கம் தெளிஞ்சிடிச்சு ன்னு கால் வந்துச்சு..... அதை பார்த்து விட்டு அப்படியே கீழ்பாக்கம் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு போய் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் கலெக்ட் பண்ணிக்கிட்டு வந்திடலாம்..... என்றான்.

ஓகே சார்..... என்றான் ராஜேஷ்.

சார்.... நான்..... என்றான் நவீன்.

இல்ல நவீன்..... நீ ரவி சார் கூட கால் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிக்கிட்டு இரு.....
மீனா..... நீங்க வாங்க மா..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்.... என்றனர் இருவரும்.

இளங்கோ அப்போது வந்தான்.

சார்.... என்று சல்யூட் செய்தான்.

இளங்கோ.....

எஸ் ஸார்.....

உங்க கிட்ட ஸ்கூட்டர் இருக்கு இல்ல?

இருக்கு சார்.....

ஒண்ணு பண்ணுங்க.... ஒரு அரைமணி நேரம் கழித்து ஸ்கூட்டர் எடுத்து கொண்டு புஷ்பம் ஹாஸ்பிடலுக்கு வாங்க..... அந்த செயின் ஸ்நாட்சிங் கேஸ் லேடி கிட்ட மீனா டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணதுக்கு அப்புறம் அவங்களை ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டு நம்ம கீழ்பாக்கம் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்.

எஸ் ஸார்..... என்று சொல்லி சல்யூட் செய்தான் இளங்கோ.

இன்னோவா வில் மணிகண்டன் ராஜேஷ் மற்றும் மீனா சென்றனர்.

செல்லும் போது தன் தொப்பியை கழட்டி விட்டு அண்ணா..... என்றாள் மீனா.

திரும்பி பார்த்தான் மணிகண்டன்.

சாரி சார்..... என்றாள் மீனா. (மணிகண்டன் தலையில் தொப்பி இருந்தது).

அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட மணிகண்டன்..... ஒரு நிமிடம் தன் தலையில் இருந்த கேப்பை கழற்றினான்.

சொல்லுமா..... என்றான் மணிகண்டன்.

அண்ணா..... நம்ம போக அரை மணி நேரம் ஆகும்..... அது வரைக்கும் நீங்க உங்க லவ் ஸ்டோரி சொல்றீங்களா ன்னு கேட்க நினைச்சேன்.....

இல்ல மீனா..... வேலை நேரத்தில் டைவர்ஷன் இருக்கக் கூடாது..... உங்களுக்கு மட்டும் இல்ல அதை சொன்னா நானும் பழைய நியாபகங்களுக்கு போய் டைவர்ட் ஆகிடுவேன்..... அதனால நம்ம லஞ்ச் டைம் இல்லன்னா நைட்டு டின்னர் டைம்ல ஃபிரீயா இருந்தா அப்போ சொல்றேன்..... என்றான் மணிகண்டன்.

ஓகே அண்.... என்று சொல்ல நினைத்தவள் அவன் தலையில் கேப்பை மாட்டியதை பார்த்து ஓகே சார்.... என்றாள்.

நல்லவேளை நாம கேட்கலாம் ன்னு நினைச்சோம்..... மீனா கேட்டுட்டா..... மீனாவாக இருக்கவே இந்தளவுக்கு பொறுமையா பேசினாரு..... நானா இருந்தா கத்திட்டு இருப்பாரு..... என்று நினைத்து கொண்டான் ராஜேஷ்.

புஷ்பம் ஹாஸ்பிட்டலை அடைந்தனர்.

மூவரும் நடந்து உள்ளே சென்றனர்.

கழுத்தில் பேண்டேஜ் போட்டு படுத்திருந்தார் அந்த பெண்மணி.

சொல்லுங்க மேடம்.... உங்க பேரு..... என்றாள் மீனா.

என் பெயர் காயத்ரி....

வயசு?

35....

கல்யாணம்?

ஆயிடுச்சு மேடம்....

அவரோட டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணனுமா சார்..... என்றாள் மீனா மணிகண்டனை பார்த்து.

அவன் ஆம் என்று தலை அசைத்தான்.

ஓகே சார்..... என்று சொல்லி விட்டு.

உங்க கணவர் பெயர், வயசு, எங்க வேலை பார்க்கிறாரு.... ன்னு சொல்லுங்க மேடம்..... என்றாள் மீனா.

அவர் பெயர் பார்த்திபன்..... வயசு 40.... தாசில்தார் அலுவலகத்தில் கிளார்க்கா இருக்காரு.....

பசங்க?

ரெண்டு பேர்?

என்ன படிக்கிறாங்க?

பையன் 8 வது -சரத்
பொண்ணு 3 வது - மோனிகா

எத்தனை பவுன் செயின்?

5 பவுன் செயின்..... அதில் இருந்த உரு எல்லாம் சேர்த்து 6 பவுன் இருக்கும்.

எத்தனை மணிக்கு.... என்ன நடந்துச்சு ன்னு சொல்லுங்க.... என்றாள் மீனா.

நேத்து சாயந்திரம் காய்கறி வாங்கிட்டு வரும்போது ஒருத்தன் பைக்ல வேகமா வந்து என் கழுத்தில இருந்த தாலி செயினை அறுத்து எடுத்துக் கொண்டு போயிட்டான்.

ஆள் பார்க்க எப்படி இருந்தான் மேடம்.....

6.45 மணி இருக்கும்..... அதனால கொஞ்சம் கிளியரா தெரியல.....

ஹெல்மெட் போட்டிருந்தானா?

இல்ல மேடம்..... கர்சீப்பில் மூக்கை கட்டிக் கொண்டிருந்தான்..... கண்ணாடி போட்டிருந்தான்.

கூலிங் கிளாஸா?

இல்ல இல்ல.... பவர் கிளாஸ் மாதிரி தான் இருந்துச்சு.....

எதிர் பக்கமாக வந்தானா? இல்ல பின் பக்கமாக வந்தானா?

எதிர் பக்கமாக தான் வந்தான். அதுவும் அந்த பக்கத்தில் இருந்து இந்த பக்கமாக வரவே தான் நான் இந்த அளவுக்கு கவனிச்சேன்.

அப்புறம் என்னாச்சு மேடம்.

அவன் வந்து என் கழுத்தில் கை வச்சு செயினை பிடிச்சு இழுத்தான்.... நான் கையில் வச்சிருந்த கூடையை தரையில் போட்டிட்டு செயினை பிடிச்சுக்கிட்டேன்.... வண்டியை அப்படியே ஓட்டினான்..... செயின் பெரிசா இருக்கவே தலை வழியா பின் பக்கமாக கழட்டி கொண்டு போயிட்டான். முதல்ல இழுக்கும் போது செயின் கழுத்தை அறுத்திடிச்சு..... விழுந்ததுல தலைல அடி பட்டுச்சு அப்புறம் கை கால்ல தேய்ச்சுக்கிட்டேன்.... என்றாள் அந்த பெண்மணி காயத்ரி.

அனைத்தையும் எழுதியும் ஃபோனில் ரெக்கார்டும் செய்து கொண்டனர்.

சரி..... வேற எதாவது சொல்லனுமா?.... என்றாள் மீனா.

இல்லீங்க மேடம்.

ஓகே.... நீங்க உடம்பை பார்த்துக்கோங்க.... என்றாள் மீனா.

சார்.....என்னோட தாலி செயின்..... என்றாள் காயத்ரி மணிகண்டனை பார்த்து.

மேடம்..... நல்லவேளை உங்க செயின் பெரிசா இருந்ததால கழுத்தில் இருந்து தலை வழியாக கழட்டி எடுத்து கொண்டு போயிட்டான்..... அதுவே சின்னதா மெலிசா இருந்தா அறுப்பட்டிருக்கும்.... அதுவும் பிரச்சனை இல்லை..... 5 பவுன் சங்கலி ன்னா கண்டிப்பா நல்லா திக்கா தான் இருந்திருக்கும்..... அவன் வந்த வேகத்தில் அறுத்த போது உங்க கழுத்தில் அறுத்திருந்தா உங்க உயிருக்கே ஆபத்தா ஆகி இருக்கும்...... என்றான் மணிகண்டன்.

நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட் தான் சார்..... ஆனா தாலி செயினாச்சே..... அதான் வருத்தமாக இருக்கு.....

கவலைப்படாதீங்க மேடம்..... சீக்கிரமா உங்க செயினை அறுத்தவனை பிடிச்சிடலாம்.... என்றான் மணிகண்டன்.

தேங்க்ஸ் சார்.....

டேக் கேர்..... என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே வந்து டீக்கடையில் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது இளங்கோ ஸ்கூட்டரை எடுத்து கொண்டு வந்தான்.

மீனா..... என்றான் மணிகண்டன்.

சார்.....

நீங்க ஸ்டேஷனுக்கு போங்க..... இந்த கேஸ் டீடெயில்ஸ் எல்லாம் ஃபைல் பண்ணி.... ரெடியா வச்சிக்கோங்க.... நான் உங்களை தான் கேட்பேன்.

ஓகே சார்.... என்று சொல்லி சல்யூட் அடித்து விட்டு ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு ஸ்டேஷனிற்கு சென்றாள் மீனா.

இளங்கோ ராஜேஷ் மற்றும் மணிகண்டன் மூவரும் கீழ்பாக்கம் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர்.

அப்போது மணிகண்டன் யமுனாவிற்கு கால் செய்தான்.

ஹலோ யாரு.... என்றாள் யமுனா.

நான் காலைல பேசினேனே எஸ்.ஐ.

ஓ.... சொல்லுங்க சார்.....

நீங்க கீழ்பாக்கம் கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு வந்திட்டீங்களா?

இல்ல சார்.....

ஏன்..... இன்னும் ஏன் வரல நீங்க.....

சார்..... பசங்க ஸ்கூல்ல இருந்து வருவாங்க..... அதுவும் இல்லாம என் ஹஸ்பண்ட் பேங்களூர்ல இருந்து வந்துக்கிட்டு இருக்காரு..... எனக்கு தனியா வர கொஞ்சம் பயம் கஷ்டம் எல்லாம் இருக்கு.... அதான்.....

ஓகே.... எனக்கு புரியுது..... ஒருவேளை நீங்க அங்கு இருந்தா நேரா பார்த்து உங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்விகளை கேட்கலாம் ன்னு நினைச்சேன்.

அமைதியாக இருந்தாள் யமுனா.

ஓகே மேடம்..... நான் உங்க வீட்டுக்கு வந்து என்கொயரி பண்ணிக்கிறேன்..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்.... தேங்க்ஸ்..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் யமுனா.

என்னாச்சு சார்..... என்ன யோசிக்கறீங்க?..... என்றான் இளங்கோ.

ஒண்ணும் இல்லை.... நவீனுக்கு கால் பண்ணுங்க இளங்கோ.... என்றான்.

ஓகே சார்..... என்று சொல்லி கால் செய்து மணிகண்டனிடம் கொடுத்தான் இளங்கோ.

ஹலோ.... சொல்லுங்க இளங்கோ சார்.... என்றான் நவீன்.

நான் மணிகண்டன்.

எஸ் ஸார்....சாரி சார்..... சொல்லுங்க சார்..... என்றான் நவீன்.

அந்த விக்டிம் ஹஸ்பண்ட் நம்பர் மட்டும் எனக்கு அனுப்பு நவீன்..... என்றான் மணிகண்டன் .

ஓகே சார் ..... என்றான் நவீன் .


###########

தொடரும் .....
அ . வைஷ்ணவி விஜயராகவன் .