ரகசிய கொலையாளி.....
பாகம் -9
நீ என் கிட்ட ஏன் ன்னு கேட்கலைன்னாலும் நான் சொல்றேன்..... என்றார் என் அம்மா.
உங்க அப்பாவுக்கு நீ ன்னா உயிர். உன்னை மாமி அடிச்சிட்டாங்க ன்னு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டார். போலீஸ்காரர் வேற இல்ல மைனர் பையனை அடிச்சிட்டாங்க ன்னு உங்க மாமா மாமி மேல கேஸ் போட்டாலும் போட்டிடுவார்.... அதுக்கு அப்புறம் குடும்பம் பிரிஞ்சிடும்.... நம்ம மாயா தனியா ஆயிடுவா..... மாமாவுக்கு இதனால மாமியோட சண்டை பிரச்சனை வரும்..... எதுக்கு இதெல்லாம்..... அவங்க புத்தி அவ்வளவு தான் ன்னு நினைச்சு விட்டிடலாம்..... என்றார் என் அம்மா.
சரிம்மா..... என்றேன் நான்.
சார்..... உங்க அம்மா பாவம் சார்.... பையனுக்காக பார்ப்பாங்களே?
அண்ணனுக்காக இல்ல ஹஸ்பண்ட்டுக்காக பேசுவாங்களா?.....
என்றான் ராஜேஷ்.
நாங்கள் அங்கேயே தங்கிட்டோம்.
காலை ஆறு மணி அளவில் அம்மா எழுந்தாங்க.... அப்போது மாமி எங்க பையை செக் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.... ஒரு ஒரு துணியா எடுத்து உதறிவிட்டு பார்த்துக் கொண்டு இருந்தாங்க.
அதைப் பார்த்ததும் எங்க அம்மாவுக்கு கோபம் வந்தது.
என்ன அண்ணி பண்றீங்க..... என்றார் சத்தமாக.
என்ன சிவகாமி குரல் உசரது?
இது எங்க பை.... இதுல என்ன தேடறீங்க ?
ஆமாம்..... நீ கோவத்தில திடீர்னு கிளம்பற ன்னா...... அப்படியே அனுப்பி விடுவேன் ன்னு நினைச்சியா..... இதான் சாக்குன்னு எதாவது எடுத்துக் கொண்டு போயிட்ட ன்னா?..... அதான் உன்னோட பையை எல்லாம் சோதனை பண்றேன்......
அண்ணி..... நாங்க வசதில உங்களை விட கம்மி தான்.... அதுக்காக மானம் மரியாதை இல்லாதவங்க ன்னு நினைக்காதீங்க..... பையை கூட நீங்களே வச்சிக்கோங்க..... என்றார் என் அம்மா.
அந்த பையை தரையில் தூக்கிப் போட்டார் மாமி.
சோதனை பண்ணிட்டேன்....
இந்த கந்தை துணியை நீயே எடுத்துக் கொண்டு போ...... என்று சொன்னார் மாமி.
கண்கள் கலங்க அங்கிருந்து கிளம்பினோம் நாங்கள் இருவரும்..... என் மாமாவும் கண்கள் கலங்க நின்றிருந்தார்...... மாயாவும் ஜன்னல் வழியாக எங்களை பார்த்து அழுதாள்.
அப்புறம் பிரச்சனை சரி ஆயிடிச்சா சார்?..... என்றான் நவீன்.
அதுக்கு அப்புறம் மூன்றரை வருஷமா பேச்சு வார்த்தை இல்லை எங்களுக்கும் எங்க மாமா குடும்பத்துக்கும்.
அப்புறம் எப்போ அண்ணா நீங்க மாயா அண்ணியை பார்த்தீங்க.....
ஊர் திருவிழா ன்னு அம்மா எங்க அப்பா கிட்ட போகட்டுமா ன்னு பர்மிஷன் கேட்டாங்க.
உங்க அண்ணன் அண்ணி தான் மாயா ஃபங்கஷன்ல சரியா பேசல..... அதனால அவங்களா பேசினாதான் அங்கே போவேன் ன்னு சொன்ன..... இப்போ என்ன?..... என்றார் என் அப்பா.
அண்ணா நல்லா தான் பேசினார்..... அண்ணி தான்.....
சரி..... ஊர் திருவிழா ன்னு ஒரு ஃபோன் கூட பண்ணல..... சொல்லல..... நீ எப்படி போவ.....
ஏங்க..... நானும் அந்த ஊர்ல தாங்க பிறந்தேன்..... எனக்கும் அந்த ஊருக்கு போக உரிமை இருக்கு..... யாராவது கூப்பிட்டா தான் அந்த ஊருக்கு போகனும் ன்னு இல்ல..... இந்த முறை நான் அண்ணா வீட்டுக்கு போகப் போறது இல்ல..... எங்க அப்பா அம்மா இருந்த தோட்டத்து வீடு காலியாக தான் இருக்கு ன்னு கேள்வி பட்டேன்..... அங்கு போய் தங்கி ஒரு வாரம் ஊர் திருவிழா பார்த்திட்டு வந்திடறோம்.....
நீ முடிவு பண்ணிட்ட?
இல்ல இல்லங்க...... உங்க கிட்ட கேட்கிறேன்..... நீங்க வேண்டாம் ன்னா..... வேண்டாம்......
சரி சரி போயிட்டு வா..... மணி வரேன் ன்னு சொல்லிட்டான்னா? அவனுக்கு காலேஜ் இல்ல?
கேட்டுட்டேன்ங்க..... அவனுக்கு செமஸ்டர் முடிஞ்சு லீவாம்..... அதான் வரேன் ன்னு சொன்னான்.
ஓ..... சரி.... சரி.... ஜாக்கிரதையா போயிட்டு வாங்க..... அப்படீன்னு சொல்லி அனுப்பினார் என் அப்பா.
எனக்கு மாயாவை பார்க்கப் போறோம் என்று நினைத்து ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு..... அவ எப்போ எனக்காக அழுதாளோ அப்பவே மாயா மேல எனக்கு காதல் வந்திடிச்சு.
அப்போது அவங்க என்ன படிச்சிக்கிட்டு இருந்தாங்க அண்ணா?.... என்றாள் மீனா.
அவ காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்..... நான் காலேஜ் ஃபனல் இயர்.....
ஓ.... ஓகே ஓகே அண்ணா.....
அந்த திருவிழால எடுத்த ஃபோட்டோ தான் நீங்க பர்ஸ்ல வச்சிருக்கீங்களா?
ஆமாம் மீனா.
கோவில்ல தான் அவங்களை பார்த்தீங்களா?..... என்றான் ராஜேஷ்.
ஆமாம் ராஜேஷ். போன ஆறு நாள் வரைக்கும் என் மாயாவை என்னால பார்க்க முடியல......... நானும் அம்மாவும் வந்திருக்கோம் ன்னு தெரிஞ்சிக்கிட்டு...... அவளை வீட்டை விட்டு அவங்க அனுப்பவே இல்லை.
என் மாயா கிட்ட நாங்க வந்திருக்கோம் ன்னு கூட சொல்லல..... சொல்லி இருந்தா கண்டிப்பா எப்படியாவது அவ வந்து பார்த்திருப்பா....... என்றான் மணிகண்டன்.
அப்புறம் என்ன ஆச்சு சார்..... என்றான் இளங்கோ.
திருவிழா கடைசி நாளுக்கு முந்தைய நாள்...... நான் அம்மா கிட்ட கூட சொல்லாம என் மாமாவோட வீட்டுக்கு பின் பக்கமாக போனேன்......
அவ ரூம் ஜன்னல் வழியாக என்னை பார்த்திட்டா..... ஜன்னல் பக்கத்தில வந்து என் கையை பிடிச்சிக்கிட்டா.
மாமா..... என்றாள்.
எனக்கு உயிரே வந்தது போல இருந்துச்சு.....
எப்படி மாமா இத்தனை வருஷம் என்னை பார்க்காம இருந்த?
உயிரை கையில பிடிச்சிக்கிட்டு இருந்தேன் மாயா.....
நீ எப்படி இருக்க?
நானும் தான் மாமா..... எப்போ நீ வருவீயோ ன்னு காத்துக்கிட்டு இருந்தேன்.
சரி உங்க ஃபோன் நம்பரை கொடுங்க மாமா......
அவன் சொல்ல.... அதை மனப்பாடம் செய்து கொண்டாள் மாயா.
எதுலேயாவது எழுதி வச்சிக்கோ மாயா.
வேண்டாம் மாமா..... அம்மா பார்த்தா பிரச்சனை ஆயிடும்..... கண்டுப்பிடிச்சிட்டாங்க ன்னா இன்னும் கஷ்டம்......
ஹூம்......
அப்புறம் காலேஜ் எல்லாம் எப்படி இருக்கு மாமா.....
நல்லா இருக்கு மாயா..... உனக்கு எப்படி இருக்கு..... டெல்லில படிக்கிற ன்னு கேள்விப்பட்டேன்..... மொழி பிரச்சனை எதுவும் இல்லையா?
அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா..... எனக்கு தான் இந்தி பேச தெரியுமே அதனால ஒரு பிரச்சனையும் இல்லை......
ஹூம்..... நல்லா படி..... சீக்கிரமா நம்ம ரெண்டு பேரும் நல்ல ஒரு வேலைக்கு போய் அப்புறம் தைரியமா நம்ம வீட்ல பேசி கல்யாணம் பண்ணிக்கலாம்.
ஆமாம் மாமா..... நான் அதை நினைச்சு தான் படிச்சிக்கிட்டு இருக்கேன்..... சீக்கிரமா காலேஜ் முடிச்சிட்டு வேலைல சேரனும்......
மாயா.....
என்ன மாமா.....
உன்னை ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கவா? உன்னை எப்போதெல்லாம் பார்க்கனும் ன்னு தோணுதோ..... அப்போதெல்லாம் ஃபோட்டோவையாவது பார்த்துப்பேன்......
மாமா..... நானே நைட்டில இருக்கேன்..... இதுல நல்லாவே இருக்காது..... இருங்க.... என்று சொல்லி பாவாடை தாவணி கட்டிக் கொண்டு நின்றிருந்த ஃபோட்டோவை எடுத்து வந்து காண்பித்தாள்.
மாமா..... இதை ஃபோட்டோ எடுத்துக்கோங்க..... போன வருஷம் திருவிழால நான் பாவாடை தாவணி போட்டுக்கிட்டேன்..... அப்போ எடுத்தது.
ரொம்ப கிட்ட இருக்கு..... கொஞ்சம் ஃபோட்டோவை தள்ளி புடி மாயா.....
சரி இருங்க மாமா நான் சுவற்றிலேயே மாட்டறேன் ..... லைட் வெளிச்சமும் தெரியும்.... அப்புறம் எடுங்க.... என்று சொல்லிவிட்டு ஃபோட்டோவை மாட்டி விட்டு லைட் போட்டாள் மாயா. மணிகண்டன் தன் ஃபோனில் ஃபோட்டோ எடுத்தான்.
அப்போது தான் அந்த ஃபோட்டோவை எடுத்தேன்..... என்றான் மணிகண்டன்.
மாமா ஃபோட்டோவை காட்டுங்க.....
தன் ஃபோனில் ஃபோட்டோவை காண்பித்தான் மணிகண்டன்.
நேரா இந்த ஃபோட்டோவை பார்க்கிறதை விட உங்க ஃபோன்ல என் ஃபோட்டோவை பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..... என்றாள் மாயா வெட்கத்துடன்.
மாயா..... என்று சொல்லி அவள் தலையை உயர்த்தி தன் கண்களை பார்க்கச் செய்தான் மணிகண்டன்.
வெட்கத்துடன் தலையை குனிந்தபடி.
மாமா..... ஐ லவ் யூ..... என்றாள் மாயா.
மாயா..... ஐ லவ் யூ ஸோ மச் மாயா...... என்று சொல்லி கம்பி வழியாக அவள் கையை நீட்ட மணிகண்டன் முத்தம் கொடுத்தான்.
வெளியே நின்று கொண்டு இருந்த மணிகண்டன் தலையில் கட்டையில் அடித்தான் ஒருவன்.
சரிந்து தரையில் விழுந்தான் மணிகண்டன்.
அய்யோ மாமா ..... மாமாவை அடிக்காதீங்க..... என்று கத்தினாள் மாயா .
கண் விழித்து பார்த்தபோது தலையில் கட்டுடன் ஆஸ்பத்திரியில் இருந்தேன் .
அம்மா என் அருகில் அமர்ந்து இருந்தார்.
என் அப்பா வந்திருந்தார் .
என் அம்மா அப்பா இருவருக்கும் மிகப் பெரிய வாக்குவாதம் நடந்தது. அப்பாவை கம்ப்ளெயின்ட் செய்ய வேண்டாம் என்று பேசிக் கொண்டு இருந்தார் என் அம்மா.
நான் அடிப்பட்டிருந்ததை பார்த்த என் அப்பா அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் அனைவரையும் ஜெயிலில் தூக்கி போடுவேன்..... என்று கத்திக்கொண்டிருந்தார்.
############
தொடரும் .....
அ. வைஷ்ணவி விஜயராகவன் .