அத்தியாயம்-3
ராகாவின் வீட்டு முன் வண்டியை நிறுத்தினான் சரோ. பைக்கை விட்டு இறங்கினாள் ராகா.
“ராகா சொல்ல மறந்துட்டேன். வர செவ்வாய்க் கிழமை ஒரு பார்ட்டி. ஆடிட்டர் சொல்லச் சொன்னார். பிஸ்னஸ் அசோசியன் நடத்தறது. நாமளும் போகனும்.”
“அதுக்கெல்லாம் எதுக்குடா நாம போகனும்?”
“அப்பத்தான் நமக்கும் காண்டாக்ட்ஸ் வரும். அப்படினு சீப் ஆடிட்டர் சொல்லச் சொன்னார்.”
“போடா. எனக்கு இந்த மாதிரி பார்ட்டி எல்லாம் இஷ்டம் இல்லை.”
“ஏன்?”
“உனக்குத் தெரியுமா? இந்த கட்திரோட் பிஸ்னஸ்மேன்ஸ் கிட்ட எல்லாம் சைக்கோபாதிக் டென்டன்சிஸ் இருக்குமாம். அவங்களை மாதிரி செல்பிஷானா ஆளுங்களை எல்லாம் பார்க்கவே முடியாது. கோயில் உண்டியல்ல லட்சக் கணக்கில் போடுவாங்க. ஆனால் வேலை செய்யற ஆளுங்களுக்கு ஒன்னுனா ஆயிர ரூபாய் கொடுக்க கூட யோசிப்பாங்க.”
இரண்டு வருடங்களாக அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் அவளும் பலரைப் பார்த்துத்தானே கொண்டிருக்கிறாள். அவளுக்கு அது மாதிரி ஆட்களைப் பிடிப்பதில்லை.
“அப்படி இருக்கற நீ ஆடிட்டர் ஆகவே யோசிக்க கூடாது பக்கி.”
“ரிதிங்கிங்க் மை லைஃப் டிசிசன்ஸ்.” என தாடையில் விரல் வைத்து யோசித்தாள்.
“நான் பேசாமல் கல்யாணம் பண்ணிட்டு குழந்தை குட்டினு செட்டில் ஆகிரட்டா?” என்றவுடன் குபீரென சிரித்தான் சரவணன்.
“எது நீயா? அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்ட.”
“ஏன் ஏன்?”
“ராக்ஸ். அது எல்லாம் அப்படித்தான்.”
***
இவர்கள் அப்படி வாதிட்டுக் கொண்டிருக்க, ரகு நந்த வர்மன் கால் மேல் கால் போட்டபடி அலுவலக அறையில் அமர்ந்திருந்தான்.
“முடிஞ்சுதா?”
“யெஸ் பாஸ். இப்ப அந்தக் கம்பெனி உங்களோடது.”
நந்தனின் முகத்தில் ஒரு அழகான புன்னகை தோன்றியது. அந்தப் புன்னகைக்குப் பின்னால் இருக்கும் வெறியை அறிந்த அவனுடைய செக்கரட்டரிக்கு, ‘எமகாதகன்’ எனத் தோன்றியது. நேர்மையாகத் தொழிலை நடத்துபவன், எதற்கும் யாரிடமும் பணிந்து போனதில்லை.
அவனை இப்போது எழுதி வாங்கி இருக்கும் கம்பெனி முதலாளி அவனை ஒரு பார்ட்டியில் இகழ்ந்து பேசி விட, இப்போது கம்பெனி நந்தனின் கையில் வந்திருந்தது. முறையாகக் கட்டப்படாத வரியினைப் பற்றி வருமான வரி அலுவலகத்திற்கு ஆதாரத்தைச் சேகரித்து, கம்பெனியை இழுத்து மூடி இருந்தான். அவன் தொழிலில் மட்டும்தான் நேர்மை. எதிரிக்கெல்லாம் அந்த நேர்மை, நியாயம் எல்லாம் அவனுக்குக் கிடையாது.
“சார் வர்ர பிஸ்னஸ் அசோஷியேசன் மீட்டிங்கில் உங்களுக்கு, ‘பெஸ்ட் பிஸ்னஸ்மேன் அவார்ட்’ தராங்க. நேரில் வந்து இன்வைட் பண்ணாலும், ரிமைண்ட் கால் பண்ணாங்க.”
“அன்னிக்கு என்னோட ஷெட்யூலை ப்ரீ பண்ணிடுங்க.”
“ஆல்ரெடி பண்ணிட்டேன் பாஸ்.”
“குட்.”
“தேங்க் யூ பாஸ்.”
“அப்புறம் உன்னோட ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு? மேரேஜ் முடிஞ்சதும் நீ வரமாட்டினு நினைச்சேன் சம்ருதா.”
சிரித்தப்படி அவன் முன் அமர்ந்தாள் சம்ருதா. அவனுடைய செகரட்டரி. அவன் எள் என்றால் எண்ணெயாக நிற்பவள்.
“நான் ரிசைன் பண்ணால் நீ அப்படியே விட்ருவியா?”
இரு உதடுகளையும் மடித்தப்படி சிரித்தவன் அவளை நோக்கினான்.
“வாய்ப்பில்லை சீனியர்.”
“இப்பத்தான் சீனியர்னு நினைப்பு வருதாக்கும்.”
“என்ன சீனியர் பண்றது? நீங்கதான் நம்மளைப் பத்தி யாருக்கும் தெரிய வேண்டாம். அப்பத்தான் ஆபிஸில் மத்தவங்க் எங்கிட்ட நல்லா பழகுவாங்குனு சொன்னீங்க? நானும் அதை அப்படியே ஏத்துகிட்டேன்.”
“கரக்ட்தான். அந்தாளு உன்னை கேலி பேசுனதுக்கு ஒன்னுமில்லாமல் ஆக்கிட்ட இல்லை.”
“என்ன சீனியர் செய்யறது எனக்கு தன்மானம் ரொம்ப முக்கியம். ஏற்கனவே இருந்த பரம்பரை சொத்தில் வாழ்ந்திட்டு இருக்கலாம். அதை நான் தப்புனு சொல்லலை. ஏனால் நாம சம்பாதிக்கறது அடுத்த தலைமுறைக்கும் சேர்த்திதான். அதுக்காக செல்ஃப் மேடாக உருவான என்னை புகழற மாதிரி கேலி பேசுனான். அதான் நானும் என்னோட வழியில் டீல் பண்ணேன்.”
“இப்படி ஒவ்வொருத்தர் பேசறதுக்கும் ரியாக்ட் செய்ய முடியாது இல்லை ரகு.”
சட்டென்று நினைவில் வந்து போனாள் அவள். ஹோட்டலில் சந்தித்த பெண். அவள் பேசியது அனைத்தும் ஏற்கனவே சந்தித்த நபரிடம் பேசியது போலிருந்தது.
“ரகு என்னாச்சு? என்ன யோசிக்கற?”
“இல்லை சீனியர்.” இரண்டு நாட்களாக நடந்ததை விவரித்தான்.
“இரண்டு நாளில் இரண்டு பொண்ணுகூட சண்டை போட்டுருக்க நீ. சரி முதல் தடவை நீ கரக்டா போயிருக்கனும் இல்லை. அந்தப் பொண்ணைத் திட்டி என்ன பிரயோஜனம்?”
“சீனியர் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைனு கோபத்தில் இருந்தேன். அதான் திட்டிட்டேன். அது மட்டுமில்லாமல் அந்தப் பொண்ணு என் சோல்டர் உயரம் கூட இல்லை. லைசென்ஸ் இருக்கானு கூட தெரியலை. அந்தப் பைக்கெல்லாம் தேவையா? கடைசியாக காரில் கூழை ஊத்திட்டு வேற போயிட்டா? எனக்கு செம கோபம். அவளோட முகம் தெரியலை. டேட்டூ மட்டும் தெரிஞ்சது.”
“ரகு நீ காலேஜ், ஸ்கூல் படிக்கற டைமில் இருந்து பார்த்திருக்கேன். எங்கிட்ட, அப்புறம் சில சீனியர் பொண்ணுங்களைத் தவிர யார்கிட்டேயும் நீ முகம் கொடுத்துப் பேசி பார்த்தது இல்லை. அதே மாதிரி ஹார்சாவும் பேச மாட்டே. அந்த பொண்ணுகிட்ட லைசென்ஸ் இருந்தால் நீ என்ன செய்வ? நீயும் பேசி இருக்கக் கூடாது.”
“சீனியர் அவ பேசறதை நீங்க கேட்டுருக்கனும். சரியான ரவுடி பேபி. அவளோட லவ்வர் போல, அந்தப் பையந்தான் சாரி கேட்டான். அதுக்கும் சண்டைக்கும் வந்தாள் அந்தப் பொண்ணு.”
“இப்பத்தானே சொன்னேன். நாமளா அஸ்யூம் பண்ணக் கூடாது. அந்தப் பையன் தம்பியாக் கூட இருக்கலாம். நீயே சொல்ல முடியாது.”
“என்னவோ சீனியர்.. அந்தப் பொண்ணைப் பத்தி நல்ல விதமாகக் கூட நினைக்க முடியலை.”
“எதுக்கும் அடுத்த டைம் அவகிட்ட மாட்டிடாத. சம்பவம் ஆகிடப் போகுது,”
“அடுத்த டைம் பார்த்தால் கண்டிப்பா அந்தப் பொண்ணுக்கு இருக்கு. டேட்டூவை வச்சுக் கண்டுபிடிச்சுடுவேன்.”
“சரி விடு.”
இருவரும் அதை விட்டு வேறு பேச ஆரம்பித்தனர். சம்ரூதாவை பள்ளி படிக்கும் போதிருந்தே தெரியும். அவனை விட ஒரு வருடம் மூத்தவள். இருவருக்கும் அப்போதிருந்தே நல்ல பழக்கம். இவன் வியாபாரம் தொடங்கிய பின் அவள் வேறு ஏதோ கம்பெனி என நினைத்து வர, வந்தது நந்தனின் கம்பெனிக்கு.
வேலை கிடைத்து விட அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது.
பார்ட்டி நடை பெறும் நாள்.
விருதை வாங்கிவிட்டு ஏற்புரை அளித்து புன்னகையுடன் பார்ட்டி ஆரம்பிக்கும் முன் தன்னுடைய கார் நிறுத்தி இருக்கும் ஹோட்டல் பார்க்கிங்கு வந்திருந்தான் நந்தன்.
“டேய் சீக்கிரம் பார்க் பண்ணிட்டு வாடா. நான் முன்னாடி போறேன். சீஃப் திட்டப் போறார்.”
“போ.. நீதான் சேரி கட்டி லேட் செஞ்ச.”
“அப்புறம் பேசிக்கலாம் போடா..”
அந்த டிசைனர் புடவை அவள் உடலை பாந்தமாகத் தழுவி இருந்தது. பொம்மை போல் அழகாக இருந்தாள். ஹீல்சுடன் லேசாகப் புடவையைத் தூக்கிப் பிடித்தப்படி ஓடினாள்.
‘இன்னிக்குனுப் பார்த்துதான் இத்தனை சொதப்பல். சீஃப் திட்டப் போறாரு. ஆப்டர் பார்ட்டிக்குள்ள இருக்கனும் சொன்னாரு. லேட்டாப் போனா பஞ்சுவாலிட்டி முக்கியம்னு காது பஞ்சர் ஆக கிளாஸ் எடுப்பாரு வேற.’ எனப் புலம்பியபடி கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தப்படி ஓடினாள்.
புடவை கீழே படுகிறதா எனக் கவனித்தபடி ஓட நேராக மோதினாள்.
‘போச்சு. மண்டை காலி. தூண் இவ்வளவு சாப்டா இருக்காதே’ என நிமிர்ந்தவள் விழிகளை விரித்தாள்.
எதிரில் நந்தன் நின்று அவளை முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவனைப் பார்த்த அதிர்ச்சியில் அவள் கிளட்சை கைகள் விட்டு விட அதைக் குனிந்து எடுக்கும் போதும் அவளுடைய கைகளில் இருந்த டேட்டூவைப் பார்த்து விட்டான் நந்தன்.
“ஸாரி. மை பால்ட்.” என அவனிடம் மீண்டும் வம்பிளுக்காமல் நகர முற்பட அவனைத் தாண்டிச் சென்றவளின் கையைப் பிடித்து ரகு இழுத்த இழுப்பில் மீண்டும் அவன் எதிரே வந்தாள். அவளை நிற்க வைத்தான்.
“ஹே நீதானே அந்த பைக்கில் வந்த பொண்ணு. நேத்து கூட.”
‘கண்டுபிடிச்சுட்டான். சிக்கிட்டேயேடி ராகா. இப்ப இதுக்கு வேற டைம் இல்லையே’
“கைய எடுங்க மிஸ்டர்.” கத்தாமல் மெதுவாக அடிக்குரலில் எச்சரித்தாள்.
அவள் கையை விடுவித்த நந்தன், “ஹவ் டேர் யூ?” என்றான்.
“டேரிங்க். என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ? வழியை மறைக்கறது? கையைப் பிடிச்சு இழுக்கற வேலை எல்லாம் வேண்டாம். அப்புறம் ரொம்ப வருத்தப்பட வேண்டி இருக்கும்.”
“ஒரு பொண்ணு எப்படி வாயடிக்கற நீ?”
“ஏய் இடியட். உனக்கெல்லாம் என்னை மாதிரி தைரியமான பொண்ணுங்களைப் பார்த்தால் அப்படித்தான் ஏதாவது பட்டம் கொடுக்கத் தோணும். நீங்க தைரியமாக இருக்க நான் ஏன் வாயடிக்காமல் இருக்கனும். தைரியமில்லாமல் இருக்கனும். சரியான மிசோகைனிஸ்ட்.”
மிசோகைனிஸ்ட் என்ற வார்த்தையில் நந்தனின் கோபம் உச்சத்தில் ஏறியது.
“ஹே என்ன ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லை.”
“ஏன் இன்னும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு புண்ணாக்கு இல்லைனு கூட சொல்லு. முதல்ல மேனர்ஸ் இல்லாமல் நடந்து கிட்டது நீ. என்னை சொல்றியா? உன்னை மாதிரி ஆளுகிட்ட எல்லாம் எனக்குப் பேச டைம் இல்லை.” என்றவள் நகர முற்பட இந்த முறை அவன் தடுக்கவில்லை.
அவளுடைய ஹீல்ஸில் புடவை மாட்ட, தடுக்கி அவன் மேலே விழுந்திருந்தாள்.
இருவருமே இதை எதிர்பார்க்கவில்லை. அவளுடைய தலை நேராக அவன் மார்பில் புதைந்திருந்தது.
அவனை ஒப்பிடும் போது அவள் மிகவும் சிறிய உருவமாகத் தெரிந்தாள்.
நந்தன் கைகள் தானாக அவளின் முன்னங்கைகளைப் பிடித்து விலக்கி நிறுத்தி இருந்தன. பெண்களை நெருங்கவே விடாதவனின் மார்பில் இடம் பிடித்திருந்தாள் ராகவர்ஷினி.
“ஓ காட். லெட்ஸ் நாட் மீட் அகெய்ன்.” கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு விரைவில் சென்றிருந்தாள் ராகா.
ஆனால் அவர்களின் அழியாத பந்தத்திற்கு சாட்சியாக அவளுடைய உதட்டுச் சாயத்தின் கறையும், சந்தனத் தீற்றலும் வெண்ணிறச் சட்டையில் வேலையைக் காட்டி இருந்தன.
அவர்கள் இருவரும் இருந்தது பொது இடம் என்பதை மறந்திருந்தனர்.
குனிந்து சட்டையைப் பார்க்க, மீண்டும் கோபம் துளிர்த்தது. அவன் சரிபாதியாகப் போகிறவளின் மீது சரியாக கோபம் கொண்டு ‘இடியட்' என முனு முனுத்தவன் கார் டிக்கியைத் திறந்து அதில் வைத்திருந்த இன்னொரு சட்டையை மாட்டிக் கொண்டு, கோட்டையும் அணிந்து கொண்டு பார்ட்டிக்குச் சென்றான்.