லவ் 8
அவந்திகா, பைரவி, ஜித்தேஷ், அரவிந்த், கார்த்திக், ஷ்யாம், வருண் மற்றும் வேலன் அனைவரும் சேர்ந்து வாட்ஸப்பில் ஒரு குரூப் உருவாக்கி அதிலேயே வீகெண்ட் எங்கு செல்வது என முடிவு செய்து இருந்தனர்...
அதன்படி ஜித்தேஷ் அவந்திகாவும் தாமரை மணிவாசகதிடமும் கூறிக்கொண்டு மகாபலிபுரம் செல்ல கிளம்பினர்…
போகும் வழியிலேயே அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றனர்...
அது ஒரு பீச் ரெசார்ட் டைனிங் ரூம் மீட்டிங் ஹால் ஸ்விம்மிங் ஃபுல் என அனைத்து வசதிகளையும் கொண்ட இடமாக இருந்தது… அப்பொழுது தான் காரில் இருந்து அனைவரும் இறங்கி நின்று அப்பாடா என உடலை நெளித்து அசதி போக்கினர்…
இந்த ஏற்பாடு அரவிந்துக்கு பிடிக்கவில்லை அதை அவனின் முகத்தை பார்த்தே கண்டுபிடித்தாள் அவந்திகா..
"என்ன அர்விந்த் ஏதாவது டிஸ்கம்போர்ட் இருந்தா சொல்லுங்க நாம வேற இடம் பார்க்கலாம்"
"இல்ல அவனி அப்படி எதுவும் இல்ல… வேற ரிசார்ட் ரூம் எதுவும் வேணாம் முதல்ல வெயில் ஏறுவதற்கு முன்ன பார்க்க முடிந்த இடத்தை எல்லாம் பார்த்து நல்ல ஓட்டல்ல சாப்பிட்டு கடைசியா பீச் போய் ஆட்டம் போட்டுவிட்டு வீடு போய் சேருவோம்…" அவனின் வழக்கத்தை கூறினான்… மேலும் அவளின் காசில் இதெல்லாம் அனுபவிக்க தோணவில்லை…
ஜித்தேஷ் அரவிந்தின் தோளில் தட்டி அவனின் முடிவை ஆதரித்தான்… அவனுக்கு தெரியும் அரவிந்த் கூறியது உண்மையான காரணம் அல்ல என்று இருந்தும் ஏற்றுக்கொண்டான்….
அதன்படி அனைவரும் முதலில் சேர்ந்து ஐந்து ரதம் இருக்கும் பகுதிக்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது….
அதன் பொருட்டு அவரவர் அவ்வூரின் பழைய நினைவுகளை தட்டினர்…
அவந்திகாவிற்கும் பைரவிக்கும் சிறு வயதில் வந்த ஞாபகம்... வளர்ந்தபின் இங்கு வர தோணவில்லை வெறும் கற்களை பார்க்க ஒரு நாள் செலவு செய்ய வேண்டுமா? என்பது அவர்கள் எண்ணம்...
அரவிந்தும் அவனின் நண்பர்களும் இதுவரை எத்தனை முறை வந்து இருக்கிறார்கள் என்று கேட்டால் கணக்கே இல்லை என்பார்கள்… தோன்றும் பொழுதெல்லாம் வண்டலூர் வந்து மகாபலிபுரம் பஸ் பிடித்து விடுவார்கள்….
ஜித்தேஷ் மட்டுமே இதுவரை இங்கு வந்ததே இல்லை அதையும் ஏற்கனவே கூறியிருந்தான்…. அதனால் அவனுக்கு ஒரு நாள் கைடாக இருக்க முடிவு செய்தான் அரவிந்த்...
அவந்திகாவிற்கு அரவிந்தை நினைத்து சிரிப்பதா அல்ல எவ்வளவு பொறுப்பு என... அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்
பைரவி தான் அவளை இடுப்பில் ஒரு இடி இடித்து நடப்புக்கு கொண்டு வந்தாள்..
" என்ன ரவி எதுக்கு இடிக்கிற? "
" நீ என்ன பண்ணிட்டு இருக்க"?
"ஹ்ம்ம் சைட் அடிச்சுட்டு இருக்கேன்"
" எனக்கு மட்டும் இல்ல இங்க இருக்குற எல்லாருக்கும் நீ ஓப்பனா சைட் அடிக்கிறது தெரியுது… ஆனால் உன் ஆள் மட்டும் உன்னை கவனிக்காமல் பிளான் போட்டு கிட்டு இருக்காரு.."
"அதான் ரவி அவன் பிளஸ்…. அவன் கவனிச்சு இருக்க மாட்டான்னு நினைக்கிறியா"?
"அப்படினா? "
"அப்படின்னா என் செல்ல குட்டி… அவன் என்னை பாக்கலனாலும்.. நான் அவனை பாக்குறதை கண்டுபிடிச்சி இருப்பான்னு அர்த்தம்…"
"எப்படி டி இப்டிலாம்? எனக்கு ஒண்ணுமே புரியல… "
"உனக்கு புரியாது… சரி என்னை கவனிச்சது இருக்கட்டும் உன்னை ஒருத்தன் அங்க வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்கானே அது உன் கண்ணனுக்கு பட்டுச்சா? "
"ஹ்ம்ம் பாத்தாச்சு பாத்தாச்சு… லூசு பையன் அவனுக்கு இருக்கு இன்னைக்கு.. மலை மேலே இருந்து உருட்டி விடலாமா இல்ல கடல்ல தள்ளிவிடலாமா என்று யோசிச்சிட்டு இருக்கேன்"
"ஹாஹாஹாஹா ஏண்டி இந்த கொலைவெறி"?
"ஆமா கொலவெறி தான் வருது அவன் பண்றதுக்கு"
"அப்படி என்ன செஞ்சா நான் வேணா கூப்பிட்டு என்னன்னு விசாரிக்கவா இல்லை அரவிந்த் கிட்ட சொல்லவா"? இதுவரை விளையாட்டாய் பேசியவள் கொஞ்சம் சீரியஸ் ஹாக விசாரித்தாள்…
" அந்த அளவுக்கு இல்ல… வேணும்னா சொல்றேன் அவந்தி.. அங்க பாரு கிளம்புகிறாங்க.. "
"ஹா ஹா ஹா ஹா நம்மள விட்டு போக மாட்டாங்க"
"அதுசரி இந்த வேலனை பாரேன் ஸ்கூல் பையனாட்டம் அரவிந்து கையைப் பிடிச்சுக்கிட்டு நிற்கிறான்"
"ஹாஹாஹா.. ஆமா வேலனை விட்டால் என் ஆளுக்கு ரசிகர் மன்றம் வச்சாலும் வைப்பான்….அந்த அளவுக்கு ஸ்மார்ட் எல்லாத்துலயும்"
" ஏய் கொஞ்சம் என்ன பாத்து பேசு டி"
" ஹ்ம்ம் போடி" அரவிந்தை பார்த்துக்கொண்டே தான் பேசினாள்
"மானத்தை வாங்காதே என கூறிக்கொண்டே திரும்பியவள் ஒரு நிமிடம் பிரிஸ் ஆகி பைரவியை உளுகினாள்...
" ரவி…. ரவி… ரவி…"
"சொல்லு இங்க தானே இருக்கேன்"
" அங்க பாரேன் என்னை மாதிரியே ஃபுல்லா டிரஸ் போட்டுட்டு இருக்கான்"
" நீ போட்டுட்டு இருக்கிறது ஃபுல் ஆண்டு சுடி அவன்…. சாரி சாரி அவர் போட்டுட்டு இருக்கிறது புல் அண்ட் டி-ஷர்ட்" இதில் என்ன இருக்கிறது என பைரவிக்கு புரியவே இல்லை..
"உனக்கு பொறாம ரவி"
" ஆமா அந்த மை எனக்கு வேணாம்.. நா ஏற்கனவே மை கலர்ல தான் இருக்கேன் "
ஆம் பைரவி பிரவுன் கலரில் இருக்கும் பெண்…
"அங்க பாரு யாரோ நியூ என்ட்ரி கொடுக்கிறாங்க… அங்க பாரேன் பாரின்ல பொறந்தவன் மாதிரி ஒரு கையை மடக்கி வச்சுக்கிட்டு குனிஞ்சி வரவேற்கிறத "
"அடப்பாவி ஜிக்கி, அது அவன் ஆளு ரேஷ்மி., அவளையும் கூப்பிட்டு இருக்கான் என்கிட்ட சொல்லவே இல்ல பாரேன்" !!!
"ஹாய் அவந்தி டார்லிங்" ரேஷ்மி
" ரேஷு வெல்கம் டியர்" அவந்தி
"இருவரும் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர் ரேஷு ஒருபடி மேல் சென்று அவளுக்கு ஒரு உம்மாவையும் கொடுத்தாள்…
கார்த்திக் அரவிந்த் தவிர வருமண், வேலன், ஷியாம் அனைவரும் அவளை ஆர்வமாக பார்த்து வைத்தனர்..
ரேஷ்மி பைரவியிடம் இட்ஸ் மீ ரேஷ்மி என்ன கை கொடுத்தாள்
பைரவியும் பதிலுக்கு கைகொடுத்து பைரவி என தன்னையும் அறிமுகம் செய்தாள்..
பின்னர் ஜித்தேஷ் ரேஷ்மி அனைவருக்கும் பொதுவாக தன்னுடைய காதலி என்றும் வீட்டில் ஏற்கனவே சொல்லி விட்டோம் என விளக்கமும் கொடுத்தான்..
அரவிந்த் இதில் ஏதாவது திருவிளையாடல் புரிந்து விடுவானோ என பயந்தனர் அவன் நட்புகள்...
ஆனால் அந்த பயத்திற்கு அவசியம் இல்லை என்பதுபோல் ரேஷ்மி இடம் சகஜமாக பேசினான்...
அனைவரும் ஒரு வண்டியில் இடித்து பிடித்து அமர்ந்தனர்… அரவிந்த் வண்டி ஓட்ட… திட்டமிட்டபடி ஐந்து ரதம் இருக்கும் இடத்திற்கு சென்றனர்...
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன சந்தோஷத்தில் திளைத்து இருந்தனர்… அங்கு வந்து இருந்த பலரின் பொறாமையை சம்பாதித்தனர் நம் கூட்டத்தினர்..
அவ்வளவு அரட்டை கலாட்டா செய்தனர்... இந்த வயதிலேயே நானும் இருந்து இருக்கலாமோ என பலரும் என்னும் வகையில் லூட்டி அடித்தனர்...
அர்விந்த்.. தான் எப்படிப்பட்ட அராத்து என நிரூபித்த தருணம் இதுதான்… அவந்திகா அவனை ஆவென வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள்...
அவளுக்கு நிச்சயம் தன் வாழ்க்கை சுவாரசியமாக செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. கற்பனையாகவும் தன் வாழ்க்கையை செதுக்கி பார்த்தாள்….
கடைசியாக இருந்த ரதத்தின் பக்கத்தில் இருந்த பெரிய பாறையில் ஏறி அனைவரையும் போட்டோ எடுத்தான் அரவிந்த்…. அவந்திகாவும் அவனுடன் ஏரி பார்க்க ஆசைப்பட்டு… பின் அவனின் ஒத்துழைப்பில் மேலே ஏறி விட்டாள்...
அவளுக்கு தானும் அரவிந்தும் மட்டுமே இவ்விடத்தில் உள்ளோம் எனும் மாயை உண்டாகியது….,அவளின் கனவை கலைத்து அவ்விடத்தின் பண்புகளை கூறிக் கொண்டு இருந்தான்…. அடுத்து இருவரும் சேர்ந்து சில பல செல்பிகளை எடுத்து நினைவுகளாக சேர்த்தனர்….
அதை கீழே இருந்து இவர்களும் போட்டோஸ் எடுத்தனர்…
அனைவரின் மனதிலும் சரியான ஜோடி என தோன்றும் வண்ணம் இருந்தனர் இருவரும்…
அடுத்தடுத்து கலங்கரை விளக்கம், வெண்ணைப் பாறை, அர்ஜுனன் போர் செய்த சிற்பம், குரங்கு சிலை என அனைத்தையும் பார்த்தபின் கடற்கரைக் கோயிலுக்கு சென்றனர்….
கோயிலைப் பார்த்து முடித்து… வித விதமாக போட்டோக்கள் எடுத்து குவித்தனர்…. கடற்கரைக்குச் சென்று கடல் நீரில் நன்கு ஆட்டம் போட்டு கொண்டு இருந்தனர்…
கடைசியாக வேலனையும் ரேஷ்மியையும் தான் வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர்… எவ்வளவு விளையாடியும் சுறுசுறுப்பு குறையவில்லை இருவரிடமும்...
அவந்திகா சிறிது நேரம் விளையாடிய பின் மணலில் அமர்ந்து விட்டாள்… அவளுக்கு துணையாக அரவிந்த் சென்று சேர்ந்து கொண்டான்…
பொதுவாக ஆரம்பித்த பேச்சு வீட்டில் உள்ளவர்கள் என வந்து நின்றது… அரவிந்த் ரோஜாவனம் செய்யும் சேட்டைகளையும் ராமை பற்றியும் நிறைய கூறினான்…
பின்னர் பேச்சு நண்பர்களை பற்றி வந்தது…. இருவருமே அவர் அவர் நண்பர்களை பற்றி விளையாட்டாய் பேசினர்…
திடீர் என அர்விந்த் அவந்திகாவை பார்த்து "நீங்க தப்பா எடுக்கலன்னா ஒன்னு சொல்லவா? " என கேட்டு இருந்தான்….
"தப்பா எடுத்துக்காத கேள்வியா கேளுங்க தப்பா எடுத்துக்க மாட்டேன்" என அவளின் புத்திசாலிதனத்தைகாட்டினாள்…
"இப்டி சொன்னா எப்டி கேக்குறது? "
"கேட்கணும்னு முடிவு செஞ்ச பிறகு எதுக்கு இவ்ளோ யோசனை… கேட்டுடுங்க அர்விந்த்… "
"அது… அது நீங்க என் மேல கொஞ்சம் அதிகமா இன்ட்ரெஸ்ட் காமிக்காற மாதிரி தோணுது… "
"ஹ்ம்ம்…. " அவனை பார்த்து முறைத்தாள்..
"ப்ளீஸ் ப்ளீஸ் வெயிட் முழுசா பேசிடறேன்… "
கைகளை கட்டிக்கொண்டு அவனை தீர்க்கமாக பார்த்து இருந்தாள்… மனதுக்குள் ஐயையோ கண்டுபிடிச்சிட்டானே… என்ன சொல்லி சமாளிக்கிறது என ஓயாமல் எண்ணம் ஓடியது…
அது தெரியாத அர்விந்த் அவளின் பார்வையில் தான் தான் தவறாக எண்ணுகிறோமோ என எண்ணினான்…
இருந்தும் பேச தொடங்கிய பின் எப்படி நிறுத்துவது என மேற்கொண்டு பேசினான்…
"இல்ல அவனி சாரி எனக்கு ஏன் இப்டி தோணுது தெரியல… நீ சில சமயம் பாக்கும் போது எனக்கு அது சாதாரணமா தெரிய மாட்டேங்குது…"
"ஹ்ம்ம் .. வேற எப்டி தோணுது? "
"அது வந்து… "
"சொல்லுங்க சொல்ல வந்தத சொல்லி முடிங்க… நா உங்களை சைட் அடிக்கிறது மாதிரி தோணுது… அப்டித்தான? "
"ஐயையோ நா அப்டி சொல்ல வரல…. ஆனா எனக்கு அப்டி தான் தோணுது உன் பார்வை.. "
"சரி உங்க பிரண்ட் கார்த்திக் பைரவிய பாக்குறது உங்களுக்கு தெரியுமா?"
"தெரியும்…"
"ஹ்ம்ம் தெரிஞ்சும் அமைதியா இருக்கீங்க… ஏன்னா? நீங்கல்லாம் ஆம்பிளை… நீங்க பாக்கலாம்.. நாங்க பாத்தா தப்பு.. அப்படித்தான…"
"கண்டிப்பா தப்பு தான் கார்த்திக் செஞ்சது… நா பைரவி கிட்ட பேசிட்டேன்… "
"என்னனு? "
"கார்த்திக் ஓட கண்ணுல பொய் இல்ல… உனக்கு பிடிச்சி இருந்தா ஒரு அண்ணனா எல்லாத்தையும் நானே எடுத்து செய்றேன்… உனக்கு பிடிக்கலன்னா அதே அண்ணனா உன்ன தொந்தரவு குடுக்கறவன உன்கிட்ட இருந்து விலக்கி வைக்க என்னால முடியும்… எதுனாலும் யோசிச்சு சொல்லு" என பைரவியிடம் இன்று கிடைத்த சில நிமிட தனிமையில் கேட்டு இருந்தான்…
அதற்கு அவள் "கொஞ்சம் நாள் போகட்டும் அப்புறம் பேசிக்கொள்ளலாம்" என கூறி இருந்தாள்…
"அது என்ன பைரவி மட்டும் தங்கச்சி "?
"அது… வேலன் என்கிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டான்… அண்ணான்னு பாசமா கூப்பிட்றான்… அவனோட அக்கா எனக்கும் தங்கச்சி முறை தான அதான் அந்த உரிமையில் பேசிட்டேன்.. "
"அப்போ என்கிட்ட என்ன முறைல பேசுறீங்க அர்விந்த்? " ஒரு மாதிரி குரலில் கேட்டாள்..
சட்டென யோசிக்காமல்" நீ என்னோட பிரண்ட் அவனி… ஏன் இப்டி கேக்குற? "என கேட்டு இருந்தான்…
"ஹ்ம்ம் இப்போ சொல்றேன் உங்க கேள்விக்கு பதில்… நீங்க அழகா இருக்கீங்க, அறிவா பேசுறீங்க, கண்ணியமா நடந்துக்கிறீங்க, உங்க மேனரிசம் பாக்கும் படியா இருக்கு… அப்போ உங்களை பாக்க தோணாதா? ரசிக்க தோணாதா? இதுல என்ன தப்பு இருக்கு? " நியாயமான கேள்வியை கேட்டாள் அவந்திகா..
அவனுக்கும் இது நியாயமான கேள்வியாக தோன்றினாலும் அது தனக்கு செட் ஆகாது என எப்படி சொல்வது… சொன்னால் இன்னும் தவறாக எண்ணி விடுவாளோ? எப்படி இதை டீல் செய்வது? என அவள் எதிரிலியே யோசிக்க தொடங்கி விட்டான்…
அவள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அவனை அப்பாவியாக பார்த்து வைத்தாள் அவந்திகா…
இதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் அமைதி ஆகி விட்டான்… தன்னை தன் முகத்திற்கு நேராக இத்தனை ப்ளஸ்களை சொல்லும் பொழுது இல்லை என வாதாடி…. நீ என்னை பார்க்க கூடாது என சொல்லவா முடியும்..?
எப்படியோ இன்னைக்கு சமாளித்தாயிற்று என அவளும் என்னையே குழப்பி விட்டாளே என இவனும் அமர்ந்து இருந்தனர்..
அனைவரும் பசி பசின்னு கூவிகிட்டே வந்து இருவரின் பக்கத்தில் டமால் டமால்னு விழுந்தனர்…
ஒவ்வொருவரும் பேசி சிரித்து ஓடி பிடித்து கார் வந்து சேர்ந்தனர்…
இந்த பயணம் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு தாக்கத்தை உருவாக்கியது…
அரவிந்தின் மனதில்???