பகுதி – 17.
நிக்கியோடான விஷ்வாவின் ‘உறவு’ தொடர்கதையாகிப் போக, அவள் புதிதாக நடித்த படம், சக்கைபோடு போட்டது. அதுவும் அந்த படத்துக்கென அவள் எடுத்த உடல் உழைப்பும், மெனக்கெடலும் பாராட்டை பெற்றுத் தர, அவளைக் கையில் பிடிக்கவே முடியவில்லை.
அடுத்த படத்துக்கு அவள் ஒரு மாத இடைவெளி எடுத்திருக்க, அந்த நேரத்தில் தன் உடலை சாதாரண நிலைக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.
அதற்கென அவள் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்வதாக அவனிடம் சொல்ல, விஷ்வாவுக்கோ அவளை விட்டு இருக்க முடியாது என்னும் நிலையே.
“நிக்கி... நாம கல்யாணம் பண்ணிக்கலாம்... பிறகு நீ எங்கே வேணா போ” அவன் சொல்ல, அவனிடம் ஆடித் தீர்த்துவிட்டாள்.
“இங்கே பாருங்க விச்சு... சினிமாவில் நடிக்க வரணும்னு அவ்வளவு பிடிவாதமா எங்க வீட்டில் இருந்து சாதிச்சு இருக்கேன். இந்த கனவுக்கன்னி பட்டம் எல்லாம் என் கழுத்தில் தாலி ஏறிட்டா எதுக்கும் இல்லாமல் போய்டும்.
“என்னால் இதை அப்படி எல்லாம் தூக்கிப் போட முடியாது. இப்போ கல்யாணம் பண்ணிட்ட உடனே என்ன நமக்குள் மாறிடும்? நினைச்ச நேரம் நாம ஒண்ணா இருக்கோம்... எல்லா விதத்திலும் நான் உங்களுக்கு திருப்தி அளிக்கறேன்.
“இதுக்கு மேல என்ன எதிர்பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றீங்க? இன்னும் ஒரு அஞ்சு, பத்து வருஷத்துக்கு இதைப்பத்தி பேசாதீங்க. நீங்களும் வேலையைப் பாருங்க, என்னையும் வேலையைப் பார்க்க விடுங்க” சொன்னவள், வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குப் பறந்திருந்தாள்.
அவள் என்னவோ அனைத்தையும் சுலபமாக சொல்லிவிட்டு சென்றுவிட, அவன்தான் குழம்பிப் போனான்.
‘இவ என்ன கல்யாணம் பண்ணிக்கற ஐடியால இருக்காளா? இல்லன்னா இப்படியே மெயின்டெயின் செய்ய நினைக்கறாளா?’ அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
அதே நேரம், அவனது வீட்டில் இருந்து அழைப்பு வர, வீட்டுக்குப் போய் நாட்கள் ஆகிவிட்டது என்பதால், அன்று மாலையில் வீட்டுக்குப் போனான்.
அந்த மாளிகை அவனை கைநீட்டி வரவேற்க, ‘ச்சே... ஆசையா கட்டின வீட்டில், நிம்மதியா தூங்கி எழக் கூட முடியலையே’ எண்ணியவாறே காரை நிறுத்திவிட்டு இறங்கிப் போனான்.
“சாமி... வாய்யா... வர்றேன்னு சொல்லவே இல்லையே... எப்படிப்பா இருக்க?” கேட்ட அவனது தாய், அவனை ஓடி வந்து வரவேற்றார்.
“நல்லா இருக்கேன்ம்மா, நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க? மத்தவங்க எல்லாரும் எங்கம்மா? யாரையுமே காணோம்?” அவன் கேட்க, சற்று தடுமாறிப் போனார்.
“அவங்களாப்பா... இப்போ வரச் சொல்றேன்... நீ போய் குளிச்சுட்டு வா” அவனை அனுப்ப முயல,
“தம்பியை எங்கே? அறிவு... அறிவு...” அவன் இந்த நேரம் வீட்டில்தான் இருப்பான் என்பதால் அழைத்தான்.
“அவன் ப்ரண்ட்ஸ் கூட வெளியே போயிருக்கான்ப்பா... நைட் வந்துடுவான். நான் உனக்கு குடிக்க சூடா டீ போட்டு கொண்டு வர்றேன்” சொன்னவர் கிச்சனுக்கு விரைந்தார்.
“ப்ரண்ட்ஸ் கூட வெளியே போயிருக்கானா? அவன் வண்டி வெளியே நிக்குது” தாயை அவன் தடுக்க, அவரோ விழித்தார்.
“அது... அது... ப்ரண்ட்ஸ் வண்டியில் போயிருக்கான்” வேகமாக சமாளித்தார்.
“அப்போ அப்பா... அப்பா எங்க போயிருக்கார்?” அவருக்குத்தான் வேலை எதுவும் இல்லையே... என்பதுபோல் அவனது குரல் ஒலித்தது.
“அவரு காய்கறி வாங்கப் போயிருக்கார்... நீ குளிச்சுட்டு வாப்பா. டீ குடிச்சுட்டே பேசலாம்” அவரும் எவ்வளவு நேரம் சமாளிப்பதாம்?
“தோட்டக்காரனும், வேலைக்காரங்களும் எங்க? செக்கியூரிட்டி மட்டும் நிக்கறார்?” தாயிடம் கேட்டான்.
“எல்லாரும் பகல்லதானப்பா இருப்பாங்க... இப்போ எப்படி இருப்பாங்க?” தாய் கேட்க, ‘அதுவும் சரிதான்’ என எண்ணியவாறே தன் அறைக்குச் சென்றான்.
அப்பொழுதுதான் போனமுறை இங்கே வந்திருந்த பொழுது அவர்களோடு போட்ட சண்டையும், அதன் பிறகு இங்கே வராமலே போனதும் நினைவுக்கு வர, தன்னையே நொந்துகொண்டான்.
‘நடுவில் இவங்ககிட்டே எல்லாம் பேசி இருக்கணும்...’ காலம் கடந்த நினைவு.
அவன் தன் அறைக்குச் சென்றவுடன், வேகமாக அலைபேசியை எடுத்த வடிவு, மகனுக்கும், கணவனுக்கும் அழைக்க, பொதுவாக அந்த நேரத்துக்கு அழைக்க மாட்டார் என்பதால் இருவரும் அழைப்பை ஏற்றார்கள்.
“என்னம்மா சொல்லுங்க... எதுக்கு இந்த நேரம் கூப்ட்டு இருக்கீங்க?” அறிவு தன் வண்டியை தெருவோரம் நிறுத்தியவாறே தாயிடம் கேட்டான்.
“உங்க அண்ணா வீட்டுக்கு வந்திருக்கான்டா... வந்த உடனே உன்னைத்தான் கேட்டான். வண்டி நிக்குது, வேலைக்காரங்க எல்லாம் எங்க? அப்பா எங்கன்னு ஒரே கேள்விதான்... கிளம்பி வாப்பா” அவர் அழைக்க, அவனுக்கு கோபம்தான் வந்தது.
“அம்மா... நான் இப்போ வேலையில் இருக்கேன்... வந்து கொஞ்ச நேரம்தான் ஆகுது. இப்போ எப்படி லீவ் கேட்க முடியும்? நைட் வந்து பார்த்துக்கறேன்... நீங்க அப்பாவை வரச் சொல்லுங்க” சொன்னவன், பீட்ஸாவை டெலிவரி செய்யப் போனான்.
அவர் கணவனுக்கு அழைக்க, “இந்த சவாரியை இறக்கிட்டு வீட்டுக்கு வாறேன் வடிவு... வர்றப்போ காய் வாங்கிட்டே வர்றேன்” சொன்னவர் அலைபேசியை வைக்க, சற்று ஆசுவாசமாக உணர்ந்தார்.
அப்படி ஒன்றும் பெரிதாக ஆறுதல் பட்டுக்கொள்ள முடியாதுதான்... தகப்பனும், மகனும் கட்டித் தழுவி பேசிக்கொள்ள மாட்டார்களே. எப்படியோ தன்னிடம் கேள்வி கேட்பது குறைந்துவிடும் என்பதால் ஆறுதலானார்.
விஷ்வா கீழே இறங்கி வர, அந்த நேரம் அங்கே வந்தார் கோட்டைச்சாமி. வெளியே ஆட்டோவின் சத்தம் கேட்ட நொடியே அவனது புருவம் முடிச்சிட்டது.
அவன் வெளியே வந்து எட்டிப் பார்க்க, காய்கறி பையோடு அவர் உள்ளே வந்து கொண்டிருந்தார். தாய்க்கு அவனிடம் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்க, ஆசையாகப் பேசிக் கொண்டிருந்தார்.
நேரம் கடந்துகொண்டே இருக்க, “இன்னுமா அறிவு வரல? டைம் பத்தாகுது... ப்ரண்ட்ஸ் கூட வெளிய போனாலும், ஒன்பது மணிக்குள்ள வீட்ல இருக்கணும்னு சொல்ல மாட்டீங்க?
“அவனை நம்பித்தானே நான் தைரியமா வேலையைப் பார்த்துட்டு இருக்கேன். அவன் இப்படி ஊர் சுத்திட்டு இருக்கறானா? எப்போ வருவான்? ஃபோனைப் போடுங்க...” சொன்னவன் தாயைப் பார்த்தான்.
வேலை நேரத்தில் மகனைத் தொல்லை செய்ய மனமின்றி அவர் கையைப் பிசைய, “ஃபோனைப் போடலையா? சரி, நானே போடறேன்...” சொன்னவன் அவனுக்கு அழைக்க, அப்பொழுது வேறு வீட்டுக்கு டெலிவரிக்கு சென்று கொண்டிருந்தான் அறிவு.
விஷ்வாவின் அழைப்பை பார்த்தவனுக்கு, இந்த அழைப்புக்காக ஒரு காலத்தில் ஏங்கியது எல்லாம் நினைவுக்கு வர, இப்பொழுது அதை எடுக்க மனமின்றி அப்படியே விடுத்தான்.
“என் ஃபோனை எடுக்க முடியாத அளவுக்கு ப்ரண்ட்ஸ் கூட பிஸியா? யார் பணம்? ப்ரண்ட்ஸ் கூட ஊர்சுத்த போயிருக்கறதே என் பணத்தில்தான்... அவன் என் போனை எடுக்க மாட்டானா?” தான் அழைத்தும் அவன் அழைப்பை எடுக்கவில்லையே என்ற கோபத்தில் வார்த்தைகளை சிதறடித்தான்.
“அவன் ஒண்ணும் ப்ரண்ட்ஸ் கூட ஊர் சுத்தப் போகலை... வேலைக்குப் போயிருக்கான்” கோட்டைச்சாமி சொல்ல, வடிவு அவரைப் பேச விடாமல் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
“என்னங்க... வேண்டாம்...” ‘அவன் இப்போ போய்டுவான்...’ என கண்களால் ஜாடை பேச, அது அவனுக்குப் புரிந்தது.
“என்ன வேலைக்கா? என்ன வேலை? எப்போ இருந்து போறான்? எதுக்குப் போறான்? அதுக்கு என்ன அவசியம் வந்தது?” கண்மண் தெரியாத ஆத்திரத்தில் அந்த வீடே அதிர கத்தினான்.
“அவன் வேலைக்குப் போக ஆரம்பிச்சு எட்டு மாசமாச்சு... நானும் ஆட்டோவை கையில் எடுத்து ஒரு வருஷம் ஆகப் போகுது. எங்களை நாங்க பார்த்துக்கறோம்ப்பா... தம்பியோட படிப்பு, சாப்பாடுக்கு எல்லாம் என்னாலேயே உழைக்க முடியும்.
“இந்த வீட்ல வாடகை கொடுக்காம தங்கிகிட்டு இருக்கோம், அது மட்டும்தான். சும்மா எல்லாம் இல்ல... உங்க அம்மா, வீட்டை சுத்தம்பண்ற வேலையை நல்லாவே செய்யறா... நான் தோட்டம், பின்னாடி இடத்தை பராமரிக்கறது எல்லாம் செய்யறேன்.
“வேலைக்காரங்க வேலையை நாங்க பார்த்துக்கறோம்... பெத்த பிள்ளைகிட்டன்னாலும்... ஓசி சாப்பாடு உடம்புல ஒட்டாதுப்பா. உழைச்சு சாப்பிடறதில் எங்களுக்கு எந்த கௌரவ குறைச்சலும் இல்லை” கோட்டைச்சாமி பேசப் பேச, அவன் எப்படி உணர்ந்தான் என்றே சொல்வதற்கு இல்லை.
அவன் ஒரு வருடமாக அங்கே வருவதே இல்லை... அதற்குள்ளாக, அங்கே நேர்ந்திருக்கும் மாற்றம்... ‘அப்போ நான் யாருக்காக இவ்வளவு சம்பாதிக்கறேன்?’ அவன் வாங்கும் லட்சக்கணக்கான சம்பளம் அவன் கண்ணுக்குள் உலா போனது.
“எதுக்குப்பா இதெல்லாம்?” அவர் தகர்ந்துபோய் கேட்க,
“நீங்க திங்கறது யார் பணம்ன்னு நீ கேட்டுடக் கூடாது பார்... வடிவு, சோத்தை எடுத்து வை... பசிக்குது” துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அவர் செல்ல, அவன் அங்கேயே நின்றிருந்தான்.
“ஐயா... நீ எதுவும் மனசுக்குள்ள வச்சுக்காதய்யா...” தாய் அவனை சமாதானம் செய்ய முயல,
“நான் எதுவுமே செய்யக் கூடாதாம்மா?” அவன் வேதனையாக கேட்க, தாயிடம் ஒரு அழுத்தமான அமைதியே.
இடையில் ஒரு முறை அவனை நேரில் பார்த்து, அவனுக்கு பெண் பார்த்திருப்பதாக சொல்லப் போயிருக்க, அன்று நடந்தது இன்றும் வடிவின் தொண்டையை நெரித்தது.
வந்து செல்லும் தூரத்தில் இருக்கும் தங்கள் வீட்டுக்கே அவன் வராமல் போக, அவன் தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பது அவர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்தது.
‘அங்கே படுக்கற நேரம், இங்கே வந்து படுக்கலாமேப்பா...’ அவனிடம் கேட்க,
“படுக்கற ரெண்டுமணி நேரத்தை கார்லேயே தூங்க முடியுமா? நேரம் கெட்ட நேரத்தில் படுப்பேன், வேண்டாம்...” அவன் உறுதியாக மறுத்திருக்க, அதிலும் தோல்வியே.