• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 25.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai

பகுதி – 25.

அந்த நள்ளிரவில், சிவாவின் துணையோடு, பூமிகாவை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில், பூமிகாவின் நினைவு தப்பி இருந்தது.

“டாக்டர், நீங்க தினமும் செக் பண்ணியும், பூமிக்கு எப்படி இப்படி ஆகும்? அவளுக்கு இந்த மாதிரி ஆகப் போறதை முதல்லேயே கணிக்க முடியலன்னா நீங்க எல்லாம் என்ன டாக்டர்?” அவரிடம் அத்தனையாக அவன் கோபம் கொள்ள, சிவாவுக்கு பெருத்த ஆச்சரியம்.

நேற்று வரைக்கும் ஆகாஷ் குரலை உயர்த்தி பேசி கூட அவன் பார்த்ததில்லை. அப்படி இருக்கையில், இவ்வளவு உச்சத்தில் கத்தினால் அவனும் ஆச்சரியப்பட மாட்டானா என்ன?

“சார், அவங்க ஹெல்த் மோசமாகுது, ஹாஸ்பிடல் போகலாம்னு நான் சொன்னேன்” அந்த மருத்துவர் பெரும் தயக்கமாக சொல்ல, அவனுக்கு இன்னும் கோபம் பொங்கியது.

“என்ன? யார்கிட்ட சொன்னீங்க? சிஸ்டர், நீங்க சொல்லுங்க... இவர் யார்கிட்டே சொன்னார்?” அங்கிருந்த செவிலியிடம் கேட்டான்.

அவளுக்கோ என்ன சொல்வது? எனத் தெரியாத தடுமாற்றம் ஓட, “அது வந்து...” தயங்கி இழுத்தாள்.

“சொல்லுங்க... எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்” அவன் விடுவதாக இல்லை.

“அவங்ககிட்டேயே...” மருத்துவருக்கு தான் செய்தது சரியில்லை என்ற எண்ணம் எழ, அவஸ்தையாக நெற்றியை தேய்த்துக் கொண்டார்.

“என்ன? டேய் சிவா, இந்த ஆள் என்னடா சொல்றார்?” தான் சரியாகத்தான் கேட்டோமா?’ என அவனே குழம்பிப் போனான்.

“ஆகாஷ், கொஞ்சம் பொறுமையா இரு... நாம கேட்போம்” நண்பனை சமாதானப்படுத்த முயன்றான்.

“அவளே உடம்புக்கு முடியாதவ... அவகிட்டே போய் சொன்னேன்னு சொல்றார். இவர் என்ன லூசா? அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா, இவரைத்தான் முதல்ல கேட்போம்ன்னு தெரிய வேண்டாம்?” அவனால் நம்பவே முடியாமல் கேட்டான்.

“டாக்டர், என்ன இது? அவளுக்கு சட்டுன்னு இப்படியெல்லாம் ஆயிடக் கூடாதுன்னு தானே, எங்க மாமா உங்களை கூடவே வச்சிருக்கார். இத்தனை வருஷமா கூடவே இருக்கீங்க... இப்படி பொறுப்பில்லாம நடந்திருக்கீங்களே” அவரது செய்கைக்குப் பின்னால் ஏதும் காரணம் இருக்குமோ என சிவா சற்று பொறுமையாகவே கேட்டான்.

“சிவா, இதுதான் நீ விசாரிக்கற லட்சணமா?” நண்பனின் செய்கையில் ஏக கடுப்பானான்.

“இத்தனை வருஷமா அவங்க கூடவே இருக்கறவர்டா, அப்படி எல்லாம் கேர்லெஸ்ஸா இருக்க மாட்டார்” நண்பனிடம் சொன்னவன், அவனிடம் திரும்பினான்.

“நான் சொல்றேன் சார்...” செவிலி அத்தனை நேரமாக பொறுமையாக இருந்தவள், வேகமாக வாயைத் திறந்தாள்.

‘என்ன?’ என்பதுபோல் அவர்கள் பார்க்க,

“பூமி மேடத்தால் முடியலை, அவங்களை ஹாஸ்பிட்டல்ல சேர சொல்லி நாங்க சொன்னோம். இதை உடனே பெரிய சார் கிட்டே சொல்லணும்ன்னு சொன்னப்போ, அதைச் செய்ய வேண்டாம்னு ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டாங்க” அவள் கைகளைப் பிசைய, ஆண்கள் இருவரும் அவளையே பார்த்திருந்தார்கள்.

“அவளைக் கேட்டுதான் எல்லாம் செய்வீங்களா?” ஆகாஷ் எகிறினான்.

“அவங்க சந்தோஷத்தை கெடுக்க மனசு வரலை சார்...” இப்பொழுது அவள் கண்ணீர் விட்டே அழத் துவங்கி இருக்க, தகர்ந்து போன ஆகாஷ், பூமிகாவின் கரத்தைப் பிடித்தவாறு அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவள் சொல்ல வருவது இன்னதென அவனுக்குப் புரிந்தது. குழந்தையில் இருந்தே பூமிகாவை பார்ப்பவர்கள் அவர்கள், அப்படி இருக்கையில் பூமிகா தன் சந்தோஷத்துக்காக ஒன்றைக் கேட்கையில் மறுப்பார்களா என்ன? அது அவனுக்கும் தெளிவாக புரிந்திருக்க, பூமிகாவையே இமைக்காமல் பார்த்தான்.

“என்ன சொல்றீங்க?” சிவா அவளிடம் கேட்க,

“ஆமா சார்... ‘அவரோட இருக்கும்போது நான் சாகணும்... ஹாஸ்பிட்டல்ல, தனியா சாக வேண்டாம்னு’ அவங்க சொன்னப்போ, எங்களால் பதில் சொல்லவே முடியலை.

“அதுவும்... ‘எனக்கு அவரோட இருக்கும்போது சாகறதுக்கு கூட பயமா இல்லை. தனியா சாக பயமா இருக்கு’ன்னு சொல்லி அழுதாங்க. ‘அப்பாகிட்டே சொன்னா, நான் உங்களை எல்லாம் மன்னிக்கவே மாட்டேன்னு’ சொன்னப்போ, அவங்க சந்தோஷத்தை எப்படி கலைக்க?” அவள் கேட்க, சிவா அமைதியானான்.

“டாக்டர்... பூமியோட நிலைமை இப்போ என்ன?” சிவா கேட்க,

அவளைப் பரிசோதித்த ஆம்புலன்ஸ் மருத்துவர், “ஆக்ஸிஜன் லெவல் கொஞ்சம் கொஞ்சமா கம்மி ஆகிட்டே வருது... இவங்களை உடனே வெண்டிலேட்டர்ல மாத்தணும்...” அவளுக்கு பதிலாக, வெளியே ஒரு இதயம் துடித்தால் மட்டுமே அவள் பிழைப்பாள் எனச் சொல்லாமல் சொல்ல, ஆகாஷ் அப்படியே இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.

“நீங்க முன்னாடியே சொல்லி இருந்தால், இதை அவாய்ட் பண்ணி இருக்கலாமே” ஆகாஷ் வேதனையில் புலம்ப,

“ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே போயிருந்தாலும், வெண்டிலேட்டர் தான் ஒரே ஆப்ஷன்...” அவர் சொல்ல, ஆகாஷின் பார்வை அவளை விட்டு இம்மியும் அசையவில்லை.

“ரொம்ப கஷ்டப்பட்டிருந்தா தானே... எனக்கு அது நல்லாவே புரிஞ்சது. அவகிட்டே கேட்டப்போ, ‘இல்ல, நான் ஓகே’தான்னு சொல்லி என் வாயை அடைச்சா. நீங்க இருக்கீங்கன்னு ரொம்ப தைரியமா இருந்துட்டேன்... ஆனா அவ இப்படி...?” சொல்லிக் கொண்டிருந்தவனின் கண்ணீர் கடகடவென கன்னத்தில் இறங்க, அங்கே அப்படி ஒரு அமைதி.

அடுத்த பதினைந்தே நிமிடங்களில், பூமிகாவை ஸ்பெஷல் ஐசியூவில் சேர்க்க, வேகமாக வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

கண்ணாடித் கதவுக்குப் பின்னால் நின்றவன், ஒயர்களுக்கு மத்தியில், சுருண்டு கிடந்த அவளை, வேதனை அப்பிய முகத்தோடு பார்த்துக் கொண்டே நின்றான். மனம் முழுக்க ரணம். அந்த வெள்ளை மனம் கொண்டவளின் மரணத்தை தன்னால் எதிர்கொள்ள முடியும் என்றே தோன்றவில்லை.

ஏற்கனவே அந்த மருத்துவமனையில் அவசரத் தேவை ஏதுவாக இருந்தாலும், தன் மகளுக்கு செய்யச் சொல்லி, நித்யானந்தம் எழுதி, ஒப்புதல் அளித்திருந்தார். எனவே சொந்தங்கள் வேண்டும், அவர்களது அனுமதி வேண்டும் என எந்த கேள்வியோ, தாமதமோ அவர்கள் செய்யவில்லை.

உள்ளே நடப்பவை அனைத்தையும், அவன் அங்கே நின்று கவனித்துக் கொண்டே இருக்க, “ஆகாஷ், இப்படி வந்து உக்காரு... எவ்வளவு நேரம்தான் நிப்ப? எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க...” சிவா நண்பனை அழைத்தான்.

“இல்லடா... என்னால் அங்கே உக்கார முடியாது... அவளுக்கு எதுவும் ஆயிடாது தானே?” எதிர்பார்ப்பும், ஏக்கமுமாக அவன் வினவ, சிவாவுக்கு வருத்தமாக இருந்தது.

“ஆகாஷ், அவளோட நிலைமை உன்னை விட யாருக்குத் தெரியும்?” அவன் கேட்க, அவன் முகத்தில் விரவிய அந்த வேதனையின் அளவை அவனால் வரையறுக்க முடியவில்லை.

நேரம் கடந்துகொண்டே இருக்க, மருத்துவர் அங்கே வரவே, வேகமாக அவர் முன்னால் சென்று நின்றான்.

“டாக்டர், அவளுக்கு எதுவும் இல்லையே...” அவன் படபடக்க, அவனது தோளைத் தட்டிவிட்டு விலகி நடந்தார்.

அவரது செய்கையே அவனுக்கு விஷயம் இன்னதென உணர்த்த, அங்கிருந்த இருக்கையில் தகர்ந்து போய் அமர்ந்தான்.

எதுவும் செய்ய இயலாத ஒரு கையறு நிலை... மருத்துவமே கையை விரிக்கையில், எங்கே சென்று நியாயம் கேட்க முடியும்? ஐசியூ வாயிலே கதியென அவன் கிடக்க, காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லையே.

கூடவே சில நிமிடங்களில், ஆகாஷ் விடாமல் வாந்தி எடுக்கத் துவங்க, சிவா அவனைத் தாங்கிக் கொண்டான். சிவாவின் முகத்தில் அப்பட்டமாக ஒரு பயம் தெரிய, “விடுடா பார்த்துக்கலாம்...” என ஆகாஷ் சொல்ல, இப்படிச் சொன்ன நண்பனை கொலைவெறியில் முறைத்தான்.

“என்ன விளையாடறியா? என்னால இப்படியே விட முடியாது” சொன்னவன் அவனிடம் பேச, ஆகாஷ் அசைந்து கொடுக்கும் வழியைக் காணோம். “நான் டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்” சொன்னவன், அவரைத் தேடி ஓட, சிவா அவன் பின்னால் ஓடினான்.

அவரது அறைக்கதவை புயல் வேகத்தில் திறந்து உள்ளே நுழைந்தவன், “டாக்டர்... டாக்டர்... ஏதாவது செய்ங்க, அவளை என்கிட்டே பேச வைங்க... பிளீஸ்” அவரிடம் கெஞ்ச, அவரிடம் பலத்த அமைதியே.

“கொஞ்சம் நிதானமா இருங்க... இப்படி எமோஷனல் ஆகறதால எந்த பிரயோஜனமும் இல்லை. அவங்க இத்தனை வருஷம் இருந்ததே ஆச்சரியம் தான்” அவனுக்குப் புரிய வைக்க முயன்றார்.

“அவ பேசுவாளா மாட்டாளா?” அவள் கண்விழிப்பாளா? இல்லையென்றால் மீளா துயிலில் ஆழ்ந்து விடுவாளா? எனக் கேட்கும் தைரியம் அவனுக்கு இருக்கவில்லை.

“பேசலாம்... பேசாமலும் போகலாம்... ஆனா இனிமேல் அவங்களுக்கு இருக்கறது சில நாட்கள் தான்...” அவர் சொல்ல, விருட்டென இருக்கையைத் தள்ளிவிட்டு எழுந்தான்.

“என்ன? இதைச் சொல்லவா இவ்வளவு படிச்சீங்க?” அவரது மேஜைமேல் இருந்த பெயர் பலகையைத் தூக்கி, அவர் முகத்துக்கு நேராக காட்டி கத்தினான்.

“சாவைத் தடுக்கறதுக்கு மருந்து கொடுக்கறதுக்கு நான் இன்னும் படிக்கலை...” அவர் நிதானமாகவே சொல்ல, தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்து தள்ளினான்.

சோர்ந்த நடையில் வந்தவன், மீண்டுமாக சென்று வாந்தி எடுக்க, “ஆகாஷ், நீ ரெஸ்ட் எடுத்தே ஆகணும்...” சிவா சொல்ல, மறுப்பாக தலை அசைத்தவன், மீண்டுமாக அங்கிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.

“கொஞ்ச நேரமாவது தூங்குடா...” சொல்லிப் பார்த்தவன், அப்படியே இருக்கையில் சாய்ந்து, இமைகளை மூடிக் கொண்டான். மற்றவர்களுக்கு தகவல் கொடுக்கும் வேலையை, அவர்களது ஆம்புலன்ஸ் மருத்துவரிடம் ஒப்படைத்திருக்க, அவர்கள் எல்லாம் வருகையில் பார்த்துக் கொள்ளலாம் என அமர்ந்தான்.

“எனக்கு பாய் சொல்லாமலே போய்டுவாளாடா?” ஆகாஷ் திடுமென கேட்க, சிவாவுக்கு கோபம்தான் வந்தது.

“நான் உன் பேச்சை கேட்டிருக்கவே கூடாதுடா...” அவன் கத்த, நண்பனை திரும்பிப் பார்த்தான்.

“என்னடா இப்படி சொல்லிட்ட? என்னோட நாட்களை எல்லாம் ரொம்ப அழகாக்கற விஷயத்தை செய்திருக்கடா...” அவன் சொல்ல, சிவாவின் கோபம் அதிகரித்தது.

“இப்போ நீ வாயை மூடலை... என்ன செய்வேன்னே எனக்குத் தெரியாது” அவன் கோபத்தில், வேகமாக தன்னை மீட்டான்.

விடிந்தும் விடியாத நேரத்தில், மொத்த குடும்பமும் அங்கே கிளம்பி வர, அவர்கள் கண்டதோ, தரையில் மண்டியிட்டு அமர்ந்து, தன் தலையைக் கரங்களால் பற்றிக் கொண்டு கதறிய ஆகாஷைத்தான்.

‘என்னவோ ஏதோ? எனப் பதறி, பூமிகா தங்களை விட்டு போய்விட்டாளோ?’ என அவர்கள் எல்லாம் பதறியடித்துக் கொண்டு ஓடி வர, சிவா அவன் அருகே வந்து அமர்ந்து அவன் தோளை அழுத்தினான்.

“என்ன ஆச்சு? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?” நித்யானந்தம் பதற,

“அங்கிள்... அவளை வென்டிலேட்டர்ல வச்சிருக்காங்க... நீங்க போய் பாருங்க” அவரிடம் சொன்னவன், “டேய் ஆகாஷ் எந்திரி, நாம இப்போ போயாகணும்” சொன்னவன், அவனது கரத்தைப் பிடித்து எழுப்பினான்.

“இல்ல, நான் எங்கேயும் வர மாட்டேன்...” அவன் கத்தி தீர்க்க, ப்ரதிக் வேகமாக அவர்கள் அருகே வந்தான்.

“என்ன ஆச்சு சிவா? இவர் எதுக்கு இப்படி வயலெண்ட்டா பிஹேவ் பண்றார்?” புரியாத குழப்பத்தில் கேட்டான்.

“எதுவும் இல்லை... நீ போ...” சிவா சொல்ல, தேன்மொழி அவர்கள் அருகே வந்தாள்.

“எப்போ அவளுக்கு இப்படி ஆச்சு? எப்போ வந்தீங்க? ஏன் என்கிட்டே சொல்லலை?” வழக்கமாக அவள்தான் பூமிகாவை கண்கொத்திப் பாம்பாக எப்பொழுதும் கவனித்துக் கொண்டே இருப்பாள் என்பதால், இன்று இப்படி ஆனதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
“தேன்மொழி, என்ன இது? எல்லாரும் புதுசா பண்ணாதீங்க. பூமிகாவின் முடிவு எப்போ வேண்ணா இருக்கலாம்னு நாம எல்லாருக்குமே தெரியும். ஜஸ்ட் அக்ஸப்ட் இட்...” சிவா சொல்ல, யாரும் தேறும் வழியைக் காணோம்.

“சந்தோஷத்தில் இன்னும் கொஞ்ச நாள் கூட இருப்பான்னு நினைச்சேன்” தேன்மொழி புலம்ப, சிவா தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

“ப்ரதிக், இவங்களை என்னன்னு பாரு... நான் இவனைப் பார்க்கறேன்” சொன்னவன், கிட்டத்தட்ட ஆகாஷை இழுத்துக் கொண்டு சென்றான். ஆகாஷ் அவனோடு செல்ல மாட்டேன் எனச் சொன்னதை எல்லாம் சிவா கண்டுகொள்ளவே இல்லை.

அவர்கள் செல்லவே, “என்னங்க இது? ஆகாஷ் ரொம்ப தைரியமானவர்ன்னு நினைச்சேன்... இப்போ என்னன்னா?” அவள் தன்னவனிடம் புலம்ப, அவளை ஆறுதலாகப் பார்த்தான்.

“மனுஷ மனசு... நாம எதுவும் சொல்ல முடியாது” சொன்னவன், தன் தங்கையைக் காண அழைத்துச் சென்றான்.

சில பல மணி நேரங்கள் கடக்க, சிவாவும், ஆகாஷும் உள்ளே வந்தார்கள். வந்தவர்களின் முகங்கள் இருண்டே கிடக்க, பூமிகாவின் கவலையில், இவர்களைக் கவனிப்பார் யாரும் இல்லை.

ஆனால் தேன்மொழி ஆகாஷைத்தான் கவனித்துக் கொண்டிருந்தாள். அடுத்த இரண்டு நாள், பூமிகாவிடம் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் போக, ஆகாஷும் அதிகம் சோர்ந்து போனான்.

கூடவே சிவாவும் அவனும் தனியாக ரகசியம் பேசுவதும், சண்டை போடுவதும் என நடக்க, நடப்பவை எதுவும் அவளுக்குப் புரியவே இல்லை.

அன்று அனைவரும் வீட்டுக்குப் போயிருக்க, தேன்மொழி மட்டுமே பூமிகாவோடு இருந்தாள். அந்த நேரம் அங்கே வந்த ஆகாஷ், பூமிகாவின் படுக்கையில், அவள் அருகே அமர்ந்தவன், அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டு, அவள் முகத்தையே அசையாமல் பார்த்திருந்தான்.

“என்ன பூமி... என்கிட்டே பாய் கூட சொல்லாமல் போகலாம்னு முடிவு பண்ணிட்டியா? இட்ஸ் நாட் ஃபேர்...” சொன்னவன், அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைக்க, பூமிகாவின் கடைவிழியோரம் கண்ணீர் வழிந்தது.

“என்ன... நான் பேசறது கேட்குதா?” அவளிடம் கேட்டவன், அவளது கண்ணீரைத் துடைத்தான். தேன்மொழி நாசூக்காக விலகி நின்றவள், கதறத் துடித்த தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தினாள்.

“நீ முழிச்சுட்டு இருக்கும்போது என்னால் இதைச் செய்ய முடியுமான்னு தெரியலை...” சொன்னவன் சற்று இடைவெளி விட, தேன்மொழி என்ன நினைத்தாளோ, தன் கையில் இருந்த அலைபேசியை உயிர்ப்பித்தவள், அவனது செய்கையை, பேச்சை வீடியோ எடுக்கத் துவங்கினாள்.

“நீ என்னவோ உன்னை என் மனசுக்குள்ள ஏத்திக்க கூடாதுன்னு ஈசியா சொல்லிட்ட. ஆனா அது முடியுமா? என் மனசுக்குள்ள முழுக்க இப்போ நீதான் இருக்க...” சொன்னவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக, மிகவும் அழுத்தமாக முத்தமிட்டான்.

“என்னவோ உன்னோட இந்த இதயம் சரியா துடிக்க மாட்டேங்குதுன்னு சொல்றாங்க... ஆனா அது எனக்காக மீண்டு வரும்னு எனக்குத் தெரியும். நாம ஒருத்தருக்கு ஒருத்தர் பாய் சொல்லிக்காம எங்கேயும் போகப்போறது இல்லை” சொன்னவன், அவள் இதயம் இருக்கும் இடத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன், அவள் நெஞ்சில் தலை சாய்த்து படுத்தான்.

அவளது இதயத்துடிப்பை கேட்க முயல, அது அவனுக்கு விளையாட்டு காட்டியது.

அந்த நேரம் அங்கே வந்த செவிலி, அவனைப் பார்த்துவிட்டு, “ஹலோ, யார் சார் நீங்க? பேஷண்டை எதுக்கு தொல்லை பண்ணிட்டு இருக்கீங்க?” வேகமாக அவனை நெருங்கினாள்.

“நான் இவளோட வைஃப்... ஐ ஹேவ் ஃபுல் ரைட்ஸ்...” அவன் சொன்ன வேகத்திலும், வார்த்தைகளிலும் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

“ஓ... சாரி சார், அவங்க உங்க வைஃப்பா?” அவள் கேட்க,

“இல்ல நான்தான்...” அவன் மிகத் தெளிவாக சொல்ல, வந்தவளோ அங்கே இருந்த தேன்மொழியைத் திரும்பிப் பார்த்தாள்.

அந்த ஒரு இக்கட்டான நிலையிலும், தேன்மொழிக்கு சிரிப்பு வந்தது. மெல்லியதாக இதழ் பிரித்தவள், ‘ஆம்...’ என தலை அசைக்க, வந்தவளுக்கு திகைப்பு.

தன்னை வேகமாக தெளிந்தவள், “இருக்கட்டும் சார்... அதுக்காக, வெண்டிலேட்டர்ல இருக்கறவங்களை இப்படி தொல்லை பண்ணுவீங்களா? கொஞ்சம் விலகிப் போங்க. டாக்டர் பார்த்தா, என்னைத்தான் சத்தம் போடுவார்” அவள் கடமை அவளுக்கு.

“நீங்க என்ன டியூட்டி மாத்தி இப்போதான் வர்றீங்களா? என்னை இங்கே பார்த்தா, உங்க டாக்டர் எதுவும் சொல்ல மாட்டார். இன்னும் கொஞ்ச நேரத்தில், இவ சாட், ரிப்போட் எல்லாம் படிச்சீங்கன்னா, எங்க கதையை கேட்டு நீங்களும் எதுவும் சொல்ல மாட்டீங்க” சொன்னவன், மீண்டுமாக தன்னவளை ஒரு வேகத்தில் முத்தமிட, அவனைத் தடுக்கப் போனவள், ஏனோ அதைச் செய்யாமல் நின்றுகொண்டாள்.

“என்ன மேடம் இது?” தேன்மொழியின் அருகே சென்றவள், அவளிடம் கேட்க,

“இவ சுய உணர்வில் இருந்தா, நான் ரொமாண்டிக்கா ஒரு லுக்கு கூட விட முடியாது. மேடம் அவ்வளவு சென்சிட்டிங்... ‘மோப்பக்குழையும் அனிச்சம் மலர்’ மாதிரி... பட்டுன்னு வாடிப் போய்டுவாங்க. அதான் இப்படி...” சொன்னவன், மீண்டுமாக அவள் நெஞ்சில் அழுந்த முத்தமிட்டு விலகினான்.

“பாய் சொல்றதுக்காவது வந்துடு பூமி...” சொன்னவன், தன் கண்ணீரை அடக்க முடியாமல் அங்கிருந்து விலகி ஓடினான்.

அவனது பேச்சா, இல்லையென்றால் அவளது வில் பவரா? ஏதோ ஒன்று மறுநாளே பூமிகாவை மீட்டு வர, அவள் கண் விழிக்கையில் அவளது வெண்டிலேட்டர் அகற்றப் பட்டிருக்க, கண்விழித்தவள் கண்டது ஆகாஷைத்தான்.

“பயந்...”’துட்டீங்களா?’ என அவள் குரலையும், சக்தியையும் திரட்டி அவனிடம் கேட்க, வேகமாக அவளைத் தடுத்தான்.

“நீ எதுவும் பேச வேண்டாம்... பயந்துட்டியான்னு தானே கேட்கற? இல்லைன்னு சொல்ல மாட்டேன்... லைட்டா...” விரல் நுனியை குட்டியாக அவளிடம் காட்ட, அவன் என்னதான் மறைக்க முயன்றாலும் அவனது பயம் அவன் முகத்தில் தெரிந்தே விட்டது.

அவனை தலையை மெதுவாக அசைத்து அருகே அழைக்க, அவள் இதழின் அருகில் தன் செவியை கொண்டு சென்றான்.

அவள் எதுவும் சொல்லாமல் போகவே, ‘என்ன?’ என்பதுபோல் திரும்பிப் பார்க்க, தன் இதழுக்கு அருகே இருந்த அவன் இதழில் ஒரு குட்டி முத்தம் வைக்க, கொஞ்சம் கூட அசைந்து கொள்ளாமல், அப்படியே அமர்ந்திருந்தான்.

அவள் இதழைக் குவித்து முத்தமிட்டால் மட்டுமே அவன் இதழ்களைத் தீண்ட முடியும் என்பதால், அவள் விலகிக்கொள்ள காத்திருந்தான். அவளை, தான் முத்தமிடவோ, கொஞ்சமாக நெருங்கிக் கொள்ளவோ கூட அவன் முயலவில்லை.

அவளாகவே அவளது குவித்த இதழை விலக்கிக் கொள்ள, “என்ன... என்னை சமாதானப்படுத்தறியா? உனக்கு கஷ்டமா இருந்தா சொல்ல மாட்டியா? மயக்கம் போட்டு விழுந்து, மூச்சு விட முடியாத அளவுக்கு போயிருக்க” எத்தனை முயன்றும், அவன் குரலில் சிறு நடுக்கமும், கோபமும் விரவியது.

“சாரி...” அவள் சின்னக் குரலில் மன்னிப்பை வேண்ட,

“உன்னைப் பேச வேண்டாம்னு சொன்னேன்...” அதற்கும் அவளைக் கடிந்தான்.

‘சரி, நான் என்னதான் செய்யட்டும்?’ என்பதுபோல் ஒரு பாவனையைக் கொடுக்க,

“நீ கண்ணாலேயே பேசு... உன்னோட ‘ஐஸ்’(eyes) ரொம்ப ‘எக்ஸ்ப்ரசிவ்’ன்னு நான் சொல்லி இருக்கேனா இல்லையா? இந்த கண்ணு ரெண்டும் என்னை முழுங்கறதும், உன் காதலை எனக்கு முதல்ல சொன்னதும் அதுதான்...” அவள் கூந்தலை மென்மையாக ஒதுக்கியவாறு அவன் சொல்ல, அவள் கண்கள் அவனைத்தான் விழுங்கியது.

கூடவே, விழிகளை அவள் சுழற்ற, “எல்லாரும் வெளியே இருக்காங்க... கூப்பிடவா?” அவன் கேட்க, மறுப்பாக தலை அசைத்தாள்.

பூமிகா பேசவே கூடாது என மருத்துவர்கள் சொல்லி இருக்க, அதற்குத்தான் இத்தனையாக போராடிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“அது...” அவள் பேசத் துவங்க,

“நீ இப்படியே பேசிகிட்டே இருந்தா, நான் எழுந்து போய்டுவேன் பூமி. நான் உள்ளே இருக்கறேன்னு சொன்னப்போவே, உங்க அப்பா வேண்டாம்னு சொன்னார், நான்தான்... அவளைப் பேச விடாம பார்த்துக்கறேன், என்னைத்தான் அவ முதல்ல தேடுவான்னு சொல்லி, பிடிவாதமா வந்தேன்” அவன் குரலை இறுக்கமாக்க, அவள் ஏன் பேசப் போகிறாளாம்?

அவன் கரத்தை பற்றியவள், ஒரு மாதிரி பரிதவிப்பாக அவன் முகம் பார்க்க, “என்ன... நான் இப்படி இருக்கறது பிடிக்கலையா? கலகலப்பா இருக்கணும், அதானே?” அவன் கேட்க, அவள் கண்களில் வியப்பும், இதழ்களில் ஒரு குறுநகையும் எட்டிப் பார்த்தது.

எச்சில் கூட்டி விழுங்கியவள், முகத்தைச் சுழிக்க, “என்ன த்ரோட் பெயினா இருக்கா? எப்படியும் ஒரு வாரம் இருக்கும்... ரொம்ப வலிக்குதா?” கேட்டவன், அவள் தொண்டையை மெதுவாக விரலால் வருட, இமைகளை மூடிக் கொண்டாள்.

“நீ எனக்கு கொடுத்த மாதிரி, உனக்கு வலி தெரியாம இருக்க, நான் வேண்ணா ஒரு முத்தம் தரவா?” அவன் சாதாரணமாக வினவ, உணர்வுகளைக் கலக்காத அந்த குரலில் கலைந்தவள், அவனையே பார்த்தாள்.

‘ம்ச்...” ஒரு சலித்த முகபாவத்தை அவள் அவனுக்கு கொடுக்க,

“பூமி... ஒரு சின்ன வேரியேஷன் கூட, உன்னை ரொம்ப பாதிக்கும்னு சொல்றாங்க. என்னால் உனக்கு அதைக் கொடுக்க முடியாது...” அவள் தன்னிடம் எதிர்பார்ப்பதை கொடுக்க முடியாத துயரம் அவனைக் கொன்று தின்றது.

‘நீ என் உயிர்... உன்னை எனக்கு கொள்ளையாய் பிடிக்கும். உன்னை என் உசுருக்குள்ளே பூட்டி வச்சுக்க ஆசையா இருக்கு’ தனக்குள் கொட்டிக் கிடக்கும் அவள்மீதான நேசத்தை, அவளிடம் மழையெனப் பொழியத்தான் அவனுக்கும் ஆசை.

ஆனால், அப்படியான அவனது தனிப்பட்ட உணர்வுகள், அவளைத் தீண்டி திளைக்க வைக்கையில், அதை அவளது இதயம் பலமாக உள்வாங்கும் என்கையில், அதைத் தாங்கும் சக்தி அதற்கு இப்பொழுது ஐந்து சதவீதம் மட்டுமே’ என மருத்துவர் சொல்லியிருக்க, அவன் அவளிடம் எதை வெளிப்படுத்தவாம்?

அவளது கரம், அவனது கரங்களுக்குள் இருந்து விடுபட்டு, தன் அருகே இருந்தவனது சட்டையை கொத்தாக பற்றி அருகே இழுக்க, அவள் இழுப்புக்குச் சென்றான்.

“என்னம்மா? என்ன செய்யுது?” அதுவும் சாதாரணமாகத்தான் கேட்டான்.

கண்களை உருட்டி அந்த இடத்தை காட்டியவள், ‘இங்கே வேண்டாம்...’ எனச் சொல்லி, அவன் சட்டையை உலுக்கி, ‘எனக்கு உங்களோடதான் இருக்கணும்’ என்னும் பார்வை பார்க்க, அவளை சுருட்டி தனக்குள் பொதிந்து கொள்ளத்தான் அவன் ஆவி துடித்தது.

“இன்னும் ஒரு ரெண்டு நாள்... அதுக்குப் பிறகு நாம வீட்டுக்குப் போய்டலாம்...” அவன் சொல்ல,

அவன் சட்டையை உலுக்கி, ‘எனக்கு நாள் இல்லை...’ என்னும் பார்வையை, பாவனையை அவள் கொடுக்க, வெடித்துக் கிளம்பிய அழுகையை தனக்குள் புதைக்க, அவ்வளவு திணறினான் ஆகாஷ்.

தொடரும்.....
 

gomathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 16, 2022
128
23
28
chennai
Ithu thaan fact endru therinthalum accept panna mudiyala Writerji, feeling very sad:cry::cry::cry:
 
  • Like
Reactions: Infaa

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
இவங்க காதலித்ததைப் போல் வேறுயாரும் காதலிக்கவில்லை.
இருவரும் மீண்டு வந்தால் எவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கும் ..?நடக்குமா..?
 
  • Like
Reactions: Infaa

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
318
26
28
Hosur
Enaku ennavo poomi vishwa voda heart oda semama Avan ninaivugaloda irupalo nu thonuthu
Medical enaku triyathu
Ithu sathiyamanu trla
Ana nadakalam nu thonuthu
An
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
இவங்க காதலித்ததைப் போல் வேறுயாரும் காதலிக்கவில்லை.
இருவரும் மீண்டு வந்தால் எவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கும் ..?நடக்குமா..?

மிக்க நன்றி!

அது நடக்கவேண்டுமே....
 
  • Love
Reactions: Thani

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
Enaku ennavo poomi vishwa voda heart oda semama Avan ninaivugaloda irupalo nu thonuthu
Medical enaku triyathu
Ithu sathiyamanu trla
Ana nadakalam nu thonuthu
An

பார்க்கலாம்.... என்ன நடக்கிறது என்று....

நன்றி!