21 வருடங்களுக்கு பிறகு,
முழங்காலுக்கு சற்றுக் கீழ் வரை நீண்ட சோர்ட்ஸை அணிந்து கொண்டு மும்முரமாக சமையலில் ஈடு பட்டிருந்தார் பழனிவேல். ஏதோவோரு பழங்காலத்து பாடலை ஹம் செய்தபடி சுவற்றில் தொங்கிய கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தவர் நேரம் ஏழரை மணியை தாண்டி சென்று கொண்டிருப்பது கண்டு பெருமூச்சு விட்டார்.
கழுத்தை சுற்றிப் போட்டிருந்த அழுக்கு படிந்த துண்டை உறுவி கைகளை அழுந்தத் துடைத்துக் கொண்டே சமையலறை விட்டு வெளியேறியவர் வாசலோடு ஒட்டியிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தார்.
அங்கே, போர்வையால் தலை முதல் கால் வரைக்கும் இழுத்து போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்தவளை இடுப்பில் கை வைத்து முறைத்தவர், "பாப்பா.. விடிஞ்சிருச்சு மா.." என்றவாறு போர்வையை இழுக்க,
"பப்பு.." என சிணுங்கியபடி மீண்டும் போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டாள் அவள்.
"மணி ஏழரை ஆகிடுச்சு. இப்போ எந்திருக்க போறியா இல்லையா பாப்பா.. இன்டெர்வியூக்கு போகணும்னு சொல்லிட்டே இருந்தியே.. " என்றவர் போர்வையை முழுதாக உறுவி தன் கையோடு எடுத்து விட,
"பப்பு.. ப்ளீஸ் பைவ் மினிட்ஸ்.." என்றபடி மறுபுறம் திரும்பிப் படுத்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
இருபதுகளின் தொடக்கத்தில் காலடி வைத்திருந்த காரிகையின் கருங்குழல் அவளின் மதி முகத்தை பாதியாக மறைத்திருந்தது. ரோஜா இதழ்களை ஒத்த சிவப்பு வண்ண உதடுகளின் கீழ், நடு மையத்தில் இருந்த கருப்பு மச்சம் பழனிவேலுக்கு தன் அண்ணி கண்மணியை அடிக்கடி நினைவு படுத்தியது.
அவளின் முகத்தை ஆக்கிரமித்திருந்த கூந்தலை காதுக்கு பின்புறமாக ஒதுக்கி விட்டவர், "கௌதமி மா.." என்று மென் குரலில் அழைக்க, சட்டென்று நீள்விழிகள் திறந்தவள் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து விட்டாள். அவள் கௌதமி இனியாள்!
அவளைப் பார்த்து அழகாக புன்முறுவலித்தான் பழனிவேல்.
"பப்பு.." என சிணுங்கி அவரின் கைப்பற்றி தன்னருகே அமர வைத்து, "இப்டியே பாத்ரூம் போய் குளிச்சிட்டு கார்த்தி நல்லவனையும் கூட்டிட்டு இன்டெர்வியூக்கு போவேன். அப்பறம் இன்டெர்வியூ முடிஞ்சி வீட்டுக்கு வந்ததும், இன்னைக்கு நல்லவனுக்கு மேட்ச் இருக்குனு சொன்னான் இல்லையா.. ஸோ அவன் கூட மேட்ச் பார்க்க போயிட்டு, ஈவினிங் வீட்டுக்கு வருவேன். வந்ததும் நானும் என் பப்புவும் பார்க் ஓர் பீச்க்கு போய் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வருவோம்.. ஓகேவா?" என்றும் போல் அன்றைய நாளுக்கான தன் திட்டத்தை மொத்தமாக கூறி முடித்தவள்,
"எல்லாம் பண்ண முன்னால பப்பு முதல்ல என்னை விஷ் பண்ணுங்க.." என்று கூறி கண்களை மூடிக் கொண்டாள்.
அவளின் குழந்தைத் தனத்தை வெகுவாக ரசித்த பழனிவேல், "குட் மார்னிங் பாப்பா.." என்று கூற, கண்களைத் திறவாமலே நெற்றியில் விரல் தட்டிக் காட்டினாள்.
சட்டென்று கண்களில் கோர்த்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்ட பழனி, அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். கௌதமியின் அன்றாட செயல்களிலும், அவளின் ஒரு சில நடத்தைகளிலும் தன் அண்ணனையும் அண்ணியையும் கண்டு கொள்வார். அப்போதெல்லாம் மனம் பாராங்கல்லாய் அழுந்த, அவரை அறியாமலே கண்கள் கண்ணீரை சிந்தி விடும்.
"அப்டியே பைவ் மினிட்ஸ் இருங்க பப்பு.. தூக்கமா வருது.." என்று கூறி, தன் நெஞ்சில் சாய்ந்து மீண்டும் உறங்க முயன்றவளை விட்டு வேகமாக விலகி நின்று முறைத்தவர், "நான் கிட்சேனுக்கு போய் காஃபி போட்டுட்டு வரும் போது நீ குளிச்சு பிரெஷ்ஷாகிட்டு வாசலுக்கு வந்திருக்கணும்.. இல்லேன்னா நடக்குறதே வேற.. சொல்லிட்டேன்.." என்று மிரட்டலாக கூறி விட்டு அங்கிருந்து நகர,
"என்ன நடக்கும் பப்பு?" குறும்புடன் கேட்டாள் கௌதமி.
"என்ன நடக்க போகுது? இன்னைக்கு பிரேக்ஃபஸ்ட் சமைக்காம நிம்மதியா நானும் படுத்து தூங்குவேன்.."
"என்னை கொடுமை பண்ற பப்பு நீ.." என்றவள் அவரின் முறைப்பைக் கண்டும் காணாதவள் போல் கட்டிலை விட்டுக் குதித்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவரின் முகத்திலிருந்த முறைப்பு புன்னகையாக மாறியது. புன்னகையுடனே கௌதமி போர்த்தித் தூங்கிய போர்வையை மடித்து கட்டிலை உதறத் தொடங்கியவரின் மனம், அண்ணன், அண்ணியின் நினைவில் மூழ்கியது.
கௌதமி பிறந்ததும், இனியும் அந்தக் கிராமத்தில் வாழ்வது கௌதமியின் எதிர்காலத்துக்கு நல்லதில்லை என சிந்தித்து, ரங்கராஜ் தன் உழைப்பால் வாங்கிப் போட்டிருந்த நிலத்தை விற்றுவிட்டு பட்டணம் வந்து விட்டார். ரங்கராஜை தாக்கியது யாரென்பதை இறக்க முன் அவன் கூறா விட்டாலும், பழனியால் அது ராமநாதன் தானென்பதை யூகிக்க முடிந்தது. மருமகனைக் கொன்று மகளின் விதவைக் கோலத்தைக் காண விரும்பிய ராமநாதன், குழந்தை கௌதமியை கொல்ல முயற்சிக்க மாட்டாரென்று என்ன நிச்சயம்?
பாலைக் கொதிக்க வைத்து காஃபி போட்டவர் தனக்கும் அவளுக்கும் என இரண்டு கோப்பைகளில் அதை ஊற்றிக் கொண்டு வாசலுக்கு வந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே உணவு மேஜையில் முழங்கை ஊன்றி கன்னங்களை உள்ளங்கைகளில் தாங்கியபடி அவரின் வருகைக்காக காத்திருந்தாள் கௌதமி.
செம்மஞ்சள் நிறத்தில் டாப்ஸ் அணிந்து, வெளிர் மஞ்சள் நிறத்தில் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். துப்பட்டாவை பின் போட்டு குத்தி, முடியை விரித்து விட்டுருந்தாள். அழகாய் தான் இருந்தாள் என்றாலும் பழனியின் மனம் நிறையவில்லை.
"ஏன்டா பாப்பா.. இன்டெர்வியூக்கு இந்த ட்ரெஸ்ஸை தான் போட்டுட்டு போக போறியா? ரெட் கலர், டார்க் ப்ளூ கலர்ஸ்ல செலக்ட் பண்ணி இருக்கலாமே.." என்றபடி காஃபி கப்பை அவளிடம் நீட்ட,
"சூரியன் உதிக்கிற கீழ் வானத்தைப் போல தகதகனு மின்னிட்டு அழகா தானே இருக்காள் அங்கிள்.. ஆரஞ்சு கலர் அவளுக்கு செமயா இருக்கு.. அவளோட ஃபாவரைட்" என்றுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான், அவளால் 'நல்லவன்' என அழைக்கப்படும் கார்த்திக்.
"வாடா நல்லவனே!"
அவளின் அழைப்பில் சிரித்த பழனி, "என் பாப்பா எதை உடுத்தினாலும் அழகா தான் இருப்பா கார்த்திக்.." என்று கார்த்திக்கிடம் கூறி, தனக்காக எடுத்து வந்த காஃபியை அவனிடம் நீட்டினான்.
"வேணாம் அங்கிள்.. நான் வரும் போது தான் குடிச்சுட்டு வந்தேன்.." என்றவனின் கைகள், பழனி நீட்டிய காஃபி கப்பை வாங்கி விட்டிருக்க,
"சும்மா நெளியாத.." அவனை மேலிருந்து கீழாக ஒரு லுக்கு விட்டபடி கூறினாள் கௌதமி.
பழனி சமையலறைக்கு நகர்ந்ததும், "இருந்தாலும், அங்கிள் போடற காஃபியை வேணாம்னு சொல்ல மனசே இல்லடி.. அதான் சும்மா ஒரு மினி ட்ராமா போட்டுட்டு அங்கிள் கொடுத்ததை டக்குனு வாங்கிக்கிட்டேன்.." என்று கண் சிமிட்டிக் கூறினான் கார்த்திக்.
"உன்னைப் பத்தி நல்லாவே.. ம்ம்க்கும்.. ரொம்ப நல்லாவே தெரியும்"
"ஈஈ.. ரொம்ப புகழாத.. அப்பறம் நான் ஷ்ஷை (shy) ஆகிடுவேன்.." இழித்தபடி கூறியவன் காஃபியை மிடறு மிடறாக ரசித்துப் பருக தொடங்கினான்.
"ரொம்ப இழிக்காத.. பாக்க சகிக்கல.." என முனகியவள்
"ஆமா இன்னைக்கு என்ன பிரேக்ஃபஸ்ட்?" என்று தீவிரமான யோசனையுடன் கேட்டவனை முறைக்க,
"இன்னைக்கு தோசை ஊத்தியிருக்கேன் கார்த்திக்.." என்று கொண்டே சமையலறையிலிருந்து வெளிப்பட்டார் பழனி.
"பாருங்க அங்கிள்.. எதைக் கேட்டாலும் முறைக்கிறாள். இல்லாட்டி அடிக்கிறாள். இன்னைக்கு பிரேக்ஃபஸ்ட் என்னனு கேட்டது தப்பா.. நீங்களே சொல்லுங்க.." முகத்தை தொங்க வைத்தபடி கூறியவனை குனிய வைத்து கும்மியவள், "பப்பு.. இவன் ஒன்னும் அப்பாவியில்ல. இவனை நம்பிடாதீங்க.." என்று பழனியிடம் கூற, இருவரையும் பார்த்து தலையில் கை வைத்துக் கொண்டார் பழனிவேல். தினமும் இவர்கள் இருவரையும் சமாளித்தே அவரின் பாதி ஜீவன் செத்து விடும்..
நடந்து கொண்டிருந்த மூன்றாம் உலகப் போருக்கு மத்தியில் பழனி பீய்த்து ஊட்டி விட்ட தோசையை உண்டு முடித்தவள் தோசைத் தட்டில் தான் உலகமே இருக்கிறது என்பது போல் ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவனின் தலையில் தட்டி, "இப்போதைக்கு எட்டு தோசையை உள்ளே தள்ளியிருப்ப.. கொஞ்சம் மெதுவா சாப்பிடு.." என்று கூற,
"பாப்பா.." அவளைப் பற்றி அறிந்தும் அதட்டினார் பழனிவேல்.
"நான் தான் சொன்னேனே பப்பு.. இவன் பலே ஃபிராடு. இவனை நம்பாதீங்கனு.. நல்லவனே! நான் இப்போ வந்திடுவேன். அது வரைக்கும் இங்கயே இரு.." பழனியிடம் ஆரம்பித்து கார்த்திக்கிடம் முடித்தவள் தனது அறைக்குள் புகுந்து கொள்ள,
"அவ எதையாவது சொல்லிட்டே இருப்பா கார்த்திக். ரொம்ப குறும்புத்தனம்.. நீ எதையும் கண்டுக்காத.." சிறு தயக்கத்துடன் கூறினான் பழனி. மக்களின் கேலி இன்னொருவரின் மனதை வருத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் அவர்.
"ஐயோ என்ன அங்கிள் நீங்க.. அவளை ரெண்டு மூணு வருஷமா எனக்குத் தெரியும். அவள் என்னோட நல்ல பிரண்ட்.. அவள் பேசுறதை எல்லாம் நான் கண்டுக்கிட்டா இப்டி எட்டு தோசையைத் தாண்டி இன்னுமே சாப்டுட்டு இருக்க மாட்டேனாக்கும்.." அசடு வழியக் கூறியவன் மேலுமொரு தோசையை பீய்த்து வாய்க்குள் திணித்துக் கொள்ள, வாய் விட்டே சிரித்தார் பழனிவேல்.
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அறைக் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவளைப் பார்த்து விழி விரித்தனர் வாசலில் அமர்ந்திருந்த இருவரும்.
"அந்த ட்ரெஸ் நல்லாத்தானே இருந்துச்சு?" அவள் அணிந்திருந்த கருநீல நிற டாப்பையும், வெள்ளை நிற ஜீன்ஸ் துப்பட்டாவையும் கண்கள் சுருக்கி பார்த்தபடி கார்த்திக் கேட்க,
"ஆனா என் பப்புவுக்கு அந்த கலரை விட டார்க் ப்ளூ தான் ரொம்ப புடிச்சிருக்கு.. ஸோ எனக்கு அந்த ட்ரெஸ் மனசுக்கு திருப்தியா இருக்கல.. ஓடிப் போய் சேன்ஞ் பண்ணிட்டு வந்துட்டேன்.." என்றவள், "பப்பு.. இப்போ எப்படி இருக்கேன்?" என்று பழனியிடம் கேட்டாள்.
"பிரின்ஸஸ் மாதிரி இருக்க பாப்பா.." என்றவர் புன்னகையில் மலர்ந்த முகத்துடன் அவளின் தலை வருடி விட,
"நல்லவனே.. இந்த பிரின்ஸஸோட பிரின்ஸ் எப்ப வருவான்?" கார்த்திக்கிடம் கண் சிமிட்டிக் கேட்டாள் கௌதமி. 'தெரியவில்லை' என்பது போல் உதடு பிதுக்கியவனின் முகம், சற்று நேரத்துக்கு முன்பிருந்த உட்சாகமெல்லாம் வடிந்து ஏகத்துக்கும் வாடிப் போயிருந்தது.
"எதையாவது சொன்னா டக்குனு ஃபீலாகிடாத.. ஏற்கனவே உன் மூஞ்சியை பார்க்க சகிக்கல.. இப்போ அதை விட.." என்றவள் வலிக்கும் படியாக அவனின் கன்னத்தைக் கிள்ளி இருபுறமாக ஆட்டி வைத்தாள்.
"ஏன் என் மூஞ்சிக்கு என்ன குறை?" என்று கேட்டபடி அவளின் கையைத் தட்டி விட்டவன் சேவலாய் சிலிர்த்து நிற்க, 'இப்போ இன்னொன்னா?' என நினைத்துப் பெருமூச்சு விட்ட பழனி,
"அடச்சை! ரெண்டு பேரும் ஆட்டத்தை நிறுத்திட்டு இன்டெர்வியூக்கு போங்க. எட்டரை மணியாச்சு.. ஒன்பது மணிக்கு இன்டெர்வியூ ஸ்டார்ட்னு சொன்னீங்க இல்லையா.." என்று சத்தம் வைத்தார்.
"உன் மூஞ்சியை நிறைய முறைகள்ல வர்ணிக்க முடியும்.. கொஞ்சம் இங்கேருந்து தள்ளி ஓரமா வந்தா டீடெயிலா சொல்லுவேனாக்கும்.. டப்பரா தலையா.." என்று கூறியவள் அங்கிருந்து சிட்டென ஓடி மறைந்து, வெளியே நின்றிருந்த கார்த்திக்கின் ராயல் என்ஃபீல்டில் ஏறி அமர்ந்து கொள்ள, பற்களை நறநறவென அரைத்தபடி கௌதமியை முறைத்தான் கார்த்திக்.
"இன்னும் விளையாட்டுப் புள்ளைங்களாவே இருக்குதுங்க.." என முனகி தலையில் தட்டிக் கொண்டு வீட்டினுள் நடந்தார் பழனிவேல்.
தொடரும்.