திறந்திருந்த ஜன்னலருகே, மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டி நின்றபடி நாளுக்கு நாள் தேய்ந்து சென்று கொண்டிருந்த தேய் பிறையை வெறித்துக் கொண்டிருந்தான் அவன். மகிழ்ச்சி தேய்ந்த தன் வாழ்வுக்கும் இந்த பிறைக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஒப்பிட முயன்றது அவனது மனம்.
ஆறடிக்கும் சற்று உயரமான கட்டுக்கோப்பான தேகம். வெறித்தனமான உடற்பயிற்சியினால் பெற்றுக்கொண்ட சிக்ஸ்பேக்கும், முறுக்கேறிய புஜங்களும் அவனது தோற்றத்துக்கு மேலும் அழகு சேர்த்தது. அளவாக ட்ரிம் செய்யப்பட்டிருந்த தாடி, முறுக்கி விட்டிருந்த மீசை, எப்போதும் யோசனையில் முடிச்சிட்டிருக்கும் புருவங்கள், எதிரில் இருப்பவனை துள்ளியமாக கணக்கிடும் கூரிய பார்வை.. அவனுக்கு அசாத்திய கம்பீரத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தது. அவனது தோற்றம், பார்ப்பவருக்கு முதல் பார்வையிலே ஒரு வித நம்பிக்கை ஏற்படுத்தி விடுவது போல் இருந்தது.
அவன் விஜய ஆதித்யன்!
'வானம் ஃபுல்லா மேகம், என் மனசு ஃபுல்லா சோகம்..' சில மாதங்களுக்கு முன் இந்த கடி ஜோக்கைப் பார்த்து விட்டு வாய் விட்டு சிரித்தவன் தான் அவனும்.. ஆனால் இப்போது அவனும் அதே நிலையில் தான் இருந்தான். மனம் முழுதும் சோக மேகம் சூழ்ந்து, அவனது ஆளுமை சொட்டிய விழிகளில் ஈரத்தை வரவழைத்தது. ஆனால் அழவில்லை..
முன்பெல்லாம் மணிக்கணக்கில் தேய்ப் பிறை நிலவையும், வளர்பிறை நிலவையும் ரசிக்க பிடித்திருந்தது.. தன் வாழ்வில் தேய்ப் பிறையாய் கவலைகள் தேய்ந்து செல்ல, வளர்பிறையாய் சந்தோசங்கள் வளர்ந்து கொண்டே செல்லுமென்று எண்ணி இருந்தான். ஆனால் விதி அதை மறுபுறமாய் திருப்பி அடித்து விட்டது. அதனாலே வாழ்வில் ரசனை என்ற ஒன்றையே மறந்து விட்டுருந்தான். முன்பு இனித்ததெல்லாம் இப்போது பாகற்காயாய் கசந்தது அவனுக்கு..
யோசனையில் பிடியில் உலன்று கொண்டிருந்தவன் பின் புறமாக கேட்ட சிறு சத்தத்தில் விழிப்படைந்து, திடீரென பின் புறமாகக் கையை நீட்டி, தன்னைத் தாக்க முயன்றவனின் கரத்தைப் பற்றி தன் முன்னால் இழுத்தெடுத்தான். அவனின் கைகளில் கூரான கத்தி பளபளப்பது கண்டு இதழ்க் கடையோட இகழ்ச்சிப் புன்னகையை உதிர்த்தான்.
"ஃபர்ஸ்ட் கத்தியை முறையா பிடிக்க பழகு.." என்றவன் அவனின் கைகளில் இருந்த கத்தியைத் திருப்பி வந்திருத்தனின் வயிற்றில் குத்தப் போக, பின்னிருந்து அவனை பிடித்துக் கொண்டனர் இன்னும் சிலர்.
"ஓஓ.. குரூப்பா.." கேலியாகக் கேட்டவன் இருபுறமாகவும் தன் உடம்பை வளைத்து வேகமாக உதற, அவனை தொற்றிக் கொண்டிருந்த எறும்புகள் தூர சென்று விழுந்தன. திடமில்லாத இளைஞர்களை எல்லாம் தன் கைகளால் அடிக்க வேண்டுமென்பது விதியா என எண்ணியபடி, வந்திருந்த நால்வரையும் மொத்தமாய் சரித்தான் நிலத்தில்..
"சின்ன பசங்கடா நீங்க.. எதுக்கு வீணா அடி வாங்கணும்.." உண்மையான வருத்தத்துடன் கேட்டவனை பயத்துடன் ஏறிட்டனர் வருத்தத்தில் முனகிக் கொண்டிருந்த மூவரும். நாலாமவன், இவன் அடித்த அடியில் எப்போதோ மயங்கி விட்டிருந்தான்.
"சா.. சார் நா.." ஏதோ கூற வந்தவனை கை நீட்டி தடுத்தவன், "என் வீட்டுல, என் பெட்ரூம்குள்ள புகுந்து என்னையே தாக்குற இந்த தைரியம் ரொம்ப பிடிச்சுருக்கு.. இதை நல்ல விதமா யூஸ் பண்ணுங்கடா.. உங்க போஸ் கிட்ட அடுத்த வாட்டி நல்ல ஆளுங்களா அனுப்ப சொல்லுங்க. இப்போ நான் பைவ் கவுண்ட் பண்ணுறதுக்குள்ள எழுந்து ஓடிடுங்க.." என்று நிதானமாகக் கூறினான்.
விட்டால் போதுமென்று எழுந்து ஓடி விட முயன்றவர்களை சொடக்கிட்டு நிறுத்தியவன், "இதோ இவனையும் தூக்கிட்டு போங்க.. செத்திடப் போறான்.." கீழே மயங்கிக் கிடந்தவனைக் கை காட்ட, அவனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர் அவர்கள்.
சிரிப்பு தான் வந்தது அவனுக்கு! நாட்டை காக்கும் காவலனுக்கு இருக்க வேண்டிய ஆசைதான் இருந்தது அவனுக்கும்.. சிறந்தததொரு காவலனாக மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்து அவர்களின் கண்ணீர் துடைக்க வேண்டும், ஊழலை முற்றாக ஒழிக்க வேண்டும் என ஆயிரமாயிரம் ஆசைகள்.
'நாட்டுக்காக' எதையும் செய்வேன் என்ற மனப்போக்கு கொண்டவன் தான் அவன். ஆனால் அந்த நாட்டின் இளைஞர்களையே தன் கைகளால் அடித்து நொறுக்க வேண்டிய நிலைமை வந்து விடுகிறதே என வருந்தியவன், வாசலில் கால்லிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தான்.
வாசல் கதவு திறந்துதான் இருந்தது. ஒரேயொரு அட்டாச்சு பாத்ரூமுடன் கூடிய சகல வசதிகளையும் கொண்ட ஒரு பெட்ரூம், சிறிய சமையலறை, சோஃபா செட் போடப்பட்ட அளவான ஹால்.. இதுதான் அவனின் வீடு.. தனியாளாய் நிற்பவனுக்கு பெரிய பெரிய வீடுகளில் தங்கி தனிமையை நொடிக்கு நொடி உணர விருப்பமில்லை. அதனால் தான் இருவர், மூவருக்கு மாத்திரம் தங்கிக் கொள்ள போதுமான, அளவான வீடாக தெரிவு செய்து வாங்கி இருந்தான். வீடு அழகாய், நேர்த்தியாய் இருந்தது.
வந்திருந்தவளை 'வா..' என்பது போல் தலையசைத்து உள்ளே அழைத்தவன், சோஃபாவில் கால் நீட்டி அமர்ந்து கொண்டான்.
அவனது வலுவேறிய கைகளில் ஆங்காங்கே தெரிந்த சிராய்ப்புகளை பார்வையால் தழுவியபடி அவனுக்கு சற்றுத் தள்ளி அமர்ந்தவள், "என்னாச்சு விஜய்? ஏதாவது ப்ரோப்லமா.." என்று கேட்டாள். இனிமையான குரலாக இருந்தாலும் அதிலொரு தனி கம்பீரம் இருந்தது.
இல்லையென்பது போல் தலை அசைத்தவன், "இந்த டைம்ல எதுக்கு வீட்டுக்கு வந்திருக்கேனு சொல்லு வர்ஷ்.." என்று கடுப்புடன் கூற, எழுந்து சென்று சமையலறையில் இருந்த பர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்து வந்தாள் வர்ஷினி.
"கையைக் காட்டு விஜய்.."
அவளின் கையிலிருந்த பஞ்சை எடுத்து சிராய்ப்புகளில் இருந்து வெளியேறிய இரத்தத்தை ஒற்றியெடுத்தான்.
"இது எப்படி ஆச்சு.. ஏதாவது ப்ரோப்லமா?" மனம் தாளாமல் மீண்டும் கேட்டாள். அவன் மேல் உண்மையான அக்கறை கொண்டிருந்த ஒருத்தி தான் அவளும். நிமிர்ந்து அவளை முறைத்தவன் கையிலிருந்த பஞ்சை ஒரு ஓரமாக வீசினான்.
தானும் பதிலுக்கு அவனை முறைத்தபடி எழுந்து நின்றவள் அவன் வீசிய பஞ்சைக் கை காட்டி, "ரொம்ப பண்ணாத விஜய்.. பஞ்சை கண்டபடி தூக்கிப் போட்டுட்டு, நீயே தான் நாளைக்கும் வீட்டைக் கிளீன் பண்ணனும். கிளீன் பண்ணித் தர வேற யாரும் வரப் போறதில்ல.." என்று கூற,
"எதையாவது பேசிட்டு இருக்காம எதுக்காக வந்தனு சொல்லு. இல்லனா நானே உன் டாடிக்கு ஃபோன் பண்ணி இந்த நைட் டைம்ல உங்க பொண்ணு என் வீட்டுக்கு வந்திருக்கானு சொல்லுவேன்.." என்றான் மிரட்டலாய். சொன்னால் செய்து விடுவேன் என்ற உறுதி தெரிந்தது அவன் குரலில்..
"எப்பவும் சிடுசிடுன்னு தான் இருப்பியா.." சலிப்புடன் கேட்டவள் ஆதித்யனை முறைக்க, லேசாக விரிந்த புன்னகையை உதட்டுக்குள் மறைத்தபடி அவளின் முடியைக் களைத்து விட்டான்.
"ம்ம்கூம்.." முகத்தை தோளில் இடித்துக் கொண்டவள் சோஃபாவை விட்டு எழுந்து நின்று, "நான் வீட்டுக்கு போறேன்.." கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட, சோபாவில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். வெளியே அவள் வந்திருந்த ராயல் என்ஃபீல்டு உறுமும் சத்தமும், பிறகு அங்கிருந்து கிளம்பிச் செல்லும் சத்தமும் கேட்டு லேசாக புன்னகைத்தான்.
வர்ஷினி அவனின் உயிர்த் தோழி. காலேஜ் தொட்டு தொடர்வது தான் அவர்களின் நட்பு. அதே நட்பை முன்னெடுத்து சென்று வாழ்வில் செட்டிலாகி விடலாம்.. நமக்குள் வேற எவரும் வேண்டாம் என்பது வர்ஷினியின் எண்ணம். ஆனால் விஜய்க்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் எதுவுமில்லை. அவனைப் பொறுத்த வரை, அன்றும், இன்றும், என்றும் அவள் தன் தோழி மட்டும்தான்.
•••°•°•••
காதல் ஒரு பட்டர்ஃப்ளையை போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ
மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ
டிவியில் பாடல் ஓடிக் கொண்டிருக்க, ஸ்னாக்ஸைக் கொறித்தபடி தானும் அதை பாடிக் கொண்டிருந்தாள். அவள் பாடியது பாடல் போலவா இருந்தது என்று கேட்டால், இல்லை தான்.. பாடல் வரிகளையே மொத்தமாய் மாற்றி பாடுகிறேன் என்ற பெயரில் கத்திக் கொண்டிருந்தாள்.
"பாப்பா.. பப்பு பாவம் இல்லையா.." ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் பழனிவேல் வாய் விட்டே கேட்டு விட, பாடுவதை நிறுத்தி விட்டு அவனைப் பாவமாகப் பார்த்தாள் கௌதமி.
"அவ்ளோ கேவலமாவா இருக்கு?"
"சேச்சே! கேவலமா இருக்குனு யாருடா சொன்னது.. ரொம்ப அழகா பாடற.. டிவில வால்யூம் கூட்டி வைச்சிருக்கிறதால என் காது சவ்வு கிழிய போகுது.. அதான்.."
"அச்சோ பப்பு.. இரு நான் சௌண்ட் கம்மி பண்றேன்.." என்றவள் சத்தத்தைக் குறைக்காமல் டிவியை அணைத்து விட,
"என்னடா பாப்பா.. " என்று கேட்டார் பழனி.
"ம்ம்கூம்! இன்னைக்கு கார்த்தி ஒரு ஐடியா தந்தான் பப்பு.. பப்லுவுக்கு ஃபோன் போட்டு பேசிட்டு ராங் நம்பர்னு சொல்லி வைச்சுடுன்னு சொன்னான். ஆனா எனக்கு அப்டி பண்ண பிடிக்கல.. எதையாவது பண்ணி அவரை இங்க வர வைக்கணும்.."
"நம்மலால என்ன பண்ணிட முடியும்?"
"ஏதாவது பண்ணியாகனும் பப்பு.. இல்லேன்னா உன் பொண்ணு கடைசி வரைக்கும் ப்ரம்மச்சாரியா தான் இருப்பா.." பாவமாக கூறியவளை முறைத்த பழனி, "வாய்க்கு வந்தபடி எதையாவது பேசாத பாப்பா.." என்றார் கோபமான குரலில்.
இதழ் சுழித்து சரியென்று தலை அசைத்தவள், "கார்த்தி ஏன் இன்னுமே ஃபோன் பண்ணல.. வேற நாளைக்கு நைட் தூங்க முன்னால கால் பண்ணுவானே?" என்று கேட்க,
"வீடு ரொம்ப தொலைவுலயா இருக்கு. பக்கத்து வீடுதானே... போய் என்னனு பாத்துட்டு வா பாப்பா.." என்றார் சிரிப்புடன்.
"என்னால அங்க போக முடியாது பப்பு.. என்னைப் பார்த்தாலே சண்டைக்கு தான் வருது அந்த சாதுர்யா பைத்தியம்.. அப்பறம் நான் கடுப்பாகி எதையாவது சொல்லிட்டா பிரச்சனை ஆகிடும்.."
"நீ போறது கார்த்திக்கை பார்க்க தானே.. போய் என்னனு தான் பார்த்துட்டு வாயேன்.."
"நீங்க சொல்லுறதால தான் போறேன். இல்லேன்னா அந்த வீட்டுக்கு பக்கம் எட்டிக் கூட பாக்க மாட்டேன்.. நான் வரும் போது சூடா டின்னர் பண்ணி வைச்சிடுங்க பப்பு.. டுவேன்டி மினிட்ஸ்ல வந்திடுவேன்.." என்று கூறியவள் அங்கிருந்து ஓடி மறைந்து விட, புன்னகையுடன் லேப்டாப்பினுள் மூழ்கிப் போனார் பழனிவேல்.
கௌதமியை வீட்டில் தனியாய் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்ல மனமில்லாத காரணத்தினால் ஒர்க் ஃப்ரம் ஹோம் வாங்கி வீட்டிலிருந்தே வேலையை செய்து முடிப்பார். வீட்டில் தனியாக விட்டு விட்டுச் சென்றால் எங்கு, எப்போது, எந்த ஏழரையைக் கூட்டி வைப்பாளோ என்ற பயம் அவருக்கு.
தொடரும்.