• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 11)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
இருவரும் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தனர்.

கௌதமியை, வெறும் இரண்டே வாரத்தில் உன்னைப் பார்க்க வருவேன் எனக் கூறி சமாதானம் செய்து, அவளை அணைத்து, உச்சி முகர்ந்து அனுப்பி வைத்திருந்தார் பழனி. மகனை அணைத்து வழி அனுப்பி வைக்க முடியாத ஏக்கத்தினால் கௌதமியை அணைத்து மகனை நன்றாக பார்த்துக் கொள் என்று கூறி அனுப்பி வைத்திருந்தாள் யமுனா.

வரும் வழி முழுவதும் காரில் தூங்கி வழிந்து கொண்டே வந்த கௌதமியைப் பார்த்து தலையில் கை வைத்துக் கொண்டான் விஜய். நானும் கூடவே வருவேன் என அடம்பிடித்து கூடவே வந்து விட்டு வழி முழுவதும் தூங்கி வழிகிறாளே என நினைத்து சிரிப்பு வந்தது அவனுக்கு.

கொழு மொழு கன்னங்களுடன் வாயில் விரல் வைத்து சப்பாத குறையாய் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவளை தன்னை அறியாமலே அடிக்கடி ரசித்தது விஜயின் மனம். பார்த்த கணத்தில் இருந்து ஏதோவொரு ஈர்ப்பு அவளின் மேல்.. தன் வாழ்வில் வர்ஷினி தவிர வேறெந்த பெண்ணுக்கும் இடமில்லை என வீராப்பு பேசிக் கொண்டிருந்தவன், கார்த்திக்கின் வார்த்தைக்காக மட்டுமே கௌதமிக்கு இடம் கொடுத்து விட்டான் என்று கூறுவது நம்பும் படியாகவா இருக்கிறது?

வீட்டை வந்தடைந்ததும் அவளைத் தட்டி எழுப்பி விட்டான் விஜய்.

தூக்க கலக்கத்துடன் கண்களை திறந்தவள் தன்னருகே நின்றிருந்த விஜயைக் கண்டு திடுக்கிட்டு விழிக்க, அவளை புரியாமல் பார்த்த விஜய், "என்னாச்சு?" என்று கேட்டான்.

அவனின் குரலில் தான், தான் அவனருகே அமர்ந்திருப்பது கனவல்ல என்றும், தன் மனம் கவர்ந்தவனுடன் தனக்குத் திருமணம் நடந்து விட்டதென்றும் நினைவு வந்தது அவளுக்கு. தன் மறதியை நினைத்து தன்னையே திட்டிக் கொண்டவள் ஒன்றுமில்லை என்பது போல் தலை அசைத்தாள்.

"வீடு வந்திடுச்சு.." என்று கூறிக் கொண்டு காரின் கதவைத் திறந்து இறங்கப் போனவன்,

"எதேய்! அதுக்குள்ள வீடு வந்திடுச்சா? நாலு ஹவர்ஸா நான் தூங்கினேனா?" என்று அதிர்ச்சியோடு கேட்டவளின் குரலில் அப்படியே நின்று திரும்பிப் பார்த்தான்.

"ஆது என்கிட்டே பொய் சொல்லி இருக்கா.. காருல போய் வீடு சேர நாலு ஹவர்ஸ் ஆகும்னு சொன்னா.."

விஜய் லேசாக இதழ் விரித்து புன்னகைத்தவன், "ஆதர்யா பொய் சொல்லல.. அங்கிருந்து இங்க வர நாலு ஹவர்ஸ் ஆகும்.." என்றவன் இறங்கி சென்று விட்டான்.

நான்கு மணித்தியாலமாகவா தூங்கி இருக்கிறேன் என தன்னிடமே கேள்வி எழுப்பியவள் மணிக்கட்டில் கட்டி இருந்த கைக்கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்த்தாள். மாலை ஐந்தரை மணி கடந்து சென்று கொண்டிருந்தது.

"பப்லுக் கிட்ட பேசணும்னு எத்தனை ஆசை வைச்சிருந்தேன்? தூங்கி மொத்தத்தையும் கெடுத்து விட்டுட்ட.. உன் ஆசைல நீயே ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுக்கிட்ட.. " என தன்னையே திட்டிக் கொண்டவள் காரை விட்டு இறங்கி, வீட்டின் கதவை திறந்து விட்டு தான் வரும் வரை காத்திருந்த விஜயை நோக்கி நடந்தாள்.

இளமஞ்சள் நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். காலையிலிருந்து சேலையும் கையுமாய் அலைந்து திரிந்து மணிக்கணக்கில் நேரம் செலவு செய்து ஆதர்யாவிடம் கெஞ்சிக் கூத்தாடி அவளிடம் கூறிக் கட்டிக் கொண்ட சேலை அது! திருமணமன்று மட்டுமே சேலை அணிந்தவளுக்கு சேலையின் பிலீட்ஸ் வைப்பது எப்படி, அதை கட்டுவது எப்படி என்று கிஞ்சித்தும் தெரியாது. இடை வரை நீண்டிருந்த பூனை வால் முடியை காற்றில் கதை பேசுவதற்காக விரித்து விட்டுருந்தாள்.

விஜய், 'மஞ்சள் மேகம்.. ஒரு மஞ்சள் மேகம்' என கனவில் டூயட் பாடும் நிலையில் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனருகில் வந்து நின்றவள், "அது. சாரிங்க.. நாலு மணி நேரமா நான் தூங்கி இருக்கேன். என்னை மாதிரி பொறுப்பில்லாத பொண்ணை நான் இதுவரை எங்கயும் பார்த்ததே இல்ல. அதான் கொஞ்ச நேரம் என்னையே திட்டிட்டு இருந்ததுல லேட் ஆகிட்டேன்.." என்றாள் சிறு குரலில்.

மீண்டும் கிளம்பி வெடிக்க இருந்த சிரிப்பை உதட்டுக்குள்ளே பத்திரப்படுத்தி சரியென்று தலை அசைத்தவன் உள்ளே நுழைந்தான்.

'முதன் முதலா வீட்டுக்கு வரேன். யாராவது ஆரத்தி எடுத்தா தேவலை..' என கவலையுடன் நினைத்துக் கொண்டவள் வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள். வீடு பார்க்க அழகாகயும் நேர்த்தியாகவும் இருப்பதை ஆச்சரியத்தோடு பார்த்தவள் வாசலை கடந்து சென்று சமையலறையை எட்டிப் பார்த்தாள். வைத்த பொருள் வைத்த இடத்தில் மிக நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

வீட்டை ரசித்து கொண்டிருந்தவளின் தோளில் தட்டிய விஜய், "ரெண்டு ரூம் இருக்கு. ஒன்னு என்னோடது.. உனக்கு எதுல தங்கணும்னு தோணுதோ அதுல தங்கிக்க.." என்று விட்டு, காருலிருந்த அவளின் சூட் கேஸ்களை எடுப்பதற்காக வெளியே நடந்தான்.

"ஏன்ங்க.. கொஞ்சம் நில்லுங்க.." என்று கொண்டே அவனின் பின்னால் ஓடியவள், "உங்க ரூம் எதுன்னு காட்டுறிங்களா? எனக்கு நைட்டு ரூம்ல தனியா தூங்க பயம்.. இருட்டுனா கூட பயம் தான். அதுவும் புதிய இடம் இல்லையா.. ஸோ நான் உங்க ரூம்லயே தூங்கிக்கிறேன்" திரும்பி என்னவென்பது போல் பார்த்தவனிடம் கூறினாள்.

"இந்த வீடு கொஞ்சம் பழகி, உங்க தைரியத்துல கொஞ்சூண்டு எனக்கும் வந்திடுச்சுன்னா நான் மத்த ரூம்க்கு ஷிப்ட் ஆகிக்கிறேன்.. ப்ளீஸ் கோச்சுக்காதீங்க" கண்கள் சுருக்கி கெஞ்சலாக கூறினாள் கௌதமி.

'ஒரே நிமிஷத்துல எவ்ளோ தான் பேசுவா இவ.. ' என நினைத்துக் கொண்டு தன் அறையை கை காட்டினான்.

"கோச்சுக்கலையே?"

'இதுல கோபப்பட என்ன இருக்கு?' என நினைத்தவன் இல்லையென தலையசைத்து விட்டு அங்கிருந்து நகர, இடுப்பில் கை ஊன்றி நின்ற இடத்தில் நின்றபடி அவனை ரசித்தவள் அவன் கைக்காட்டிய அறைக்குள் நுழைந்தாள்.

அறையின் சுவரில் தொங்க விடப்பட்டு இருந்தது ஒரு புகைப்படம். அதில் ஒரு ஒன்னரை வயதேயான ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு இளம் வயதுப் பெண் ஒருத்தி புன்னகை முகமாய் நின்றிருந்தாள். அது யாரென்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அந்த காட்சி அவளுக்கு ரசிக்கும் படியாய் தெரிந்தது. தாய்ப் பாசத்தை பிறந்தது முதலே அனுபவித்திராதவள் ஆயிற்றே!

"அது நானும் என்னோட அம்மாவும்" பின்னிருந்து கேட்ட குரலில் திடுக்கிட்டு விழுந்தவள் வேகமாக பின்னால் திரும்பிப் பார்க்க, அறைக் கதவில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி நின்றிருந்தான் விஜய்.

"அம்மாவா?"

"ம்ம்.."

"அப்ப யமுனா அத்தை?" என்று கேட்டவளுக்கு எதுவுமே புரியவில்லை. புகைப் படத்தில் இருக்கும் பெண் தான் அவனின் தாய் என்றால், யமுனா யார்? கார்த்தி இவனின் தம்பியே இல்லையா? என பலவாறும் சிந்தித்தாள்.

"என்னோட சித்தி!"

கண்கள் விரிய அதிர்ச்சியாய் அவனை ஏறிட்டவள், "ஆனா கார்த்தி என்கிட்டே சொன்னதே இல்லைங்க.. " என வருத்தமாகக் கூற,

"அவன் சொல்லி இருக்க மாட்டான்னு தெரியும்.." புன்னகையுடன் கூறி விட்டு அவளைக் கடந்து சென்றவன் புகைப்படத்தில் மாட்டியிருந்த மாலையை சரி செய்து விட்டான்.

கௌதமி அதிர்ச்சி கலையாமல் அப்படியே நின்றிருந்தாள்.

"போய் பிரெஷ் ஆகிட்டு வா.. உன்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும்.." என்றவன் தன் கபோர்ட்டில் இருந்து, சாதாரண பேண்ட் டீஷர்ட்டை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேற, அவன் எடுத்து வந்து வைத்திருந்த சூட் கேஸிலிருந்து ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

முகத்தை குளிர்ந்த நீரால் அடித்துக் கழுவிக் கொண்டு உடை மாற்றி வெளியே வரும் போது, சமையலறையில் உருட்டும் சத்தம் கேட்டது அவளுக்கு. சமையலறைக்கு செல்லலாம் என நினைத்து நகரும் முன்பே கையில் இரு தேநீர் கப்புகளுடன் வெளியே வந்தவன் ஒன்றை அவளிடம் நீட்டி விட்டு சோபாவில் அமர்ந்து கொண்டான்.

"வீட்டுல தனியா இருக்கும் போது நீங்களே தான் சமைப்பீங்களா?" தேநீரின் சுவையில் மெய் மறந்து கேட்டவள் அவனருகில் சற்றுத் தள்ளி அமர்ந்து கொள்ள,

"அதுக்காக வேற யாரையும் நியமிக்க வேண்டிய அவசியம் இருக்கல.." என்றான் விஜய்.

வெற்றுக் கப்பை மேஜை மேல் வைத்து விட்டு அவள் புறமாக திரும்பி அமர்ந்தவன், "உன்னைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியலமா.. நான் பண்ற ஒர்க்னால என்னை சுத்தி நிறைய எதிரிங்க இருக்காங்க. என் பக்கத்துல பலவீனமா ஒரு பொருளை வைச்சிருக்கும் போது அவங்களுக்கு என்னை அட்டாக் பண்ண ரொம்ப ஈஸியா இருக்கும்னு நினைச்சு, என் லைஃப்ல எந்த பொண்ணுக்கும்.. ஐ மீன், ஆஸ் அ லவரா, ஒய்ஃப்பா யாருக்கும் இடம் கொடுக்கக்கூடாதுனு எண்ணத்துல இருந்தேன்.." என்றான் நெற்றியை அழுந்த தேய்த்தபடி.

கௌதமி துளிர் விட்ட பயத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். வாழ ஆரம்பிக்க முன்பே மனது உடைந்து போகும் படி எதையாவது கூறித் தொலைக்காமல் இருந்தால் நன்றாய் இருக்கும் என தோன்றியது அவளுக்கு.

"ஆனா கார்த்திக்கோட ஆசை இது! என்னால மறுக்க முடியல. அதனால தான் கலியாணம் பண்ணிக்கிட்டேன்.. கார்த்திக் என்னை நம்பி தான் உன்னை என் கைல ஒப்படைச்சான். நீ அவனுக்கு பிரண்டா இல்ல வேற யாராவதானு தெரியல. ஆனா என்னைக்கும் அவனோட நம்பிக்கையை வீணாக்க மாட்டேன். எனக்கு டைம் தேவ படுது. இப்போதைக்கு நாம கிட்டத்தட்ட ஸ்ட்ரேஞ்சர்ஸ் மாதிரி! ஒரே வீட்டுல இருந்துக்கிட்டு எப்போவும் அப்டியே இருக்க முடியாதுல்ல?"

அவனின் குரலில் மென்மையை தவிர வேறெதையுமே கண்டு கொள்ள முடியவில்லை அவளால். எப்போதும் இருக்கும் கம்பீரமும் இறுக்கமும் குறைந்து மென்மை குடி கொண்டிருந்தது அவனின் முகத்திலும் கூட! அவன் பொறுமையாக தன்னிடம் ஏதோவொன்றை எடுத்துக் கூற வருகிறான் என்பது மட்டும் புரிந்தது அவளின் குட்டி மூளைக்கு.

"அப்ப ஃபிரண்ட்ஸ் ஆகிடலாமா?" உட்சென்ற குரலில் கேட்டபடி நடுங்கும் கைகளை அவனை நோக்கி நீட்டினாள் கௌதமி. அவன் என்ன கூறுவானோ என்று பதட்டமாக இருந்தது அவளுக்கு. ஒரே நொடியில் தொண்டைக்குழியில் ஈரம் வற்றி விட்டது.

"ஓகே பிரண்ட்ஸ்.."

அவனின் வலிய கரம், அவளின் நீட்டப்பட்டிருந்த தளிர் கரங்களைப் பற்றிக் கொண்டது. அவளின் கைகளின் மென்மை அவனுக்கு மென்பஞ்சை நினைவூட்டிச் சென்றது.

அவனின் தொடுதலில் ஏழு கடல்கள், ஏழு நிலங்கள் தாண்டிப் பறக்கவிருந்த தன் மனதை கடினப்பட்டு இழுத்துப் பிடித்துக் கொண்ட கௌதமி இனியாள், அவனின் இதழ் ஓரம் மலர்ந்த மலர்ந்த மென்னகையைக் கண்டுகொண்டு அவனையே இமை சிமிட்டாமல் பார்த்தாள்.

இந்நேரத்தில், இவ்விடத்தில் கார்த்திக் மட்டும் இருந்திருந்தால் தன்னை கலாய்த்தே ஒரு வழி பண்ணி இருப்பான் என நினைக்கும் போது, புன்னகையைத் தாண்டி கண்களில் நயாகரா ஊற்றெடுக்க, கடினப்பட்டு அதை உள்ளிழுத்துக் கொண்டவள் விஜயின் பார்வையில் திணறி பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அவளை கூரிடும் பார்வையால் அளவிட்டுக் கொண்டிருந்தான் விஜய ஆதித்யன்.

தொடரும்.
 
Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
#வண்ணமலரேவாசம்தருவாயா
#உப்பாறு
#அத்தியாயம்_11

சோ கார்த்திக், பப்லு பத்தி எதுவுமே கௌதமிகிட்ட சொல்லலையா.இவனும் சொல்லிருக்காமாட்டான்னு தெரியும்ங்கறான்🤔🤔🤔

விஜய் உனக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட் இருக்கும்போலயே கௌதமிகூட🤣🤣நாலு மணிநேரம் தூங்கிட்டு அவளுக்கு அவளே கொடுத்தா பாரு ஒரு ஷெல்ப் லக்சர்🤧🤧🤧😤😤😤😂😂

நண்பனை நினைச்சு அழறா.விஜய் இதுக்கு என்ன சொல்வானோ🤫இவனுக்கு வர்ஷினி மாதிரி கார்த்திக்கு கௌதமினு இவனுக்கு எப்போ தெரியவருமோ🤧🤧🤧😤😤😤😤
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
2,018
சூப்பர் சூப்பர் சகி 😍😍😍😍😍😍😍முதல் முதல்ல புருஷன் கூட தனியே தனியா பயணம் பண்ணுறப்ப அதுவும் புது ஜோடிங்கவேற நாலு ஹவர்ஸ் குறட்டை விடாம தூங்குன தூங்குமூஞ்சி பிள்ளை உலகத்துலயே நம்ம கௌதமி இனியாளாதான் இருக்கணும் 😁😁😁😁😁😁😁😁😁.
ஆத்தி கௌதமி பிள்ள அப்போ அப்போ ஜெர்க் ஆகிடுதே ஆதி கிட்ட பேசுறப்ப ம்ம்ம்ம் அவன காதலுச்சானு அவ விஜய்கிட்ட சொல்லும்போது எதுவும் பிரளயம் ஆகாம இருந்தா சரி பிள்ளை பொழைச்சுக்கும் 😳😳😳😳😳😳😳
 
😍😍😍❤️❤️thanks sagi
 
Aama aama 😂😂. Nanri sagii❤❤❤
 
Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
286
பொறுப்பில்லாத பெண்ணை இது வரை பார்த்ததே இல்லையாமே🙄🙄கண்ணாடி பார்த்ததில்லையா என்ன?😂😂😂
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32
இருவரும் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தனர்.

கௌதமியை, வெறும் இரண்டே வாரத்தில் உன்னைப் பார்க்க வருவேன் எனக் கூறி சமாதானம் செய்து, அவளை அணைத்து, உச்சி முகர்ந்து அனுப்பி வைத்திருந்தார் பழனி. மகனை அணைத்து வழி அனுப்பி வைக்க முடியாத ஏக்கத்தினால் கௌதமியை அணைத்து மகனை நன்றாக பார்த்துக் கொள் என்று கூறி அனுப்பி வைத்திருந்தாள் யமுனா.

வரும் வழி முழுவதும் காரில் தூங்கி வழிந்து கொண்டே வந்த கௌதமியைப் பார்த்து தலையில் கை வைத்துக் கொண்டான் விஜய். நானும் கூடவே வருவேன் என அடம்பிடித்து கூடவே வந்து விட்டு வழி முழுவதும் தூங்கி வழிகிறாளே என நினைத்து சிரிப்பு வந்தது அவனுக்கு.

கொழு மொழு கன்னங்களுடன் வாயில் விரல் வைத்து சப்பாத குறையாய் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவளை தன்னை அறியாமலே அடிக்கடி ரசித்தது விஜயின் மனம். பார்த்த கணத்தில் இருந்து ஏதோவொரு ஈர்ப்பு அவளின் மேல்.. தன் வாழ்வில் வர்ஷினி தவிர வேறெந்த பெண்ணுக்கும் இடமில்லை என வீராப்பு பேசிக் கொண்டிருந்தவன், கார்த்திக்கின் வார்த்தைக்காக மட்டுமே கௌதமிக்கு இடம் கொடுத்து விட்டான் என்று கூறுவது நம்பும் படியாகவா இருக்கிறது?

வீட்டை வந்தடைந்ததும் அவளைத் தட்டி எழுப்பி விட்டான் விஜய்.

தூக்க கலக்கத்துடன் கண்களை திறந்தவள் தன்னருகே நின்றிருந்த விஜயைக் கண்டு திடுக்கிட்டு விழிக்க, அவளை புரியாமல் பார்த்த விஜய், "என்னாச்சு?" என்று கேட்டான்.

அவனின் குரலில் தான், தான் அவனருகே அமர்ந்திருப்பது கனவல்ல என்றும், தன் மனம் கவர்ந்தவனுடன் தனக்குத் திருமணம் நடந்து விட்டதென்றும் நினைவு வந்தது அவளுக்கு. தன் மறதியை நினைத்து தன்னையே திட்டிக் கொண்டவள் ஒன்றுமில்லை என்பது போல் தலை அசைத்தாள்.

"வீடு வந்திடுச்சு.." என்று கூறிக் கொண்டு காரின் கதவைத் திறந்து இறங்கப் போனவன்,

"எதேய்! அதுக்குள்ள வீடு வந்திடுச்சா? நாலு ஹவர்ஸா நான் தூங்கினேனா?" என்று அதிர்ச்சியோடு கேட்டவளின் குரலில் அப்படியே நின்று திரும்பிப் பார்த்தான்.

"ஆது என்கிட்டே பொய் சொல்லி இருக்கா.. காருல போய் வீடு சேர நாலு ஹவர்ஸ் ஆகும்னு சொன்னா.."

விஜய் லேசாக இதழ் விரித்து புன்னகைத்தவன், "ஆதர்யா பொய் சொல்லல.. அங்கிருந்து இங்க வர நாலு ஹவர்ஸ் ஆகும்.." என்றவன் இறங்கி சென்று விட்டான்.

நான்கு மணித்தியாலமாகவா தூங்கி இருக்கிறேன் என தன்னிடமே கேள்வி எழுப்பியவள் மணிக்கட்டில் கட்டி இருந்த கைக்கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்த்தாள். மாலை ஐந்தரை மணி கடந்து சென்று கொண்டிருந்தது.

"பப்லுக் கிட்ட பேசணும்னு எத்தனை ஆசை வைச்சிருந்தேன்? தூங்கி மொத்தத்தையும் கெடுத்து விட்டுட்ட.. உன் ஆசைல நீயே ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுக்கிட்ட.. " என தன்னையே திட்டிக் கொண்டவள் காரை விட்டு இறங்கி, வீட்டின் கதவை திறந்து விட்டு தான் வரும் வரை காத்திருந்த விஜயை நோக்கி நடந்தாள்.

இளமஞ்சள் நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். காலையிலிருந்து சேலையும் கையுமாய் அலைந்து திரிந்து மணிக்கணக்கில் நேரம் செலவு செய்து ஆதர்யாவிடம் கெஞ்சிக் கூத்தாடி அவளிடம் கூறிக் கட்டிக் கொண்ட சேலை அது! திருமணமன்று மட்டுமே சேலை அணிந்தவளுக்கு சேலையின் பிலீட்ஸ் வைப்பது எப்படி, அதை கட்டுவது எப்படி என்று கிஞ்சித்தும் தெரியாது. இடை வரை நீண்டிருந்த பூனை வால் முடியை காற்றில் கதை பேசுவதற்காக விரித்து விட்டுருந்தாள்.

விஜய், 'மஞ்சள் மேகம்.. ஒரு மஞ்சள் மேகம்' என கனவில் டூயட் பாடும் நிலையில் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனருகில் வந்து நின்றவள், "அது. சாரிங்க.. நாலு மணி நேரமா நான் தூங்கி இருக்கேன். என்னை மாதிரி பொறுப்பில்லாத பொண்ணை நான் இதுவரை எங்கயும் பார்த்ததே இல்ல. அதான் கொஞ்ச நேரம் என்னையே திட்டிட்டு இருந்ததுல லேட் ஆகிட்டேன்.." என்றாள் சிறு குரலில்.

மீண்டும் கிளம்பி வெடிக்க இருந்த சிரிப்பை உதட்டுக்குள்ளே பத்திரப்படுத்தி சரியென்று தலை அசைத்தவன் உள்ளே நுழைந்தான்.

'முதன் முதலா வீட்டுக்கு வரேன். யாராவது ஆரத்தி எடுத்தா தேவலை..' என கவலையுடன் நினைத்துக் கொண்டவள் வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள். வீடு பார்க்க அழகாகயும் நேர்த்தியாகவும் இருப்பதை ஆச்சரியத்தோடு பார்த்தவள் வாசலை கடந்து சென்று சமையலறையை எட்டிப் பார்த்தாள். வைத்த பொருள் வைத்த இடத்தில் மிக நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

வீட்டை ரசித்து கொண்டிருந்தவளின் தோளில் தட்டிய விஜய், "ரெண்டு ரூம் இருக்கு. ஒன்னு என்னோடது.. உனக்கு எதுல தங்கணும்னு தோணுதோ அதுல தங்கிக்க.." என்று விட்டு, காருலிருந்த அவளின் சூட் கேஸ்களை எடுப்பதற்காக வெளியே நடந்தான்.

"ஏன்ங்க.. கொஞ்சம் நில்லுங்க.." என்று கொண்டே அவனின் பின்னால் ஓடியவள், "உங்க ரூம் எதுன்னு காட்டுறிங்களா? எனக்கு நைட்டு ரூம்ல தனியா தூங்க பயம்.. இருட்டுனா கூட பயம் தான். அதுவும் புதிய இடம் இல்லையா.. ஸோ நான் உங்க ரூம்லயே தூங்கிக்கிறேன்" திரும்பி என்னவென்பது போல் பார்த்தவனிடம் கூறினாள்.

"இந்த வீடு கொஞ்சம் பழகி, உங்க தைரியத்துல கொஞ்சூண்டு எனக்கும் வந்திடுச்சுன்னா நான் மத்த ரூம்க்கு ஷிப்ட் ஆகிக்கிறேன்.. ப்ளீஸ் கோச்சுக்காதீங்க" கண்கள் சுருக்கி கெஞ்சலாக கூறினாள் கௌதமி.

'ஒரே நிமிஷத்துல எவ்ளோ தான் பேசுவா இவ.. ' என நினைத்துக் கொண்டு தன் அறையை கை காட்டினான்.

"கோச்சுக்கலையே?"

'இதுல கோபப்பட என்ன இருக்கு?' என நினைத்தவன் இல்லையென தலையசைத்து விட்டு அங்கிருந்து நகர, இடுப்பில் கை ஊன்றி நின்ற இடத்தில் நின்றபடி அவனை ரசித்தவள் அவன் கைக்காட்டிய அறைக்குள் நுழைந்தாள்.

அறையின் சுவரில் தொங்க விடப்பட்டு இருந்தது ஒரு புகைப்படம். அதில் ஒரு ஒன்னரை வயதேயான ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு இளம் வயதுப் பெண் ஒருத்தி புன்னகை முகமாய் நின்றிருந்தாள். அது யாரென்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அந்த காட்சி அவளுக்கு ரசிக்கும் படியாய் தெரிந்தது. தாய்ப் பாசத்தை பிறந்தது முதலே அனுபவித்திராதவள் ஆயிற்றே!

"அது நானும் என்னோட அம்மாவும்" பின்னிருந்து கேட்ட குரலில் திடுக்கிட்டு விழுந்தவள் வேகமாக பின்னால் திரும்பிப் பார்க்க, அறைக் கதவில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி நின்றிருந்தான் விஜய்.

"அம்மாவா?"

"ம்ம்.."

"அப்ப யமுனா அத்தை?" என்று கேட்டவளுக்கு எதுவுமே புரியவில்லை. புகைப் படத்தில் இருக்கும் பெண் தான் அவனின் தாய் என்றால், யமுனா யார்? கார்த்தி இவனின் தம்பியே இல்லையா? என பலவாறும் சிந்தித்தாள்.

"என்னோட சித்தி!"

கண்கள் விரிய அதிர்ச்சியாய் அவனை ஏறிட்டவள், "ஆனா கார்த்தி என்கிட்டே சொன்னதே இல்லைங்க.. " என வருத்தமாகக் கூற,

"அவன் சொல்லி இருக்க மாட்டான்னு தெரியும்.." புன்னகையுடன் கூறி விட்டு அவளைக் கடந்து சென்றவன் புகைப்படத்தில் மாட்டியிருந்த மாலையை சரி செய்து விட்டான்.

கௌதமி அதிர்ச்சி கலையாமல் அப்படியே நின்றிருந்தாள்.

"போய் பிரெஷ் ஆகிட்டு வா.. உன்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும்.." என்றவன் தன் கபோர்ட்டில் இருந்து, சாதாரண பேண்ட் டீஷர்ட்டை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேற, அவன் எடுத்து வந்து வைத்திருந்த சூட் கேஸிலிருந்து ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

முகத்தை குளிர்ந்த நீரால் அடித்துக் கழுவிக் கொண்டு உடை மாற்றி வெளியே வரும் போது, சமையலறையில் உருட்டும் சத்தம் கேட்டது அவளுக்கு. சமையலறைக்கு செல்லலாம் என நினைத்து நகரும் முன்பே கையில் இரு தேநீர் கப்புகளுடன் வெளியே வந்தவன் ஒன்றை அவளிடம் நீட்டி விட்டு சோபாவில் அமர்ந்து கொண்டான்.

"வீட்டுல தனியா இருக்கும் போது நீங்களே தான் சமைப்பீங்களா?" தேநீரின் சுவையில் மெய் மறந்து கேட்டவள் அவனருகில் சற்றுத் தள்ளி அமர்ந்து கொள்ள,

"அதுக்காக வேற யாரையும் நியமிக்க வேண்டிய அவசியம் இருக்கல.." என்றான் விஜய்.

வெற்றுக் கப்பை மேஜை மேல் வைத்து விட்டு அவள் புறமாக திரும்பி அமர்ந்தவன், "உன்னைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியலமா.. நான் பண்ற ஒர்க்னால என்னை சுத்தி நிறைய எதிரிங்க இருக்காங்க. என் பக்கத்துல பலவீனமா ஒரு பொருளை வைச்சிருக்கும் போது அவங்களுக்கு என்னை அட்டாக் பண்ண ரொம்ப ஈஸியா இருக்கும்னு நினைச்சு, என் லைஃப்ல எந்த பொண்ணுக்கும்.. ஐ மீன், ஆஸ் அ லவரா, ஒய்ஃப்பா யாருக்கும் இடம் கொடுக்கக்கூடாதுனு எண்ணத்துல இருந்தேன்.." என்றான் நெற்றியை அழுந்த தேய்த்தபடி.

கௌதமி துளிர் விட்ட பயத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். வாழ ஆரம்பிக்க முன்பே மனது உடைந்து போகும் படி எதையாவது கூறித் தொலைக்காமல் இருந்தால் நன்றாய் இருக்கும் என தோன்றியது அவளுக்கு.

"ஆனா கார்த்திக்கோட ஆசை இது! என்னால மறுக்க முடியல. அதனால தான் கலியாணம் பண்ணிக்கிட்டேன்.. கார்த்திக் என்னை நம்பி தான் உன்னை என் கைல ஒப்படைச்சான். நீ அவனுக்கு பிரண்டா இல்ல வேற யாராவதானு தெரியல. ஆனா என்னைக்கும் அவனோட நம்பிக்கையை வீணாக்க மாட்டேன். எனக்கு டைம் தேவ படுது. இப்போதைக்கு நாம கிட்டத்தட்ட ஸ்ட்ரேஞ்சர்ஸ் மாதிரி! ஒரே வீட்டுல இருந்துக்கிட்டு எப்போவும் அப்டியே இருக்க முடியாதுல்ல?"

அவனின் குரலில் மென்மையை தவிர வேறெதையுமே கண்டு கொள்ள முடியவில்லை அவளால். எப்போதும் இருக்கும் கம்பீரமும் இறுக்கமும் குறைந்து மென்மை குடி கொண்டிருந்தது அவனின் முகத்திலும் கூட! அவன் பொறுமையாக தன்னிடம் ஏதோவொன்றை எடுத்துக் கூற வருகிறான் என்பது மட்டும் புரிந்தது அவளின் குட்டி மூளைக்கு.

"அப்ப ஃபிரண்ட்ஸ் ஆகிடலாமா?" உட்சென்ற குரலில் கேட்டபடி நடுங்கும் கைகளை அவனை நோக்கி நீட்டினாள் கௌதமி. அவன் என்ன கூறுவானோ என்று பதட்டமாக இருந்தது அவளுக்கு. ஒரே நொடியில் தொண்டைக்குழியில் ஈரம் வற்றி விட்டது.

"ஓகே பிரண்ட்ஸ்.."

அவனின் வலிய கரம், அவளின் நீட்டப்பட்டிருந்த தளிர் கரங்களைப் பற்றிக் கொண்டது. அவளின் கைகளின் மென்மை அவனுக்கு மென்பஞ்சை நினைவூட்டிச் சென்றது.

அவனின் தொடுதலில் ஏழு கடல்கள், ஏழு நிலங்கள் தாண்டிப் பறக்கவிருந்த தன் மனதை கடினப்பட்டு இழுத்துப் பிடித்துக் கொண்ட கௌதமி இனியாள், அவனின் இதழ் ஓரம் மலர்ந்த மலர்ந்த மென்னகையைக் கண்டுகொண்டு அவனையே இமை சிமிட்டாமல் பார்த்தாள்.

இந்நேரத்தில், இவ்விடத்தில் கார்த்திக் மட்டும் இருந்திருந்தால் தன்னை கலாய்த்தே ஒரு வழி பண்ணி இருப்பான் என நினைக்கும் போது, புன்னகையைத் தாண்டி கண்களில் நயாகரா ஊற்றெடுக்க, கடினப்பட்டு அதை உள்ளிழுத்துக் கொண்டவள் விஜயின் பார்வையில் திணறி பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அவளை கூரிடும் பார்வையால் அளவிட்டுக் கொண்டிருந்தான் விஜய ஆதித்யன்.

தொடரும்.
Indha gouthami pullaya nenachi sirikkuratha aluvurathanu therilaye. Inume baby mathiri than ava 😂😂😂💥💥💥❤ illati 4mani nerama korattai vudama thungki iruppala
Arumaii saki 👌
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
பொறுப்பில்லாத பெண்ணை இது வரை பார்த்ததே இல்லையாமே🙄🙄கண்ணாடி பார்த்ததில்லையா என்ன?😂😂😂
அப்டினு தான் நினைக்கிறேன் நானும் 😂😂
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
ஆமா அவ இன்னுமே குழந்தை தான் 😂😂
நன்றி சகி 💙
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
புது இடம் புது சூழ்நிலை இனி என்ன நடக்குமோ 🤔🤔🤔🤔
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
கெளதமியின் கார்த்திக்குடனான நட்டை விஜய் சரியாக புரிந்து கொள்வானு நம்பிக்கை இருக்கு? ஆனால் விஜய் கல்யாண விஷயம் தெரிந்தால் வர்ஷினியோட பார்வை எப்படியானதாக இருக்கும்? இதை ஏற்றுக் கொள்வாளா? தெரில
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
புது இடம் புது சூழ்நிலை இனி என்ன நடக்குமோ 🤔🤔🤔🤔
எல்லாம் புதுசாவே நடந்திடும் சகி 😍❤️
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கெளதமியின் கார்த்திக்குடனான நட்டை விஜய் சரியாக புரிந்து கொள்வானு நம்பிக்கை இருக்கு? ஆனால் விஜய் கல்யாண விஷயம் தெரிந்தால் வர்ஷினியோட பார்வை எப்படியானதாக இருக்கும்? இதை ஏற்றுக் கொள்வாளா? தெரில
ஏற்றுக்கிட்டு தானே ஆகணும்.. 😏
 
Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
தனி வீட்டுக்கு ஷிப்ட் ஆகியாச்சு... 🥰🥰

விஜய் அவர் அப்பா பத்தி எதும் தப்பா நெனச்சிட்டு இருக்காரோ... 😔

ரெண்டு பேரும் frds அஹ்...
இருக்கட்டும்...

நைஸ் எபி dr... ❤
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
தனி வீட்டுக்கு ஷிப்ட் ஆகியாச்சு... 🥰🥰

விஜய் அவர் அப்பா பத்தி எதும் தப்பா நெனச்சிட்டு இருக்காரோ... 😔

ரெண்டு பேரும் frds அஹ்...
இருக்கட்டும்...

நைஸ் எபி dr... ❤
thanks sagiii:love::love:❤️❣️
 
Top