வாசம் 14
காலையிலே குளித்து நீள்கூந்தலை விரித்து விட்டிருந்தாள் கௌதமி. நேற்றிரவு இருந்த சோர்வும் அழுகையும் இப்போது மறைந்து, புது விடியல் அவளுக்கு உட்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து இருந்தது.
"குட் மார்னிங்"
விஜயின் குரலில், ஜன்னலோரத்தில் சூரிய ஒளி படும்படியாக வைத்திருந்த செடியில் மலர்ந்திருந்த ஒற்றை ரோஜா மலரை ரசித்துக் கொண்டிருந்த கௌதமி திரும்பிப் பார்த்து புன்னகை சிந்தினாள். என்றும் இறுக்கத்துடனே விடியும் வைகறை, இப்போதெல்லாம் அவனுக்கு மிகவும் உட்சாகமாய் விடிந்தது அவளின் புன்னகையில்!
"இந்த ரோஸ் ரொம்ப அழகா இருக்குங்க. செடியில ஒரே ஒரு பூ தான் வந்திருக்கு. இல்லேன்னா பறிச்சு முடியில சூடி இருப்பேன்.." ரோஜா இதழ்களை விரல்களால் வருடி விட்டபடி சோகம் இழையோடும் குரலில் கூறினாள் கௌதமி.
விஜய் அவளின் கூந்தலைப் பார்த்தான். குளித்து விட்டு விரித்து விட்டிருந்த கூந்தலில் இருந்து நீர் துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன.
"தலையை ஒழுங்கா துவட்டலையா?"
கூந்தலை அள்ளி கைகளால் தொட்டுப் பார்த்தவள், "துவட்டினேன்.. ஆனா இன்னுமே ஈரமாத் தான் இருக்கு. நான் என்ன பண்றது.." என்று என்று பாவமாகக் கேட்க, சிறு முறைப்புடன் குளியலறைக்குள் நுழைந்து பூந்துவாலையுடன் வெளியே வந்தவன் அவளின் கரம் பற்றிக் கட்டிலில் அமர வைத்தான்.
அவனை ஆச்சரியமாய் பார்த்த கௌதமி, அவன் தன் கூந்தலின் ஈரத்தை துண்டில் ஒற்றி எடுக்கத் தொடங்கியது கண்டு மேலும் ஆச்சரியமடைந்தாள். அவளின் முட்டைக் கண்கள் வெளியே தெறித்து விடும் அளவுக்கு விரிந்திருந்தது.
"ஒழுங்கா தலையை துவட்டனும். இல்லேனா ஜுரம் வந்து அவதிப் படணும்னு ஆது, சதுக்கு யமுனா சித்தி அடிக்கடி திட்டுவாங்க.." தலையை துவட்டி விட்டபடியே சிறு கண்டிப்புடன் கூறியவன், "பப்பு தான் துவட்டி விடுவாரு.." என்றவளைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டான். எதைக் கூறினாலும் பப்புவின் பெயரைத் தான் முதலில் கூறி விடுகிறாள் என சிரிப்பும் வந்தது.
"பப்பு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்து வைச்சிருக்காரு. நான் அடுத்த வாட்டி அவரை மீட் பண்ணதும் அவரை திட்டிட போறேன்.."
தலையை தூக்கி அவனைப் பாவமாகப் பார்த்தவள், "ஆனா பாவம். பப்புவும் என்னதான் செய்வாருங்க? எனக்கு அம்மா இல்லாததால பப்புவே எல்லாம் பண்ணி, அவரே தான் என்னோட அம்மாவாவும் அப்பாவாவும் இருக்கணும்னு ஆசைப்பட்டாரு. எனக்காக அவர் கலியாணம் கூட பண்ணிக்கல தெரியுங்களா.. நான் எதை பண்ண நினைச்சாலும் எனக்கு முன்னால அவரே அதை பண்ணிக் கொடுத்திடறாரு.." என்றாள். குரல் சற்றே கலங்கிப் போய் இருந்தது.
"அம்மா எங்க?" அவசியமற்ற கேள்வி தான் என்றாலும் கேட்க வேண்டுமென்று மனம் பிராண்டியதால் கேட்டு விட்டான். அவள் அழுது விடுவாளோ என தயங்கி அவளின் முகத்தையே உற்றுப் பார்த்தவன் அவனருகில் அமர்ந்து கொண்டான்.
"என்னோட அம்மாவும் அப்பாவும், நான் பிறந்த அன்னைக்கே இறந்து போய்ட்டாங்களாம்.. என்னோட பர்த்டே அன்னைக்கு தான் அவங்களோட இறந்தநாள்.." துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.
"அப்பாவுமா? அப்டினா பப்பு யாரு?" குழப்ப ரேகைகள் முகத்தில் படர புரியாமல் கேட்டவனை, கவலை மறந்து சிறு புன்னகையுடன் ஏறிட்டவள், "சித்தப்பா.. என் அப்பாவோட தம்பி அவரு.. சின்ன வயசுல அப்பானு சொல்றதை பப்பானு சொல்லி, பப்பாங்கறது பப்பு ஆகிடுச்சு.." என்றாள். கூறும் போதே தன்னை அறியாமல் சிரித்தும் விட்டாள்.
அவள் கூறியதைக் கேட்டு விஜயும் புன்னகை சிந்தினான். பெருமூச்சை இழுத்து விட்டபடி அவனின் தோளில் தயக்கம் மறந்து தலை சாய்ந்தவள், "அப்பாவும் அம்மாவும் ரொம்ப லவ் பண்ணாங்களாம்.. அம்மாவோட அப்பா, இந்த லவ்லாம் பண்ணிட்டு இருக்காத.. நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்னு அம்மாவை ரொம்ப மிரட்டி வைச்சிருந்தாங்களாம். அவருக்கு ஜாதி வெறியும் பணவெறியும் ரொம்ப அதிகம்னு பப்பு சொல்லுவாரு. வீட்டை எதிர்த்து ரெண்டு பேரும் வேற கிராமத்துக்கு வந்து கலியாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அம்மா, அப்பாவோட லவ் ஒரு சரித்திரம்னு எங்க பப்பு அடிக்கடி சொல்லுவாரு. ரொம்ப அழுவாரு.." என்றவள் கீழுதட்டை கடித்து விடுவித்தாள். அழுகை வருவது போல் இருந்தது. அழாமல் விடயத்தைக் கூறி முடிக்க வேண்டும் என எண்ணி கண்களை மூடித் திறந்தவள் மூச்சை ஆழமாக இழுத்து விடுவித்தாள்.
விஜய் அவள் கூறுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் விடயத்தைக் கூறும் போதே அடுத்தது என்ன நடந்திருக்கும் என அவனால் ஊகிக்க முடிந்தது. அவனின் போலீஸ் மூளையில் அலாரமணி அடித்து அவனை விழிப்படையச் செய்தது.
"ஒருநாள் அம்மா மழை நேரத்துல கொள்ளைல துணி துவைச்சுட்டு இருக்கும் போது தண்ணில வழுக்கி கீழ விழுந்து பிரசவ வலியில கத்தும் போது, என் பப்பு அவங்களை ஹாஸ்பிடல் கூட்டி போய் இருக்காங்க. அப்ப தான், வயக்காட்டுல வேலை பார்த்துட்டு இருந்த அப்பாவை, அம்மாவோட அப்பாவும் அவரோட ஆளுங்களும் சேர்ந்து அடிச்சுப் போட்டிருக்காங்க. தலைல அடிபட்டதால அம்மாவும், அவங்க அடிச்சு போட்டதால அப்பாவும் ரெண்டு பெரும் என்னையும் பப்புவையும் விட்டுட்டு போய்ட்டாங்க.. அடிக்கடி பப்பு என்கிட்டே சொல்லி ரொம்ப அழுவாரு. அவருக்கு அம்மாவையும் அப்பாவையும் ரொம்ப புடிக்குமாம்" இதழ் பிதுக்கிக் கூறியவளின் கண்களில், அவளையும் மீறி கண்ணீர் வழிந்தது.
"பப்புவுக்கு நான்தான் உலகம். அவரு என்னைத் தாண்டி எதையும் யோசிக்க மாட்டாரு. இன்னொரு கலியாணம் பண்ணிக்கங்கனு எவ்ளோ கெஞ்சினேன் தெரியுமா? நான் சொல்லி எதையும் மறுக்க மாட்டாரு. ஆனா இந்த விஷயத்துல மட்டும் முடியவே முடியாதுனு மறுத்துட்டாரு. பத்தாதுன்னு என்னை திட்ட வேற செஞ்சாரு. அன்னைக்கு மட்டும் தான் அவரு என்னை ரொம்ப திட்டுனது.." என்றவள், "பப்பு எனக்காக தான் கலியாணமே பண்ணிக்காம இருக்காரு. நான் மட்டும் இங்க சந்தோசமா இருக்கேன். அவரு கலியாணம் பண்ணிக்கிட்டு இருந்தா அவர் பக்கத்துல சித்தியாவது இருந்திருப்பாங்க இல்லையா?" என்று கேட்டாள்.
ஆமென்று தலை அசைத்த விஜய், "பப்புவை ரொம்ப மிஸ் பண்ணுறியா?" என்று கேட்க, ஆமென்று தலை அசைத்தவள் கைகளை விரித்துக் காட்டி,"ரொம்ப" என்றாள். அவளின் முகத்தை நிமிர்த்தி அவளது கண்களை துடைத்து விட்டவன் அவளை கட்டிலை விட்டு எழ வைத்து, ஜன்னலருகே அழைத்துச் சென்றான்.
ரோஜா செடியில் மலர்ந்திருந்த ஒற்றை ரோஜாவைப் பறித்து அவளின் காதோரம் சூடி விட்டவன், "அடிக்கடி இப்டி அழாதம்மா.. கண்ணீர் எனக்கு புடிக்காத விஷயம். அதையும் தாண்டி உன் அழகுக்கு அது கொஞ்சம் பொருத்தமா இல்ல. அப்பறம் உன் பப்பு, எதுக்குடா என் செல்லக்குட்டியை அழ வைச்சனு கேட்டு என்னை தூக்கி மிதிக்க போறாரு.." என்றான் குறும்புடன். தனக்குக் கூட குறும்பு செய்ய வருகிறதே என்று நினைத்து நாக்கு நுனியை கடித்துக் கொண்டான்.
"உங்களை மிதிக்க விட மாட்டேன் நான். அவரு உங்களைப்போலவே என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாருனு பப்புகிட்ட சொல்லுவேன்.. அப்பறம் பப்பு ரொம்ப ஹாப்பியாகி தேங்க் யூடா மாப்பிளைனு சொல்ல போறாரு.." கண்களை அவனின் சட்டையில் துடைத்தபடி கூறினாள் கௌதமி. அடக்க மாட்டாமல் விஜய் சட்டென்று சிரித்தான்.
அவள் வெட்கத்துடன் மறுபுறம் திரும்பிக் கொள்ள, அவளது முகத்தை தன் புறமாக திருப்பியவன், "ரொம்ப அழகா இருக்க.." என்றான் ரோஜா சூடியிருந்த அவளது முகத்தை பார்த்தபடி.. எவ்வளவு நேரமென்றாலும் குழந்தைத் தனம் மட்டுமே நிறைந்திருந்த அவனின் முகத்தை சலிக்காமல் ரசிக்கலாம் எனத் தோன்றியது.
"ரோஜாவைத் தான் சொல்லுறிங்களா?" என்று கேட்டவளிடம் இல்லையென தலை அசைத்தவன் குனிந்து அவளின் நெற்றியில் சிறு முத்தமொன்றைப் பதித்து, "ரோஜாவை சூடிக்கிட்டு இருக்கிறவளை சொல்லுறேன்.." என்றான் சிறு குரலில்.
அந்த செடியில் மலர்ந்த ஒற்றை ரோஜாவைப் போல் தான், தன் மனதில் அவள் மேல் துளிர்த்திருக்கும் நேசமும் என நினைத்துக் கொண்டவன், ரோஜா இதழ்களுக்கும் காரிகையின் இதழ்களுக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என கண்களாலே ஆராய்ந்தான்.
அவனின் பார்வை புதிதாய் அவளுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அவனது கண்களை நேருக்கு நேர் நோக்கத் திராணியற்று நடுங்கும் கைகளால் அவனின் கைகளைப் பற்றியவள், "நீங்க ரெடியாகலையா?" என நா தந்தியடிக்க மெதுவாய் கேட்டாள்.
அவளிடமிருந்த பார்வையை சுவர்க் கடிகாரத்தின் புறமாக திருப்பியவன் நேரம் எட்டுமணியை நெருங்கிக் கொண்டிருப்பது கண்டு, "ரெடியாக தான் போறேன். பெட்ல இருக்குற ட்ரெஸ்ஸை போட்டு நீயும் ரெடி ஆகிக்க.. இன்னைக்கு கிளாஸ் இருக்கு.." என்று கூறினான்.
சரியென தலையசைத்தவளின் கூந்தலை கலைத்து விளையாடி விட்டு அவன் அங்கிருந்து நகர்ந்து விட, நெஞ்சை நீவி விட்டபடி மூச்சை வேக வேகமாய் இழுத்து விட்டாள் கௌதமி. அவனின் அதிரடி அன்பும், திணறடிக்கும் அக்கறையும், ஆளைக் கொல்லும் பார்வையும் அவளுக்கு மூச்சு முட்ட வைத்தது.
அவள் ஆயத்தமாகி அறையை விட்டு வெளியே வரும் போது, காக்கி உடையில் கம்பீரமாய் நின்றிருந்தான் விஜய். அவனை நோக்கி அடியெடுத்து வைத்த கால்கள் தயங்கி பாதியிலே நின்று விட, முறுக்கேறிய உடம்புடன் கை விரல்களால் தலையைக் கோதி விட்டவனின் கம்பீரதிக் அச்சம் மறந்து மொத்தமாக மயங்கிப் போனது அவளது மனம்.. சுற்றம் மறந்து அவனையே தன் கண்களால் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டாள்.
"ம்ம்க்கும்" என தொண்டையை செருமியபடி அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான். கருப்பு ஜீன்ஸ், கருப்பு நிற வெள்ளைக் கட்டமிட்ட சட்டை அணிந்திருந்து முடியை தூக்கிப் போனிடைல் இட்டிருந்தாள். அவனது செருமலிலே தெளிந்திருந்தவள் அவனது பார்வையில் கூசி மறுபுறம் திரும்பி நின்றாள்.
"இந்த ட்ரெஸ்ஸை தான் போட்டுக்கணுமா? எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.." எனத் தயங்கியவளின் அருகில் வந்தவன் அவளது சட்டையின் கையை மடித்து முழங்கை வரை ஏற்றி விட்டான். வெள்ளைப் பதுமைக்கு கருப்பு நிற உடை மிகவும் அழகாக இருந்தது.
"ஸாரி, சுடிதார் போட்டுட்டு போயிட்டா உனக்கு அன்கன்ஃபோர்ட்டபிள்ளா பீல் ஆகும். இது ஓகே.. பார்க்க ரவுடி கேர்ள் மாதிரியே இருக்க.."
"ரவுடி மாதிரியா?"
"ம்ம்.. அப்டியே கொஞ்சம் என்னை முறைச்சு முறைச்சு பாரு. அப்ப கண்டிப்பா பக்கா ரவுடி கேர்ள் மாதிரி இருப்ப.." என்று கூற, முறைப்பதற்கு பதிலாக திருதிருவென்று முழித்தாள் கௌதமி.
"இப்போ பூனைக்குட்டிக்கு ரவுடி கெட்டப் போட்ட மாதிரி ஃபீல் ஆகுது.." என வாய்க்குள் முனகியவன் காலை உணவை அவளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு, தன் ஜீப்பில் ஏறி அமர்ந்தான். அவனுக்கு அருகில் அவளும் ஏறி அமர்ந்து கொண்டாள் கௌதமி.
அவளருகில் தன் மனம் இறக்கையின்றி பறப்பது போல் உணர்ந்தான் விஜய். திருமணமாகி ஒரே வாரத்தில் தனக்குள் இத்தனை மாற்றத்தை அவனால் நம்ப முடியவில்லை. அவளைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேனா என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. தாலிக் கொடி மந்திரம் என பெரியவர்கள் கூறிக் கேட்டிருக்கிறான். அந்த மந்திரமாகவே இருந்தாலும் அது அவளுக்கல்லவா நிகழ்ந்திருக்க வேண்டும்... தனக்கு எப்படி?
சிந்தனையில் மூழ்கியபடி ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தவன், "நீங்க காக்கி உடைல ரொம்ப ஹான்ட்ஸமா இருக்கிங்க.." என்ற கௌதமியின் கிளிக் குரலில் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் வேகமாக தன் பார்வையை அவனை விட்டு விலக்கிக் கொண்டாள்.
லேசாக வெட்கப்பட்டவன் கீழுதட்டைக் கடித்தபடி ஜீப்பை செலுத்தி ஓரிடத்தில் நிறுத்தினான். அங்கு அவர்களின் வரவை எதிர்பார்த்து நின்றிருந்தாள் வர்ஷினி.
"இவங்க இங்க என்ன பண்ணுறாங்க?" அவளைக் கண்டதும் கௌதமி புரியாமல் கேட்டாள்.
"மதுரைல ஒவ்வொரு ஏரியாலையும் கேர்ள்ஸ்க்கு மார்ஷல் ஆர்ட்ஸ் கிளாஸ் வைக்கிறதே இவ தான். இவ, போலீஸ் சார்பா பயிற்சி கொடுக்கப் பட்டவ.. இவளுக்குன்னு ஒரு கேங் இருக்கு. பொண்ணுங்க என்னைக்கும் தைரியமா இருக்கணுங்கறது சக்திவேல் சாரோட எண்ணம். அவரு தான் இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணி கொடுத்திருக்காரு.. அவ உனக்காக தான் வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கா.." என்று கூறியவனையும், தன்னைப் போலவே ஜீன்ஸ் சட்டையில் பெண் புலியாய் நின்றிருந்த வர்ஷினியையும் ஆச்சரியமும் மரியாதையும் கலந்த பார்வை பார்த்த கௌதமி, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டாள்.