• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 16)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
சாலையில் வழுக்கிச் சென்றது அந்த கார்!

காரினுள் ஓட்டுநர் இருக்கையில் வர்ஷினியும் அவளுக்கு அருகே கௌதமியும் அமர்ந்து இருக்க, இருவருக்கு இடையில் பெருத்த அமைதி.

வர்ஷினி கமிஷ்னரின் மகள் என்ற உண்மையை அறிந்து கொண்ட பிறகும் அவளுடன் ஒன்ற முடியவில்லை கௌதமியால்.. அதிக மரியாதை வைத்திருந்தாள் அவள் மேல். கண்டால் சிறு புன்னகை.. மிஞ்சினால் இரண்டு வார்த்தைகள். இவ்வளவு நாட்கள் பழகியும் அவ்வளவு தான் அவர்களின் உறவு.

காரை வெகு லாவகமான ஓட்டிக் கொண்டிருந்த வர்ஷினி, "கௌதமி!" என்றழைத்தாள். தனியாக இருக்கும் நேரங்களில் தந்தை சக்திவேலின் ராயல் என்ஃபீல்டு பைக்கில் தான் செல்ல வேண்டிய இடங்களுக்கெல்லாம் சென்று வருவாள். ஆனால் இப்போது, கௌதமியையும் வீட்டில் இறக்கி விட வேண்டும் என்பதால் வீட்டில் தூசு படிய வைத்திருந்த காரை உபயோகித்துக் கொள்கிறாள் அவள்.

"சொல்லுங்க அக்கா.." ஜன்னல் புறமாக இருந்த தன் பார்வையை அவளின் புறம் திருப்பி, வெளி வராத சிறு குரலில் கேட்டாள் கௌதமி.

"எனக்கு உன்னைப் பார்த்தா பொறாமையா இருக்கு கௌதமி.." பார்வையை அவள் புறமாக திருப்பாமல் காரை செலுத்தியபடி கூறியவள் பெருமூச்சுடன் அவளைத் திரும்பிப் பார்க்க, தயக்கத்துடன் ஏன் என்பது போல் அவளைப் பார்த்தாள் கௌதமி.

"விஜய் ஒரு ஜண்டில் மேன். எனக்கு தெரிஞ்ச நாள்ல இருந்து அவன் ஒரு பொண்ணை வேறு விதமான பார்வையோட பார்த்ததையோ, பொண்ணுங்க கிட்ட தேவையை தவிர வேறெந்த நேரங்கள்லையும் வழிஞ்சி வழிஞ்சி உருகுனதையோ நான் பார்த்ததே இல்ல கௌதமி. அவன் மேல எனக்கு நிறைய மதிப்பு இருக்கு.

அவனோட லைஃப்ல நான் மட்டும் தான் ஒரே ஒரு பொண்ணா இருக்கணும்னு நினைச்சேன். உயிர் தோழியா, தாயா, சகோதரியா.. எல்லாமா.. எல்லாமா நானே இருக்கணும்னு நினைச்சேன்.."

அவளை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்த கௌதமி, "நீ.. நீங்க அவங்களை லவ் பண்ணுறீங்களா?" என்று கேட்க, இல்லை என்பது போல் மறுப்பாக தலை அசைத்தவள்

"அவன் என்னோட பிரண்ட். ஒருவேளை நாம கலியாணம் பண்ணி இருந்தோம்னா நமக்குள்ள இருக்கற புரிதல் காதலா மாறி இருக்க வாய்ப்பிருக்கு கௌதமி. அவன் உன்மேல காட்டற அக்கறையை என் மேல காட்டி இருந்தா அவன் மேல பைத்தியமாகி ரோடு ரோடா அலைஞ்சிருப்பேன் நான்.." என்று கூறினாள்.

"எனக்கு எதையும் மனசுல வைச்சுட்டு இருக்க முடியாது கௌதமி. எதை எந்த இடத்துல பேசுனா கரெக்ட்டா இருக்கும்னு யோசிக்காமலே பேசிடுவேன். அதை போல தான் இதுவும், விஜயை பத்தி உன்கிட்ட பேச கூடாது தான். ஆனாலும் பேசிட்டு இருக்கேன். அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க மனமில்லை கௌதமி.

நேரடியாவே, நாம கலியாணம் பண்ணிக்கலாமானு அவன்ட்ட நாலைஞ்சு வாட்டி கேட்டுட்டேன். நட்புறவை தாண்டி எதுவும் வேணான்னு சொல்லிட்டான். ஆனா ஒருவேளை உங்க கலியாணம் நடக்குற இடத்துல நான் இருந்திருந்தால் இந்த கலியாணத்தை நடக்க விட்டிருப்பேனானு சந்தேகம் தான். நிஜமாவே உன்னை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு கௌதமி"

கௌதமி கீழுதட்டைக் கடித்துக் கண்களை இறுக பொத்திக் கொண்டாள். மனதினுள் வைத்து வன்மம், ஆசைகளை பெருக்கிக் கொள்வதை விட, வர்ஷினி தன் மனதில் தோன்றியதை எல்லாம் வெளிப்படையாகவே தன்னிடம் பேசுவது பரவாயில்லை என்று தோன்றினாலும், அவற்றை எல்லாம் தன் காதால் கேட்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது அவளுக்கு.

"அவனோட லைஃப்ல வேறெந்த பொண்ணுக்கும் இடமே இல்லைனு சொல்லுவான். அப்போல்லாம் நான் நிறைய சந்தோசப்பட்டு இருக்கேன். அவனோட கேரியர்க்கு பொருத்தமா, நானும் தைரியசாலியாத் தான் இருக்கேன். அவனுக்கு எல்லா விதத்துலயும் சப்போர்ட்டிவ்வா இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா டோட்டலி வேஸ்ட்!

அவனுக்கு தைரியமா, எதையும் பயமில்லாம ஃபேஸ் பண்ணுற பொண்ணுங்களை ரொம்ப பிடிக்கும். பொண்ணுங்கன்னா தைரியமும், திறமையும் இருக்கணும்னு சொல்லிட்டே இருப்பான்.. ஆனா நீ ஒரு சின்ன வார்த்தைக்கே ஃபீல் ஆகிடற.. இன்னுமே குழந்தை மாதிரியே இருக்க.."

கௌதமி அவளைப் புரியாமல் பார்த்தாள். நான் விஜய்க்கு பொறுத்தமில்லாத பெண் என்று மறைமுகமாக தன்னிடம் கூற வருகிறாளா? அவருக்கு தைரியமான பெண்களை தான் பிடிக்கும் என்றால், என்னைப் பிடிக்கவே இல்லையா.. என பலவாறும் சிந்தித்தவளுக்கு தலை வலித்தது.

'என்னோட பப்லுவுக்கு என்னைப் பிடிக்காம தானா என்மேல இவ்ளோ அக்கறை காட்டறாரு? ஸ்டேஷன் விட்டு எவ்ளோ தான் களைச்சு போய் வீட்டுக்கு வந்தாலும் ஒரு நாளாவது என்னை வாடிப் போன முகத்தோடயோ கோபமான முகத்தோடயோ நோக்கினது இல்லையே.. நான் சாப்பிடலைன்னா கூட கோப படுவாரு.. லேசா தலை வலிச்சாலும் பதறி போய்டுவாரு.. சமைக்க தெரியாதுன்னு சொன்ன ஒரே காரணத்துனால காலைல எழுந்த பாதி எழாத பாதியா ஓடிப் போய் பிரேக்ஃபஸ்ட் ரெடி பண்ணிட்டு, மதிய சாப்பாட்டைக் கூட அவரே சமைச்சு வைப்பாரே..

இவ்ளோவும் பண்றவருக்கு என்னைப் பிடிக்கலன்னு அர்த்தமா? பப்பு என்னை குழந்தையா வளர்த்ததால, வர்ஷினிக்கா சொல்ற மாதிரி எனக்கு நிஜமாவே தைரியம் இல்லை தான். கொஞ்சம் இருந்தாலும் ஃபீல் ஆகிடறேன் தான்.. அது நான் வளர்ந்த விதம் இல்லையா.. எப்படி அதை திடீர்னு மாத்திகறது?

அவருக்கு என்னைப் பிடிக்கலயா? கடவுளே! ஒருவேளை.. ஒருவேளை இப்போ நான் அவரோட பொறுப்பா மாறிட்டேன். என்னை பார்த்துக்க வேண்டியது அவரோட கடமைங்கற ஒரே காரணத்துனால தான் இவ்ளோ அக்கறை காட்டறாரா? அவருக்கு நிஜமாவே என்னைப் பிடிச்சு இருக்காதா?'

கண்டபடி சிந்தனைக் குதிரையை ஓட விட்டு யோசனையில் மூழ்கி இருந்தவளின் யோசனையைக் கலைத்தது வர்ஷினியின் குரல். மெதுவாக தலை திருப்பி அவளைப் பார்த்தாள்.

"சொல்லுறேன்னு கோபப்படாதம்மா. முடிஞ்சா உன்னை நீயே கொஞ்சம் மாத்திக்க.. உங்களுக்கு கலியாணமாகி ரெண்டு மாசமாச்சு. உங்களுக்கு உள்ளேயும் ஒரு புரிதல் வர வேணாமா.. இப்டியே போய்டுச்சுன்னா உங்க வாழ்க்கையை யாரு வாழறது? அவனுக்கு புடிச்ச மாதிரி உன்னை நீயே மாத்தி, அவனை எப்படியாவது மனசளவுல நெருங்கிடு கௌதமி.

என் நண்பனோட வாழ்க்கைல எனக்கும் அக்கறை இருக்கு. கொஞ்ச நேரம் முன்னால அவனை விட்டுக் கொடுக்கவே மனமில்லைனு அளந்தவ இப்போ இப்டி பேசுறாவேன்னு நீ நினைக்கலாம்.. கண்டிப்பா நினைச்சிருப்ப.. ஆனா நடந்ததை யாராலயும் மாத்த முடியாது இல்லையா.. இப்போ விஜய் உனக்கு ஹஸ்பண்ட். அவனை நல்லா பார்த்துக்கற பொறுப்பு தோழி என்னை விட, பொண்டாட்டி உனக்கு தான்மா இருக்கு.

அவன் மேல உரிமை கூட உனக்கு தான் அதிகமா இருக்கு. அவனுக்கு புடிச்ச மாதிரி இரு. அவனுக்கு கண்டிப்பா உன்னைப் பிடிக்கும். எனக்கும் உன்னை பிடிச்சுருக்கறதால தான் உன்கிட்ட இதையெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்.." என்று கூறியவள் வீடு வந்ததும் காரை தடுப்பு போட்டு நிறுத்தி விட்டு கௌதமியின் புறமாகத் திரும்பினாள்.

கௌதமி அவளை இன்முகத்துடன் பார்த்தாள். வெளிப்படையாக தன் மனதில் உள்ளதையெல்லாம் பேசித் தொலைத்தாலும் இறுதியில் அவள் கூறிய வரிகள், வர்ஷினி கெட்டவள் இல்லை. நண்பன் மேல் அலாதியான அக்கறை கொண்டவள் என்பதை கௌதமிக்கு புரிய வைத்து இருந்தது.

"நான் சொல்றது எல்லாம் புரிஞ்சுச்சா கௌதமி? என்மேல எந்தக் கோபமும் இல்லையே.."

வேகமாக இல்லை என்பது போல் தலை அசைத்து மறுத்தவள், "கோபம்லாம் இல்லைக்கா.. ஆனா அவருக்கு நிஜமாவே என்னைப் பிடிக்கலையோன்னு பயமா இருக்கு. வருத்தமா இருக்கு.. " என வருத்தம் இழையோடும் குரலில் கூறினாள்.

"பிடிக்கலைன்னா தான் என்ன.. நீ புடிக்கிற மாதிரி நடந்துக்க.." என்றவள் கௌதமியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

வீட்டுக்குள் நுழைந்தவள் வர்ஷினி கூறியதைப் பற்றி சிந்திப்பதிலே மூழ்கி விட்டதால் மதிய உணவை உட்கொள்ளக் கூட மறந்து விட்டாள்.

'நிஜமாகவே அவருக்கு என்னைப் பிடிச்சு இருக்காதோ.. வர்ஷினி அக்கா என்னை கவலைக்குட்படுத்த இப்படியெல்லாம் பேசியதாக தெரியவில்லையே. அவங்களோட கண்கள்ல உண்மையான அக்கறையைக் கண்டேனே..' என நினைத்தவளுக்கு தன்னை அறியாமலே அழுகை வந்து விட்டது.

கட்டிலில் முகம் குப்புற விழுந்து புலம்பித் தள்ளியவளுக்கு, இப்போது தனக்கு அருகில் கார்த்திக் நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் விம்மலாய் வெடித்தது. வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதினுள் கார்த்திக்கின் அன்புக்காக தினம் தினம் ஏங்கி, மனதினுள் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டு தான் இருக்கிறாள் அவளும்.

இறந்தவுடன் மறந்து போடும் சுயநல அன்பா அவனுடையது? இறக்கும் தருவாயில் கூட தோழியின் சந்தோசத்தைப் பற்றியும், தான் அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை (விஜயுடன் அவளை சேர்த்து வைப்பேன் என்ற சத்தியம்) பற்றியும் சிந்தித்தவன் ஆயிற்றே அவன்! எப்படி மறப்பாள்?

உயிருள்ள வரைக்கும் அவளின் உயிரோடு கலந்திருப்பான் கார்த்திக் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கடைக் கண்ணால் வழிந்த கண்ணீரை முகத்தை அங்குமிங்கும் திருப்பியபடி கட்டில் விரிப்பிலே துடைத்தவள் 'விஜய்க்கு தன்னைப் பிடிக்கவில்லை' என புலம்பியபடி எப்போது உறங்கிப் போனாள் என்று அவளே அறியாள்! இத்தனைக்கும் காய்ச்சலில் கசங்கி கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவள் 'விஜய்க்கு என்னைப் பிடிக்கவில்லை' என முனகுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

யோசனையில் மூழ்கி இருந்தவள் விஜய் கூறியதைக் கேட்டதும் சட்டென்று தெளிந்து அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

தான் கேட்டதில் தான் தவறோ என எண்ணியவள், "இ.. இப்போ நீங்க என்ன சொன்னீங்க?" தொண்டை அடைக்கக் கேட்க, அவளது தலையை வருடி விட்ட விஜய்,

"ஒரு அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ அவங்களோட குழந்தையைப் பிடிக்காம போகுமா.. நீயும் இன்னுமே வளர்ந்த குழந்தை தான்மா. உன் கண்ணு கலங்கினாலும் எனக்கு கவலையா வருது. உனக்கு காய்ச்சல்னா எனக்கு பதறுது. நீ வாடிப் போய்ட்டா என் மனசும் கூடவே வாடிப் போயிடுது.. எனக்கு உன்னைப் பிடிக்கும்மா.. உன்னை சந்தோசமா வைச்சுக்கறது என்னோட கடமை.." அன்பே ஒழுகக் கூறினான்.

அவனைப் பாவமாகப் பார்த்த கௌதமி, "கடமைக்காக தான் எனக்கு அன்பு காட்டுறீங்களா அப்போ? அது.. நீங்க என்னை.. என்னை லவ் பண்ணலயா?" என தயக்கத்துடன் கேட்டாள். என்ன கூறி விடுவானோ என்ற அச்சத்தில் உள்ளங்கைகள் ஊற்றெடுக்க, படுக்கை விரிப்பை இறுக்கமாக பொத்திப் பிடித்துக் கொண்டாள்.

விஜய் அவளை திகைப்புடன் பார்த்தான். இதற்கான பதிலை அவனே அறியாத போது எப்படி அவளிடம் மட்டும் உரைப்பான் அவன்? அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது கௌதமியே தொடர்ந்தாள்.

"நிஜமாவே எனக்கு உங்களைப் பிடிக்கும்.. ப்ளீஸ் என்னைப் பிடிக்காதுனு சொல்லிடாதீங்க. தைரியமான பொண்ணா இருந்தா தான் உங்களுக்கு ரொம்ப புடிக்குமாம்.. சிங்கப்பெண் போல இருக்கணுமாம்னு வர்ஷினிக்கா சொன்னாங்க.

இனிமே நைட்டு தனியா மத்த ரூம்லயே தூங்கிக்கறேன். ராத்திரி பன்னிரண்டு மணிக்கு தண்ணி தாகம் எடுத்தாக் கூட கிட்சேனுக்கு தனியாவே போயிக்கறேன்.. கரண்ட்டு கட் ஆச்சுன்னா கூட நான் என்னங்க என்னங்கனு உங்களை கூப்பிடாம தனியாவே உக்காந்துக்கறேன். நீங்க வீட்டுக்கு வர முன்னால ரூம்ல இருந்து ஹாலுக்கு தனியாவே போய் ஹால் லைட்ஸ் தட்டி விடறேன்.."

கண்களை உருட்டி உருட்டி, விரல்களை மடக்கித் திறந்து அவள் பேசும் அழகில் சில நிமிடங்கள் சொக்கி நின்றான் விஜய். இவள் குழந்தை தான் என கற்பூரம் அடித்து உறுதியுடன் சத்தியம் செய்யக் கூட தயாராகி விட்டான் அவன்.

"நானும் கொஞ்சம் கொஞ்சம் தைரியமான பொண்ணா மாறிடுவேன்.." மூச்சு விடாமல் பேசித் தொலைத்து விட்டு இறுதியில் உறுதியுடன் கூறிப் பெருமூச்சு விட்டவளை நீ குழந்தைடா என கொஞ்சம் வேண்டும் போல் இருந்தது விஜய்க்கு. பழனிவேல் இவளை பாப்பா, பாப்பா என அழைத்து குழந்தை போல் தாங்குவதற்கான காரணம் என்னவென்று இப்போது அவனுக்கு தெளிவாகவே தெரிந்தது.

"என்னைப் புடிக்கும்ல?" மிரட்டும் தொனியில் கேட்டவளின் தலையில் கொட்டிய விஜய்,

"அடிங்க! பூனைக் குட்டி மாதிரி இருந்துட்டு என்னையே மிரட்டறியா?" என்று கேட்டு முறைக்க, கண்களை உருட்டி அழகாய் முழித்தாள் கௌதமி.

எதிரில் இருப்பவன் தன்னில் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து கொண்டிருப்பதை அறியாமல் ஒழுங்கு காட்டிக் கொண்டிருந்தவள், "அப்போ என்னைப் புடிக்காதா?" என்று யோசனையுடன் கேட்க, அவளின் கழுத்தில் கரம் வைத்து தன்னை நோக்கி இழுத்த விஜய் அவளைத் தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

மூச்சு விடக் கூட மறந்து, தலை தூக்கி அவனின் முகத்தை திகைப்புடன் பார்த்தாள் கௌதமி.

தொடரும்.
 
Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
கார்த்திக்கை எப்படி மறக்கறது.வாய்ப்பே இல்லை எனக்கும்கூட😒❣️❣️.வர்ஷினி மாதிரி மனசுல இருந்ததை சொல்லிட்டு நிதர்சனத்தை ஏத்துகிட்டு போய்ரணும்.குட்டி பாப்பா அபிநயம் பிடிச்சே விஜயை கவுத்திடிச்சு😍😍😍
 
😍❤❤ நன்றி சகி 💙💙
 
Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
263
கார்த்திக் உயிரோட இருந்திருக்கலாம்.😒
இனி சிங்கப்பெண் கௌதமி என்று மாற போகிறாளா நம்ம புஜ்ஜு குட்டி😂😂
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32

Varshini great 💥💥💥 kidaikkatha onna nenachi feel panni saguratha vida ithan nitharshanamnu solli kadandu poiduradhu nalladhu. 👌💥💥💥💥💥💥💥💥💥
Arumai
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கார்த்திக் உயிரோட இருந்திருக்கலாம்.😒
இனி சிங்கப்பெண் கௌதமி என்று மாற போகிறாளா நம்ம புஜ்ஜு குட்டி😂😂
மாறுவா போல தான் இருக்கு சகி 😂😂😂
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
நான் கூட கார்த்திக்கை மிஸ் பண்றேன் பா 😭😭😭😭😭😭

இனியா மனதில் எத்தனை ஏக்கம் 😔😔😔😔

ஆதி மனதில் காதல் வந்துவிட்டது, ஆனால் அவன் ஏன் இன்னும் அறியவில்லை 🥺🥺🥺
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
வர்ஷினி லூசுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை ஹஸ்பெண்ட் வைப்க்குள்ள மூணாவதாக எதுக்கு இவ?. எல்லோருக்கும் எல்லாம் நினைச்ச போலயே அமையாது. அமைஞ்சதை எங்களுக்கு ஏற்ற போல ஆக்கிக்கனும். வர்றவங்களை நிறை குறையோட ஏற்றுக்கனும். அது இந்த மண்டுக்கு புரியல. இவ பேச்சை கேட்டுட்டு இந்த கெளதமி வேற காய்ச்சலை இழுத்து விட்டுடுச்சு!🙄🙄🙂
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
நான் கூட கார்த்திக்கை மிஸ் பண்றேன் பா 😭😭😭😭😭😭

இனியா மனதில் எத்தனை ஏக்கம் 😔😔😔😔

ஆதி மனதில் காதல் வந்துவிட்டது, ஆனால் அவன் ஏன் இன்னும் அறியவில்லை 🥺🥺🥺
கவலை வேண்டாம் சகி.. அவனின் இறப்பின் இழப்பை மறக்கும் படியாக இறுதியில் ஒரு சம்பவம் இருக்கிறது.
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
வர்ஷினி லூசுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை ஹஸ்பெண்ட் வைப்க்குள்ள மூணாவதாக எதுக்கு இவ?. எல்லோருக்கும் எல்லாம் நினைச்ச போலயே அமையாது. அமைஞ்சதை எங்களுக்கு ஏற்ற போல ஆக்கிக்கனும். வர்றவங்களை நிறை குறையோட ஏற்றுக்கனும். அது இந்த மண்டுக்கு புரியல. இவ பேச்சை கேட்டுட்டு இந்த கெளதமி வேற காய்ச்சலை இழுத்து விட்டுடுச்சு!🙄🙄🙂
இதை யாரும் புரிஞ்சிக்குறது இல்லை சகி.. அதனால் தான் வீண் பிரச்சனைகள் கிளம்புது
 
Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
வர்ஷி... நல்ல எண்ணத்துல சொல்லிருக்கலாம்...

ஆனாலும்... அது husband wife விஷயம்... 🙄

அவருக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் இனியா... ❤
 
❣️ 🥰 :love:
 
Top