• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 17)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
அன்று கௌதமியை பார்ப்பதற்காக ஊரிலிருந்து வந்திருந்தார் பழனிவேல்.

கதிரோன் கீழ்வானில் உதிக்கத் தொடங்கியிருந்த அதிகாலை வேளையில் வீட்டின் மணி அடிக்கவும், சமையலறையில் விஜய் சமைத்துக் கொண்டிருப்பதால் அவளே சென்று கதவை திறந்து விட்டாள்.

வாசலில் நின்றிருந்த பழனியைக் கண்டதும் திகைப்புடன் விழி விரித்தவள் உடனே தன் முகபாவனைகளை மாற்றிக் கொண்டு, "யாருங்க நீங்க? யாரை தேடுறீங்க.." முகத்தை தோளில் இடித்தபடி கேட்டாள்.

இடுப்பில் கை வைத்து அவளைத் தீ என முறைத்த பழனி, "பாப்பா.. எப்டிமா இருக்க?" அன்பே ஒழுக, உருகும் குரலில் கேட்க, அவருக்கு பதில் கூற வாய் திறப்பதற்குள் விஜய்யே ஹாலுக்கு வந்து விட்டான்.

"யாருமா வந்திருக்காங்க?" காலை உணவுக்காக செய்திருந்த உப்புமாவை ஹாலின் ஒரு மூலையில் இருந்த மேஜை மேல் வைத்தவாறு கேட்டவன் வாசலை மறைத்தபடி நின்றிருந்த கௌதமியைத் தாண்டி தன் விழிகளை சுழல விட்டான்.

"தெரியல. யாரோ வந்திருக்காங்க.." பழனியைப் பாராமல் முகம் திருப்பிக் கொண்டு கூறியவள் வாசலை விட்டு சற்று தள்ளி நின்று விஜயின் புறமாகத் திரும்பினாள். அதற்குள் வாசலில் கௌதமியை முறைத்தபடி நின்றிருந்த பழனியைக் கண்ட விஜய், விரைந்து அவர்களை நெருங்கினான்.

"யாரோ வந்திருக்காங்க. உங்களைத் தேடி தான் வந்திருப்பாங்க.. உள்ளே வர சொல்லுங்களேன்.." பழனியின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் விஜயிடம் கூறி விட்டு விறுவிறுவென்று நகர்ந்து சோபாவில் கன்னத்தில் கை குற்றி அமர்ந்து கொண்டாள் கௌதமி.

அவளை முறைக்க முயன்று தோற்றுப் போன விஜய், "உள்ளே வாங்க மாமா.. அவ உங்க கிட்ட விளையாடறானு நினைக்கிறேன்.." என்று கூறி, மரியாதை நிமித்தமாக சற்றே தள்ளி நின்று அவருக்கு உள்ளே செல்ல வழி விட,

"சவுக்கியமா இருக்கிங்களா மாப்பிளை?" என்று கேட்டவாறே புன்னகை முகமாய் வீட்டினுள் நுழைந்தார் பழனி.

"ரொம்ப நல்லா இருக்கோம் மாமா.. அங்க எல்லாம் நலந்தானா? நீங்க எப்படி இருக்கிங்க.." என்று கேட்டவர் சோபாவில் இருந்த கௌதமியின் துப்பட்டாவைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு அவரை அமருமாறு செய்கை செய்தான். பழனி தன் அருகே அமர்ந்து விடக் கூடாது என்பதற்காக துப்பட்டாவை கழற்றி சோபாவில் மேல் விட்டெறிந்ததே அவள் தான் என்பதை விஜயும் தான் அறிவான்.

"உக்காருங்க மாமா.. இதோ வந்திடறேன்.." என்று கூறிவிட்டு விஜய் அங்கிருந்து நகர்ந்ததும் அவளின் புறமாக திரும்பி அமர்ந்த பழனி,"வந்திருக்கிறது உன் பப்பு.. எப்படி இருக்கீங்கன்னு கேட்க மாட்டியாம்மா.. பப்பு கூட என்ன கோபம் உனக்கு?" என்று சோகமாக கேட்க,

அவரை மேலிருந்து கீழாக பார்த்து அவர் சுகமாய், திடமாய் தான் இருக்கிறார் என்பதை ஆறாவது முறையாக உறுதிப் படுத்திக் கொண்டவள், "உங்க கிட்ட பேச எனக்கு எதுவுமே இல்லையே.. ஆமா நீங்க யாரைப் பார்க்க இங்கே வந்திருக்கீங்க?" தாடையில் விரல் தட்டியபடி யோசனையுடன் கேட்டாள்.

"என் பாப்புக் குட்டியை தவிர வேறு யாரு இருக்காங்க எனக்கு? நான் என் பாப்பாவைப் பார்க்க தான் இங்கே வந்தேனாக்கும்.. ஆனா பாப்புக் குட்டி தான் என்கிட்ட பேசாம உர்ருனு மூஞ்சை தூக்கி வைச்சுட்டு இருக்காள். ஒருவேளை அவளோட பப்பு இங்க வந்தது அவளுக்கு பிடிக்கலையோ என்னவோ.."

"ஆமா பிடிக்கல. ரெண்டு வாரத்துல உன்னை பார்க்க வருவேன் பாப்பானு சொன்னவரு ரெண்டு மாசம் கழிச்சு இங்க வந்திருக்கிறது எனக்கு பிடிக்கல.. ரெண்டு மாசமா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்.. ஆனா நீங்க என்னை மிஸ் பண்ணவே இல்லனு சொல்லுவீங்க.." என்றவள் அவருக்கு புற முதுகு காட்டி அமர்ந்து கொள்ள, இவளை எப்படி சமாதானம் செய்வது எனப் புரியாமல் முழித்து நின்றார் பழனிவேல்.

வருகிறேன் வருகிறேன் என்று கூறினாரே தவிர இரண்டு மாதங்களாக தன்னைப் பார்க்க வரவில்லையே என்ற கோபம் அவளுக்கு.

வருவார் வருவார் என ஒரு மாதமாக அவருக்காக காத்திருந்தவள் அவர் வரவில்லை என்றானதும், அவரே அழைப்பு விடுத்தால் கூட 'நான் கோபமா இருக்கேன்..' எனக் கூறி விட்டு அழைப்பை துண்டித்து விடுகிறாள் அவள். அவளின் சிறுப் பிள்ளைத் தனமான கோபத்தை சகிக்க முடியாமல் தான் பழனிவேல் தன் வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு மகளைக் காண இங்கே ஓடி வந்திருப்பது.

விஜய் பழனிவேலுக்காக தேநீர் போட்டு எடுத்து வரும் போதும் கூட, கௌதமி கோபமாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதும் பழனி முழித்துக் கொண்டிருப்பதும் தான் தெரிந்தது அவனுக்கு.

அவளின் கோபத்துக்கான காரணம் என்னவென்று அறிந்தபடியால் அவர்களே சமாளித்துக் கொள்ளட்டும் என நினைத்தவன் தேநீரை பழனிக்கு நீட்டி விட்டு, கொதிக்க கொதிக்க ஆவி பறக்க இருந்த காபியை ஆற்றி, இள சூட்டோடு அதை கௌதமியிடம் நீட்டினான்.

கொதிக்கும் காபியை குடித்து விட்டு இரண்டு நாட்கள் வாய் வெந்து விட்டது எனக் கூறி அவள் செய்த அலப்பறைகளில் நொந்து போன விஜய், அதன் பிறகு காபியை ஆற்றாமல் அவளிடம் நீட்டவே மாட்டான்.

"சாரிடா பாப்பா. இனிமே வாரா வாரம் என்ன வேலை இருந்தாலும் அதையெல்லாம் ஒரு ஓரமா தூக்கிப் போட்டுட்டு நான் உன்னைப் பார்க்க வந்திடுவேன்.."

"தப்புதான். வரேன்னு சொல்லிட்டு வராம இருந்திருக்கக் கூடாது. இனிமே வருவேன்.."

"அச்சோ ப்ளீஸ்டா பாப்புமா.."

"பப்பு கூட கோபமா இருந்தா என் கன்னத்துல ரெண்டு கிள்ளு கூட கிள்ளிக்கோ.. ஆனா ப்ளீஸ்டாம்மா.. பப்பு கூட பேசாம இருக்காத.." கோபம் வந்தால் அவரின் கன்னம் கன்றிப் போகும் அளவுக்கு கிள்ளியே ஒரு வழி செய்து விடுவாள் என்பதை அறிந்திருந்தவர் இப்படிக் கூறினார்.

தனக்கு தெரிந்த விதத்தில் எல்லாம் மன்னிப்புக் கேட்டுக் களைத்துப் போன பழனி, கல்லுளி மங்கன் போல் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தவளை கோபத்துடன் முறைத்தார்.

"சரி போ.. நீ பப்பு கூட பேச மாட்டியன்னா நான் எதுக்கு இன்னும் இங்க இருக்கணும்? நான் போறேன்.." தேநீர் தீர்ந்த வெற்றுக் கப்பை மேஜை மேல் வைத்து விட்டு எழுந்து நிற்க, அவ்வளவு நேரமும் இருவரின் கொஞ்சல் கெஞ்சல்களை ரசனையுடன் பார்த்திருந்த விஜய், நிஜமாகவே சென்று விடுவாரோ என அஞ்சி,

"அய்யோ மாமா.. அவ ஏதோ கோபத்தில பேசாம இருக்கா.. அதுக்குன்னு இப்டியே போய்ட போறீங்களா.. நீங்க உக்காருங்க.. அட! உக்காருங்கனு சொல்றேன் இல்ல.." எனக் கூறி அவரை அமர்ந்திருந்த இடத்திலே மீண்டும் அமரச் செய்தான்.

"பார்த்தீங்களா.. பார்த்தீங்களா.. அவரு என்னைப் பார்க்கவே வரலன்னு நான்தான் அவர்ட்ட பேசாம கோபமா மூஞ்சை தூக்கி வைச்சுட்டு இருக்கணும். ஆனா அவரு கோபபட்டு அப்போ நான் போறேன்னு சொல்லுறாரு.. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல.." என்ற கௌதமி, உதடு பிதுக்கி அழத் தொடங்கி விட்டாள்.

"பப்புக்கு என்மேல பாசமே இல்ல. என்னைப் பார்க்க வராரும் இல்ல. இப்போ நான் கோபமா பேசுனதும் நான் போறேன்னு சொல்லிட்டு எழுந்து போய்டப் போறாரு.." கண்களைக் கசக்கியபடி கூறியவளையும், பாவமாக முழித்து நின்றிருந்த பழனியையும் மாறி மாறிப் பார்த்த விஜய்க்கு, பழனியின் நிலை கண்டு சிரிப்பு வந்து விட்டது.

ஆனால், இப்போது பழனியின் நிலையில் தானும் தான் இருக்கிறேன் என்பதை அவன் மறந்து விட்டது தான் ஆச்சரியம் 😂

"பப்பு வந்ததும் ஏன் இனியாவை இவ்ளோ நாள் பார்க்க வரலேன்னு கேட்டு அவரை கோபமா முறைப்பேன்னு நீங்களும் தானே சொன்னிங்க? இப்போ அவரு வந்ததும் எதுவுமே பேசாம உம்முனு இருக்கிங்க.." சைடு கேப்பில் அவனையும் கோர்த்து விட்டாள் கௌதமி.

'அடப்பாவமே! நான் ஒரு வார்த்தைக்கு சொன்னதை யாபகத்தில வைச்சுட்டு நின்னு நேரம் பார்த்து போட்டு கொடுக்குறாளே..' என நினைத்து நாவை வாய்க்குள் சுழற்றிய விஜய், தன்னையே குறுகுறுவென்று பார்த்திருந்த பழனியைப் பார்த்து சமாளிப்பாக சிரித்து வைத்தான்.

"நீங்க பேசிட்டே இருங்க.." என்ற விஜய், அவளாவது அவளது பப்புவாவது.. இடையில் நான் எதற்கு மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டும் என எண்ணி மெதுவாக அங்கிருந்து நழுவி அறைக்குள் புகுந்து கொண்டு விட்டான்.

அவன் குளித்து முடித்து ஸ்டேஷன் செல்வதற்கு ஆயத்தமாகி அறையை விட்டு வெளியே வரும் போது, பழனியின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிக் கொண்டிருந்தாள் கௌதமி.

'அதுக்குள்ள சமாதானப் படுத்திட்டாரா?' என வியந்து கண்களை உருட்டியவன், 'இனியாவை ஐந்தே நிமிஷத்துல சமாதானப் படுத்தறது எப்படினு இவர் போக முன்னால கேட்டு தெரிஞ்சிக்கணும்..' என நினைத்தபடி தொண்டையை செருமினான்.

அவனின் செருமல் சத்தத்தில் அவன் புறமாக திரும்பி அமர்ந்து அழகாக புன்னகைத்த கௌதமி, "பப்பு பாவம்ங்க.. நீங்க அவரை கோபமா முறைக்காதீங்க.." என்று கூற, பழனியைப் பார்த்தபடி சரியென்று தலை அசைத்த விஜய், இருவரையும் சாப்பிடுவதற்கு அழைத்தான்.

நாட்டைக் காக்கப் போராடும் காவலனாய் கம்பீரத்துடன் நிமிர்ந்து நின்றவனை பெருமை பொங்கப் பார்த்த பழனிவேல், பழக்க தோஷத்தில் பழனியை மறந்து கௌதமியின் தட்டிலும் உணவைப் பரிமாறியவனை சந்தோஷத்துடன் பார்த்தார். அவன் கௌதமியின் மேல் வைத்திருக்கும் அக்கறையைக் கண்டு அகம் மகிழ்ந்து உணவருந்தினார்.

"இன்னைக்கு நீ கிளாஸ் வர மாட்டேனு வர்ஷினிக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்மா.. பப்பு வந்திருக்காருல.. அவரோடயே வீட்டில இரு.." என்று, துள்ளி விளையாடும் மான்குட்டியாய் துள்ளலுடன் அறைக்குள் நுழைந்த கௌதமியிடம் கூறிய விஜய், முகம் மலர்ந்து தலை ஆட்டியவளின் மூக்கை ஆட்டி விளையாடி விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

பழனியிடம் கூறிக் கொண்டு வெளியே நடந்தவன் ஜீப் சாவியை எடுக்க மறந்து விட்டேனே என நினைத்தபடி வீட்டினுள் நுழையும் போது,

"அவருக்கு என்னை ரொம்ப புடிக்கும் பப்பு. உங்களை மாதிரியே அவரு என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறாரு. அவரை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு" என சமையலறையில், பழனியிடம் அவள் கூறிக் கொண்டிருப்பது கேட்டது அவனுக்கும்.

மின்னல் கீற்றாய் ஒரு சிறு புன்னகை மலர்ந்து மறைந்தது அவனது உதடுகளில்..

'உன் அம்மா இல்லேன்னா என்ன கண்ணா.. அவளைப் போலவே உன்னை நான் ரொம்ப நல்லா பார்த்துக்கறேன் இல்ல? உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும் கண்ணா..' என்ற யமுனாவின் குரல் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்து அவனைக் கோபப்படுத்த, சுவற்றில் கீ ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த சாவியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினான். முகம் பாறையை விட இறுகிக் கறுத்துப் போய் இருந்தது.

நாலாபுறமும் ஆளுயர சுவர் எழுப்பப்பட்டு மூவர் மட்டுமே நிம்மதியாய் அமர்ந்து மூச்சு விடக் கூடிய அளவு சிறிய குடோன் அது.

ஒரு பக்க சுவற்றில் இருந்த இரும்பு ஜன்னல் துருப்பிடித்து, வருடக் கணக்கில் திறக்கப் படாத காரணத்தினால் இறுகிப் போய் இருந்தது. சங்கிலி போட்டு கட்டி இழுத்து மூடியிருந்த கதவின் ஒரு சிறு துளை வழியாக, கதிரோனின் குழந்தைகள்(கதிர்கள்) அறைக்குள் பாய்ந்து, இருண்டு போயிருந்த அவ்வறையை சற்றே வெளிச்சப்படுத்திக் கொண்டிருந்தது.

அங்கே, ஒரு பழங்காலத்து இரும்புக் கதிரையில் அமர வைக்கப்பட்டு, கதிரையின் கைப்பிடியோடு சேர்த்து கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தான் ஒருவன்.

அடி வாங்கிய காரணத்தினால் உடலின் ஆங்காங்கே இரத்தம் உறைந்து, அறை வாங்கியதில் உதட்
டோரம் கிழிந்து இரத்தம் வழிந்து கொண்டிருக்க, மயக்கத்திலும் கூட வலி தாளாமல் முனகினான் அவன்.

நேற்று இரவு விஜய் அவனை மண்ணில் போட்டு உதைத்த உதை அப்படி! மயக்கத்திலும் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டான் ராகேஷ்.

தொடரும்.
 
Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
இந்த ராகேஷ் பேரு எங்கையோ கேட்ட நியாபகம்.ஆதுவோட ஹஸ்பெண்டா.இவன்தான் கார்த்திக் செல்லத்தை ஏதும் பண்ணிருப்பானா🤔🤔😔.கடைசில சஸ்பென்ஸ் வைச்சிட்டிங்களே ஆறே.யமுனா மேல வேற கோவமா இருக்கான் விஜய்.ஒருவழியா பப்புகிட்ட பேசிட்டடா😂😂
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
2,018
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️

ஆத்தி, இப்போவே கண்ண கட்டுதே எப்படித்தான் பழனி, கௌதமி பிள்ளைய இத்திணிவருசம் சமாளிச்சு வளர்த்தாரோ 🙄🙄🙄🙄🙄.கட்டாயம் பழனிக்கு விருது குடுக்கணும் சகி 👍,, விருது பேரு, பேரு என்ன வைக்கலாம் 🤔🤔🤔🤔அச்சோ ஒண்ணுமே தோணமாட்டீங்குது, பரவால்ல பரவால்ல லூசுல விட்ருவோம் அப்புறம் குடுத்துக்கலாம் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அடுத்து பப்புவுக்கு குடுக்குறமாதிரி கொஞ்சம் வருஷம் கழித்து நம்ம போலீஸ் ஆஃபீஸர் பப்லுவுக்கு ஒரு விருது யோசிக்கணும் 😁😁😁😁😁😁😁
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
இந்த ராகேஷ் பேரு எங்கையோ கேட்ட நியாபகம்.ஆதுவோட ஹஸ்பெண்டா.இவன்தான் கார்த்திக் செல்லத்தை ஏதும் பண்ணிருப்பானா🤔🤔😔.கடைசில சஸ்பென்ஸ் வைச்சிட்டிங்களே ஆறே.யமுனா மேல வேற கோவமா இருக்கான் விஜய்.ஒருவழியா பப்புகிட்ட பேசிட்டடா😂😂
❤️😍😍😍 நன்றி சகி
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️

ஆத்தி, இப்போவே கண்ண கட்டுதே எப்படித்தான் பழனி, கௌதமி பிள்ளைய இத்திணிவருசம் சமாளிச்சு வளர்த்தாரோ 🙄🙄🙄🙄🙄.கட்டாயம் பழனிக்கு விருது குடுக்கணும் சகி 👍,, விருது பேரு, பேரு என்ன வைக்கலாம் 🤔🤔🤔🤔அச்சோ ஒண்ணுமே தோணமாட்டீங்குது, பரவால்ல பரவால்ல லூசுல விட்ருவோம் அப்புறம் குடுத்துக்கலாம் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அடுத்து பப்புவுக்கு குடுக்குறமாதிரி கொஞ்சம் வருஷம் கழித்து நம்ம போலீஸ் ஆஃபீஸர் பப்லுவுக்கு ஒரு விருது யோசிக்கணும் 😁😁😁😁😁😁😁
😂😂😂 நீங்க யோசிச்சு வைங்க சகி. இறுதியில கொடுத்துரலாம் 😂😂 நன்றி சகி.
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32
அன்று கௌதமியை பார்ப்பதற்காக ஊரிலிருந்து வந்திருந்தார் பழனிவேல்.

கதிரோன் கீழ்வானில் உதிக்கத் தொடங்கியிருந்த அதிகாலை வேளையில் வீட்டின் மணி அடிக்கவும், சமையலறையில் விஜய் சமைத்துக் கொண்டிருப்பதால் அவளே சென்று கதவை திறந்து விட்டாள்.

வாசலில் நின்றிருந்த பழனியைக் கண்டதும் திகைப்புடன் விழி விரித்தவள் உடனே தன் முகபாவனைகளை மாற்றிக் கொண்டு, "யாருங்க நீங்க? யாரை தேடுறீங்க.." முகத்தை தோளில் இடித்தபடி கேட்டாள்.

இடுப்பில் கை வைத்து அவளைத் தீ என முறைத்த பழனி, "பாப்பா.. எப்டிமா இருக்க?" அன்பே ஒழுக, உருகும் குரலில் கேட்க, அவருக்கு பதில் கூற வாய் திறப்பதற்குள் விஜய்யே ஹாலுக்கு வந்து விட்டான்.

"யாருமா வந்திருக்காங்க?" காலை உணவுக்காக செய்திருந்த உப்புமாவை ஹாலின் ஒரு மூலையில் இருந்த மேஜை மேல் வைத்தவாறு கேட்டவன் வாசலை மறைத்தபடி நின்றிருந்த கௌதமியைத் தாண்டி தன் விழிகளை சுழல விட்டான்.

"தெரியல. யாரோ வந்திருக்காங்க.." பழனியைப் பாராமல் முகம் திருப்பிக் கொண்டு கூறியவள் வாசலை விட்டு சற்று தள்ளி நின்று விஜயின் புறமாகத் திரும்பினாள். அதற்குள் வாசலில் கௌதமியை முறைத்தபடி நின்றிருந்த பழனியைக் கண்ட விஜய், விரைந்து அவர்களை நெருங்கினான்.

"யாரோ வந்திருக்காங்க. உங்களைத் தேடி தான் வந்திருப்பாங்க.. உள்ளே வர சொல்லுங்களேன்.." பழனியின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் விஜயிடம் கூறி விட்டு விறுவிறுவென்று நகர்ந்து சோபாவில் கன்னத்தில் கை குற்றி அமர்ந்து கொண்டாள் கௌதமி.

அவளை முறைக்க முயன்று தோற்றுப் போன விஜய், "உள்ளே வாங்க மாமா.. அவ உங்க கிட்ட விளையாடறானு நினைக்கிறேன்.." என்று கூறி, மரியாதை நிமித்தமாக சற்றே தள்ளி நின்று அவருக்கு உள்ளே செல்ல வழி விட,

"சவுக்கியமா இருக்கிங்களா மாப்பிளை?" என்று கேட்டவாறே புன்னகை முகமாய் வீட்டினுள் நுழைந்தார் பழனி.

"ரொம்ப நல்லா இருக்கோம் மாமா.. அங்க எல்லாம் நலந்தானா? நீங்க எப்படி இருக்கிங்க.." என்று கேட்டவர் சோபாவில் இருந்த கௌதமியின் துப்பட்டாவைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு அவரை அமருமாறு செய்கை செய்தான். பழனி தன் அருகே அமர்ந்து விடக் கூடாது என்பதற்காக துப்பட்டாவை கழற்றி சோபாவில் மேல் விட்டெறிந்ததே அவள் தான் என்பதை விஜயும் தான் அறிவான்.

"உக்காருங்க மாமா.. இதோ வந்திடறேன்.." என்று கூறிவிட்டு விஜய் அங்கிருந்து நகர்ந்ததும் அவளின் புறமாக திரும்பி அமர்ந்த பழனி,"வந்திருக்கிறது உன் பப்பு.. எப்படி இருக்கீங்கன்னு கேட்க மாட்டியாம்மா.. பப்பு கூட என்ன கோபம் உனக்கு?" என்று சோகமாக கேட்க,

அவரை மேலிருந்து கீழாக பார்த்து அவர் சுகமாய், திடமாய் தான் இருக்கிறார் என்பதை ஆறாவது முறையாக உறுதிப் படுத்திக் கொண்டவள், "உங்க கிட்ட பேச எனக்கு எதுவுமே இல்லையே.. ஆமா நீங்க யாரைப் பார்க்க இங்கே வந்திருக்கீங்க?" தாடையில் விரல் தட்டியபடி யோசனையுடன் கேட்டாள்.

"என் பாப்புக் குட்டியை தவிர வேறு யாரு இருக்காங்க எனக்கு? நான் என் பாப்பாவைப் பார்க்க தான் இங்கே வந்தேனாக்கும்.. ஆனா பாப்புக் குட்டி தான் என்கிட்ட பேசாம உர்ருனு மூஞ்சை தூக்கி வைச்சுட்டு இருக்காள். ஒருவேளை அவளோட பப்பு இங்க வந்தது அவளுக்கு பிடிக்கலையோ என்னவோ.."

"ஆமா பிடிக்கல. ரெண்டு வாரத்துல உன்னை பார்க்க வருவேன் பாப்பானு சொன்னவரு ரெண்டு மாசம் கழிச்சு இங்க வந்திருக்கிறது எனக்கு பிடிக்கல.. ரெண்டு மாசமா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்.. ஆனா நீங்க என்னை மிஸ் பண்ணவே இல்லனு சொல்லுவீங்க.." என்றவள் அவருக்கு புற முதுகு காட்டி அமர்ந்து கொள்ள, இவளை எப்படி சமாதானம் செய்வது எனப் புரியாமல் முழித்து நின்றார் பழனிவேல்.

வருகிறேன் வருகிறேன் என்று கூறினாரே தவிர இரண்டு மாதங்களாக தன்னைப் பார்க்க வரவில்லையே என்ற கோபம் அவளுக்கு.

வருவார் வருவார் என ஒரு மாதமாக அவருக்காக காத்திருந்தவள் அவர் வரவில்லை என்றானதும், அவரே அழைப்பு விடுத்தால் கூட 'நான் கோபமா இருக்கேன்..' எனக் கூறி விட்டு அழைப்பை துண்டித்து விடுகிறாள் அவள். அவளின் சிறுப் பிள்ளைத் தனமான கோபத்தை சகிக்க முடியாமல் தான் பழனிவேல் தன் வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு மகளைக் காண இங்கே ஓடி வந்திருப்பது.

விஜய் பழனிவேலுக்காக தேநீர் போட்டு எடுத்து வரும் போதும் கூட, கௌதமி கோபமாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதும் பழனி முழித்துக் கொண்டிருப்பதும் தான் தெரிந்தது அவனுக்கு.

அவளின் கோபத்துக்கான காரணம் என்னவென்று அறிந்தபடியால் அவர்களே சமாளித்துக் கொள்ளட்டும் என நினைத்தவன் தேநீரை பழனிக்கு நீட்டி விட்டு, கொதிக்க கொதிக்க ஆவி பறக்க இருந்த காபியை ஆற்றி, இள சூட்டோடு அதை கௌதமியிடம் நீட்டினான்.

கொதிக்கும் காபியை குடித்து விட்டு இரண்டு நாட்கள் வாய் வெந்து விட்டது எனக் கூறி அவள் செய்த அலப்பறைகளில் நொந்து போன விஜய், அதன் பிறகு காபியை ஆற்றாமல் அவளிடம் நீட்டவே மாட்டான்.

"சாரிடா பாப்பா. இனிமே வாரா வாரம் என்ன வேலை இருந்தாலும் அதையெல்லாம் ஒரு ஓரமா தூக்கிப் போட்டுட்டு நான் உன்னைப் பார்க்க வந்திடுவேன்.."

"தப்புதான். வரேன்னு சொல்லிட்டு வராம இருந்திருக்கக் கூடாது. இனிமே வருவேன்.."

"அச்சோ ப்ளீஸ்டா பாப்புமா.."

"பப்பு கூட கோபமா இருந்தா என் கன்னத்துல ரெண்டு கிள்ளு கூட கிள்ளிக்கோ.. ஆனா ப்ளீஸ்டாம்மா.. பப்பு கூட பேசாம இருக்காத.." கோபம் வந்தால் அவரின் கன்னம் கன்றிப் போகும் அளவுக்கு கிள்ளியே ஒரு வழி செய்து விடுவாள் என்பதை அறிந்திருந்தவர் இப்படிக் கூறினார்.

தனக்கு தெரிந்த விதத்தில் எல்லாம் மன்னிப்புக் கேட்டுக் களைத்துப் போன பழனி, கல்லுளி மங்கன் போல் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தவளை கோபத்துடன் முறைத்தார்.

"சரி போ.. நீ பப்பு கூட பேச மாட்டியன்னா நான் எதுக்கு இன்னும் இங்க இருக்கணும்? நான் போறேன்.." தேநீர் தீர்ந்த வெற்றுக் கப்பை மேஜை மேல் வைத்து விட்டு எழுந்து நிற்க, அவ்வளவு நேரமும் இருவரின் கொஞ்சல் கெஞ்சல்களை ரசனையுடன் பார்த்திருந்த விஜய், நிஜமாகவே சென்று விடுவாரோ என அஞ்சி,

"அய்யோ மாமா.. அவ ஏதோ கோபத்தில பேசாம இருக்கா.. அதுக்குன்னு இப்டியே போய்ட போறீங்களா.. நீங்க உக்காருங்க.. அட! உக்காருங்கனு சொல்றேன் இல்ல.." எனக் கூறி அவரை அமர்ந்திருந்த இடத்திலே மீண்டும் அமரச் செய்தான்.

"பார்த்தீங்களா.. பார்த்தீங்களா.. அவரு என்னைப் பார்க்கவே வரலன்னு நான்தான் அவர்ட்ட பேசாம கோபமா மூஞ்சை தூக்கி வைச்சுட்டு இருக்கணும். ஆனா அவரு கோபபட்டு அப்போ நான் போறேன்னு சொல்லுறாரு.. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல.." என்ற கௌதமி, உதடு பிதுக்கி அழத் தொடங்கி விட்டாள்.

"பப்புக்கு என்மேல பாசமே இல்ல. என்னைப் பார்க்க வராரும் இல்ல. இப்போ நான் கோபமா பேசுனதும் நான் போறேன்னு சொல்லிட்டு எழுந்து போய்டப் போறாரு.." கண்களைக் கசக்கியபடி கூறியவளையும், பாவமாக முழித்து நின்றிருந்த பழனியையும் மாறி மாறிப் பார்த்த விஜய்க்கு, பழனியின் நிலை கண்டு சிரிப்பு வந்து விட்டது.

ஆனால், இப்போது பழனியின் நிலையில் தானும் தான் இருக்கிறேன் என்பதை அவன் மறந்து விட்டது தான் ஆச்சரியம் 😂

"பப்பு வந்ததும் ஏன் இனியாவை இவ்ளோ நாள் பார்க்க வரலேன்னு கேட்டு அவரை கோபமா முறைப்பேன்னு நீங்களும் தானே சொன்னிங்க? இப்போ அவரு வந்ததும் எதுவுமே பேசாம உம்முனு இருக்கிங்க.." சைடு கேப்பில் அவனையும் கோர்த்து விட்டாள் கௌதமி.

'அடப்பாவமே! நான் ஒரு வார்த்தைக்கு சொன்னதை யாபகத்தில வைச்சுட்டு நின்னு நேரம் பார்த்து போட்டு கொடுக்குறாளே..' என நினைத்து நாவை வாய்க்குள் சுழற்றிய விஜய், தன்னையே குறுகுறுவென்று பார்த்திருந்த பழனியைப் பார்த்து சமாளிப்பாக சிரித்து வைத்தான்.

"நீங்க பேசிட்டே இருங்க.." என்ற விஜய், அவளாவது அவளது பப்புவாவது.. இடையில் நான் எதற்கு மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டும் என எண்ணி மெதுவாக அங்கிருந்து நழுவி அறைக்குள் புகுந்து கொண்டு விட்டான்.

அவன் குளித்து முடித்து ஸ்டேஷன் செல்வதற்கு ஆயத்தமாகி அறையை விட்டு வெளியே வரும் போது, பழனியின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிக் கொண்டிருந்தாள் கௌதமி.

'அதுக்குள்ள சமாதானப் படுத்திட்டாரா?' என வியந்து கண்களை உருட்டியவன், 'இனியாவை ஐந்தே நிமிஷத்துல சமாதானப் படுத்தறது எப்படினு இவர் போக முன்னால கேட்டு தெரிஞ்சிக்கணும்..' என நினைத்தபடி தொண்டையை செருமினான்.

அவனின் செருமல் சத்தத்தில் அவன் புறமாக திரும்பி அமர்ந்து அழகாக புன்னகைத்த கௌதமி, "பப்பு பாவம்ங்க.. நீங்க அவரை கோபமா முறைக்காதீங்க.." என்று கூற, பழனியைப் பார்த்தபடி சரியென்று தலை அசைத்த விஜய், இருவரையும் சாப்பிடுவதற்கு அழைத்தான்.

நாட்டைக் காக்கப் போராடும் காவலனாய் கம்பீரத்துடன் நிமிர்ந்து நின்றவனை பெருமை பொங்கப் பார்த்த பழனிவேல், பழக்க தோஷத்தில் பழனியை மறந்து கௌதமியின் தட்டிலும் உணவைப் பரிமாறியவனை சந்தோஷத்துடன் பார்த்தார். அவன் கௌதமியின் மேல் வைத்திருக்கும் அக்கறையைக் கண்டு அகம் மகிழ்ந்து உணவருந்தினார்.

"இன்னைக்கு நீ கிளாஸ் வர மாட்டேனு வர்ஷினிக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்மா.. பப்பு வந்திருக்காருல.. அவரோடயே வீட்டில இரு.." என்று, துள்ளி விளையாடும் மான்குட்டியாய் துள்ளலுடன் அறைக்குள் நுழைந்த கௌதமியிடம் கூறிய விஜய், முகம் மலர்ந்து தலை ஆட்டியவளின் மூக்கை ஆட்டி விளையாடி விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

பழனியிடம் கூறிக் கொண்டு வெளியே நடந்தவன் ஜீப் சாவியை எடுக்க மறந்து விட்டேனே என நினைத்தபடி வீட்டினுள் நுழையும் போது,

"அவருக்கு என்னை ரொம்ப புடிக்கும் பப்பு. உங்களை மாதிரியே அவரு என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறாரு. அவரை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு" என சமையலறையில், பழனியிடம் அவள் கூறிக் கொண்டிருப்பது கேட்டது அவனுக்கும்.

மின்னல் கீற்றாய் ஒரு சிறு புன்னகை மலர்ந்து மறைந்தது அவனது உதடுகளில்..

'உன் அம்மா இல்லேன்னா என்ன கண்ணா.. அவளைப் போலவே உன்னை நான் ரொம்ப நல்லா பார்த்துக்கறேன் இல்ல? உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும் கண்ணா..' என்ற யமுனாவின் குரல் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்து அவனைக் கோபப்படுத்த, சுவற்றில் கீ ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த சாவியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினான். முகம் பாறையை விட இறுகிக் கறுத்துப் போய் இருந்தது.

நாலாபுறமும் ஆளுயர சுவர் எழுப்பப்பட்டு மூவர் மட்டுமே நிம்மதியாய் அமர்ந்து மூச்சு விடக் கூடிய அளவு சிறிய குடோன் அது.

ஒரு பக்க சுவற்றில் இருந்த இரும்பு ஜன்னல் துருப்பிடித்து, வருடக் கணக்கில் திறக்கப் படாத காரணத்தினால் இறுகிப் போய் இருந்தது. சங்கிலி போட்டு கட்டி இழுத்து மூடியிருந்த கதவின் ஒரு சிறு துளை வழியாக, கதிரோனின் குழந்தைகள்(கதிர்கள்) அறைக்குள் பாய்ந்து, இருண்டு போயிருந்த அவ்வறையை சற்றே வெளிச்சப்படுத்திக் கொண்டிருந்தது.

அங்கே, ஒரு பழங்காலத்து இரும்புக் கதிரையில் அமர வைக்கப்பட்டு, கதிரையின் கைப்பிடியோடு சேர்த்து கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தான் ஒருவன்.

அடி வாங்கிய காரணத்தினால் உடலின் ஆங்காங்கே இரத்தம் உறைந்து, அறை வாங்கியதில் உதட்
டோரம் கிழிந்து இரத்தம் வழிந்து கொண்டிருக்க, மயக்கத்திலும் கூட வலி தாளாமல் முனகினான் அவன்.

நேற்று இரவு விஜய் அவனை மண்ணில் போட்டு உதைத்த உதை அப்படி! மயக்கத்திலும் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டான் ராகேஷ்.

தொடரும்.
Rakesh adhuvoda husband la 😳😳😳😳 enakku enamo apdi than nyabhagam 🧐🧐.
Story arumai 👌👌👌👌👌
 
Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
646
ராகேஷ் தான் கார்த்திக்கை கொன்றானா.
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
பப்பு நிலை 🤭🤭🤭🤭

யமுனாவோட பேச்சுக்கு ஏன் இத்தனை கோவம் 🤔🤔🤔🤔

ராகேஷா 🤨🤨🤨 இவன் ஆதுவோட புருஷன் தானே 🤔🤔🤔 இவன் இங்க என்ன பண்ணுறான் 🧐🧐🤨
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
ராகேஷ் ? ஓ மை காட். இந்த நாதாரி சொத்துக்காக கார்த்திக்கை கொலை பண்ணிட்டானா? விஜய் கல்யாணம் பண்ணிக்க மாட்டான் கார்த்திக் இல்லைனா சொத்து முழுதும் தனக்கு வரும் என்ற எண்ணமோ ? இல்லை இவன் கண்மணி ட சகோதரரங்கள் வீட்டு வாரிசோ?
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
இந்த ராகேஷ் டுவிஸ்ட் எதிர்பார்க்கல? இவனோட டயலோக்ஸ் ஏன் முன்னாடி கதை ல இல்லை னு நினைச்சன் இப்போ தான் புரியுது
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
பப்பு நிலை 🤭🤭🤭🤭

யமுனாவோட பேச்சுக்கு ஏன் இத்தனை கோவம் 🤔🤔🤔🤔

ராகேஷா 🤨🤨🤨 இவன் ஆதுவோட புருஷன் தானே 🤔🤔🤔 இவன் இங்க என்ன பண்ணுறான் 🧐🧐🤨
காரணம் இருக்கும் சகி..
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
இந்த ராகேஷ் டுவிஸ்ட் எதிர்பார்க்கல? இவனோட டயலோக்ஸ் ஏன் முன்னாடி கதை ல இல்லை னு நினைச்சன் இப்போ தான் புரியுது
அப்போ அநெக்ஸ்பெக்டட் டுவிஸ்ட் வெச்சிருக்கேன் போல 😜🙈🙈
 
Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
கௌதமி...பப்பு கூட சமாதானம் ஆகிட்டாங்க... 🥰🥰

ராகேஷ்... 😡

அவன்தான் வேணும்னே... 😡😡😡

அவனுக்கு சரியான தண்டனை கொடுக்கணும்... 😡😡
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கௌதமி...பப்பு கூட சமாதானம் ஆகிட்டாங்க... 🥰🥰

ராகேஷ்... 😡

அவன்தான் வேணும்னே... 😡😡😡

அவனுக்கு சரியான தண்டனை கொடுக்கணும்... 😡😡
kandippa sagii.. avanuku sariyana punishment koduppen :)❣️
 
Top