"நைட் திரும்பி வந்திடுவேன்னு சொல்லிட்டு பக்கத்து ஊர் வரைப் போனவரை இன்னுமே காணலம்மா.. நிறைய வாட்டி கால், நிறைய மெசேஜஸ் பண்ணிட்டேன். எதுக்குமே பதில் இல்ல. எனக்கு பயமா இருக்கும்மா.." என தாயிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் ஆதர்யா.
"வேலை ஜாஸ்தி ஆகியிருக்குமோ என்னவோ.. இதுக்குலாமா போய் கவலைப் படுவாங்க? குழந்தை இப்போ கண்ணு முழிச்சிட போறான். போ.. போய் அவனைக் கவனி.." என ஆறுதல் சொன்ன யமுனா, அவளை அறைக்கு அனுப்பி வைத்து விட்டு செல்வத்தை தேடிச் சென்றாள். அவளுக்கும் ஆதர்யாவின் கவலை முகம் மிகவும் சோகமளித்தது.
"என்னாச்சு யமுனா?" அவளது சோக முகம் கண்டதும் செல்வம் யோசனையுடன் கேட்க,
"ராகேஷ் மாப்பிளை பக்கத்து ஊருக்கு போயிட்டு வரேன்னுட்டு போனவர் மூணு நாளாகியும் இன்னுமே திரும்பி வரலையாம்னு ஆது ரொம்ப ஃபீல் பண்ணறா.. மாப்பிளைக்கு என்னாச்சோ ஏதாச்சோனு மனசு பதறுது!" என்றபடி அவரருகில் அமர்ந்தாள்.
"நான் தேடி பார்க்கறேன் யமுனா.. அவளை ஃபீல் பண்ண வேணாம்னு சொல்லு.." என்ற செல்வநாயகம் யோசனையுடன் ஃபோனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அறைக்கு வந்த ஆதர்யா, ராகேஷின் ஃபோனுக்கு விடாமல் அழைப்பு விடுத்தாள்.
இரண்டு நாட்களாகவே அரைமணி நேரத்துக்கு ஒரு முறை அவனுக்கு அழைத்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் பதில் என்னவோ பூஜ்ஜியம் தான். 'சுவிட்ச் ஆஃப்' என கூறியதையே திரும்ப திரும்பக் கூறும் ஃபோனைப் பார்த்து கோபமடைந்தவள் அதை முழு விசையுடன் தூக்கி கட்டிலில் எறிந்து விட்டு மகனின் அருகில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
அவளின் தேடலுக்குறியவனோ இங்கு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த இருட்டறைக்குள் மயக்கமாய் இருந்தான். இரண்டு நாட்களாக ஒரு வேளை சாப்பாடு மட்டும் தான் அவனுக்கு கிடைக்கிறது. அதுவும் கைப் பிடி அளவு! அதை உண்டு உயிர் வாழ்வதே பெரிதென்று தான் தோன்றியது அவனுக்கு.
'தட் தட்..' என யாரோ அந்த குடோனுக்கு வெளியே நடக்கும் சத்தமும், மெலிதான பேச்சுக் குரல் சத்தமும் அரைமயக்கத்தில் முனகிக் கொண்டிருந்தவனுக்கு கேட்டதும் இதயம் ஒரு நொடி தன் துடிப்பையே நிறுத்தி விட்டது.
இரண்டு நாட்களுக்கு முன் வாங்கிய அடியால் ஏற்பட்ட உடல் வலியே இன்னும் தீரவில்லை. அதற்குள் இந்த அரக்கன் தன்னை அடித்தே கொன்று விடுவானோ என அஞ்சி நிற்கும் போதே குடோன் திறக்கப்பட்டு, அதே அக்மார்க் கேலிப் புன்னகையோடு அவனருகில் வந்து நின்றான் விஜய ஆதித்யன்.
"ஐயோ.. மச்சான் நீங்களா இது? உங்களை யாரு இந்த குடோனுல அடைச்சு வைச்சிருக்கிறது? யோவ்.." என பதட்டமாகக் கூறி குடோனின் வாசல் புறமாக திரும்பி குரல் கொடுத்தான் அவன், ராகேஷின் எரிச்சல் பார்வையை ரசித்தபடி.
"கூப்பிட்டிங்களா சார்?" என்ற படி விஜயின் அழைப்புக்கு அவனருகே ஓடி வந்து நின்றான் கௌஷிக்!
"ச்சு! யாருயா என் மச்சானை இப்டி அடிச்சு கொடுமைப் படுத்தினது? உடம்பு முழுக்க காயம். பார்க்கறப்பவே பதறுதுல்ல.." போலிப் பரிதாபத்துடன் கூறியவன் வலது கையை இடுப்பில் குற்றி, தாடையை இடது கையால் தேய்த்து விட்டான்.
கௌசிக் அவன் கூறப் போவதை கேட்பதற்காக காதை கூர்மையாக்கிக் கொண்டான். அவனுக்கு என்றுமே விஜய்யை பிடிக்கும். அவனின் ஆளுமையும், எதிரியை அடக்கும் அணுகுமுறைகளும், கூடவே அவனின் குணப் பண்புகளும் கௌசிக்கிற்கு அவன் மேல் பெருமதிப்பை ஏற்படுத்தி இருந்தது. நல்லவனுக்கு தேவன், கெட்டவர்களுக்கு எமன் இவன் என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருந்தான்.
"மச்சானுக்கு கை கட்டு, கால் கட்டு போட்டு நானே ட்ரீட்மென்ட்டை பார்த்துக்கறேன். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க கௌஷிக்! போகும் போது குடோன் கதவையும் மூடிட்டே போங்க.."
ராகேஷின் மீதிருந்த பார்வையை அகற்றாமலே அவன் கூற, சரியென்ற மற்றவன் ராகேஷை பரிதாபத்துடன் பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான். போகும் போது விஜய் கூறியது போல் குடோனின் கதவடைக்கவும் மறக்கவில்லை.
"எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே கடத்தி வைப்ப.. உன் தங்கச்சிக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?"
முழு தைரியத்தையும் திரட்டிக் கொண்டு சீறியவனை வியப்புடன் ஏறிட்ட விஜய், "உன்னை கடத்த கூட தைரியம் இருக்கணுமா என்ன.. தங்கச்சியை விடு. அவளை அப்பறம் பொறுமையா உக்காந்து சமாதானம் பண்ணிக்கலாம். இப்போ உன்னை கடத்தினது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. இவனை இவ்ளோ நாள் விட்டு வைச்சதே தப்பு ஆதித்யானு என் உள்மனசு என்னையே திட்டுது. அப்போவே கடத்தி, கையை காலை உடைச்சு காய போட்டிருக்கணும்..
என் தம்பியோட உசுரை வீணா போக்கினது நீதான்னு தெரிஞ்ச அன்னைக்கே நான் உன்னை கொன்னு இருக்கணும்.. ஆனா முடியாதுல்ல.. தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் எவ்ளோ இருக்குனு பொறுமையா இருந்துட்டேன்" என்று கூறும் போதே அவனின் கண்கள் சிவப்பேறி, கை முஷ்டிகள் இறுகியது.
ராகேஷிற்கு தூக்கி வாரிப் போட்டது. இந்த விடயம் விஜய்க்கு தெரியாது என்றல்லவா நினைத்திருந்தான்?
ஆனால் அவன் மறந்த ஒரு விடயம், விஜய் என்னும் காவலனின் கழுகுப் பார்வைக்கு எந்த ஒரு சிறு விடயமும் தவறுவதில்லை என்பது!
"ஷாக்? அது சரி. பக்காவா பிளான் பண்ணி அவனுக்கு நடந்தது ஆக்சிடண்ட் தான்னு எல்லாரும் நம்பற மாதிரி பண்ணிட்டோமே.. இதெப்படி இவனுக்கு தெரிஞ்சி போச்சுன்னு யோசிக்கிறியா மச்சான்?"
ராகேஷ் பதில் கூறாமல் பார்வையை அவனை விட்டு விலக்கிக் கொண்டான். விஜயின் கண்களில் இருந்த சீற்றமும், பொங்கி வழிந்த கோபமும், ஆளைக் கொல்லும் ஆத்திரமும் அவனுக்குள் ஒரு பயத்தை உண்டு பண்ணியது.
"பகை என் கூட தானே? என்னை கொன்னு இருக்கலாம் உனக்கு. அவனை ஏன்டா இதுல இழுத்து விட்ட?" என்றவனின் மடக்கிய கைகள் ராகேஷின் மூக்கில் வந்து மோதி மீண்டது. முனகலுடன் தலையை மறுபுறமாக சரித்தான் ராகேஷ்.
"முதல்ல ஆம்பளயா கெத்தா இருக்க பழகுடா. உனக்கும் எனக்கும் பகைன்னா நாம ரெண்டு பேரும் தான் தீர்த்துக்கணும்.. அடிச்சு குத்திட்டு சாகணும். அதை விட்டுட்டு எதிர்ல இருக்கறவனோட பேமிலியோட மோதுனா என்ன அர்த்தம்? அவனோட தம்பியை லாரி ஏத்தி கொல்லறது.. இதுலாம் என்ன..
முதுகுக்கு பின்னால அடிக்கிறவன் எவ்வளவு பெரிய பலசாலியா இருந்தாலும் அவனுக்கு பேரு கோழை தான். முதுகுல குத்தாம நேருக்கு நேரம் மோதி இருக்கணும் நீ.." என்றவன் காலை தூக்கி அவனின் நெஞ்சில் உதைக்க, கதிரையுடன் கீழே சரிந்தான் ராகேஷ்.
"பொண்ணுங்களை மதிக்கிறவன் தான் நான்.. பொண்ணுங்க என் கண்ணுக்கு தெய்வங்களா தான் தெரிவாங்க. அடக்க ஒழுக்கத்தோட, தைரியமா இருக்குற பொண்ணை பார்த்தா கைக் கூப்பி வணங்கவும் தயங்க மாட்டேன். ஏன்னா எனக்கு ஜனனம் கொடுத்ததும் ஒரு பொண்ணுன்றதால! ஆனா லேகா.. லேகா எப்படி கேவலமான பொண்ணுன்னு தெரியுமா?
பெண் பழி பொல்லாததுனு சொல்லுவாங்க. ஒரு பொண்ணை பத்தி என் வாயால கேவலமா சொல்ல வருத்தமா தான் இருக்கு. இருந்தாலும் சொல்ல வேண்டிய கட்டாயம். சொல்றேன் கேட்டுக்க.. லவ் பண்றதா சொல்லி ஏமாத்தி, அவங்களை தன் வலைக்குள்ள வீழ்த்தி, அவனோட கூடி.. அதே ஒரு காரணத்தை வைச்சு அவனை மிரட்டி.. கற்பை பறிச்சிட்டாங்கனு போலீஸ்ல சொல்லறதா மிரட்டி, மாசாமாசம், வாராவாரம் அவன்ட்ட கனிசமா தொகை பிடுங்கிக்கிட்டு உல்லாசமா வாழற ஒரு கேவலமான ஜென்மம் அவள்!
அவள் தனியாளுன்னு நினைச்சு வார்ன் பண்ணதோட விட்டுட்டேன் ஒரு வாட்டி. அடுத்த வாட்டி ரெண்டு அறை அறைஞ்சேன். மூணாவது வாட்டி அவள் தங்கி இருக்கற ரூமை சுத்தி ஆளுங்களை வைச்சு ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணி அறிவுறுத்தினேன். ஒரு பொண்ணு அநியாயத்துக்கு தைரியமா இருக்கறது எரிச்சலை தான் கொடுத்துச்சு. நீ என்ன வேணா பண்ணு. நான் என் வேலையை பார்ப்பேன்னு சொல்லற மாதிரி தன் வேலையை பண்ணிட்டே தான் இருந்தா..
இந்த மாதிரி ஆளுங்க பெருக கூடாதுனு தான் கொலை கேஸ்ல அவளை உள்ள தள்ளிட்டேன். அதுக்கு பிறகு எந்த பிரச்னையும் இருக்கல கார்த்திக்கோட டெ.. டெத் வரைக்கும்.. "
அளவுக்கதிகமாக கோபத்தின் வெளிப்பாடாய் கண்ணீர் வழிந்தது விஜய்யின் கண்களில்! தனி ஒருவனால் தன் குடும்பம் சிதைந்து தங்கையின் வாழ்வு வீணாகி விட்டதே என்ற ஆதங்கத்தில் அவனை ஓங்கி உதைத்தான். மீண்டும் மீண்டும் சில அடிகளை விடாமல் பரிசளித்தான்.
இன்னும் இரண்டே உதை உதைத்தால் அவனின் உடலை விட்டு உயிர் பறந்து விடும் எனப் புரிந்ததும் தன் சற்று அடங்கியவன் அவனருகே குனிந்தான்.
"ப்.. ப்ளீஸ் என்னை விட்டுரு. நா.. நான் இனிமே உன் பேமிலி சைடையும் திரும்பிப் பார்க்க மாட்டேன். ப்ளீஸ்.. ப்.. ப்ளீஸ் விஜய்.." என அடி தாங்க முடியாமல் அவனாகவே சரணடைந்தான்.
விரக்தியாக சிரித்தான் விஜய்.
"லேகா உன்னோட ஆருயிர் காதலியாமே!
ஆதர்யா உன்னை விரும்பறானு சொன்னதும் நாலாபுறமும் உன்னை பத்தி விசாரிச்சு உங்க லவ் பிரிஞ்சு போக கூடாதுன்னு கார்த்திக்கும் அப்பாவும் தான் அவளை உனக்கு கலியாணம் பண்ணி வைச்சாங்க. வீட்டோட மாப்பிள்ளையா உக்காந்துட்டு கால் மேல கால் போட்டு சாப்பிட்டுட்டு இருக்கும் சுகமான வாழ்க்கையையும், அழகியா இருக்கற என் தங்கச்சி ஆதர்யாவையும் இழந்திட விருப்பம் இல்லாம நீயும் ஓகே சொல்லிட்ட.. அவ உன்னை உயிரா நினைக்கிறா.."
பற்களை கடித்து கோபத்தை விழுங்கினான் விஜய்.
"ரெண்டு வருஷம் உன் கூடவே இருந்து, உன்னையே சுத்தி வந்த ஆதர்யா மேல இல்லாத லவ், பாதில வந்த அந்த லேகா மேல எப்படி வந்துச்சுன்னு தெரியல.
ஆதுவுக்கு துரோகம் பண்ணது பத்தலைன்னு உன் மேல சந்தேகம் வந்து, உன்னை ஃபாலோ பண்ணிட்டு வந்து உனக்கும் லேகாவுக்கும் இடைல இருக்கற லிங்க்கை தெரிஞ்சுக்கிட்ட கார்த்திக்கையே லாரி ஏத்தி கொன்னுட்ட.. அவன் விஷயத்தை தங்கச்சி கிட்டயும், வீட்டு ஆளுங்க கிட்டயும் சொல்லிடுவாங்கன்ற பயத்துல, சொகுசு வாழ்க்கையை இழந்திடுவேங்கிற பயத்துல அவனை அநியாயமா கொன்னுட்ட நீ..
லேகாவை உள்ள தள்ளினது நான்தானே.. கார்த்திக்கை விடு. அவனை விட்டுட்டு நீ என்கிட்டே மோதி இருந்தா என் மனசு ஆறி இருக்கும். உனக்கு லேகா மேல அவ்ளோ லவ், லஸ்ட் இருக்குன்னா அவளையே கலியாணம் பண்ணிட்டு வாழ்ந்து இருக்கலாம்.. உனக்கு லேகாவை விடவும் எண்ணமில்ல. ஆதர்யாவை டிவோர்ஸ் பண்ணி சுகமான வாழ்க்கையா இழக்கவும் எண்ணமில்லை.. இதானே? நல்லாருக்குடா உங்க ஒழுக்கம்..
வீணா என் தம்பி உசுரும் போய்டுச்சு. என் தங்கச்சி வாழ்க்கையும் போய்டுச்சு.." என்றவன் தன் ஆத்திரத்தை தீர்க்க வழியின்றி அவனின் கழுத்தை நெறித்தான்.
மூச்சு முட்டி அவனின் கண்கள் சொருக ஆரம்பித்ததும் விஜயின் ஃபோன் ஒலிக்க தொடங்கியது.
சட்டென்று பிடியை தளர்த்தி அழைப்பது யாரென்று பார்த்தவனின் முகத்தில் இத்தனை நேரமும் இருந்த இறுக்கம் தளர்ந்து, கோபம் குறைந்து கனிவு பிறந்தது.
அவசரமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
"நீங்க எங்க போய்ட்டிங்க? இப்போ நைட்டு ஒன்பதரை மணிங்க. ரூம்ல தனியா தூங்க பயமா இருக்கு. ப்ளீஸ் சீக்கிரம் வாங்க. எனக்கு தூக்கமா வருதுங்க.." தூக்க கலக்கத்தில் பேசினாள். இல்லை இல்லை கிட்டத்தட்ட உளறினாள் கௌதமி.
அவனின் இதழ்களில் மின்னல் கீற்றாய் ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.
ஃபோனை அணைத்து பாக்கெட்டில் போட்டவன் ராகேஷை மீண்டுமொரு முறை உதைத்து விட்டு வரும் போது கையோடு எடுத்து வந்த உணவுப் பார்சலை அவன் மேல் விட்டெறியாத குறையாய் தூக்கிப் போட்டான் அவனருகே..
கதிரையின் கைப் பிடியோடு கட்டியிருந்த அவனின் ஒரு கையை மாத்திரம் அவிழ்த்து விட்டவன் அதற்கு மேல் தாமதிக்க முடியாமல் தன் மனையாளைக் காண வீட்டை நோக்கி விரைந்தான்.
தொடரும்.