• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 20)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கண் விழித்தது முதல் விடாமல் இருமிக் கொண்டிருந்த மனையாளை சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தான் விஜய். அவனது பார்வையில் உள்ளுக்குள் குளிர் பரவியது அவளுக்கு.

வாயைப் பொத்திக் கொண்டு குளியலறைக்குள் ஓட முயல, தலையைத் துவட்டிக் கொண்டிருந்த துண்டை அவளின் கழுத்தில் சுற்றிப் போட்டு தன்னை நோக்கி இழுத்து நிறுத்தினான் விஜய். வேகமாக இழுபட்டு வந்து அவனின் பரந்த நெஞ்சிலே மோதி நின்றாள் கௌதமி.

"நேத்து ஐஸ் கிரீம் சாப்பிட்டியா?"

திருதிருவென முழித்தபடி பதில் கூறாமல் அப்பாவியாய் அவனை நோக்கியவள், "இன்னைல இருந்து நான் ஐஸ் க்ரீம் சாப்பிட மாட்டேன். ப்ரோமிஸ்" என்று கூற, அவளை நம்பாத பார்வை பார்த்தான் விஜய்.

இரண்டு நாட்களாக இந்த சத்தியத்தை தான் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் சத்தியம் செய்தாளே தவிர, அதை செயற்படுத்தத் தான் இல்லை. அவன் ஸ்டேஷன் புறப்பட்டு செல்லும் வரை காத்திருந்து பழனியை விட்டு ஐஸ் க்ரீம் வாங்கி சாப்பிட்டு, இரவு முழுவதும் இருமி இருமியே கழித்து விடுவாள்.

முன்பெல்லாம் அப்படியில்லை. பழனி வீட்டில் இருக்கும் இரண்டு நாட்களாகவே இரவில் தூக்கம் தொலைத்தாள் கௌதமி.

அன்று சமையலறை குப்பைத் தொட்டியில் கிடந்த காலியாகிய வெறும் ஐஸ் க்ரீம் வாளிகளைப் பார்த்ததும் அவனுக்கு விடயம் என்னவென்று புரிந்து விட்டது. வீட்டுக்கு வந்ததில் இருந்தே பழனியை முறைத்துக் கொண்டு கோபமாக திரிந்தவள் இரண்டே நிமிடங்களில் அவருடன் சமாதானம் ஆகக் காரணமே இந்த ஐஸ் க்ரீம் தான் எனப் புரிந்ததும் ஐயோ என்றாகியது விஜய்க்கு.

அன்று இரவே அவளை திட்டி இனிமேல் ஐஸ் கிரீம் சாப்பிடக் கூடாதென்று ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருந்தான் சரியென்று தலை அசைத்தாலே தவிர, ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. கொஞ்சம் இருந்தாலும் சோர்ந்து போகும் அவளின் உடல் நிலையில் அதிக அக்கறை அவனுக்கு.

"எல்லாத்துக்கும் பப்பு தான் காரணம். நீ இங்கயே இரு. நான் போய் பேசிட்டு வந்திடறேன்.." என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியேறப் போனவனை பின்னிருந்து கட்டிக் கொண்ட கௌதமி,

"பப்பு பாவம்.." என்று அழுகுரலில் கூற, சட்டென்று கோபம் தணிந்தவன் 'அழுகிறாளோ' என்றெண்ணி திரும்பி அவளின் முகம் பார்த்தான்.

கண்களை உருட்டி பாவமாக முழித்துக் கொண்டிருந்தாள் கௌதமி. அவளை இழுத்துக் கொண்டு ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் அருகே சென்றவன் முடியாது என மறுக்க மறுக்க அவளின் வாயில் இருமல் சிரப்பை (syrup) திணித்து விழுங்க வைத்தான்.

வாய்க்குள் கசப்பு பரவியதும் முகம் சுழித்தவள், "என்னை கொடுமை பண்ணுறீங்க நீங்க.." என்று கூறி, இதழ் பிதுக்கி அழத் தொடங்கி விட்டாள். இவள் தனக்கு குழந்தையா மனையாளா என்ற சந்தேகத்துடன் அவளை உற்று நோக்கியவனுக்கு அவளின் உருவத்தில் ஒரு குழந்தையை தான் தெரிந்தது.

வாழ்க்கையில் வாசம் பரப்ப வந்தவள், வரும் போதே அவளுடன் சேர்த்து மகிழ்ச்சி என்ற ஒன்றையும் எடுத்து வந்து விட்டாள். அவள் என்று அவனின் வாழ்வில் காலடி எடுத்து வைத்தாளோ அன்று முதல் அவன் வாழ்வில் தென்றல் வீசிக் கொண்டு தான் இருக்கிறது. இப்போதெல்லாம் அவள் இல்லாமல் நேரங்கள் நகர்வதே இல்லை அவனுக்கு.

முன்பெல்லாம் தனிமையில் தன்னை திடப்படுத்தி, இரவுகளில் நிலவு வானை வெறித்து தன் கவலைகளை தீர்த்துக் கொண்டவன் தான் இன்று அவளின் சிறு அணைப்பிலும், குறும்புத் தனங்களிலும் சோகம் மறந்து புன்னகைப்பது.

அவளைப் பார்க்கும் போது சூரியனை கண்ட தாமரையாய் தன் முகம் தானாகவே மலர்வதையும் அவளைக் காணாத நேரங்களில் குழந்தையைக் காணாத தாயாய்.. தன் விருப்பத்துக்குறிய பொம்மையைக் காணாத சிறுவனாய் ஏங்கிப் போவதையும் அவனும் தான் உணர்ந்து இருக்கிறான்.

இந்த மாற்றம் அவனுக்கே புரிதாய் தெரிந்தாலும் அவனுக்கு பிடித்திருந்தது. கௌதமியை தன் நெஞ்சமெனும் மஞ்சத்தில் கிடத்தி வாழ்நாள் பூரா அழகு பார்க்க ஆசை கொண்டது அவனது மனம். தைரியமான பெண்களை அவனுக்கு பிடிக்கும், ஆனால் குழந்தைத் தனமான பெண்களும் கூட அழகு தான், ரசனை மிகுந்த வாழ்வை அவர்களுடன் வாழலாம் என தோன்றியது இப்போது.

"நின்னுட்டே கனவு காணுறீங்களா நீங்க?" என்று கேட்டவாறு அவனைத் தட்டித் தட்டி ஓய்ந்தவள் வலிக்காதவாறு அவனின் தோளில் லேசாக கிள்ளி வைக்க, எறும்புக் கடியை உணர்ந்து சட்டென்று தெளிந்தான் விஜய். இவ்வளவு நேரமும் தன்னிலை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேனே என தலையில் தட்டிக் கொண்டான்.

"என்னமா கேட்ட?"

ஒன்றுமில்லை என்பது போல் தலை அசைத்தவள் மெதுவாக நழுவி குளியலறைக்குள் புகுந்த கௌதமி, விஜய்யை மனதினுள் திட்டியபடி ஷவரடியில் நின்று கொண்டாள்.

"கார்த்தி சொன்னப்ப நம்பலை. இப்போ தான் தெரியுது. பப்லு இல்ல இவரு, இவரு.. இவரு டெவில்.. ஹ்ம்ம் ஸ்வீட் டெவில். பீவர் வரும்னு தெரிஞ்சிருந்தாலும் எனக்கு ஐஸ் கிரீம் புடிக்கும்னு கார்த்தி கேட்டதும் வாங்கி கொடுத்திடுவான். இவரு கொடுக்கவே மாட்டேங்கறார்.. மூஞ்சில அப்டியே ஒரு குத்து விடணும்.." என சிணுங்கியபடி காலை தூக்கி நிலத்தில் உதைக்க, வாசலில் தேநீர் பருகிக் கொண்டிருந்த விஜய்க்கு சட்டென்று புரை ஏறியது.

"ஐயோ மாப்பிளை என்னாச்சு?" என பதறிக் கொண்டு அருகில் வந்தவரைப் பார்த்தவனுக்கு, தன்னை குளியலறைக்குள் நின்று திட்டித் தீர்ப்பது கௌதமியாக தான் இருக்குமென்று நினைத்து மென்னகைத்தான்.

அன்று மாலை நேரம், அவன் ஸ்டேஷன் விட்டு வரும் போது பழனி ஊருக்கு செல்ல ஆயத்தமாகி நின்றிருந்தார். அவருக்கு அருகில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி அவரை இடை விடாமல் முறைத்துக் கொண்டிருந்தாள் கௌதமி.

விஜய்யைக் கண்டதும் ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்ட கௌதமி, "பப்பு ஊருக்கு கிளம்ப போறாராம். இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்கன்னு நீங்களாவது சொல்லுங்க ப்ளீஸ். நான் சொன்னா கேட்கவே மாட்டேங்கறார்.." என கோபமாக கூறி, அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொள்ள, பழனியை திரும்பிப் பார்த்தான் அவன்.

இருவரின் அந்நியோன்யம் கண்டு கண் கலங்கி நின்றிருந்தார் அவர்.

இங்கிருந்த சில நாட்களிலே விஜய் தன் செல்லமகளை எவ்வாறெல்லாம் கவனித்துக் கொள்கிறான், அவள் சம்பந்தப் பட்ட சிறு விடயங்களில் கூட எவ்வளவு சிரத்தை எடுக்கிறான், ஒவ்வொரு விடயத்திலும் அவளை அன்புடைஞ்சம் அக்கறையுடனும் பார்த்துக் கொள்கிறான் என்பதை அவரும் தானே நேரில் கண்டார்?

மனம் நிம்மதியடைந்ததும் பெருமூச்சொன்று வெளியேறியது அவரிடம் இருந்து!

"இன்னும் ரெண்டு நாள் கழிச்சு போங்க மாமா. உங்க பொண்ணு ஆசைப்படறால்ல.."

"இல்ல மாப்பிளை. நான் போகணும். பாப்பா வீட்டுல என்கூட இருக்கும் போது ஒர்க் ஃப்ரம் ஹோம் வாங்கி வீட்டுலயே தான் எல்லா வேலையையும் பார்த்துப் கிட்டேன். இப்போ ஆபீஸ்க்கே போறேன். வீட்டுல இருந்து நானும் என்ன தான் பண்ணுவேன்.. ஏற்கனவே ரொம்ப நாள் லீவு எடுத்துட்டேன். இன்னைக்கே போயாகனும்.."

"இப்போ நீங்க ஒர்க் பண்ணா என்ன.. பண்ணலைன்னா என்ன? அதான் நான் இருக்கேன்ல? இவரு உங்களை ரொம்ப நல்லா பாத்துக்குவாரு. ப்ளீஸ் நீங்க இங்கயே இருங்க பப்பு.."

அவள் கெஞ்சல் குரலில் சொன்னதைக் கேட்டதும் ஆண்கள் இருவருக்கும் சட்டென்று சிரிப்பு வந்து விட்டது. அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி பழனி வீட்டை விட்டு வெளியேறும் போது நேரம் இரவு எட்டரை மணியும் கடந்து விட்டிருந்தது.

"நாங்க வந்து உங்களை ட்ரோப் பண்ணவா மாமா?" என்று விஜய் கேட்டதை நாசுக்காக மறுத்தவர் கௌதமியை நன்றாக பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்று விட்டார்.

அதன் பிறகு கௌதமி எனும் குழந்தையை ஆறுதல் கூறி செய்வதில் பிஸியாகி விட்டான் விஜய்.

பழனி ஊருக்கு சென்றும் இன்றுடன் ஒரு மாதம் கடந்து போயிருந்தது.

நீரைக் கொதிக்க வைக்கிறேன் என்ற பெயரில் விஜய் மறுக்க மறுக்க சமையலறைக்குள் சென்ற கௌதமி, சமையலறை விட்டு வெளியே வரும் போது கையில் காயத்துடன் தான் வந்தாள். கொதித்த நீரை அடுப்பிலிருந்து இறக்கும் போது கையில் கொட்டிக் கொண்டு விட்டாள்.

அவளைத் திட்டி முறைத்த விஜய், சோபாவின் ஒரு மூலையில் அவளை அமர வைத்து விட்டு சமையலறையில் உணவு சமைக்கும் வேலையில் ஈடு பட்டிருந்தான்.

அடிக்கடி சமையலறை ஓரமாக எட்டி பார்த்தபடி கட்டு போடப்பட்டிருந்த கையை திருப்பி திருப்பிப் பார்த்து, காயம் எரியும் போதெல்லாம் இதழைக் குவித்து ஊதிக் கொண்டிருந்தாள் கௌதமி.

'கைல காயமாகி அழுதுட்டு இருக்கற புள்ளைய என்னமா திட்டறாரு இவரு..' என கருவியபடி அடிக்கடி சமையலறைக்குள் தெரிந்த அவனின் புற முதுகைப் பார்த்து முறைக்கவும் தவறவில்லை. அவளின் முறைப்பை அறிந்தாலும் காணாதது போல் வேலை செய்து கொண்டிருந்தான் விஜய்.

"இன்னுமேவா என்னை திட்டி முடிக்கல?" என்ற விஜய்யின் குரலில், யோசனையில் மூழ்கி இருந்த கௌதமி சட்டென்று துள்ளி விழுந்தாள்.

"நா.. நான் உங்களை தி.. திட்டவே இல்லைங்க.." என பதட்டமாக கூற, கீழுதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்ட விஜய் அவளருகில் உணவுத் தட்டோடு அமர்ந்தான்.

ஆவி பறந்த இட்லியைப் பீய்த்து ஊதி அதை அவளது வாயருகே நீட்ட, கை வலி என்று கத்துவதைப் பொருட்படுத்தாமல் காயம் பட்ட தன் கைகளில் மருந்திட்டு கட்டு போட்டு விட்ட கோபத்தில் வேண்டாமென முகத்தை திருப்பிக் கொண்டாள் கௌதமி.

"1,2,3 சொல்லுறதுக்குள்ள வாயை திறக்கணும் இனியா.. வேணாம் வேணாம்னு சொல்லுறதைக் கேட்காமல் கிட்சேனுக்கு போய் ஹாட் வாட்டரை கையில கொட்டிக் கிட்டது நீ.. கை எரிஞ்சாலும் பரவாயில்லனு அப்டியே விட்டுட்டு இருக்க சொல்றியா? அதான் கட்டு போட்டு விட்டேன்.. வாயைத் திற.."

"ம்ம்கூம்.."

அவளை முறைத்த விஜய் ஏதோ கூற வாயெடுப்பதற்குள் அவனின் நீட்டிய கையில் இருந்த இட்லியை தனக்கு ஊட்டிக் கொண்ட கௌதமி,

"ஆனா என் கையி ரொம்ப வலிக்குது.." என்று கூறி, கட்டு போடப்பட்டு இருந்த கையை நீட்டிக் காட்டினாள்.

அவளது கையை இடது கையால் பற்றிப் பிடித்து தன் தொடை மேல் வைத்த விஜய், கையை மென்மையாக வருடி விட்டபடி மற்ற கையால் உணவூட்டினான்.

"ஆனா நானும் சமைக்க கத்துக்கணும் இல்ல? எவ்ளோ நாள் தான் நீங்களே எல்லாம் பண்ணுவீங்க. பப்பு நேத்து ஃபோன் பேசிட்டு இருக்கும் போது, மாப்பிளைக்கு புடிச்ச ஃபுட்ஸ் சமைச்சு கொடுனு சொன்னாரு.. எல்லாமே நீங்களே பண்ணுறீங்கலாம்னு அவரு ரொம்ப கவலைப் படறாரு.."

அவளின் தொங்கிப் போயிருந்த கன்னத்தை லேசாக கிள்ளியவன், "அதை பத்தி நீ கவலைப் படாதம்மா.. நானே பாத்துக்குறேன். மாமா கேட்டாருன்னா நீயே எனக்கு சமைச்சு கொடுத்துட்டதா சொல்லிடு.." என்று கூறி கண் சிமிட்டினான்.

அவசரமாக சரியென்று தலை அசைத்தவள், "கார்த்தி அன்னைக்கு ஒரு நாள் என்கிட்டே பேசிட்டு இருக்கும் போது அண்ணா சூப்பரா சமைப்பாரு. அவரோட சாப்பாடு சாப்பிட்டாலே தனியொரு திருப்தி கிடைக்கும்னு சொன்னான். நீ ரொம்ப லக்கி கௌதமி. தினமும் அவரோட.."

கையை அசைத்து கொஞ்சல் மொழியில் பேசிக் கொண்டிருந்தவள் அவனின் புருவம் நெறியக் கண்டதும் மூடாமல் பேசிக் கொண்டிருந்த வாயை இழுத்து மூடிக் கொண்டாள். 'உன் வாயி இருக்கே..' என தன்னையே திட்டிக் கொண்டவளுக்கு சட்டென்று விக்க ஆரம்பித்து விட்டது.

"லக்கினு சொன்னானா? யாரு.. உன்னையா சொன்னான்.." அவள் கூற வந்த விடயம் புரியாமல் யோசனையுடன் கேட்டபடி தண்ணீரை நீட்டினாள் அவளுக்கு.

"இல்ல.. அது.. நா.. நீங்க.. அவனுக்கு அண்ணன்.. இல்லையா.. அதான். அதான் அவன் ரொம்ப.. ரொம்ப லக்கினு சொன்னான்.." என விக்கல் நின்றும் அவனது பார்வை மாறாதது கண்டு அவசரமாக வாயில் வந்த பொய்யை அளந்து விட்டாள்.

மீண்டும் அவன் ஏதோ கூற வாய் எடுப்பதற்குள் அவனின் ஃபோன் ஒலித்தது.

திரையில் தெரிந்த ஆதர்யாவின் எண்ணைப் பார்த்ததும் திகைத்தவன் கௌதமிக்கு இட்லியை ஊட்டி விட்டபடி அழைப்பை ஏற்று பேசினான்.

மறுபுறத்தில் ஆதர்யா கூறிய விடயத்தைக் கேட்டதும் சட்டென அதிர்ந்து இருக்கையை விட்டு எழுந்து நின்றவனின் இட்லித் தட்டைப் பிடித்திருந்த கை குளிர் காய்ச்சல் கண்டது போல் படபடவென்று நடுங்க ஆரம்பித்தது.

தொடரும்.
 
Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
சந்தேகமே இல்லை அவ உனக்கு குழந்தை தான்டா ஆதி❣️❣️.
இனியா முழுசா சொல்லி முடிச்சிருக்கலாம்..என்னடா ஆதி நீயே இவ்வளோ ஷாக் ஆனா எப்படி😤😤🤔
 
😍😍😍😍💙 ரொம்ப நன்றி சகி..
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
2,018
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️இருந்தாலும் இந்த கௌதமி குழந்தை அப்போ அப்போ மாட்டிக்க பார்க்குதே, விஜய் அவளை குழந்தையா பார்குறதுனால குழந்தை மாதிரியே பேசி மாட்டிக்க பார்குறாளே 😀😀😀😀😀😀😀
 
ஆமா ஆமா சகி.. அவ குழந்தை தான் 😂😂
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32

Idhula enna sadhegam 😂 gwthami papave dhan innum ❤❤❤❤❤
Story arumaii sis. Ipove end pannirathingka
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
Idhula enna sadhegam 😂 gwthami papave dhan innum ❤❤❤❤❤
Story arumaii sis. Ipove end pannirathingka
Aama aama saki 😂 kodutha ddline la, wrds limit la mudichaganumee
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
பப்பு வந்ததும் ஓவர் செல்லம் கூடிப்போச்சு இந்த பாப்பாக்கு 🤨🤨🤨

தண்ணி வைக்கவே இந்த பாடா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஆது அப்பிடி என்ன சொல்லி இருப்பா 🤔🤔🤔🤔
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
பப்பு வந்ததும் ஓவர் செல்லம் கூடிப்போச்சு இந்த பாப்பாக்கு 🤨🤨🤨

தண்ணி வைக்கவே இந்த பாடா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஆது அப்பிடி என்ன சொல்லி இருப்பா 🤔🤔🤔🤔
பாப்பான்னாலே செல்லம் தானே 😁
 
Top