அந்த நெடுஞ்சாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றது அந்த ராயல் என்ஃபீல்ட் பைக்!
மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான் விஜய ஆதித்யன். பைக் செல்லும் வேகத்தில் பயந்து அவனின் முதுகோடு பல்லியாய் ஒட்டி, அவனின் இடுப்பை சுற்றி கரம் கோர்த்திருந்தாள் கௌதமி.
'அப்பா மாடிப் படியில் தடுக்கி விழுந்ததில் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறோம் அண்ணா' என காலையில் அழைப்பு விடுத்து ஆதர்யா கூறியதும் விஜய்க்கு கைகால்கள் ஓடவே இல்லை. விறைப்புடன் முறைத்துக் கொண்டு தான் திரிந்தாலும் தந்தையின் மேல் அவன் வைத்த பாசம் இல்லையென்று ஆகி விடுமா? அவனின் ரோல் மாடலே அவர் தானே!
உடனே கௌதமியையும் அழைத்துக் கொண்டு உடனே கிளம்பி விட்டான் ஊருக்கு.
"இவ்ளோ ஃபாஸ்ட் வேணாம். ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு.." என்ற கௌதமியின் கிளிக் குரல் காற்றோடு சேர்ந்து அவனின் காதை வந்தடைந்ததும் பைக்கின் வேகம் கொஞ்சம் மட்டுப் பட்டது.
அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டின் முன் பைக்கை நிறுத்தி விட்டு அவசரமாக கீழே இறங்கிக் கொண்டான் விஜய். நாலு மணி நேரத்தில் வந்தடைய வேண்டிய வீட்டை வெறும் மூன்று மணித்தியாலத்தில் வந்தடைந்திருந்தான் அவன்.
பைக்கை விட்டு துள்ளிக் குதித்தவளின் கால்கள் பப்புவைப் பார்க்க அவர்களின் வீட்டுக்கு செல்ல முரண்டு பிடித்தது. ஆனால் செல்வநாயகத்தை பார்த்து விட்டே செல்லலாம் என நினைத்து விஜய்யின் பின்னாலே வீட்டினுள் ஓடினாள் கௌதமி.
கால் கட்டு போட்டு ஆஸ்பத்திரியில் இருந்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர் வீட்டினர்.
விஜய்யின் பைக் சத்தம் கேட்டதும் வேகமாய் அறைக்குள் இருந்து ஓடி வந்த சாதுர்யா, "அண்ணா.." என்றழைத்தபடி அவனைக் கட்டிக் கொண்டாள். கார்த்திக்கின் மறைவுக்கு பின்னால் அடையாளமே தெரியாதபடி மொத்தமாக மாறி, அமைதியின் சின்னமாக மாறிப் போயிருந்தாள் அவள்.
"அவங்களை உள்ளே விடாதம்மா சது. ஆரத்தி எடுக்கணும்.." சமையலறையில் இருந்தே சத்தம் வைத்த யமுனா, கையில் ஆரத்தி தட்டுடன் வாசலுக்கு வர, கௌதமியின் கைகளைப் பற்றி அவளை தன் தோளோடு அணைத்துப் பிடித்தபடி நின்றிருந்த விஜய் அவளின் முகத்தை ஆராய்ந்தான்.
நெடு நேரமாக அழுதிருப்பாள் போலும், கண்களுடன் சேர்ந்து கன்னங்களும் வீங்கி முகம் களையிழந்து போயிருந்தது. அவளது வதனத்தைப் போலவே இவனின் மனமும் லேசாக வாடியது.
ஆரத்தி எடுத்து விட்டு நகர்ந்து நின்றதும், "அப்பா எங்க?" என்று பொதுப்படையாக கேட்டுக் கொண்டு விஜய் வீட்டினுள் நுழைய, உள்ளறையை கை காட்டினாள் சாதுர்யா.
"எப்படி இருக்கிங்க அண்ணி.." என்ற குரலில், விஜய்யின் பின்னால் செல்லப் போன கௌதமி ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்தாள். நிமிடத்துக்கு இரண்டு தடவை சண்டை பிடித்து, முகத்தை திருப்பிக் கொண்டு குத்து வார்த்தை பேசி நோகடிக்கும் சாதுர்யா அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
"நா.. நான் ரொம்ப நல்லா.. இருக்கேன் சது. நீ எப்படி இருக்க?" வார்த்தைகள் சிக்கிக் கொண்ட தொண்டையை உள்ளங்கைகளால் வருடி விட்டபடி கேட்டாள் கௌதமி.
நன்றாக இருக்கிறேன் என்பது போல் தலை அசைத்த சாதுர்யா, கௌதமியின் கையில் போடப்பட்டிருந்த கட்டைக் கண்டு அவளருகில் வந்தாள்.
"கையில என்னாச்சு?"
"கையில.. காயம் சது. காலைல ஹாட் வாட்டரைக் கையில கொட்டிக்கிட்டேன்.."
"இப்போ எப்படி இருக்கு அண்ணி?" என்று கேட்டவாறு கௌதமியின் கட்டு போடப்பட்டிருந்த கையை பற்றித் தூக்கி ஆராய்ந்தபடி கேட்க,
"ஃபீலிங் பெட்டர்.." என தலை அசைத்தவள் திரும்பி யமுனாவைப் பார்த்தாள். இருவரையும் புன்னகையுடன் பார்த்தபடி சமையலறையில் காப்பி தயாரித்துக் கொண்டிருந்தாள் அவள்.
செல்வநாயகம் கட்டிலில் சாய்ந்து கண்கள் மூடி படுத்திருந்தார். அவரருகே அமர்ந்திருந்த ஆதர்யா, விஜய் அறைக்குள் நுழைவதைக் கண்டு வெளியேறப் போக,
"இப்போ எப்படி இருக்கு அவருக்கு?" என்று கேட்டான் விஜய், அவளிடம்.
"வலி குறைஞ்சிருக்கு அண்ணா. படியில தண்ணி கொட்டி இருக்குறதை பார்க்காம வழுக்கி விழுந்துட்டாரு. வலது கால் சுளுக்கி, கீழ விழுந்ததுல காயமாகி இருக்கு. கட்டுப் பிரிக்க ஒரு வாரம் ஆகும்னு சொன்னாங்க. கூடவே, பழையபடி ஒழுங்கா நடக்க ஒரு மாசமாவது ஆகும்னு சொன்னாங்க.."
எவ்வளவு தான் சாதாரணமாக காட்டிக் கொள்ள முயற்சித்தாலும் அவளின் முகம் வெகுவாக வாடிப் போய் இருப்பதை விஜய்யால் புரிந்து கொள்ள முடிந்தது. இரவுகளில் கண் விழிப்பதாலோ என்னவோ கண்களுக்கு கீழே கருவளையம் விழுந்து போன தடவை அவளைப் பார்க்கும் போதிருந்த கலகலப்பு மறைந்து இளைத்துப் போயிருந்தாள்.
ராகேஷை மனதினுள் வைதவன் அவளின் தலை வருடி விட்டு செல்வநாயகத்தின் புறம் திரும்பினான். மகனின் குரலைக் கேட்டதும் கண்களை திறந்து மகனையே அன்பு ததும்பும் பார்வை பார்த்திருந்தார் அவர்.
ஆதர்யா அறையை விட்டு வெளியேறியதும் தந்தையை மேலிருந்து கீழாக ஒரு ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன் அங்கிருந்து நகர முயல,
"விஜய்.." என மெல்லிய குரலில் அழைத்து தன் கையை அவனை நோக்கி நீட்டினார் செல்வம். அவரையே வெறிக்க வெறிக்கப் பார்த்தவனுக்கு அன்றைய தினம் கண்முன் தோன்றியது.
அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தான் விஜய்.
படிப்பின் மேல் அலாதி ஆர்வம் அவனுக்கு. சாதாரணமான நாட்களிலே புத்தகமும் கையும் என தனக்கு தெரிந்த எல்லா டியூஸனுக்கும் சென்று வருபவன், பரீட்சை நெருங்கி விட்டால் சும்மா இருப்பானா என்ன.. யமுனாவின் ஆசைக்காக ஸ்விம்மிங், கிட்டார் கோர்ஸ் க்ளாஸுகளுக்கும் சென்று வந்தவன் கணித பாடத்தில் சந்தேகம் இருப்பதாய் கூறி விட்டு அங்கிருந்து பறந்து விட்டான் டியூஸனுக்கு.
"நாளைக்கு அலமு அக்காவோட நினைவு நாள்ங்க.." என்ற யமுனாவின் குரலில் யோசனை கலைந்த செல்வநாயகம் பெருமூச்சுடன் தலை அசைத்தார்.
"அவ என்னை விட்டுப் போய் பதிமூணு, பதிநாலு வருஷம் யமுனா. ஆனா இன்னைக்கும் என் பக்கத்துலயே இருக்கற மாதிரி இருக்கு. கொஞ்சமும் யோசிக்காம அவசரப்பட்டு என்னையும் விஜய்யையும் விட்டுட்டு போய்ட்டா அவ.. பைத்தியக்காரி! அவ அவசர படாம இருந்திருந்தா ஏதாவது ஒரு வழியில அவளை என் பக்கத்துலயே வைச்சிருக்க முயற்சி பண்ணி இருப்பேனாக்கும்.."
தயக்கமாக அவரின் தோள் தொட்ட யமுனா, "ப்ளீஸ் கவலைப்படாதீங்க.." என்று கூற, விரக்தியாய் சிரித்த செல்வம் கட்டிலை விட்டு எழுந்து நின்றார்.
"முதல்ல ஆபீஸ்ல அந்த சுரேஷ் நாயி சொன்ன பொய்யை நான் நம்பி இருக்க கூடாது. உன் பொண்டாட்டிக்கு வேற அஃபெயார் இருக்குனு சொன்னதும் நம்பற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாளில்லை. ஆனா அதை கண்டவன் வாயால எல்லாம் கேட்கறேனேனு கோபம்.
என் பொண்டாட்டியை பத்தி பேச அவனுக்கு என்ன உரிமைனு அவனைப் போட்டு அடிச்சேன். போலீஸ் வழியா திரிஞ்சிட்டு வீட்டுக்கு வரும் போது லேட் நைட் ஆகிடுச்சு.. எங்க போயிட்டு வரீங்க. ஆபீஸ்ல இவ்ளோ லேட் நைட் வரைக்குமா வேலைனு அலமு கேட்டா.. அவ என்னமோ சாதாரணமா தான் கேட்டா. ஆனா நான் தான் ஏற்கனவே இருந்த அலைச்சல்ல எழுந்த எரிச்சல்லையும், சுரேஷ் மேல இருந்த கோபத்துலயும் அவளை போட்டுத் திட்டிட்டேன்.
திட்டினத்தோட விட்டிருந்தா கொஞ்ச நேரத்துல அவளே வந்து என்னை சமாதானம் பண்ணி, என்னை கூல் பண்ணி இருப்பா. ஆனா நான் என்ன பேசுறேன்னு தெரியாம கண்டபடி பேசிட்டேன். என்ன பேசினீங்கனு என்கிட்டே கேட்டேனா நிஜமாவே எனக்கு தெரியல யமுனா. கோபத்துல என்னென்ன வார்த்தைகளை விட்டிருப்பேன்னு என்னால யோசிக்க கூட முடியல. எவ்ளோ யோசிச்சாலும் யாபகத்துல வரவும் இல்ல.
அழுதுட்டே அங்கிருந்து போயிட்டவ அப்பறம் வரவே இல்ல என் பக்கத்துல. இருந்த கோபத்துல நானும் பெருசா கண்டுக்கல. அவளைத் திட்டின குற்றவுணர்ச்சி இன்னுமே இருக்கு என் மனசுல.. அன்னைக்கு நைட் சுரேஷ் மேல இருந்த கோபம் ஆறாம போய் ட்ரிங்க் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தேன்.
என் மனசு அவளை ரொம்ப தேடுச்சு யமுனா. சமாதானம் பண்ணலாம். இருந்தாலும் நான் கோபத்துல அவளை பேசி இருக்க கூடாதுனு நினைச்சுட்டு அவளைப் பார்க்க தான் நம்ம ரூமுக்கு வந்தேன்.. " என்று கூறும் போதே அவரது குரல் உடைந்து விட்டது.
கண்கள் சிவப்பேறி கண்ணீரை இறைக்க ஆயத்தமாகி நிற்க, முகமோ வேதனையின் சாயலில் கசங்கிப் போனது. அன்றைய நாளின் கொடூரம் கண்முன் தோன்றியதில் வேகமாக கண்களை மூடிக் கொண்டு குலுங்கி அழுதாள் யமுனா.
"நான் ஒரு பைத்தியக்காரன் யமுனா.. நம்ம ரூம்ல இருந்ததால உன்னை அவ தான்னு நினைச்சுட்டேன். நீ.. நீ வேற ஜன்னல் பக்கமா தான் திரும்பி நின்னுட்டு இருந்த.. எதுவும் மறக்கல எனக்கு. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றவர் மேலே கூற முடியாமல் திணறி நிறுத்தினார்.
மனதை அழுத்திக் கொண்டிருந்த விடயங்களை இரண்டு நிமிடங்கள் மனம் விட்டுப் பேசினால் இன்று வரைக்கும் ஆறாமல் தவித்துக் கொண்டிருக்கும் மனம் சற்று ஆறுதல் அடையும் என நினைத்து தான் பேச ஆரம்பித்தார். ஆனால் முடியவில்லை அவரால்.கால்கள் தொய்ந்து கீழே விழப் போவதைப் போய் உணர்ந்து மீண்டும் கட்டிலிலே தொப்பென்று அமர்ந்து கொண்டார்.
அவர்களின் அறைக்குள் ஜன்னலருகே நிலவை ரசித்தபடி நின்றிருந்த யமுனாவைப் பார்த்து, அவள் அலமேலு தான் என நினைத்து அவளைப் பின்னிருந்து கட்டிக் கொண்ட சம்பவமும், அவள் அவரின் அணைப்பில் இருந்து விடுபடத் திமிறும் போது தன் மேலிருக்கும் கோபத்தில் தான் விலகிச் செல்ல நினைக்கிறாள் என நினைத்து கட்டாயப்படுத்தி அவளின் தோளில் முகம் புதைத்து மன்னிப்பு கோரிய நிகழ்வும் நேரம் காலம் தெரியாமல் கண்முன் தோன்றி அவரை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தியது.
"ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன் யமுனா. வாழ்நாள் பூரா இதே குற்ற உணர்ச்சியோட தான் வாழனும் நான்.. அவ என்னை நம்பி இருந்தா உசுரை மாய்ச்சுக்க முன்னால விஷயம் இதுதான்னு சொல்லி இருக்கணும். அவ என்னை நம்பலை.. அவளாகவே முடிவு பண்ணிட்டு செத்துப் போய்ட்டா.. ஒருவாட்டி எங்கிட்ட விஷயம் என்னனு சொல்லி இருக்கணும்ல யமுனா..
கடைசியா அவ கிட்ட மனம் விட்டு பேசல.. அவளைத் திட்டின மனம் இன்னுமே ஆறல.. உலையா கோதிச்சுட்டு இருக்கு. சூடு தனிய முன்னாலயே அவ போய் சேர்ந்துட்டா.. எல்லாத்திலயும் அவசரம். அதான் இதுலயும் அவசரப்பட்டுட்டா.. அவ இல்லாத வாழ்க்கையை கொடுத்து லைஃப் லோங் என்னை வருத்தப்படுத்த துணிஞ்சிட்டா.." என்றவருக்கு, கால்கள் துடி துடிக்க அலமேலு கயிற்றில் தொங்கிய காட்சி கண் முன் விரிந்து, அவரை விதிர் விதிர்க்க செய்தது.
அவரின் உறை நிலை கண்டு மனம் வருந்தினாள் யமுனா.
எந்தவொரு வருடமும் அவரின் நிலை இதுதான். அலமேலுவின் நினைவு நாளில் அவளின் கல்லறையைக் கூட தரிசிக்க செல்லாமல் அறைக்குள்ளே அலமேலுவின் புகைப்படத்தோடு தஞ்சம் புகுந்து விடுவார். அதன் பிறகு அவர் ஓரளவு தேறி பழையபடி மாறி விடவே ஒரு வாரமோ, இரண்டு வாரமோ ஆகி விடும்.
"ப்ளீஸ் கவலை படாதீங்க. கவலை படறதாலையோ, அழுறதாலையோ நடந்த எதுவும் நடக்கலேன்னு ஆகிடுமா.. " என்று கூறி தன் தோளில் ஆறுதலாய் கரம் பற்றியவளை திரும்பிப் பார்த்தவர்
'உன்னை நான் மறுமணம் பண்ணிக்கிட்டதே விஜய்க்காகவும் அலமுவோட விருப்பத்துக்காகவும் தான். நீ அவன் மேல வைச்ச பாசமும் அக்கறையும் அவனுக்கு என்னைக்கும் கிடைக்கணும், அம்மா பாசத்துக்காக அவன் என்னைக்கும் ஏங்க கூடாதுன்னு தான் உன்னை ரெண்டாந் தாரமாக் கட்டிக்கிட்டேன். நீ அவனோட அம்மாவே இல்லைங்கற உண்மை என்னைக்கும் அவனுக்கு தெரியாம இருக்கணும்னு ஆசைப்படறேன் யமுனா.. " என மனதோடு நினைத்துக் கொண்டார்.
அவரின் ஆசைக்கு ஆயுசு இல்லை எனக் கூறி கேலியாய் நகைத்த விதியைப் பற்றி அவர் அறியவில்லை.
உண்மையாகவே அலமுவுக்காகவும் விஜய்க்காகவும் தான் யமுனாவை இரண்டாந்தாரமாக கட்டிக் கொண்டார் அவர்.
அவள் விஜய் மேல் வைத்த அன்பிலும், தன் மேல் காட்டிய அக்கறையிலும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து அவளின் மனம் மாறிய பிறகு தான், அவளைத் தன் மனைவியாகவே ஏற்றுக்கொண்டார். ஆனாலும் ஆழ்மனதினுள் அலமேலுவின் மேல் வைத்த நேசம் இன்னுமே மாறவில்லை. மணலினுள் புதைந்த சிப்பியாக, கடலினுள் மூழ்கிய தங்கப் புதையல் போல இன்னுமே புதைந்து தான் இருக்கிறது.
திடீரென ஏதோவொரு சத்தம் காதை வந்தடைந்ததும் மின்னலடித்தது போல் திரும்பிப் பார்த்த இருவரும் கண்கள் சிவக்க, கையில் இருந்த புத்தக அடுக்கை தவற விட்டு கோபத்தின் பிடியில் முறுக்கேறி நின்றிருந்த விஜய்யைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.
கணிதப் பாட சந்தேகங்களை எல்லாம் காலையில் ஸ்கூல் வந்த பிறகு வந்து தன்னிடம் கேட்டுத் தீர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி டியூஷன் வந்திருந்த பிள்ளைங்களை எல்லாம் ஆசிரியர் வீட்டுக்கு திரும்பி அனுப்பி இருக்க, வீட்டுக்கு வந்து தாயையும் தந்தையையும் தேடி அறைக்கு வந்தவன் அவர்களின் உரையாடல்களை எல்லாம் சரியாகவே கேட்டு விட்டான்.
தங்கள் உரையாடலை மொத்தமாய் கேட்டு விட்டானோ எனப் பயந்த செல்வத்துக்கு கைகால்கள் நடுக்கம் கண்டு விட்டது. விஜயின் ரோஷம் பற்றி அறியாதாவனா அவர்? அவனின் கோபத்தை விட, ரோஷமும், ஆத்திரமும் மிகவும் பயங்கரமானவை என அவர் தான் நன்கு அறிவாரே!
முதலில் சுதாகரித்துக் கொண்ட யமுனா, "கண்ணா.. அதுக்குள்ள டியூஷன் விட்டு வந்துட்டியாப்பா?" என்று கேட்டபடி அவனருகில் செல்ல முயல, அவன் தன் கணீர்க் குரலில் கேட்ட ஒரு கேள்வி இருவரின் காதை மின்னல் வேகத்தில் வந்தடைந்தது.
"அலமேலு பெரிம்மா என்னோட பெரிம்மாவா.. இல்லை அம்மாவா?"
தொடரும்.