அலமேலு யமுனாவின் கூடப் பிறந்த சகோதரி. யமுனாவை விட நான்காண்டுகள் பெரியவள் தான் மற்றவள்.
விஜய்யின் மேல் தாய்க்கு நிகராக அன்பு வைத்திருந்தாள் யமுனா. அலமேலு சுறுக்கு மாட்டி கால்கள் துடி துடிக்க இறந்து போகும் போது விஜய்க்கு வெறும் மூன்றே வயது தான்.
காலையில் கண் விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கும் வரைக்கும் யமுனாவின் மடியிலே தான் புரண்டு கிடப்பான். விளையாட்டு கார் ஓட்டி மகிழ வேண்டும் என்றாலும் யமுனா வேண்டும் அவனுக்கு. அவனைப் பொறுத்த வரைக்கும் அலமேலுவும், யமுனாவும் ஒன்றுதான் என்பதால், யமுனாவின் அருகாமையில் அலமுவின் இழப்பை மறந்து போனான்.
யமுனாவே அவனுக்கு தாயாகி விட்டாள். அக்காளின் குழந்தையை தன் குழந்தையென கண்ணுக்குள் பொத்தி வைத்து வளர்த்தாள். இந்த நிலை தொடர வேண்டும், விஜய்க்கு தாயன்பு என்றுமே கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் அலமேலு இறந்து ஆறேழு மாதங்கள் கழித்து செல்வநாயகம் அவளை இரண்டாந்தாரமாக கட்டிக் கொண்டது.
யமுனாவும் மறுக்கவில்லை. விஜய்க்காக மட்டுமே உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று மனதோடு கூறிக் கொண்டதும் அல்லாமல் இறந்து போன அலமுவிடமும் ஆயிரமாயிரம் மன்னிப்புகளை கேட்டுத் தொலைத்தாள். தன் கழுத்தில் தொங்கும் தாலியைப் பார்க்கும் போதெல்லாம் அழையா விருந்தினராய் அலமேலுவின் நினைவில் கண்கள் கரித்து விடும் யமுனாவுக்கு.
அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு விஜய்யிடம் அலமேலு அவனுக்கு பெரியம்மா என்றும், யமுனா தான் அவனுக்கு தாயென்றும் கூறி வைத்தது தான்!
இன்று வரைக்கும் அலமேலுவை பெரியம்மாவென்று தான் நினைத்துக் கொண்டிருந்தான் விஜய். ஆனால் இப்போது இருவரின் உரையாடலை மிகத் தெளிவாக செவியுற்ற பிறகும் அப்படி நினைக்க முடியவில்லை அவனால். அதனால் தான் இந்தக் கேள்வி.
அவனின் கேள்வியில் பதில் கூறத் தெரியாமல் அதிர்ந்து பின் வாங்கினாள் யமுனா.
அவனின் கோபமுகம் புதிது அவளுக்கு. சில சந்தர்ப்பங்களில் அவள் மேல் கோபம் பொங்கி வந்தாலும் தன்னால் தாயின் மனம் கசங்கி விடக் கூடாது என்பதற்காக கோபத்தை தனக்குள்ளே புதைத்துக் கொள்வான் விஜய். அதை யமுனாவும் தான் அறிவான். ஆனால் இன்று? இன்று கோபத்தில் நிதானம் தவறி இருக்கிறான் இவன். கோபத்தில் எதையாவது பேசி விட்டால் தன் மனமும் சுணங்கி விடுமே என்று பின் வாங்கினாள்.
"என் கேள்விக்கு பதில்.." என்றவனின் கணீர் குரலில் சட்டென்று துள்ளி விழுந்தவள்
"இது.. இதென்ன கேள்வி விஜய்? உ.. உனக்கு அம்மாவா என்னைத் தவிர வேற யாரு இருக்க முடியும். நான்தான் உன் அம்மாடா.." என்றாள் திடத்தை வரவழைத்த குரலில்..
"இன்னும் எத்தனை நாளைக்கும்மா என்னை ஏமாத்த பாக்குறீங்க?" என்று கேட்டவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க கூட திராணியற்று தலை குனிந்து கொண்டான். பூஜையறையில் மலர்மாலையுடன் தொங்கிக் கொண்டிருந்த அலமுவின் புகைப்படத் தோற்றத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.
அதே நேரம், தாய் தன்னை விட்டும் இவ்வுலகை விட்டும் பிரிந்து செல்ல எதோவொரு விதத்தில் செல்வநாயகமும் காரணம் தான் என நினைக்கும் போது தவிப்பு மொத்தமும் கோபமாய் மாறி அவர் மேல் திரும்பியது.
கோபத்தில் கண்டபடி திட்டித் தொலைத்ததில் பெருமளவில் மனம் நொந்து போயிருக்க வேண்டும், இல்லையெனில் அறையில் இருக்கும் போது அலமும்மா தான் என நினைத்து யமுனாம்மாவை.. ஏதோ சொன்னார்களே.. எதுவா இருந்தா எனக்கென்ன.. இதில் எதோவொரு காரணம் தாயின் மனதை ஆழமாக பாதித்து விட்டது. அதனால் தான் இந்த விபரீத முடிவை எடுத்து வாழ்வையே அந்த சுருக்குக் கயிறின் மூலம் மாய்த்துக் கொண்டு உலகை விட்டு பிரிந்து சென்று விட்டது.
சரியான காரணம் அறியவில்லை என்றாலும் தந்தையின் மேல் கூறி விவரிக்க முடியாத ஒரு கோபமும், வெறுப்பும் குடி கொண்டு விட்டது அவனின் மனதில்.
அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது. இனியும் பொய் கூறிப் பயனில்லை என நினைத்த யமுனா, "வாயில வந்தபடி பேசாத விஜய். உன்னை நானோ உங்கப்பாவோ ஏமாத்த நினைக்கல. உன் மனசு கஷ்டப்படக் கூடாதுனு தான் உண்மையை மறைச்சோம். நானே உனக்கு அம்மாவா இருக்கணும்னு ஆசைப்பட்டு ஒரு பொய்.. ஒரே ஒரு பொய் சொன்னது தப்பா?" என்று கேட்டாள் இயலாமையுடனும், கவலையுடனும்..
விஜய் அவளின் முகத்தைப் பார்க்கவில்லை. அவள் காட்டிய அன்பு எத்தகையது என்பதை அவன் தான் அறிவானே..
சொந்த குழந்தைகள் கூட இரண்டாம் பட்சம் தான் அவளுக்கு. இன்று வரைக்கும் அவளின் அன்பில் சிறு சந்தேகன் கூட வந்ததில்லை அவனுக்கு. அன்புக்கும் கனிவுக்கும் அர்த்தம் சொல்லிக் கொடுத்ததே அவளின் அன்பான பேச்சும், கனிவான தலை வருடலும் தான். அவ்வளவு அன்பு. விஜய் எதைக் கேட்டாலும் அடுத்த பத்தாவது நிமிடமே அதை அவனின் கைகளில் எடுத்து வந்து வைத்து விடுவாள், அது பொருளாக இருந்தாலும், வேறு ஏதாவதாக இருந்தாலும் சரியே!
அவனும் அப்படித்தான். அவளுக்காக எதையும் செய்யத் துணிவான். உலகிலே மிகவும் பிடித்த பெண்மணி அவள் மட்டும் தான். தனக்கு ஜனனம் கொடுத்தவளுக்காக உயிரையும் கொடுப்பேன் எனும் அளவுக்கு உயிரையே வைத்திருந்தான்.
ஆனால் உண்மையை மறைத்து தன் தாயையே உனக்கு பெரியம்மா என அறிமுகப்படுத்தி, தாய்க்கான இடத்தைப் பறித்துக் கொண்டு விட்டாளே என அவனின் மனம் கதறியது.
"அம்மாவையே தன்னோட பெரிம்மானு அறிமுகப் படுத்தின த பெஸ்ட் அப்பா நீங்களா தான் இருப்பீங்கப்பா.. நினைக்கும் போதே கண்ணு வேர்க்குது" என்று கூறி விட்டு அழுது கொண்டே அங்கிருந்து ஓடி விட்டான்.
யமுனா ஓய்ந்து போய் கட்டிலில் அமர்ந்து கொள்ள, தன் ஆசை வெறும் இரண்டு மணி நேரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இனி என்னையோ யமுனாவையோ அவன் மன்னித்து ஏற்றுக்கொள்வது என்பது நடக்கக் கூடிய காரியமா என்ற எண்ணத்துடன் தொப்பென்று கட்டிலில் விழுந்தார் செல்வநாயகம்.
அன்று முதல் அறைக்குள் தூக்கி இருந்த அலமேலுவின் புகைப்படத்துக்கு முன் நிறைய நேரங்களை செலவு செய்தான் விஜய். யமுனாவே வந்து பேசினாலும் பதில் கூறாமலே நகர்ந்து சென்றான். அவள் மேல் எந்தக் கோபமும் இல்லை தான் என்றாலும், தன்னிடம் பொய் உரைத்து விட்டாளே என்ற கவலையும் ஆதங்கமும் அவனை பேச விடாமல் தடுத்தது.
அலமேலு தான் தன் தாய் என அவன் அறிந்தே இருந்தாலும் யமுனா காட்டும் அளவற்ற அன்பிற்கு அடிமையாகி அவனாகவே விரும்பி அவளை அம்மா அம்மாவென்று மொத்த பாசத்தையும் குரலில் தேக்கி அழைத்து, அவளையே வலம் வந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது தான்..
இப்படியே நாட்களும் நகர்ந்து சென்றது. வருடங்கள் கடந்தும் யமுனா, செல்வத்தின் முகத்தைப் பார்க்க மாட்டேன் என்பதில் பிடியாய் இருந்தான் விஜய். மறக்க முடியாத துரோகத்தின் வலியை அவர்களை தவிர வேறு எவராலும் கொடுத்திருக்க முடியாது என்று கூட நினைத்து விட்டான் என்றால் பாருங்கள், அவனின் மனம் இந்த விடயத்தில் எந்தளவுக்கு வருந்தி இருக்குமென்று..
அன்றொரு நாள் அவனை தேடி அறைக்கு வந்திருந்தாள் யமுனா. அவனாகவே வந்து பேசுவான், தனக்கு மன்னிப்பளிப்பான் என்று தான் இத்தனை நாட்களும் காத்திருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவே இல்லையே..
மனப்பாரங்களை தீர்த்துக் கொள்ள வழியின்றி அவனை நாடியே வந்திருந்தாள்.
"விஜய் கண்ணா.." என்றழைத்தபடி அறைக்குள் வந்தவள் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்த விஜயின் அருகில் அமர்ந்தாள். அந்த லேப்டாப்பும் கூட அவர்களின்செலவில்
பணத்தில் வாங்கியதல்ல.. கடந்த சில வருடங்களாக பகுதி நேர வேலை செய்து சம்பாதித்து, பணம் சேமித்து மீதியை எப்படியாவது திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று கூறிவிட்டு வாங்கிக் கொண்டு வந்தது..
'அம்மாவை போலவே ரோஷக்காரண்டா நீ..' என மனதினுள் கூறிக் கொண்ட யமுனா, வந்தமர்ந்ததில் இருந்தே தன்னைக் கண்டும் காணாதது போல் இருக்கும் மகனின் தலை வருடி விடவென்று கையைத் தூக்க, அதற்குள் கட்டிலில் விட்டுத் துள்ளி எழுந்து அங்கிருந்து நகர்ந்திருந்தான் விஜய்.
அவனின் அந்த செயலில் அவளின் மனம் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
முனுக்கென்று எட்டிப் பார்த்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், "உன்கிட்ட பேசணும் விஜய்.." என்று கூற, அவள் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் கபோர்ட்டில் அடுக்கி இருந்த ஆடைகளில் தனக்கான ஒரு இரவுடையை தேடத் தொடங்கினான்.
"நான் பண்ணது தப்பு தான் கண்ணா.. எனக்கு அம்மா இல்லையேனு நீ ஒரு வாட்டியாவது மனசாலையும் நினைச்சிடக் கூடாதுன்னு நினைச்சேன். உன் சந்தோசத்துக்காக ஒரு பொய்யை சொன்னா தப்பில்லைன்னு மடச்சி மாதிரி யோசிச்சேன். என் அன்பை உன் தம்பி தங்கச்சிங்களை விட உனக்கு தான் அதிகமா காட்டணும்னு ஆசைப்பட்டேன்.. எல்லாம் யோசிச்ச நான், என் மூத்த பையனுக்கு ரோஷம் அதிகம்னு சொல்லுற விஷயத்தை மறந்துட்டேன்ப்பா.."
விஜய் அவளை திரும்பியும் பார்க்கவில்லை. அவள் கூறுவதை காது கொடுத்துக் கேட்டபடி இருபது நிமிடங்களாக கபோர்ட்டில் சட்டை தேடிக் கொண்டிருந்தான். புறங்கைகளால் கண்களை துடைத்து விட்டபடி அவளே தொடர்ந்தாள்.
"இந்த அம்மாவை ஒரே ஒரு வாட்டி மன்னிச்சுடு கண்ணா. உன் அம்மாவை உன்கிட்ட இருந்து தூரமாக்கணும்னு இதையெல்லாம் பண்ணல நான். உன் சந்தோசத்தை தான் நினைச்சேன். நீ ஒரு நிமிஷமும் கண்ணு கலங்கிடக் கூடாதுன்னு நினைச்சேன்..
உன் அம்மா இல்லேன்னா என்ன கண்ணா.. அவளைப் போலவே உன்னை நான் ரொம்ப நல்லா பார்த்துக்கறேன் இல்ல.. உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும்பா.. வேற யாரையும் புடிக்காத அளவுக்கு உன்னைப் புடிக்கும். ஐம் சாரிடா.."
"கஷ்டப்பட்டு என்னை உலகத்துக்கு கூட்டிட்டு வந்தது என்னோட அம்மா.. ஆனா நீங்க அவங்களோட கஷ்டத்தை மறந்து நான் கஷ்டப்படக் கூடாதுனு நினைச்சீங்க.. இல்லனு சொல்லல. நீங்கன்னா எனக்கு உயிரு. அலமு பெரிம்.. அலமும்மா என்னோட அம்மானு உண்மை எனக்கு தெரிஞ்சிருந்தாலும் அவங்க என் பக்கத்துல இல்லாததை நினைச்சு கவலைப்பட்டு தினம் தினம் கும்பிடறதோட முடிஞ்சிருக்கும். ஏன்னா நீங்க காட்டற அன்பு அப்டி..
ஆனா நீங்க ஏன் என்கிட்டே இருந்து மறைச்சீங்க. உண்மையை எவ்ளோ நாளைக்கு மறைச்சு வைக்க முடியும்னு நினைச்சீங்க சி..த்தி.."
கையில் துண்டையும் எடுத்துக் கொண்டு வேறு பேச எதுவுமில்லை என்பது போல் அங்கிருந்து நகர்ந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான் விஜய்.
அவனின் 'சித்தி' என்ற அழைப்பில் விம்மலுடன் டைல்ஸ் தரையில் சரிந்து அமர்ந்து விட்டாள் யமுனா. நெஞ்சம் விம்மித் தவித்து கண்கள் கண்ணீரை சிந்தியது. இந்த வார்த்தையை கேட்பதற்கு பதில் அலமுவுக்கு பதில் நானே இறந்து போயிருக்கலாம் என்று ஏங்கிப் போனாள்.
பிறந்ததும் முதலே யமுனாம்மா யமுனாம்மா என்று பின்னால் சுத்தியவன், 'அது உன் அம்மா இல்லைடா.. சித்தினு சொல்லு..' என அலமு வார்த்தைகளைக் கோர்த்து அவனுக்கு பேசப் பழக்கிய நேரத்தில் பாற்பற்கள் தெரியும் படி சிரித்து மனதை குளிர்வித்தவன்,
அம்மா அம்மாவென தன்னையே சுற்றி சுற்றி வந்து 'உனக்காய் உலகையும் காலுக்கு கீழ் மண்டியிட வைப்பேன் அம்மா' என சபதம் எடுத்தவன் அவன்.
'அம்மா' என்ற அழகான சொல்லை கொச்சைப் படுத்தியதற்காக பாடசாலையில் ஒரு மாணவனின் மூக்கை உடைத்து விட்டு, எதற்கு அப்படிப் பண்ணினாய் என்று அதட்டும் போது 'அவன் அம்மானு சொன்னதும் உங்களை தான் யாபகம் வந்துச்சும்மா..' என்று கூறி அவளின் கோபத்தை தூரமாய் விரட்டி அடித்தவன்,
'இவங்களை மாதிரி ஒரு அம்மா கொடுத்ததுக்கு தேங்க்ஸ் கடவுளே' என தினம் தினம் பூஜையறையில் அலமுவின் புகைப்படத்துக்கு அருகில் இருக்கும் கடவுளிடம் கை கூப்பி நன்றி தெரிவித்தவன்.. எல்லாம் இவனே.. அவனால் தான் தாய்மை என்ற ஒரு விடயத்தையே அளவுக்கு அதிகமாக அவள் விரும்ப ஆரம்பித்ததே. 'அம்மா..' என்ற சொல்லை அளவு கடந்து நேசிக்க தொடங்கியதே..
அவன் தான்.. ஆள் மாறாட்டம் எதுவுமில்லை. அப்படியெல்லாம் யமுனாவை தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடியவன் அவன் தான், இன்று 'சித்தி' என அந்நியமாய் அழைத்து அவளின் மனதை கத்தியின்றி குத்திக் கிழித்து விட்டது.
அந்த ஒரு அழைப்பிலே மூச்சடைத்து விட்டது அவளுக்கு. இரவு முழுவதும் செல்வநாயகத்திடம் புலம்பி அவரின் தூக்கத்தைக் கெடுத்தவள் மறுநாள் கையில் ஆடைப் பையுடன் அவர்களின் முன்னிலையில் வந்து நின்ற விஜய்யைக் கண்டு மயங்கியே விட்டாள்.
"உங்களுக்குனு குழந்தைங்க இருக்காங்க. உடைஞ்சு போகாம ப்ளீஸ் அவங்களை பார்த்துக்கோங்க. மேல்படிப்பு படிக்க நான் சென்னைக்கு போகிறேன்.." என்று கூறிவிட்டு சென்று விட்டான்.
அனுமதி கேட்கவில்லை. செல்வதற்கு ஆயத்தமாகி வந்து போகிறேன் என்று ஒரு வாய் வார்த்தைக்காக தான் கூறினான். அவனை தடுத்து நிறுத்த வழியின்றி கண்களில் கண்ணீருடன் பார்த்திருந்தனர் குடும்பத்தினர்.
அன்றைய நினைவில் முகம் கசந்து நின்றிருந்தவன் யமுனாவின் அழைப்பில் தெளிந்து நிமிர்ந்தான். செல்வநாயகத்தின் நீட்டப்பட்ட கைகள் இன்னுமே அவனை நோக்கி நீண்டு தான் இருந்தது.
அவனிடம் தேநீர் நீட்டினாள் யமுனா. அதை மறுக்க மனமின்றி எடுத்துக் கொண்டவன் தந்தையை ஏறெடுத்தும் பாராமல் அங்கிருந்து வெளியேறி விடப் போக,
"நில்லு விஜய்.." என அவனை தடுத்து நிறுத்தினாள் யமுனா.
அவளின் குரலில் என்றும் இருக்கும் மென்மையும், கனிவும் இல்லை.. மாற்றமாக சற்றே சீற்றம் தெரிந்ததும் அவனது கால்கள் தானாகவே நின்று விட்டது. அதற்கு மேல் நகர முடியவில்லை என்பதை விட, நகர நினைக்கவே இல்லை.
"வைத்தியம் பார்க்க போனது காயம்பட்ட காலுக்கு. ஆனால் வைத்தியர் வைத்தியம் சொன்னது அவரோட உடலுக்கும் கூட சேர்த்து.. உங்கப்பா ரொம்ப வீக்கா இருக்காராம்டா. மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காராம். இப்டியே இருந்தா ரொம்ப கஷ்டம்னு டாக்டர் வருத்தப் பட்டாரு.. உனக்கு உன் அப்பா மேல பாசமே இல்லையா.."
'பாசம் இல்லையாவா.. அவர் தான் என்னோட ஹீரோவே..' என பட்டென்று கத்தரித்து பேசி விடத் துடித்த நாவை அடக்கிக் கொண்டு விறைப்பாய் நின்றவனின் பார்வை செல்வத்திடம் தான் இருந்தது. ஒருவேளை, தன் மனதை வெறும் ஒற்றைப் பார்வை மூலம் அவருக்கு உணர்த்தி விட முயன்றானோ?
"இதுக்கு மேல எதுவும் மறைச்சு வேலை இல்ல. நான்தான் எல்லா உண்மையையும் உன்கிட்டே சொல்லாம மறைச்சேன். எனக்கு வாழ்க்கை பூரா வேணா தண்டனை கொடு விஜய். ஆனா உங்கப்பா மேல எந்தத் தப்பும் இல்ல..
உங்கம்மாவோட சாவுக்கும் அவருக்கும் எந்த விதத்துலயும் சம்பந்தம் இல்ல. நீ அவரை தப்பா நினைச்ச அளவுக்கு மோசமானவரு இல்லை. அவ தற்கொலை பண்ணிக்க காரணம் இதான்.. நீயே பாரு.." என்றவள் கபோர்ட் கதவை திறந்து வேக வேகமாக எதையோ தேடி எடுத்து அவனின் கையில் திணித்தாள்.
அது ஒரு வெள்ளைக் காகிதம். அதில் அலமுவின் கை எழுத்து அவனைப் பார்த்து அழகாய் சிரித்தது.
தொடரும்.