அவளின் கையிலிருந்த பஜ்ஜித் தட்டு நழுவி கீழே விழுந்து உடைந்து போயிருக்க, பஜ்ஜிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி இருந்தன.
அறைக்குள் வந்ததும் வராததுமாய் 'பப்லு யார்?' என்று கேட்ட விஜய்யை முறைக்கக் கூட முடியாமல் கீழே விழுந்து சிதறிய பஜ்ஜிகளை ஏக்கத்துடன் பார்த்தவள், அந்த சித்திரத்தை வரைந்தது பத்தாதென்று அதில் 'பப்லு அன்ட் கௌதமி..' என்று வேறு கிறுக்கி வைத்து விட்டேனே என தன்னையும் திட்டிக் கொண்டாள்.
"ம்க்கும்.."
அவனது கணைப்பில் மீண்டுமொரு முறை துள்ளி விழுந்தவள் கண்களில் கோடிட்ட கண்ணீருடன் நிமிர்ந்து விஜய்யைப் பார்த்தாள்.
அவளது கண்ணீரில் பதறியே விட்டான் விஜய். இருந்தாலும் அந்த பப்லு யாரோ என மனம் பிராண்டியதால் அழுகையினூடாகவே அவள் பேசி முடிக்கட்டும் என கை கட்டி விறைப்பாய் நின்றிருந்தான்.
தன் கண்ணீரைக் கண்டதும் பதறிப் போய் தன்னை ஆறுதல் படுத்த வருவான்.. இதுவே சாக்கென்று அவனின் கேள்விக்கு பதில் கூறாமல் நழுவி விடலாம் என திட்டமிட்டிருந்த கௌதமி அவனது அசராத பார்வை கண்டு எச்சில் விழுங்கினாள். கண்ணீர் எப்போதோ நின்று போயிருந்தது.
அடிக்கடி ஏறி இறங்கும் அவளின் தொண்டைக் குழிக்குள் கிறங்கி அவனும் தொலைந்து கொஞ்சம் கொஞ்சமாக நிகழை மறக்க ஆரம்பித்த நேரம்,
"பப்லு என்னோட லவ்வரு.." என கௌதமியின் விம்மல் குரலில் கேட்டு சட்டென்று தெளிந்தான். என்ன செய்து கொண்டிருந்தாய் என்று கேட்ட மனசாட்சியின் கேள்விக்கு பதில் கூறாமல் மனையாளையே குறுகுறுவெனப் பார்த்தான்.
கையைப் பிசைத்தபடி தவறு செய்த மாணவியாய் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள் அவள்.
"லவ்வரா?" சற்றே உள்ளிறங்கிய குரலில் கேட்ட விஜய்க்கு மனதின் ஏதோவொரு மூலையில் ஏமாற்றமும், வெறுமையும் படர்வதை தடுக்க முடியவில்லை. தொண்டைக்குழிக்குள் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு.
ஆமென்று தலை அசைத்தவள், "நான் ஒரு பையனை லவ் பண்ணேன். அவரை முதன் முதலா என் ஃப்ரண்ட் தங்கச்சியோட கலியாண வீட்டுல பார்த்தேன். பார்த்ததும் பிடிச்சு போச்சுங்க. சூப்பர் ஹண்ட்ஸமா, பார்த்ததுமே ரசிக்கணும்னு தோன வைக்கிற அளவுக்கு அவ்ளோ அழகா இருந்தாரு. கியூட்னு சொல்ல முடியல. ஏன்னா பாய்ஸ் கியூட்டா இருக்கிறதை விட, ஹண்ட்சமா இருக்குறது தான் செமயா இருக்கும்.." என்று மூச்சு விடாமல் பேசினாள்.
'இவ்வளவு பேசுவியா?' என மலைப்பாக விழி விரித்தான் விஜய். அவளின் மொழிகளில் பாதி கண்ணசைப்பாகவோ, புருவசுழிப்பாகவோ, இல்லையேல் கண்கள் விரித்து முட்டை விழிகளை விரித்து முழிக்கும் முழியாகவோ தான் இருக்கும். அப்படி இருக்கையில் இவள் மூச்சு விடாமல் பேசுவது வியப்பை தான் கொடுத்தது அவனுக்கு. கூடவே, அவளின் காதலனைப் பற்றிக் கேட்டதும் தான் இவ்வளவு ஆர்வமாக வாய் மூடாமல் பேசுகிறாள் என மனமும் சற்றே கசந்தது.
"அவரோட பேர் தெரியாததால நானே 'பப்லு'னு செல்லமா ஒரு பேரை சூட்டினேன். அவருன்னா எனக்கு ரொம்பப் புடிக்கும்ங்க.." என்றாள் அப்பாவியாய். வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அழகாய் கோர்த்து வாய் திறந்து பேசுவதற்குள் ஆயிரம் முறைகள் தொண்டைக் குழியை எச்சில் விழுங்கி ஈரப்படுத்திக் கொண்டிருப்பாள்.
கீழுதட்டைப் பற்களுக்குள் சிறைப்படுத்தி சுணங்கிய மனதின் தோற்றத்தை வெளிக் காண்பிக்காமல் இருக்க பாடுபட்டான் விஜய்.
ஆனாலும், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்? அவனின் மனச் சோர்வு அவனின் முகத்தில் அவ்வளவாக இல்லை என்றாலும் கொஞ்சமாக தெரியத்தான் செய்தது. இது அவனின் கேரியரா என்ன விறைப்புடன் கையாண்டு விட்டு பெருமூச்சுடன் கடந்து சென்று விட.. இல்லையே.. அவனின் வாழ்வும், மனம் கவர் பச்சைக் கிளியும் சம்பந்தபட்ட விடயமாயிற்றே! எவ்வாறு கடந்து செல்வான்..
"அன்னைக்கு பார்த்ததுக்கு அப்பறம் நான் அவரைப் பார்க்கவே இல்லைங்க. ரொம்ப மிஸ் பண்ணேன். என் ஃபிரண்ட் கிட்ட கூட அவங்களை பத்தி நிறைய வாட்டி கேட்டிருக்கேன். அவருக்காக ரொம்ப நாள் வெயிட் பண்ணேன். ஆனா.. ஆனா அவரை திரும்ப பார்க்கல. மீட் பண்ணவும் இல்ல. எனக்காக அவர் திரும்ப வரவும் இல்ல.."
அவளது கண்களில் மாலை மாலையாய் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு, அவளைத் தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டவனின் மனம் நிம்மதியின்றி அடித்துக் கொண்டது.
தன் மனதைப் போலவே அவளின் மனதும் வெற்றிடமாய் இருந்திருக்கும் என்றும், அந்த வெற்றிடத்தில் தன் பிம்பத்தை மொத்தமாய் நிரப்பி விட வேண்டும் அல்லவா அவன் நினைத்திருந்தான். காதலா என்ற கேள்விக்கு இன்று வரைக்கும் பதிலில்லை. ஆனால் அவள் எனக்கு மட்டுந்தான் என்பதில் உறுதியாய் இருந்தவனுக்கு கௌதமி கூறியது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
கௌதமி நிஜமாகவே கலங்கி விட்டாள். அவனைப் பற்றி நொடிக்கு நொடி சிந்தித்து இந்தக் காதல் கைக் கூடுமோ என அவள் துடித்த நாட்கள் எல்லாம் பொய் அல்லவே.. குறும்புடனும் குழந்தைத் தனத்துடன் வெளியுலகில் சதா வலம் வருபவளை அமைதிப்படுத்தும் சக்தி அவனைப் பற்றிய நினைவுகளுக்கு மட்டுமல்லவா இருந்தது?
"அப்பறம் தான் சடனா கார்த்தி நம்ம எல்லாரையும் விட்டுப் போய்ட்டான். அவன் எனக்கு ரொம்ப நல்ல நண்பன். என்னோட வெல்விஷர், பப்புவுக்கு அடுத்ததா நான் ரொம்ப நெருங்கிப் பழகுனது அவன்கிட்ட மட்டும்தான். ஆனா அவனும் என்னை விட்டுட்டுப் போய்ட்டான்.."
கார்த்திக்கை பற்றிப் பேசும் போது அவளின் விம்மல் கேவலாக வெடித்தது. படபடவென நடுங்கத் தொடங்கிய கைகள் அவனது டீஷர்ட்டை மிக அழுத்தமாய்ப் பற்றிக் கொள்ள, அவனுக்குள்ளே மேலும் மேலும் புதைந்து ஆறுதல் தேடினாள்.
"அழாதம்மா.. அவன் உன்னை விட்டு எங்கயும் போகல. இன்னுமே உன்கூட தான் இருக்கான்.." தம்பியின் நினைவில் கனத்த மனதை ஆறுதல் படுத்திக் கொண்டு கூறி, அவளின் தோளைச் சுற்றி தன் கைகளைப் போட்டு அணைத்தான்.
கார்த்திக்.. கார்த்திக்.. கார்த்திக் என்ற ஜீவனை மறக்க முடியவில்லை இருவராலும். தந்தையை தப்பாக நினைத்து அவரைப் பிரிந்து இருந்து விட்டேனே என புண்பட்டுப் போயிருந்த அவனின் மனம், கௌதமி கூறியதில் மேலும் காயம்பட்டு, இப்போது கார்த்திக்கின் நினைவில் வலியில் கசங்கியது.
எவ்வளவு நேரம் இருவரும் அப்படியே இருந்தார்களோ.. மெதுவாக தலை தூக்கி அவனைப் பார்த்த கௌதமி, "நான் பப்லுவை நம்ம கலியாணத்தன்னைக்கு பார்த்தேன்ங்க. கண்டிப்பா அவரை உங்களுக்கும் இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன்.."
உண்மையை கூறத் தயங்கி சிறு குரலில் வாழ்த்துக்கள் கூற, முகம் காணாத பப்லுவை நினைத்து பொறாமை கொண்டவன் மனமேயின்றி சரியென்று தலை அசைத்தான்.
"இருங்க நான் வரேன்.." என்றவள் அவனை விட்டு மெதுவாக விலக, மனதில் குடி கொண்ட புது குழப்பத்தின் காரணமாக அவளின் நொடி நேரப் பிரிவும் இப்போது வலித்தது அவனுக்கு.
அவளின் கைப்பற்றி இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ளலாம் என நினைப்பதற்குள் அவள் அங்கிருந்து ஓடி மறைந்து விட்டாள். சோர்ந்த மனதுடன் திரும்பியவன் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
கார்த்திக் அவளின் நலன்விரும்பி, நல்ல நண்பனும் கூட! ரொம்ப நெருக்கமானவன். அப்படிப்பட்டவனுக்கு அவளின் காதல் சரித்திரம் தெரியாமல் போகுமா? அது சாத்தியமா.. அப்படித் தெரிந்திருந்தால் அவன் அவளின் கைகளை தன் கைகளில் ஒப்படைத்து விட்டு உயிர் துறந்து இருப்பானா என சில நொடிகள் ஓரிடத்தில் அமர்ந்து சிந்தித்து இருந்தாலே அந்த பப்லு வேறு யாருமில்லை அவனே தான் என்று விஜய்க்கு தெரிந்திருக்குமோ என்னவோ.. ஆனால் அந்த அளவுக்கு பொறுமை இருக்கவில்லை அவனுக்கு.
அந்த பப்லு யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவனைக் கொன்று விட்டால் என்ன என்று கூட பைத்தியகாரத் தனமாய் சிந்தித்தவன் கை முஷ்டியை இறுக்கினான்.
அவளது இறந்தகாலம் பற்றி அவனுக்கு கவலை இல்லை தான் என்றாலும், அவனைப் பற்றிக் கூறும் போது ஜகஜோதியாய் ஜொலித்த முகமும், ஆர்வத்தில் மின்னிய கண்களும் அவனை வருத்தத்தில் ஆழ்த்தியது. கௌதமியை வார்த்தைக்காகவேனும் அவன் இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்க தயாரில்லை எனும் போது, அவளின் மனதை இன்னொருவனிடம் நிலைத்திருக்க விடுவானா அவன் என்பது சந்தேகமே..
'உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பேன். ப்ளீஸ் உனக்கு அவன் வேணாம். அவனை மறந்திடேன்..' அவள் மீது நேசம் துளிர்த்த மனமோ அவளிடம் மானசீகமாய் கெஞ்சியது.
'நான்தான் உனக்கு பொருத்தமானவன். ப்ளீஸ் என்கூடவே இருந்திடேன். எனக்கான உலகத்தில் நீ மட்டும். உனக்கான உலகத்தில் உனக்கு எல்லாமாய் நான் மட்டும்.. நமக்கான உலகத்தில் நாமும் நம் காதலும் போதும்' எனக் கூறி அச்சிறு வண்ண மலரின் காலைப் பிடிக்கக் கூட தயங்க மாட்டான் அவன்..
ஆனால் நாமும் நம் காதலும் என அவன் மனம் கூறிய வரியை இருந்த டென்ஷனில் அவன் அவதானிக்கவில்லை என்பதுவே அவலம்!
இரவு வானில் உலா வந்த நிலவை கை காட்டி மிதுனை உறங்க வைக்க முயன்று கொண்டிருந்த ஆதர்யா, தன் அருகே நிழலாட்டம் தெரிந்ததும் மெதுவாக திரும்பிப் பார்த்தான்.
"ஆதும்மா.." என அன்புருகும் குரலில் அழைத்து விரித்திருந்த பாயில் கால் நீட்டி அமர்ந்து கொண்ட விஜய், பெருமூச்சுடன் அவளைப் பார்த்தான்.
"என்ன அண்ணா இந்த டைம்ல.. தூங்கலை? கௌத.. ஸ்ஸ்ஸ் அண்ணி எங்கண்ணா.."
"பாத்ரூம்ல பிரெஷப் ஆகறா.." என்றவன் அவளின் முடியை மெல்லமாகக் களைத்து விட, அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் பொலபொலவென கொட்டத் தொடங்கியது. முகத்தில் ஒட்ட வைத்திருந்த புன்னகை சட்டென்று மறைந்தது.
"எ.. என்னால அவரோட துரோகத்தை ஏத்துக்க முடியலண்ணா.. சுகமா, பணத்தோட வாழறதுக்காக என்னை பகடைக் காயா யூஸ் பண்ணி இருக்கான்னு தெரிஞ்சதும் என்னை நினைச்சே கோபம் வருது. ஒருத்தன் இந்தளவுக்கு என்னை ஏமாத்தியும் கூட படுமுட்டாளா இருந்துட்டேன் அண்ணா.. ரொம்ப வலிக்குது.." என அவனின் தோளில் சாய்ந்து கொண்டு கண்ணீர் உகுந்தாள் ஆதர்யா.
விஜய் அடித்த அடியில் ராகேஷின் ஒருகால் உடைந்து, உடல் முழுவதும் காயங்கள் நிறைந்து விட்டது. அவனது உடலில் உயிர் ஊசலாடி இப்போதோ இன்னும் சற்று நேரத்திலோ என்றிருக்கும் போது தான், உன்னை அவ்வளவு இலகுவாக கொன்று விட மாட்டேன் என்று கூறி அவனை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் போட்டது.
அவனை எவ்வளவு தாக்கியும் விஜயின் கோபம் சற்றும் தணியவில்லை. மன்னிக்க கூடிய, மறக்கக் கூடிய தவறையா செய்தான்? விருப்பத்துக்குறிய ஒரு உயிரை அல்லவா அநியாயமாய் எடுத்து விட்டது?
இவனை கொன்று விடுவதாலோ, இல்லை நொடிக்கு நொடி செத்துப் பிழைக்கும் அளவுக்கு சித்திரவதை செய்வதாலோ இறந்தவன் திரும்பி வரப்போவதில்லை தான் என்றாலும் அவனது வேதனை முகம் காணுகையில் விஜயின் மனதில் ஒரு நிம்மதி பரவியது. அதற்காகவே அவனை நிறைய படுத்தினான்.
விடயத்தின் சூடு ஆறும் முன்பே சகல உண்மைகளையும் ஆதர்யாவிடம் கூறி விட்டான் விஜய். அவன் அவளுக்கு மட்டுமாவது உண்மையாய் இருந்திருந்தால் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பான். ஆனால் அதுவும் இல்லை எனும் போது அவனை சும்மா விடத் தோன்றவில்லை அவனுக்கு. நடுத்தெருவில் அலைய விட வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
ஒரே வயிற்றில், ஒன்றாகவே வளர்ந்து உலகிற்கும் ஒன்றாகவே கால் பதித்த தன் இரட்டை ஜென்மத்தை கொன்று விட்டது ராகேஷ் எனத் தெரிந்ததும் அவன் மீது அவள் கொண்டிருந்த காதல் மொத்தமும் கோபமாக மாறி, நம்பிக்கை மொத்தமும் பழி உணர்ச்சியாக மாறி விட்டது.
சற்றும் தாமதிக்காமல் உடனே டிவோர்ஸ் பேப்பர்ஸை ஆயத்தம் செய்து அடுத்து வந்த ஒரு வாரத்திலே 'டிவோர்ஸ் வேணும்' என்று கூறி அவன் முன் பிரசன்னமாகி விட்டாள்.
லேகா காதலியாகவே இருந்தாலும் ஆதர்யாவை பிரிய மனம் வரவில்லை அவனுக்கு. கூடவே சொகுசான வாழ்வு கை நழுவிச் சென்று விடுமோ என்ற பயமும் தான். முடியவே முடியாது என்று மறுத்தவனை அண்ணன் மாற தங்கை, தங்கை மாற அண்ணன் என மிரட்டி கையொப்பம் இட வைத்து விட்டனர்.
கார்த்திக்கின் மரணம் விபத்தாகவே இருக்கட்டும். உண்மையை குடும்பத்தினரிடம் கூறி அவர்களையும் கவலையில் ஆழ்த்த தேவையில்லை என எண்ணி, உண்மை மொத்தத்தையும் ஆதர்யாவிடம் மட்டுந்தான் கூறியிருந்தான் விஜய்.
மற்றவர்களிடம் ராகேஷ் வேலை விடயமாக வெளியூர் சென்றிருப்பதாய் கூறி வைத்திருந்தனர் இருவரும். விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் கிடக்கிறான் என்று கூறினால் வீட்டு மருமகனை தாங்கும் தாங்கென தாங்குவார்கள் என்பதாலே இந்த பொய்!
"எனக்கு அவனைக் கொல்லனும் போல இருக்கு அண்ணா.. அவன் எனக்கு துரோகம் பண்ணி இருந்தா கூட வெட்கமே இல்லாம மன்னிச்சு இருப்பேன். ஏன்னா நான் அவனை ரொம்ப லவ் பண்ணுறேன் அண்ணா.. ஆனா அவன்.. அவன் கார்த்தியை இல்லையா கொன்னுட்டான்.."
"அழாதம்மா.. அழுததால நடக்க போறது எதுவுமில்லை. ஃப்ரீயா விடு.." என்றவன் அவளின் தலையை கோதி ஆறுதல் படுத்தினான்.
மனக்கண்ணில் கௌதமியின் குழந்தை முகம் தோன்றி இம்சிக்க தொடங்கியது அவனை.. கூடவே இலவச இணைப்பாய் அவள் தனக்கு கிடைக்க மாட்டாளோ என்ற பயமும் வந்து சேர்ந்து கொள்ள, வெகுவாக தவித்துப் போனவன் ஆதர்யாவிடம் கூறிக் கொண்டு அறைக்கு விரைந்தான் அவனவளைக் காண!
அவளோ, அவனின் வருகைக்காக தான் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து காத்திருந்தாள். விஜய்யைக் கண்டதும் புன்னகையுடன் திரும்பி படுத்து சற்று நேரத்தில் உறங்கியும் விட, இரவின் வெகு நேரத்தை அவளின் மதிமுகத்தைப் பார்த்தபடியே கழித்தவன் சற்று நேரத்திலே உறங்கியும் போனான்.
தொடரும்.