• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 25)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
காலையில் செல்வநாயகம் உறங்கும் நேரமாகப் பார்த்து அவரது அறைக்குள் கள்ளத்தனமாய் நுழைந்தான் விஜய். மருந்தின் வீரியத்தில் நிம்மதியான தூக்கத்தில் இருந்தார் அவர்.

அவரருகில் சென்று ஓரிரு நிமிடங்கள் அவரின் முகத்தையே பார்த்தவனுக்கு, அதில் தெரிந்த அன்பும் கனிவும் வருத்தத்தைக் கொடுத்தது. இத்தகைய நல்லுள்ளம் கொண்டவரை பிரிவின் மூலம் இத்தனை ஆண்டுகள் வருந்தும் படியாக செய்து விட்டேனே என்ற ஆதங்கத்தில் முகம் கறுத்தவன் கண்ணில் கோடிட்ட கண்ணீரை பெருவிரலால் சுண்டி விட்டான்.

"ஐம் சாரிப்பா.." என்றுக்கொண்டு அவரருகில் அமர்ந்து கொண்டவன் அவரின் கையைத் தன் கண்களில் ஒற்றி எடுத்தான். அவனின் கண்களில் வழிந்த கண்ணீர் அவரின் கைகளையும் கொஞ்சமாக நனைத்தது.

"என்னதான் இருந்தாலும் நான் உங்க கிட்ட உண்மை என்னனு கேட்டு இருக்கணும்.. உங்க பக்க நியாயத்தை சொல்லவாவது இடம் கொடுத்திருக்கணும். நீங்க என்கிட்டே பேச வரும் போதெல்லாம் நானாகவே அவொய்ட் பண்ணி உங்களை விட்டு ரெண்டடி தள்ளி நின்னேன்.

ஐம் சாரிப்பா. நீங்க என்ன தண்டனை தந்தாலும் ஏத்துக்குறேன். அம்மா கூட கடைசி நேரத்துல உங்களை பத்தியும் என்னை பத்தியும் தான் யோசிச்சி இருக்கா.. உங்க சந்தோசத்தைப் பத்தி தான் பேசி இருக்கா.. ஆனா நானே உங்களை கஷ்டப் படுத்திட்டேன். யமுனாம்மா.."

அதற்கு மேல் பேச முடியாமல் உடைந்து அழுதான் விஜய். எவ்வளவு பெரிய சறுக்கல் தன் வாழ்வில். அவனாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

"இவ்ளோ நாள் பிரிஞ்சு நின்னு உங்களை வருத்தினேன். இனியும் உங்களை நெருங்காம இருந்து நானே தண்டனை அனுபவிக்க போறேன். ஐம் சாரிப்பா.. இவ்ளோ நாளும் மனசு உடையும் படியா பேசுனதுக்கு, விலகி போய் உங்களை வார்த்தைக்கு வார்த்தை கண்டபடி பேசி வருத்தினத்துக்கு.. முடிஞ்சா மன்னிச்சி விடுங்கப்பா.." என்றவன் அவரின் பற்றியிருந்த கையில் முத்தமிட்டு விட்டு எழுந்து செல்ல முயல,

"இனியும் பிரிஞ்சு தான் இருக்க போறியா கண்ணா.." என்று கேட்டார் செல்வநாயகம்.

ஒரு கனம் திக்கென்றாகி விட்டது விஜய்க்கு. அவர் உறக்கத்தில் இருக்கிறார் என்றெண்ணி அல்லவா இவ்வளவு நேரமும் மெழுகாய் உருகி வடிந்தது..

"எங்களை எல்லாம் பிரிஞ்சு உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்க போறதா சொல்லிட்டு, திரும்ப எங்க எல்லாரையும் பிரிவால வருத்த போறியா டா? உனக்கு வேணா அது தண்டனையா இருக்கலாம். எங்களுக்கு தாங்கிக்க முடியாத வருத்தம்பா அது.. ப்ளீஸ் மீண்டுமொரு பிரிவை கொடுத்திடாத.." என சோர்ந்த குரலில் கூறியவரை அணைக்கப் பரபரத்த கைகளை அடக்க முடியாமல் கட்டிலில் மெதுவாக நிமிர்ந்து அமர்ந்தவரை இறுக அணைத்துக் கொண்டான் விஜய்.

"ஐம் சாரிப்பா.." என்ற வருத்தம் மேலோங்கிய குரல் செல்வத்தின் காதை வந்தடைந்ததும் மெலிதாக நகைத்தவர் மனநிறைவுடன் அவனின் முதுகை வருடி 'என்ன நடந்தாலும் உனக்கு துணையாய் நான் இருப்பேன். கவலை கொள்ளாதே!' என்ற ஆறுதலை கொடுத்தார்.

"சாரி.."

"ப்ச்! இன்னும் எத்தனை சாரிடா சொல்லுவ.." என சலிப்புடன் கேட்டு அவனை தன்னிலிருந்து விலக்கி நிறுத்தியவர், "ஆனா உன்னை இப்டியே விடறதா இல்ல. எண்களை ரொம்ப வருத்திட்டதால தண்டனை தந்தே தான் ஆகணும்.." என்றார் ஒரு மாதிரியான குரலில்.

பளிச்சிட்டிருந்த விஜயின் முகம் மீண்டுமொரு முறை சோர்ந்து விட்டது. நெஞ்சை நிமிர்த்தி நேரிய பார்வையுடன் அவரைப் பார்த்தவனின் பார்வையில் 'தண்டனை எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார்..' என சேதி மறைந்து இருந்தது.

அதை புரிந்து கொண்டவரோ என்றும் போல் மகனின் நிமிர்வில் பெருமையுடன் மென்னகைத்து விட்டு, "முடிஞ்ச அளவு சீக்கிரமா அங்கேருந்து ட்ரான்ஸபர் வாங்கிட்டு நீ இங்க வந்திடனும். எனக்கு தெரியும், உனக்கு இங்க வர இஷ்டம் இல்லாததால தான் அங்கேயே குந்திட்டு இருக்கனு.. ட்ரான்ஸர் கிடைக்காது அது இதுனு மழுப்பாத..

செகண்ட் ஒன், இங்க வந்தா நீ அங்க இங்க தங்கிக்க நோட் அல்லவ்டு. நீ நம்ம வீட்டுல தான் தங்கிக்கணும். மருமகளுக்கும் ஈஸியா இருக்கும், அவளோட பப்புவை அடிக்கடி பார்க்க.. அப்பறம் ம்ம்..."

"அப்பறம் என்னப்பா?" பயம் சொட்டும் விழிகளுடன் கேட்டான் விஜய். இன்னும் எதை எதை எல்லாம் கூறப் போகிறாரோ என்ற அச்சம் துளிர்த்தாலும் அவரின் அன்பான கட்டளைகளில் அவனின் மனம் உருகாமல் இல்லை.

"இன்னும் நிறைய இருக்கு. அதை எல்லாம் அப்பறமா பார்த்துக்கலாம்.." என்றவர் அவனை ஏக்கம் தீரும் வரைக்கும் மீண்டுமொரு முறை இறுக்கமாக அணைத்து விடுவித்தார்.

அவரின் காதல் மனைவி அலமேலுவின் மூலமாக கிடைத்த பொக்கிஷப் பேழை அல்லவா அவன்.. அவன்மேல் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை போலும் அவரால்.. அதனால் தான் சற்றும் சிந்திக்காமல் அவனின் ஒரே அணைப்பிலே உருகி அவனை ஆசை தீர கட்டியணைத்து, இத்தனை நாள் பிரிவுக்கும் அவனிடமே ஆறுதல் தேடியது..

••••

உணவு மேஜையில் அமர்ந்து இருந்தனர் எல்லோரும்.

விஜய் சிறுவன் போல் அடம்பிடித்து செல்வத்தையும் உணவு மேஜை வரை தாங்கி அழைத்து வந்து தனக்கு அருகிலே அவரையும் அமர்த்தி இருந்தான். மகனின் அன்பு மழையில் நனைய தந்தையானவருக்கு கசக்குமா என்ன.. முடியாது என மறுத்து விட்டு மகனின் கையணைப்பின் உதவியுடன் உணவு மேஜை வரையே வந்து விட்டார் அவரும்.

"அச்சோ மாமா.. உங்களுக்கு தான் கால்ல அடிபட்டு இருக்குல்ல? ரூம்க்கு நானே சாப்பாட்டை எடுத்துட்டு வரலாம்னு இருந்தேன்.." என பதட்டம் இழையோடும் குரலில் கூறினாள் கௌதமி. பாவம்.. அவரை அழைத்து வந்ததே தன் ஆசை கணவன் தானென அவள் அறியவில்லை.

"உன் புருஷன் தான்மா.. டைனிங் டேபிள் வரை நீங்க வந்தே ஆகணும்னு கொடுமை பண்ணி என்னை இங்கே இழுத்துட்டு வந்தது.. " சுகமாக சலித்துக் கொண்டார் செல்வம்.

அவரின் சலிப்புக்குப் பின்னால் மறைந்திருந்த மலர்ச்சியை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்தனர் மற்ற மூவரும். என்றும் இல்லாத உட்சாகத்துடன் அவர் உரையாடுவது அவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியை தான் கொடுத்தது.

"அவரா?" முட்டை விழிகளை மொத்தமாக விரித்து ஆச்சரியம் தாளாமல் கூவியவளின் பார்வை மெதுவாக விஜயின் புறம் திரும்பியது. அவளின் ஆள் விழுங்கும் மோகனப் பார்வையிலே தொலைந்தே விட்டான் விஜய்.

அவளின் முக பாவனை கண்டு வாய் விட்டுச் சிரித்தனர் யமுனாவும் செல்வமும்.

சட்டென்று அதிர்ச்சியை தனக்குள் விழுங்கிக் கொண்டு திருதிருவென முழிக்கத் தொடங்கியவளுக்கு விஜயின் பார்வையை கண்ட பிறகு உணவு தொண்டைக் குழியைத் தாண்டி இறங்கவில்லை. அவன் அத்தனை பேரையும் மறந்து அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான் இன்னுமே..

அவஸ்தையாய் நெளிந்த கௌதமி, தண்ணீரைக் குடித்து தொண்டைக் குழியில் சிக்கிய உணவை விழுங்கி விட்டு அங்கிருந்து எழுந்து ஓடி விட முயல, "ம்க்கும்.. ம்க்கும்.." என தொண்டையை செருமினான் விஜய்.

அதற்கு மேலும் அவளின் கால்கள் நகருமா என்ன.. அமர்ந்திருந்த இடத்திலே மீண்டும் தொப்பென்று விழுந்து உணவைக் கொரிக்க ஆரம்பித்து விட்டாள்.

விஜயின் இதழில் குறுநகையொன்று அரும்பியது. புன்னகையுடனே உணவை வாயில் வைத்தவனுக்கு அவ்வளவு நேரமும் வயிற்றைக் கிள்ளிய பசி தூரமாய் விலகிப் போய் இருந்தது. அவதானிக்காத நேரம் பார்த்து தன் தட்டில் யமுனா உணவு பரிமாறியதைக் காணாதாவனா அவன்?

இரண்டு மூன்று வாய்களை கடினப்பட்டு மென்று முழுங்கியவனுக்கு அதற்கு மேலும் முடியாது போகவே இருக்கையை விட்டு மெதுவாக எழுந்து நின்றான்.

"அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சிட்டியா?" என்ற செல்வத்தின் அதட்டல் குரலில் வெடுக்கென தலை தூக்கிப் பார்த்த கௌதமி,

'முழுங்கற மாதிரி பார்த்து என்னை இந்த சாப்பாட்டை விட்டு தூரமாக்கினது பத்தாதுன்னு, சாப்பிட முடியாம எந்திருச்சு போறப்ப தொண்டையை ம்க்கும் ம்க்கும்னு கனைச்சு என்னை உக்கார வைச்சுட்டு இப்போ அவரே சாப்பிடாம எந்திருச்சு போறாரு.. இதுக்கு பெயர் என்ன.. சரியான டெவி.. ' மனதினுள் விடாமல் கருவிக் கொட்டத் தொடங்கியதும் அவனுக்கு புரையேறி விட்டது.

"அச்சச்சோ சாரிங்க.. இனிமே திட்ட மாட்டேன்.." என கத்தியவள் அவனுக்கு புரையேறக் காரணமே நான்தான் என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு விட்டதை மறந்து க்ளாஸில் தண்ணீரை ஊற்றி அவனுக்கு நீட்டினாள். அவளின் கைகள் படபடவென்று நடுங்கியதிலே க்ளாஸில் இருந்த நீரில் பாதில மேஜையிலும் தரையிலும் சிந்தி விட்டது.

அவளை முறைக்க முயன்று தோற்றவன் அவள் நீட்டிய நீரை வாங்கி, அவளைப் பார்த்தவாறே பருகினான். அவனின் பார்வையில் எச்சில் கூட்டி விழுங்கி அவனின் பார்வையை முகத்திலிருந்து தொண்டைக் குழிக்கு இடமாற்றம் செய்ய வைத்தாள் குழந்தைக் குமரியவள்.

இருவரையும் பார்த்து சத்தம் வெளிவராதவாறு நகைத்த யமுனா, "கௌதமி.. சாப்பிடாம நழுவப் பார்க்காத.. உங்களுக்காக தானே சமைக்கிறேன். பேசாம உக்காந்து சாப்பிடு.." என கட்டளைக் குரலில் கௌதமியிடம் கூற, அந்த கட்டளை தனக்கானது என்பதைப் புரிந்து கொண்ட விஜய்க்கு மகிழ்ச்சி தாளவில்லை.

கௌதமி பாவமாக அமர்ந்து கொண்டு விட, யமுனாவை சீண்டுவதற்காகவே அவளின் குறிப்பை புரிந்து கொள்ளாதவன் போல் சமையலறை நோக்கி அடியெடுத்து வைக்க, நறநறவென பற்களைக் கடித்த யமுனா,

"கௌதமி.." என்று குரலை உயர்த்தி கத்தினாள்.

இருக்கையிலிருந்து துள்ளி விழுந்தவள், "நான் உக்காந்து தானே இருக்கேன் அத்தை.." என்று அழுகுரலில் கூற, வாயில் கை வைத்து சிரிப்பை அடக்கிய விஜய்யை முறைத்தபடி கௌதமியின் தலையை பரிவுடன் வருடி விட்டாள் யமுனா.

"ஏங்க.. அவனை வந்து உக்கார சொல்லுங்க.. அவன் சாப்பிடாமலே போறான். நீங்களும் பார்த்துட்டே இருக்கிங்க.." என இப்போது செல்வத்திடம் எரிந்து விழ,

"நீயாவது அவனாவது பார்த்துக்கோங்களேன். என்னை எதுக்கு நடுவுல இழுக்குறீங்க.." என்று கேட்டு கை விரித்து விட்டவர் தன் பாட்டில் உணவுண்ண ஆரம்பித்து விட்டார்.

அவரை முறைமுறையென முறைத்த யமுனா, "இப்போ வந்து உக்காரலைன்னா நானும் சாப்பிட மாட்டேன். அப்பறம் சொல்லலைன்னு சொல்லாதிங்க யாரும்.." என கடுப்புடன் கூற, அதற்கு மேலும் தன் வீம்பு எடுபடாது என்பதைப் புரிந்து கொண்ட விஜய் அமைதியாய் வந்து அமர்ந்து கொண்டான்.

அரங்கேறும் பாசக் காட்சிகளை எல்லாம் மிகவுக் ரசனையுடன் பார்த்திருந்த ஆதர்யா விஜய்யின் அமைதியைப் பார்த்து வாய் மூடி சிரிக்க,

"அண்ணாவுக்கு வந்த சோதனை.." என்ற சாதுர்யா வாய் விட்டே சிரிக்க தொடங்கினாள்.

உணவை பிசைந்து கொண்டிருந்த விஜய் நிமிர்ந்து தன் இளைய தங்கையை தீயென முறைக்க, அவனின் என்றும் போலான அன்பு கலந்த விறைப்புப் பார்வை முறைப்பாக மாறியதும் அதில் கார்த்திக்கை கண்டு கொண்டவள் கலங்கிய கண்களை யாரும் கண்டு விட முன் மெதுவாக துடைத்து விட்டாள்.

நெடுநாள் கழித்து அந்த வீட்டில் சிரிப்பொலி கிளம்பி, சிரிப்பொலியின் ராகத்தைக் கேளாமல் பாழடைந்திருந்த இடம் முழுவதிலும் கலகலப்பை உருவாக்கியது.

உள்ளே, ஈன்றெடுக்காத தாயிடம் மன்னிப்பு வேண்டி தலை குனிந்து நின்றிருந்த காளையின் தலையில் தொடர்ந்து இரண்டு மூன்று கொட்டுக்கள் பலமாய் வந்து விழ, அவனின் விறைப்பு மங்கிய அப்பாவிப் பார்வை கண்டு வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருந்தனர் மற்றவர்கள்.

விறைப்புடன் நிற்க முயன்று தோற்ற யமுனா, தன் கோபத்தை உதறித் தள்ளி விட்டு மகனை அணைத்து அவனின் உச்சி முகர்ந்தாள்.

மாலை மங்கத் தொடங்கிய நேரத்தில் பப்புவை பார்க்க போகிறேன் என்று கூறிவிட்டு பழனியின் வீட்டுக்கு சென்ற கௌதமி, இரவு எட்டு மணியாகியும் இன்னுமே ஏன் வரவில்லை என்ற எண்ணத்துடன் அவளைத் தேடிச் சென்றான் விஜய்.

என்றுமில்லாதவாறு நிம்மதியின்றி இரட்டிப்பு வேகத்துடன் அடித்துக் கொண்ட இதயத்தை வலது கையால் நீவி விட்டவன் ஆழ்ந்த மூச்சுக்களை வெளியேற்றி மனதை ஆறுதல் படுத்தியபடி தன்னை வீட்டினுள் வரவேற்ற பழனியிடம் கௌதமி எங்கே என விசாரித்தான்.

"பாப்பாவா? பாப்பா வீட்டுக்கு போறதா என்கிட்டே சொல்லிட்டு இங்கேருந்து போய் அரைமணி நேரமாச்சே மாப்பிள்ளை.. அவ வீட்டுக்கு தானே வந்தா.."

விஜய் அதிர்ச்சியுடன் நிமிர்ந்தான். இங்கே வரும் போது தானே வீடு முழுவதிலும், தோட்டத்திலும் கூட அவள் இருக்கிறாளா என ஆராய்ந்தான் அவன்? அங்கே அவள் இருக்கவில்லையே.. அப்படியென்றால் அவள் எங்கே?

வேகமாக இருக்கையை விட்டு எழுந்து வீட்டை நோக்கி ஓடியவன் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவளைத் தேடிக் களைத்துப் போன நேரத்தில் கௌசிக்கிடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.

அவன் கூறிய விடயத்தைக் கேட்டு ஆத்திரமடைந்தவன் கோபம் தீராமல் 'ஷிட்!' என காலை முழு விசையுடன் நிலத்தில் ஓங்கி உதைத்தான்.
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,988
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
இப்போ தான் குடும்பம் மொத்தமும் ரெம்ப சந்தோசமா ஒண்ணா இருந்தாங்க அதுக்குள்ள யாரு கண்ணு பட்டதோ தெரியலையே 😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲கௌதமிய காணாம தேட வச்சுட்டாளே, அப்படி எங்க போயிருப்பா🤔🤔🤔🤔🤔🤔, இல்லை யாராவது கடத்திட்டங்களோ 😳😳😳😳😳😳😳ஓகே ஓகே வெயிட் பண்ணிதான் பார்ப்போமே அடுத்த எபில 😁😁😁😁😁😁😁
 
😂😂 வெயிட் பண்ணி படிச்சா தெரிஞ்சிட போகுது.. இல்ல சகி? 😂
 
Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
268
ராகேஷ் ஆள் வச்சு கடத்திட்டானா?🤔
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32

Ipo thane ellarum happya irundhathu. Adhukulla yaru kannuya pattuchu 😪😪😪😪😪😪 gowthami bby enga poitta. Yaradhu avala kadathitangala 😪😪😪😪 kwshik enna sonnan cl panni.. Ayo en thala vedichu poida pogudheeeee
Arumai👌👌👌👌👌💓👌💓
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
Ipo thane ellarum happya irundhathu. Adhukulla yaru kannuya pattuchu 😪😪😪😪😪😪 gowthami bby enga poitta. Yaradhu avala kadathitangala 😪😪😪😪 kwshik enna sonnan cl panni.. Ayo en thala vedichu poida pogudheeeee
Arumai👌👌👌👌👌💓👌💓
Nanri saki❤️❤️❤️❤️
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
அப்பா மகன் பாசம் 🥰🥰🥰🥰🥰

கார்த்திக்கின் இல்லாத குறையை தீர்க்க ஆதி அண்ணனாய் மகனாய் 😊😊😊😊

பாப்பா எங்கம்மா போன 😳😳😳 ஒருவேளை ராகேஷோ 🥺🥺🥺
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
என்னாச்சு. யார் என்ன பண்ணா? கெளதமியை..
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
அப்பா மகன் பாசம் 🥰🥰🥰🥰🥰

கார்த்திக்கின் இல்லாத குறையை தீர்க்க ஆதி அண்ணனாய் மகனாய் 😊😊😊😊

பாப்பா எங்கம்மா போன 😳😳😳 ஒருவேளை ராகேஷோ 🥺🥺🥺
❤️😍😍 விமர்சனத்துக்கு நன்றி சகி ❤️❤️
 
Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
விஜய் அவர் அப்பா கிட்ட பேசின சீன்... உணர்வுபூர்வமா இருந்துச்சு... 😌🥰

பேமிலி எல்லாம் சேர்ந்துட்டாங்க... 🥰🥰🥰

அச்சோ... கௌதமி எங்க...

கட்டத்திட்டாங்களா....
 
😍❤️❤️
 
Top