• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 26)-நிறைவுப் பகுதி!

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
நிறைவுப் பகுதி

தமிழ்நாட்டிலே நான்காவது பெரிய ஆறாகக் கொள்ளப்படும் வைகை ஆறானது, மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் உற்பத்தி ஆகிறது.

வருசமலை, மேகமலை பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட வைகை ஆற்றுக்கும், மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவுக்கும் கூட மிக நெருங்கிய தொடர்புண்டாம்.

மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காண வரும் அழகர் வைகையாற்றில் இறங்கி வரும் போதே திருமணம் முடிந்து விட்டது என்றறிந்து, வைகை ஆற்றிலிருந்தே திரும்பி தன் இருப்பிடம் சென்று விட, அப்போது அங்கே அவருக்காக பல்வேறு ஆராதனைகளும், பக்தர்களின் ஆடல், பாடல்கள் நிகழ்ச்சிகளும் அரங்கேறும்.

அதே மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு, உணவு உண்ண வந்த குண்டோதரரின் தாகத்தை அடக்க, சிவபெருமான் வைகையை பயன்படுத்தியதாகவும் ஒரு கதையுண்டு.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட வைகை ஆற்றின் கிளை நதிகளில் ஒன்று தான், உப்பாறு! தாராபுரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில், கெத்தல்ரேவ்- பனமரத்துப் பாளையம் கிராமத்தில் உள்ளது தான் இந்த உப்பாறு அணை. இங்கே தான் இப்போது அந்த சம்பவம் நிகழ்கிறது.

'உப்பாறு அணை' என்ற பெயர்ப் பலகையை தாங்கிய கம்பம் நாட்டப்பட்டிருந்த இடத்துக்கு சற்றுத் தொலைவில் இருந்த ஒரு குடில் வீட்டில், கைகால்களைக் கட்டிப் போட்டு, அவளை வன்மை நிறைந்த கண்களுடன் பார்த்திருந்தான் ராகேஷ்.

ஹாஸ்பிடலில் கட்டிலோடு படுக்க வைத்து உடைந்த கைக்கும், முறிந்த காலுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தவன் மேற்பார்வைக்காக விஜய்யால் நியமிக்கப்பட்டிருந்த கௌசிக்கையும், அவனை எந்த நேரமும் கவனிப்பில் வைத்திருப்பதற்காக நிறுத்தியிருந்த வர்ஷினியையும் தாண்டி வெளியே வந்து விட்டான்.

மாலை மங்கி இருள் சூழத் தொடங்கிய நேரம் அது!

வந்ததும் வராததுமாய் ஆதர்யாவை சந்தித்து அவளை மிரட்டி டிவோர்ஸ் நோட்டீஸை வாபஸ் வாங்க வைக்கலாம் என்ற எண்ணத்துடன் வீட்டை நோக்கி வந்தவன் வீட்டிலிருந்து துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்த கௌதமியை அப்போது தான் கண்டான்.

இவள் இங்கே இருக்கிறாள் என்றால் விஜய்யும் இங்கு தானே இருப்பான் என்பதை ஊகித்து சட்டென்று தன் முடிவில் இருந்து பின்வாங்கியவன், நொடியில் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அதை செயல்படுத்த விரைந்தான்.

உண்மைகள் எதையும் கௌதமி அறிந்திருக்காத காரணத்தினால் ராகேஷைக் கண்டதும் துள்ளி ஓடி அவனருகில் வந்து சுகம் விசாரிக்க, அதையே நல்ல சந்தர்ப்பமாகக் கருதிய ராகேஷ், 'வாயேன் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடலாம்' எனக் கூறி அவளைக் கடைத் தெரு வரை அழைத்து சென்று, அங்கிருந்து அவளை இங்கே கடத்தி வந்து கட்டிப் போட்டும் விட்டான்.

இஷ்டமின்றி மனைவியாகியவளாக இருந்தாலும் நாலைந்து மாதங்கள் ஒன்றாகவே இருந்ததில் அவளின் மேல் சிறு அன்பு கூடவா துளிர்த்திருக்காது விஜய்க்கு? என்ற எண்ணம் ராகேஷுக்கு.

அவளை வைத்தே விஜய்யை மிரட்டலாம் என முட்டாள் தனமாக முடிவெடுத்து விட்ட மூடனுக்கு விஜய ஆதித்யன் நாட்டை காக்கும் ஒரு காவலன் என்ற விடயம் மறந்து விட்டது போலும். ஒருவேளை, விஜய்யிடம் அடி வாங்கியே மூளை கலங்கி விட்டதோ என்னவோ மூடனுக்கு..

காயம் ஆறியும் கூட வலி அவ்வளவாக மட்டுப்பட்டு இருக்கவில்லை கைகால்களில். முறிந்திருந்த கால் வலியை ஏற்படுத்தியதும் எரிச்சலுடன் குனிந்தவனை ஒற்றைக் கண் திறந்து திருட்டுத்தனமாய் பார்த்த கௌதமி, அவன் நிமிர முன்பே கண்களை மூடிக் கொண்டாள்.

"இன்னுமே மயக்கத்துல கிடந்து சாகடிக்கிறா. பிடரில அடிச்ச ஒரே அடியிலயே செத்துட்டாளா என்ன.." என அவள் இன்னுமே கண் விழிக்காத கடுப்பில் முனகியவன் அவளது நாசியருகே கை வைத்துப் பார்க்க, அவனின் நெருக்கத்தில் முகம் சுழித்து பின்னால் நகர்ந்து படக்கென்று கண்களை திறந்தவள்

"அ.. அண்ணாவா.. அண்ணா இங்க என்ன பண்ணுறீங்க.. அது.. நான் இப்போ எங்க இருக்கேன்?" அப்போது தான் கண் திறந்தது போல் கண்களை சிமிட்டி சிமிட்டிக் கேட்டாள்.

அவளின் அழகில் ஒருநொடி கிறங்கியவன் பதில் கூறாமல் அங்கிருந்து நகர, வர்ஷினியிடம் கற்றுக் கொண்ட மார்ஷியல் கலைகளின் உதவியுடன் கைக் கட்டைப் பிரித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் இருக்கையைத் தட்டி விட்டு எழுந்து நின்றாள் கௌதமி.

அவளின் கண்கள், என்றும் தொற்றி நிற்கும் குழந்தைத் தனத்தையும் வசீகரத்தையும் இழந்து ரவுந்திரத்தை கக்கி நின்றது. முழித்து அழகு காட்டும் கண்கள் கலங்கி சிவப்பேறிப் போயிருந்தன.

இருக்கை கவிழ்ந்த சத்தத்தில் குழப்பமடைந்து அவளின் புறமாக திரும்பிய ராகேஷின் கழுத்தில் பறந்து வந்து சொருகியது சிறு கைக் கத்தி ஒன்று!

"அம்மாஆ.." என்ற அலறலுடன் கழுத்தைப் பற்றிக் கொண்டவனின் வயிற்றில் தன் கால்களால் ஓங்கி உதைத்தாள் கௌதமி. வலுவிழந்த வாழைத் தண்டுக் கால்களுக்கு அவ்வளவு சக்தி எங்கிருந்து வந்ததென்று அவளே அறியவில்லை.

நிற்காமல் இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த கழுத்தைப் பற்றிக் கொண்டு தள்ளாடியபடி எழுந்து நின்ற ராகேஷ் ஆவேஷமாக அவளைத் தாக்கப் போக,

"நீங்க.. நீங்க கார்த்தியைக் கொன்ன கொலைக் காரன். உங்களை நான்தான் கொல்லனும். நீங்க என்னைத் தாக்க கூடாது.." என்று அழுகையினூடே கூறியவள் ஒரு ஓரமாக விழுந்திருந்த இருக்கையைத் தூக்கி அவனை நோக்கி விட்டெறிந்தாள்.

அதற்கு மேலும் பிடி கொடுக்க முடியாமல் வலியில் துடித்தபடி கீழே விழுந்தான் ராகேஷ். ஏற்கனவே அடி வாங்கி காயமேற்பட்டு சோர்வடைந்திருந்தவன் கௌதமியின் ஆவேஷத் தாக்குதலில் மொத்தமாக சோர்ந்து விட்டான்.

அவள் இன்னுமே குழந்தை தான், தான் கடத்தப்பட்டு விட்டதை அறிந்து கொண்டால் அழுது புலம்புவாள் என தப்புக் கணக்கு போட்ட தன்னையே திட்டிக் கொண்டவன் ஊசலாடும் உயிருடன் அங்குமிங்கும் புரள,

"என் கார்த்தியை ஏண்டா கொன்ன? அ..அவன் எவ்வளவு ந.. நல்லவன் தெரியுமா.. அவ.. அவனைப் போய் உன் சுயநலத்துக்காக கொன்னுட்டியே.. பா.. பாவி!" அழுகைகிடையில் வார்த்தைகளை உதிர்த்த கௌதமி, உயிரடங்கிய ராகேஷின் உடலைப் பார்த்து குலுங்கி அழுதாள்.

சற்று முன் இருந்த தைரியம் வடிந்து ராகேஷின் உயிரற்ற உடலைப் பார்த்ததும் கை கால்கள் குளிர்காய்ச்சல் கண்டது போல் நடுங்க ஆரம்பித்து விட்டது.

ஆறென வழிந்தோடிய இரத்தமும் அந்த இடத்தில் சூழ்ந்திருந்த இருளும் பயத்தைக் கிளப்பி அவளை மயக்க நிலைக்கு எடுத்து சென்று கொண்டிருக்கும் போது காதில் தேன் பாய்ச்சியது போல் கேட்டது அந்தக் குரல். அவளவனின் அதே குரல்.

திடுக்கிட்டு விழுந்தவள் அந்தக் குரல் வெறும் பிரமை தானா என்று யோசிக்கும் முன்பே, "இனியா.." என்ற விஜய்யின் குரல் மீண்டும் அவளது காதை வந்தடைந்தது.

பயம் எல்லாம் தூர விலகி நின்று விட, ராகேஷின் உயிரற்ற உடலை ஒரு முறை பார்த்து திருப்திப் பட்டவள் குடிலின் ஓலைக் கதவைக் கட்டியிருந்த கயிற்றை ஒரே இழுப்பில் இழுத்து தூரமாக வீசி விட்டு வெளியே ஓடினாள். கயிறினால் உராய்ந்த கையில் இரத்தம் உறைந்தது.

அருகிலிருந்த மரத்துக்கு கீழ் டென்ஷனாக தலையைக் கோதியபடி நின்றிருந்தான் விஜய ஆதித்யன். இரவு நேரமாகையால் யாருமே இருக்கவில்லை அங்கு.

"இனியாஆ.."

அவனின் உயிர் உருக்கும் வேதனையான அழைப்பில் அவளின் கால்களுக்கும் சக்தி கிடைத்து விட,

"ஆதிஈஈ.." என்ற கேவலுடன் அவனை நோக்கி ஓடினாள் கௌதமி.

மின்னலடித்தது போல் திடும்மென நிமிர்ந்து பார்வையை சுழற்றியவன் கௌதமியைக் கண்டு கொண்ட அடுத்த நொடியிலே ஓடிச் சென்று அவளை இடையோடு சேர்த்து தூக்கி இறுக அணைத்திருந்தான்.

ராகேஷ் வைத்தியசாலையை விட்டு தப்பியோடி விட்டான் என்ற தகவலை கௌசிக் கூறியதுமே, நடந்தது என்னவாக இருக்கும் என யூகித்து விட்டான் விஜய்.

அவன்தான் கௌதமியை கடத்திச் சென்றிருக்க வேண்டும். பாவம்.. அவனைப் பற்றிய உண்மைகள் அவளுக்குத் தெரியாதே என வருந்தியவன், அவளின் செயினில் அவள் அறியாமல் பொறுத்தி வைத்திருந்த ஜிபிஎஸ்ஸை ட்ரேஸ் செய்து அடுத்த அரைமணி நேரத்திலே அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

வந்து சேர்ந்து அவளைக் காணும் வரைக்கும் அவனது உயிர் அவனிடம் இல்லை. வெகுவாக துடித்துப் போய் விட்டான். அவளுக்கு என்னானதோ, ஏதானதோ என்ற சிந்தனையில் பைக்கை தாறுமாறாக ஓட்டி அங்கு வந்து சேர்ந்தவனுக்கு அவளைப் பார்க்காமல் தலை வெடித்துச் சிதறி விடுவது போல் தவிப்பாகவும் பதட்டமாகவும் இருந்தது.

காவலன் அல்லவா.. இந்த கடத்தல், தேடல் ஒன்றும் புதிதில்லை தான், என்றாலும் இந்த தவிப்பு.. ஒரு பெண்ணுக்காக இவ்வளவு தவிப்பது புதிதாக இருந்தது. அவளைக் காணவில்லை என அறிந்த நொடியில் அவனின் இதயம் துடித்த வேகத்திலே அவளின்றி தன்னால் ஒரு நொடியையும் வாழ முடியாது. இவ்வளவு நாள் எப்படியோ.. இனி அவளின்றி தன்னால் வாழவே முடியாது என்பதை புரிந்து கொண்டு விட்டான் காளையவன்.

தவித்த மனதை ஆறுதல் படுத்த அவளின் அணைப்பு கட்டாயம் அவசியமாக இருந்தபடியால் சற்றும் சிந்திக்காமல் அவளை அணைத்தவனின் அணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக் கொண்டே செல்ல, அவளின் நடுங்கும் தளிர் கைகள் அவனது சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டன.

"நீ இல்லன்னதும் செத்துட்டேன்டி.." என்ற அவனின் கரகரத்த குரல் அவளுக்குள் மின்சாரத்தை பாய்ச்சியது. அவனின் 'டி..' என்ற உரிமையான அழைப்பு அவளை இடம், நேரம், காலம் தெரியாமல் உருக்கி விட்டது.

"நான் ரொம்ப பயந்துட்டேன்டி.." நிம்மதிப் பெருமூச்சுடன் கூறி அவளை விட்டு விலகியவன் கண்களாலே அவளை ஆராய்ந்தான்.

அவளின் உடலில் ஒரு சிறு கீறல் விழுந்திருந்தால் கூட அவனைக் கால் வேறு கை வேறாக வெட்டி கழுகுக்கு போடும் முடிவுடன் வந்திருந்தவன் ஆங்காங்கே சிராய்ப்புகளுடனும், கயிற்றால் இறுகக் கட்டிப் போட்டிருந்தபடியால் கன்றி சிவப்பேறி இருந்த மணிக்கட்டுகளையும் பார்த்து நிதானம் இழந்து விட்டான்.

பற்களை நறநறவென அரைத்தபடி, "அந்த நாயை நான் கொல்லாம விட மாட்டேன்.." என்று கூறி விட்டு கௌதமியை ஓரமாக நிறுத்தி விட்டு அவள் நடந்து வந்த திசை நோக்கி நடக்க,

"ஏ.. ஏங்க.." நடுங்கும் குரலால் அவனை அழைத்தாள் அவள். அளவற்ற கோபத்தில் இருந்தவன் அவளின் அழைப்பைக் காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை. அதிலிருந்த நடுக்கத்தை உணரவும் இல்லை. வெறியுடன் முன்னேறி நடந்தான்.

"ஏங்க.. நான் சொ.. சொல்றதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்.." என்றபடி அவனின் நடைக்கு ஈடாக ஓடிச் சென்று அவனின் கைகளை பற்றிப் பிடித்து நிறுத்தியவள், "நா.. நான் அவனை கொன்னு.. கொன்னுட்டேன்ங்க.." என்றாள் விம்மிய குரலில்.

கோபங்கள் எங்கே பறந்து சென்றதென்று தெரியவில்லை.

சட்டென்று மலர்ந்த புன்னகையுடன் அவளை மீண்டுமொரு முறை அணைத்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன், "அவனை சும்மா விட்டதே தப்புன்னு என் மனசு சொல்லுது. அவனை இன்னைக்கே முடிச்சு உலகத்தை விட்டே அனுப்பி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்மா.." என்றான் அன்புருகும் குரலில்.

கௌதமி அவனைக் கொன்று விட்டதாகக் கூறியதை விளையாட்டாக எண்ணி விட்டான் அவன். குழந்தைக் குமரி கொலை செய்து விட்டேன் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் அவன் நம்பத் தயாரில்லை என்பதை அவனின் புன்னகை பூசிய உதடுகளே சொல்லியது.

"ப்ளீஸ் நம்புங்க.. இ.. இந்த கையால தான் அவனை நான் கொன்னுட்டேன்.." என்று தன் கைகளை விரித்துக் காட்டி கூறியவள் கண்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்து விட்டாள்.

"நா.. நான் வீட்டுக்கு போயிட்டு வந்துட்டு இருக்கும் போது.. இந்த ராகேஷ் என்னை ஃபாலோ பண்றதை பார்த்தேன். நா.. நான் கிட்சேன்க்கு போய் ஃப்ரூட் கட் பண்ற கத்தியை எடுத்துட்டு வந்தேன் வெளியே.. அப்போ தான் அவரை.. அவனை கண்டேன்னு சொல்ற மாதிரி எப்படி இருக்கிங்க அண்ணானு கேட்டேன்.

கொஞ்ச நேரம் பேசிட்டு ஐஸ் கிரீம் சாப்பிட போலாமானு கேட்டு என்னை தெருவோரம் கூட்டிட்டு வந்தான். இடுப்புல.. இடுப்புல சொருகி இருந்த கத்தியை இன்னொரு வாட்டி தொட்டு பார்த்துட்டு தான் நான் போனேன்.. வர்ஷி.. வர்ஷினி அக்கா தான் ஆபத்துன்னா இந்த மாதிரிலாம் பண்ணனும்னு சொல்லி கொடுத்தாங்க.

நான் முன்னால போனதும் என் பிடரில அடிச்சிட்டாரு. மயக்கம் வரல நிஜமாவேங்க. நா..நான் மயங்கின மாதிரி நடிச்சதும் கடத்திட்டு வந்துட்டாரு.. வர்ஷி அக்கா அறிவுறுத்தி வைச்சிருந்த மாதிரியே பண்ணேன்ங்க.." என்றவள் தொடர்ந்து நடந்ததை மொத்தமாக திக்கித் திக்கி கூறி முடித்து விட்டு நிமிர, அவனின் கை ரேகை அவளின் கன்னத்தில் பதிந்தது.

தலை சுற்றி விட்டது கௌதமிக்கு. தலை சுற்றி கீழே விழப் போனவளை இழுத்து நிறுத்தியவன், "பைத்தியமாடி நீ? இங்க ஒருத்தன் குத்துக் கல்லாட்டம் இருக்கேன். என்கிட்டே சொல்லணும்னு தோணவே இல்லையா?" என்று காட்டுக் கத்தல் கத்தினான்.

"என்னோட கா.. கார்த்தியை கொன்னவன்.. அவனை..னை நானே கொல்லனும்னு மட்டுந்தான் அப்போ நினைச்சேன்ங்க.." தொண்டையில் சிக்கிய வார்த்தைகளை வெளியே கக்கியபடி கன்னத்தைப் பற்றியவாறு கூற, இரவு ஆதர்யாவிடம் பேசியதை இவளும் கேட்டு, கார்த்திக்கின் மரணத்துக்கு காரணம் ராகேஷ் தான் என்பதை அறிந்து கொண்டிருக்கிறாள் எனப் புரிந்தது அவனுக்கு.

"என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேடி. எவ்ளோ பயந்து போய்ட்டேன் தெரியுமா.. பாப்பா அவ.. அவளுக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு நான் வேண்டாத தெய்வமே இல்ல. தெரிஞ்ச எல்லா கடவுள் கிட்டயும் கண்மூடி வேண்டிக்கிட்டேன்.. ரொம்ப பயந்தேன்மா.." என்றவன் தன் கை விரல் பதிந்த கன்னத்தை வருடி, அவளின் உயரத்துக்கு குனிந்து,

"சாரி.." என்றவாறு அவளின் கன்னத்தில் சிறு முத்தமொன்றைப் பதித்தான். காயம் பட்ட கன்னத்துக்கு அந்த முத்தமே மருந்தாக ஆகிப் போனதன் மாயம் தான் என்னவோ..

அவள் கூறியதை ராகேஷ் இறந்து கிடந்த தோற்றத்தை பார்த்தே உறுதி செய்து கொண்ட விஜய்க்கு கௌதமியை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

கரப்பான் பூச்சியைக் கண்டாலே ஓடி ஒளிபவள் நண்பனின் உயிரைப் பறித்தவனை தன் கையாலே கொலை செய்து விட வேண்டும் என பொங்கி எழுந்து, நினைத்ததை தனியாகவே சாதித்து விட்ட தைரியம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு முறைக்கு பலமுறை, ராகேஷின் உயிர் அடங்கிய வெற்றுடலைப் பார்த்து திருப்திப் பட்டவனுக்கு மனதினுள் பெரும் நிம்மதியே பரவியது. அவனை தன் கையால் கொன்று ஆத்திரம் தீரும் வரை தாக்கி முடித்திருந்தாலும் இத்தனை நிம்மதி பரவி இருக்காது அவன் மனதில்..

கௌதமியை இடை பற்றித் தூக்கி ஒரு கல்பெஞ்ச்சில் அமர வைத்தவன் லைட்டரைப் பற்ற வைத்து, அந்தக் குடில் வீட்டை ராகேஷின் உடலோடு வைத்து தீ வைத்தான்.

காய்ந்திருந்த ஓலைகளில் தீ பற்றிக் கொண்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்க, 'எப்படியும் காலையில் இந்தக் குடிலுடன் சேர்த்து அவனின் உடலும் சாம்பலாகி இருக்கும்' என திருப்தி பட்டுக் கொண்டு அந்த இடத்தை பயத்துடன் பார்த்திருந்த கௌதமியின் அருகில் வந்தான்.

அவனைக் கண்டதும் கல்பெஞ்ச்சை விட்டு சட்டென்று எழுந்து நின்றாள் கௌதமி.

அவளது கைப்பற்றி அழைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தவன் காலில் கயிறு அறுத்ததால் நடக்க முடியாமல் கெந்தி கெந்தி நடந்தவளைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டான் ஒரு பூக்குவியலைப் போல்..

"இனிமே என்ன பண்ணாலும் உன் புருஷன் நான் இருக்கேன்மா.. என்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடு என்ன.." முட்ட முட்ட முழித்தவளின் நெற்றியில் நெற்றி முட்டிக் கூற, சரியென்று தலை அசைத்தவள் அவனது இதயத் துடிப்பை கணிக்க எண்ணி அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

சற்று தூரம் வரை அவளைத் தூக்கிச் சென்றவன் உப்பாறு அணையைக் கடந்து நடந்ததும் வந்த கல் இருக்கையில் அமர்ந்து, அவளைத் தன் மடியிலே அமர்த்திக் கொண்டான். மயான அமைதியுடன் கூடிய இரவு நேரத்தில், மனதுக்கு இனியவனின்(ளின்) அருகாமையில் அமர்ந்திருப்பது கூட சுகமாய் தான் இருந்தது இருவருக்கும்.

ஆற்றைத் தழுவி வந்த குளிர் காற்று உடலைத் துளைக்கும் போது 'ஸ்ஸ்..' என கைகளை தேய்த்தபடி மேலும் அவனுக்குள்ளே ஒன்றினாள் கௌதமி. அவனும் கோழிக் குஞ்சுகளை அடை காக்கும் தாய்க் கோழியாய் தன் கையெனும் சிறகை விரித்து அவளைத் தன்னுள் பொத்திக் கொண்டான்.

இருவருக்கிடையில் பலத்த மௌனம்.. அவளின் மீதான உன்னதக் காதலை உணர்ந்த விட்ட களிப்பில் அவனும்.. அவன் தன்னைக் காணவில்லை என்றதும் பதறிய பதட்டத்தையும் தன்னைக் கண்டதும் அணைத்து தன் தவிப்பை உணர்த்திய தருணங்களில் உலன்றபடி அவளும்..

எவ்வளவு நேரங்கள் அப்படியே கடந்து போனதென்று தெரியவில்லை இருவருக்கும். அவனின் நெஞ்சக் கூட்டுக்குள் புதைந்து வாழ்நாள் பூராகவும் வாழ்ந்து விட்டால் போதுமென அவள் நினைத்திருக்க, அவளை தன் கைக்குள்ளே ராணியாய் தாங்குவேன் என்ற எண்ணப் போக்குடன் அவனும் அப்படியே அமர்ந்திருந்தனர். அந்த நிமிடங்களில் 'பப்லு' என்ற நபரை மறந்தே விட்டான் விஜய்.

"ஏங்க.." நிலவிய மௌனத்தைக் கிழித்துக் கொண்டு அவளது குரல் ஒலிக்க, யோசனை கலைந்து, குனிந்து அவளின் முகம் பார்த்தான் விஜய்.

"கொஞ்ச நேரம் முன்னாடி எவ்ளோ அழகா ஆதினு கூப்பிட்ட நீ.. இப்போ எதுக்கு திரும்ப என்னங்க, நொன்னங்க?"

"அது.. நீங்க என்னை விட ரொம்பப் பெரியவங்க.."

'ஆமா பெரியவன் தான். ஆனாலும் உன் குழந்தை தனத்துக்கு முன்ன தோத்துப் போய் மனசை பறிகொடுத்து, இதயத்தை இழந்து அப்பாவியா இருக்கேன் நான்.. ' என நினைத்தவன், "பரவால்ல.. இனிமே ஆதின்னே கூப்டு. அப்டி கூப்பிடறப்ப இன்னும் அழகா இருக்கு.." என்று குழைவாக அவளின் காதோரம் மீசை உரசக் கூற, சிலிர்த்து அடங்கியவளின் தலை தானாகவே ஆடியது.

"அது.. எனக்கு உங்க ஃபோனைக் கொஞ்சம் தரீங்களா?"

"என் ஃபோனா? என் ஃபோன் எதுக்குடி?" என்று கேட்டவனின் கைகளோ பேண்ட் பாக்கெட்டை துழாவி ஃபோனை எடுத்து அவளின் கையில் கொடுத்திருந்தது.

ஃபோனை ஆன் செய்ததும் திரையில் அவளைப் பார்த்து அழகாய் சிரித்தாள், விஜய்யின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கௌதமி. அதைப் பார்த்து நகைத்தவள் ஃபோன் கேமராவை எடுத்து அதை விஜயின் முகத்துக்கு நேராகப் பிடிக்க,

"ஹே என்னடி பண்ற?" என்று கேட்டு முகத்தை திருப்பிக் கொண்டான் விஜய். ஆணழகனுக்கும் சிறிதாக வெட்கம் எட்டிப் பார்த்து விட்டது அவள் செயலில்.

"கொஞ்ச நேரம் ஃபோன் ஸ்க்ரீனை உம்முனு பாருங்க ஆ.. ஆதி.. ப்ளீஸ்ங்க.."

அதற்கு மேலும் மறுக்க முடியாமல் வெட்கம் பூசிய முகத்துடன் ஃபோன் திரையை உம்மென்று பார்த்தான் விஜய்.

கலகலவென சல்லிக் காசு சிதற விட்டது போல் அழகாய் நகைத்தவள், "என்னோட பப்லுவை இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன்னு சொன்னேனே.. இவர் தான் என்னோட பப்லு.. அழகா இருக்காருல்லங்க?" என்று விஜய்யிடம் தெத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி கேட்க, அதிர்ச்சியில் சட்டென்று நிமிர்ந்தான் விஜய ஆதித்யன்.

தன் காதால் கேட்டதையே நம்ப முடியாமல் நெளிந்தவன், "என்னம்மா சொன்ன?" என்று அதே அதிர்ச்சியுடன் கேட்க,

"நிஜமா தான். என்னோட பப்லுவைப் பார்த்தேன்னு சொன்னது ஆதுவோட கலியாணத்துல.. வந்ததும் நீங்க போயிட்டீங்க. நான்தான் உங்களைப் பார்த்து லூசாகிட்டேன்.." என முகம் சுருங்கக் கூறினாள்.

மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனவனுக்கு தன்னை நினைத்தே சிரிப்பு கிளம்பி விட்டது. அந்த பப்லுவே நான்தான் என அறியாமல் தன் மேலே பொறாமை கொண்ட ஒரு ஜீவன் நானாக மட்டும்தான் இருக்கும் என நினைத்தவன்

"கா.. கார்த்திக்கு தெரியும் எல்லாமே.. அதால தான்.. அவன் அன்னைக்கு ஹாஸ்பிடல்ல.." மீதியை கூறத் தெரியாமல் திணறியவளை காதலுடன் நோக்கினான்.

மனதை இறுக்கிக் கொண்டிருந்த சகல குழப்பங்களும் தீர்ந்து அவள் மீதான காதல் மட்டும் பளிங்குத் தரை போல் மிக வெளிச்சமாக தெரிந்தது அவனுக்கு. சந்தோசத்தில் இறக்கையின்றி வானில் பறந்தான்.

அவனது பார்வையில் திணறி முகத்தை வேறு புறமாய் திருப்பிக் கொள்ள முயல, அவளின் பின்னங்கழுத்தைப் பற்றி தன் புறமாக வளைத்தவன், "லவ் யூடி.. ஐ லவ் யூ மோர் அன்ட் மோர்.." என அவளின் காதில் கிசுகிசுத்தான்.

"ஐ.. ஐ லவ் யூ டூ.." என கண்கள் கலங்க கூறியவளின் தேனூறும் இதழ்களில் முரடனின் முரட்டு அதரங்கள் மென்மையாய், மிக மென்மையாய் சித்திரம் வரைய ஆரம்பித்தன.

ஒரு வருடத்துக்குப் பிறகு, வெறும் நூறு பேரே அமரக் கூடிய அந்த கலியாண மண்டபம் வெகு பரபரப்பாகக் காணப்பட்டது.

மணப்பெண்ணாக ஆதர்யா தலை குனிந்து நின்றிருக்க, அவளருகில் அமர்ந்திருந்த மணமகன் தினேஷ், பால் பாட்டிலை சுவைத்துக் கொண்டிருந்த மிதுனை சீண்டிக் கொண்டிருந்தான்.

மிதுனைக் காரணம் காட்டியே, வருடக் கணக்கில் ஆதர்யாவை ஒரு தலையாகக் காதலித்த கார்த்திக்கின் நண்பன் தினேஷைக் கலியாணம் செய்ய சம்மதம் வாங்கினான் விஜய். அவன் மீது அவளுக்கும் நல்லதொரு அபிப்பிராயம் முன்பிருந்தே இருந்தபடியால், பிகு பண்ணாமல் திருமணத்துக்கு சம்மதித்து விட்டாள் ஆதர்யாவும்.

மணமேடையில் வந்து அமர்ந்தது முதல் சகல சடங்கு சம்பிரதாயங்கள் நடந்து முடியும் வரைக்கும் தினேஷையே ஒட்டிக் கொண்டிருந்த மகனைப் பார்க்கும் போது தான் எடுத்த முடிவில் தவறில்லை என திருப்தி பட்டுக் கொண்டவளின் பார்வை முன் இருக்கையில் அமர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த வர்ஷினி மற்றும், கௌசிக்கின் புறமாகத் திரும்பியது.

இரண்டு மாதங்கள் முன் தான் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்க, திருமணம் நடந்து விட்டால் மாத்திரம் முட்டிக் கொள்வதை நிறுத்தி விடுவோமா என்ற வீராப்புடன் கண்ட நேரங்களில் எல்லாம் முட்டிக் கொண்டே திரிந்தனர் இருவரும்.

மண்டபத்தின் ஆளரவமற்ற ஓரிடத்தில் விஜயின் கைச் சிறைக்குள் சிறைப்பட்டு கண்மூடி நின்றிருந்தாள் கௌதமி.

தினம் தினம் காதலில் அவளை திக்கு முக்காடச் செய்வதில் அவனுக்கு நிகர் அவனே தான்!

செல்வநாயகத்தின் விருப்பப்படி தன் வேலையில் ட்ரான்ஸர் வாங்கிக் கொண்டு இருவரும் இங்கே வந்து விட்டிருந்தனர். அவன் சற்றும் இரக்கபடாமல் அவளை அன்புக் கொடுமை செய்தான் என்றால், யமுனா மருமகளை தன் மகள் போல் தாங்கினாள்.

சாதுர்யவின் மிகுந்த விருப்பத்துக்குறிய தோழியாய் மாறிப் போனாள் கௌதமி. அவளுக்கு இன்னொரு கார்த்திக்காய் மாறிப் போனான் விஜய்.

"எல்லாரும் தேடுவாங்க.. ப்ளீஸ் என்னை விடுங்க ஆதி.." என மிட்டாய் கேட்டு தாயிடம் சிணுங்கும் குழந்தை போல் சிணுங்கியவள் அவன் அசந்த நேரம் பார்த்து அவனின் கைவளைவிலிருந்து நழுவி அங்கிருந்து ஓடி விட்டாள்.

போகும் பாதை முழுதும் வாசம் பரப்பிச் செல்லும் இனிய வண்ண மலரை காதலுடன் பார்த்திருந்தான் விஜய ஆதித்யன். அவனின் கண்களில் தான் எவ்வளவு காதல்..

அவனின் வாழ்வில் இனி எந்நாளும் வசந்தம் தான்!

இனிய விபத்தென அவனின் வாழ்வில் எதிர்பாராமல் நுழைந்த சிறு வண்ண மலர், அவனது வாழ்வில் வாசம் எனும் சந்தோசத்தை எக்கச் சக்கமாக அள்ளித் தெளித்து விட்டாள். இனி அவர்களின் காதல் வாழும் என்றென்றும்..

சுபம்!

20220331_220802.jpg

உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவித்து விட்டு செல்லுங்கள் தோழமைகளே.. ஆவலுடன் காத்திருக்கிறேன்..
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,989
சூப்பர் சூப்பர் சுபம் சகி ♥️♥️♥️♥️

எதிர்பார்க்காத திருப்பம் ராகேஷ், கௌதமியை கடத்தியது, பின் கௌதமி அவனை வஞ்சம் தீர்த்தது. 👌👌👌👌👌👌👌👌

விஜய், தன் மனைவியின் பாதுகாப்பு கருதி செயின்ல ஜி பி எஸ் பொருந்தியதில் கௌதமியை கண்டுபிடுச்சது மட்டுமா அப்படியே அவளை பற்றி மனசுக்குள்ள பொத்தி வச்சிருந்த உணர்வுகள் எல்லாத்தையும் வெளிப்படுத்தினது சிறப்பு 👌👌👌👌👌👌👌👌👌
வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐💐💐💐💐💐💐
 
நன்றியோ நன்றி சகி 💙💙 😍❤ ஆரம்பத்துல இருந்து இறுதி வரை ஆதரவு கொடுத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. ரொம்ப ரொம்ப நன்றி 💙💙💙
 
Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
269
தன் நண்பனை கொன்றவனை தன் கையாலே கொன்னு நட்பின் ஆழத்தை காட்டிட்டா.குட்.

மிக அழகான கதை
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32

View attachment 674

உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவித்து விட்டு செல்லுங்கள் தோழமைகளே.. ஆவலுடன் காத்திருக்கிறேன்..
Arumai arumai arumai 👌👌👌👌

Edhir paratha thirupam. Gowthami kadatha pattrippanu suma nenachen. Adhan nadandhchu. Then, ava rakesh ah konnu blame ah theethukittadhu enakum thirubthiya irku. 👌👌👌👌💓💓💓❤ rakesh sagama irunthiruntha stry mudicncha thirubthi ilama irunthirukkum

Arumai sis 👌👌👌👌👌

Aprm gawthami bablu neengka thannu solra scenela orumathiriyaana feel. Supera irundhuch💓💓 ending la adhuvoda life kum oru theeevu aprm varshi, kawshik pair ayum kondu vandingka. Super 💥💥💥💥💥💥💥

Vijay sumave gwthamiya thanguvan.ini solanuma. Super super sis.. 💓💓💓💓💓💓ending vera level. Vazhga valamudan!

Competition la win panna vazhthukkal saki 💓💓💓💓
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
தன் நண்பனை கொன்றவனை தன் கையாலே கொன்னு நட்பின் ஆழத்தை காட்டிட்டா.குட்.

மிக அழகான கதை
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கமெண்ட் செய்து என்னை மேலும் சந்தோசப்படுத்திய உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது..❤❤❤ ஆயிரம் ஆயிரம் நன்றிகள் சகி.. ❤️❤️❤️❤️❤️❤️
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
Arumai arumai arumai 👌👌👌👌

Edhir paratha thirupam. Gowthami kadatha pattrippanu suma nenachen. Adhan nadandhchu. Then, ava rakesh ah konnu blame ah theethukittadhu enakum thirubthiya irku. 👌👌👌👌💓💓💓❤ rakesh sagama irunthiruntha stry mudicncha thirubthi ilama irunthirukkum

Arumai sis 👌👌👌👌👌

Aprm gawthami bablu neengka thannu solra scenela orumathiriyaana feel. Supera irundhuch💓💓 ending la adhuvoda life kum oru theeevu aprm varshi, kawshik pair ayum kondu vandingka. Super 💥💥💥💥💥💥💥

Vijay sumave gwthamiya thanguvan.ini solanuma. Super super sis.. 💓💓💓💓💓💓ending vera level. Vazhga valamudan!

Competition la win panna vazhthukkal saki 💓💓💓💓
ரொம்ப ரொம்ப நன்றி சகி.. ❤❤❤❤️❤ உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி ❤
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
ராகேஷை அடிச்சே கொன்னுட்டாளா 😳😳😳 செம தில்லுதான் 😱😱😱😱

பப்லுவோட அறிமுகம் சூப்பர் 😜😜😜

ஆதுக்கும் ஜோடி 😍😍😍😍

வர்ஷினிக்கு கௌசிக்கா 🤣🤣🤣🤣
ஆதியோட அன்புத்தொல்லை தாங்க முடியலையே 🫣🫣🫣🫣

வாழ்த்துக்கள் சகி 👏👏👏👏
 
Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
#வண்ணமலரேவாசம்தருவாயா
#உப்பாறு
#சித்திரை_மை_திருவிழா
#view_no_4

உண்மையை அறியாமல், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டவன் வாழ்க்கையில், தம்பி கார்த்திக்கின் மூலம் மணம் வீச வந்தவள் கௌதமி இனியாள்.
அனைவருக்கும் விறைப்பான காவல்காரன். தன்னவளிடம் மட்டும் தன் குணங்களை தளர்த்திக் கொள்ளும் காதல்காரன்.

செல்வநாயகம், யமுனாகிட்ட உண்மை என்னனு ஒரு ஸ்டேஜ்ல விஜய் கேட்டு இருக்கலாம்.

தன் அண்ணனும் அண்ணியும் தன்னிடம் காட்டிய அன்பிற்கு நன்றி மறவாமல் கௌதமியை பொத்தி வளர்த்த பாசக்காரன் பழனி❣️❣️

உயிர்போகும் தருவாயில் கூட தோழியின் காதலை சேர்த்து வைக்கும் நட்பின் நாயகன் கார்த்திக்.ஹீரோவைவிட எனக்கு புடிச்சது இவனைத்தான்.அநியாயமா போட்டுத் தள்ளீட்டீங்களே உப்பாறே😔😔சில காட்சிகள்னாலும் மனசுல நீங்கா இடம் பிடிச்சிட்டான்❣️❣️

குழந்தைத்தனத்துடன் வலம்வரும் நாயகி நட்பின் இழப்பிற்காக செல்லும் எல்லை👏👏👏👏

விஜயின் ரொமான்ஸ், காதல் ரசனையோட இருந்துச்சு.பப்லு மேல இவன் காட்டுன பொறாமையும்,போட்டுத்தள்ள நினைச்சதும் காமெடியா இருந்துச்சு.

ஆதுவோட காதல் தன்னோடு ஒட்டிப் பிறந்தவனின் இழப்பில் கோவமாய் மாறலனாதான் ஆச்சர்யம்.தினேஷை பேர் கொடுத்தது ஹேப்பி.

வர்ஷினி கௌசிக் டாம் அண்ட் ஜெர்ரி எப்பவும்.

சதுவிற்கு கார்த்திக்கின் பாசம் ஆதியிடம் கிடைத்தது மகிழ்ச்சி

ராகேஷை இன்னும் இன்னும் கொடுமை படுத்திருக்கணும்.அவன் பண்ண செயல் இருக்கே😒

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் உப்பு ஆறே💐💐

அன்புடன்
#ரம்யா💙
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
அருமையான கதை சகி! முதலில் போட்டிக்கதையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. கதையில் சில விடயங்களை சுருக்கமாக உங்கள் pov யாக or பிளாஷ்பேக்காக முடித்திட்டீங்க. போட்டி கதை வார்த்தைகளின் அளவு கட்டுப்பட்டது என்ற காரணத்தால் இருக்குமென நினைக்கிறேன். மற்றும்படி கதை ரொம்பவும் அருமை. பெரிய டுவிஸ்ட் டேர்ன் எதுவும் இல்லை என்றாலும் கார்த்திக் இறப்பை அவனது குடும்பத்தை போலவே என்னாலும் ஏற்றுக்க முடியல. ராகேஷ் லேகா மற்றும் கண்மணி ட தந்தை போல ஆளுங்க நாட்டுக்கே சாபக்கேடு. மற்றும் படி விஜய் ஆதித்யன் கெளதமியின் காதலை அவனாக பப்ளு தான் தானாக உணர்வதை போல் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்துருக்கும். உண்மை நட்புக்கு இலக்கணமாய் கெளதமி கார்த்திக் , விஜய் ஆதித்யன் கலக்கிட்டாங்க. என்னால் வர்ஷினி நல்லவளாக இருநதாலும் ஆண் பெண் நட்புக்குசிறந்த உதாரணமாக எடுத்து காட்ட முடியவில்லை
 
Last edited:

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
Nice story.
ரொம்ப ரொம்ப நன்றி சகி. உங்கள் ஆதரவு அளப்பறியது. நன்றிகள் கோடி ❤️❤❤😍
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
ராகேஷை அடிச்சே கொன்னுட்டாளா 😳😳😳 செம தில்லுதான் 😱😱😱😱

பப்லுவோட அறிமுகம் சூப்பர் 😜😜😜

ஆதுக்கும் ஜோடி 😍😍😍😍

வர்ஷினிக்கு கௌசிக்கா 🤣🤣🤣🤣
ஆதியோட அன்புத்தொல்லை தாங்க முடியலையே 🫣🫣🫣🫣

வாழ்த்துக்கள் சகி 👏👏👏👏
ரொம்ப ரொம்ப நன்றி சகி. ❤️😍முதல் அத்தியாயத்தில் இருந்து கதையின் நிறை குறைகளை பகிர்ந்து கொண்ட தாங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை. கோடி நன்றிகள் ❤❤
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
#வண்ணமலரேவாசம்தருவாயா
#உப்பாறு
#சித்திரை_மை_திருவிழா
#view_no_4

உண்மையை அறியாமல், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டவன் வாழ்க்கையில், தம்பி கார்த்திக்கின் மூலம் மணம் வீச வந்தவள் கௌதமி இனியாள்.
அனைவருக்கும் விறைப்பான காவல்காரன். தன்னவளிடம் மட்டும் தன் குணங்களை தளர்த்திக் கொள்ளும் காதல்காரன்.

செல்வநாயகம், யமுனாகிட்ட உண்மை என்னனு ஒரு ஸ்டேஜ்ல விஜய் கேட்டு இருக்கலாம்.

தன் அண்ணனும் அண்ணியும் தன்னிடம் காட்டிய அன்பிற்கு நன்றி மறவாமல் கௌதமியை பொத்தி வளர்த்த பாசக்காரன் பழனி❣️❣️

உயிர்போகும் தருவாயில் கூட தோழியின் காதலை சேர்த்து வைக்கும் நட்பின் நாயகன் கார்த்திக்.ஹீரோவைவிட எனக்கு புடிச்சது இவனைத்தான்.அநியாயமா போட்டுத் தள்ளீட்டீங்களே உப்பாறே😔😔சில காட்சிகள்னாலும் மனசுல நீங்கா இடம் பிடிச்சிட்டான்❣️❣️

குழந்தைத்தனத்துடன் வலம்வரும் நாயகி நட்பின் இழப்பிற்காக செல்லும் எல்லை👏👏👏👏

விஜயின் ரொமான்ஸ், காதல் ரசனையோட இருந்துச்சு.பப்லு மேல இவன் காட்டுன பொறாமையும்,போட்டுத்தள்ள நினைச்சதும் காமெடியா இருந்துச்சு.

ஆதுவோட காதல் தன்னோடு ஒட்டிப் பிறந்தவனின் இழப்பில் கோவமாய் மாறலனாதான் ஆச்சர்யம்.தினேஷை பேர் கொடுத்தது ஹேப்பி.

வர்ஷினி கௌசிக் டாம் அண்ட் ஜெர்ரி எப்பவும்.

சதுவிற்கு கார்த்திக்கின் பாசம் ஆதியிடம் கிடைத்தது மகிழ்ச்சி

ராகேஷை இன்னும் இன்னும் கொடுமை படுத்திருக்கணும்.அவன் பண்ண செயல் இருக்கே😒

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் உப்பு ஆறே💐💐

அன்புடன்
#ரம்யா💙
ரொம்ப நன்றி சகி. 💙❤️ முதல் அத்தியாயத்தில் இருந்து நீங்க தந்த ஆதரவு என்னை மிகவும் உட்சாகப் படுத்தியது. இறுதி வரையிலும் தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல.. ❤❤😍😍
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
அருமையான கதை சகி! முதலில் போட்டிக்கதையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. கதையில் சில விடயங்களை சுருக்கமாக உங்கள் pov யாக or பிளாஷ்பேக்காக முடித்திட்டீங்க. போட்டி கதை வார்த்தைகளின் அளவு கட்டுப்பட்டது என்ற காரணத்தால் இருக்குமென நினைக்கிறேன். மற்றும்படி கதை ரொம்பவும் அருமை. பெரிய டுவிஸ்ட் டேர்ன் எதுவும் இல்லை என்றாலும் கார்த்திக் இறப்பை அவனது குடும்பத்தை போலவே என்னாலும் ஏற்றுக்க முடியல. ராகேஷ் லேகா மற்றும் கண்மணி ட தந்தை போல ஆளுங்க நாட்டுக்கே சாபக்கேடு. மற்றும் படி விஜய் ஆதித்யன் கெளதமியின் காதலை அவனாக பப்ளு தான் தானென உணர்வை போல் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்துருக்கும். உண்மை நட்புக்கு இலக்கணமாய் கெளதமி கார்த்திக் , விஜய் ஆதித்யன் கலக்கிட்டாங்க. என்னால் வர்ஷினி நல்லவளாக இருநதாலும் ஆண் பெண் நட்புக்குசிறந்த உதாரணமாக எடுத்து காட்ட முடியவில்லை
நன்றி சகோதரி. ❤️😍
உண்மை தான். மட்டுப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்குள் நினைத்தபடி கதையை தொடர முடியவில்லை என்னால்.. குறித்த காலக்கெடு வேறு. இதைப் போன்ற குறுநாவல்கள் எழுதிப் பழக்கமில்லை. தொடர் நாவல் எழுதியே பழகி விட்டேன் என்பதால் தான் இந்த சறுக்கல்..

நிறை குறைகளுக்கு மிக்க நன்றிகள் சகி.❤️❤️ உங்கள் ஆதரவுக்கு கோடி நன்றிகள். ❤😍😍😍
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
நன்றி சகோதரி. ❤️😍
உண்மை தான். மட்டுப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்குள் நினைத்தபடி கதையை தொடர முடியவில்லை என்னால்.. குறித்த காலக்கெடு வேறு. இதைப் போன்ற குறுநாவல்கள் எழுதிப் பழக்கமில்லை. தொடர் நாவல் எழுதியே பழகி விட்டேன் என்பதால் தான் இந்த சறுக்கல்..

நிறை குறைகளுக்கு மிக்க நன்றிகள் சகி.❤️❤️ உங்கள் ஆதரவுக்கு கோடி நன்றிகள். ❤😍😍😍
உங்கள் எழுத்து பணி மென்மேலும் அதிகரித்து பெயரும் புகழும் பெறவும் போட்டியில் வெற்றி பெறவும் ஷாயினியின் மனதார வாழ்த்துக்கள்
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
உங்கள் எழுத்து பணி மென்மேலும் அதிகரித்து பெயரும் புகழும் பெறவும் போட்டியில் வெற்றி பெறவும் ஷாயினியின் மனதார வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி.. ❤😍
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
#சித்திரை_மை_திருவிழா

#வைகை_சித்திரை_திருவிழா_2022

#உப்பாறு

உப்பு ஆறு எழுதிய

#வண்ண_மலரே_வாசம்_தருவாயா

#ஷாயினிவிமர்சனம்1

அருமையான குறுநாவல், வாசிப்புக்கு ஏற்ற இலகு எழுத்து நடை , சிறந்த கதைகரு, கதையை நீங்கள் நகர்த்திய விதமும் வெகு அருமை!

வெகு சிறப்பாக , குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் இவ் போட்டி கதையை எழுதி முடித்தமைக்கு மனம் நிறைந்த பாரட்டுக்கள் சகி!

ஆரம்பமே, தமையன், தம்பி, அண்ணி யென அழகான உப்பாறின் கிராமத்து குடும்பமொன்றின் அறிமுகம்,

அவர்கள் தான் நாயகன் நாயகி என நினைக்க, இரண்டொரு அத்தியாயம் நகர, எதிர்பாரத திருப்பம்..என

கதை பிளாஷ்பேக் முடிவடைய, கதை அதன் பின்னரே ஆரம்பிக்கின்றது.

நாயகி #கெளதமிஇனியாள் மற்றும் அவளின் பப்பு என அழைக்கப்படும் அவளிற்கு தாயுமானவர் பழனிவேல் என நாம் இருவர் நமக்கிருவர் என
இருவரும் வாழ்ந்து வர,

அவர்களுடன் கெளதமியின் சிறந்த நம்பிக்கைக்குரிய நட்புக்கு சிறந்த 😍எடுத்துகாட்டாக 😍😰கார்த்திக்

கார்த்திக்கின் சகோதரனாக காவல் துறை நாயகனாக விஜய் ஆதித்யன், சகோதரிகளாக ஆதர்யா, சாதுர்யா ..

ஒரு தலைபட்ச காதலாக கண்டதும் காதலாக தனது காதலன் பப்ளுவை பார்த்தவுடனே கண்டதும் காதலாக நெஞ்சில் சுமக்கிறாள் கெளதமி

தனக்கு தன் நண்பி வர்ஷினி மட்டும்போதுமென நினைத்து வாழ்ந்து வரும் விஜய்.

தன்னுடைய உற்ற நண்பனாக இருப்பவனுடன் தனது வாழ்க்கையை பகிர்ந்தால் இருவரின் வாழ்வும் சிறப்பாக இருக்குமென எண்ணும் வர்ஷினி.

இக் கட்டான சூழலில் நடைபெறும்
இனியாளின் திருமணம் ! அவளின் வாழ்வில் பூக்களாய் மாறி மணம் வீசி அவளை மலர்வித்ததா?

காதலில் இல்லாமல் திருமணத்தில், தனது உயிரானவனின் ஆசையால்
இணையும் விஜய்

அவனின் மனதில் பெண்ணவள் மீது காதல் வந்ததா?

அறிய அருமையான கிராமத்து சூழலில் அமைந்த இக் கதையை
படித்து மகிழுங்கள் எனது அருமை வாசக நட்புக்களே!

சித்திரை நாவல் போட்டியில் வெற்றி பெற, மனதார்ந்த வாழ்த்துக்கள் சகி!💐💐
eiP8L5N43217.jpg

கதை திரி

View attachment 692
கதை திரி

நன்றி சகோதரி ❤😍
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
ரொம்ப ரொம்ப நன்றி சகி. ❤️😍முதல் அத்தியாயத்தில் இருந்து கதையின் நிறை குறைகளை பகிர்ந்து கொண்ட தாங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை. கோடி நன்றிகள் ❤❤
அருமையான கதை சகி 👌👌👌

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍💐💐
 
Top