• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

"வண்ண மலரே... வாசம் தருவாயா?" ரிவியூ

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
128
#nmari_reviewz

"வண்ண மலரே... வாசம் தருவாயா?"

எழுத்தாளர் - உப்பு ஆறு

கொஞ்சம் அழுத்தமான கதைக்களம். கதையோட ஆரம்பம் முதல் முடிவு வரை கண்ணு வேர்த்துட்டே இருந்தது. 🤧 அவ்வளவு உணர்வு பூர்வமாக இருந்தது. ❤️

ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் கதையை நகர்த்தி இருந்தார் ஆசிரியர்.

கதைக்கரு, எழுத்துநடை எல்லாமே அருமை.

எதிர்ப்பார்க்காத திருப்பங்கள் கூட சூப்பரா இருந்தது. ❤️

கதையோட ரொம்ப ஒன்றிப் போய்ட்டேன். 🤗

விஜய ஆதித்யன் 😍😍😍 சிறந்த காவ(த)லன். ❤️ எல்லார் கிட்டயும் முறைச்சிட்டே சுத்துறவன் அவனோட இனியா கிட்ட மட்டும் தானும் குழந்தையாவே மாறிடுறான். 🥰 தம்பிக்காக பண்ணின கல்யாணமா இருந்தாலும் கௌதமிய கேர் எடுத்து பார்த்துக்கிட்ட விதம், அவளை தனக்கு ஏத்தது போல மாற்ற நினைக்காம அவளை அவளாவே ஏத்துக்கிட்ட விதம் எல்லாம் அழகோ அழகு. 😍 நினைவு தெரிந்த நாள்ல இருந்து அம்மான்னு நினைச்சவங்க தன்னோட சித்தின்னும் பெரியம்மான்னு அடையாளம் காட்டப்பட்டவங்க தன்னோட சொந்த அம்மான்னும் அதுவும் அவங்க இறப்புக்கு தன்னோட ரோல் மாடலா இருக்குற அப்பாவே காரணம்னு தெரியும் போதும் அந்த வயதுல விஜய்க்கு வந்த கோபம் நியாயமானது தான். அது நிச்சயமா ரொம்ப வலிச்சிருக்கும். 😓 வளர்ந்ததுக்கு அப்புறம் கூட அவங்க பக்கம் இருக்குற நியாயத்தை கேட்காம அவங்கள விலக்கி வெச்சி அவங்களையும் கஷ்டப்படுத்தி தானும் கஷ்டப்பட்டது தான் வருத்தமா இருந்தது. 😓 தன் வாழ்க்கைல இனிமே சந்தோஷமே இருக்காதுன்னு நினைக்கும் போது சந்தர்ப்ப சூழ்நிலைல மனைவியாகி கூடவே அவனுக்கான மொத்த சந்தோஷத்தையும் காதலையும் எடுத்துட்டு வந்து கல்லுக்குள் ஈரம் போல அவனுக்குள்ள பூட்டி வைத்த உணர்வுகளை வெளிக்கொண்டு வந்துட்டா அவனோட இனியா. ❤️ எவ்வளவு தான் கோபம் இருந்தாலும் தன்னோட குடும்பம் மீது அவன் வைத்த பாசம் கொஞ்சம் கூட குறையல. 😍

கௌதமி இனியாள்... இப்படி அப்பாவியா இருக்காளேன்னு கோபம் வர வைக்காம தேவையான இடத்துல தானும் வளர்ந்த பெண் தான்னு நிரூபிச்சா. தன்னோட பப்பு மேல வெச்ச அன்பு அருமை. பப்ளு மேல பார்த்ததும் காதல் கொண்டு அவனுக்காக உருகும் காட்சிகள் ரொம்ப கவர்ந்தது. ❤️❤️❤️ தன்னோட நண்பன் சாவுக்கு காரணமானவன்னு தெரிஞ்சதும் குழந்தை மனசு மாறாதவ கூட சீறும் சிறுத்தையா மாறி ராகேஷை கொன்றது அருமை. எவ்வளவு ரசிக்க வைத்தாலோ அதே அளவு வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கவும் வெச்சா. 🤣🤣🤣 எப்படி இருந்த எங்க ஹீரோவ இவ கண்ணீரைப் பார்த்தாவே கலங்க வெச்சிட்டாளே.

ஆதி - இனியா 😍😍😍 இருவருக்குள்ளும் இருந்த காதலும் புரிந்துணர்வும் தன்னோட துணைக்கு ஒன்னுன்னா துடிக்கிறதும் அருமை. ❤️

பழனி... தாயுமானவனா இருந்து பெற்றோர்னா இப்படி தான் இருக்கணும்னு காட்டிட்டார். கௌதமிக்காக இவர் செய்த தியாகங்கள் அதிகம். அண்ணன் பொண்ண சொந்த மகளா பாவித்ததும் இல்லாம அவளுக்காக கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டார். 😍😍😍 அதுவும் தான் அவளோட சொந்த அப்பா இல்லன்னும் அவளோட நிஜ பெற்றோர்களைப் பத்தி மறைக்காம சொல்லி வளர்த்ததும் அருமை. இவரோட தியாகத்துக்கு கிடைத்த பரிசு தான் கௌதமி இவர் மேல வைத்த அன்பு.

பழனி - கௌதமி அப்பா பொண்ணு பாசம் மனதைக் கவர்ந்தது. ❤️ ரெண்டு பேரும் சேர்ந்து செய்ற அலப்பறைகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருந்தது. 😍

கார்த்திக் 🤧🤧🤧 என்ன சொல்றதுன்னே தெரியல. நிஜமாவே இவனோட இழப்பை எதிர்ப்பார்க்கல. ரொம்ப சின்னதான இடத்தில வந்தாலும் கௌதமி மேல வெச்ச நட்பாலும் கள்ளங்கபடமில்லாத குணத்தாலும் அவனோட குறும்புத்தனத்தாலும் மனசுல ஆழமா பதிஞ்சிட்டான். இப்படிப்பட்டவனோட இழப்பை நிஜமாவே யாராலயும் ஏத்துக்க முடியாது தான். 😓

செல்வநாயகம் - யமுனா... செய்யாத தப்புக்கு தண்டனையா மகனோட ஒதுக்கம் 😓 காதல் மனைவியோட திடீர் இழப்பு. பாவம் மனுஷன். அக்கா மகனை தன் மகனை வளர்த்தியது அருமை. தான் சித்தின்னு தெரிஞ்சா அவன் அம்மான்னு கூப்பிட மாட்டானோன்னு பயந்து உண்மையை மறைத்தது யமுனாவோட இடத்துல இருந்து பார்க்கும் போது சரி தான். அதே நேரம் விஜய்யோட கேள்வியும் சரி தான். மனசு விட்டு பேசி இருந்தா இவங்களுக்குள்ள இந்தப் பிரிவு வராம தடுத்து இருக்கலாம்.

ஆதர்யா & சாதுர்யா... ரெண்டு பேரும் தங்களோட சகோதரன் மேல வைத்த அன்பு அருமை. அதுவும் கார்த்தியோட இழப்புனால சாதுர்யா அடைந்த துயரம் ரொம்ப வலித்தது. 🤧 காதலித்து கல்யாணம் பண்ணவன் இவ்வளவு பெரிய துரோகம் பண்ணா நிச்சயமா யாராலயும் தாங்க முடியாது. ஆனா துவண்டு போகாம தைரியாம டிவோர்ஸ் கேட்டதும் தன் மகனுக்காக ஆதர்யா மறுவாழ்வு அமைத்துக்கொண்டதும் சிறப்பு.

ராகேஷ் 🤬🤬🤬 இவனை எல்லாம்... சரியான தண்டனை தான் இவனுக்கு கிடைச்சது.

வர்ஷினி - கௌஷிக்... டொம் என்ட் ஜேரி கப்பிள் 😍 சின்ன சின்ன இடங்களில் வந்தாலும் இவங்களும் மனசை ரொம்ப கவர்ந்துட்டாங்க. அதுவும் வர்ஷினியோட தெளிவான பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது.

நட்பு, காதல், பாசம், துரோகம், ஏமாற்றம், வலி இப்படி பல கலவைகளால் ஆன கதை.

கண்டிப்பா எல்லாரும் படித்து பார்க்க வேண்டிய ஒரு கதை.

வாழ்த்துக்கள் எழுத்தாளரே ❤️

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225

வாவ்! வாவ்! ரொம்ப அழகான, அருமையான விமர்சனம் சகி. ❤️😍😍
ஒவ்வொரு அத்தியாயத்தையும் பொறுமையா, மிக ஆழமா படிச்சி, அதுல வர எல்லா கேரக்டர்ஸ் பத்தியும் சொல்லி இருக்கிங்க. ரொம்ப ஹாப்பி இந்த விமர்சனம் பார்த்ததும். நன்றிகள் பல சகி ❤️😍..
 
Top