• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரமாய் வந்தவள் 2

farhana

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
9
3
3
Udumalpet
ஷ்ரவனின் மனதில் புயலே அடித்துக் கொண்டிருந்தது தன்னையே நொந்து அமர்ந்து இருந்தான்

மலமலவென திருமண சடங்குகள் நிறைவேற மணமக்கள் இருவரும் பெண் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

இங்கு வெங்கட் விஷ்வா மனதில் ஷ்ரவன் அமைதியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்

பெண் வீட்டில் இருந்து மது அவள் தாயின் பலாயிரம் அட்வைஸை பெற்று பிறந்தகம் விட்டு புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

பல கனவுகள் உடன் புகுந்தகம் நுழைந்த மதுக்கு தெரியவில்லை தன் சந்தோசம் இன்றோடு போகப்போவதை

ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தனர் ஷ்ரவன் விறுவிறுவென தன் அறையில் சென்று முடங்கிக் கொண்டான்.

மது என்ன செய்வது என்று தெரியாமல் ஸோபாவில் அமர்ந்து கொண்டாள் வெங்கட் அழைக்க அவரைக் காண சென்றாள்

மாமா_ மது
வாடா மது ஏன் அங்க நிக்கிற வா என்று அழைக்க தயங்கி கொண்டே உள்ளே சென்றாள்
உட்காருடா. அமைதியாக அமர்ந்து கொண்டாள்

உங்கிட்ட கொஞ்சம் பேசணும் மது

ஆங் சொல்லுங்க மாமா

ஷ்ரவன் வாழ்க்கையில. நிறைய இழந்துடாமா இனி நீதான் அவன. பாத்துக்கணும் அவன் மனசலவுள ரொம்ப காயப்பட்டுருக்கான். நீ மருத்தா இருக்கனும் மாமாகாக செய்வியா

மாமா இனி அவரு என் பொறுப்பு நீங்க அவரைப் பத்தி கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன்

சரிமா நீ ரொம்ப களைப்பா இருக்க போய் கொஞ்சம் ஓய்வெடு என்று கூறி லட்சுமியை அழைத்தார்

லட்சுமி மதுவ கீழே அறையில் தங்க வை

சரிங்க ஐயா வாங்க மா

லட்சுமி அவளை அறையில் விட்டு விட்டு ஏதாவது வேணும்னா கூப்பிட்டுங்கமா என்று கூறி விட்டுச் சென்றார்

அறையை சுற்றி பார்த்து விட்டு படுத்துக் கொண்டாள் ஷ்ரவனின் ஒதுக்கம் இப்போது மாமா கூறியது அனைத்துயும் யோசிக்க குழப்பம் தான் மிஞ்சியது அப்படியே உறங்கிப்போனாள்

மதுவை அனுப்பி விட்டு தன் மகனின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு படுத்துக் கொண்டார் அப்போது அவர் மனைவி ராணி அருகே வந்து அமர்ந்தாள்

என்னங்க மகனுக்கு கல்யாணம் ஆன சந்தோஷமா

ஏன் உனக்கு என்ன வேணும் இனியாவது அவன் நல்லா இருக்கட்டும்

ஹ்ஹ்ஹும் என்று சிலிப்பிக் கொண்டு போய் விட்டாள்

டேய் ஷ்ரவன் - விஷ்வா

ஏன் டா

என்னடா பன்ற அப்படியே அவள விட்டுட்டு வந்துட

செம்ம கடுப்புல இருக்க போயிறு.

மது என்னடா பண்ணினா அவ பாவம் டா
எல்லா பொண்ணுங்களும் ஒரேமாதிரி தான் பணத்தாசை பிடிச்சவங்க

இவனிடம் பேசி பயனில்லை என்று அவனை ஒரு முறை பார்த்து விட்டு சென்று விட்டான்

அவன் அப்படியே நின்றான் மொபைல் சிணுங்க தன் நினைவை விட்டு போய் மொபைல் எடுத்தான் அவன் பிஏ சங்கர் அழைத்திருந்தான்

சொல்லுங்க சங்கர்

சார் நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு நீங்க வரீங்கலா இல்ல கேன்சல் பன்னட்டுமா

நோ நோ சங்கர் டுமாரோ மார்னிங் நா அங்க இருப்பேன்

ஒகே சார் என அவன் அழைப்பை துண்டித்தான்

நாளை செய்ய வேண்டியதை திட்டம் இட்டான்

மது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் கதவு தட்டும் ஓசை கேட்டு எழுந்து கதவை திறந்தாள் ஷ்ரவனின் பெரியப்பா மகள் காவ்யா நின்று கொண்டிருந்தாள்

என்ன மது நல்ல தூக்கமா

ஆமாங்கண்ணி

ஏய் அண்ணி எல்லாம் வேண்டாம் காவ்யானே கூப்பிடு
சிரிப்பையே பதிலாக கொடுத்தாள் மது

ஒரு புடவையை கொடுத்து இந்தா மது குளிச்சிட்டு மாத்திகோ நா போயி சாப்பிட கொண்டு வரேன்

அவள் சென்று உணவுடன் வந்தால் மது குளித்து வந்தால் காவ்யா அவளை தயார்படுத்தினாள்

தயார் ஆகி உண்டு விட்டு சாமி கும்பிட்டு விட்டு ஷ்ரவனின் அறை நோக்கி அழைத்துச் சென்றாள்

ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை பயம் மனம் முழுவதும் பரவி இருந்
தது

காவ்யா அவளை அறையில் விட்டு வெளியே வந்தாள்