• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரமாய் வந்தவள் 3

farhana

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
9
3
3
Udumalpet
தயங்கி தயங்கி கொண்டே உள்ளே சென்றாள்
வெற்று அறையே அவளை வரவேற்றது அறையில் அவன் இல்லை பால்கனியில் நின்று கொண்டிருந்தான் அவள் அவனை தேடி பால்கனிக்கு சென்றாள் நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்
இவள் குரலை செரும திரும்பி பார்த்தான் முதல் முறையாக அவளைப் பார்கிறான்

நல்ல அழகான செதுக்கப்பட்ட சிலைப்போல் இருந்தவளைப் பார்க்க ஏனோ வெறுப்பு தான் வந்தது

என்ன என்றான்
அவள் ஒன்னுமில்லை என்று தலையை வேகமாக ஆட்டினாள்
பெருமூச்சுடன் உங்கிட்ட கொஞ்சம் பேசணும் ஆனா இங்க பேச வேண்டாம்
நாளைக்கி சென்னை போகனும் போய் படு என்று திரும்பி நின்று கொண்டான்
அவள் சிறிது நேரம் அப்படியே நின்றாள் பின் சென்று படுத்துக் கொண்டாள் மனதில் நிறைய கேள்விகள் இருந்தது ஆனால் யாரிடமும் கேட்க முடியாத சூழல்
உறக்கம் வரவில்லை அவனும் வரவில்லை 12 மணிக்கு மேல் உறங்கிப்போனாள்

அவன் வந்து உறங்கும் அவளைப் பார்த்து விட்டு படுத்துக் கொண்டான்
காலை 5 மணிக்கு முழிப்பு தட்ட முழித்து சுற்றி முற்றி பார்த்தால் தன் கணவன் கிளம்பிக் கொண்டு இருந்தான் எப்படி எப்படியெல்லாம் விடிய வேண்டியது இப்படியா விடிய வேண்டும் என்று விதியை நொந்து கொண்டு போய் குளித்து கிளம்பி தயாரானாள்

தன் உடமைகளை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தாள்
அனைவரும் உறக்கத்தில் இருக்க வெங்கட எழுந்து வந்தார்

என்னப்பா கிளம்பி ஆச்சா
ஆங் கிளம்பி ஆச்சுப்பா
சரி பத்தரமா போய்டு வாங்க

அத்தை எங்க மாமா
அவ தூங்கரமா நீங்க போங்க நா சொல்லிக்கறேன்
சரிங்க மாமா

அவர் பிஸ்கட் பேக்கட்டும் தண்ணீரும் தர அவரை கேள்வியாக பார்த்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள்
இருவரும் அவரிடம் விடைபெற்று காரில் ஏறி சென்னை நோக்கி பயணமாகினர்
இருவரிடமும் அமைதியே ஆட்சி செய்ய அமைதியை கதைத்தால் மது
நாம எங்க போறோம்
திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு. என்னோட வீட்டுக்கு என்றான் அந்த என்னோடவை அழுத்திச் சொன்னான்

அதிலேயே அவளுக்கு புரிந்தது தனக்கு அங்கு உரிமை இல்லை என்று
அதன் பிறகு அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்

கிளம்பி இரண்டு மணிநேரம் ஆனது அவன் எங்கேயும் நிறுத்தவில்லை பசி வேறு வயிற்றை கிள்ளியது அப்போது தான் மாமா கொடுத்து நினைவு வர சிரித்து கொண்டாள்
பிஸ்கெட் சாப்பிட்டு தண்ணீர் குடித்து விட்டு உறங்கிக் போனால்
உறங்கும் அவளைப் பார்த்து விட்டு எப்படி இவளை நான் விலக்குவது என்ற யோசனையில் ஆழ்ந்தான் ஷ்ரவன்
வீட்டுக்கு வந்ததும் அவளை தட்டி விட்டு அவன் இறங்கி லக்கேஜ் உடன் உள்ளே சென்றான்
இவள் சுற்றி பார்த்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தாள்
அது ஒரு அபார்ட்மெண்ட் இரண்டு படுக்கை அறை கொண்டது மதுவுக்கு அந்த வீடு மிகவும் பிடித்திருந்தது
அவன் ஒரு அறையில் தஞ்சம் புகுந்தான் இவள் ஹாலில் உள்ள ஸோபாவில் அமர்ந்து கொண்டாள்
அவன் ஆபிஸிற்கு கிளம்பி வந்தான் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கிளம்பி விட்டான்
மதுவுக்கு சங்கடமாக இருந்தது தன்னை பிடிக்காதவருடன் எப்படி வாழ்வது என்று நினைத்து அழுது கொண்டிருந்தாள் அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்து சென்று கதவை திறந்தாள்
வாட்ச்மென் நின்று கொண்டிருந்தார்
அவரைப் பார்த்து புன்னகைத்தாள் என்னண்ணா
மேடம் புட் பார்சல் சார் கொடுக்க சொன்னார்
அப்படியாணா தேங்ஸ்ணா என்று அதை பெற்றுக் கொண்டாள்
மேடம் லா வேண்டாம்ணா சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க. என் பேறு மது
செரிமா என்று அவர் கிளம்பி விட அவள் உள்ளே சென்று கதவை மூடிவிட்டு சென்று ப்ரஷாகி விட்டு சாப்பிட்டால்
என்ன செய்யவது என்று புரியவில்லை அழைந்து கொண்டு இருந்தாள்
மதியம் மேகி கிளறி சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டாள்
மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு இரவு உணவிற்கு என்ன செய்வது என்று பார்த்துக் கொண்டு இருந்தாள்
அப்போது வீட்டிற்கு வந்தான் ஷ்ரவன் மிகவும் களைப்பாக தெரிந்தான்
தன் அறைக்கு சென்று குளித்து விட்டு வேறு உடையில் வந்தான் அவள் காபி தர வாங்கிக் கொண்டான்

அவளை அழைத்தான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும் உக்கார் என்று எதிர் புறம் இருந்த ஷோபாவை காண்பித்தான்