• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரமாய் வந்தவள்

farhana

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
9
3
3
Udumalpet
கோவை
கோவையின் புகழ் பெற்ற திருமண மண்டபம் மக்களால் நிரம்பி வழிந்தது ஷ்ரவன் கார்த்திக் weds மதுராகினி என்ற பெயர் பலகை அனைவரையும் வரவேற்றது

வாசலில் மணமகனின் தந்தை வெங்கட் மலர்ந்த முகத்துடன் வரவேற்று கொண்டிரூந்தார்

மணமகளின் பெற்றோர் ஒரு புறம் வந்தவர்களை கவனிக்க திருமண மண்டபம் கலை கட்டியது

மணமகளின் அறையில் தோழிகளின் கிண்டலுடன் தயாராகி கொண்டிருந்தாள் மதுராகினி

மதுராகினி அமைதியான குணம் கொண்டவள் கோவிந்தன் சுபத்ரா வின் மூத்த மகள் தங்கை மகிழினி யின் செல்ல அக்கா.

எதார்த்தமான கல்யாண கனவுகள் உடன் தயராகி கொண்டிருந்தாள்.

ராகினி என்னடி இப்பவே இப்படி வெக்கப்படற நைட்டூக்கு கொஞ்சம் மிச்சம் வைமா

ஏய் போங்கடி என்ன கிண்டல் பன்ரதுகனே வந்துரக்காளுக. _ மதுராகினி

அவ கிளம்பட்டும் நாம ஹீரோவ பாத்துட்டு வரலாமா

மணமகனின் அறையில் 6 அடியில் ஒருவன் முகத்தில் கடுகு போட்டால் பொரியும் அளவு கோபத்தில் முகம் சிவந்து நின்றுந்தான்

அவன் அறையில் நுழைந்தான் விஷ்வா

டேய் என்னடா நீ இன்னும் கிளம்பாம இருக்க சீக்கிரம் கிளம்பு என்று கூறிய தன் நண்பனை ஒரு முறை முறைத்து விட்டு கிளம்பி தயாரானான் ஷ்ரவன்

அவன் அமைதியை பார்க்க உள்ளுக்குள் கிளி பிடித்தது. விஷ்வாவுக்கு

மாப்பிள்ளைய அய்யர் அழைக்க சென்று அமர்ந்து கொண்டான் அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை

அடுத்து பெண்ணை அழைத்து வந்தனர்

அவள் ஆசையாக. அமர்ந்திருந்தால் அவன் அவள் முகத்தை கூட பார்க்காமல் கடமையேயென தாலி வாங்கி அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை சரிபாதி ஆக்கிக் கொண்டான்