அத்தியாயம் 10
“நான் அப்போ காலேஜ் முடிச்சிருந்தேன். ஒருநாள் என் பிரண்டோட வீட்டுக்கு திருவிழாக்காக போய் இருந்தேன். ம்ம்ம்.. நான் காலேஜ் படிச்சது எல்லாமே பெங்களூர்ல தான் ஆனால் என் பிரண்டோட வீடு மதுரையில இருந்துச்சு நான் அங்கதான் போயிருந்தேன் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா. அப்போ கூட்டத்துல தான் நான் ஆதிய முதன் முதல்ல பார்த்தேன். எனக்கு அவளை அந்த கூட்டத்துல பார்த்ததுமே ரொம்ப பிடிச்சி இருந்துச்சு ஆனா அதுக்குனு தனியா காரணம்லா இல்ல. திருவிழானு வந்தா ஏதாவது ரெண்டு மூணு பொண்ணுங்க நல்லா தான் இருப்பாங்க அப்படிதான் பசங்களுக்கு தோணும். அவங்கள பார்க்கறதும் பசங்களுக்கு பொதுவா வழக்கம்தானே? நான் வேற காலேஜ் முடிச்ச டைம் அது.. அந்த வயசுல எந்த பொண்ண பாத்தாலும் அழகா தான் தெரியும். அப்படித்தான் இவளும் தெரியுறா போலன்னு நினச்சு நான் அந்த நாளை கடந்துடேன். அதுக்கப்புறம் நான் என் பிரண்டு வீட்டிலேயே ஒரு வாரம் தங்கி இருந்தேன்.
சும்மா ஊர் சுத்தி பாக்கலாம்னு தினமும் வெளில சுத்துனோம்.. அப்படி ஒரு நாலுதான் ஆதினிய எதர்ச்சையா திரும்பவும் ரோட்ல பாத்தேன்.. அன்னைக்கு பார்த்த அதே பொண்ணுல அப்படின்னு நினைச்சேன். ஆனா அப்போ இவ எனக்கு இவ்ளோ முக்கியமா ஆவானு தெரியாது.”
என்றவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான் பின் அவனே மீண்டும் தொடர்ந்தான்
“அன்னைக்கு மறுநாள் நா மதுரையில இருந்து கிளம்புறதா இருந்துச்சி. புஷ் ஏற போரப்போ எனக்கு அவ நியாபகமாவே இருந்துசி எப்படியும் இனிமே அவள பாக்க வாய்ப்பு இல்லனு என் மூளைக்கு தோணுச்சி ஆனா வீதிக்கு அப்படி தொனல போல… எனக்கு சொந்த ஊர் சென்னைதான் அதுக்கு போறதுக்கு முன்னாடி திருச்சில கொஞ்சம் வேலை இருந்துச்சு எங்க மாமா திருச்சியிலதான் இருந்தாரு. அவர பாக்க திருச்சி போயிட்டு சென்னை போறதா பிளான். ஆனா நான் ஏறுன அதே பஸ்லதான் ஆதினியும் வந்தா. என்னடா திரும்பத் திரும்ப அவளை பாக்குற மாதிரி இருக்கு! திருவிழாவுல பார்த்தது சாதாரன விஷயமா தான் தோணுச்சு. திரும்ப ரோட்ல பார்த்தப்போ அது எதேர்ச்சியான விஷயம்னு நினைச்சேன் ஆனா திரும்பவும் அவளை பஸ்லே பார்க்கும்போது இது விதினுதான் நினைக்க தோணுச்சி.
ஆனா ஆதிநிக்கோ அவ பஸ்ல இருக்க நினைப்பே இல்ல. அவ ஒரு தனி உலகத்துல இருக்காது போல இருந்தா. அவங்க வீட்டிலேயே மொத்தம் ஏழு எட்டு பேரும் அந்த பஸ்ல வந்திருப்பாங்க எல்லாரு கூடையும் அவ விளையாடிட்டு வந்துட்டு இருந்தா. கொஞ்சம் லேட்டா பஸ் காலியாக ஆராமிசிச்சு. நிறைய இடம் காலியா இருக்கவும் என் சீட்டுக்கு நேர் சீட்ல வந்து உட்கார்ந்திருந்தா. போன்ல ஏதோ கேம் விளையாடிட்டு இருந்தா. நானும் என் போன் எடுத்து என் போன்ல கேம் விளையாட ஆரம்பிச்சேன். அவ கவனம் என் பக்கம் வருமானு நினைசிக்கிட்டே இருந்தேன் அதே போல கொஞ்ச நேரத்துல அவ கவனம் என் பக்கம் திரும்புச்சி. அவளுக்கு அந்த கேம் புடிச்சி போச்சினு நினைக்கிறேன். ரொம்ப நேரம் நான் விளையாடறதையே பார்த்துக்கிட்டு இருந்தா. நான் அந்த வாய்ப்ப பயன்படுதிக்க பாத்தேன். அவ கிட்ட திரும்பி என்ன என்பது போல பார்த்தேன். அவளுக்கு கோணம் கூட புது ஆளுகிட்ட பேசுரோமேனு பயமே இல்ல. அவ பாட்டுக்கும் பேசுனா.. இந்த கேம் நல்லா இருக்கு எனக்கு ஏத்தி தரீங்களா? எப்படி விளையாடனும்னு சொல்றீங்களா? அப்டி இப்டினு கேட்டா. நான் என்னோட ஃபோன காட்டி இப்படித்தான் விளையாடனும் அவளுக்கு சொல்லி கொடுத்தேன்.
அவளும் எதபத்தியும் யோசிக்காம எங்கிட இருந்து என்னோட ஃபோன வாங்கி விளையாடி பாத்தா அவ போன்ல அந்த கேம் ஏத்திக்கிட்டா.” என்று சூரியா கூறும் போதே வள்ளிக்கு ஒன்று நினைவு வந்தது
அது ஆதினியின் ஃபோனில் எப்போதுமே ஒரு கேம் இருக்கும் அது அவளுக்கு மிகவும் பிடித்த கேம். அதை அடிக்கடி அவள் விளையாடுவதும் உண்டு. அதைப்பற்றி ஒருமுறை அவளும் இவ்வாறு தான் கூறி இருந்தாள். எப்போதோ யாரோ ஒருவர் அதை அவளுக்கு விளையாட சொல்லி கொடுத்ததாக.. ஆனால் யார் என்றுலாம் அவளுக்கு நினைவு இல்லை என்று கூறுவாள். அது சூரியாதான் என்று வள்ளிக்கு அப்போது புரிந்தது. இருப்பினும் இப்போது இருக்கும் நிலையில் அதை கூற வள்ளிக்கு பிடிக்கவில்லை. எனவே சூரியா கூறுவதை மீண்டும் கவனமாக கவனிக்க தொடங்கினாள்.
“அதுக்கப்புறம் திருச்சில எங்க மாமா வீட்டுக்கு போயிட்டேன் திரும்ப அவள நான் பார்க்கவே இல்லை. நான் பெங்களூருக்கு திரும்ப போனேன் மேல படிச்சு ரெண்டு வருஷம் கழிச்சு திரும்ப திருச்சி வந்தேன். ஒரு வேலை திரும்பவும் ஆதினியை பார்க்க முடியுமா என்கிற ஆசை மட்டும் இருந்துச்சு. அது நடக்காது என்று தான் எனக்கு தோணுச்சு யாரோ ஒரு பொண்ணு யாருன்னு தெரியாது, பெயர் தெரியாது அன்னிக்கு திருச்சிக்கு வந்தானு மட்டும் தான் தெரியும். திருச்சி வழியா வேற ஊருக்கு போயிருக்கலாம் இல்ல மதுரையே அவளோட ஊரா இருக்கலாம்.. ஆனா எனக்கு ஏன் அப்படி தோணுச்சுன்னு தெரியல திருச்சிக்கு தான் வரணும்னு நினைச்சேன். திரும்ப திருச்சி வந்தேன் ஒரு வாரம் சுத்துனேன். என்னால அவள பார்க்கவே முடியல. சின்ன ஊர் இல்லையே திருச்சி!” என்றவன் அமைதியாக அவன் எதிரே இருந்த சாலையை வெறித்துக் கொண்டிருக்க
வள்ளி மீண்டும் தொடர்ந்து “அப்புறம் எப்ப சார் பார்த்தீங்க?” என்றாள்.
“அப்போ நா திரும்ப போயிட்டேன். ஆனா திரும்பவும் வந்தேன் மூணு மாசத்துக்கு ஒரு தடவை வருவேன், திரும்ப மாசத்துக்கு ஒரு தடவை வந்தேன் எங்க மாமா வீட்டுல தங்கி இங்க எங்க பாத்தாலும் தேடுனேன்.
இனி கிடைக்கவே மாட்டானு நினைச்சபோ தான் ஒரு நாள் அவள உச்சி பிள்ளையார் கோயில்ல வச்சி எப்படியோ பாத்துட்டேன். அவ பின்னாடியே போய் வீடு எங்கன்னு பார்த்தேன். அதுக்கப்புறம் திரும்ப நான் திருச்சியிலிருந்து கிளம்பிட்டேன். எப்ப எல்லாம் அதுக்கப்புறம் அவளை பார்க்கணும்னு தோணுதோ அப்ப எல்லாம் நேரா வந்து அவங்க வீட்டு தெருமுனையில் உள்ள ஒரு டீ கடையில உட்கார்ந்துப்பேன். அவளை பார்ப்பேன். அதுக்கப்புறம் நான் இந்த டீச்சிங் ஜாப் செலக்ட் பன்னேன். எனக்கு அது சின்ன வயசுலேந்தே ஆசை. அப்போதான் தோணுச்சி அதை ஏன் நம்ம திருச்சிலயே பாக்க கூடாது? அப்போ டெய்லி ஆதினிய பார்க்கலானு நினைச்சேன். நான் ரெண்டு மூணு காலேஜ்ல போட்டதில்ல எனக்கு இந்த காலேஜ்ல தான் கிடைச்சுச்சு. நான் அதிகமா ஞாயிற்றுக்கிழமைல தான் வந்து ஆதினிய பாப்பேன். அதனால அவ எந்த காலேஜ்னு எல்லாம் எனக்கு தெரியாது. இந்த காலேஜ் வந்து முதல் நாள் நான் உங்களுக்கு கிளாஸ் எடுக்க வந்த போதுதான் ஆதினியும் இதே காலேஜ் தான் அதுலயும் என்னோட ஸ்டூடண்ட்னு எனக்கு தெரியும். என்ன தான் ஆதினிய இத்தன வருஷமா நான் ஒன் சைடா லவ் பண்ணி இருந்தாலும் உன்னை காதலிக்கிறேனு என்னுடைய எத்திக்ஸ் என்ன அவகிட்ட என் லவ்வ சொல்ல விடாம பண்ணிடுச்சி. சோ ஆதினி படிக்கிற வரைக்கும் அவளுக்கு எந்த டிஸ்டர்பும் வேண்டாம்னு நினைச்சேன் ஆனா அப்படி படிச்சு முடிக்கிறதுக்குள்ளையே அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணுவாங்கன்னு நினைக்கல” என்ற சூர்யா மீண்டும் அவனது கண்களில் கண்ணீர் பெருக்கு எடுத்துக் கொண்டதை கட்டுபடுத்த முடியவில்லை.
சிறுபிள்ளை போல அழுபவனை பார்த்து வள்ளிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. ஆனால் அவளுக்கு ஒரு சந்தேகம் மட்டும் வந்தது அதை மட்டும் அவள் தெளிவு படுத்திக்கொள்ள நினைத்தாள்.
“சார் அப்போ ஆதினி உங்கள பாத்தது போல இருக்குனு சொன்னது?” என்றாள்.
அவன் “தெரியல ஒருவேளை அன்னிக்கு பஸ்ல பார்த்தது வச்சு சொல்லி இருக்கலாம் இல்லனா நான் மறஞ்சு எல்லாம் அவளை பார்த்ததில்லை எப்பவுமே அந்த டீக்கடையில தான் உட்கார்ந்து இருப்பேன் அப்போ பார்த்திருக்கலாம் அவளுக்கு எது நியாபகம் வந்துச்சுன்னு எனக்கு தெரியலையே!” என்றான் சூர்யா.
அதற்கு வள்ளியோ “இதை நீங்க முன்னாடியே ஆதினிகிட்ட சொல்லி இருக்கலாம்ல சார்?” என்றாள்.
அவனும் “ஒருவேளை ஆதினி என்னோட ஸ்டூடண்டா இல்லாம இருந்திருந்தா.. நான் இந்த காலேஜுக்கு வராம இருந்திருந்தா கண்டிப்பா சொல்லி இருப்பேன். இல்… அப்பவும் ஆதினி படிச்சு முடிச்ச அப்புறமா சொல்லிக்கலாம்னு கூட நினைச்சிருப்பேன் எதுவும் எனக்கு தெளிவா தெரியல” என்றவன் தொடர்ந்து
“சரி வள்ளி ஏற்கனவே லேட் ஆச்சு. நான் உங்களை காலேஜ்ல விட்டர்றேன், நீங்க வீட்டுக்கு போங்க. நீங்க இத பத்தி ஆதினிகிட்டையோ வேற யார்கிட்டயும் எதுவும் சொல்லமாட்டீங்கனு நம்புறேன்” என்றான்.
“இல்ல சார் இத பத்தி நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.” என்றாள்.
“ரொம்ப தேங்க்ஸ் வள்ளி” என்றான் சூர்யா.
“எதுக்கு சார்?” என்று கேட்டவளிடம்
“இல்ல இதெல்லாம் கேட்டதுக்கு அப்பறம் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொன்னதுக்கு” என்றான் சூர்யா.
“பரவால்ல சார்” என்றாள்.
அதன் பிறகு இருவருமே பேசிக் கொள்ளவில்லை. வள்ளியின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது. தோழிகள் மூவரில் ரம்யா மட்டும்தான் காதல் செய்து கொண்டிருந்தாள். அது அவள் பள்ளி பருவத்திலேயே உருவான கதை. ஆனால் வள்ளி அப்படியல்ல அவளுக்கு காதல் என்பதே புதிது இருப்பினும் அவளுக்கு சூர்யாவின் கதையை கேட்கவும் மிகவும் பாவமாக இருந்தது. சூர்யா ஆதினியிடம் சொல்லி இருக்க வேண்டும் என்றே தோன்றியது. ஆனால் சூர்யா ஆதிணியை இவ்வளவு காதல் செய்தும் அவனது வேலையின் மீது இருந்த மதிப்பு அவனை கூற விடாமல் செய்தது என்பதும் அவளுக்கு புரிந்தது. அது சூரியாவின் மீது இருந்த மதிப்பா கூட்டியது அதோடு காதலின் மீதான அவளது பார்வையும் மாறியது. இன்னொரு பக்கம் ஆதினியின் உயிர் தோழியாக யோசிக்க இவ்வளவு காதல் செய்யும் ஒருவர் தானே அவளது தோழிக்கு மிகவும் பொருத்தமானவராக இருக்கும் என்றும் யோசித்தாள்.
ஆனால் ஆதினியின் திருமணம் ஏற்கனவே முடிவானதால் அதில் வள்ளியால் எதுவும் செய்ய முடியவில்லை. சூர்யாவிற்கு கொடுத்த வாக்கினால் இதைப்பற்றி ஆதினியிடம் அவளால் இப்பொழுது பேச முடியும் என்றும் தோன்றவில்லை. அப்படியே சூர்யாவை பற்றி கூறினாலும் அது ஆதனியை மேலும் குழப்பி விடுமோ என்று தோன்றியது இதற்கு மேல் அவள் குழம்புவது சரியான ஒன்றாக இருக்காது என்று வள்ளி நினைத்தாள். எனவே அதைப்பற்றி அவளிடம் அதன் பிறகு பேசவே இல்லை.
நாட்கள் வேகமாக சென்றது. அவர்கள் கல்லூரியின் இறுதி நாளன்று அனைவரும் விடைபெறும்பொழுது ஆதினி அனைவரையுமே அவளது திருமணத்திற்கு அழைத்திருந்தாள். அன்றிலிருந்து சரியாக 20 நாளில் ஆதிணிக்கு திருமணம்.
அந்த நாளும் வந்தது. ஆதினிக்காக அனைவரும் அவளது திருமானத்தில் கலந்துக் கொண்டனர். சூரியாவும் ராமும் கூட கலந்து கொண்டனர். திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆதினி மிகவும் அழகாகவும் மகிழ்ச்சியில் வீர்ரீறுந்தாள். அதற்கு மேல் அவளாய் அந்த கோளத்தில் சூரியாவால் பார்க்க முடியவில்லை. அவனுக்கு மூச்சி மூட்டுவதை போல இருந்தது. எனவே சிறிது காற்று வாங்க வெளியில் வந்து நின்றான். அவன் வெளியில் செல்வதை கவத்த வள்ளியும் அவனது பின்னே சென்றாள். சூரியா அங்கிருந்த மணமக்களது பெயரை ஒட்டியிருந்த பலகையை பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தான். அங்கு வந்த வள்ளி
“என்ன சார் பாக்குறீங்க?” என்றாள்.
சூரியா அந்த பலகையை காட்டவும் வள்ளியும் அதை பார்த்தாள்.
‘தீரன் வெட்ஸ் ஆதினி’
என்று இருந்தது அந்த பலகை.
சூரியாவின் மனநிலை தற்போது எப்படி இருக்கும் என்று வள்ளி நான்கு அரிவாள் ஆனால் இந்நிலையை காலம்தானே மாற்ற வேண்டும் என்று அவள் எண்ணினாள். அதையே அவனிடம் சொல்லவும் செய்தாள்.
ஆனால் அதற்கு சூரியாவோ “காலம் எல்லாத்தையும் மாத்தூம்தான் வள்ளி ஆனா அது நல்லதா மட்டும்தான் மாரும்னு எந்தவித உத்தரவாதமும் இல்லையே!” என்றவன் தொடர்ந்து
“காலம்… அது யாருக்காகவும் யாராயும் அது மாத்தூறது இல்ல காலம் அதுக்கு தேவையானத மட்டும்தான் மாத்தூது” என்றான்.
அவன் கூறிய எதுவும் அன்று வள்ளிக்கு புரியவில்லை ஆனால் பிற்காலத்தில் அது புரிய வரும் பொழுது அவளது தோழியின் வாழ்க்கை தலைகீழாக மாறிபோகும் என்று அன்றைய நிலையில் அவள் கனவிலும் நினைக்கவில்லை.
*நிகழ்காலம்*
உலகமே இருண்டது போல மயங்கி விழுந்தவளை தண்ணீர் தெளித்து எழுப்பினான் தீரன். கண் விழிதவள் எதிரில் இருந்தவனைப் பார்த்து
“நீங்க…” என்று பேச முடியாமல் இழுக்கவும்
“எனக்கு ஒண்ணு இல்ல ஆதி.. ஆனா எனக்கு உண்ண இங்க.. என்கிட்ட வரவைக்க வேற வழி தெரியல” என்றான்.
அவள் எதுவும் கூறாமல் நீர் தேங்கிய அவளது கண்களுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நா பன்னது தப்புதான் ஆதி. அதுக்கு தண்டனையா இந்த அஞ்சு வருஷம் போதும்.. இதுக்கு மேல உண்ண பிரிஞ்சி என்னால இருக்க முடியாது” என்றான் தீரன்.
ஆம் அன்று சூரியா கூறியது உண்மைதான். காலம் யாருக்காகவும் யாரையும் மாற்றுவது இல்லை. அது அதனுடைய சொந்த தேவைக்காக மட்டுமே அணைத்தையும் மாற்றுகிறது. ஆதினி தீரனின் வாழ்க்கையும் அப்படிதான் ஆனது. அவர்களின் கதையையும் முடிவையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நன்றி