அத்தியாயம் -18
குறும்புத்தனம் அதிகம் என்றாலும் குணத்தில் மணியம்மையின் வளர்ப்பு பூரணியிடம் அப்படியே இருந்தது.வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிடாமல் அனுப்ப மாட்டார் மணியம்மை.மகள்களுக்கும் அதையே கற்று கொடுத்து இருந்தார்.அதனாலோ என்னமோ பேச்சியம்மாள் புகழ் சாப்பிடாமல் சென்றதை பற்றி புலம்பியதும் பூரணிக்கு ஏதோ குற்றம் செய்த உணர்வு ஏற்பட்டது.
“அச்சோ நான் ஒரு கிறுக்கி......வந்த மனுசனை சாப்பிடுங்கனு சொல்லாம விட்டு புட்டேன் என அறைக்குள் உட்கார்ந்து தனக்கு தானே புலம்பி கொண்டு இருந்தவள் அட நான் தான் சொல்லலை...இந்த ஓரங்கொட்டானுக்கு புத்தி எங்க போச்சு ...அவனாவது போட்டு சாப்பிட்டு போயிருக்கலாம்....கிடக்கட்டும் என்கிட்ட முறைச்சுகிட்டு போனான்ல ...பட்டினி கிடக்கட்டும்” என அவன் மேலேயே கோபத்தை திருப்பியவள் பின்னர் மீண்டும் “அச்சோ அத்தை சொன்ன மாதிரி சாப்பிட்டானோ என்னமோ தெரியலையே....துரை வேற பசி தாங்க மாட்டாராமா.....பள்ளி கூடம் படிக்கும் போது அந்த நாயர் டீ கடையில உட்கார்ந்து போண்டாவா மொக்குவான்...இப்ப என்ன கேடு...திங்க வேண்டியது தான” என அவனை திட்டிகொண்டே கவலைக்பட்டு கொண்டு இருந்தாள்.
மதியம் பேச்சியம்மாள் அவளை சாப்பிட அழைக்க அவளோ மறுக்க உடனே அவர் தனது இழுவையை ஆரம்பிக்கவும் வேகமாக இரண்டு வாய் அள்ளி போட்டு கொண்டு வந்து அமர்ந்தாள்.பொழுது சாயும் நேரத்தில் கனகா கோவிலுக்கு அவளை அழைக்க அவள் நாளை வருவதாக சொல்லி மறுத்துவிட்டாள்.
இரவு நேரம் ஆகஆக ஏனோ கண்கள் வாசலை நோக்கியே இருக்க அவன் வரவை எதிர்பார்த்து கொண்டு இருந்தாள். இரவு உணவிற்கும் பேச்சியமாள் அழைக்கவும் அவள் வேண்டாம் என சொல்ல அவர் அவளை முறைக்கவும் “இல்ல அது வந்து அவங்க வரட்டும் சாப்பிட்டுக்கிறேன்” என சொல்லவும் அவர் அதற்கு மேல் எதுவும் சொல்ல வில்லை.
இரவு வெகு நேரத்திற்கு பிறகு புகழ் வீட்டிற்கு வந்தான்.அவன் உள்ளே நுழையவும் வாசலில் காத்திருந்த பேச்சி “என்ன தம்பி இவ்ளோ நேரமாய்டுச்சு ..போன சோலி நல்ல படியா முடிஞ்சுதா” என கேட்கவும்
“அதெல்லாம் நல்லபடியாதான் முடிஞ்சுதும்மா என்றவன் இப்போ நெல்லுல ஏதோ புது ரகம் வந்து இருக்காம்...அதுக்கான கூட்டம் தான் நடந்தது.நம்ம தெக்கால காட்டுல நெல்லு போடலாம்னு இருக்கேன்...அதான் போயிட்டு வந்தேன்” என்றான்.
“பார்த்து செய் தம்பி...பருவமழை வேற தப்பி கிடக்கு....நீ பாட்டுக்கு விதைச்சுபுட்டு அப்புறம் விசனப்பட்டுகிட்டு கிடக்காத” என அனுபவஸ்தராக அவர் சொல்லவும்
“சரிம்மா...நான் ராசு சித்தப்பாவையும் ஒரு வார்த்தை கேட்டுகிறேன் என்றவன் ரொம்ப பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்க ..இதோ வந்திடறேன்” என சட்டை பட்டனை கலட்டி கொண்டே அறைக்குள் நுழைய
அங்கு தலையனையிடம் புலம்பி கொண்டு இருந்தவள் அவன் அறைக்குள் நுழைந்ததும் அவன் முகத்தை பார்க்க அவனோ கண்டு கொள்ளாமல் திரும்பி தனது வேலையை பார்க்க வேகமாக அவன் முன் வந்தவள் “இங்க பாருங்க மதியம் வீட்டுக்கு வந்தா சாப்பிட்டுட்டு போக மாட்டீங்களா ....நீங்க உங்க மனசில என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.....நீங்க பாட்டுக்கு சாப்பிடாம போய்ட்டீங்க....உங்க அம்மா என்னை பிடிச்சு திட்றாங்க......இந்த வீட்டுக்கு வந்ததில இருந்து எல்லார்கிட்டையும் திட்டு வாங்கிட்டே இருக்கேன் நான் ” என கோபமாக ஆரம்பித்து புலம்பலாக சொல்லி முடிக்க திருமணம் ஆன இந்த மூன்று நாட்களில் முதன் முதலாக அவனை அவள் உரிமையோடு திட்டி கொண்டு இருக்க அவனோ முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்னுடையை வேலையை தொடர்ந்தான்.
கோபமாகவும் வேகமாகவும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் மட்டுமே பேசி கொண்டிருக்க அவனோ அமைதியாக இருக்கவும் சுருசுருவென கோபம் தலைக்கு ஏற..பசியில் என்ன பேசுகிறோம் என் தெரியாமல் “ நீங்க என்ன பெரிய இவரா என வார்த்தையை சொல்லமுடியாமல் தடுமாறியவள் அது வந்து இங்க ஒருத்தி கேட்டுகிட்டு இருக்கேன்...நீங்க பாட்டுக்கு இப்படியே நின்னா எப்படி?கேக்கிறவளை பார்த்தா கேனை மாதிரி தெரியுதா ?உங்களுக்காக கவலைப்பட்டுகிட்டு இருந்தேன் பாருங்க என்ன சொல்லணும் ” என அவள் ஆத்திரத்தில் பொரிந்து தள்ளி கொண்டிருந்தாள்.
அவனோ “ப்ச் என உதட்டை சுளித்தவாறு நீ எதுக்கு எனக்காக கவலைபடற ... நான் எப்படி கிடந்தா உனக்கு என்ன ?” என கேலி குரலில் கேட்டுகொண்டே அவளை சட்டை செய்யாமல் அங்கிருந்து நகரவும்
அவன் அவளை மதிக்காமல் பேச பேச அவளுக்கு கோபம் அதிகமாக “ஏன் சொல்ல மாட்டிங்க.......தப்பு தான்.....நீங்க சாப்பிட்டா எனக்கு என்ன ?சாப்பிடாம போனா எனக்கு என்ன?..... நான் “என அவள் பேச்சை விடாமல் தொடர
அவள் பின்னால் நின்று கொண்டு இருந்தவன் அவள் கைகளை பிடித்து இழுத்து அவன் முன் நிறுத்தி “ஆமாண்டி...உனக்கு என்ன...நான் எப்படி போனா உனக்கு என்ன?......உனக்கு நானா முக்கியம்....அந்த பேங்க் காரன்தான முக்கியம்...அவனை தான நீ நினைச்சு கவலை படுவ.....என்னை எதுக்கு நினைக்கிற” என அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் கோபம் எல்லாம் முகத்தில் கொந்தளிக்க அவன் வேகமாக பேச
இதை எதிர்பார்க்காத பூரணி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள் “ “என்ன உலரிங்க” என தடுமாற்றத்துடன் கேட்டவள் மேலும் அவன் கோபத்தின் வேகம் அவளை பிடித்திருந்த பிடியில் தெரிய “கையை விடுங்க வலிக்குது” என முனகியவள் “ நீங்க என்ன சொல்றிங்க” என மீண்டும் கேட்கவும்
“ம்ம்ம்ம் அப்படியே ஒன்னும் தெரியாதமாதிரி கேட்கிற நீ ..... இன்னும் தாலில இருக்க மஞ்சள் கூட காயலை...அதுக்குள்ள உனக்கு அந்த அழகன் மச்சான் நினைப்போ” என அவன் ஆத்திரத்துடன் கேட்கவும்
அதுவரை அவனிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தவள் பேச்சை நிறுத்தி நிதானாமாக அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ கூண்டில் அடைபட்ட புலி போல் கண்களில் கோப கனலோடு அவளை பார்த்து கொண்டிருந்தான்.
“இப்போ நீங்க சொன்னதுக்கு அர்த்தம் என்ன?சொல்லுங்க .... இப்போ சொன்ன வார்த்தை என்னனு தெரிஞ்சுதான் சொன்னீங்களா”? என அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசியவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுத்தமாக ஆணி அடித்தார் போல் இருக்க
ஏனோ அது அவனை பாதிக்க ஆனாலும் கோபம் குறையாத நிலையில் “ஆமாண்டி தெரிஞ்சுதான் சொன்னேன்....தாலி கட்டி இரண்டு நாள் கூட ஆகலை.... அதுக்குள்ள புருஷனை பத்தி நினைப்பு இல்ல...ஆனா கண்டவனை பத்தி நினைச்சுகிட்டு இருக்க” என அவன் மேலும் வார்தைகளை கொட்ட
“அய்யோ அசிங்கமா பேசாதீங்க என சொல்லும்போதே அவள் உடல் நடுங்க இதுக்குதான் நான் ஆரம்பத்துலயே சொன்னேனே...இந்த கல்யாணம் வேண்டாம்னு...யாரு கேட்டா? என்னமோ பெரிய உத்தம புத்திரன் ,நல்லவன் அப்டின்னு ” என அவள் ஆரம்பிக்கவும்
புகழுக்கு கோபம் எல்லை மீற “அப்போ என்னை கல்யாணம் பண்ணது உனக்கு அவ்ளோ வேதனையா இருக்கா.... எப்போ கேட்டாலும் இதே சொல்ற”...... என கோபமாக பேசினாலும் அந்த குரலில் வருத்தம் இழையோட
அவளோ சட்டேன்று “ஆமா எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை.....நான் விரும்பி உங்களை கல்யாணம் பண்ணலை ” என அழுத்தமாக சொன்னாள்.
அதை கேட்டதும் புகழ் ஆத்திரமும் கோபமுமாக அவள் அருகில் வந்து அவளது இருகைகளையும் பிடித்து “என்னடி சொன்ன...இந்த கல்யாணம் பிடிக்கலையா ...என்னை பிடிக்கலியா உனக்கு......நீ பொறந்ததுல இருந்து உன்னை தவிர வேற யாரையும் நான் நினச்சு கூட பார்த்தது இல்ல ...என்னை பிடிக்கலையா உனக்கு”....என ஆத்திரத்தில் உடல் அதிர அவளை பிடித்து அவன் வேகமாக உலுக்க
இதை எதிர்பார்க்காத பூரணி அவன் சொல்வதை கவனிக்காமல் அவனிடம் இருந்து விடுபடுவதிலேயே கவனமாக இருந்தவள் “ஆமா ...ஆமா எனக்கு உங்களை பிடிக்கலை....எனக்கு அழகன் மச்சானை தான் பிடிச்சு இருந்தது ......... நானே இத உங்ககிட்ட சொல்லனும்னு நேத்து காத்திருந்தேன்...நீங்கதான் லேட்டா வந்தீங்க”.... என அவன் மனநிலை அறியாமல் சரிக்குச் சரியாக அவனிடம் அவள் வார்த்தை தனலை கொட்ட
எந்த வார்த்தை அவள் வாயில் இருந்து வந்து விடக்கூடாது என நினைத்து இருந்தானோ அந்த வார்த்தை...அந்த சொல் அவள் வாய் மொழியாகவே வந்துவிட அவனது மொத்த உணர்வும் அடங்கிப்போக அவளை உலுக்கி கொண்டு இருந்தவன் பிடியை தளர்த்தி அப்படியே சுவற்றில் சாய்ந்தான்.
அவனிடம் இருந்து விடுபட்டவள் அவனை திரும்பி பார்க்காமல் “ச்சே ஆரம்பத்திலேயே சொன்னேன் நான்...கல்யாணம் வேண்டாம்னு.... யார் கேட்டா?....இதோ இப்போ பேச்சு வந்திடுச்சு...ஆமா நான் அழகன் மச்சானைதான் நினைச்சிட்டு இருந்தேன்..... கல்யாண ஆன விஷயம் அவருக்கு தெரியுமா தெரியாதானுதான் நினச்சேன்....இது தப்பா? என்ற கேள்வியுடன் வேகமாக அவன் பக்கம் திரும்பியவள்...அவன் முகபாவனையை கண்டு அதிர்ந்து “எல்லாம் தெரிஞ்சு தான என்னை கல்யாணம் பண்ணிங்க” என கேட்க
அவனோ நிமிர்ந்து அவளை பார்க்க
.....”அப்பவே எல்லா விபரமும் சொல்லி இருப்பாங்களே...அப்ப இந்த வார்த்தையை சொல்ல வேண்டியது தான ........ கல்யாணம் அன்னைக்கும் இதே தான் கேட்டிங்க...இன்னைக்கும் இப்படியே பேசறிங்க......இப்போ என்ன உங்களுக்கு தெரியனும்..... என்னை சந்தேக படறிங்களா? .....நான் கெட்டு போனவளா...இல்லையான்னு தெரியனும் அவ்ளோதானே” என கோபத்தில் வார்த்தைகள் வரைமுறை இல்லாமல் வர
“ஏய்ய்ய்ய்!!!!!!! என விரலை உயரத்தி அவளை எச்சரித்தவன் இப்போ எதுக்குடி இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்க...நான் சொன்னேனா...அப்டின்னு சொன்னேனா” என ஆத்திரத்தில் அவன் எகிற
“பின்ன இப்போ நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம் மச்சான்....போதும் இதோட நிருத்திக்கலாம்.... என்னை பார்த்தா உங்களுக்கு விளையாட்டு பொம்மை மாதிரி தெரியுதா...நீங்க அடிச்சு விளையாடற பந்துன்னு என்ன நினைசுடிங்கலா.....அன்னைக்கு கையால அடிச்சிங்க...இன்னைக்கு வார்த்தையால அடிக்கிறீங்க.....போதும்...எல்லாம் போதும்....நானே இதை பத்தி உங்க கிட்ட பேசணும்னு இருந்தேன் ...இப்போ நீங்க ஆரம்பிசுட்டிங்க....நான் முடிச்சிடறேன்” என்றவள்
“ஆமாம் நான் அழகன் மச்சான தான் கல்யாணம் பண்ணனம்னு நினச்சேன்.....ஏன்னா அவர் என்னை விரும்பினார்.....உன்னை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ண ஆசைபடறேனு சொன்னாரு.....அதனால நான் சரின்னு சொன்னேன்.நீங்களே சொல்லுங்க என்கிட்டே படிப்பு இல்லை,ரொம்ப அழகும் இல்லை,வாய் கொஞ்சம் ஜாஸ்தி பேசுவேன் எல்லாம் தெரிஞ்சும் நல்லா படிச்சு நல்ல உத்தியோகத்துல இருக்க அழகன் மச்சான் வந்து கேக்கும்போது நான் ஏன் வேண்டாம்னு சொல்லணும்...அதான் சரின்னு சொன்னேன்..இதுல என்ன தப்பு இருக்கு...என சொல்லி நிறுத்தியவள் .
“ஆனா உங்களுக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது....... எப்போ பார்த்தாலும் மிரட்டுவிங்க...இல்ல திட்டுவிங்க ........என்கிட்டே என்னைக்காவது நீங்க பாசமா பேசி இருப்பீங்களா .....அப்புறம் எங்க அப்பத்தா சொன்ன மாதிரி நீங்க எங்க அப்பாவ அவமானபடுத்தி இருக்கீங்க....அப்புறம் எப்படி உங்களை எனக்கு பிடிக்கும்” என அவன் எய்த அம்பை அவனுகே திருப்பி எய்தால் அவன் தர்மபத்தினி.
அவள் நடந்த விபரங்களை மற்றும் அவள் மனதில் உள்ளதை சாதரனமாக சொல்லிவிட்டாள்...... இதை கேட்டதும் புயலில் சிக்குண்ட வாழைமரம் போல் அவள் வார்த்தைகளால் அவன் நிலைகுலைந்து அமர்ந்திருக்க அவன் மனதின் வலி அவன் கண்களில் தெரிய அதை பார்த்ததும் ஏனோ பூரணியின் கண்களில் அதுவரை இருந்த கோபம் மறைந்து விழிகளை தாழ்த்தியவள்
“உங்க நிலைமை எனக்கும் புரியுது ....இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி பேசி இருக்கணும்....எல்லாம் முடிஞ்சு இப்போ பேசறது தப்புதான்.ஆனால் நான் எதிர்பார்க்களை நீங்க இந்த கல்யாணத்திற்கு சம்மதிபிங்கன்னு நினச்சுக் கூட பார்க்கலை. இப்பவும் நீங்க எங்க அம்மாக்காக சரின்னு சொல்லிருக்கணும்....இல்ல நடராஜ் ஐயாவுக்காக ஒத்துகிட்டு இருக்கணும்.....நானும் கடைசி நிமிஷம் வரை இந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சி செஞ்சேன் முடியலை...சரி இனி விதிப்படி நடப்போம்....நம்ம நினச்சதுதான் நடக்கலை....பெத்தவங்க ஆசைபட்டதாவது நடக்கட்டும் அப்டின்னு மனச கல்லாக்கிட்டு கல்யாண மேடைக்கு வந்தேன்” என நிறுத்தி அவன் ஏதாவது பேசுவானா என்று அவனது முகத்தை பார்க்க அவனோ சுவற்றை வெறித்து பார்த்த படியே அமர்ந்திருந்தான்.
அவளோ தன் மனதில் உள்ளதை கொட்டி கொண்டிருக்க அவனுக்கோ “எனக்கு உங்களை பிடிக்களை ...அழகன் மச்சானைதான் பிடிச்சிருக்கு” என அவள் பேசிய வார்த்தை மட்டுமே அவன் காதில் எதிரொலித்து கொண்டிருக்க அவள் பேசிய வேறு எதையும் அவன் உணரவில்லை.
நெருப்பு சுடும் என்று தெரிந்தே கையை விட்டுவிட்டு பின்னர் அதற்கு வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை. இழப்புகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை.....தியாகங்கள் இல்லாமல் சந்தோசம் இல்லை....பலத்தடைகளை கடந்து... கசப்பான நினைவுகளை புறம் தள்ளி தன் உயிரானவளை அடைந்தவன் அவள் நெருங்கி வரவும் ஏனோ அந்த நினைவுகள் அவனை இம்சிக்க அவை எல்லாம் மாயையாக இருக்க கூடாதோ...கனவாக இருக்க கூடாதோ என மனம் ஏங்குகிறது.அப்படி இருக்க வேண்டும் என ஆசைபடுகிறது. நிதர்சனத்துக்கும் ஆசைக்கும் இடையே இவனின் நேசம் ஊசாலாட உண்மையை ஏற்றுக்கொள்ளவும் ஒரு பக்குவம் வேண்டும்.பக்குவபட்ட மனநிலையில் இருந்தவன் சில் நேரம் இப்படி தடுமாறியும் போகிறான்.
அவளது வார்த்தைகளால் அவன் மனம் சிதறி போய் கிடக்க அவளோ விடாமல் மீண்டும் “ இந்த கல்யாணம் எனக்கு யோசிக்க கூட நேரம் கொடுக்கலை......வேகமா எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு....இப்பவும் நான் உங்க பொண்டாட்டியானு நினைச்சு பார்த்தா என்னாலே நம்ப முடியல......ஒரே குழப்பமா இருக்கு.........என்னோட மனநிலை இது தான்............என்னை பிடிக்கலைன்னா எங்க வீட்ல கொண்டு போய் விட்ருங்க...இப்படி வார்த்தையால என்னை வதைக்காதிங்க....என்னால் தாங்க முடியல”......என அவள் வேதனையுடன் சொல்லவும்
“.ம்ம்ம்ம் கொடுக்கிறவனை கண்டா வாங்கிரவனுக்கு இலக்காரமாம்..... அர்த்த சாமத்துல வந்து சாப்பாட்டை எடுத்து வைன்னு சொல்லிட்டு போய் பலமணி நேரம் ஆச்சு... எவ்ளோ நேரம் இப்படியே நான் உட்கார்ந்திருக்கிறது.....மதியானத்துல இருந்து புருஷன் சாப்பிடாம இருக்கானே....வந்த உடனே முதல்ல சாப்பிட சொல்வோம்னு இல்லை...அப்படி என்னதான் அங்க இருக்கோ ” என பேச்சியம்மாவின் குரல் கேட்கவும்
அவரது சத்தை கேட்டதும் பூரணியின் பேச்சு அப்படியே அடங்கிவிட அமைதியாக நின்றாள்.
புகழோ தன் நினைவுக்குள் சுழன்று கொண்டு இருந்தவன் பேச்சியம்மாளின் பேச்சு அவனை உலகிற்கு கொண்டுவர வேகமாக எழுந்தவன் “இதோ வந்திட்டேன்மா” என்றபடி அவளை திரும்பி பார்க்காமல் அறையை விட்டு வெளியே வந்தான். சாப்பாட்டில் அமர்ந்தவன் அவர் முறைக்கவும் “இல்லம்மா அதுக்குள்ள ஒரு போன் அதான்” என சமாளிக்க
அவரோ “ஏன்டா புருசனுக்கு ஒரு தரம் பொண்டாட்டிக்கு ஒருதரம்னு தனியா அழைக்கணுமா என்ன ....உன் பொண்டாட்டி வரமாட்டாளா?” என கேட்டார்.
அவனோ “ஏன்மா அவ தூங்கறா...நான் தான் சாப்பிட வந்திட்டேன்ல” என சொல்லவும்
“ என்னது தூங்கிட்டாளா .......ஏண்டா அவ இன்னும் சாப்பிடவே இல்லை...நான் வேற நீ மதியம் சாப்பிடாம போயிட்டேன்னுகொஞ்சம் பேசிபுட்டேன்...புள்ள முகம் சுண்டி போச்சு...வாசலுக்கும் வீதிக்குமா பார்த்துகிட்டே இருந்தது.ரவைக்கு சாப்பிட சொன்னப்பா இல்லை வேண்டாம் ..அவங்க வந்ததும் சாப்பிட்டுகிறேனு சொல்லிட்டா...அதுக்குள்ள தூங்கிட்டாளா ...பாவம்டா...வெறும் வயித்தோட தூங்க கூடாது போய் எழுப்பி கூட்டிட்டு வா...இரண்டு வாய் சாப்பிட்டு தூங்கட்டும்” என அக்கறையாக சொல்லவும்
புகழோ சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தன் தாயை பார்த்துகொண்டு இருந்தான். அவர் பேசுவது அவனுக்கு புதிது இல்லை...ஏனெனில் அவன் அம்மாவை பற்றி அவனுக்கு நன்கு தெரியும்.படபடவென பேசுவாரே தவிர பாசத்தில் அவரை மிஞ்ச ஆள் இல்லை ....அதனால் தான் அவர் பூரணிய என்ன சொன்னாலும் அவன் தடுப்பது இல்லை....ஆனால் இப்போது அவன் மனதில் பூரணி தனக்காக பார்த்திருந்தாள் என அவர் சொன்ன செய்தி மகிழ்ச்சியை கொடுக்க அவனுக்கு சாப்பாடு இறங்கவில்லை.முகத்தில் அதுவரை இருந்த சோர்வு மறைந்து உற்சாகம் வந்தது ..