• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரம் - 30

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -30



“உனக்கு ஏதாவது அறிவிருக்கா புகழு......ஏன் இப்படி பண்ற.... எல்லாத்துக்கும் முறைன்னு ஒன்னு இருக்கு” என பேச்சி திட்டி கொண்டு இருக்க

“அதெல்லாம் முடியாதும்மா...இந்த ஒரு விஷயத்துல என்னை கட்டாயபடுத்தாதீங்க”.....என உறுதியாக சொல்லிவிட்டான் புகழ்..

பின்னர் பூரணி வீட்டிற்கு சென்றவர்கள் பேச்சியம்மாவின் மடியில் அமரவைத்து பெயர் வைக்க குழந்தையை எடுத்து வர சொல்ல அழகிய மணிப்பூரி காட்டன் புடவையில் குழந்தையை கையில் எடுத்துகொண்டு தளர்வாக கூந்தலை பின்னி மல்லிகை பூ சூடி தாய்மையின் மிளிர்வோடு பூரணி நடந்து வர பார்த்துகொண்டிருந்த புகழோ சற்று தடுமாறி தான் போனான்...ராட்சஸி இப்படி இருந்தே என்னை கொல்றாளே என மனதிற்குள் அவளை செல்லமாக திட்டியவன் அப்போது குழந்தையுடன் வந்து புகழ் அருகில் அவள் அமர அந்த நொடி அவன் முகத்தில் தெரிந்த கர்வம் வரையறுத்து கூற முடியாததது. மனதில் நினைத்தவளே மனைவியாக தன்னருகே அமர்ந்திருக்க தங்களின் காதலின் சாட்சியாக தங்களுடய வாரிசு கைகளில் தவழ புகழின் நெஞ்சமோ சந்தோஷத்தில் திளைத்து இருந்தது.

பின்னர் தன் மகன் இந்த தரணியையே கட்டி ஆளவேண்டும் என ஆசையுடன் அவனுக்கு பரணிதரன் என பெயர் சூட்டியவன் தனது தாய்,தாரம்,பிள்ளை மூவரையும் அழைத்துக்கொண்டு தனது ஊருக்கு கிளம்பினான்.

முதன் முதலில் தன் மனைவியும் மகனும் இங்கு தான் வரவேண்டும் என்பதில் அவன் தீர்மானமாக இருக்க பேச்சி எவ்ளோ சொல்லியும் கேட்கவில்லை.

“என்னங்க மச்சான் வீட்டுக்கு போகாம தோட்டத்துக்கு போறீங்க” என அவள் சொல்லி முடிக்கும் முன் தோட்டத்தின் வாசலில் கார் நிற்க எதிரில் இருக்கும் புது வீட்டை பார்த்ததும் அதிசயத்து போனாள் பூரணி.

“இது எப்போ மச்சான் கட்டினிங்க...சொல்லவே இல்லை” என கேட்டபடி காரில் இருந்து அவள் இறங்க அவனோ பதில் சொல்லாமல் உள்ளே போய் பார் என சொல்ல உள்ளே நுழைந்தவள் அவள் விரும்பியது போலவே சின்னதாக தொட்டிகட்டு வீடு இருக்க முற்றம் முழுவதும் மல்லிகை செடி நிறைந்திருக்க தோட்டத்திற்குள் வீடா..... வீட்டுக்குள் தோட்டமா என தெரியாத அளவு பூக்களின் மனம் வீடு முழுவதும் நிரம்பி இருந்தது.அவள் சிறுவயதில் ஆசைப்பட்ட கனவு வீடு இப்பொழுது அவள் கண் முன்னே இருக்க வீட்டின் முற்றத்தில் நின்று ஆஆஆஆஅ என கத்திகொண்டே முற்றத்தை அவள் சந்தோஷத்தில் சுற்ற ஒரு நிமிடம் பேச்சியும் புகழும் பயந்து விட்டனர்.

“உனக்காக கட்டின வீடு பிடிச்சிருக்கா பூரணி” என அவன் கேட்கவும் வேகமாக ஓடிவந்து அவனை இருக்க தழுவியவள் அவன் முகம் எங்கும் முத்தமழை பொழிய கையில் குழந்தையை வைத்துகொண்டு அவன் தடுமாற பேச்சியோ “பூரணிஈஈ” என அதட்டல் போடவும் சட்டென்று அவள் விலக அவன் கையில் இருந்து குழந்தையை வாங்கியவர் “’இப்போ என்னமோ பண்ணுங்க”......என சொல்லிவிட்டு அங்கிருந்து நகரவும் அடுத்த நொடி புகழின் அணைப்பில் இருந்தாள் பூரணி.

பூரணிக்காக பார்த்து பார்த்து மல்லிகை தோட்டத்தில் சிறு பண்ணைவீட்டை கட்டி இருந்தான் புகழ். அவள் வாசம்,அவனின் காதல் நிறைந்திருக்கும் இந்த இடத்தில் தான் தனது மகனின் முதல் காலடி படவேண்டும் என ஆசைப்பட்டவன் அதனால்தான் இங்கு அழைத்து வந்தான். அன்று இரவு அவர்கள் அங்கே தங்கிக்கொள்ள பேச்சி தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

இரவு குழந்தை அழுது கொண்டு இருக்க அவனை சமாளிக்க முடியாமல் அவள் திணறி கொண்டு இருக்க அங்கு வந்த புகழ் “எதுக்கு இப்படி குழந்தயை அழுக வச்சுக்கிட்டு இருக்க” என கேட்கவும்

“ஆமா உங்க பையன் உச்சா போனா ஒரு நிமிஷம் பேசாம இருக்க மாட்டேங்கிறான்...நான் மாத்து துணி எடுக்கிறதுக்குள்ள கத்தி ஊர கூப்பிட்றான்......நான் என்னதான் பண்ணட்டும்” என சலித்தவாரே அவள் துணி மாற்றிவிட

“குழந்தைனா அப்டிதான் பூசணி குட்டி ......நீ வாடா செல்லம்” என மகனை தூக்கி கொஞ்சிவன் பின்னர் இருவரும் மாற்றி மாற்றி வைத்திருக்க சிறிது நேரத்தில் உறங்கி போனான்.

பூரணியும் உடை மாற்றிவிட்டு வந்தவள் “மச்சான் குழந்தையை கொடுங்க நான் தூங்க போறேன்” என சொல்லிகொண்டே அவனை பார்த்தவள் அழகாக ஒரு தூரி கட்டி அதில் குழந்தையை உறங்கவைத்திருந்தான் புகழ்.

“என்னங்க மச்சான் குழந்தையை இப்படி தனியா படுக்க வச்சிருக்கீங்க..பயந்துகும்ல ...இப்படி எல்லாம் படுக்க வைக்க கூடாது “ என்றபடி குழந்தையை அவள் தூக்க முயற்சிக்க

அவனோ அவள் பின்னால் வந்து நின்றவன் “அதான் நானும் சொல்றேன்...நீ பாட்டுக்கு உன் பையன் கூட படுத்துகிட்டா இந்த குழந்தை பயப்படாதா “ என சரசமாக பேச

பூரணிக்கோ அவன் சொல்ல வந்தது புரிய கிண்டலாக ......”ம்ம்ம் யாரு குழந்தை ...நீங்களா...சரியான போக்கிரி நீங்க.....அந்த போக்கிரிக்கு பொறந்த இவன் சரியான கள்ளன் என தூங்கி கொண்டு இருக்கும் குழந்தையின் கன்னத்தை லேசாக நிமிட்ட அவனோ அவள் இடுப்பை லேசாக கிள்ளவும் என்னங்க மச்சான் நீங்க என்றவாறு துள்ளி குதித்தவள் அப்படியே அவன் மேல சரிய ஏற்கனவே மயக்கத்தில் இருந்தவன் இப்போது சுத்தமாக தன் நிலை மறக்க அவளை இழுத்து அணைக்கவும் அவளோ பதறி “விடுங்க மச்சான்.... அதெல்லாம் புள்ளைக்கு ஒரு வருசம் ஆகிற வரை” என அவள் சொல்லி முடிக்குமுன் அவளை அலாக்காக தூக்கியவன் “என்னது ஒரு வருஷமா...ஒரு நிமிஷம் கூட என்னால காத்திருக்க முடியாது.....ஹப்பா காலையில உன்னை அந்த புடைவயில பார்த்ததில இருந்து என் மனசு அடக்க நான் பட்ட கஷ்டம் உனக்கு எங்க தெரியபோகுது....அப்படியே அசத்தரடி.....இனி தாங்காது...என் பூசணிகுட்டி நீ என் தேவததைடி...... எனக்கு கிடச்ச வரமடி” என உலரியவாரே அவள் உடலெங்கும் தன் முத்திரையை பதித்தவன் “என்னடி சொன்ன நான் போக்கிரியா என்றவன் போக்கிரி எப்படி இருப்பான்னு இப்போ காட்றேன்” என சொல்லிகொண்டே அவள் மீது படர அவனது அணைப்பில் அவளும் கரைந்து போனாள்.

நடு இரவில் பூரணிக்கு விழிப்பு வர “விடுங்க மச்சான் குழந்தை உச்சா போயிருப்பான்...பார்க்கணும்” என சொல்லவும்

அவனோ “அதெல்லாம் வேண்டாம்...இருந்தா அவனே அழுது கூப்பிடுவான்......இப்போ நீ பேசாம படுடி” என மீண்டும் தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன் பின்னர் சில மணி நேரத்திற்கு பின்னே அவளை விடுவித்தான்.

“உங்களோட தொல்லையா போச்சு” என சலித்தவாரே எழுந்தவள் குழந்தயை சென்று பார்க்க அங்கு ஒண்ணுக்கு இரண்டுக்கு என எல்லாம் போய் குழப்பிக்கொண்டு ஆனால் தொட்டிலில் அமைதியாக படுத்து இருந்தான் புகழின் சீமந்த புத்திரன். பூரணியின் முகத்தை பார்த்ததும் தன் பொக்கைவாய் கொண்டு சிரிக்க

பூரணியோ “மச்சான் இங்க பாருங்க உங்க பையனை...எல்லா வேலைதனமும் பண்ணிட்டு அமைதியா படுத்து இருக்கிறான்...இதே நான் கைல வச்சிருந்தா உச்சா போனா கூட ஊரே கேட்கிற மாதிரி கத்துவான்...இப்போ பாருங்க எவ்ளோ கமுக்கமா படுத்திருக்கான்னு” என அவள் புலம்ப

எழுந்து வந்து தன் மகனை பார்த்த புகழ் “அவன் என்ற மகன்டி........அப்பாவை எப்போ தொந்தரவு பண்ணகூடாதுன்னு அவனுக்கு தெரியும்...இல்லடா தங்கம்” என அவன் செல்லம் கொஞ்சவும் அவன் மகனோ தந்தை முகம் பார்த்து ங்க!!! என சிரிக்கவும் பூரணிக்கோ சந்தோஷமும் கோபமும் சேர்ந்தே வந்தது.

“உங்க அப்பன் மாதிரரியே நீயும் அமுக்கண்டா” என செல்லமாக திட்டிகொண்டே சுத்தம் செய்தாள் பூரணி.


“டேய் மருது சாமானம் எல்லாம் சரியா இருக்கா ....... அப்புறம் ரெண்டு வண்டி முன்னாடி போயிருச்சா...ஏதாவது மறந்துபுட்டு அங்க வந்து சொல்லிக்கிட்டு இருக்காதடா” என பேச்சியம்மாள் சத்தம் போட்டு கொண்டு இருக்க

“எல்லாமே எடுத்து வச்சுட்டேனுங்க.......வாழைதாறு தான் அய்யா செவ்வாழை கேட்டாரு...அத மட்டும் வெள்ளியம்பாலயத்துல இருந்து வந்திடுமுங்க” என அவன் பதில் சொன்னான்.

“ஏண்டா அதை உன்ற அய்யா காசு கொடுத்து வாங்கமாட்டானா.... அங்க எதுக்குடா சொன்னான்......பொண்ணு கட்டுன வீட்ல போய் பொருளை வாங்கிகிட்டு” என சொல்லி கொண்டு இருக்கும்போதே

“ஆனாலும் உங்க அம்மாவுக்கு இந்த லொள்ளு பேச்சு மட்டும் குறையாது....எங்க வீட்ல பொண்ணு கட்டுவிங்களாம்...ஆனா பொருளை வாங்கிறதுக்கு ரொம்பதான் கௌரவம் பார்க்கிறீங்க”....என பூரணி புகழிடம் குறைபட்டுகொள்ள

“விடுடி அம்மாவை பத்தி உனக்கு தெரியாதா.....பெரியவங்கனா அப்டிதான் என்றவன் நேரமாச்சு நீ கிளம்பு ...அப்புறம் அதுக்கும் அம்மாகிட்ட வசவு கிடைக்கும் என அவன் சொல்லி முடிக்குமுன்னே பூரணி விரசா வா.......சொந்தகாரங்க எல்லாம் வந்திட போறாங்க என சத்தம் வர இதோ வந்திடறேன் அத்தை” என்றபடி உடைமாற்ற அறைக்குள் சென்றாள். “ம்ம்ம் என்கிட்ட மட்டும் சட்டம் பேசுவா...அம்மா சத்தம் கேட்ட போதும் இவ சத்தம் வெளியே வராது” என முனகியபடியே அங்கிருந்து சென்றான் புகழ்.

“பாரி இப்போ எங்க இருக்க...நேரா அங்கே வந்திட்ரியா....இல்லை உனக்காக இங்க இருக்கட்டுமா நாங்க “ என மாணிக்கம் போனில் கேட்டுக்கொண்டு இருக்க

“ஏனுங்க இன்னும் என்ன பேசிகிட்டே நிக்கிறிங்க...நேரமாச்சு...நம்மலே தாமசமா போனா அவங்க என்ன நினைப்பாங்க” என மணியம்மை அதட்டவும்

“இருபுள்ள சீக்கிரம் போய்டலாம்..... டேய் சொக்கா இன்னைக்கு சோளகாட்டுக்கு மருந்து அடிக்கிறது...கொஞ்சம் பார்த்துகடா...நான் வரதுக்கு சாமம் ஆனாலும் ஆகும்” என அவர் வேலை சொல்லிக்கொண்டு இருக்க

“அதெல்லாம் அவன் பார்த்துக்குவான் நீங்க கிளம்புங்க” என கணவனை இழுத்துக்கொண்டு நடந்தார் மணியம்மை.

“ஏண்டா இன்னுமா உன் பொண்டாட்டி கிளம்பி வரா என கேட்டுகொண்டே சரிடா சாமி ...நீங்க அழுகாதீங்க...கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை உங்க ஆத்தாளுக்கு என அழுதுகொண்டிருந்த பேரனை சமாதானபடுத்தியவர் நீங்க எப்பவோ வாங்க நான் என்ற பேரனை கூட்டிகிட்டு முன்னாடி போறேன்......உறவுகாரங்க எல்லாம் இந்நேரம் வந்திருப்பாங்க” என்றபடி அங்கிருந்து கிளம்பினார் பேச்சி.. இதோ நாங்களும் வந்திட்றோம்மா” என்றபடி அவர் பின்னால் சென்றான் புகழ்.

“ ஏம்பா சமையல்காரங்க வந்திட்டாங்களா....டேய் அங்க இருக்க கோணி பை எல்லாம் கொண்டு வந்து இங்க வை...அப்புறம் இங்க பாருங்க சீக்கிரம் சமையல முடிச்சிடுங்க........எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் அடுப்புல இருக்குதுன்னு சொல்ல கூடாது” என பேச்சி சமையல்காரரிடம் கறாராக சொல்லி கொண்டு இருக்க

“நங்கை சாமிக்கு தேவையான பூஜை சாமானம் எல்லாம் இங்க இருக்கு...நேரமாச்சு.....ஆரம்பிச்சுடலாமா” என மணியம்மை கேட்கவும்

“இங்கும் எல்லாம் தயாராதான் இருக்கு மணியம்மை .......ஆனா விசேஷகாரங்களைதான் காணோம் என்றவர் செல்வம் எப்பா செல்வம் புகழ கொஞ்சம் வர சொல்லு...நேரமாச்சு பாரு” என அருகில் இருக்கும் செல்வத்திடம் சொல்ல “பார்க்கிறேன் பெரியம்மா” என்றவாறு அவன் சென்றான்.

“ஏன் நங்கை பாண்டி இன்னும் வரலியா” என மணியம்மை கேட்க

“ஏதோ ஏரோப்லன் தாமசமா வந்திச்சாம்...வந்துகிட்டே இருக்கேனு போன் பண்ணினான் ..வந்திடுவான் என்றவர் பாரி வந்திடுச்சா என கேட்கவும் அவளும் நேரா இங்கே வந்திட்றேனு சொன்னா...வந்திடுவா” என அவர் சொல்லி முடிக்கும் முன் “அம்மா” என்றபடி பாரி வந்து நின்றாள்.

“ இதோ வந்துட்டா” என மணியம்மை சொல்லவும் “உனக்கு நூறு ஆயுசு பாரி என்றவர் பட்டணத்து படிப்பு எல்லாம் எப்படி இருக்கு” என பேச்சி கேட்கவும்

“நல்லா போயிட்டு இருக்குங்கத்தை....நீங்க எப்படி இருக்கீங்க என அவள் நலம் விசாரித்து கொண்டிருக்க

“ஏய் பாரி எப்படி வந்த....இதான் வர நேரமா” என செல்லமாக திட்டியபடியே பூரணி அங்கு வரவும்

“ம்ம்ம் ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமியாம்...இங்க நேர்மாச்சுனு எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க......நீ இப்பதான் குசலம் விசாரிச்சிட்டு இருக்க...போய் ஆகவேண்டிய வேலைய பாரு ...உறவுகாரங்களை எல்லாம் முதல்ல வாங்கனு கேட்டு வா” என வீட்டுக்கு பெரியவராக அவளை அதட்ட..... ..பூரணி முகம் சுருங்கி போனது.அதற்குள் மணியம்மை “பூரணி நீ போய் சொந்தகாரங்களை கவனி” என மகளை அனுப்பி வைத்தார்.


அப்போது புகழ் மகனுடன் அங்கு வர “நேரமாச்சு புகழு...ஆரம்பிக்கலாமா” என பேச்சி கேட்கவும்

“புகழோ பாண்டி வரட்டும் அப்புறம் எல்லாம் செஞ்சுக்லாம்” என்றான்.

“இல்லை தம்பி நல்ல நேரம் போய்டும்” என பேச்சியம்மாள் சொல்லவும் அதற்குள் பாண்டியும் வந்துவிட “இதோ பாண்டி வந்தாச்சு” என ஒருவர் சத்தமிட “அதான் தம்பி வந்திடுச்சுல அப்போ சீக்கிரம் ஆரம்பிங்க என்றவர் எல்லாரும் வாங்க வாங்க” என அழைக்க இவை எல்லாம் புகழ் பூரணியின் சீமந்த புதல்வன் பரணிதரனுக்கு மொட்டை அடித்து காதுகுத்தி சீர் வாங்கும் நிகழ்ச்சிக்காக அவர்களது குலதெய்வ கோவிலில் நடந்து கொண்டு இருந்தது.



பெண்ணை பெற்றவர்கள் தங்களது பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் அவர்களின் குலதெய்வ கோவிலில் கிடா வெட்டி பொங்கல் சீர்கொடுப்பது அந்த ஊர் வழக்கம்


காதுகுத்தும் விழா முடிந்ததும் உறவினர்கள் எல்லாம் மதிய விருந்துகாக காத்திருக்க அப்போது பாண்டியின் நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டு “அப்புறம் மாப்பிள்ளை வெளிநாடு போனதுக்கு பின்னாடி எங்களை எல்லாம் மறந்துடில” என அவர்கள் ஆதங்க பட

“அப்படி எல்லாம் இல்ல மாப்ள.....எப்போ இருந்தாலும் இங்க தாண்டா நான் வரணும்” என்றான் பாண்டி .

“இப்படிதான் ஆரம்பத்துல சொல்வீங்க......அப்புறம் அந்த சொகுசுக்கு மயங்கி அங்கே தங்கிடுவிங்க என்றவர்கள் சரி மாப்ள எவ்ளோ நாள் லீவு ” என ஒருவன் கேட்கவும்

“ஒருவாரம்தான் மச்சான் இருப்பேன்.......கொஞ்சம் பெர்சனல் வேலை இருக்கு ..முடிச்சுட்டு” என அவன் முடிக்கும் முன்னே

“எது உன்னோட பெர்சனல் வேலை...பஸ்டாண்டுல போய் அந்த முட்டைகன்னிக்கு முஸ்தீப் போடற வேலைதான” என அவர்கள் கிண்டலாக சொல்லவும்

“டேய் சும்மா இருங்கடா......அதெல்லாம் இல்லை” என அவர்களை அடக்கினான் பாண்டி.

“ஏம்ப்பா அந்த மேசை நாற்காலி எல்லாம் கொண்டு வந்து போடுங்கப்பா.....சொந்தகாரங்க வரதுக்குள்ள எல்லாம் தயரா இருக்க வேண்டாமா” என வரதன் வேலை ஆட்களை அதட்டி கொண்டு இருக்க

“அதற்குள் பங்காளி குடல்கறி பத்தாது போல இருக்கே...என்ன பண்றது” என கேட்டுகொண்டே செல்வம் அங்கு வர

புகழோ “என்ன பங்காளி இப்ப வந்து சொல்ற என்றவன் சரி ஒன்னும் பிரச்சனை இல்ல ....முட்டை நிறையா இருக்கு ..கொஞ்சம் மசாலாவை போட்டு சரிபண்ணிடலாம்...... நான் சமையல்காரர்கிட்ட பேசிக்கிறேன்” என்றான் .

“பார்த்து பங்காளி இந்த வெள்ளியம்பாலயத்து ஆளுங்க ஒரு மாதிரி...ஏற்கனவே ஊமை குசும்பு அவனுகளுக்கு ஜாஸ்தி..இதுல விருந்துல எங்காவது குறை தெரிஞ்சுது அவளோதான் லந்து பேசியே நம்ம கேவலபடுத்திருவானுக “ என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே

“என்னது எங்க ஊரை பத்தி ஏதோ பேச்சு வருது” என்றபடி பூரணியின் சொந்தகாரர் அங்கு வரவும்

“அது ஒண்ணுமில்லைங்க மாமா ...உங்க ஊர்காரங்க பெருமை எல்லாம் பங்காளிகிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்...என்ன இருந்தாலும் எனக்கு முன் அனுபவம் இருக்குது இல்லயா” என செல்வம் இழுத்தவாறு சொல்ல

“ஹஹஹா அதான ..நீங்க கிடா விருந்து போட்டப்ப தலைக்கறி வைக்கிறேனு சொல்லி ஊறுகாய் மாதிரி இத்துணுண்டு வச்சிங்களே அதை சொல்றிங்களா மாப்ள” என அவர் விஷமமாக சொல்ல

செல்வமோ புகழ் காதில் “பாரு பங்காளி ..... வெள்ளியம்பாலயத்துகாரனுக குசும்ப....... பத்துகிடா வெட்டி இவனுகளுக்கு விருந்து போட்டேன்...கடைசில அது ஊறுகாய் மாதிரி இருந்ததுன்னு சொல்ட்றாங்க ...... இவனுகளை எல்லாம் மாமன் மச்சானு வச்சுக்கிட்டு நான் படற பாடு இருக்கே” என அங்கலாய்ப்புடன் சொல்லவும்

“என்னங்க மாமா பண்றது.... உங்க ஆளுங்க இலையில இருக்கிறத பார்த்து சாப்பிட்டா பரவயில்லை...பக்கத்துல இருக்க கிளாசை பார்த்து சாப்பிட்டா அது ஊறுகாய் மாதிரிதான் தெரியும்” என புகழ் பதிலடி கொடுக்கவும்

“அவரோ விடுப்பா...விடுப்பா....இதெல்லாம் வெளியே சொல்லிக்கிட்டு சரி சரி வேலையை பாருங்க வேலையை பாருங்க என்றபடி அவர் அங்கிருந்து செல்ல உடனே செல்வம் இவனுகளுக்கு சரியான ஆள் நீ தான் பங்காளி.....யார்கிட்ட ஓலபலையத்துகாரங்கிட்டே வா” என வசனம் பேச

“அங்க என்னடா பண்றிங்க...இங்க வந்து வேலையைப் பாருங்க” என பேச்சியின் அதட்டலில் இருவரும் மின்னல் வேகத்தில் கலைந்தனர்..


அப்போது அங்கு வந்த பாண்டி “அண்ணா குட்டி பையன் எங்க” என கேட்க

“தெரியலைடா...அங்கதான் யாராவது வச்சிருப்பாங்க பாரு” என சொல்லவும்

“எங்க என தேட அதற்குள் எதிரில் பேச்சி வரவும் அம்மா பரணி எங்க என கேட்க இந்தா அங்க பொன்னு வச்சுகிட்டு இருக்கு பாரு” என சொல்ல திரும்பி பார்த்த பாண்டி அதிர்ந்து போய் நின்றான்.

அப்போது அங்கு வந்த கொண்டிருந்த பூரணியும் பாரியும் பாண்டியை பார்த்ததும் நின்ற பூரணி “என்ன பாண்டி இங்க நிற்கிற” என கேட்டுகொண்டே அவன் பார்வை சென்ற திசையில் செல்ல அங்கு பூரணியின் குழந்தையை தன் மடியில் படுக்க வைத்து தட்டி கொடுத்தபடி பொன்மலர் அமர்ந்திருந்தாள்.

“என்னாச்சு பாண்டி மகாராஜா,,,காலில் சுலுக்கோ” என பாரி கிண்டலாக கேட்க

பூரணியோ பாண்டி ..பாண்டி என உலுக்க நினைவிற்கு வந்தவன் “பூரணி இங்க இங்க மலரு” என தடுமாறவும்

“மலரா அது யாரு” என பாரி கேட்க

அதற்குள் பூரணி பொன்மலரின் அருகில் சென்றவள்” பொன்மலர் இங்க யாராவது மலருனு இருக்காங்களா” என கேட்டாள்.

“என்னக்கா” என கேட்டுகொண்டே நிமிர்ந்தவள் அங்கு பாரியும் பாண்டியும் அவளை நோக்கி வருவதை பார்த்தவள்

பொன்மலரின் முகத்தில் லேசான பதட்டம் வர அக்கா என வாய்க்குள் முனகியவாறே பூரணி கையை இருக்க பற்றினாள் .

அதற்குள் பாண்டி அருகில் வந்துவிட “அக்கா தம்பிய பிடிங்க” என சொல்லிகொண்டே அவள் கையில் கொடுத்துவிட்டு வேகமாக அங்கிருந்து எழ முயற்சிக்க பூரணியோ அவள் கையை பிடித்து அமரவைத்தாள்.

அருகில் வந்த பாண்டி அவளை மேலும் கீழும் பார்க்க ...ம்ம்கும் என பாரி அருகில் இருந்து சத்தம் கொடுக்க

“பாண்டி நாங்க எல்லாம் இங்கதான் இருக்கோம்” என்றோம் பூரணி.

உடனே அவளிடம் திரும்பி “எப்படி பூரணி.....அம்மாவுக்கு தெரியுமா ?” என முதல் கேள்வியாக கேட்க ..ஏனெனில் அவர்தான் பொன்னு கையில குழந்தை இருக்குனு சொன்னார்...அதனால் அவருக்கு விபரம் தெரிந்து இருக்குமோ என்ற பயத்தில் அவன் கேட்கவும்

“ஆமா முதல்ல அதை கேளு...அவ்ளோ பயம் இருக்குள்ள ...அப்புறம் என்ன வீர வசனம் பேசுனீங்க என கேலியாக கேட்ட பூரணி முழுசா தெரியாது ....தெரிஞ்ச பொண்ணுன்னு அறிமுகபடுத்தி இருக்கேன்” என்றாள்.

“ஹப்பா” என அவன் ஆசவசமாக மூச்சு விட

அதற்குள் மாணிக்கம் பூரணியையும் பாரியையும் அழைக்க “கொஞ்சம் பார்த்துக்கோ பொன்மலர்” என குழந்தையை மீண்டும் அவள் கையில் கொடுத்துவிட்டு சென்றாள் பூரணி.

அங்கு உறவினர்கள் மத்தியில் மாணிக்கமும் மணியம்மையும் நின்று கொண்டு இருக்க ‘அட மாணிக்கம் உன் இரண்டாவது பொண்ணும் நல்லா வளர்ந்திடுச்சு போ” என பெரிய மனிதர் போல் தெரிந்த ஒருவர் சொல்லவும் அதற்குள் மாணிக்கம் “அவளும் இப்போ டாக்டருக்கு மூணாவது வருஷம் படிக்கிதுங்கையா” என பெருமைடன் சொன்னார்.


“அப்படியா கேட்கவே சந்தோஷமா இருக்கு மாணிக்கம்...அந்த காலத்துலே உன்ற பொண்டாட்டி தான் பியுசி படிச்சது.....இப்போ இந்த ஊர்ல இருந்து முதமுதல்ல டாக்டற்கு படிக்கபோனது உன்ற பொண்ணுதான்......நீ அதிர்ஷ்டகாரன் மாணிக்கம்” என சொல்லவும் மாணிக்கமும் மணியம்மையின் முகத்தில் பெருமிதம் பூரிக்க நிற்க பூரணிக்குமே சந்தோஷமாக இருந்தது.


இங்கு “எப்படி இருக்க மலரு “ என பாண்டி கேட்க .

“அவளோ நல்லா இருக்கேன்” என அவனை பார்க்காமல் சொல்லவும்

“இப்போ என்ன படிக்கிற” என அவன் மீண்டும் கேள்வி எழுப்ப

“bcom மூணாவது வருஷம்” என்றாள் பொன்மலர்.

“ஆமா நீ எப்படி இங்க....” என கேட்டவாறு அவள் அருகில் அமர

அவளோ வேகமாக நகர்ந்தவள் “நீங்க தள்ளி நின்னே பேசுங்க” என சொல்லவும்

“ஏன் நான் இங்க உட்கார்ந்தா என்ன?” என கேள்விகேட்டவாரே வேண்டுமென்றே அவன் அருகில் செல்ல

“அப்போ சரி நான் கிளம்பறேன்” என அவள் எழ முயற்சிக்க

“சரி சரி...சண்டிராணி நான் உட்கார்ல... நீ சொல்லு....... பூரணி எப்படி உனக்கு பழக்கம் “என அவன் கேட்கவும்

“அது வந்து எனக்கு அவங்களை தெரியாது...காட்டு வேலைக்கு பாரி வீட்டுக்கு தான் போவேன் .... நான் பன்னிரண்டாவது முடிச்சதும் கொசுவலை கம்பெனிக்கு கான்ட்ராக்ட் வேலைக்கு கூப்பிட்டாங்க....வீட்ல கொஞ்சம் கஷ்டம் ...அண்ணனும் கண்ணாலம் பண்ணிட்டு வீட்டுக்கு ஏதும் பணம் தரது இல்லை..... தங்கச்சிங்க படிக்கணும்.....அதான் அந்த வேலைக்கு போலாம்னு முடிவு பண்ணி அதுக்கு ஊர் தலைவர்கிட்ட கையெழுத்து கேட்டாங்க ...அதை வாங்க உங்க மாமா வீட்டுக்கு வந்தேன்...அப்பத்தான் பாரி பார்த்திட்டு விபரம் கேட்டுச்சு.... ரண்டு நாள் கழிச்சு பூரணி அக்கா வீட்டுக்கு வந்தாங்க.... நீ வேலைக்கு எல்லாம் போகவேண்டாம் ..படி...உனக்கு நான் உதவி செய்யறேன்னு சொன்னாங்க.....நான் வேண்டாம்னு சொன்னேன்..... உடனே அவங்க என்னை வேத்து மனுசியா நினைக்காத....பாரி மாதிரி நீயும் எனக்கு ஒரு தங்கைதான்...... பாரி உன்னை பத்தின எல்லா விபரமும் என்கிட்டே சொன்னா......இந்த சின்ன வயசில உனக்கு இவ்ளோ கஷ்டம் வந்து இருக்க வேண்டாம்.......சரி விடு.....உனக்கு நாங்க இருக்கோம்......எனக்கு வாய்ப்பு வசதி எல்லாம் இருந்தும் நான் படிக்கலை...... ...ஆனா நீ படிக்க ஆசைப்பட்டு உனக்கு காசு இல்லை......படிப்போட அருமை எனக்கு தெரியும்.... நீ படி......நான் உனக்கு பணம் கற்றேன்...என்னோட சேமிப்பு கொஞ்சம் இருக்கு அதுவுமில்லாம நான் என் வீட்டுக்கு பின்னாடி ஒரு தோட்டம் போட்ருக்கேன்...அதுல வர வருமானத்தையும் உனக்கு கொடுக்கிறேன்.....நீ படிச்சு முடிச்சு வேலைக்கு போய் அதை திருப்பி கொடு...மத்தபடி நானும் யார்கிட்டயும் காசு வாங்கி உனக்கு செய்யலைன்னு சொன்னாங்க..அப்புறம் பாரியும் திட்டுனா....நீ எதை நினைச்சு தயங்கறேனு தெரியும்...அக்கா மச்சான்கிட்ட வாங்கி ஏதும் செய்யலை..இது அக்காவோட பணம்...நீ தயங்காம வாங்கிகோன்னு சொன்னா......நீ படிச்சு நல்ல நிலைமைக்கு வந்தா உன்னோட தங்கைகளையும் நீ படிக்க வைக்கலாம்னு சொன்னா....அதான் என சொல்லி நிறுத்தியவள் இங்க பாருங்க பூரணி அக்காவுக்காகதான் நான் இங்க வந்தேன்...மத்தபடி என் மனசில வேற ஏதும் இல்லை”.....என அவள் சொல்லவும்

அவனோ பதில் சொல்லாமல் அமைதியாக அவளையே பார்க்க

“இங்க பாருங்க நம்ம விஷயம் பூரணி அக்காவுக்கு தெரியாது....தெரிஞ்சா அவங்க என்னை என்ன நினைப்பாங்க....எனக்காக எவ்ளோ பெரிய உதவி செஞ்சு இருக்காங்க அவங்களுக்கு”....... என அவள் பேசிகொண்டே போக

“பூரணிக்கு எல்லாம் தெரியும் மலரு” என்றான் பாண்டி.

அவளோ அதிர்ச்சியுடன் அவனை பார்க்க


அதற்குள் “தம்பி பாண்டி இங்க கொஞ்சம் வாயா” என ஒரு பெரியம்மா அழைக்க

“இங்கயே இரு வந்திடறேன் “ என்றபடி அங்கிருந்து கிளம்பினான் பாண்டி.
 
  • Like
Reactions: LAmmu

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அவளோ அதிர்ச்சியுடன் அவனை பார்க்க


அதற்குள் “தம்பி பாண்டி இங்க கொஞ்சம் வாயா” என ஒரு பெரியம்மா அழைக்க

“இங்கயே இரு வந்திடறேன் “ என்றபடி அங்கிருந்து கிளம்பினான் பாண்டி.

அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க பூரணி குழந்தையை வைத்து கொண்டு தனியாக அமர்ந்திருந்தாள். அவளை தேடி சென்ற பாண்டி “ரொம்ப தேங்க்ஸ் பூரணி...நீங்க செஞ்ச உதவிக்கு எனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை “ என சொல்லவும்

“என்ன உதவி .......யார் செஞ்சா” என அவள் கேட்க

“மலரு என்கிட்டே எல்லாமே சொல்லிடுச்சு பூரணி....... நான் இருந்தா என்ன பண்ணிருப்பனோ அதை நீங்க செஞ்சு இருக்கீங்க ... சரியான நேரத்துல உதவி பண்ணிருக்கீங்க...... உங்க மனசு யாருக்கும் வராது பூரணி.......உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு........அதே நேரத்துல நான் உங்களை பலமுறை ரொம்ப காயபடுத்தி இருக்கேன்....... ஆனா அதை எல்லாம் மனசில வச்சிக்காம நீங்க உதவி செஞ்சு இருக்கீங்க.........நான் உங்களை பேசினதை நினச்சா எனக்கே அவமானமா இருக்கு” என அவன் குற்ற உணர்வோடு சொல்ல

“நான் ஏதும் செய்யலை பாண்டி...பாரிதான் இது அத்தனைக்கும் காரணம்....அவ சொன்னத நான் செஞ்சேன் அவ்ளோதான்....பொன்மலர் இடத்துல வேற எந்தா பொண்ணு இருந்திருந்தாலும் இதை நான் செஞ்சு இருப்பேன்.......அப்புறம் நான் பணம் தான் கொடுத்தேன்...ஆனா அந்த பொண்ணு அதுக்காக எவ்ளோ உழைக்கிறா தெரியுமா? ...ரொம்ப நல்ல பொண்ணு பாண்டி” என பூரணி மன நிறைவுடன் சொன்னாள்.

“உண்மைதான் பூரணி....அவ ஒரு வித்தியாசமான பொண்ணு.....அதான் அவகிட்ட எனக்கு பிடிச்சது என தன் மனம் கவர்ந்தவளை பற்றி பெருமையாக சொன்னவன் உன்கிட்ட நான் ஏதாவது கடுமையா நடந்திருந்தா என்னை மன்னிச்சுக்கோ பூரணி” என மன்னிப்பு கேட்க



“என்ன பாண்டி இது.....இப்படி எல்லாம் சொல்லி என்னை நல்லவளாக்கிடாத ...நாம்ம எப்பவும் எலியும் பூனையும் தான்”..... என அவள் கிண்டலாக சொல்லவும்

அப்போது பாரி அங்கு வர பாண்டியோ பாரியை பார்த்தவன் “உனக்கும் நான் நன்றியை சொல்லணும் பாரி...ரொம்ப தேங்க்ஸ்” என்றான்.

“எதுக்கு மச்சான் என்றவள் ஓ பொன்மலர் விஷியமா? பயபுள்ள அதுக்குள்ள எல்லாம் சொல்லிடுச்சா என்றவள் பொறுங்க..பொறுங்க...இன்னும் எவ்ளோ விஷயம் இருக்கு இதுக்கே தேங்க்ஸ் சொன்னா எப்படி” என அவள் சொல்லவும்

இன்னும் என்ன இருக்கு என முழித்தவன் “ஆனாலும் நீயும் பூரணியும் பண்ணிருக்க உதவி ரொம்ப பெருசு பாரி ......அதும் நீ ...நீ என அவன் தயங்கியவன்...என் மேல உனக்கு வருத்தம் ஏதும் இல்லையே” என கேட்கவும்


“உங்கமேல எதுக்கு வருத்தம் மச்சான்” என பாரி புரியாமல் கேட்க

“இல்லை நான் பொன்மலர விரும்பறேனு சொன்னேன்ல ....பூரணி உன்கிட்ட சொல்லி இருப்பாங்க...அதான்” என தயங்கி தயங்கி சொன்னான்.

“அதனால என்னங்க மச்சான்........எனக்கு எந்த வருத்தமும் இல்லைங்க மச்சான்.....எந்த ஒரு விஷயத்திலையும் போட்டி இருந்தாதானே நல்லா இருக்கும்......இன்னும் ரண்டு வருஷம் இருக்கு ...அதுக்குள்ள பொன்மலர் மனசு மாறலாம்...நீங்க என்னை விரும்பலாம் எது வேணாலும் நடக்கலாம்...அதுவரைக்கும் காத்திருப்பமே” என அசால்ட்டாக சொல்லிவிட்டு அவள் நகர பாண்டியோ அதிர்ச்சியில் சிலையாகி நின்றான்..

பூரணியின் நிலைமையோ அதைவிட மோசமாக இருந்தது.....”இவ மனசில என்ன நினச்சிட்டு இருக்கா.....என்கிட்டே மறந்திடறேனு சொல்லிட்டு இப்போ இப்படி சொல்றா...கடவுளே இப்பதான் நான் பட்டு திருந்தி இருக்கேன்...என்ற தங்கச்சிக்கும் அந்த நிலைமை வேண்டாம்” என மனதிற்குள் வேண்டி கொண்டாள்.

“டேய் குட்டி பையா உனக்கு பலூன் வேணுமாடா ..... சித்திகிட்ட வாடா செல்லம் வாங்கி தரேன்” என செல்லம் கொஞ்சியபடி பாரி பூரணி கையில் குழந்தையை வாங்க முற்பட

பூரணியோ அவளை முறைத்துகொண்டே வேகமாக அங்கிருந்து நகர

“ஏன்க்கா என்ன கோபம் என் மேல...பேசாம போற” என அவள் பின்னாடியே செல்லவும்

“ம்ம்ம் நீ பேசின பேச்சுக்கு கோபம் வராம சந்தோஷமா வரும்” என அவள் எரிச்சலுடன் சொல்லவும்


என்ன பேச்சு என யோசித்தவள் “ஐயோ அக்கா ... நீ பாண்டி மச்சான் கிட்ட பேசினதை சொல்றியா என்றவள் அவர் என்னை வேண்டாம்னு சொன்னாருல்ல ..... ...அதான் கொஞ்ச நாள் சுத்தல்ல விட்ருக்கேன்..... இப்போ பையன் மூஞ்சிய பாரு......அப்டியே பேய் அறஞ்ச மாதிரி இருக்குல்ல...இருக்கட்டும்...யார்கிட்ட ...இந்த பாரிகிட்டேயேவா என்றவள் ......... இங்க பாருக்கா நீ ஒன்னும் கவலைபடாத......எனக்கு எந்த வருத்தமும் இல்லை....... சென்னைக்கு போனதுக்கு அப்புறம் நான் நிறையா தெரிஞ்சுகிட்டேன்...வாழ்ட்றதுகான அர்த்தம் என்னனும் புரிஞ்சுகிட்டேன்..............காதல் கல்யாணம் எல்லாம் நம்ம பாதையில கடந்து போற விஷயம்..... உலகத்துல அதைவிட முக்கியமானது எல்லாம் இருக்குக்கா............ நான் நிறையா படிக்கணும்... ஏழைங்களுக்கு இலவசமா மருத்துவம் பார்க்கணும்......அந்த பெரியவரு சொல்றப்ப அப்பா முகத்தை பார்த்தில எவ்ளோ பெருமையா நின்னாரு.........இந்த மாதிரி நிறய பெருமையை நம்ம குடும்பத்துக்கு நான் வாங்கிகொடுக்கணும்......மாணிக்கம் பொண்ணு மாதிரி யாரும் இல்லைன்னு ஊர்ல சொல்லணும்........அந்த நிலைக்கு வந்த பிறகுதான் கல்யாணம் எல்லாம்.....இப்போதைக்கு போடா போடா உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பா இதுதான் நம்ம கேரக்டர்” என சொல்லிவிட்டு அவள் சிரிக்க பூரணியோ தங்கையின் தெளிவான பேச்சை கண்டு சிலிர்த்து நின்றவள் கண்களில் கண்ணீர் பெருக அவளை அணைத்து “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடி எனக்கு........நீ நல்ல வருவ பாரி.......கண்டிப்பா நீ நினச்சது எல்லாம் நடக்கும் பாரி......எனக்கு நம்பிக்கை இருக்கு” என மனதார வாழ்த்தினாள்.



மதியம் பந்தியில் அனைவரும் பரிமாறிக்கொண்டு இருக்க பிரியாணி குண்டாவை தூக்க முடியாமல் பூரணி தடுமாறவும் வேகமாக வந்து வாங்கிய புகழ் “உன்னை யாரு இதெல்லாம் தூக்க சொன்னா .....நான் பார்த்துகிறேன்...நீ தம்பிய போய் பாரு” என அதட்டியவன் அவளிடம் இருந்து அதை வாங்கி சென்றான்.அதற்குள் ஒருவர் ரசம் கேட்க பூரணி அதை எடுக்கவும் மீண்டும் அங்க வந்த புகழ் “நீ பேசாம போய் உட்கார் பூரணி” என்றவன் கனகாவை அழைத்து ரசத்தை கொடுக்க அவர் எடுத்து சென்றார்.

அதற்குள் “அம்மா பூரணி கொஞ்சம் தலைக்கறி கொண்டாம்மா “ என்ற சத்தம் கேட்க

உடனே புகழ் பரிமாறுவதை விட்டு விட்டு வேகமாக சென்று தலைக்கறி பாத்திரத்தை எடுத்து கனகா கையில் கொடுத்தான்.

“ஏனுங்க கொழுந்தனாரே உங்க வீட்ல ஒரு வாய் கறியும் சோறும் திங்கிறதுக்கு இப்படி வேலை செஞ்சாதான் போடுவிங்களா” என நக்கலாக கேட்க

“ அது வந்துங்க அண்ணி என இழுத்தவன் என்ன அண்ணி இப்படி கேட்கிறீங்க..... இது நம்ம வீடுங்க அண்ணி...நாமதான செய்யணும் “...... என அவன் சொல்லவும்

“அதான் நானும் சொல்றேன்... நம்ம வீடுதான்........ஆனா உங்க பொண்டாட்டி பொருளை தூக்குனா குறைஞ்சு போய்டுவா ...நான் தூக்குனா ஏதும் ஆகாதோ” என அப்பாவியாக கேட்க

ஹிஹிஹி என அசடு வழிந்தவன் “இல்லைங்க அண்ணி பாவம் பச்சை உடம்பு அதான்” என அவன் சமாளிக்க

“என்னது பச்சை உடம்பா....இதையே எத்தன வருசத்துக்கு சொல்லுவிங்க...பையன் நடந்து பள்ளிகோடத்துக்கு போற வயசு வந்திடுச்சு.....இன்னும் பச்ச உடம்பா...இது எந்த ஊரு நியாம் கொளுந்தானாரே” என அவள் கிண்டலாக கேட்கவும்

அதற்குள் அங்கு வந்த பூரணி “அவருக்கு வேற வேலை இல்லை.....நீங்க இப்படி கொடுங்கக்கா என்றபடி பாத்திரத்தை வாங்கியவள் ஏங்க இப்படி மானத்தை வாங்கறிங்க” என அவனை முறைக்க

அவனோ அதை கண்டுகொள்ளாமல் “பார்த்து பார்த்து பூரணி சூடா இருக்கபோகுது மெதுவா...மெதுவா கொண்டு போ ...அண்ணீ கொஞ்சம் சொல்லுங்க “ என பதறவும்

இங்கபாருடா........ அப்பா சாமிங்களா....... உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லாம போச்சு........ மோர் இருக்கிற பாத்திரம் எப்படி கொளுந்தனாரே சூடா இருக்கும் ...........இன்னைக்கு உங்க போதைக்கு நான் ஊர்காய் கிடையாது ஆளைவிடுங்க என்றபடி அங்கிருந்து நகர புகழோ மீண்டும் முழிக்க பூரணியோ சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தாள்.


இங்கோ “மாப்ள எங்கடா தனியா சுத்திகிட்டு இருக்க” என்றபடி பாண்டி நண்பர்கள் அவனை சூழ்ந்து கொள்ள

“இல்ல மாப்ள மலர்கிட்ட பேசலாம்னு பார்த்தா ரெண்டு அரை டிக்கெட்டுங்க அவளை விட்டு நகர்வனாங்குது ” என அவன் சலித்தபடி சொன்னான்.

“நீ கவலைபடாத மாப்ள...ஆந்த ட்ராபிக்க நாங்க கிளியர் பண்ணிடறோம்” என்றவர்கள் அதே போல் செய்ய இப்போது பொன்மலர் முன் பாண்டி நின்று கொண்டு இருந்தான்.

“இங்க பாருங்க உங்களுக்கு எத்தனை முறை சொல்றது......நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்துவராது பாண்டி.....சொன்னா புரிஞ்சுக்குங்க...அனுதாபத்துல வர காதல் நிலைக்காது ...என்னை விட்டுடுங்க” என கோபத்தில் ஆரம்பித்து அவள் கெஞ்சலில் முடிக்க

“யார் சொன்னா இது அனுதாபத்துல வந்த காதல்னு...இங்க பாரு மலரு நான் அன்னைகே சொல்லிட்டேன்......எனக்கு உன்னை பார்த்த உடனே பிடிச்சு போச்சு...உன்னோட திமிரு,கோபம்,தன்மானம், சுயமரியாதை இது எல்லாம் தான் உங்கிட்ட எனக்கு பிடிச்சது....இதுகாகதான் நான் உன்னை கல்யாணம் பண்ண ஆசைபடறேன்......நான் சொல்றத புரிஞ்சுக்கோ மலரு” என அவன் தன் நிலை விளக்கம் கொடுக்க

அவளோ பொறுமையாக “இங்க பாருங்க பாண்டி...நம்ம ஒரு பத்துமுறை பார்த்து இருப்போமா.....நான்கு முறை பேசி இருப்போம்.....நீங்க எதை வச்சு என்னை பிடிச்சு இருக்குனு சொல்ட்ரிங்கனு எனக்கு புரியலை அதும் இல்லாம என்ன மாதிரி பொண்ணை யாரும் மருமகளா ஏத்துக்க மாட்டங்க...புரிஞ்சுக்குங்க ” என அவள் மீண்டும் அவனுக்கு நிதர்சனத்தை சொல்ல

“சும்மா உலராத மலரு ... பெரியவங்க பார்த்து பண்ற கல்யாணம் மட்டும் பலவருஷம் பழகியா பண்றாங்க.....உனக்கு என்ன குறைச்சல்...அழகு இல்லயா அறிவு இல்லையா” என அவன் கேட்கவும்

அவளோ வேகமாக “ஒரு கால் இல்லை....... ஊனமான பொண்ணு...என்னால கொஞ்ச நேரத்துக்கு மேல ஒரு இடத்துல நிக்க முடியாது.....கலையான பொண்ணுக்கான எந்த தகுதியும் எனக்கு இல்லை போதுமா என ஆத்திரமும் கோபமுமாக சொன்னவள்...என்னை விட்டுடுங்க ப்ளீஸ்.......கல்யாணம் குடும்பம் எல்லாம் நான் நினைச்சு பார்க்கவே முடியாது......தயவு செய்து என் நிலமைய புரிஞ்சுக்குங்க” என கண்ணீர் மல்க அவள் சொல்லவும்

“லூசாட்ட பேசாத மலரு......ஊனம் உடம்புல இருக்கலாம்...மனசில தான் இருக்க கூடாது....... நீ ஏன் மலரு இப்படி எல்லாம் பேசற......உங்கிட்ட இருக்கிற குறையை நான் என்னைக்குமே பெருசா நினைச்சது இல்லை...ஏன்னா உன்கிட்ட அதைவிட அதிகமா நிறைகள் இருக்கு...எனக்கு தெரியுது அது...உனக்கு தெரியலையா ....ஏன் உன்னையே நீ குறைச்சு மதிப்பு போட்ற என அவனும் அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தான்.

“பேசறதுக்கு எல்லாமே நல்லாத்தான் இருக்கும்....ஆனா யாதர்த்த வாழ்க்கைக்கு இதெல்லாம் ஒத்துவராது.....அதனால நான் என் மனசில அந்த மாதிரி ஆசையை வளர்த்துகிறது இல்லைன்னு முடிவோட இருக்கேன்......கூட பிறந்தவனே என்னை பாரம்னு நினைக்கும்போது மத்தவங்க எப்படி நினைப்பாங்க”...... என அவள் தன் மனதில் உள்ளதை சொல்லவும்

பாண்டியோ அவளை உற்று பார்த்தவன் “மறுபடியும் சொல்றேன்...வாதத்திற்கு மருந்து இருக்கு..;பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது... எனக்கு மத்தவங்களை பத்தி கவலை இல்லை உன் மனசில நான் இருக்கேன்..ஆனா நீ மறைகிற.....எனக்கு நம்பிக்கை இருக்கு....நான் தான் உன் கழுத்துல தாலி கட்ட போறேன்” என அழுத்தமாக சொன்னான்.

“இங்க பாருங்க என” அவள் பேச வருவதற்குள்


“ என்ன நண்பா எப்படி இருக்கீங்க ..பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” என்ற சத்தம் கேட்க

“திரும்பி பார்த்த பாண்டி அட நம்ம அண்ணாச்சி கடை குருப்ஸ் என்றவன் ....... இதுங்க எங்க இங்க என ஒரு நிமிடம் அதிர்ந்தவன் பின்னர் வாங்க வாங்க எல்லாரும் இப்டி இருக்கீங்க...இன்னுமா ஒன்னாவே சுத்திட்டு இருக்கீங்க” என கேட்கவும்

“ஏன் நண்பா உங்களுக்கு இந்த வயிற்று எரிச்சல் என்றவர்கள் என்னாச்சு விடுகதை பார்ட்டி செட் ஆச்சா” என கேட்க

அதற்குள் பாண்டி நண்பர்கள் அங்கு வந்தவர்கள் “மாப்ள யாருப்பா இவங்க எல்லாம்” என கேட்கவும்

“இவங்கதாண்டா அந்த பிரியாணி பார்ட்டி” என்றான் பாண்டி.

“நல்ல அறிமுகம் நண்பா” என அதில் ஒருத்தி அவனை பாராட்ட

“ஹிஹிஹி இல்ல இவங்களுக்கு அப்டி சொன்னதான் தெரியும்” என்றான் பாண்டி.

“ சரி விடுங்க அப்புறம் விடுகதை என்னாச்சு” என அவர்கள் கேட்கவும்

“எங்க செட் ஆகமாட்டேன்குது.....மனசுக்குள்ள ஆசை இருக்கு...ஆனா பிகு பண்றா” என புலம்பினான் பாண்டி.

“இப்போ கடலை போட்டுக்கிட்டு இருந்தியே அது யாரு நண்பா” என அந்த கும்பலில் ஒருத்தி கேட்க

“அதான் விடுகதை பார்ட்டி “ என அவன் சொல்லவும்

உடனே அப்படியா என யோசித்தவர்கள் “சரி நண்பா இப்பவே முடிவு பண்ணலாம்...உன் ஆளுக்கு உன்மேல லவ் இருக்கா இல்லயான்னு” என சொல்ல

“எப்படி எப்படி” என அவன் ஆர்வமாக கேட்க

“எங்களுக்கு என்ன ட்ரீட்” என அவர்கள் தங்கள் பானியில் ஆரம்பிக்க

“என்ன வேணும் கேளுங்க” என சொல்லவும்

“பிரியாணிதான் என அவர்கள் கோரசாக சொல்லவும் அது இப்பவே இருக்கே....வாங்க சாபிடலாம்” என்றான் பாண்டி...

“ இப்ப வேண்டாம்.....எங்க வேலையை முடிச்சுட்டு நாங்க சாப்பிடுகிறோம் என்றவர்கள் இப்போ என்ன பண்ற நீ எங்ககிட்ட தொட்டு தொட்டு பேசற...அதும் சத்தம் போட்டு அந்த பொண்ணு இங்க பார்க்கிற மாதிரி” என அவர்கள் சொல்லவும்

“ஐயோ ஏதாவது பிரச்சனை ஆச்சுனா” என அவன் பயப்பட

“உன் லவ் உனக்கு வேணும்மா வேண்டாமா” என அவர்கள் மிரட்டவும்

“வேணும் வேணும்” என்றவன் அவர்கள் சொல்வது போல் செய்ய சிறிது நேரத்தில் இப்போ பாரு உன் ஆளு உன்னைய அடிகடி திரும்பி பார்ப்பா என அவர்கள் சொல்ல அதே போல செய்தாள் பொன்மலர். ஆமா ஆமா திரும்பி பார்க்கிறா” என அவன் சொல்லவும்

“இப்போ பாரு முதல்ல அங்க இருக்க ஒரு சின்ன வாண்ட இங்க அனுப்புவா பாரு என அவர்கள் சொல்ல அதே போல் ஒரு சிறுமி வந்து “மாமா உங்களை அங்க கூப்பிட்றாங்க” என பெரியவர்கள் அமர்ந்திருக்கும் திசையை காட்டியது.அவனோ அவர்களை வியப்புடன் பார்க்க

“இதெல்லாம் ட்ரைலர் ...இப்போ பாரு மெயின் பிச்சர் என்றவர்கள் அவன் தோள் மேல கையை போட அடுத்த வினாடி அங்கு வந்த பொன்மலர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மூக்கை விடைத்தபடி “இங்க பாருங்க...உங்களை அங்க கூப்பிட்ராங்க..இங்க என்ன கும்மாளம் அடிச்சுட்டு இருக்கீங்க என்றவள் வாங்க” என கையை படித்து இழுத்து அவர்களிடம் இருந்து பாண்டியை தள்ளி நிறுத்தி விட்டு விடுவிடுவென சென்று விட்டாள்.

பாண்டியோ அதிர்ச்சியில் சிலையாக

“என்ன நண்பா இப்போ தெரியுதா...எப்படி பொறமை புசுபுசுன்னு பொங்கி வழியுதுன்னு ” என அவர்கள் சொல்லவும் பாண்டிகோ சந்தோசம் தாங்க முடியவில்லை...”எப்படிங்க இப்படி எல்லாம்” என அவன் சந்தோஷத்தில் திக்குமுக்கு ஆட

“எத்தனபேர சேர்த்து வச்சிருப்போம்...இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்” என அசால்ட்டாக சொன்னவர்கள் அப்புறம் நண்பா பிரியாணி ரெடியா... ” என கேட்க

“உங்களுக்கு இல்லாததா வாங்க” என தன் காதல் உறுதியான சந்தோஷத்தில்” அவர்களை அழைத்து சென்றவன் அங்கு மலர் அவனையே பார்த்துகொண்டு இருக்க.......திரும்பி அவளை பார்த்தவன் இம்புட்டு ஆசையை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு என்னை அலைய விட்ருக்கா இரு உன்னை வந்து கவனிச்சுகிறேன்” மனதிற்குள் சொல்லிகொண்டான் பாண்டி.



. அனைவரும் சாப்பிட்டு முடித்து அமர்ந்திருக்க அங்கு வந்த ராசப்பர் “எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு...மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு என சொல்லவும்...அங்கு அமர்ந்திருந்த நடராஜ் ஐயாவும் ஆமா ராசு நான் கூட கும்பல் ஊருபட்டது இருக்கு....சீக்கிரம் முடியுமான்னு யோசிச்சுட்டு இருந்தேன்...ஆனா எல்லாரும் நிம்மதியா சாப்பிட்டு போனாங்க” என்றார்.

“இருக்காதா பின்ன .......பேச்சியம்மா பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் கைமேல கிடைச்சு இருக்குல்ல...... இரண்டு பசங்களும் ரண்டு தூணா நின்னு குடும்ப பெருமையை தூக்கி நிறுத்தி இருக்காங்க” என அங்கு அமர்ந்திருக்கும் ஊர்காரர் ஒருவர் சொல்ல

உடனே பேச்சி “நம்ம கையில என்ன அண்ணே இருக்கு...எல்லாம் மேல இருக்கிறவன் முடிவு பண்றது தான் என ஆண்டவனை கை காட்டியவர் என் மூத்தமவன் என்ற குலசாமிண்ணே....அவன் இல்லைனா இன்னைக்கு நாங்க இந்த அளவுக்கு வர முடியாது” என புகழை பெருமையாக சொல்லவும்

உடனே புகழ் “அப்படி எல்லாம் இல்லம்மா...எல்லாம் நீங்க சொல்லி கொடுத்தது தான்” அடக்கமான குரலில் சொன்னான்.

“ம்ம்ம் எது எப்படியே உனக்கு பேரனும் வந்தாச்சு....இனி உன் இரண்டாவது மவனுக்கும் கண்ணாலத்தை முடிச்சுட்டா அப்புறம் உனக்கு என்ன குறை” என ஒரு பெரியம்மா புகழ்வது போல் அங்கலாய்க்க

“என்ன அண்ணி இப்படி சொல்லிபுடிங்க...... இப்பதான் என்ற மருமக வந்திட்டா...அடுத்த கண்ணாலத்தை அவ பார்த்துக்குவா என பெருமையுடன் சொன்ன பேச்சி பின்னர் சற்று சுதி குறைந்த குரலில் இத்தனை நாளா நான் பொண்ணு இல்லைனு நினைச்சு விசனப்பட்டது இல்லை...ஆனா இப்ப என்ற மருமகளை பார்க்கும்போது எல்லாம் எனக்கு பொண்ணு இல்லைனு வருத்தமா இருக்கும்” என அவர் வருத்தத்துடன் சொல்லவும்

“அத்தை நானும் உங்க பொண்ணு மாதிரிதான்” என வேகமாக சொன்னாள் பூரணி .

உடனே பேச்சி “சொன்னாலும் சொல்லாட்டியும் நீ என்ற மகதான் பூரணி......இருந்தாலும் ஒரு வீட்ல பொண் குழந்தை இருந்தா அந்த வீடு எந்தளவுக்கு மகிழ்ச்சியா இருக்கும்னு உங்க வீட்டை பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்” என அவர் சொல்லவும் கேட்டுகொண்டிருந்த மாணிக்கமும் மணியம்மையும் மனம் குளிர்ந்து போயினர்......தன் மகளை பற்றி புகுந்த வீட்டில் பெருமையாக சொல்லும்போது பெற்றவர்கள் மனம் நிறைந்து போவது இயல்புதானே ...

“அதனால்தான் சொல்றேன்...என்ற மவனுக்கும் எங்க பூரணி மாதிரியே ஒரு பொண்ணு வேணும்” என அவர் சொல்லவும்

அருகில் இருந்த கனகாவோ புகழை பார்த்து “ஏனுங்க கொழுந்தனாரே நீங்க இப்பதான் என் பொண்டாட்டி பச்சை உடம்புகாரின்னு சொல்லிட்டு இருக்கீங்க...உங்க அம்மா இப்படி சொல்றாங்க” என கேலியாக கேட்க

“அதானுங்க அண்ணி நானும் சொன்னேன் பச்சை உடம்புன்னு...பத்து மாசம் ஆனா அதான நடக்க போகுது” என அவன் பூரணியை பார்த்து சிரித்துகொண்டே சொல்லவும்

“ஏம்புள்ள நிசமாவா” என கனகா வாய் பிளக்க

அருகில் இருந்த பாரி “அக்கா வாழ்த்துகள்” என சொல்ல

“அச்சோ போங்க” என வெட்கபட்டுகொன்டே பூரணி எழுந்து ஓட
அங்கிருந்த அனைவரும் மனம் நிறைந்து வாய்விட்டு சிரித்தனர்.

உறவுகள் என்பது இறைவன் நமக்கு கொடுத்த வரம்..........சொந்த பந்தங்கள் நிறைந்திருக்க........பிள்ளைகளினால் பெற்றவர்கள் இறுமாந்திருக்க, பெற்றவர்களுக்கு பெருமையை தேடித்தந்த மனநிறைவில் அவர்களின் புத்திரர்கள் மகிழ்ந்திருக்க.....இந்த சந்தோசம் அவர்களுக்கு எந்நாளும் நிலைத்து இருக்க நாம் மனதார வாழ்த்துவோம்.


சுபம்!!
 

LAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 6, 2021
13
3
3
Bangkok
Good ending
Enjoyed reading
Thank You 🙏