ஹாய் நட்பூக்களே! நான்தான் உப்பாறு.. உங்களை சந்திக்க ஒரு கதை டீஸரோட வந்திருக்கேன்.
கதையின் பெயர்_வண்ண மலரே வாசம் தருவாயா?
வாங்க. முதல்ல கதையை பத்தி ஒரு சின்ன இன்ட்ரோ தரேன்..
நாயகன் மேல் தீராக் காதல் கொண்ட கதாநாயகியும், அவள் யாரென்றே அறியாத நாயகனும்..
சில பல காரணங்களால் தன் குடும்பத்தை விட்டு ஒதுங்கி வாழ நேரிடும் நாயகன், தன் குறும்புத் தனம், சந்தோசம், சிரிப்பு எல்லாவற்றையும் தொலைத்து பாறையை விட இறுகிப் போகிறான்.
தம்பியின் மேல் உயிரையே வைத்திருப்பவன், அவனின்(தம்பியின்) கோரிக்கையின் பேரில் நாயகியின் கரம் கோர்க்கிறான். அவள், பனி மழையென அவன் மேல் காதலைப் பொழிய, அவளின் காதலில் உருகிப் போவானா காளையவன்? இல்லையெனில்..
நாயகனின் நிறம் மங்கிய வாழ்வில் அந்த சிறு வண்ண மலர் வாசம் பரப்புமா என்பதை, வண்ண மலரே வாசம் தருவாயா கதையில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
#'டீஸர் 01
காலில் செருப்பை மாட்டிக் கொள்ளக் கூ
ட நேரமின்றி அங்கிருந்து ஓட்டம் பிடித்த ரங்கராஜ், மூச்சிறைக்க வந்து நின்றது தன் வீட்டுக்கு முன் தான். இரண்டு அறைகளும், சிறிய ஹாலும், சமையலறையும் கொண்ட சிறிய வீடு தான் என்றாலும், அதுவே அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது.
குனிந்து, முழங்காலில் கை ஊன்றி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவன், மனைவியைக் காணப் போகும் ஆர்வத்தில் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைய, கேட் திறக்கப்படும் சத்தத்தில் வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்தாள் கண்மணி.
நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்தவளைத் தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவன், "இப்பிடி தான் ஓடி வருவியா புள்ள.. கொஞ்சம் கூட கவனம் வேணாமா.." சிறு கண்டிப்புடன் கேட்டபடி அவளை ஈரெட்டில் நெருங்கி தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
மான் விழிகளை சிமிட்டிச் சிமிட்டி அவனை ஏறிட்டவள், "மாமா.." என்றழைத்தாள்.
அவளின் அழைப்பில் தன் மொத்த களைப்பும் பறந்து விட்டதைப் போல் உணர்ந்தவன், அவளின் கண்களில் சொட்டிய எதிர்பார்ப்பை வீணாக்க எண்ணமின்றி, சிறு புன்னகையுடன் அவளின் பிறை நெற்றியில் முத்தம் பதித்தான்.
மனம் நிறைந்து விட்ட திருப்தியில், அவனின் திறந்திருந்த சட்டைக்குள் தெரிந்த வெற்று மார்பில் முத்தமொன்றைப் பதித்தவள், "சாப்பிடலாம். சமைச்சதை சூடு காட்டி வைக்கிறேன்.. கை கால் அலம்பிட்டு உள்ள வாங்க மாமா.." என்று கூறி அவனை விட்டு விலகி நிற்க, சரியென்று தலை அசைத்து விட்டு கொள்ளைப் புறமாக நடந்தான் ரங்கராஜ்.
ஐந்து நிமிடங்களில் கை கால் அலம்பி விட்டு வீட்டுக்குள் நுழையும் போது, சீமெந்து பூசப்பட்டிருந்த நிலத்தில் பாயை விரித்து கிண்ணத்தில் கஞ்சியையும், வாழையிலையில் சாதத்தையும் பரிமாறி அவனுக்காகக் காத்திருந்தாள் கண்மணி.
டீஸர் நல்லாருக்கா நட்பூஸ்? 14ம் திகதி வரை உங்களை டீஸர் மழையில தான் நனைய வைக்க போறேன். படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க..
அடுத்த டீஸரோட வரேன்..
பை!