• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-10

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -10

' மானு சொன்னது போல உத்ராவுக்கு எதுவும் பிரச்சனை இருக்குமோ!' என்று எண்ணியதுமே முகிலனின் மனது பதற ஆரம்பித்தது. 'அப்படி எதுவும் இருக்கக் கூடாது.' என்று கடவுளுக்கு ஆயிரம் வேண்டுதல்களை வைத்த முகிலன், உத்ராவை கூர்ந்து கவனித்தான்.

இரண்டு நாட்களாக அவளைப் பார்வையிட்டதில் மானசா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று புரிந்தது.

மானசாவிடம், "அடுத்து என்ன செய்யலாம்?" என்று கேட்க அவனுக்கு தயக்கமாக இருந்தது.

தங்கைக்காக முயன்று அவளிடம் பேச முயன்றான்.

ஆனால் மானசாவோ மூஞ்சை திருப்பிக் கொண்டுச் சென்றாள்.

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ' யாரோ அண்ணன் என்றாளே…. அவள் சொல்லும் போதே காதுக்குடுத்து கேட்டிருக்கலாம்.'என்று எண்ணி தன்னையே நொந்துக் கொண்டவன், மீண்டும் அவளிடம் பேச முயன்றான்.

அவளோ அவனை பேச விடவே இல்லை.

" மானு!" என்று அழைக்க.

" என்ன வேணும். எனக்கு டைமாயிடுச்சு. ஃபேக்டரில தரம் பிரிக்குற மிஷின் ஃபால்ட். அதைப் பார்க்குறதுக்கு ஆள் வர சொல்லியிருக்கேன். நான் நேரத்தோட கிளம்பணும்." என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினாள்.

"இட்ஸ் ஓகே மானு. நீ கிளம்பு." என்றவனது குரலில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.

அவனது குரல் அவள் மனதை பிசைய, வெளியே செல்ல முயன்றவள், அப்படியே திரும்பி அவனருகே வந்து, " என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க." என்றாள்.

" அது வந்து அண்ணன்னு சொன்னியே. யாரது? சைக்காலஜிஸ்டா? என்ன படிச்சிருக்காங்க?" என்று கேட்க.

அவனைப் பார்த்து முறைத்தாள் மானசா.

"இப்ப எதுக்கு முறைக்கிற மானு. டைமாயிடுச்சுன்னா ஈவினிங் கூட பேசலாம்." என்றான் முகிலன்.

" ரிசப்ஷன்ல நான் அறிமுகப்படுத்தினேனே கவனிக்கலையா? என் அண்ணன்னு இரண்டு நாள் முன்னாடி கூட சொன்னேன். யாருன்னு மறுபடியும் வந்து கேக்குறீங்க? வெட்கமாயில்ல. எங்க அம்மா கிட்ட போய் கேட்டுத் தொலைச்சிடாதீங்க. எனக்குத் தான் அசிங்கம். இன்னைக்கு லேட்டா தான் வருவேன். வந்து வச்சுக்கிறேன் கச்சேரியை!" என்று கடுப்புடன் கூறியவள், வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

" போடி! எத்தனை பேரை அண்ணன்னு சொன்னே. இதுல இவன் யாருன்னு கண்டேனா? ரொம்ப ஓவரா தான் போறே." என்று வாய்விட்டு புலம்பியவன், ஃபேக்டரிக்காவது கிளம்புவோம் என்று டேபிளில் இருந்த பர்ஸை வேகமாக எடுத்தான். அதிலிருந்து எல்லாம் கொட்ட.

'இது வேற நேரம் காலம் தெரியாமல் கீழே விழுந்துடுச்சு‌.' என்று மனதிற்குள் புலம்பியவன், பணம் மற்றும் ஏடிஎம் கார்டு, லைசென்ஸ் எல்லாவற்றையும் எடுத்தவன் அங்கிருந்த விசிட்டிங் கார்டை எடுத்துப் பார்த்து அதிர்ந்தான்.

அதை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பார்த்தவன், "அபிமன்யு சைக்காலஜிஸ்ட்." என்று முணுமுணுத்தான்.

'அபிமன்யு! இவரைப் போய் பார்த்தால் என்ன? நமக்கு உதவ இவரால் தான் முடியும். ஒரு வேளை பழசெல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டு உதவ மாட்டேன் என்றால் என்ன செய்வது.' என்று யோசித்தவன், எதுவாக இருந்தாலும் போய் நேரில் சந்தித்து பேசிவிடுவோம் என்று அபிமன்யுவின் மருத்துவமனையை நோக்கிச் சென்றான்.

ரிசப்ஷனில் அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டு காத்திருந்தவன், அவனது பெயர் அழைத்ததும் உள்ளே சென்றான்.

அபிமன்யு, முகிலனை பார்த்ததும் புருவத்தை சுருக்கி பார்க்க.

" சார்!" என்றவனுக்கோ தொண்டை அடைத்தது.

" ரிலாக்ஸ் முகிலன்! " என்று விட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.

அதை வாங்கி அருந்தியவன், பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப் எடுத்து முகம் துடைத்தான். அந்த ஊட்டியிலும் அவனுக்கு லேசாக வியர்ப்பது போல இருந்தது.

" ரிலாக்ஸ் முகிலன்! ஏன் இவ்வளவு டென்ஷனாகுறீங்க‌. ஆர் யூ ஓகே?" என்று அவனை கூர்ந்துப் பார்த்தான்.

" யா! ஐ யம் ஓகே. " என்றான்.

" என்ன விஷயமா பார்க்க வந்தீங்க? " என்று வினவிய அபிமன்யுவிற்கு இப்போது பதட்டமானது. ' ஒரு வேளை உத்ராவிற்கு எதுவும் பிரச்சனையோ.' என்று எண்ணி உள்ளுக்குள் தவித்தான்.

" உத்ராவுக்கு நடந்த ஆக்ஸிடென்ட் பத்தி உங்களுக்கு தெரியும் தானே." என்று இழுத்தான் முகிலன்.

" ம்… தெரியும்."

'தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம். டிவி, ஃபேஸ் புக், யூட்யூப் என்று அவளைப் பற்றி தானே பரபரப்பான செய்தி ஒடிக் கொண்டிருக்கிறது. இனி அடுத்த செய்தி கிடைக்கும் வரை, இவளது செய்தி தான் தினம், தினம் அலசி ஆராயப்படும்.' என்று மனதிற்குள் எண்ணியவனோ, உத்ராவிடம் தெரிந்த மாற்றத்தை அவனிடம் விளக்கிக் கொண்டிருந்தான்.

கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான் அபிமன்யு.

" எனக்கு வேற யாரையும் தெரியாது. உங்களை தான் தெரியும். அதான் இங்க வந்தேன்."

" முதல்ல ஒன்னை தெரிஞ்சுக்கோங்க முகிலன். தெரிஞ்சவங்க கிட்ட முதல்ல கவுன்சிலிங்குக்கு வரக்கூடாது. உங்க தங்கைக்கு என்னைப் பத்தி தெரியுமா?" என்று நீண்ட நாளாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய கேள்வியை அவன் முன் வைத்தான்.

" அது வந்து… உத்ராவுக்கு உங்களைப் பத்தி எதுவும் தெரியாது." என்றவன் குற்ற உணர்ச்சியுடன் தலை குனிந்தான்.

" ஓ! உங்க சிஸ்டருக்கு என்னைத் தெரியாதா? ரைட். டூமாரோ மார்னிங் டென் ஓ க்ளாக் அஃப்பாயின்மென்ட். உங்க சிஸ்டரை அழைச்சிட்டு வாங்க."

" சார்!" என்று தயங்கினான் முகிலன்.

" என்ன முகிலன்?" என்று புன்னகையுடனே வினவினான் அபிமன்யு.

" அது வந்து… இங்கே தான் வரணுமா? உங்களால எங்க வீட்டுக்கு வர முடியுமா?" என்று கெஞ்சுவது போல் வினவ.

" இங்கே வர்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று கூர்மையாக அவனை அளவிட்டுக் கொண்டே வினவினான் அபிமன்யு.

"அது வந்து… ஏற்கனவே அதிர்ஷ்டம் இல்லாதவள்னு என் தங்கையை சொல்லிட்டு இருக்காங்க. இதுல இங்கே கூட்டிட்டு வந்தா, பைத்தியக்காரின்னு முத்திரை குத்திடுவாங்க. அது அவளுடைய எதிர்காலத்துக்கு நல்லது இல்லை. " என்ற முகிலனின் முகம் வேதனையில் வாடியது.

அவனை கனிவாக பார்த்த அபிமன்யு , " என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது முகிலன் தப்பா எடுத்துக்காதீங்க." என.

முகிலனோ ஏமாற்றத்துடன் அவனைப் பார்த்தான்.

" முகிலன்! ஏதாவது பப்ளிக் ப்ளேஸுக்கு அழைச்சிட்டு வாங்களேன்." என்றான் அபிமன்யு.

" தேங்க்ஸ் ஸார். அப்போ நான் ரோஸ் கார்டனுக்கு அழைச்சிட்டு வர்றேன். அந்த இடம் உத்ராவுக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு வேளை அந்த பூக்களை பார்த்தால் கூட அவளது மனம் மாற வாய்ப்பு இருக்கிறது." என்று உற்சாகமாக கூறினான் முகிலன்.

' அங்க வேண்டாம்.' என்று மறுக்க நினைத்த அபிமன்யு, உத்ராவுக்கு பிடித்த இடம் என்றதும் அமைதியானான்.

அந்த ரோஸ் கார்டன் என்றதும் மனதிற்குள் தோன்றும் இனிமையான நினைவுகளும், அதற்கு பிறகு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் அங்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பையே இத்தனை வருடங்களாக தடை செய்திருந்தது.

தனது பதிலுகாகாக காத்திருக்கும் முகிலனைப் பார்த்ததும் தேவையற்ற நினைவுகளை உதறியவன், " ஓகே முகிலன். காலைல உங்க சிஸ்டரை அழைச்சிட்டு வந்திடுங்க. பேசி பார்க்கிறேன். எந்த அளவுக்கு அவங்க டிஸ்டர்ப் ஆகிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி ட்ரீட்மெண்ட் பார்த்துக்கலாம்." என்றான்.

" ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி டாக்டர்." என்ற முகிலன் அவனது கைகளைப் பிடித்து மன்னிப்பு கேட்டான்.

" பழசெல்லாம் மறந்துடுங்க முகிலன்." என்றவன் கைகளை அழுத்தி விடுவித்தான்.

*******************

காலையில் எழுந்து கிளம்பிய அபிமன்யுவோ சற்று படபடப்புடனே இருந்தான். உத்ராவை நேருக்கு, நேர் பார்க்க போவதால் வந்த உணர்வு. இது தப்பு என்று புத்திக்கு உரைத்தாலும், மனசு அடங்காமல் ஆர்ப்பரித்தது.

ஒரு வழியாக கிளம்பியவன், ரோஸ் கார்டனில் காலடி எடுத்து வைக்கவும் தான், மறக்க நினைக்கும் விஷயங்கள் நினைவுக்கு வந்தது.

ஊட்டி ரோஸ் கார்டனில் அவனது பதிமூன்றாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியதும், பிறகு வீட்டிற்கு வந்ததும் அவனது சந்தோஷமான மனநிலை அடியோடு மாறியதும் நினைவுக்கு வர, அவன் மனதின் ஆர்ப்பாட்டம் அடங்கியது.

உள்ளே நுழைந்தவன் சுற்றிலும் பார்வையிட. இவனுக்கு முன்பாகவே அங்கு முகிலனும், உத்ராவும் காத்திருந்தனர்.

அவளது பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது.

இவனைப் பார்த்ததும் எழுந்தான் முகிலன். அதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் இருந்தாள் உத்ரா.

" உதி மா!" என்று அழைத்தான் முகிலன்.

ஆனால் அவள் திரும்பவே இல்லை.

முகிலன் அவளது தோளைத் தொட்டு கவனத்தை கவர முயன்றான்.

"வேண்டாம் ."என்பது போல் தலையசைத்த அபிமன்யு, அமைதியாக அவளை கவனித்தான்.

அவன் கவனித்த வரையில் அவளது கவனம் இங்கில்லை. சதா எதையாவது யோசித்துக் கொண்டிருப்பதாக தோன்றியது. எதையாவது என்ன, அன்று நடந்த விபத்தையே அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு நன்கு புரிந்தது.

இருந்தாலும் அவளிடம் பேசியும் தெரிந்து கொள்ள எண்ணியவன் அவளுக்கு அருகே சென்றான்.

" ஹலோ உத்ரா." என்று கையை ஆட்ட.

அவளது கவனம் கலைந்து திடுக்கிட்டுப் பார்த்தாள்.

" ஹாய் உத்ரா! நான் அபிமன்யு. உங்க அண்ணனோட ஃப்ரெண்ட்." என்று கையை நீட்ட.

தயங்கிக் கொண்டே கைகளை கொடுத்தாள். லேசாக அழுத்தி விடுவித்தான் அபிமன்யு. அந்த கரத்தின் வெம்மை அவளுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வை தோற்றுவித்தது.

"எப்படி இருக்கீங்க உத்ரா." என்று வினவ.

தலையை மட்டும் அசைத்தாள் அவள்.

" இங்க உட்காருங்க." என்று அவளை அமர சொன்னவன், மெல்ல பேச்சுக் கொடுத்தான்.

பொதுவாக கேட்ட கேள்விக்கு தயங்கித் தயங்கி பதிலளித்தாள். ஆனால் விபத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால் அபிமன்யு மென்மையாக அவளிடம் பேசி அவளுடன் நட்பாக புன்னகைத்தான்.

" ஓகே உத்ரா! நான் இன்னும் இந்த ஊட்டியை சுத்தி பார்த்ததில்லை. நாளைக்கு போட் ஹவுஸூக்கு போகலாமா?" என்று அவளுக்காக முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்துக் கொண்டு வினவினான்.

ஆம் இந்த ஊட்டியிலே பிறந்து வளர்ந்தவனுக்கு இங்க உள்ள அத்தனை இடமும் அத்துப்படி. இருந்தாலும் அவள் மனது எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளவே அப்படி வினவினான்.

அவன் எதிர்ப்பார்த்தது போலவே உத்ரா கத்த ஆரம்பித்தாள். " நோ! நான் எங்கேயும் வர மாட்டேன்." என்று கத்தியவளது பார்வை அங்கேயும், இங்கேயுமாக அலைந்தது.

" ஓகே! காம் டவுன் உத்ரா." என்று சமாதானம் படுத்தியவன், "முகிலன்! அவங்களை அழைச்சிட்டு போங்க." என்றவன், அப்புறம் பேசலாம் என்று சைகை செய்தான்.

முகிலன் உத்ராவை வீட்டில் விட்டுவிட்டு சுபத்ராவிடம் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு பலமுறை கூறி விட்டு, அபிமன்யுவை காண்பதற்காக அவன் வொர்க் பண்ணும் ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்திருந்தான்.

ரிஸப்ஷனில் பேர் பதிய, நேற்று போல் காத்திருக்க வைக்காமல் உடனேயே அறைக்கு அழைத்துச் சென்றனர்.

" வாங்க முகிலன். நீங்க வருவீங்கன்னு தெரியும். அதான் நீங்க வந்தவுடனே உள்ளே விட சொன்னேன்."

" சாரி டாக்டர். உங்க வேலை நேரத்துல தொந்தரவு பண்றேனா." என்று சோர்வாக வினவினான் முகிலன்.

" நோ ப்ராப்ளம் முகிலன். அஸ் ஏ டாக்டரா இதுவும் என்னோட டியூட்டி தான். நானே உங்களை வரச் சொல்லி மெசேஜ் பண்ணுவோம்னு இருந்தேன். நல்லவேளை நீங்களே வந்துட்டீங்க." என்றவன் இன்டர்காமை எடுத்து இரண்டு காஃபி அனுப்புமாறு அவனது உதவியாளரிடம் கூறினான்.

" அதெல்லாம் வேண்டாம் டாக்டர். உத்ராக்கு என்னாச்சு?" என்று கலக்கத்துடன் வினவினான்.

அதே நேரம் ஆவி பறக்கும் காஃபியை எடுத்துக் கொண்டு ஆள் வர.

" இதை முதல்ல குடிங்க முகிலன்." என்று அவனது கையில் கொடுத்தான்.

காஃபி குடிக்கும் வரை அமைதியாக இருந்த அபிமன்யு," அது வந்து உங்க தங்கை போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்
ஆர்டரால பாதிக்கப் பட்டுருக்காங்க." என்று அவனை ஆதுரமாக பார்த்துக் கொண்டே கூறினான்.

"டாக்டர்!" என்ற முகிலனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
காதலிக்கே டிரீட்மென்ட் பார்க்குறது கொஞ்சம் கஷ்டம் தான் அபிமன்யுவுக்கு 🙄🙄🙄🙄
ஆமாம் சிஸ். நன்றி