• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-13

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில்- 13

எப்பவும் தனிமையை விரும்பும் சுபத்ரா, இன்று ஏனோ தனிமையை வெறுத்தார். அவளது நேரம், காலையில் முகம் வாடியிருந்த உத்ராவை பார்த்த முகிலனோ, காலையிலேமனைவி மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் போவதாக வெளியே கிளம்பி விட்டான். பர்வதம் எப்பவும் போல ஒரு ரவுண்ட் வீட்டை சுற்றி வந்து, வேலையாட்களை அதட்டி, உருட்டி விட்டு அவரது அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

வேறு வழியின்றி தனது அறைக்கு சென்ற சுபத்ராவின் மனதிலோ, உத்ராவை பற்றிய நினைவே சுழன்றது. 'அவளுக்கு சீக்கிரம் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கணும்.' என்று நினைத்தவுடனே, அபிமன்யுவின் நினைவும் வந்தது.

அபிமன்யு கூறிய, 'உண்மையிலே நான் உங்க வயித்துல தான் பிறந்தேனா? நான் உங்க புள்ளையான்னு சந்தேகமாவே இருக்கு. உங்களுக்கு புள்ளையா பொறந்ததுக்கு வெட்கப்படுகிறேன்.' என்ற குரல் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்க, மனமெல்லாம் ரணமாக வலித்தது.

' எல்லோருக்கும் ஏன் இப்படி சந்தேகம் வருது.' என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள். ஆம் நேற்று அவரது அண்ணி பேசிய பேச்சே, இரவெல்லாம் அவரை உறங்க விடவில்லை.அதுவே அவளை அதிகாலையில் மகனின் முன்பு நிற்க வைத்தது.

நேற்று மாலை வேலை முடிந்ததும், தோட்டத்தில் இயற்கை அழகில் திளைத்து, தனது கவலைகளையெல்லாம் மறந்துக் கொண்டிருந்தார் சுபத்ரா. அதுக் கூட கடவுளுக்கு பொறுக்கவில்லை. அவரது அண்ணியின் ஃபோன் கால் மூலம் நிம்மதியை பறித்தார்.

சுபத்ராவின் ஃபோன் ஒலித்தது.

'அண்ணி எதுக்கு ஃபோன் பண்றாங்கன்னு தெரியலையே.' என்று யோசனையுடனே ஃபோனை எடுத்தார் சுபத்ரா.

" ஹலோ! அண்ணி… நல்லா இருக்கீங்களா? என்ன இந்த நேரத்தில கால் பண்ணியிருக்கீங்க." என்று வினவினார்.

" ம், எதுக்கு ஃபோன் பண்ணேன்னு நேராவே கேட்கலாம் சுபத்ரா. நீ தான் ஃபோனே பண்ண மாட்ட. நாங்க பண்ணாலும் ஆயிரம் கேள்வி. "என்று நொடித்துக் கொண்டார் அவரது அண்ணி.

" அப்படி எல்லாம் இல்லை அண்ணி. நீங்க எப்படி இருக்கீங்க? அண்ணன், என் மருமகனுங்க எல்லோரும் எப்படி இருக்காங்க?"

" இருக்கோம், இருக்கோம். ஆனால் உன் அளவுக்கு கவலையில்லாமல் இல்லைமா?" என.

சுபத்ராவுக்கோ அவரது பேச்சு சுருக்கென்றது. அதற்கு மறுமொழி கூறாமல் அமைதியாக இருந்தார்.

" என்ன சுபத்ரா! சைலண்ட்டாகிட்ட? ஏதாவது பேசு. கொஞ்சமாவது அபியை பத்தி நினைச்சுப் பார்க்குறீயா? அவன் உன் வயித்துல தானே பொறந்தான்." என்று பொறும.

" என்ன சொல்றீங்க அண்ணி. ஒன்னும் புரியல." என்று மரமரத்த குரலில் கூறினாள் சுபத்ரா.

" சும்மா நடிக்காதே! உனக்குத் தெரியாமத் தான் இந்த கூத்தெல்லாம் நடக்குதா?"

" அண்ணி! என்ன விஷயம் நேரடியா சொல்லுங்க." என்று விவரம் புரியாத எரிச்சலில் சற்று காரமாகவே வினவினார் சுபத்ரா.

" ம்கூம்! இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை. உன் மருமக, அதான் உன் செல்ல பையனோட பொண்டாட்டி உத்ரா‍, அவ நம்ம அபி கூட ஜோடி போட்டு சுத்துறா?"

" அண்ணி!"

" எதுக்கு இப்ப கத்துற? நான் ஒன்னும் இல்லாததை சொல்லல. ரோஸ்கார்டன்ல ரெண்டு பேரும் சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. அது மட்டுமல்ல உன் ஃபேக்டரி வரைக்கும் இரண்டு பேரும் ஜோடி போட்டு வந்திருக்காங்க. எல்லாம் என் தம்பி பார்த்துட்டு, அவன் சொன்னா நான் நம்ப மாட்டேன்னு ஃபோட்டோ கூட எடுத்து அனுப்புனான். உனக்கு வேணும்னா அனுப்பவா?"

" ஏதேச்சையா பார்த்திருப்பாங்க.பேசியிருப்பாங்க. இதுல என்ன தப்பு அண்ணி?"

" அதான பார்த்தேன். உன் சம்மதம் இல்லாமல் எப்படி நடக்கும். ச்சீ உன்னை மாதிரி ஒரு அம்மாவை பார்த்ததே இல்லை‌. நம்ம அபியோட அழகுக்கும், திறமைக்கும் பொண்ணுக்கா பஞ்சம். நான், நீன்னு போட்டி போட்டுட்டு வருவாங்க. நீ என்னென்னா உன் செல்லமகனோட பொண்டாட்டிக்கு வாழ்க்கை கொடுக்க சொல்லியிருக்க. எல்லோரும் பெத்த புள்ளையை நினைப்பாங்கன்னா, நீ அவனுக்கு விரோதியா இருக்க. எப்பப் பாரு எந்த பொருள் என்றாலும் அவன் தம்பிக்கு அப்புறம் தான் அவனுக்கு தருவ. அதுப் பிடிக்காமல் தானே ஒதுங்கி போனான். இப்பவும் அவன் வாழ்க்கையை கெடுக்குற? நீயெல்லாம் ஒரு அம்மாவா? உண்மையிலே அவன் உன் வயித்துல தான் பிறந்தானோ." என்று வன்மத்தை கொட்ட.

அவருக்கு பதிலளிக்க தெம்பில்லாமல் சுபத்ரா ஃபோனை வைத்து விட்டார்.

இரவெல்லாம் உறங்காமல் விழித்திருந்து, காலையிலே அபிமன்யுவை சந்திக்க சென்றார். அவனும் வலிக்கும் அதே வார்த்தையையே தான் கூறினான். ஆனால் காரணம் தான் வேறு. சுபத்ராவின் அண்ணியோ, உத்ராவோடு அபிமன்யு சேர்வதை தடுக்க அந்த வார்த்தையைக் கூறினார்.

அபிமன்யுவோ உத்ராவோடு சேர்ந்து வாழ்வதற்காக அந்த வார்த்தையை கூறினான்.

யார் எதுக்காக கூறினாலும் பாதிக்கப்பட்டதென்னவோ சுபத்ரா தான்.
இதையெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த சுபத்ராவோ, அபிமன்யுவை வயிற்றில் சுமந்த இனிய தருணத்தை நினைத்துப் பார்த்தார்.

' "சுபத்ரா! ஆ காட்டு." என்ற மங்கையர்க்கரசி பர்வத இல்லத்தின் மூத்த மருமகள். பர்வதத்தின் அண்ணன் மகள்.
பர்வதம், சிவராம் தம்பதியருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் கோபாலன். இளையவர் நந்தன். இவர்கள் ஊட்டியில் ஏகப்பட்ட சொத்துக்களுக்கு சொந்தக்காரர். ஆனால் அந்த சொத்துக்கு வாரிசில்லாமல் அந்த வீடே களையிழந்து காணப்பட்டது.
கோபாலன், மங்கையர்க்கரசி தம்பதியினருக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் மழலைச் செல்வம் கிடைக்கவில்லை. சதா பர்வதம் புலம்பிக் கொண்டிருக்க, அவரது கவலையை தீர்ப்பது போல் இரண்டாவது மகன் நந்தனிற்கு ஜாதகப்பொருத்தம் பார்த்து, சுபத்ராவை திருமணம் செய்து வைத்தார். திருமணமான மறுமாதமே சுபத்ரா கருவுற்றிருக்க. அதற்கு தான் மங்கையர்க்கரசி இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தார்.

அவள் கையால் ஸ்வீட் செய்து ஊட்டிக் கொண்டிருந்தார்.

அவர்கள் இருவரையும் பார்த்து வீட்டில் உள்ளவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

பர்வதம் ஒரு பக்கம் மருமகளைத் தாங்க, மங்கையர்க்கரசி ஒரு பக்கம் தாங்கினார்.

இருவரும் அவரை எந்த வேலையும் செய்ய விடவில்லை. இதில் நந்தன் வேறு அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கி குவித்தார்.

சுபத்ராவிற்கு மசக்கையின் உபாதைகள் இருந்தாலும் தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் துளிக் கூட இல்லை. அவளை ஒரு வேலைக் கூட செய்ய விடாமல், இருக்கும் இடம் தேடி பழம், ஜுஸ், சுண்டல் என சத்தான ஆகாரத்தை குடுத்து நன்றாக கவனித்துக் கொண்டார் மங்கயர்கரசி.

சுபத்ரா வயிற்றில் குழந்தை உருவானது அவளது பிறந்த வீட்டிற்குத் தெரிந்ததும், சுபத்ராவின் அன்னை, அண்ணன், அண்ணி, மற்றும் அவளது அக்கா அனைவரும் அவரை காண வந்து விட்டனர்.

"அம்மா! அண்ணி! அக்கா! வாங்க." என்று ஓடி வந்து அணைத்தாள் சுபத்ரா.

" ஹேய் சுபா! பார்த்து…" என்று பர்வதமும், " சுபா! மெதுவா போ." என்று அக்கறையாக மங்கையர்க்கரசி அறிவுறுத்தினர்.

" உடம்பு பரவாயில்லையா? டாக்டர் என்ன சொன்னாங்க? மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா? வாந்தி வருதா?" என்று சுபத்ராவின் குடும்பத்தினர் அவளிடம் விசாரித்துக் கொண்டிருக்க.

சுபத்ராவோ, வெட்கசிவப்புடன் பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

பர்வதமும், மங்கையர்க்கரசியும் அவர்களுக்காக இனிப்பும், காரமும் செய்து, மாலை நேர காஃபியுடன் பரிமாறினர். அதற்குள் நந்தனும் வந்திருந்தான். எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. அதெல்லாம் சற்று நேரத்தில் மறைய போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

"அப்புறம் சம்மந்தி… நாங்க சுபத்ராவை அழைச்சிட்டு போறோம். அவளுக்கு மசக்கையா இருக்கும்." என்று சுபத்ராவின் அம்மா ஆரம்பிக்க.

" ஏன் நாங்க பார்த்துக்க மாட்டோமா?" என்று பர்வதமும் போட்டி போட்டார்.

மங்கையர்கரசியோ, " அத்தை! சுபத்ராவும், நந்தன் தம்பியும் முடிவெடுக்கட்டும்." என்றார்.

பர்வதம் அமைதியாகி விட்டார்.

சுபத்ராவின் அண்ணியோ, "என்னம்மா புதுப்பொண்ணு, அம்மா வீட்டுக்கு வர்றீயா?" என்று கேலி செய்ய.

அவளோ வெட்கத்துடன் நந்தனை பார்த்தாள்.

கண்களாலே போக வேண்டாம் என்று தடுக்க, சுபத்ராவும் கொஞ்சம் நாள் கழித்து வருவதாக கூறினாள்.


சுபத்ராவின் அண்ணியோ, "வசதியான வீடு. மாமியாரும், ஓரகத்தியும் இப்படி தாங்குனா, அம்மா வீட்டுக்கு வருவதற்கு பிடிக்குமா?" என்று அங்கலாய்த்தாள்.

இது தான் ஆரம்பம். பிறகு சுபத்ராவின் அண்ணியுடைய புலம்பல் தொடர்கதையானது.

வளைக்காப்பு போட்டதும், மீண்டும் ஒரு பிரச்சினை ஆரம்பமானது. நந்தனும், கோபாலனும் டெலிவரியை இங்கேயே வைத்து கொள்ளலாம். வேற டாக்டர் வேண்டாம் என்றனர்.

சுபத்ராவின் அண்ணனோ," ஏன் மச்சான்? திருப்பூர்ல நல்ல,நல்ல டாக்டருங்க இருக்காங்க. நாங்க பாத்துக்க மாட்டோமா? எங்களுக்கும் சுபத்ரா மேலையும், புள்ள மேலையும் அக்கறை இருக்கு." என.

" இது தான் எங்க வீட்டு முதல் வாரிசு. நாங்க ரிஸ்க் எடுக்க விரும்பலை. அப்புறம் உங்க விருப்பம்." கோபாலன் கூறி விட.

அதற்கு பிறகு சுபத்ரா தான் தன் அண்ணனை சமாதானம் செய்து, ஒரு வாரம் மட்டும் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டு வந்தாள்.

இப்படி பிறப்பதற்கு முன்பே சுபத்ராவையும், வயிற்றில் உள்ள குழந்தையையும் தாங்கியவர்கள் பிறந்ததிற்கு பின்பு எப்படி பார்த்துக் கொண்டார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ!

அபிமன்யு பிறந்த பிறகு அவனுக்கு என தேக்கு தொட்டில் ஆர்டர் செய்து வரவழைத்தனர்.

ஆனால் அந்த தொட்டியில் அவன் கிடந்த நேரத்தை விட, மங்கையர்கரசியின் மடியிலும், பர்வதத்தின் மடியிலும் கிடந்த நேரம் தான் அதிகம்.

இவனது முதல் பிறந்தநாள் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அன்றைய நாளை மேலும் மகிழ்ச்சியூட்டும் வண்ணம் மங்கையர்கரசி வாந்தி எடுத்தார். நீண்ட நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த தவம் வரமானது.

அபிமன்யு தான் மங்கையர்க்கரசியின் முதல் மகனானான். அவருக்கு பிறந்த ரித்விக், அபிமன்யுவிற்கு அடுத்தபடி தான். அபிமன்யுவின் குரல் அழுதால், மங்கையர்க்கரசிக்கும், பர்வதத்திற்கும் தாளாது. இருவரும் அவனைப் போட்டி போட்டுக் கொண்டு கவனிக்க, அபிமன்யு அவர்கள் பின்னே சுற்றினான். உடம்பு சரியில்லை என்றால் மட்டுமே சுபத்ராவிடம் வருவான். இதன் பொருட்டே ரித்விக் சுபத்ராவின் வசமானான்.

எல்லாம் நல்லபடியாக சென்றுக் கொண்டிருக்கும் போது விதி குறுக்கிட்டது. சுபத்ராவின் அண்ணியின் பிறந்த வீட்டில் ஒரு விஷேசம். " சுபத்ரா! அவசியம் வந்துடு." என்று நேரில் வந்து அண்ணியின் தாயார் அழைத்தார். சுபத்ராவின் அண்ணியோ, " அவங்க எங்க வரப்போறாங்க? நம்மளை போல உள்ளவங்க வீட்டுக்கு வருவாங்களோ! என்னவோமா? எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு நேர்ல வந்து பத்திரிக்கை வச்சாச்சு. அவ்வளவு தான்." என்றாள்.

" அப்படி எல்லாம் இல்ல அத்தை. நாங்க அவசியம் வர்றோம்." என்றாள் சுபத்ரா.

அவள் நேரமோ, இல்லை அபிமன்யுவின் நேரமோ விஷேசத்திற்கு கிளம்பும் போது அபிமன்யுவிற்கு உடம்பு முடியவில்லை. ஜுரம் நெருப்பாக கொளுத்தியது.

" அம்மா!" என்று சுபத்ராவை கட்டிப் பிடித்துக் கொண்டு விடவில்லை.

நந்தனும் கிளம்பி தயாராக நின்றான்.
ஊட்டியில் மழை விடாமல் அடித்து பெய்துக் கொண்டிருந்தது.

"நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க."என்றாள் மங்கையர்க்கரசி.

அபிமன்யுவோ இன்னும் இறுக கழுத்தை கட்டிக்கொண்டு அழுதான்.

"பாட்டிக் கிட்ட வாடா." என்று பர்வதமும் அழைக்க.

அவனோ, " மாட்டேன்." என்றவனது அழுகை கூடியது.

அவன் அழுததுழுது முகம் சிவக்க. தாளாத பர்வதமோ, "சுபத்ரா! இதுக்கு அவசியம் போகணுமா? பாவம் அபி அழறான். இது உன் அண்ணியோட தங்கச்சி நிச்சயம் தானே. கல்யாணத்துக்கு போனால் போதாதா? வயித்துல புள்ளைய வேற சுமந்துட்டு இருக்க. இந்த நேரத்தில இப்படி அலையலாமா? அவங்களுக்கே தெரியவேண்டாம்." என்று எரிச்சலுடன் கூற.

" இல்லை அத்தை! நம்ம வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வச்சிருக்காங்க. வரலைன்னா வருத்தப்படுவாங்க. நான் வேணும்னா அபியையும் கூட்டிட்டு போறேன்." என்று சொல்லி முடிப்பதற்குள், " அதெல்லாம் ஒன்னும் வேணாம். மழை வேறு பெய்யுது. ஜுரம் வேற அடிக்குது." என்று மங்கையர்க்கரசியும், பர்வதமும் ஒரு சேர கூறினர்.

சுபத்ரா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தார். ஏற்கனவே அவரது அம்மா, 'எந்த சாக்கு போக்கும் சொல்லாமல் வா சுபா. நல்ல ஜாதகப்பொருத்தம் இருந்ததால தான் நம்மளவிடப் பணக்காரங்கன்னு தெரிஞ்சும் உன்ன இந்த வீட்டில கட்டிக் கொடுத்தோம். அதுக்காக உன்னை அடிமையா இங்கஅனுப்பல, புரியுதா? நீ கட்டாயம் நிச்சயத்துக்கு வரணும்.' என்று அழுத்தமாக கூறியது, அவளது நினைவில் வந்து போனது.

சுபத்ராவின் முகத்தைப் பார்த்த மங்கையர்க்கரசியோ, " சரி சுபா. நானும், அவரும் கோவிலுக்கு போகலாம்னு கிளம்பினோம். பேசாமல் நாங்க ரெண்டு பேரும் ஃபங்ஷனுக்கு போறோம். நம்ம வீட்ல இருந்து யாராவது போனால் போதும் அண்ணி சமாதானம் ஆகிடுவாங்க. நீ இங்கே இருந்து அபியையும், ரித்வியையும் பார்த்துக்கோ. ரித்விக்கு நான் கூட தேவையில்லை. நீ இருந்தாலே போதும். அப்படி தானே செல்லம்." என்று ரித்
விக்கின் கன்னத்தில் முத்தமிட.

இரண்டு வயதான ரித்விக்கிற்கு என்ன புரிந்ததோ, சுபத்ராவை கட்டிக் கொண்டு அவர்களுக்கு, "பை." சொன்னான்.