• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-14

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -14

சுபத்ராவின் கழுத்தை கட்டிக்கொண்டு, அவனது பெற்றோருக்கு பை சொன்ன ரித்விக், அடுத்து செய்தது என்னவோ, சுபத்ராவின் மடியிலிருந்த அபிமன்யுவை தள்ளி விட்டது தான்.

" டேய் படவா! அண்ணனுக்கு முடியலை. இப்படி எல்லாம் தள்ளக்கூடாது. பாட்டி கிட்ட வாங்க." என்று பர்வதம் ரித்விக்கை தூக்கிக் கொண்டார்.

இனி எப்பொழுதும் ரித்விக் அவர் வசம் தான் என்பதை ஏனோ அறியவில்லை.
***********************
ஊட்டியில் விடாமல் பெய்துக் கொண்டிருந்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் கோபாலனும், மங்கையர்க்கரசியும் சென்ற கார் புதைந்து போனது.

மகனும், மருமகளும் இறந்த செய்தி கேட்ட பர்வதம் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார். நந்தனும், சுபத்ராவும் தான் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை பார்த்தனர்.
************************

சிரிப்பும், கும்மாளமுமாக இருந்த பர்வத இல்லம் இப்போது அமைதியை தத்தெடுத்துக் கொண்டது.

அபிமன்யு, ரித்விக்கின் குரல்கள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

அதுவரை அந்த வீட்டில் செல்லமாக இருந்த அபிமன்யுவை, கண்டுக்கொள்ள ஆளில்லை. குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்த சுபத்ரா, ரித்விக்கை கீழே விடாமல் தாங்கிக் கொண்டிருந்தார்.

தனது மகன், மருமகள் இல்லாத போது அந்த இடத்திலிருந்து ரித்விக்கை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய பர்வதமும், அவனை இறக்கி விடாமல் பார்த்துக் கொண்டார்.

இதற்கிடையில் சுபத்ராவிற்கு பெண் குழந்தை பிறக்க. அவரது பொழுது, பிறந்த குழந்தையிடமும், ரித்விக்கிடம் மட்டுமே இருந்தது.

அபிமன்யுவின் பிஞ்சு மனதில் ஏக்கம் வர ஆரம்பித்தது.

அந்த ஏக்கத்தின் வெளிப்பாடாக, ரித்விக்கிடம் வம்பு வளர்த்தான். ரித்விக்கோ அழுதுக் கொண்டே, சுபத்ராவிடமோ, பர்வதமிடமோ சென்று நிற்பான்.

அதற்கு பிறகு என்ன? ஏது? என்று விசாரணையே கிடையாது. தம்பி கிட்ட ஏன் வம்புக்கு போற. அவன் சின்னவன். நீ தான் விட்டுக் கொடுக்கணும் என்று சொல்லி வைத்தாற் போல இருவருமே அவனை கண்டித்தனர்.

நாட்கள் ஓட, ஓட… அபிமன்யுவோ அமைதியாக ஒதுங்கி போனான். ஆனால் ரித்விக் அவனை அப்படி இருக்க விடவில்லை. அவனுக்கு கிடைத்த விஷேச கவனிப்பில், வேண்டுமென்றே அபிமன்யுவை வம்பிழுப்பான்.

விளையாட்டு சாமான் எது அவன் வைத்து விளையாண்டாலும் அதுவே வேண்டும் என்பான். சரி என்று இருவருக்கும் ஒரே மாதிரி வாங்கி வந்தாலும், அவனுடையதை உடைத்து விட்டு, அபிமன்யு வைத்திருப்பது தான் அவனுடையது என்று வம்படியாக அழுது வாங்கிக்குவான்.

மானசாவை அபிமன்யு தூக்கி வைத்திருந்தால் அவ்வளவுதான், "என் பாப்பா." என்று அழுது கரைந்து அவளை வாங்கிக் கொள்வான்.

பெரியவர்களோ அவனது தங்கை பாசத்தை பார்த்து சிரிப்பார்கள். ஆனால் அபிமன்யுவிற்கு தான் ஏமாற்றமாக இருக்கும்.

வயது ஏற, ஏற ரித்விக்கின் பிடிவாதமும் வளர்ந்தது. அபிமன்யுவிற்கு பிடித்த விஷயம் எதுவாக இருந்தாலும் தனக்கும் வேண்டும் என்று வாங்கி அதை வீணாக்குவான்.

அவனுக்கு மிகவும் பிடித்த ப்ளம் கேக்கை அவன் சாப்பிடுவதற்குள் எடுத்து தோட்டத்தில் கொண்டு போய் தூக்கி போட்டு விடுவான்.

அபிமன்யு அதை பார்த்துவிட்டு பாட்டியிடமும், அம்மாவிடமும் கூறினாலும் அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். சின்ன பிள்ளைடா. அவன் அப்படி பண்ணி இருக்க மாட்டான். தம்பி தானே. போனா போகுது. இன்னொரு நாள் செய்து தரேன் என்பார்கள். ஆனால் இன்னொரு நாளும் இதே தான் தொடர்கதையாக இருக்கும்.

ரித்விக் சீண்டுவதும், அபிமன்யு கோபப்படுவதும், பின்பு சமாதானமாகி போவதுமாகவே வருடங்கள் ஓடியது.

அன்று அபிமன்யுவின் பதிமூன்றாவது பிறந்தநாள். பர்வதமும், சுபத்ராவும் எப்பொழுதும் போல் விருந்தினர்களை அழைத்து பெரிதாக கொண்டாட முடிவு செய்தனர்.

ஊருக்காக செய்யும் விழாவில் அவனுக்கு விருப்பமில்லாமல் போனது. அதனால் இந்த முறை வெளியில் போய், குடும்பத்தோடு கொண்டாட ஆசைப்பட்டான் அபிமன்யு. நந்தனிடமும் அவனது விருப்பத்தைக் கூறினான்.

அவரும், " அபி! இது நல்ல ஐடியாவா இருக்கே. நம்ம இந்த வருஷம் ரோஸ்கார்டன்ல போய் கலக்குறோம்." என்றார்.

சுபத்ராவிற்கும் உறவினர்களை கூப்பிடாதவரை நல்லதாகவே பட்டது.

சுபத்ராவின் பிறந்த வீட்டு உறவுகள் வந்து விட்டால், அவர்கள் திரும்பி செல்லும் வரை சுபத்ராவிற்கும் நெருப்பில் நிற்பது போல் இருக்கும்.

ரித்விக்கிற்கு சுபத்ரா, நந்தன் அவனுடைய பெற்றோர் கிடையாது என்ற உண்மைத் தெரியாது. அப்படி இருக்க அவர்கள் வந்தாலும் ஜாடை மடையா பேசுவதும், பிறகு அபிமன்யு, மற்றும் மானசாவிடம் மட்டும் அன்பைப் பொழிவதுமாக இருப்பார்கள். அது மனித இயல்பு தான், இருந்தாலும் சுபத்திராவிற்கு வருத்தமாக இருக்கும்.

பர்வதத்தை கேட்கவே வேண்டாம். தன் பேரனை தன் கைக்குள்ளே வைத்துக்கொண்டு இருப்பார். அவருக்கும் அவர்கள் வருவதில் விருப்பம் இருக்காது. ஏதோ சுபத்ராவின் பிறந்து வீட்டு உறவு தாமரை இலை தண்ணீர் போலவே தொடர்ந்தது. ஒட்டி உறவாடுவதற்கு சுபத்ராவின் அம்மாவும், அப்பாவும் இல்லை. அவர்களும் இறைவனடி சென்றிருந்தனர்.

இந்த தர்மசங்கடத்திலிருந்து காப்பது போல், இந்த தடவை உறவினர்களை அழைக்கும் தேவையில்லை. எனவே சுபத்ரா உற்சாகமாகவே அபிமன்யுவிற்கு பிடித்த பிளம்கேக்கை தன் கையால் செய்துக் கொண்டிருந்தார்.

அங்கு நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரித்விக்கோ, 'தனக்கு மட்டும் வீட்டில் பிறந்த நாளை கொண்டாடி விட்டு அண்ணனுக்கு மட்டும் வெளியே செய்வதா.' என்று எண்ணியவன், தனக்கு வயிறு வலிக்கிறது என்றுக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தான்.

பதறிய சுபத்ராவோ, என்னென்னமோ போட்டு கஷாயம் செய்துக் கொடுத்தார். அப்போதும் வலிக்கிறது என்று அழுது துடித்தான்.

அவனுக்கு மேல் சுபத்ராவும், பர்வதமும் பதறினர்.

நந்தனோ டாக்டரை வரவழைத்தார்.

டாக்டரும் வந்து பார்த்துவிட்டு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூற.

ஆனால் மாலையில் ரித்விக்கோ அழுதுக் கொண்டே, " எனக்கு இன்னும் வயிறுவலிக்குது. நான் வரலை." என்றான்.

அவன் வயிற்றில் எண்ணை தடவி விட்டுக் கொண்டிருந்தார் சுபத்ரா.

" அதான் டாக்டர் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்கள்ல. இப்போ எல்லோரும் கிளம்புறீங்களா? இல்லையா?" என்று வழக்கத்திற்கு மாறாக நந்தன் சத்தம் போட.

" நானும், ரித்விக்கும் இங்கே இருக்கோம். நீங்க போயிட்டு வாங்க." என்று பர்வதம் கூற.

" நானும் அண்ணன் கூடவே இருக்கேன்." என்ற மானசா, ரித்விக்கின் அருகே சென்று அமர்ந்துக் கொண்டாள்.

சுபத்ராவோ கிளம்பாமல் தயங்கிக் கொண்டிருந்தார்.

" சுபத்ரா! என்ன பண்ணுற?" என்று நந்தன் அதட்ட.

" இதோ..." என்றவர், மனதே இல்லாமல் கிளம்பினார். செய்து வைத்த கேக்கை எடுத்து பேக் செய்ய.

அங்கு வந்த ரித்விக்கோ, தண்ணீர் குடிப்பது போல் க்ளாஸை எடுத்தவன் தண்ணீரை அதில் ஊற்றி விட்டான். செய்து வைத்த கேக் தண்ணீர் ஊற்றியதால் வீணாகிப் போனது.

சுபத்ராவோ, " ரித்வி! என்ன பண்ணுது?" என்று பதறினார்.

" அது மா… கைத் தவறிச்சு." என்றவன் அழ.

" சரி அழாதே!" என்று சமாதானம் செய்தார்.

நந்தன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இப்பொழுது தான் சந்தேகம் வந்திருந்தது. ரித்விக் வேண்டும் என்று தான் தண்ணீர் ஊற்றினான். அது அவருக்கு நன்கு புரிந்தது. ஏற்கனவே இரண்டு முறை அபிமன்யு அவனைப் பற்றி சொன்னான். ஆனால் இவர் தான் நம்பவில்லை. இந்த வீட்டில் அபிமன்யுவிற்கு நடந்துக் கொண்டிருக்கும் அநியாயம் புரிந்தது. இதை சீக்கிரம் சரி செய்ய வேண்டும் என்று எண்ணியவர், " நேரமாச்சு சுபத்ரா! வர்றீயா? இல்லையா? இல்லை நானும், அபியும் கிளம்பட்டுமா?" என்று அவருக்கு இருந்த டென்ஷனை சுபத்ராவிடம் காட்டினார்.

" அது வந்து கேக்ல தண்ணீர் ஊத்திடுச்சு…" என்று தடுமாறினார் சுபத்ரா.

" இப்ப மறுபடியும் செய்ய போறியா? நீ செஞ்ச வரைக்கும் போதும். கிளம்பு."

" நான் என்னங்க பண்ணேன். ரித்வி தெரியாம தண்ணீ ஊத்திட்டான் அவனும்தான் சின்ன புள்ளை."

"உன்கிட்ட விளக்கம் எல்லாம் கேட்கல சுபத்ரா. கவனமா எடுத்து வச்சிருக்கணும். சரி விடு. போற வழியில பாத்துக்கலாம்." என்றவர் சுபத்ராவையும், அபிமன்யுவையும் அழைத்துச் சென்றார்.

ஆளுக்கு ஒரு மனநிலையில் கிளம்பி சென்றாலும், திரும்பி வரும்போது மூவரின் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
************

ரித்விக் இவர்கள் போய்விட்டு வருவதற்குள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து பர்வதத்தை ஒரு வழி பண்ணிவிட்டான். அவனை விட்டு சென்றது அவனால் ஏற்க முடியவில்லை அழுது அழுது முகமெல்லாம் வீங்கி போயிருந்தது. பர்வதம் தான் அவர்களை மட்டும் போக சொன்னார். ஆனால் அதை மறந்து விட்டார்.

மகிழ்வுடன் வீட்டிற்கு திரும்பி வந்தவர்களைப் பார்த்தார்.

" அத்தை! ரித்விக் எப்படி இருக்கான்?" என்று விசாரித்த சுபத்ராவிடம்,

" இன்னும் சாகலை. உசுரோட தான் இருக்கான். இதே உன் பையனா இருந்தா இப்படி விட்டுட்டு போவியா? நீங்க மூன்று பேரும் சந்தோஷமா இருக்கீங்க. அவன் ஒருத்தன் அழுது, அழுது கரைஞ்சிட்டு இருக்கான். அவனைப் பற்றி அக்கறையே இங்கே யாருக்கும் கிடையாது." என்று அவர் ஆக்ரோஷமாக கூறினார்.

" அத்தை !" என்றவரது பதட்டமான குரலில், பர்வதம் நிதானத்திற்கு வந்தார்.

அங்கிருந்த அபிமன்யு, பாட்டி சொன்னதை நம்ப முடியாமல் தாயையும், தந்தையும் திரும்பித் திரும்பி பார்த்தான்.

அவன் மட்டுமில்லை, ரித்விக்கும் தவிப்புடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் வந்தது தெரிந்ததும் அறையில் படுத்து இருந்த ரித்விக், எழுந்து அறைக்கு வெளியே வந்து நின்றிருந்தான். அதை கவனிக்காத பர்வதம் வார்த்தைகளை விட்டிருந்தார்.

இவ்வளவு நாள் கட்டிக் காத்த உண்மை வெளி வந்திருந்தது.

இவ்வளவு நாள் தனது தம்பி செய்யும் செயலினால் பாதிக்கப்பட்டிருந்த அபிமன்யுவிற்கு, அவன் தன் கூட பிறந்த தம்பி இல்லை என்றதும் மனதில் ஏமாற்றம் படர்ந்தது.

முகம் வெளுக்க நின்ற ரித்விக். அதைப் பார்த்த சுபத்ராவோ, " ரித்வி கண்ணா!" என்று அழைக்க.

வேகமாக அவரை கட்டிப் பிடித்து, " அம்மா! நான் உங்க பிள்ளை தானே. சும்மா தானே பாட்டி சொன்னாங்க. நான் இனிமேல் அண்ணன் கிட்ட சண்டை போட மாட்டேன். அதுக்காக பொய்யெல்லாம் சொல்லாதீங்க."என்று அழுதான்.

" ஆமாம் டா. நீ என் பையன் தான். யார் என்ன சொன்னாலும் நம்பாதே." என்றவர் அவனை சமாதானம் செய்தார்.

"போதும் சுபத்ரா! அதான் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே. இன்னும் ஏன் மூடி மறைக்கிற? அவனும் எல்லா உண்மைகளையும் தெரிஞ்சுக்கிட்டும்." என்ற பர்வதம், " ரித்வி! இங்கே வாடா." என்று அழைத்தார்.

" பாட்டி! வேணாம். எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்." என்று சுபத்ராவை விட்டு விலகாமல் கூறினான்.

" இங்கே வாடா கண்ணா." என்று சுபத்ராவிடமிருந்து பிரித்து அழைத்து தனது அருகே அமர வைத்து, அவனது அம்மா, அப்பா இறந்த கதையை சொன்னார்.

அதையெல்லாம் கேட்ட ரித்விக்கோ, அபிமன்யுவை முறைத்துப் பார்த்தான். மனதிற்குள்ளோ,' இவனால தான் நான் என் அம்மா, அப்பாவை இழந்துட்டு இருக்கேன். ஆனால் இவனுக்கு மட்டும் எல்லோரும் இருக்காங்க. விட மாட்டேன்.' என்று எண்ணியவன், ஓய்ந்து போய் தரையில் அமர்ந்து இருந்த சுபத்ராவிடம் சென்றான்.

" அம்மா! நான் உங்களை அப்படி கூப்பிடலாம் தானே."என்று வினவ.

சுபத்ராவோ, "எப்பவும் நீ எனக்கு பையன் தான் கண்ணா. அபிமன்யுவும், நீயும் எனக்கு ஒன்னு தான். அபி உனக்கு அண்ணன். மானசா உன் தங்கச்சி. அது என்னைக்கும் மாறாது. நீங்க மூணு பேரும் எங்களுக்கு முக்கியம்." எனாறு அழுகையை அடக்கிக் கொண்டு பேசினார்.

எட்டு வயதான மானசாவிற்கு என்ன புரிந்ததோ, " அழாத அண்ணா. நீ என் செல்ல அண்ணன் தானே." என்று அவனை சமாதானம் படுத்தினாள்.

அவளுக்கு என்றைக்கும் ரித்விக் தான் முதலில், பிறகு தான் அபிமன்யு. சிறுவயதில் இருந்தே ரித்விக் பின்னால் தான் சுற்றுவாள். இன்றும் அவன் அழவும் தாங்க முடியாமல் அவனை சமாதானம் செய்தவள், அவனருகேயே இருந்தாள்.

பர்வதத்திற்கு இப்பொழுது தான் சற்று நிம்மதியாக இருந்தது.'வாய் தவறி உளறிவிட்டோமே. இனி என்னாகுமோ.' என்று பயந்து கொண்டிருந்தவருக்கு, சுபத்ராவும், ரித்விக்கும் பேசியதைக் கேட்டதும் சற்று நிம்மதியாக இருந்தது. நந்தனும், சுபத்ராவும் கூட ஆசுவாசப்பட்டுக் கொண்டனர்.

ஆனால் அபிமன்யு மட்டும்தான் நிம்மதி இல்லாமல் தவித்தான். ரித்விக்கின் பழி வெறி மிகுந்த பார்வையை கண்டான்.

அவனிடமிருந்து விலகி நிற்பது தான் நல்லது என்று எண்ணி ஒதுங்கிப் போகத்தான் முயன்றான். ஆனால் ரித்விக் விடவில்லை.

எல்லோருக்கும் முன்பு நல்ல பிள்ளையாக இருக்கும் ரித்திக், தனிமையில் அவனை பாடாக படுத்தினான். உன்னால் தான் நான் அனாதையாக இருக்கிறேன் என்று கூறி வம்பிழுப்பான்.

இதை யாரிடம் போய் சொன்னாலும் நம்ப மாட்டார்கள் என்று எண்ணியவன், தன்னை ஹாஸ்டலில் சேர்க்குமாறு கூறினான்.

என்ன பிரச்சனை? ஏன் ஹாஸ்டலுக்கு போற? என்று அக்கறையாக எதுவும் வினவாமல்," அதெல்லாம் ஒன்னும் வேணாம். தம்பியோட சேர்ந்து இங்கேயே இரு. அவன் பாவம். கூட சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்படுறான் உன்னோட பேசினாலும் நீ தான் பேசாம போற எப்படி சொல்லி வருத்தப்பட்டான் தெரியுமா?" என்று சுபத்ரா கண்டிக்க.

அபிமன்யுவின் மனது விட்டுப் போனது. ரித்திக் கூறியதைக் கேட்டு, கேட்டு தன்னால் தான் பெரியம்மா பெரியப்பா இறந்தார்களோ என்று குற்ற உணர்ச்சியில் தவி
த்துக் கொண்டிருந்தவன், தாயும் தன்னை குறை கூறவும், ஒன்றும் கூறாமல் டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து கையை அறுத்துக் கொண்டான்.