• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-15

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -15

அபிமன்யுவின் கைகளிலிருந்து ரத்தம் சொட்ட, பதறிக் கொண்டு சென்றார் சுபத்ரா.

அவரை நகர சொன்ன நந்தன், ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸிலிருந்து காட்டன் எடுத்து அவனது கையில் ரத்தம் வரும் இடத்தில் இறுகக் கட்டுப் போட்டார்.

நல்லவேளையாக நரம்பில் கட் பண்ணாமல் சற்று தள்ளி தான் அறுத்து இருந்தான். அதுவும் லேசான காயம். ரத்தம் நின்று இருந்தது. அசதியில் கண்ணயர்ந்தான் அபிமன்யு.

அவனை தனியே விட்டு செல்ல மனமில்லாமல் சுபத்ராவும், நந்தனும் அவனருகே அமர்ந்து இருந்தனர்.

சுபத்ராவோ, அவனது தலையை வருடிக் கொண்டே அழுதுக் கொண்டிருந்தார்.

" சுபா அழுகையை நிறுத்து. அவன் மனசளவுல பாதிக்கப்பட்டுருக்கான். அதான் இப்படி ரியாக்ட் பண்ணுறான். என்னன்னு பார்ப்போம். நான் என் ஃப்ரெண்ட் பிரபுகிட்ட கேட்குறேன்." என்று நந்தன் கூறியதை கேட்டதும், இன்னும் அவரது அழுகை கூடியது.

" ப்ச்! இது சின்ன விஷயம் தான். நீ பயப்படாமல் இரு. நீ அழறதை அபி பார்த்தால் இன்னும் அவன் மனது பாதிக்கும். கண்ட்ரோல் யுவர் செல்ஃப்"

" சரி." என்று தலையாட்டினார் சுபத்ரா.

" சரி! நான் போய் ஃபோன் பேசிட்டு வரேன். அபியை ஜாக்கிரதையா பார்த்துக்கோ." என்ற நந்தன், தனது நண்பன் பிரபுவுக்கு அழைத்தான்.

பிரபு பிரபல சைக்காட்ரிஸ்ட். அதான் சுபத்ராவின் அழுகைக்கு காரணம். சைக்காட்ரிஸ்டிடம் சென்றாலே பைத்தியம் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்துக் கொண்டிருந்தார். காலம் மாறினாலும், இந்த சிந்தனைகள் மாறாது.

சற்று நேரத்தில் நண்பனிடம் பேசி விட்டு வந்த நந்தனோ, " சுபா! ஈவினிங் அஃப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேன். ரெடியா இரு. நம்ம மூணு பேரும் போகணும்."

" அவசியம் போகணுமா?" என்று நடுங்கும் குரலில் சுபத்ரா வினவ.

" சுபா! நீ படிச்சவ தானே. நீ கூட இப்படி பயப்படலாமா? ஜஸ்ட் அவன் கிட்ட பேசி மனசுல உள்ளதை தெரிஞ்சுக்க போறோம். நம்மளையும் வர சொல்லியிருக்கான்."

" ஒன்னும் பயப்படுற மாதிரி இருக்காதுல்ல."

" அதெல்லாம் ஒன்னும் பயம் கிடையாது. ஜஸ்ட் கவுன்சிலிங் தான் கொடுப்பான். நீ அபி கூடவே இரு. நான் ஃபேக்டரிக்கு போயிட்டு அரைமணி நேரத்தில் வந்திடுறேன்." என்ற நந்தன், சொன்னது போலவே வெளியே சென்று விட்டு திரும்பி வந்தார்.


அதற்கு பிறகு மகனை விட்டு அவர் நகரவே இல்லை‌. கண் விழித்த அபிமன்யு இருவரிடமும் பேசவே இல்லை‌. ஆனால் இருவரில் ஒருவராவது அவன் கூட இருந்து கொண்டே இருந்தனர்.

மாலையில் அவனை அழைத்துக் கொண்டு நண்பனது ஹாஸ்பிடலுக்கு சென்றனர். அதைப் பார்த்ததும் அபிமனின் முகம் மாறியது.

அவன் கையை பிடித்து அழுத்திய நந்தன், " நம்ம பிரபு அங்கிளை பார்த்துட்டு வரப்போறோம்."என்று மென்மையாக கூறினார் நந்தன்.

அவர்களை வரவேற்ற டாக்டரோ, அபிமன்யுவை மட்டும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

நீண்ட நேரம் கழித்து வந்தவனது முகத்தில் தெளிவு வந்திருந்தது.

பிறகு நந்தனையும், சுபத்ராவையும் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு இன்னொருவர் இருக்க.

" யார் இவர்?" என்பது போல் நந்தன் தனது நண்பனை பார்த்தார்.

" டேய் நந்தா! இவர் சைக்காலஜிஸாட்! இவர் தான் அபிக்கு கவுன்சிலிங் கொடுத்தார். அவரே எல்லாத்தையும் சொல்லுவார் கேளு." என்றார் பிரபு.

" மிஸ்டர் நந்தன்! இதை எப்படி சொல்றதுன்னே தெரியலை. உங்க பையன் ரொம்ப மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கான். அந்த வீட்டில் இருந்தால் அவனுக்கு நிம்மதிக் இருக்காதுன்னு ஸ்டாராங்க நம்புறான். இப்போதைக்கு அவன் விருப்பப்படி ஹாஸ்டல்ல சேர்க்கறது தான் சரி." என்றார்.

" என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க? அவனுக்கு வீட்ல எந்த பிரச்சனையும் கிடையாது." என்று சுபத்ரா மறுத்தார்.

" இங்கே பாருங்க மேடம். அபி சொல்ல வர்றதை முதல்ல காதுக் கொடுத்து கேளுங்க. நிறைய ஃபேரன்ட்ஸ் பண்ணுற தப்பை தான் நீங்களும் பண்றீங்க. தம்பி என்ன சொன்னாலும் நம்புறாங்க. நான் சொல்ல வர்றதை யாருமே கேட்கலன்னு சொன்னான். அது மட்டுமில்லை அவன் என் தம்பியே கிடையாது. ஆனாலும் எங்க வீட்ல எல்லோருக்கும் அவன் தான் முக்கியம். அப்புறம் நான் ஏன் அங்க இருக்கணும்னு கேட்குறான்.

இப்போதைக்கு கவுன்சிலிங் பண்ணி இருக்கேன்‌. இன்னும் ரெண்டு செஷன்ஸ் அழைச்சிட்டு வாங்க. ரெகவராகிடுவான். பயப்பட வேண்டாம். தென் நீங்க அவனை ஹாஸ்டல்ல சேர்த்துடுங்க. அது தான் பெட்டர். புதுப்புது ஆளுங்களை பார்க்கிறது அவனுக்கு நல்லது. நீங்களும் அப்பப்போ போய் பார்த்து, அவனுக்கு நீங்க இருக்கீங்கன்ற நம்பிக்கையை கொடுங்க. முடிஞ்சா அவன் தம்பியை ஒரு முறை கவுன்சிலிங்குக்கு கூட்டிட்டு வாங்க. அவனுக்கும் அது தான் நல்லது." என்றார்.

வீட்டிற்கு வந்ததும் பர்வதத்திடம் டாக்டர் கூறியதைக் கூற.

அவரோ, " பைத்தியக்காரத்தனமா அபி கையை வெட்டிக்கிட்டா, அதுக்கு ரித்விக் ஏன்டா அங்கே வரணும். என் பேரன் எங்கேயும் வரமாட்டான்." என்று விட்டு அறைக்குள் சென்றுவிட்டார்.


அதிர்ந்து நின்ற சுபத்ராவை நந்தன் தான் சமாதானம் படுத்தினார்.

" அப்போ அபி யாரு? அவங்க பேரன் இல்லையா?" என்று சுபத்ராவின் கேள்விக்கு நந்தனிடம் பதிலில்லை.

" அவங்களை மாத்த முடியாது சுபத்ரா. நீ அபியை விட்டுக்கொடுக்காமல் இரு. ரித்விக் எப்படி முக்கியமோ, அபியும் அதே போல் முக்கியம் புரியுதா? என் அம்மா பெரியவங்க தான், அதுக்காக நீ எல்லாத்துக்கும் விட்டுக் கொடுக்கணும்னு அவசியமில்லை. அவங்களுக்கு பயந்துக்கிட்டு இருக்கிறது அபிக்கு நாம் செய்கின்ற அநீதி." என்றார் நந்தன்.

"அப்படியெல்லாம் இல்லை." என்ற சுபத்ராவை ஆழ்ந்து பார்த்தார் நந்தன்.

அந்த பார்வைக்கு அர்த்தம் அப்பொழுது புரியவில்லை.

பிடிவாதமாக அபிமன்யு ஹாஸ்டலில் சேர்ந்து விட, சுபத்ரா தான் மிகவும் சோர்ந்து போனார். எப்பொழுது பார்த்தாலும் அழுது கொண்டே இருக்க

நந்தன் ஒரு முடிவுக்கு வந்தார்.

" சுபா! நீ வீட்ல இருக்க வேணாம். என் கூட எஸ்டேட்டிற்கு வா. தொழில் கத்துக்கோ. எனக்கும் ஒரே ஆளா பார்க்க முடியலை." என்றவர் சுபத்ராவை அழைத்து சென்று, தொழில் சூட்சமம் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார்.

சீக்கிரமே அவர் இறந்து விடுவார் என்று அவருக்கு உள்உணர்வு உணர்த்தியதோ, என்னவோ சுபத்திராவிற்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் வக்கீலை அழைத்து சொத்தையும் பிரித்தார். வீடும், ரிசார்ட்டும் அபிமன்யுவிற்கும், டீஎஸ்டேடும், ஃபேக்டரியும் ரித்விக்கு என்றார்.

பர்வதமோ," இப்போ என்ன அவசரம்? அதுவுமில்லாமல் சொத்தை மூனா பிரிக்கலாம்ல. நம்ம மானுவுக்கு வேண்டாமா?" என்றார்.

"அதெல்லாம் நான் யோசிக்காமல் இருப்பேனா? என் அண்ணன் பங்கு ரித்விக்கு கொடுத்துட்டேன். என்னோட ஷேர் அபிக்கு. கூடிய சீக்கிரமே அதுல வர்ற லாபத்துல மானுவுக்கு ஏதாவது வாங்கிடுவேன். வீடு நமக்கு அப்புறம் தான் அபிக்கு போகும். அதுவரைக்கும் எல்லோரும் இங்கே இருக்கலாம்." என்றவர் சொன்னது போலவே அவர் இறப்பதற்குள் விற்பனைக்கு வந்த பக்கத்து எஸ்டேட்டை மானசாவின் பெயரில் வாங்கினார்.


அபிமன்யுவும் ஹாஸ்டலில் இருந்து விடுமுறைக்கு மட்டும் வந்து சென்றான். ப்ள்ஸ் டூ முடித்ததும், பிஎஸ்சி சைக்கலாஜி தான் படிப்பேன் என்று ஒத்தக்காலில் நின்று கோயம்புத்தூரில் உள்ள காலேஜில் சேர்ந்துக் கொண்டான்.

சுபத்ராவிடமிருந்து ஒதுங்கியவனுக்கு, நந்தன் தான் நண்பனாகிப் போனார். காலேஜில் நடப்பவை எல்லாவற்றையும் தந்தையிடம் பகிர்ந்துக் கொண்டான்.

நந்தனோ அவனுக்கு அறிவுரை சொல்லுவார்‌. கூடப் படிக்கும் பெண்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதிலிருந்து, குடிக்க கூடாது என்பது வரைக்கும் அவனிடம் அறிவுறுத்திருந்தார்.


எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த போது மேற்படிப்பிற்காக நியுயார்க் செல்வதாக கூறினான் அபிமன்யு.

நந்தனும் அதுக்கான ஏற்பாடுகளை செய்தார்.

பர்வதமோ, "நந்து! அபியை அவ்வளவு தூரமெல்லாம் அனுப்ப வேண்டாம். இப்பவே நம்ம பேச்சைக் கேட்க மாட்டேங்குறான். அதுவுமில்லாமல் அவன் படிக்குற படிப்பே எனக்கு பிடிக்கலை. இதுல வெளிநாட்டுக்கு போய் படிக்குறானா? எவ்வளவு செலவாகும்? இதோ ரித்விக்கை பாரு, நான் சொன்னேன்னு இங்கேயே படிக்குறான். செல்லம் கொடுத்து நீ அவனை வீணாக்கி வச்சிருக்க." என்று புலம்ப.

வாயடைத்து போனார் நந்தன். ' என் பையனை செல்லம் கொடுத்து வீணாக்கியிருக்கேனா? ரித்விக் சென்னையில் படிக்கணும்னு சொன்னதற்கு, நீ அங்கே போய்ட்டா, உன் சொத்தெல்லாம் யார் பார்த்துக்கிறது. ஏற்கனவே உங்க அம்மா வேற பிஸ்னஸ் பார்க்கேறேன்னு போறா. நீயும் கவனிக்கணும் என்று சொல்லியதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. ' என்று மனதிற்குள் குமைந்துக் கொண்டிருந்தவருக்கு நெஞ்சில் சுருக்சுருக்கென்று குத்தியது.

அபியின் அறைக்குச் சென்றவர், " அபி! அப்பா எப்பவும் உன் கூட தான் இருப்பேன். நீ கட்டாயம் உன் ஆசைப்படி வெளிநாட்டுல படிச்சிட்டு வா. அப்படியே நம்ம பிஸ்னஸையும் பார்த்துக்கணும்." என்றார்.

" இப்போ எதுக்குப்பா தேவையில்லாததெல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்குது? முடியலையா? ஹாஸ்பிடலுக்கு போகலாம்." என்று பரபரத்தவன், " அம்மா!" என்று கூச்சலிட.

சுபத்ராவும் ஓடி வந்தார்.

" சுபா! நீ தைரியமா இருக்கணும். யாரையும் பாசம்ங்குற கண்ணாடியை மட்டும் வச்சுப் பார்க்காதே. இதயம் வழியா யோசிக்காமல் மூளை வழியா யோசி. எஸ்டேட் உன் பொறுப்பு.ரித்விக் கிட்ட நல்லபடியா ஒப்படைச்சிடு." என்றவர் தன் மகனை அழுத்தமாக பார்க்க.


அபியின் தலை தன்னாலே ஆடியது.

சுபத்ரா அதையெல்லாம் கவனிக்காமல் நந்தனது பேச்சிலே கதிகலங்கி நின்றார்.

"எதுக்குங்க இப்படியெல்லாம் பேசுறீங்க. எனக்கு என்னமோ பயமா இருக்கு." என்ற சுபத்ரா அழ.

நந்தனுக்கு சற்று நேரம் குறைந்திருந்த வலி மீண்டும் ஆரம்பித்தது. தன்னை சமாளித்தவர், " தைரியமா இருக்கணும் சுபா. எல்லாத்துக்கும் தலையாட்டணும்னு அவசியமில்லை. சில இடத்தில் எதிர்த்து பேசலாம்." என்று மனைவியை ஆழ்ந்துப் பார்த்தார்.

அந்தப் பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் தவித்தார் சுபத்ரா. சற்று நேரத்திலேயே அவரது உடலில் இருந்து உயிர் பிரிந்தது.

அபிமன்யுவிற்கு நந்தனின் இறப்பு பெரிய இழப்பு. அதை வெளிக்காட்டாமல் தனக்குள் இறுகியவன், காரியம் எல்லாம் முடியவும் வெளிநாட்டிற்கு செல்ல தயாரானான்.

ஆனால் ரித்விக்கோ, " அண்ணா! எங்களை விட்டுட்டு போகாதண்ணா." என்று சுபத்ராவிற்கு முன்பு தடுத்தான்.

" இல்லை! நான் படிக்கணும்." என்று மறுத்தான் அபிமன்யு.

பர்வதமோ, " அப்பா இல்லாத இடத்துல நீ தானே பார்த்துக்கணும். வெளிநாட்டுக்கு எல்லாம் போக வேண்டாம்." என்று தடுத்தார்.

சுபத்ராவும், நந்தன் சொன்னதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல், " ஆமாம் அபி. தம்பி சொல்ற மாதிரி என் கூடவே இரு. நான் தான் உன் மேல கண் மூடித்தனமா பாசம் வச்சிருக்கேன். அதான் அப்பா அப்பவே சொன்னார், யாரையும் நம்பாதன்னு. நான் தான் புரிஞ்சுக்காமல் இருந்துட்டேன்." என்று அழ.

அபிக்கு சுபத்ரா கூறியதை கேட்டு சுத்தமாக மனது விட்டுப் போனது.

" இங்கே பாருங்க. அப்பா உங்களைத் தான் பிஸ்னஸை பார்த்துக்க சொல்லியிருக்கிறார். ரிசார்ட்டை மேனஜர் அங்கிள் பார்த்துப்பார். எனக்கு எல்லா அப்டேட்ஸும் வந்துடும். குட் பை." என்றவன் அங்கிருந்து கிளம்பி வெளிநாட்டிற்கு சென்றான்.

படிப்பு முடிந்து திரும்பி வந்த பிறகும், மனநல மருத்துவமனையில் கவுன்சிலராக சேர்ந்துக் கொண்டான். வேலைக்கு சென்று வர வசதி என்று ரிசார்டிலே தங்கிக் கொண்டான்.

சுபத்ராவின் கெஞ்சலுக்கு செவி சாய்க்கவில்லை. அவரும் அலுத்து போய் விட்டு விட்டார்.

நல்ல நாள்‍, பெரிய நாள் மட்டும் வருவான்.'

பழசையெல்லாம் நினைத்து பார்த்த சுபத்ரா கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார்.

'ஒரு வேளை ரித்விக்கைப் பற்றி தான் அவர் பூடகமாக சொல்லியிருப்பாரோ. அபிமன்யுவின் கண்கள் உண்மையைத் தான் சொல்லுது. நாம தான் புரிஞ்சுக்காமல் விட்டுட்டோமோ. அவரோட பார்வைக்கு அர்த்தம் இன்னைக்கு தான் எனக்கு புரியுது. இனி யார் தடுத்தாலும் கவலைப் படாமல் உத்ராவை அபிக்கு கட்டி வைக்கணும்.' என்று எண்ணியவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ஆனால் காலம் தாழ்ந்த முடிவு. இனி அபிமன்யு உத்ராவை கைப்பிடிக்க யாரோட உதவியும் தேவையில்லை.
விதியே அவனது கைகளில் அ
வளை சேர்க்கும்.

ஆனால் உத்ராவை கைப்பிடித்த சந்தோஷத்தை முழுதாக அபிமன்யு அனுபவிக்க விடாமல், அவளே தடையாக இருக்கப் போகிறாள் என்று அவன் அப்பொழுது அறியவில்லை. அறவே அவன் வெறுத்த ரித்விக்கிற்கு ஆதரவாக வாதாடி, அவனை வதைத்தாள் பெண்ணவள்.
 
Last edited: