• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-17

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -17

"ப்ளீஸ்னு சொல்லாதீங்க அண்ணா."என்று கதறிய உத்ராவிற்கு ரித்விக்கின் ஞாபகம் வந்தது.

' அவள் சிந்தனை இங்கே இல்லை.' என்பதை புரிந்துக் கொண்ட முகிலன், " அழாதே! உனக்கு பிடிக்கலைன்னா, விட்டுடுமா. அழ வேண்டாம்." என்று தோளில் சாய்த்து ஆறுதல் சொன்னவனது கண்களிலிருந்து நீர் வடிந்தது..

அண்ணனின் ஆறுதலில் சுய நினைவுக்கு வந்தவள், அண்ணனை நிமிர்ந்து பார்க்க. பின்னே முகம் முழுவதும் குழப்பத்துடன் நின்றிருந்தாள் மானசா.

" நல்ல மாப்பிள்ளை. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை நிச்சயம் நல்லா இருக்கும். அதுனால தான் கேட்டேன். உனக்கு விருப்பம் இருந்தால் தான் கல்யாணம்." என்றான் முகிலன்.

முகிலன் பேச, பேச மானசாவை தான் கவனித்திருந்தாள் உத்ரா.

மானசாவிற்கு தன் மூத்த அண்ணனையே திரும்ப உத்ரா கல்யாணம் பண்ணுவதில் விருப்பமில்லை என்றாலும், உத்ராவுக்கு மறு(திரு)மணம் நடப்பது தான் தன் வாழ்க்கைக்கு நல்லது என்பது புரிந்து, உத்ராவின் விருப்பத்தை தெரிந்துக் கொள்ள முகிலனின் பின்னாலே வந்திருந்தாள். ஆனால் உத்ராவின் மறுப்பை கேட்டதும், முகம் இறுகியது. தன் உணர்வுகளைத் வெளிக்காட்டாமல் இருக்க முயன்றாள். ஆனால் அவளையே பார்த்துக் கொண்டிருந்த உத்ராவிற்கு, அவளது உள்உணர்வு புரிந்தது.

'கிட்டத்தட்ட கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது. இன்னும் அவர்களுக்கான வாழ்க்கையை வாழாமல் இருந்தால் அவளும் தான் பாவம். இந்த அண்ணன் அண்ணியோட உணர்வுகளை புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க. நாம இருக்கும் வரை இவர்களுக்கு தொந்தரவு தான். இவர்களுக்காகவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்.' என்று எண்ணியவள், தன்னை சமாளித்துக் கொண்டு," உங்க விருப்பம் போல செய்யுங்கண்ணா." என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளது சம்மதத்தை கேட்ட முகிலனின் முகமும் மலர்ந்தது.

" அப்புறம் என்ன? பாட்டிக்கிட்டேயும், அம்மாக்கிட்டேயும் சொல்லி நாள் பார்க்க சொல்லலாம்." என்ற மானசா, முகிலனைப் பார்த்து புன்னகைத்தாள்.

" மானசா! இது என் தங்கை கல்யாணம். அவங்க நம்ம வீட்டுக்கு பெரியவங்க. அதனால நான் விவரத்தை சொல்லிட்டேன். அவ்வளவு தான். இனி இந்த விஷயத்தில தலையிடணும்னு அவசியமில்லை புரியுதா? நான் போய் அபியை பார்த்துட்டு வரேன்." என்ற முகிலன் அங்கிருந்து செல்ல.

மானசாவோ முழித்துக் கொண்டிருந்தாள். 'எங்க அண்ணன் கல்யாணத்துக்கு எங்க அம்மா தலையிடாமல் யார் தலையிடுவா? என்னவோ எனக்கு ஒன்னும் புரியலை.' என்றவள், அவளால் முடிந்தது அவளது அறைக்குச் சென்று அமைதியாக இருப்பது. அதை அவள் செவ்வனே செய்தாள்.
*********************

ஸ்வீட்டுடன் முகம் கொள்ளா புன்னகையுடன் அபிமன்யுவிற்கு முன்பு அமர்ந்தான் முகிலன்.

முகிலனின் முகம் சொன்ன செய்தி புரிந்தாலும் வாய் வார்த்தைக்காக, படபடக்கும் இதயத்துடன் காத்திருந்தான் அபிமன்யு.

அவனை ரொம்ப காக்க வைக்காமல் ஸ்வீட்டை எடுத்து அபியின் வாயருகே கொண்டு சென்ற முகிலன்," வாயைத் தொறங்க மச்சான். உதி கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டா." என்றான்.

அபிமன்யுவின் முகத்தில் லேசான வெட்கத்தின் சாயல்.

" அப்புறம் என்ன மச்சான்? கல்யாணத்துக்கு நாள் யார் கிட்ட பார்க்கலாம்?" என்ற முகிலனின் கேள்வியில், அபிமன்யுவின் முகம் மாறியது.

" முகிலன்! வீட்ல சொல்லிட்டீங்களா? எல்லோருக்கும் சம்மதம் தானே." என்று அழுத்தமாக பார்த்துக் கொண்டே வினவினான் அபிமன்யு.

" சொல்லியாச்சு அபி. ஏன் கேட்குறீங்க?"

"ஒன்னும் இல்லை. நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன். நீங்க உட்காருங்க." என்றவன், இன்டர்காமில் ரெஸ்டாரண்டிற்கு அழைத்தவன், இரண்டு டீ எடுத்து வருமாறு கூறிவிட்டு,
உள்ளறைக்கு சென்றான்.

செல்ஃபோனில் சுபத்ராவிற்கு அழைத்தவன், ஒரு நொடி தயங்கி பிறகு, " ஹலோ!" என்றான்.

சுபத்ராவிற்கோ அபிமன்யுவிடமிருந்து ஃபோன் என்றதும் கண்ணெல்லாம் கலங்கியது. தன்னை சமாளித்துக் கொண்டு, " கண்ணா!" என்றழைத்தவரின் குரலில் பரிதவிப்பு தெரிந்தது.

அந்த குரல் கேட்டதும், அபிமன்யுவின் கோபம் சற்று குறைந்தது.

அதற்குள் சுபத்ரா, " ஹலோ! ஹலோ! அபிக்கண்ணா! இருக்கீயா?" என்று பரபரத்தார்.

"ம்…"

" என்னப்பா விஷயம்? எதுக்கு ஃபோன் போட்ட? உடம்புக்கு எதுவும் முடியலையா?" என்று பதறினார் சுபத்ரா.

" அதெல்லாம் ஒன்னும் இல்லை. இன்னமும் உத்ரா என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல இஷ்டமில்லையா?"

" அப்படியெல்லாம் இல்லை பா. எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்."

" அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு நாள் பார்க்க வரலை? இவனுக்கு எதுக்கு நாம வரணும்னு நினைக்கிறீங்களா? இல்லை உங்க மாமியார் போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களா?" என்று அவனது கோபத்துக்கான காரணத்தைக் கூறினான்.

"மாப்பிள்ளை நாள் பார்க்குறதை சொல்லலை பா. இன்னைக்கே பார்க்கணும்னா சொன்னார்." என்று நம்பாமல் வினவினார்.

" எங்க நாள் பார்க்கலாம்னு கேட்டுக்கிட்டு வந்திருக்கிறார். நம்பிக்கை இல்லைன்னா அவருக்கே ஃபோன் பண்ணி கேளுங்க." என்று உணர்வுகளற்று கூறினான்.

" அப்படியெல்லாம் இல்லை பா. இதோ நானும், மானுவும் கிளம்பி வர்றோம்." என்ற சுபத்ரா, மகளைத் தேடிச் சென்றார்.

" மானு!" என்ற சுபத்ராவின் குரலில் வெளியே வந்தாள் சுபத்ரா.

" மாப்பிள்ளை எங்க போயிருக்கிறார்?"

" அது வந்து மா…" என்று தயங்கினாள் மானசா.

" அப்போ உன் அண்ணன் கல்யாணத்துக்கு நாள் பார்க்க போறாருங்குறது உனக்கு தெரியுமா?"

"அது வந்து மா." என்றவள், எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிட்டாள். அவளுக்கே புரியாததை அம்மாவிற்கு எப்படி புரிய வைப்பது.

" நீ எதுவும் சொல்ல வேண்டாம். முதல்ல அவருக்கு ஃபோன் போடு." என்றவர், அவள் முகிலனுக்கு அழைக்கவும், அவளிடம் இருந்து ஃபோனை வாங்கி பேச ஆரம்பித்தார்.

" மாப்பிள்ளை! உத்ராவோட கல்யாணத்துக்கு நாள் பார்க்க போயிருக்கீங்களா? நாங்க பெரியவங்க இருக்கோம் தானே. என் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். என்னை கூப்பிட வேண்டாம். ஆனால் மானு உங்க பொண்டாட்டி தானே. அவளை விட்டுட்டு எப்படி போகலாம்?" என்று படபடவென வினவ.

" அது வந்து…" என்று தயங்கினான் முகிலன்.

" நீங்க ரிசார்ட்ல தானே இருக்கீங்க. நானும், மானுவும் கிளம்பி வர்றோம்."

"சரிங்க அத்தை." என்றவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

சற்று நேரத்தில் வெளியே வந்த அபிமன்யு, " டீ குடிக்கலையா முகில்?" என்று கேட்டவாறே பிளாஸ்கில் இருக்கும் டீயை இரண்டு கஃப்பில் ஊற்றியவன், முகிலனிடம் ஒரு கஃப்பை கொடுத்து விட்டு, இன்னொன்றை எடுத்து அருந்தத் தொடங்கினான்.

" அபி! அத்தையும், மானுவும் வர்றாங்க. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாமா?" என்று தயக்கத்துடன் வினவ.

" ஷ்யூர்!" என்றவன், திருமணம் பற்றிய அவனது விருப்பத்தை பகிர்ந்துக் கொண்டான்.

" முகில்! கல்யாணம் எவ்வளவு சீக்கிரம் நடத்துறோமோ அவ்வளவுக்கு உத்ராவுக்கு நல்லது. அதுனால அடுத்து வர்ற முகூர்த்தத்துல சிம்பிள்ளா கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்." என்று அபிமன்யு கூற, அதுவே முகிலனுக்கும் சரியென பட்டது.

சற்று நேரத்திலே சுபத்ராவும், மானசாவும் வந்து விட, ஜோதிடரிடம் சென்று, திருமணத்திற்கு நாள் குறித்து கொண்டு வந்தனர்.

பதினைந்து நாட்களிலே திருமணம் என்று முடிவானது.

முகிலன் அபியின் விருப்பத்தைக் கூறியிருக்க, சுபத்ரா குலத்தெய்வக் கோவிலிலே திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

பர்வதத்திடம் குலதெய்வ கோவிலில் திருமணம் என்று கூற. அவரோ, " நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க."என்றார்.

" அத்தை! அபியும் உங்க பேரன் தான்."என்று கூற.

" ரித்விக்கும் என் பேரன் தான். இன்னும் அவன் இறந்து ஒரு வருஷம் ஆகாம நான் எப்படி வர முடியும்." என்று பிடிவாதமாக வர மறுத்து விட்டார்.

'இவரை திருத்தவே முடியாது. அப்போவே என் வீட்டுக்காரர் சொன்ன மாதிரி இருந்திருக்கணும். அப்படி இருந்திருந்தால் அபி என்னை விட்டு விலகிப் போயிருக்க மாட்டான். காலம் தாழ்ந்த ஞானோதயம்." என்று எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டவர், அதற்குப் பிறகு எதற்கும் அவரிடம் சென்று நிற்கவில்லை.

அவரே எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். உத்ராவையும், மானசாவையும் அழைத்துக் கொண்டு ஜவுளி வாங்கினார். உத்ரா எதிலும் ஆர்வமாக கலந்து கொள்ளவில்லை. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதே அவர்களுக்கு புரியவில்லை. முன்னே நடந்த திருமணத்தில் அவளது ஆர்வத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் பார்த்திருந்த சுபத்ராவிற்கும், மானசாவிற்கும் இப்போதைய அமைதி கவலையை தந்தது.

அபிமன்யுவின் எதிர்க்காலத்தை நினைத்து பயமும் கவலையுமாக இவர்கள் இருக்க.

அபிமன்யுவோ அமைதியாகவே இருந்தான். அவனுக்கு எந்த பயமும் இல்லை. அவனுக்கு துரோகம் செய்பவனே இந்த உலகத்தில் இல்லாததால் எந்த தயக்கமும் இல்லாமல் திருமணத்திற்கு தயாரானான்.

குலதெய்வ கோவிலில், கடவுளின் ஆசியோடும், குடும்பத்தாரின் ஆசியோடும் உத்ராவை தனது சரி பாதியாக்கி கொண்டான்.
*********************
மதிய உணவிற்கு அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார் சுபத்ரா.

உணவு முடிந்து, வீட்டிற்கு கிளம்பும் நேரம், அவன் கார் அருகே சென்றான்.

" வீட்டுக்கு வாங்க மாப்பிள்ளை!" என்று முகிலன் அழைக்க.

"யார் வீட்டுக்கு ?" என்ற அபிமன்யுவோ சுபத்ராவை பார்த்தான்.

அந்த வீட்டிற்கு மறுபடியும் அபிமன்யுவை அழைக்கும் தைரியமில்லாமல், 'அவனாகவே வருவானா.' என்று தவிப்புடன் பார்த்தார் சுபத்ரா.

'அம்மா அழைக்க வேண்டும்.'என்று எண்ணிய அபிமன்யு, சுபத்ராவின் பதிலுக்காக காத்திருந்தான். அவரது அமைதி அவனது கோபத்தை தூண்டியது. அதை வெளிக்காட்டாமலிருக்க முயன்றான்.

தனது பதிலில் அதிர்ந்து இருந்த முகிலனின் கைகளைப் பற்றியவன், " முகில்! உங்க தங்கச்சியை பத்திரமா பார்த்துக்குவேன். கவலைப்படாதீங்க. நீங்க எப்ப வேணும்னாலும் உங்க தங்கச்சியைப் பார்க்க ரிசார்ட்டுக்கு வரலாம்." என்றுக் கூறி உத்ராவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அமைதியாக பேசினாலும், அவன் முகத்தில் உள்ள கோபத்தைக் கண்டுக் கொண்ட முகிலனோ, தங்கையை நினைத்துக் கவலைக்கொண்டான்.
**********************
ரிசார்ட்டுக்கு வந்ததும், " வலதுக்காலை வைச்சு உள்ள வா உதி! இப்போதைக்கு இது தான் நம்ம வீடு." என்றவன் அவளது கைகளைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தான்.

உள்ளே நுழைந்ததும் கைகளை வேகமாக விலக்க,

" ஏன் பயப்படுற? ரிலாக்ஸ் உதி! "என்றான் அபிமன்யு.

" பயப்படலை! "என்றவளது விழிகளில் பயம் அதிகமாக இருந்தது. அவனை நேராக பார்க்காமல் சுற்றிலும் பார்த்தாள். இங்கே ஆஃபிஸ் ரூமோடு அவளது வேலை முடிந்திடும். இவன் தங்கியிருக்கும் சூட் வரைக்கும் வந்ததில்லை.

இவனது ரிசார்ட் தனிமை விரும்பிக்களுக்கும், ஹனிமூன் கப்பிள்ஸுக்கும் ஏத்த மாதிரியானது. தனித்தனி சூட்டாக இருக்கும். இவனது சூட் ரிசார்ட்டின் இறுதியில் உள்ளது. வெளியே தனி ஃபயர் கேம்ப் போடுவதற்கு இடம். அதற்கு அடுத்து ஹால், கிச்சன், பெட்ரூம் என்றிருக்க. அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"முதல்ல உட்காரு உதி." என்று ஹாலில் இருந்த சோஃபாவில் அமர செய்தவன், அவளருகே அமர்ந்தான்.

அவளோ தள்ளி, தள்ளிப் போக.

" ஓகே உதி உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது. அதுக்காக ஒதுங்கிப் போகணும்னு அவசியமில்லை. நான் உனக்கு அறிமுகம் இல்லாதவன் கிடையாது. இவ்வளவு நாள் எப்படி என்கிட்ட ஃப்ரீயா பேசினியோ, அப்படியே இருக்கலாம்."

"அது வந்து." என்றவள் தயங்க.

" ம்… வந்து… சொல்லு உதி." என்று அவளது கண்களை பார்த்தான் அபிமன்யு.

அவனது விழி வீச்சைப் பார்க்க முடியாமல், கீழே பார்த்துக் கொண்டு, " எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும். ரித்வியோட ஞாபகத்திலிருந்து நான் வெளியே முதல்ல வரணும்." என்று வேகமாக கூறி முடித்தாள்.

அபிமன்யுவோ அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

அவனிடமிருந்து பதில் வரவில்லை என்றதும், நிமிர்ந்துப் பார்த்தாள் உத்ரா.

" உதி! உனக்கு பொய் சொல்ல வரலை. அதுவுமில்லாமல் நான் சைக்காலஜிஸ்ட் என்று தெரியும் தானே. உன் முகமே எல்லாத்தையும் காட்டிக் கொடுத்துடுச்சு. உனக்கு ரித்திக் இறந்தது வருத்தம் தான். ஆனால் அவனுடைய இழப்பில் இருந்து நீ மீண்டு வந்துட்டன்னு எனக்கு புரியுது. ஆனால் இன்னும் ஏதோ ஒரு விஷயம் உன் மனசை போட்டு குடையுது.எதையோ நினச்சு பயப்படுற அது என்னன்னு தான் புரியல உன்னால முடியும்னா என்கிட்ட ஷேர் பண்ணிக்கோ. இல்லன்னாலும் பிரச்சனை இல்லை. எவ்வளவு நாள் காத்திருக்க நேர்ந்தாலும் உன் சம்மதம் இல்லாமல் நம்ம லைஃப் ஸ்டார்ட்டாகாது. புரியுதா? அதுவரைக்கும் நம்ம ஒருத்தரை, ஒருத்தர் புரிந்துக் கொள்ள முயற்சிக்கலாம். சரியா?" என்றான் அபிமன்யு.

'தன்னைக் கண்டு கொண்டானே.' என்று எண்ணியவளுக்கு இப்போது தான் மனது நிம்மதி அடைந்தது.

ரித்விக்கின் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றெல்லாம் அவள் எண்ணவில்லை. ஆனால் அவனுடைய இறப்பை எண்ணினால், அவளது மனதில் வலி உண்டாகும். அவனது மரணம் தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சி அவளுக்கு உண்டு. அன்று தான் மட்டும் முத்தமிடும் வரும்போது மறுக்காமல் இருந்திருக்கலாமோ என்று எண்ணினாள். அவன் ப்ளீஸ், ப்ளீஸ் என்று கெஞ்சும் போது கேட்டிருக்கலாமோ. தான் மறுத்ததால் தான் படகு சாய்ந்தது. அதற்கு
பிறகு…' என்று எண்ணியவள், தலையை குலுக்கிக் கொண்டாள்.

" ஹேய் என்னாச்சு உதி?" என்று அவளது பதட்டத்தைப் பார்த்து அபிமன்யுவும் பதறினான்.


 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
அண்ணன் வாழ்க்கையை கெடுக்குறேனு ரித்விக் மொத்தமா பரலோகம் போய்ட்டான் இறந்தும் கொஞ்ச நாள் நினைவுகல்ல படுத்துவான் போல 🙄🙄🙄🙄🙄🙄
 
  • Love
Reactions: Viswadevi

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
அண்ணன் வாழ்க்கையை கெடுக்குறேனு ரித்விக் மொத்தமா பரலோகம் போய்ட்டான் இறந்தும் கொஞ்ச நாள் நினைவுகல்ல படுத்துவான் போல 🙄🙄🙄🙄🙄🙄
ஆமாம் சிஸ் ❤️