• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-20

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் -20

அபிமன்யுவின் முகமாற்றத்தை கவனித்த முகிலன் பேச்சை மாற்றினான்.
"சரி விடுங்க. பழசெல்லாம் எதற்கு பேசிட்டு இருக்கணும். இனி நீங்க ரெண்டு பேரும் எதிர்காலத்தைப் பற்றி மட்டும் பேசுங்க. ரித்விக் இனி உங்கள் வாழ்க்கையில் கிடையாது." என்ற முகிலனுக்குத் தெரியவில்லை, அவர்கள் வாழ்க்கை முழுவதும் அவனின் நினைவின் வடு இருந்துக் கொண்டு தான் இருக்கும் என்று...

முகிலனின் பேச்சைக் கேட்டு சரியென்பது போல் இருவரும் தலையாட்டினர்.

" மாப்பிள்ளை! நேத்து தான் வீட்டுக்கு வரலை. மறு வீட்டு சடங்குனு நினைத்து வந்தாலும் சரி, இல்லை உங்க வீடுன்னு நினைச்சு வந்தாலும் சரி, கட்டாயம் மதிய உணவுக்கு அங்கே வரணும். நேத்து முழுவதும் அத்தை அழுதுட்டு இருந்தாங்க. சாப்பிடக் கூட இல்லை. பாவம் அவங்க." என்றான் முகிலன்.

" இல்லை. அது சரி வராது." என்றான் அபிமன்யு.

முகிலனின் முகம் மாறியது.

அண்ணனின் முக வாட்டத்தை கண்ட உத்ராவோ, " ப்ளீஸ்! நாம போகலாம். அத்தையும், அண்ணியும் வருத்தப்படுவாங்க." என்றாள்.

" நாம அங்க போகலைன்னா, உங்க அத்தையும், அண்ணியும் வருத்தப்படுவாங்க‌. நாம அங்க போனால் நீ வருத்தப்படுவ.நான் உனக்காகத்தான் வேண்டாம்னு சொன்னேன்."

"எனக்காகவா சொல்றீங்க? எனக்கு அங்க போறதுல ஒன்னும் பிரச்சனை இல்லை." என்றாள் உத்ரா.

" உனக்குத் தெரியாது. அந்த கிழவி சும்மா இருக்காது. நம்மை வருத்தப்பட வைக்கும்."

" ஐயோ! பாட்டியை தான் அப்படி சொல்றீங்களா? பெரியவங்களை அப்படி சொல்லலாமா?"

" பெரியவங்களா நடந்துக்கிட்டா, நான் ஏன் அப்படி சொல்ல போறேன்." என்று அலட்சியமாக கூறினான் அபிமன்யு.

" சரி விடுங்க. அவங்க எது சொன்னாலும் நான் வருத்தப்பட மாட்டேன். நாம அங்க போகலாம்." என்றாள் உத்ரா‌.

" அப்போ கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போகலாம். நான் மானுவுக்கு ஃபோன் பண்ணி வீட்டுக்கு வர்றோம்னு சொல்லிடுறேன்." என்ற முகிலன், மனைவிக்கு அழைத்தான்.
************************
சுபத்ராவிற்கு தலைகால் புரியவில்லை. தன்னுடைய மகன் நீண்ட வருடங்களுக்கு பிறகு வீட்டிற்கு வருவதாக கூறியிருக்க, தடபுடலாக விருந்து தயாரித்தார்.

கோவிலிலிருந்து அவர்கள் வருவதற்குள் மகனிற்கு பிடித்த உணவுகளை தன் கைப்பட செய்திருந்தார் சுபத்ரா.

சற்று நேரத்தில் அவர்கள் வர, மானசா ஆரத்தி எடுத்தாள்.

உள்ளே நுழைந்ததும் அபிமன்யுவோ தந்தையை எண்ணித் தவித்தான். உணர்ச்சிவசப்பட்டு தவித்துக் கொண்டிருந்தவனை, சுபத்ரா அணைத்து கண்ணீர் விட்டார். அபிமன்யுவின் கண்களும் கண்ணீரில் பளபளத்தது.

அதைப் பார்த்த மானசாவின் கண்களும் கலங்கியது.

" மானு வந்தவங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா." என்று அந்த சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான் முகிலன்.

வேகமாக கண்களை துடைத்த சுபத்ராவோ, " நான் போய் டீ போட்டு வருகிறேன். நான் போடுற டீ தான் என் பையனுக்கு பிடிக்கும்‌." என்று வேகமாக செல்ல.

அபிமன்யுவிற்கு லேசாக சிரிப்பு வந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் அன்னையின் கையால் தயாரித்த டீயை ரசித்து அவன் குடிக்க, ஆதுரமாக பார்த்துக் கொண்டிருந்தார் சுபத்ரா.

இவர்கள் வருவது பர்வதத்திற்கு தெரியாது. காலை உணவு முடிந்ததும் அறைக்குள் சென்று அடைந்து விட்டார். இனி மதிய உணவிற்கு தான் வெளியே வருவார். ஒரு நாடகம் விடாமல் பார்த்துக் கொண்டே, அவரது தனிமையை விரட்டினார்.

அது இவர்களுக்கு வசதியாக இருக்க, சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

சுபத்ரா," மாடியில ரூம்ல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பா."என்று அபிமன்யுவை பார்த்து கூற.

"இல்லை! நாங்க சாப்பிட்டதும் கிளம்புறோம்." என்றான் அபிமன்யு.

சுபத்ராவும், மானசாவும் பரிமாற அபிமன்யுவும், உத்ராவும் உணவருந்தினர்.

அங்கிருந்து கிளம்பும் போது திடீரென்று நினைவு வந்தவனாக, ஃபோட்டோ இருக்கும் இடத்திற்கு உத்ராவை அழைத்துச் சென்றான் அபிமன்யு.

" இந்த ஃபோட்டோவுல இருக்குறது யார் தெரியுமா?" என்று வினவ.

" தெரியும்." என்றவளுக்கு ரித்விக்கின் நினைவு வந்தது.

" அதோ அந்த பொண்ணு யார்னு தெரியுதா?" என்ற அபிமன்யுவை வியப்புடன் பார்த்தாள் உத்ரா.

" நீ தானே!" என்று அவன் கூற.

" ஹேய்! ரித்விக்கை உங்களுக்குத் தெரியும். ஆனால் என்னையும் உங்களுக்கு அடையாளம் தெரியுதா? எப்படி கண்டுப்பிடிச்சீங்க?" என்று ஒரு வேகத்தில் படபடவென வினவினாள்.

அப்போது தான் அறையிலிருந்து வெளியே வந்த பர்வதம், உத்ராவின் ஆர்ப்பட்டாத்தைப் பார்த்து முகம் சுளித்தவர், அவர்களுக்கு அருகே வந்தார்.

"அண்ணன் எப்போ சாவான்.
திண்ணை எப்போ காலி ஆகும்னு ரித்விக் எப்போ சாவான், அவன் அண்ணனை வளைச்சுப் போடலாம்னு பார்த்தீயா?" என்று வார்த்தைகளை விஷம் தோய்த்து கொட்டினார்.

அதைக் கேட்டதும் முகம் வெளுக்க தள்ளாடினாள் உத்ரா.

தடுமாறியவளை அணைத்துப் பிடித்தவன் ஏதோ கூறுவதற்குள், " அத்தை! உத்ராவை ஏதாவது பேசுனீங்க, அவ்வளவு தான்." என்றாள் சுபத்ரா.

" வாடியம்மா! உன் மருமகளை சொன்னதும் உனக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வருதா? நான் ஒன்னும் தப்பா சொல்லலையே. என் பேரன் இல்லைன்னதும், உடனே இங்கே வந்து ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க. நீயும் பார்த்து ரசிச்சுக்கிட்டு இருக்க." என்று சுபத்ராவிடம் மல்லுக்கட்டினார்.

" ஏ கிழவி! இது என் வீடு. நான் எப்ப வேணாலும் வருவேன். முதலில் உன்னை தொரத்தனும்." என்றான் அபிமன்யு.

"அடிங்க! என் மகன், எனக்கு அப்புறம் தான் உனக்கு இந்த வீடுன்னு சொல்லி வச்சிருக்கான். அதனால நான் சாகற வரைக்கும் உன் ஆட்டத்தை அடக்கி வாசி." என்றார் சுபத்ரா.

முகிலன் ஏதோ சொல்ல வர, மானசா அவனது கைகளைப் பிடித்து தடுத்தவள், கண்களால் கெஞ்சினாள்.

அவளை முறைத்த முகிலன், அமைதியாக இருக்க முயன்றான்.

" ஏய் கிழவி! என் பொண்டாட்டியை ஏதாவது சொன்னால் நான் சும்மா இருக்க மாட்டேன். இன்னொரு முறை பேசு, உன்னை போட்டுத் தள்ளிட்டு நான் நிம்மதியா இருப்பேன்." என்று கை நீட்டி எச்சரிக்க.

அவனது ஆக்ரோஷத்தில் வாயடைத்துப் போனார் பர்வதம்.

அழுதுக் கொண்டிருந்த உத்ராவின் கண்ணீரைத் துடைத்தவன், " இதுக்கு தான் இங்க வர மாட்டேன்னு சொன்னேன். கேட்டீயா." என்றவன், சுபத்ராவிடம், " அம்மா! இப்பவாவது தைரியம் வந்துடுச்சே. பரவாயில்லை… அப்புறம் உங்களுக்கு என்னை பார்க்கணும்னு தோனுனா, நான் இருக்குற இடத்துக்கு வாங்க. சீக்கிரம் வீடு வாங்கிடுவேன். நான் கிளம்புறேன்." என்றான் அபிமன்யு.

நீண்ட வருடங்களுக்கு பிறகு அபிமன்யுவின் வாயிலிருந்து அம்மா என்ற வார்த்தையை கேட்டதும் சுபத்ரா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

முகிலன், " மானு! அத்தையை பார்த்துக்கோ. நான் இவங்களை விட்டுட்டு வர்றேன்." என்றான்.

" இல்லை முகில்! நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. நான் உத்ராவை பத்திரமா பார்த்துக்கிறேன். அப்புறம் பார்க்கலாம்." என்றவன், தன் கை வளைவில் அணைத்தவாறே அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

அவர்களது அறைக்கு வரும் வரை மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் உத்ரா.

"எதுக்கு இப்படி அழற உதி? பேசுறவங்க! எப்படி வேணும்னாலும் பேசிட்டு தான் இருப்பாங்க. இதுக்கெல்லாம் நம்ம கவலைப்பட்டுக் கொண்டிருந்த நம்ம வாழ்க்கையை வாழ முடியாது."

" அபி!" என்றவள், ஏதோ சொல்ல வர முயன்றாள், ஆனால் வார்த்தைகள் வெளிவராமல் கண்ணீர் வழிந்தது.

" முதல்ல உட்காரு உதி!" என்றவன், தண்ணீர் க்ளாஸை நீட்டினான்.

அவன் முகத்திலோ புன்னகை. ஆம் அவள் அபி என்றழைத்து, அவனது வறண்ட வாழ்க்கையில் மழைத்துளியாக குளிர்வித்தாள்.

தண்ணீர் குடித்ததும் உத்ராவின் அழுகை மட்டுப்பட்டது.

" சரி இப்போ சொல்லு உதி?" என்றான்.

" ஏன் அபி? இந்த சமூகம் இப்படி இருக்கு?
ஒரு பொண்ணு இறந்துட்டா, அந்த பையன் உடனே கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா அதே மாதிரி ஆண் இறந்துட்டா, அந்த பொண்ணு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாதா?"

" நீ சமூகம்னு யாரை நினைக்கிற உதி? நம்மை சுற்றி உள்ள நாலுபேரையா? அவங்க எல்லோரும் ஒரே மனசா இருக்க மாட்டாங்க. நாலுபேர் சப்போர்ட் பண்ணுவாங்க. நாலு பேர் எதிர்ப்பாங்க. அவங்களை எல்லாம் நம்ம கன்ஸிடரே பண்ணக் கூடாது."

" இருந்தாலும் பாட்டி சொன்னதை என்னாலே ஜீரணிக்க முடியலை. நான் போய் ரித்வி எப்போ சாவார்னு காத்திருந்தேன்னு சொல்ல அவங்களுக்கு எப்படி மனசு வருது. நான் ரித்விக்கை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலை. வீட்ல பார்த்த வரன் தான். ஆனால் எனக்கும் கனவுகள் இருக்கும், ஆசைகள் இருக்கும், எதிர்ப்பார்ப்புகள் இருக்கும். அது ஒன்னுக் கூட நிறைவேறாமல், நிராசையா போயிடுச்சு. என் மனசு என்ன பாடுபடும்னு அவங்க நினைச்சுக் கூட பார்க்கலையே. நாங்க ரெண்டு பேரும் வாழக் கூட ஆரம்பிக்கலை. அது எல்லோருக்கும் தெரியும். அப்படியிருந்தும் இப்படி சொல்லிட்டாங்களே. நான் ஏற்கனவே…" என்றவள் ஒன்றும் கூறாமல் அழ ஆரம்பித்தாள்.

" என்ன உதி? என்ன சொல்ல வந்த? ஏன் பாதியிலே நிறுத்திட்ட? இன்னும் உன் மனசுல எதுவும் குழப்பமிருக்கா? சொல்லு…" என்று ஆழ்ந்து அவளைப் பார்த்தான் அபிமன்யு. அவனது மருத்துவ மூளை அவளை ஆராய சொன்னது.

உத்ராவோ, " அது வந்து… நீங்களும் அவங்க பேரன் தானே. ஆனால் ஏன் அவங்க உங்க மேல இவ்வளவு கோபமா இருக்காங்க. உங்க தம்பி மேல மட்டும் ஏன் இவ்வளவு பிரியம்?" என்று வினவினாள்.

" நீ கேட்ட கேள்விக்கு எனக்கே பதில் தெரியலை. சின்ன பிள்ளையில என் மேல தான் ரொம்ப பிரியமா இருந்ததா அப்பா சொல்லி இருக்காங்க. எனக்கும் லேசா நினைவு இருக்கு. ஆனா பெரியப்பா, பெரியம்மா இறந்ததற்கு பிறகு தான் தம்பி மேல பிரியமா இருக்க ஆரம்பிச்சாங்க."

" என்ன சொல்றீங்க அபி. எனக்கு ஒன்னும் புரியலையே."

" ரித்விக் என் கூட பொறந்த தம்பி இல்லை. பெரியப்பா பையன்." என்றவன் பழைய விஷயங்களை கூறினான் .

" என்னால நம்பவே முடியலை." என்றாள் உத்ரா.

" எங்க வீட்டிலேயே யாரும் என்னை நம்ப மாட்டாங்க. அவங்க எல்லாருக்கும் ரித்விக் நல்லவன். ஆனா எனக்கு மட்டும் தான் அவன் கெட்டவன். எனக்கு பிடித்தது எதையும் நான் வச்சிருக்க கூடாது. அதை எப்படியாவது வீணாக்கிடுவான்.

சின்ன, சின்ன விளையாட்டு பொருளிலிருந்து நான் சாப்பிட ஆசைப்படுற உணவு வரைக்கும், ஏன் என் அப்பா, அம்மா என் கூட பிறந்த தங்கச்சி வரைக்கும் எல்லாமே என்கிட்ட இருந்து பிடுங்கிட்டான். இதெல்லாம் கூட மன்னிச்சிருவேன். ஆனால் உன்னை விரும்புவது தெரிஞ்சு, உன்னை என்கிட்டே இருந்து பிரிச்சுட்டான்.

நீ எனக்கு திரும்ப கிடைச்சது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா, என் வறண்டு போன வாழ்க்கையில் ஒளிரும் வானவில் நீ. இன்னைக்கு மட்டும் இல்ல சின்ன வயசுலயும் நீ என் வாழ்க்கையில் வந்து சந்தோஷத்தை மலர செய்த."

" நான் உங்களை சின்ன வயசுல பார்த்திருக்கேனா?" என்று புரியாமல் வினவினாள் உத்ரா.

" வீட்ல நீயும், ரித்விக்கும்னு சொல்லி ஒரு போட்டோ காண்பிச்சியே. அதுல இருக்குறது நான் தான்."

" இல்லை! அது ரித்விக் தான். அவர் கூட இருக்கிறது நான் தான்னு ஹனிமூன் போகும் போது கார்ல சொன்னேன். அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டார் தெரியுமா? அப்பவே நம்ம ஜோடி சேர்ந்துட்டோம். உனக்கு நான், எனக்கு நீ இதை யாராலும் தடுக்க முடியாதுன்னு சொன்னார்."

" உதி! அது ரித்விக் இல்லை நான் தான். என் முக ஜாடையும், அவனதும் கிட்டத்தட்ட ஒரு மாதிரி தான் இருக்கும். ஆனால் இந்த ஃபோட்டோ எடுத்தப்ப ரோஸ்கார்டனுக்கு அவன் வரவே இல்லை. எப்பவும் போல என் பர்த்டேக்காக செய்த கேக்கை ஸ்பாயில் பண்ணிட்டான். அப்புறம் லாஸ்ட் மினிட்ஸ்ல ஏதோ ஒரு கேக் வாங்கிட்டு வந்து வெட்டினோம்.

ஆனால் எனக்கு பிறந்த நாள் கொண்டாடுற மூடே இல்லை
ரொம்ப அப்செட்டா இருந்தேன். கேக் வெட்டினதும், எங்க டாட் எனக்கு ஊட்ட முயன்றார். எனக்கு அதை சாப்பிட விருப்பம் இல்லை. எங்கிருந்தோ வந்த நீ அதை வாங்கிக்கிட்ட, அதை பார்த்ததும் எங்களுக்கு எல்லாம் சிரிப்பு வந்தது.

உங்கம்மா உன்ன திட்டினாங்க. எங்க கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னாங்க. ஆனால் நீயோ எதுக்கு சாரி கேட்கணும். பர்த்டே தானே அவங்க எப்படியும் கேக் கொடுப்பாங்கன்னு நீ வாதாடுன. அப்புறம் உன் கையால எனக்கு ஊட்டி விட்ட. இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கோ, இல்லையோ என் மனசுல ஆழமா பதிஞ்சுட்ட. உன்னை இரண்டாவது முறை பார்க்கும் போது, எங்கோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சப்ப தான், உன் ஞாபகம் வந்தது."

" அம்மா சொல்லியிருக்காங்க. ஆனால் ரித்விக் கிட்ட கேட்டப்போ, சின்னப்பிள்ளை தானே மறந்துட்டேன்னு சொன்னார்." என்றவளது குரல் மெலிந்து ஒலித்தது.

" பார்த்தியா? அவன் ஏமாத்தியிருக்கான். அவன் நல்லவன் கிடையாது. இப்பாவது ஒத்துக்கிறீயா " என்று உத்ராவை பார்த்து வினவினான் அபிமன்யு.

"இல்லை! என்னால அவரை தப்பா நினைக்க முடியாது. எனக்கு அவர் நல்லது தான் செய்து இருக்கிறார்." என்று அழுதுக் கொண்டே கூறினாள் உத்ரா.