• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-6

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில்-6

ரித்விக், மானசா, மற்றும் சுபத்ரா இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க. அவர்கள் பேச்சில் தலையிடாமல் அமைதியாக இருந்த முகிலனின் மனதிற்குள், 'யார் அந்த அபி அண்ணன்?' என்ற கேள்வி ஓடிக் கொண்டிருந்தது. மானசாவிடம் விசாரிக்க நினைத்திருந்தவனது கருத்தில் பிறகு தான் ரித்விக் கூறியது முழுமையாக புரிந்தது.

அதிர்ச்சியாக ரித்விக்கை பார்த்தவனோ,"மச்சான்! எங்க குலத்தெய்வக் கோவிலுக்கு போகணுமே." என.

" மறுவீட்டு சடங்கு தான் இல்லையேன்னு நினைச்சேன். பட் உங்க கோவிலுக்கு போகணுங்கறதை மறந்துட்டேன். உதி வேற ஃப்ரீ வெட்டிங் ஷூட் எடுக்கணும்னு ஆசைப்பட்டா, அப்போ டைம் இல்லன்னு இப்ப போஸ்ட்வெட்டிங் ஷூட் எடுத்துக்கலாம்னு தான் ப்ளான் போட்டேன். உதிகிட்டையும் சொன்னேன். அவளுக்கு ரொம்ப சந்தோஷம்." என்றவனோ உத்ராவை பார்த்தான். உத்ராவோ அவன் கூறியதைக் கேட்டு திகைத்தாள்.

தங்கையின் முகத்தை யோசனையாக பார்த்த முகிலன்,
" கோவிலுக்கு போனதுக்கப்புறம் நீங்க எங்க வேணும்னாலும் போங்க." என்றான்.

" முகிலன்! நான் ப்ளான் போட்டதை என்னால மாத்த முடியாது. நீங்க முதல்ல உங்க குலத்தெய்வக் கோவிலுக்கு போய்ட்டு வாங்க. நானும், உதியும் அப்புறம் போகிறோம்." என்றவன் எழுந்து அவனது அறைக்குச் சென்று விட்டான்.

" மாப்பிள்ளை! " என்று சுபத்ரா ஏதோ கூற வர, அதைக் கேட்பதற்கு முகிலன் அங்கில்லை. ரித்விக்கின் பேச்சு அவனைக் காயப்படுத்த, அவனும் அங்கிருந்து கோபமாக அறைக்குச் சென்று விட்டான்.

மானசாவும், உத்ராவும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க, பர்வதமோ," வந்ததும், வராததுமா என்ன சொக்குப்பொடி போட்டீயோ தெரியலைடிமா. என் பேரன் என் கிட்ட சொல்லாமல் எதுவும் செய்ய மாட்டான். அவன் பாட்டுக்கு நாளைக்கு கேரளா போறேன்னு இப்ப வந்து சொல்றான். எது இப்போ முக்கியம்? கோவிலுக்கு போறதா, இல்லை ஃபோட்டோ எடுத்துட்டு திரியுறதா… என்னமோ போங்க…" என்று உத்ராவைப் பார்த்து புலம்பியவர், அவரது அறைக்குச் சென்று விட்டார்.

அவர் பேசியதைக் கேட்ட உத்ராவோ விழி பிதுங்கி நின்றாள்.

"உத்ரா! அவங்க வயசானவங்க ஏதோ சொல்லிட்டு போகட்டும். நீ எதுவும் நினைச்சுக்காதே. இப்படியெல்லாம் ஆசைப்படுறது ஒன்னும் தப்பு கிடையாது." என்று சமாதானம் செய்தாள் சுபத்ரா.

"அத்தை ! நான் எதுவும் சொல்லல." என்ற உத்ராவின் பதிலை காதிலே வாங்காமல், " சரி போய் இரண்டு பேரும் படுங்க." என்று மகளையும், மருமகளையும் அனுப்பி வைத்தார்.
' ஓ மை கடவுளே! நான் எதுவும் சொல்லலைன்னு சொன்னா கூட யாரும் காதுக் குடுத்து கேட்க மாட்டேங்குறாங்களே! இவங்களா என் மேல குறை சொல்லி, திட்டிட்டு சமாதானம் வேற செய்றாங்க. எங்கேயாவது போய் முட்டிக்கலாம் போல இருக்கு.' என்று தனக்குள் புலம்பிக் கொண்டே சென்றாள்.
******************
மானசாவோ நேற்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்திருக்க, முகிலனோ அதற்கு வாய்ப்பளிக்காமல் அவளது கோபத்திற்கு தூபம் போட்டான்.

அறைக்குள் சென்ற மானசா,"முகில்!" என்று அழைக்க.

அவனோ அவளைப் பார்த்து முறைத்தான்.

" ஏன் முகில்? கோபமா இருக்கீயா?" என்று அவளது தோளில் கை வைத்து வினவினாள் மானசா.

" இல்லை குளுகுளுன்னு இருக்கேன்."என்றவன் அவளது கையைத் தட்டி விட்டான்.

" முகில் ! என்னாச்சு? ஏன் கோபப்படுற? என்ன விஷயம்? சொன்னா தானே தெரியும்."என்றவளுக்கும் இப்போது பொறுமை பறந்தது.

"உன் அண்ணன் சொன்னப்ப நீயும் தானே இருந்தே. உனக்கு தெரியாதா?"

" அண்ணன் நாளைக்கே ஹனிமூனுக்கு போறேன்னு சொன்னாங்க. ஏன் உங்களுக்கும் நாளைக்கே போகணுமா? நம்ம நெக்ஸ்ட் வீக் காஷ்மீருக்கே போகலாமே." என்றாள் மெல்லிய புன்னகையுடன்…

" ஓ! உன் அண்ணன் ஹனிமூனுக்கு கிளம்புறேன்னு சொன்னது மட்டும் தான் உனக்கு தெரிஞ்சதா? மறுவீட்டுக்கு போற வேலை இல்லன்னு, எங்களுக்கு வீடு இல்லாததை சொல்லிக் குத்தி காண்பிச்சதெல்லாம் உனக்குத் தெரியலையா?"

" எங்க அண்ணன் சாதாரணமா தான் சொன்னாங்க. நீங்க தப்பா எடுத்துக்கிட்டா, அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது."

" சரி நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு வச்சுக்கோ. அப்புறம் ஏன் எங்க குலதெய்வ கோவிலுக்கு வரலைன்னு சொன்னார்?" என்று மனைவியைப் பார்த்து கோபமாக வினவினான் முகிலன்.

" எங்க அண்ணன் சொன்னதை முழுசா கவனிச்சிருந்தாலே தெரிஞ்சிருக்கும். உங்க தங்கச்சியோட ப்ளான் தான்
கேரளா போஸ்ட் வெட்டிங் ஷூட்." என்றவளது கேலியில், உணர்ச்சிகளற்று பார்த்தான் முகிலன்.

"......"

" உங்க தங்கச்சிய சொன்னதும் என்ன சைலண்ட் ஆகிட்டீங்க." என்று விடாமல் மானசா பேச.

" என் தங்கைக்கும் இப்போ தான் விஷயம் தெரியும்." என்று அழுத்தமாக கூறினான்.

" ஓ காட்! நீங்களும் எல்லோரையும் போல சராசரி ஆளு தானா. உங்க தங்கச்சின்னதும் இப்படி சப்போர்ட் பண்றீங்க. எங்க அண்ணன் சொல்லும் போது அங்க தானே உங்க தங்கச்சியும் இருந்தாங்க. அவங்க எதுவும் எங்க அண்ணன் பேச்சுக்கு மறுப்பு சொன்னாங்களா!" என்று வினவ.

" நீயும் தான் எல்லோரையும் போல சராசரி பொண்ணுன்னு நிரூபிச்சுட்ட, கல்யாணம் ஆனவுடனே நாத்தனார் மேல இவ்வளவு காழ்ப்புணர்ச்சி. உன் அண்ணன் பொய் சொல்லியிருக்கார். அதைக் கேட்டதும் என் தங்கச்சி அதிர்ச்சியா நின்னா." என்று முகிலனும், பதிலுக்கு அவனது மனைவியை காயப்படுத்தினான்.

" அப்போ எங்க அண்ணன் பொய் சொல்றாங்கன்னு சொல்றீங்களா?" என்றவளது குரல் கம்ம.

" அதெல்லாம் எனக்குத் தெரியாது‌. என் தங்கைக்கும் இது அதிர்ச்சியான விஷயம். எனக்கு, என் தங்கச்சியும், அவளுக்கு நானும் தான் உறவு. எங்க இருவருக்கும் எங்க குலதெய்வக்கோவில் முக்கியம். அது தான் பிறந்த வீடு மாதிரி. எங்க இருவருக்கும் இருக்கிற உறவு அந்த கோவில் தான். அதை நாங்க என்னைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்." என்று உணர்ச்சிகளற்ற குரலில் கூற.

" முகில்! அப்போ நான் யாரு?" என்றவள் விழி நீர் வழிய வினவ.

" அந்த கேள்விக்கு நீ தான் பதில் சொல்லணும்." என்றவன் விளக்கை நிறுத்தி விட்டு படுக்கையில் விழுந்தான்.

அருகில் இருந்த மானசாவிற்கோ, இருவருக்கும் இடையில் இடைவெளி பெரியதாக இருப்பதாக தோன்றியது.
காத்திருந்து கைக்கூடிய காதல் திருமணம். ஆனால் அந்த சந்தோஷம் மனதில் துளி கூட இல்லை. திருமணம் முடிந்து முகிலுடன் சண்டை போடுவாள் என்று அவள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மானசா.
***********************
அறைக்குள் நுழைந்த உத்ராவின் பார்வையோ ரித்விக்கையே வட்டமிட்டது. அவளுக்கு அவனிடம் கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருந்தது.

ரித்விக்கோ அவளைப் பார்த்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்து ஃப்ரெஷ்ஷப் செய்துக் கொண்டு வந்தான்.

டவலால் முகத்தை துடைத்தவன், "என்ன இன்னைக்கு பால் கொண்டு வரலையா?" என்று புன்சிரிப்புடன் வினவ.

"அச்சோ! மறந்துட்டேன். இப்போ போய் எடுத்துட்டு வரவா?" என்றாள் உத்ரா.

"அதெல்லாம் ஒன்னும் வேணாம். பட் உனக்கு என்ன தெரியணும். எதுக்கு என்னையே பார்த்துக்கிட்டு இருக்க? அதுவும் பாத்ரூம் போனாலும் விடாமல் பார்த்துட்டு இருக்க? நான் அவ்வளவு அழகாவா இருக்கேன்." என்று குறும்பாக அவளைப் பார்த்து வினவினான்.

" ஐயோ! ரொம்பத்தான்…" என்று நொடித்தவள், ரித்விக்கைப் பார்க்க.

அவனோ சிரித்துக் கொண்டிருந்தான். அவனது கர்வப் புன்னகையை, அவளை உசுப்பேற்றியது. பேச வந்த விஷயம் புத்தியில் உரைக்க, கிண்டல், கேலி என்று ரித்விக் அவளை பேச விடாமல் செய்தததைக் கண்டு கொண்டவள், வெட்டி பேச்சிற்கு இடமளிக்காமல் விஷயத்திற்கு நேரடியாக வந்தாள்.

"ரித்விக்! முக்கியமான விஷயம். முதல்ல நான் கேட்டுறேன். அப்புறமா மத்ததை பேசலாம்‌." என்று அவசரமாக கூறினாள் உத்ரா.

" பேசக் கூடாது
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம்
ஹோய்
ஏதும் இல்லை
வேகம் இல்லை
லீலைகள் காண்போமே!" என்று மெல்லிய குரலில் பாடிக் கொண்டே அவளருகே வந்தான் ரித்விக்.

அவனது எண்ணத்தை புரிந்துக் கொண்ட உத்ராவோ லாவகமாக விலகியபடியே," ஏன் பொய் சொன்னீங்க ரித்விக். இப்போ எதுக்கு என்னை டைவர்ட் பண்றீங்க? " என்ற கேள்வி கணையை அவன் முன் வைத்தாள்.

" பொய்யா? நான் எதுவும் சொல்லை. அப்புறம் நான் என்ன டைவர்ட் பண்ணேன்? நேத்து தான் கல்யாணம் ஆனவன் பொண்டாட்டியை பார்த்து பாட்டுக் கூட பாடக்கூடாதா?" என்று அப்பாவியாக வினவினான்.

" கேரளா ஃபோட்டோ ஷுட் பத்தி என் கிட்ட சொன்னீங்களா? இல்லை தானே! அப்புறம் ஏன் எல்லோருக்கும் முன்னாடி அப்படி சொன்னீங்க. நீங்க என் கிட்ட சொல்லியிருந்தா, எங்க குலத்தெய்வக் கோவிலுக்கு போகணும்குறதை நான் சொல்லி இருப்பேன். இப்போ பாருங்க அத்தை, அண்ணி, பாட்டி எல்லோரும் என்னை தான் தப்பா நினைக்கிறாங்க." என்று கலங்கிய குரலில் கூறினாள்.

" ஹேய் உதி! இப்போ எதுக்கு கண்கலங்குற? அவங்க ஏதாவது நினைச்சா நினைச்சுட்டு போகட்டும். நான் உங்க அண்ணன் வாயை மூடுறதுக்காகத் தான் உன் பெயரை யூஸ் பண்ணேன். ஆனால் ஹனிமூனுக்கு போகும் போது ஃபோட்டோ ஷுட் எடுக்கலாம்னு உன் கிட்ட ரிஷப்ஷனப்பவே சொன்னேனே."

" சொன்னீங்க. ஆனால் உடனே கூட்டிட்டு போவீங்கன்னு நினைக்கலை." என்றவளது குரலில் குழப்பம் மிகுந்திருந்தது.

" இப்போ என்னாச்சு? ஏன் இந்தளவுக்கு குழப்பிக்குற? உனக்கு இந்த மாதிரி வெட்டிங் ஷூட் எடுக்கணும்னு ஆசை தானே." என்று அவளது தோளில் கைப் போட்டப்படி வினவினான்.

" ஆமாம். ஆனால்…" என்றவளது முகமோ ஆசையும், கலக்கமும் போட்டிப் போட.

" அப்புறம் என்ன உதி?"

" குலத்தெய்வக் கோவிலுக்கு போய்ட்டு அப்புறம் போயிருக்கலாம். இப்போ எல்லோரும் என்னை தான் தப்பா நினைப்பாங்க." என்றாள்

" உதி! இது நான் உனக்காக ஆசையா ஏற்பாடு பண்ணது. கேரளாலாவுல இருந்து வந்ததும் நாம கோவிலுக்கு போகலாம் சரியா? அப்புறம் யாரை பத்தியும் நீ கவலைப்படாதே! என்னைத் தாண்டி தான் யாரா இருந்தாலும் உன் கிட்ட வருவாங்க. நான் இருக்கற வரைக்கும் பயப்படாதே. புரியுதா?" என்று அவன் வினவ.

" ம்." என்றவளோ, அவனது பேச்சில் மயங்கியிருந்தாள்.

" அப்போ சரி! நீ நம்ம ட்ரிப்புக்கு தேவையான ட்ரெஸ்ஸஸை பேக் பண்ணுவியாம். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு நான் வந்துடுவேணாம்." என்றவன் அவனது அலுவலக அறைக்குச் சென்று கேரளாவுக்கு செல்வதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான். இந்த ஏற்பாடு முன்பே செய்தது அல்ல. அவனுக்கு காஷ்மீருக்கு போவதற்கு பிடிக்கவில்லை. அதை சொல்லாமல் கேரளா ஃபோட்டோ ஷுட் என்று உத்ராவை அழைத்துச் சென்று விட்டு, அப்படியே டூரை எக்ஸ்டெண்ட் பண்ண வேண்டும் என்று மட்டும் எண்ணி இருந்தான்.

விதி யாரை விட்டது. ரித்விக்கின் விதி அவனாலே எழுதப்பட்டது.

ரித்விக் அவனது நண்பன் நிதினுக்கு அழைத்தான்.

" ஹாய் புது மாப்பிள்ளை! என்ன இந்த நேரத்தில கால் பண்ணியிருக்க. பிஸியா இருப்பேன்னு பார்த்தேன்." என்று நமட்டு புன்னகையுடன் வினவ.

" அடங்கு நிதின்! நான் இப்போ பிஸி தான். ஆனால் சார் எப்பவும் பிஸியா தானே இருப்ப. நீ ஃபோனை அட்டெண்ட் பண்றது தான் ஆச்சரியம்." என்று ரித்விக்கும் நண்பனை கேலி பண்ண.

" விடு மச்சி! எப்பவாவது ஃபோனை எடுக்காமல் விட்டதுக்கு இப்படியே சொல்லிக் கிட்டே இருப்ப."

" எப்பவாவது தான் எடுப்ப. இன்னைக்கு என் நல்ல நேரம் எடுத்துட்ட."

" டேய் நல்லவனே! சரி டா நான் தான் ஃபோன் எடுக்க மாட்டேன். அதை சொல்றதுக்கு தான் போன் பண்ணீயா?" என்று கடுப்புடன் நிதின் வினவ.

" டேய் மச்சி! கூல் டா. எனக்கு ஒரு ஹெல்ஃப். நாளைக்கு நான் கேரளாலாவுல ஃபோட்டோ ஷுட் எடுக்கப் போறேன். அங்க தங்கறதுக்கு இடம், ஃபோட்டோ கிராஃபர். லொகேஷன் எல்லாம் ஏற்பாடு பண்ணணும். நான் அங்க ரீச்சாகுறதுக்குள்ள எல்லா ஏற்பாடும் பக்கவா இருக்கணும்
உன்னால முடியுமா?"

" டேய் ரித்வி! இதெல்லாம் ஒரு உதவியா? இதுல முடியுமான்னு வேற கேட்குற? உனக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போறேன். கேரளா தான் என்னோட நேட்டிவ். எனக்கு தெரியாத ஆளா? இல்லை இடமா? நீங்க ஃபோட்டோ எடுக்கும் போது யாருடைய குறுக்கிடும் இல்லாததுப் போல சூப்பரான ப்ளேஸ்ஸை சூஸ் பண்றேன். யூ டோண்ட் வொர்ரி. நாளைக்கு நீ கேரளாவுல கால் வைக்கும் போதே உன்னை ரிசீவ் பண்ண நான் வந்துடுவேன்."

" தேங்ஸ்டா மச்சி. நாளைக்கு நேர்ல மீட் பண்ணலாம். பைடா! " என்று போனை வைத்த ரித்விக்கோ,' உதி நாம சொன்னதைக் கேட்டு சமாதானம் ஆகிருப்பா.இன்னேரம் லக்கேஜ்ஜை பேக் பண்ணிட்டு, ஆனந்த சயனத்தில் இருந்தாலும் ஆச்
சரியப்படுவதற்கில்லை.' என்று எண்ணிக் கொண்டே அவனது அறைக்குச் சென்றவனுக்கு ஆனந்த அதிர்ச்சியை பரிசளித்தாள் உத்ரா.