• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வானவில் 🌈-7

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வானவில் - 7

உத்ரா இந்நேரம் உறங்கி இருப்பாள் என்று ரித்விக் நினைத்திருக்க, அவளோ மெத்தை முழுவதும் துணிகளைப் போட்டு வைத்து அதற்கு நடுவில் அமர்ந்து தீவிரமாக கண் மூடி யோசித்துக் கொண்டிருந்தாள்.

" ஹேய்! என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அதிர்ச்சியாக வினவினான் ரித்விக்.

" வந்துட்டீங்களா… இங்கே வந்து உட்காருங்க ரித்தி, எனக்கு ஒரு ஹெல்ஃப்."

" ம்… இங்கே எங்க இடமிருக்கு உட்கார? கஃபோர்டையே காலி பண்ணி இங்கே வச்சிருக்க." என்றவாறே அவளருகே இருந்த துணிகளை விரல்களால் நகர்த்தி வைத்தான்.

" கிண்டல் பண்ணாதீங்க ரித்தி!"

" நான் கிண்டல் பண்றேனா? எல்லாம் என் நேரம். சரி எதுக்கு என்னைக் கூப்பிட்ட?"

"அது வந்து ரித்தி, ஃபோட்டோ ஷுட்டுக்கு நம்ம ரெண்டு பேரும் ஒரே கலர்ல ட்ரெஸ்போட்டா நல்லா இருக்கும்‌. அப்புறம் அங்க இருக்குற நேச்சருக்கு தகுந்த மாதிரியும் இருக்கணும். அதான் எதை போடலாம்னு யோசிட்டு இருந்தேன். எனக்கு குழப்பமாவே இருக்கு. நீங்க ஹெல்ஃப் பண்ணுங்க. ப்ளீஸ்!" என்று தனது தலையாய கவலையை பகிர்ந்துக் கொண்டாள்.

" நானா? எனக்கு அதெல்லாம் தெரியாது." என்று ரித்விக் வேகமாக கூறினான்.

அவனது பதிலில் உத்ராவின் முகம் சுருங்கி போனது.

" ப்ச்! அதுக்குள்ள உன் முகம் ஏன் டல்லடிக்குது. எனக்கு தான் இதெல்லாம் தெரியாது. பட் ஃபேஷன் டிசைனர அரேஞ்ச் பண்ணிடுறேன். அவங்களே அந்த இடத்துக்கு ஏத்த மாதிரி காஸ்ட்யூம் ரெடி பண்ணிடுவாங்க. உன் சைஸ் தான் எனக்குத் தெரியுமே. நான் ஏற்பாடு பண்ணிடுறேன்." என்று காஷூவலாக கூற.

உத்ராவின் முகம் தான் சிவந்தது.

அவளிடம் இருந்து பதில் வராமல் போக, நிமிர்ந்து பார்த்த ரித்விக், அவளது வெட்கத்தை கண்டு திகைத்து தான் போனான். ' என்ன இவ பார்க்க, பார்க்க அழகா தெரியுறாலே! இப்போ எதுக்கு இப்படி வெட்கப்படுறா.' என்று எண்ணியவனுக்கு அப்போதுதான் தான் கூறிய வார்த்தையின் அர்த்தம் அனர்த்தமாகியதை புரிந்துக் கொண்டவன், சிரித்துக் கொண்டே அவளது தலையில் லேசாக தட்டினான்.

" ஹேய் உதி! மேரஜ் ட்ரெஸ்ஸுக்காக உன் சைஸ் பத்தி மானசா கிட்ட தெரிஞ்சுக்கிட்டேன். நீ பாட்டுக்கும் என்னை தப்பா நினைச்சுக்காதே."

"இல்லை ." என்பது போல் தலையசைத்தாள் உத்ரா.

" அப்போ சரி! நான் போய் நமக்கான ட்ரெஸ்ஸை அரேஞ்ச் பண்ண ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன். நீ அதுக்குள்ள பெட்டை க்ளீன் பண்ணு. இல்லை எனக்கு இருக்குற அலுப்புக்கு நான் இந்த ரூமை விட்டு ஹால்ல போய் படுத்துடுவேன். அப்புறம் எங்க பாட்டி பார்த்துட்டா அவ்வளவு தான், கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே என் பேரனை வெளியே தள்ளிட்டேன்னு சண்டைக்கு வந்துடுவாங்க." என்று கிண்டலாக கூற.

" ஓ! நோ! ரித்தி. ஐயம் ஏ குட் கேர்ள். நீங்க வர்றதுக்குள்ள க்ளீன் பண்ணிடுறேன். என்னை பாட்டிக் கிட்ட மாட்டி விட்டுடாதீங்க." என்றவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றான்.

தனக்காக இந்த இரவு நேரத்தில், தன்னுடைய அசதியையும் பொருட்படுத்தாமல் ட்ரெஸ் ஏற்பாடு செய்ய சென்றவனது செயலை மனதிற்குள் பத்திரப்படுத்தியவள், எல்லாவற்றையும் வேகமாக எடுத்து வைத்து விட்டு அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள்.

நித்திரை அவளையும் மீறி ஆட்கொள்ள புன்னகையுடன் உறங்கிவிட்டாள்.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஒரு வழியாக அறைக்கு வந்த ரித்திக் பார்த்தென்னவோ உறங்கிக் கொண்டிருந்த உத்ராவை தான்.

' இந்த உத்ரா பார்க்க பார்க்க அழகா தெரியுறா. இந்த கள்ளமில்லா வெட்க சிரிப்பு அவளுக்கு அழகா தான் இருக்கு. இவ என் மேல பிரியமா இருக்குறதும் நல்லா தான் இருக்கு. இவளது அன்பு எப்பவும் எனக்கு கிடைக்குமா? ஒரு வேளை அபிமன்யு எங்களுக்கு நடுவே வருவானோ!' என்று எண்ணிய ரித்விக், "நோ அவன் என்னைக்கும் எங்களுக்கு நடுவே வரக் கூடாது. உத்ராவோட அன்பு, காதல் முழுமையும் எனக்கு மட்டும் தான். எங்களைப் பார்த்து அவன் வாழ்நாள் முழுக்க பரிதவிக்கணும். நானும், அவனும் ஒரே வீட்டில் தானே பிறந்தோம். எல்லாம் அவனுக்கு மட்டும் கிடைக்குதே! பட் உத்ரா விஷயத்தில் கடந்த காலத்திலும் அவனில்லை. நிகழ்காலத்திலும் அவன் கிடையாது. அவன் நிழல் கூட உத்ரா மீது படக்கூடாது." என்று வாய்விட்டு கூறியவனுக்கு ஒன்று தெரியவில்லை.

அபிமன்யு உத்ராவின் கடந்த காலத்திலும் இருந்தான். நிகழ்காலத்திலும் இருக்கப் போகிறான். ஏன் வரும் காலம் முழுவதும் அவன் வசம் தான் அவள். இது விதியின் சதியா, இல்லை ரித்விக்கின் துர் எண்ணத்திற்கான தண்டனையோ! தெரியவில்லை.

ரித்விக் அபிமன்யுவை நினைத்துக் கொண்டே இனிய இரவுகளை இழந்திருக்க. இனி அவனுக்கு உத்ரா எட்டாக்கனியே

**********************************

கையை நெட்டி முறித்துக் கண் விழித்த உத்ரா பார்த்தது என்னவோ, கேஷுவல் உடையில் தயாராகி நின்ற ரித்விக்கை தான்.

" ஓ காட். மணி என்ன? டைமாயிடுச்சுன்னா என்னை எழுப்பி இருக்கலாமே." என்றவள் வேகமாக பதறி எழ.

" ஹேய் ரிலாக்ஸ் உதி! எதுக்கு இவ்வளவு டென்ஷன்." என்ற ரித்விக் மென்மையாக புன்னகைத்தான்.

" காலையில் நேரத்தோட கிளம்பணும்னு சொன்னீங்களே. நான் அலராம் வச்சேன். பட் நிறுத்திட்டு தூங்கிட்டேன் போல. ட்வென்டி மினிட்ஸ்ல கிளம்பிடுறேன் சாரி ரித்தி." என்றவாறே போர்வையை மடிக்கத் தொடங்கினாள்.

"ஒன்னும் அவசரமில்லை உதி. அசந்து தூங்குன. அதான் டிஸ்டர்ப் பண்ணலை. நீ மெதுவா கிளம்பு."

" வாவ்! யூவார் சோ ஸ்வீட் ரித்தி. சொன்ன நேரத்துக்கு கிளம்பலைன்னா அண்ணாவுக்கு கோபம் வந்துடும். ஆனால் நீங்க ரொம்ப நல்லவர்." என்றவள், உற்சாகமாக ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே குளிக்கச் சென்றாள்.

அவள் சென்றதும், " ஊஃப்." என்று பெருமூச்சு விட்டவனோ, ' என் அண்ணனைப் பத்தி உனக்குத் தெரிய வந்தாலும், அதை பெருசா நீ எடுத்துக்கக் கூடாது. அதுக்கு உன் மனசுல நான் ஸ்ட்ராங்கா உட்காரணும். அதுக்கு உன்னை இம்ப்ரெஸ் பண்ணனும். நைட்டெல்லாம் தூங்காமல் மனைவியின் மனதில் இடம் பிடிப்பது எப்படின்னு கூகுள் பண்ணிப் பார்த்தேன். அதுல குடுத்த டிப்ஸ் நல்லா தான் இருக்கு. ஃபர்ஸ்ட் கோபப்படக்கூடாது. அப்புறம் குழந்தை மாதிரி கேர் பண்ணி பார்த்துக்கணும். இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கு. எல்லாத்தையும் அப்ளை பண்ணி உன்னை கவர் பண்றேன்.' என்று ஏளனமாக எண்ணிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு தெரியாத விஷயம். அவனுக்கு மட்டுமல்ல எல்லா ஆண்களுக்கும் தெரியாத விஷயம், பெண்கள் அவர்களிடம் எதிர்ப்பார்ப்பது அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல அவர்களுக்கு துனையாக எப்போதும் இருப்போம் என்ற நம்பிக்கையை தான் விரும்புகிறார்கள். மனைவியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் இருந்தாலே போதுமானது. இதை அறியாதவன் அவளுக்காக உள்ளுக்குள் எரிச்சலுடனும், அதை வெளிக் காட்டாமல் ஒட்ட வைத்த புன்னகையுடன் காத்திருந்தான்.

**************************

ஒரு வழியாக உத்ரா கிளம்பி வர, அவர்களது கேரளாவின் பயணம் இனிதாக தொடங்கியது.

பர்வதமும், சுபத்ராவும் டிரைவரையும் அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூற, ரித்விக்கோ பிடிவாதமாக அதை மறுத்து விட்டு, செல்ஃப் டிரைவிங் செய்து கொண்டு போனான்.

அவனுக்கு இந்த பயணத்தில் அவளின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று எண்ணம். டிரைவர் வருவது அவர்கள் இருவரின் தனிமைக்கு தொந்தரவு என்று எண்ணியே அதை தவிர்த்து இருந்தான்.

அந்த ஏழு மணி நேர பயணத்தில் அவள் மனதில் நங்கூரமாக பதிந்து விட்டான் ரித்விக்.

காரில் ஏறும் போது மனைவிக்கு காரை திறந்து விட்டதில் தொடங்கி, வழியில் என்ன வேண்டும், என்ன வேண்டும் என்று அவளுக்கு நிறுத்தி காஃபி, டீ, சாப்பாடு, பழரசம் என்று அவளது விருப்பம் அறிந்து வாங்கிக் கொடுத்ததாகட்டும், அழகிய இயற்கை காட்சி இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி இருவரும் செல்ஃபி எடுத்ததாகட்டும். எல்லாமே அவளுக்கு அந்த பயணத்தை இனிமையாக்கியது.

ஊட்டியிலிருந்து மூணாருக்கு செல்லும் போது மாலை மயங்கி, இரவு புலர்ந்திருந்தது.

சொன்னது போலவே இவர்களை அழைத்துச் செல்ல ரித்விக்கின் நண்பன் நிதின் அங்கு காத்திருந்தான்.

" வாடா மச்சி. எப்படி மேரேஜ் லைஃப் இருக்கு? சிஸ்டர் உன்னை நல்லா பார்த்துக்குறாங்களா?" என்று நண்பனிடம் வினவியவன், அருகே நின்ற உத்ராவையும் பார்த்து புன்னகைத்தான்.

" டேய் நிதின்! அடங்குடா. என் வொய்ஃப் பயந்துடப்போறா. இங்க தான் ஃபோட்டோ ஷுட்டா? யாரும் அதிகம் வராத இடம்னு சொன்ன?" என்று வினவ.

" நீங்க தங்குறதுக்கு இங்கே தான் கம்பர்டபுளா இருக்கும். இங்க இருந்து கொஞ்சம் தள்ளி அந்த ப்ளேஸ் இருக்கு. உனக்கு லொகேஷன் அனுப்புறேன். காலையில் நேரத்தோட அங்க வந்துடு. சூரிய உதயத்தப்போ ஃபோட்டோ ஷுட் எடுத்தா நல்லா இருக்கும். ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணது டயர்டா இருக்கும். ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு பார்க்கலாம். அப்புறம் உன்னோட ட்ரெஸ்ஸஸ் இதுல இருக்கு." என்று ஒரு சூட்கேஸையும் கொடுத்தான்.

" தேங்ஸ்டா மச்சி." என்று அணைத்து விடுவித்தான் ரித்விக்.

அறைக்குள் நுழைந்த இருவரும் வாயடைத்து நின்றனர். ஹனிமூன் ஜோடிக்கு என்று அறை புக் செய்திருக்க. அந்த அழகிய காட்டேஜ் பூக்களாலும், வாசனை மெழுகுவர்த்தியாலும் அழகுற அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மெல்ல அந்த மெத்தையில் அமர்ந்தவளது முகமோ சோர்ந்து போய் இருந்தது. காரில் உறங்காமல் அவனிடம் சலசலத்துக் கொண்டு வந்தது, அவளுக்கு தூக்கத்தை வர வழைத்திருக்க. தூங்காமல் முயன்று சமாளித்துக் கொண்டிருந்தாள்.

" உதி! தூக்கம் வந்தா தூங்கு. இன்றோடு நமக்கு முடிந்து விடாது. நாளை நாம் பார்த்துக் கொள்ளலாம்." என்று அவளது கன்னத்தில் தட்டி சொல்ல.

புன்னகைத்த உத்ரா, " தேங்ஸ் டியர்." என்று விட்டு அப்படியே படுத்து உறங்கி விட்டாள்.

ரித்விக்கும் அவளருகே படுத்தான்.
*****************

இன்றோ பொழுது புலர்வதற்குள் தலைக்கு குளித்துவிட்டு வந்த உத்ரா, ரித்விக் எடுத்து வைத்திருந்த உடையை அணிந்துக் கொண்டாள்.

கேரளாவின் வெண்பட்டும், கரும்பச்சையில் ஆரி ஒர்க் செய்த ப்ளவுஸும் அவளை பேரழகியாக்கி காட்டியது‌. இருபுறமும் சிறிது முடி எடுத்து ஹேர்பின் குத்தியவள், மீதி முடியை ப்ரீயாக விட்டிருந்தாள்.மல்லிகை பூவை இரு புறமும் சரிய விட்டிருந்தாள்.
முகத்திற்கு லேசாக பவுடர் ஒற்றியவள், சிறிய கல் பொட்டை நெற்றிக்கு ஒட்டி விட்டு, உதட்டிற்கு லேசாக லிப்ஸ்டிக் பூசினாள். கண்ணாடியில் உதட்டை குவித்துப் பார்க்க, அங்கோ அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரித்விக்.

அவனும் கரும்பச்சை சட்டையும்,
வெண்பட்டு வேஷ்டியிலும் கம்பீரமாக இருந்தான்.

விழிகள் தெறிக்கத் திரும்பினாள் உத்ரா.
அவள் கண்டுக் கொண்டதை அறிந்தவன், மெல்ல அவளருகே வந்தான்.

"வாவ் செமையா இருக்க உதி. அதுவும் இந்த சேரியில் அள்ளுற. "என்றவனது பார்வை அவளது உதட்டையே வட்டமிட.

அவளுக்கோ அந்த குளிரிலும் உதடு வியர்க்க தொடங்கியது.

" ஹேய் உதி! எதுக்கு பயப்படுற." என்றவன் அவளது உதட்டை நெருங்கி முத்தமிட முயல,

" மேக்கப் கலைஞ்சிடும் ரித்தி. டைம் ஆகிடுச்சு." என்று உத்ரா முணுமுணுக்க.

" ப்ச்." என்றவன், மெல்ல தலையை கோதி சமாளித்துக் கொண்டான்.

"அதுவும் சரி தான். என் ஃப்ரெண்டு வேற வெயிட் பண்ணிட்டு இருப்பான். லேட்டா போனால் ஓட்டியே சாவடிச்சுடுவான்." என்று நொடியில் தன்னை இயல்பாகக் காட்டிக் கொண்டான்.

இருவரும் சரியான நேரத்திற்கு அங்கு செல்ல, நிதினோ ஃபோட்டோ கிராஃபருடன் லொகேஷன் பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரையும் பார்த்து புன்னகைத்த நிதின், " வாவ்! ரெண்டு பேரும் மேட்ச் ஃபார் ஈட் அதர். ஒருத்தவருக்காக ஒருத்தர் பொறந்த மாதிரியே அவ்வளவு அழகா இருக்கீங்க." என்றான்.

" டேய் சும்மா கிண்டல் பண்ணாதே. வந்த வேலையை பார்ப்போமா?"

" டேய் ரித்வி நான் உண்மையை தான் சொன்னேன். சரி வா ஃபோட்டோ எடுக்கலாம்."

அதற்குப் பிறகு ஃபோட்டோகிராஃபர்,தன் திறமையை காண்பிக்க இருவரையும் விதவிதமாக ஃபோட்டோ எடுத்து தள்ளினார்.

தாமரைக் குளக்கரையில் இருவரையும் நிற்க வைத்து அவள் புடவையை சரி செய்வது போலவும், இருவரும் சாய்ந்து சூரிய உதயத்தை பார்ப்பது போலவும், இருவரும் எதிரும், புதிருமாக இருப்பது போல, என்று பலவித போஸ்களில் எடுத்துக் கொண்டே இருந்தார் ஃபோட்டோகிராஃபர்.

நிதினோ, "போதும் சூரிய வெளிச்சம் வருவதற்குள்ள படகுல வச்சும் எடுங்க." என்றவன், அவர்களை படகிற்கு அழைத்துச் சென்றான்.
இல்லை, இல்லை விதி அவன் மூலம் அழைத்துச் சென்றது.

தாமரைக் குளத்தில், பூக்களால் அழகுற அலங்கரித்து இருந்த படகில் ரித்விக்கும், உத்ராவும் லேசாக அணைத்தவாறும், கைகளை ஹார்ட் வடிவில் வைத்தும், பிறகு அவள் மடியில் மடி சாய்ந்து என்று பலவிதமாக ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்த பூக்களுக்கு போட்டியாக உத்ராவின் முகமும் விகசித்தது.

ரித்விக்கும் ஒரு வித மயக்கத்தில் இருந்தான்.

போட்டோகிராபரோ, " சார்! நெக்ஸ்ட் நீங்க மேடம் லிப்ல கிஸ் பண்ணுங்க. அந்த ஷாட் ஒன்னு எடுத்துடுவோம். ரெண்டு பேரோட பேஸ் மேட்சாகும்‌. சீக்கிரம்." என்று அவசரப்படுத்தினார்.

ரித்விக் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல், அவளது இடுப்பில் ஒரு கை வைத்து தன்னை நோக்கி இழுத்தவன், உதட்டை நோக்கி குனிந்தான்.

உத்ராவிற்கு, தங்களது அந்தரங்கத்தை பொதுவெளியில் கடைப் பரப்புவதில் அவளுக்கு விருப்பமில்லை.

இருவருக்கும் இடையே நூலளவு இடைவெளி இருக்கும் போது அவள் வேண்டாம் என்று மறுக்க.

அவனோ அவளது மறுப்பை அலட்சியம் செய்து அவளை தன்னை நோக்கி இழுத்தான்.

உத்ராவோ பதட்டத்தில் திமிர, அந்த படகு ஆட ஆரம்பித்தது.

நிதினும், போட்டோகிராபரும், " படகு ஆடுது. பார்த்து! பார்த்து! " என்று பதற.

அதற்குள் அந்த படகு
தண்ணீரில் கவிழ்ந்தது. எல்லாம் ஒரு நொடி தான். உத்ராவும், ரித்விக்கும் அந்த குளத்தில் மூழ்க, நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியே வரவில்லை.