ஹாய் மை டியர் ஃப்ரெண்ட்ஸ்
இந்த கதையில குடும்பத்தினரால் காரணமில்லாமல் வெறுத்து ஒதுக்கப்பட்ட நாயகன் வாழ்வில் தன்னுடைய காதலை கொண்டு அவனுக்கு கிடைக்காத மகிழ்ச்சி அனைத்தையும் கிடைக்க வைக்க முயல்கிறாள் நாயகி. அவளுடைய முயற்சி வெற்றி பெற்றதா நாயகன் குணம் மற்றும் மனதை புரிந்து கொண்டு அவனுடைய குடும்பத்திலுள்ள அனைவரும் அவனை ஏற்றுக் கொண்டார்களா?
நாயகி நாயகனை இருவரும் அன்பால் ஆளவும் செய்து இனிமையாக வாழவும் செய்கிறார்களா? என்பதனை கொஞ்சம் காதல் கொஞ்சம் காமெடி கொஞ்சம் சென்டிமென்ட் கொஞ்சம் நட்பு குடும்பம் என்று அனைத்தும் கலந்த கலவைகளாக இக்கதையில் காண்போம்.
அத்தியாயம் 1
பகலவன் தன்னுடைய கடமையை சரியாக முடித்துவிட்ட நிம்மதியில் துயில் கொள்வதற்காக சென்று கொண்டிருந்த நேரத்தில் தன்னுடைய பின்க் கலர் ஸ்கூட்டியில் வேகமாக சென்று கொண்டு இருந்தாள் அழகான பெண்ணொருத்தி 5.6 அடி உயரமும் வட்டமான பால் நிலா வண்ண முகமும் இடை வரை நீண்டு தொங்கிய சடை பின்னல் குண்டும் இல்லாமல் ஒல்லியான உடலும் இல்லாமல் சரியான உடல் அமைப்புடன் பார்ப்பவரை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் குறும்பு கண்கள் மற்றும் அழகிய சிரிப்புடன் சென்று கொண்டு இருந்தாள். அவளுக்குப் பின்னே அமர்ந்து இருந்த அவளுடைய தோழி முகத்தில் உயிர் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
பின்னாடி அமர்ந்து இருந்த அவளுடைய தோழி மனதில் "இவ இன்னைக்கு என்ன ஏழரை இழுக்க போறாளோ தெரியல அந்த மனுஷன் வேற இவளைப் பார்த்தாலே காண்டாகி அந்த கத்து கத்துவார். இருந்தும் எதுக்கும் அசராம போகுது பாரு இதுல துணைக்கு நம்மள வேற கூட்டிக் கொண்டு போகுது" என்று புலம்பிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
தன் தோழியின் மனநிலை புரிந்தது போல அவளைப் பார்த்து "அடியே பானி பூரி ரொம்ப சத்தமா உள்ளுகுள்ள புலம்பாமல் அமைதியா வா நானே என்னுடைய டார்லிங்கை இன்றைக்கு பார்க்க முடியாதோ அப்படிங்கற டென்ஷன்ல வேகமா போய்கிட்டு இருக்கேன் நீ என்னடா அப்படின்னா மைண்ட் வாய்ஸ்ல புலம்பி கொண்டு வர" என்று திட்டினாள்.
அவளால் பானி பூரி என்றழைக்கப்பட்ட பவானி தன் விதியை நொந்துகொண்டு "ஏண்டி ஆத்திச்சூடி உன்ன பார்த்தாலே அந்த மனுசன் அவ்வளவு டென்ஷன் ஆகிறார் இருந்தாலும் எதுக்கு அவர்கிட்ட போய் மூஞ்ச காமிச்சிட்டு இருக்க இதெல்லாம் தேவையா" என்று கேட்டாள். ஆனால் அவள் கூறியதை பெரிதாக எடுக்காமல் "அவன் முகத்தை போய் பார்த்தா தான் எனக்கு சந்தோஷமா இருக்கும் கொஞ்ச நாள் திட்டிகிட்டு அந்த மனுஷன் அதுக்கு பிறகு அவரே என்ன பார்க்க ஆரம்பித்து விடுவார். அதனால நீ கவலைப்படாத கூடிய சீக்கிரம் அவரை உனக்கு அண்ணனா ப்ரோமோஷன் ஆக்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டாள்" ஆத்திச்சூடி என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஆதர்ஷினி நம் கதையின் நாயகி.
இவர்கள் இருவரும் பள்ளிகளிலிருந்து நெருங்கிய தோழிகள் கல்லூரியிலும் ஒன்றாகவே படிக்க வேறு யாரையும் பெரிதாக தங்களுடன் நட்பு வைத்து கொள்ளாமல் இவர்கள் இருவருமே ஒன்றாக சுற்றி கொண்டு இருந்தனர். ஆனால் ஆதர்ஷினி செய்யும் சேட்டைகள் மற்றும் கனிவான பேச்சுகள் காரணமாக அவர்களுடன் நட்புறவு வைத்துக்கொள்ள பலபேர் விரும்பினாலும் அவர்கள் அனைவரையும் ஒரு எல்லையோடு மட்டுமே நிறுத்திக் கொண்டனர்.
அதேபோல் இருவரும் ஒன்றாக பள்ளி கல்லூரி கல்வியை முடித்து விட்டு ஒரே கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தனர். மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த இவர்கள் வாழ்வில் காதல் என்ற விஷயம் நுழைந்தது. நுழைந்தது கல்லூரி முடித்த போது அல்ல கல்லூரி வாசலில் நுழையும் போதே நுழைந்துவிட்டது. அதுவும் தர்ஷினி மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தான் ஒருவன் அவன் துளிக்கூட இவளை மதிக்காமல் இருந்தாலும் அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொண்டவள் அவனை விடாமல் தொந்தரவு செய்கிறாள்.
ஆனால் அவன் இவளை ஒரு பொருட்டாகக் கூட மதித்தது கிடையாது. இருந்தாலும் தன்னுடைய முயற்சியை விடாமல் தினமும் அவனை பார்க்காமல் அவள் வீட்டிற்கு சென்றது கிடையாது. அவர்கள் வேலை செய்யும் இடத்தில் வேலை முடிவதற்கு சிறிது தாமதம் ஆகலாம் இல்லை என்றால் சிறிது நேரம் விரைவாகவே முடியலாம். எப்பொழுது முடிந்தாலும் அவனைச் சென்று பார்காமல் இவள் வீட்டிற்கு சென்றது இல்லை இன்றும் அதே போல் தான் செல்கின்றனர் என்றாவது ஒருநாள் அவன் கோபப்பட்டு இவர்களை திட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அதனால் தான் பவானி அவளை போக வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தாள். ஆனால் அதற்கு துளிகூட ஆதர்ஷினி அசைந்து கொடுக்கவில்லை இன்றும் அதே போல் தான் எப்படியாவது அவள் செல்வதை தடுத்து விட முடியாது என்று வெளியே சொல்ல முடியாமல் தனக்குள்ளேயே வைத்து புலம்பிக் கொண்டு அவளுடன் சென்று கொண்டு இருக்கிறாள் பவானி.
எப்படியோ வேகமாக சென்று தன் மனம் கவர்ந்த கள்வனை கண்டுவிட்டாள் ஆதர்ஷினி. அவனோ அவளை கண்டவுடன் கையிலிருந்த மண்வெட்டியை தூக்கி தூர வீசிவிட்டு கோபமாக சென்று விட்டான். அவன் கோவப்பட்டு செல்லும் அழகை ரசித்து கொண்டு இருந்தாள் ஆத்திச்சூடி. ஆண்மைக்கு உரித்தான கம்பீரத்துடன் தமிழரின் முக்கிய தொழிலான விவசாயத்தை செய்து உடல் மட்டுமல்லாமல் மனமும் இறுகிப்போய் மாநிறத்தில் இருந்தான் அவன் அவனே சமர் செல்வன்.
தன்னுடைய நண்பன் கோவமாக செல்வதை பார்த்த ஆதவன் அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தவன் திரும்பி பார்த்தான். அங்கே கன்னத்தில் கை கொடுத்து சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்த ஆதர்ஷினி மற்றும் தலையில் கைவைத்து அமர்ந்து இருந்த பவானி இருவரையும் கண்டு கொண்டவன் சிரித்துக்கொண்டே தன் நண்பனுடைய பின்னால் சென்றான்.
கோபமாக அமர்ந்து இருந்த சமர் அருகில் சென்றவன் "ஏன்டா அந்த பொண்ணு தான் உன்னை பிடிச்சு போய் தானே உன் பின்னாடியே சுத்துது கொஞ்சமாச்சும் அந்த பிள்ளை கிட்ட பேசி பார்க்கலாம் தானே ஒரு வேளை அந்த பொண்ணுக்கு உன்னை ரொம்ப புடிச்சி இருக்கிற மாதிரி உனக்கும் அந்த பிள்ளையை பிடித்தால் அந்த பிள்ளையை நீயே கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழலாம் தானே" என்று கேட்டான்.
அதற்கு சமர் ஒரு விரக்தி சிரிப்பை சிரித்துவிட்டு "யாரோட வாழ்க்கையிலும் நம்ம தொந்தரவா இருக்க கூடாது ஆதவா அந்த பொண்ணுக்கு நான் வேண்டாம் ஒரு நாள் அந்த பொண்ணு கிட்ட நான் நின்னு பேசினாலே அந்த பொண்ணுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் வரும் அதனாலதான் ஒவ்வொரு தடவையும் கோபப்பட்டு முறைச்சி பார்க்கிறேன். இருந்தாலும் அவ திருந்த மாட்டேங்குறா ஆனா ஒரு விஷயத்துல நான் தெளிவா இருக்கேன். எனக்கு கல்யாணம் வேண்டாம் கடைசி வரைக்கும் இப்படியே இருந்து என் வாழ்க்கை ஓட்டிட்டு யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் போயிருவேன்" என்று கூறினான்.
தன் நண்பனின் இந்த நிலைக்கு காரணமான அவனது குடும்பத்தை நினைத்து உள்ளுக்குள் கோபமடைந்த ஆதவன் ஏதோ பேசுவதற்கு முன்பு அவர்கள் முன் வந்து நின்ற ஆதர்ஷினி "எனக்கு யாரு என்ன சொன்னாலும் அதை பற்றியும் கவலை கிடையாது. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு நீயே நினைச்சாலும் வேற எந்த பொண்ணையும் கல்யாணம் பண்ண முடியாது பண்ணவும் விடமாட்டேன்.
அதே மாதிரி நீ என்னை கல்யாணம் பண்ணல அப்படின்னு சொன்னா கடைசி வரைக்கும் நான் இப்படியே தான் இருப்பேன் அப்படின்னு உனக்கு பொய் சத்தியம் எல்லாம் பண்ண மாட்டேன். நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் நீ என்ன காதலிச்சு என் வயித்துல குழந்தையை கொடுத்து விட்டு இப்ப அது கலைந்து போன காரணத்தினால் என்னை கல்யாணம் பண்ணிக்காம ஏமாத்துற அப்படின்னு போய் சொல்லுவேன். அதுக்கு என்ன என்ன போலியான ஆதாரம் தேவையோ எல்லாத்தையும் பக்காவா ரெடி பண்ணிட்டு தான் போவேன்.
என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ என்ன திட்டினாலும் சரி அடிச்சாலும் சரி இல்ல கொஞ்சினாலும் சரி எனக்கு எந்த கவலையும் கிடையாது. ஆனால் நீ என்ன கல்யாணம் பண்ணி தான் ஆகணும் அத உன்னோட மூளையில் நல்லா ஏத்துக்கோ எனக்கு நேரம் ஆகுது அதனால நான் கெளம்புறேன். நாளைக்கு மறுபடியும் மீட் பண்ணலாம் கொஞ்சம் சிரிச்ச முகமா இருக்கே பாரு உன்னோட உர் முகத்தை பார்த்தே பழகிடுச்சு நீ சிரிச்சா எப்படி இருப்பேன்னு தெரியல அதுக்காகவாட்சியும் நாளைக்கு சிரி பாய் டா செல்ல குட்டி" என்று கூறி விட்டு நிற்காமல் ஓடி விட்டாள்.
அவள் பேசி சென்றதில் ஒரு நிமிடம் எதுவும் யோசிக்க முடியாமல் அமைதியாக இருந்த இருவரும் பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆதவன் மனதில் "என் மாப்பிள்ளைக்கு ஏற்ற தங்கச்சி தான் எப்படியும் அவ கூட இருந்தா இவன் நல்லபடியா இருப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு ஆனா அதுக்கு இவன் ஒத்துக்கணுமே ஒத்துக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறானே இதற்கு என்ன செய்வது" என்று எண்ணிக்கொண்டே சமர் அருகில் அமர்ந்தான்.
தன் அருகில் அமர்ந்த நண்பனை சமர் கேள்வியாக பார்க்க அவன் முகத்தை பார்த்து "இதுக்கு மேல நீதான் சொல்லணும் உன் மேல ஆசைப்படுற அந்த பொண்ணு தன்னோட மனசுல இருக்க எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டாள்.அதே மாதிரி உன்னை கல்யாணம் பண்ணனும் என்பதற்காக தன்னுடைய கற்பை கூட நாசம் செய்தவன் அப்படின்னு உனக்கு பெயர் வாங்கி கொடுப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய பெயரை நாசம் செய்வதற்கு தயாராக இருக்கு நீ இன்னும் அந்த பிள்ளையை விட்டு ஒதுங்கிப் போக தான் ஆசைப்படுற கண்டிப்பா உன்னோட வீட்ல உள்ள யாரும் உனக்கு ஒரு நல்ல விஷயம் பண்ண போறது கிடையாது. உண்மையான பாசத்தோடு வர்ற அன்பை தயங்காமல் ஏத்துக்கோ உன்னோட நண்பனா உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கணும் அப்படிங்கிற ஆசை எனக்கு இருக்கு அதனாலதான் சொல்றேன் கொஞ்சம் ஆச்சு யோசிச்சு பாரு" என்று கூறினான்.
தன் நண்பன் கூறியது அனைத்தும் தன்னுடைய நல்லதுக்கு தான் என்பது புரிந்தாலும் ஏனோ அவன் மனது அவளின் காதலையும் அதன்பிறகு உண்டான குடும்பத்தையும் யோசிக்க விரும்பவில்லை அது அனைத்திற்கும் காரணம் அவன் இதுவரை பட்ட மனதின் காயம் என்பதை நினைத்தவன் தன்னை நினைத்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு மறுபடியும் வேலைகளைப் பார்க்கச் சென்றான்.
சமர் சிரித்த சிரிப்பின் பின்னால் இருக்கும் வலியை ஆதவன் உணர்ந்து இருந்தாலும் எப்படியாவது அவனுடைய மனதை மாற்றி விட வேண்டும். அவனுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வைக்க வேண்டும் என்றுதான் அனைத்தையும் பேசினான். ஆனாலும் முழுதாக இன்று அவர் மாறி விடுவான் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை சிறிது சிறிதாக அவளின் காதல் உண்மையான அன்பு பாசம் கடைசிவரை நிலைத்து இருக்கும் என்பதை சமர் விரைவில் உணர்ந்து கொள்வான். அப்பொழுது அவன் அவளை திருமணம் செய்து கொள்வான் என்று எண்ணிக்கொண்டான். தன் நண்பனின் நினைத்து பெருமூச்சு விட்டவன் தானும் அவனுடன் வேலை செய்ய ஆயத்தமானான்.
சமர் ஆதவன் இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் ஒன்றாகவே பள்ளிப்படிப்பை முடித்தவர் இருவருக்கும் விவசாயத்தின் மேல் தீவிர ஆசை இருந்த காரணத்தினால் விவசாய சம்பந்தமான படிப்பை படித்துவிட்டு தங்களுக்கென இருந்த காசை போட்டு சொந்தமான நிலத்தை வாங்கி அந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர். விவசாயத்தின் மேல் இருந்த பற்றின் காரணமாக புது புது விதமான காய்கறிகள் மற்றும் பூக்கள் என்று அனைத்தையும் பயிர் செய்து இயற்கை உரங்களை மட்டுமே வைத்து பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.
அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் இவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் பாசமும் இருந்தாலும் சமர் குடும்பத்திற்கு மட்டும் அவன் வேண்டாதவன். அவன் எவ்வளவுதான் நற்காரியங்கள் செய்தாலும் அவர்கள் துளியேனும் அவனை கண்டு கொள்ளவே மாட்டார்கள். அவனைத் தங்கள் வீட்டில் உள்ள ஒரு மனிதனாக மதிக்க மாட்டார்கள். அப்படி யாராவது சமரை மதித்து பேசினால் இவனை வார்த்தையால் காய படுத்துவார்கள்.
இதையெல்லாம் ஆதவனுக்கு நன்றாகவே தெரியும் படிப்பு முடிந்து விவசாயம் என்று ஆரம்பித்த காலத்தில் தங்கள் நிலத்தின் அருகே சிறியதாக வீடு ஒன்றைக் கட்டிய சமர் அங்கேயே குடியிருக்க ஆரம்பித்துவிட்டான். முதலில் சமர் தனியாக தங்குவது ஆதவனுக்கு பிடிக்கவில்லை ஆனால் அவனுடைய மனதின் காயங்களுக்கு அதுவே சிறந்த மருந்தாக இருக்கும் என்று அமைதி காத்து விட்டான்.
அதன் பிறகு சிறிது சிறிதாக இயற்கை விவசாயத்தில் வளர்ந்து இன்று பல பேருக்கு தெரியும் அளவில் இருக்கின்றனர். இவ்வளவு உயர்ந்து நல்லபடியாக வளர்ந்து வந்தாலும் அவனை அவனது வீட்டில் யாரும் ஒரு மனிதனாக மதிக்காதது ஆதவனுக்கு மிகவும் வேதனையாக இருக்கும் இருந்தாலும் என்றாவது ஒரு நாள் தன் நண்பனின் மன நிலையை புரிந்து அவர்கள் வருத்தப்படுவார்கள் அன்றைய நாள் விரைவில் வரும் என்று எண்ணிக்கொண்டே அமைதி காத்து கொண்டு இருக்கிறான்.
இப்போது அவனுடைய வாழ்க்கையை வசந்தமாக மாற்ற ஆதர்ஷினி வந்து இருக்கிறாள் அவளும் தினமும் நாள் தவறாமல் அவனை பார்த்து விட்டு சென்றாலும் ஒருநாள் கூட சமர் அவளை திரும்பிப் பார்த்தது இல்லை ஆனால் அவளை பார்த்தால் மிகவும் கோபம் மட்டும் கொள்வான்.
எப்படியாவது இருவரையும் இணைத்து வைத்து விடவேண்டும் என்று எண்ணி ஆதவன் முயற்சி செய்துகொண்டு இருக்கிறான். ஆனால் அதற்கு சிறிது கூட நான் அசைந்து கொடுக்க மாட்டேன் என்று வீம்பாக நிற்கிறான் சமர்.
சமரின் மனதில் இருக்கும் வலிகள் என்ன?
எதற்காக அவனுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அவனை வேண்டாத மனிதனாக பார்க்கிறார்கள்?
சமர் ஆதர்ஷினியின் காதலைப் புரிந்து கொள்வானா?
இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களில் விடை காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

Last edited: