• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 12

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
மறுநாள் காலை மிகவும் அழகாக விடிந்தது. கோவிலில் வைத்து நடைபெறுவதாக முடிவு செய்து வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் வீடுகளிலேயே மணமக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.



தர்ஷினி கார்த்திகா இருவரையும் தயார் செய்வதற்கு பியூட்டி பார்லரில் ஆட்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு தேவையான உதவியை பவானி உடனிருந்து கவனித்துக் கொண்டிருந்தாள். இரண்டு பெண்களின் முகத்திலும் திருமணத்தை எண்ணி மகிழ்ச்சியில் பூரித்து போயிருந்தது.



"என்னடி பொண்ணுங்களா ரெண்டு பேரும் மூஞ்சியும் மேக்கப் போட்டதை விட ரொம்ப சிவந்து போயிருக்கு, இப்படியே உங்க ரெண்டு பேரையும் அவங்க ரெண்டு பேரும் பார்த்தா நீங்க தானா அப்படின்னு பயந்து ஓடி போயிட போறாங்க" என்று கிண்டலாகக் கூறினாள் பவானி.



"அடியே பானிபூரி எங்கள விட உன்னை அதிகமா உன்னோட கல்யாணத்துல செவக்க வைக்கிறோம், அதை பார்த்து எங்க அண்ணே ஓடி போறானா இல்ல அங்கேயே உட்கார்ந்து இருக்காங்களா அப்படின்னு பார்த்துடுவோம்" என்று பதில் கொடுத்தாள் ஆதர்ஷினி.



"கல்யாணம் அன்னைக்காவது பதிலுக்கு கிண்டல் பண்ணாம அமைதியா ரசிக்கிறாளா பாரு ,பதிலுக்கு பதில் பேசி நாமள நோஸ்கட் பண்றதே இவளுக்கு வேலை" என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் பவானி.



இப்படி இவர்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வாரிக்கொண்டிருந்த நேரத்திலேயே இவர்களை அழைத்துச் செல்வதற்காக இவர்கள் பெற்றவர்கள் வந்தனர்.



வந்தவர்கள் பட்டுப்புடவையில் அழகாக ஜொலிக்க மூவரையும் திருஷ்டி எடுத்தவர்கள் "மூன்று பேரும் பார்க்க ரொம்ப அழகா இருக்க உங்க மூணு பேரையும் பார்க்கும் போது எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. ஊர்ல இருக்க எல்லாரோட கண்ணும் இன்னைக்கு உங்க மேல தான் இருக்கப் போகுது எங்க பொண்ணுங்க எப்பவும் இதே சந்தோஷத்தோட நல்லா இருக்கணும்" என்று மனமார கூறினார்கள்.



பெண்களும் அவர்களைப் பார்த்து புன்னகைக்க அனைவரும் ஒன்றாக கிளம்பி கோவில் வந்து சேர்ந்தனர்.



மணமகன் வீட்டில் உள்ளவர்கள் சீக்கிரமாகவே கோவில் சென்ற விஷயமறிந்த காரணத்தினால் ஆதவன் சிறிது நேரத்திற்கு முன்பாகவே கிளம்பி சென்றிருந்தான். கிளம்பியவன் மனதில் 'கடவுளே அங்கு என்ன பிரச்சனை நடந்ததோ இவ்வளவு காலையிலேயே கிளம்பி வந்து இருக்காங்க அம்மா கல்யாணத்துக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லாம சம்மதம் சொல்லி இருக்கான். அவனே இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கான் அப்படின்னு சொன்னா கண்டிப்பா ஏதோ ஒன்னு நடந்திருக்கு ஆனால் இந்த கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வராம நீதான் காப்பாத்தணும்'



என்று வேண்டிக் கொண்டே சென்றான்.



கோவில் வந்து சேர்ந்தபோது அனைவரும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தாலும் முகத்தில் ஒரு சில யோசனைகள் இருந்ததை கண்டு கொண்ட ஆதவன் நேராக செல்வராஜிடம் சென்றான்.



"சித்தப்பா என்ன ஆச்சு இவ்வளவு? சீக்கிரமே கோயிலுக்கு வந்து இருக்கீங்க வீட்டில ஏதாவது பிரச்சனையா சமர் நல்லா தான இருக்கான்?" என்று கேட்டான்.



அவர் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு "நேத்து நைட்டு வீட்டிலுள்ள வானரக் கூட்டம் எல்லாமே அவன் கூட தான் தூங்கிச்சு, அதனால ராத்திரி எந்தவித பிரச்சனையும் இல்லை காலையில் எழும்பும் போது கூட சமர் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருந்ததை நான் பார்த்தேன்.



ஆனால் பசங்க எல்லாரும் குளிச்சி கிளம்ப போன நேரத்துல ஏதோ ஒரு விஷயம் வீட்டில நடந்து இருக்கு நானும் ஒரு சில வேலையா வெளியே இருந்தேன், அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது சமர் முகத்தில் இருந்த சிரிப்பு மொத்தமா போய் ஒரு வெறுமை வெறுப்பு இருந்துச்சு. இதுக்கு மேல அங்கு இருந்தால் சரிப்பட்டு வராது அப்படின்னு சொல்லி கோயிலுக்கு போகலாமா அப்படின்னு கேட்டேன்.



ஆளுக்கு முன்ன அருள் போகலாம் சித்தப்பா அப்படின்னு சமரையும் சேர்த்து கூட்டிட்டு வந்துட்டான். ஆனா அங்க நடந்த எதுவும் அருளுக்கு தெரிய வாய்ப்பு இல்ல. ஆனாலும் அண்ணன் முகம் சரி இல்லாமல் இருப்பதை பார்த்து வீட்ல யாரும் எதுவும் பேசுறதுக்கு முன்னாடி இங்க வர வைத்து விட்டான் இனி சமர் ஏதாவது சொன்னால் தான் தெரியும் இல்ல வீட்டிலுள்ள பொம்பளைங்க யாராச்சும் சொன்னா அதான் விஷயம் என்னன்னு தெரியும் நீ போய் அவன் கூட இரு" என்று கூறினார்.



என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே நகர்ந்த நேரத்தில் சரியாக அவ்விடம் வந்த விஜயா "என்னங்க இன்னைக்கு காலையில மாமா அத்தை அப்புறம் அத்தான் கொழுந்தன் எல்லாரும் சமர பார்த்து ரொம்ப மோசமா பேசி விட்டாங்க" என்று நடந்ததைக் கூற ஆரம்பித்தார்.



காலையில் சமர் ஏன்என்றே தெரியாத ஒரு மகிழ்ச்சியான மனநிலையில் தான் இருந்து வந்தான். வீட்டில் சொந்தங்கள் அனைவரும் இருந்த காரணத்தினால் அவனை பிடிக்காமல் இருந்தாலும் மற்றவர்கள் எதுவும் கூறாமல் தான் இருந்தனர். ஆனால் திருமணத்திற்கான நேரம் நெருங்க அனைவரும் கோவில் கிளம்ப இருந்த நேரத்தில் சமரை பார்த்த அவன் தந்தை தாத்தா மற்றும் மற்றொரு சித்தப்பா



"இன்னைக்கு ஒரு நாள் இங்கு வந்து தங்கி இருந்த காரணத்தை அப்படியே பிடித்து விட்டு இங்கேயே செட்டில் ஆகிவிடலாம் அப்படின்னு கனவு காணாத, எப்படியோ எங்க வீட்டோட தருத்திரம் ஒளிஞ்சோ அதுமாதிரி நீ இந்த வீட்டை விட்டு போன உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை ஆனா என்னோட செல்லப்பேரனுக்கு கல்யாணம் ஆகணும்னா உனக்கு கல்யாணம் ஆனா தான் முடியும் அப்படிங்கிற காரணத்தினால் தான் நாங்க அமைதியாய் இருக்கோம். இந்த அமைதியை உபயோகப்படுத்தி மொத்தமா இந்த வீட்டில் குடித்தனம் நடத்த முடிவு பண்ணாத அதே மாதிரி உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா ஏற்கனவே உன்னோட ராசியினால் இந்த குடும்பம் பட்டபாடு போதாது அப்படின்னு சொல்லி புதுசா கல்யாணம் பண்ணி அந்த பொண்ண வேற கஷ்டபடுத்த போறியா? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்காம எங்கேயாவது போயிருக்க வேண்டியதுதானே சரி என்னமோ அது நீயாச்சு உன்னோட பொண்டாட்டி ஆச்சு தயவுசெய்து ரெண்டு பேரும் இந்த வீட்ல இருக்காதீங்க போனவங்க போனவர்களாக இருந்துட்டு போங்க" என்று கூறி விட்டு நிற்காமல் சென்று விட்டனர்.



அவர் கூறியதைக் கேட்டு செல்வராஜ் மனதில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது என்றால், அப்போதுதான் அந்தப் பக்கம் வந்த அருள் மற்றும் ஏற்கனவே நின்றுகொண்டிருந்த ஆதவன் மனதில் வரும் கோபத்தின் அளவை கூறி தான் தெரிய வேண்டுமா என்ன?



ஆனால் எதிர்பாராதவிதமாக அப்போதுதான் வந்திறங்கிய பெண் வீட்டார் அனைவரும் நடந்த அனைத்தையும் கேட்டு வருத்தம் அடைந்தனர்.



ஆனால் அனைவருடைய முகத்தையும் பார்த்த ஆதர்ஷினி நேராக செல்வராஜ் அவரிடம் சென்று "மாமா நீங்க எத நினைச்சோம் கவலையே படாதீங்க இன்னைக்கு உங்க அம்மா கையால ஆரத்தி எடுக்கப்பட்டு அந்த வீட்டுக்குள்ள நானும் உங்க புள்ளையும் வருவோம் அதை நடக்க வைப்பேன். எதை நினைத்தும் கவலைப்படாம கல்யாணத்துக்கு தேவையான வேலைய பாருங்க. என்ன காலைல உங்க வீட்ல உள்ளவங்க இப்படி பேசாம இருந்து இருந்தா என் புருஷன் முகத்தில் கொஞ்சமாச்சும் சிரிப்பு இருந்து இருக்கும், ஆனா நான் ஏற்கனவே எதிர் பார்த்த மாதிரி இப்போது கடுப்புல தான் உட்கார்ந்து இருப்பான். சரி எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா வாங்கப்போவோம்" என்று அசால்டாக கூறிவிட்டு உள்ளே நுழைந்தாள்.



அவள் கூறிய தோரணையே ஏதோ செய்ய பிளான் செய்து விட்டாள் என்பதை மற்றவர்களுக்கு புரிய இப்போது அனைவர் முகத்திலும் மெல்லிய புன்னகை வந்தது.



ஆனால் அருள் முகத்தில் ஒரு கலக்கம் இருப்பதை பார்த்த கார்த்திகா "எங்க அக்கா கையில மாட்டிக்கிட்டு உங்க வீட்ல உள்ள எல்லாரும் என்ன பாடுபடப் போறாங்களோ அப்படின்னு நினைக்கும் போது எனக்கு இப்பவே சிரிப்புதான் வருது. ஆனா ஒரு விஷயம் எங்க அக்கா மட்டும் இன்னைக்கு சாயங்காலம் எனக்கும் சேர்த்து ஏதாவது முடிவெடுத்தா நான் எதுவுமே சொல்லாம அவ பக்கம் தான் நிப்பேன், நீங்களும் என் கூட என் பக்கம் தான் நிக்கணும்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.



இப்போது அனைவர் முகத்திலும் நிறைவான புன்னகை வந்தது. இரண்டு பெண்களும் இந்த குடும்பத்தை பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு அனைவரும் கோவில் உள்ளே சென்றனர்.



தன் தங்கைகளை நினைத்து சிரித்துக் கொண்டே சென்ற ஆதவன் நேராக தன் நண்பனின் அறைக்கு சென்றான். அவனோ இவனை பார்த்தவுடன் சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு புன்னகைத்தான்.



அந்த புன்னகை பின் இருக்கும் வலியை புரிந்து கொண்ட ஆதவன் எதுவும் கூறாமல் அவனை இறுக அணைத்துக் கொண்டான் அந்த ஆறுதலே சமருக்கு போதுமானதாக இருக்க அவனும் சிறிது அமைதி அடைந்தான்.



இப்போது அவன் சிறிது சகஜமாக இருப்பதை பார்த்த ஆதவன் புன்னகைத்துக் கொண்டான் அடுத்த சில நிமிடங்களில் மண மகன்களை அழைத்து வரச்சொல்லி ஐயர் கூற ஆதவன் மணமகன் இருவரையும் அழைத்து வந்து மணமேடையில் அமர வைத்தான்.



அவன் அமர வைத்ததுதான் தாமதம் இவர்கள் இருவரின் பின்னே அவர்கள் தம்பி தங்கைகள் ஒன்று கூடினார்கள். அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு பொண்ணே அழைச்சிட்டு வாங்க என்று ஐயர் குரல் கொடுக்க அழகு பதுமையாக இரண்டு பெண்களும் வந்தனர். அருள் முகத்தில் புன்னகையுடன் ஆவலும் இருக்க சமர் முகத்தில் ஒரு வெறுமை மகிழ்ச்சி கோவம் இறுக்கம் என அனைத்தும் இருந்தது.



ஆதர்ஷினி சமர் அருகில் வந்து அமர்ந்தவுடன் சில நிமிடங்கள் அவன் முகத்தை பார்த்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள். அதன் பிறகு மேற்கூறிய சம்பிரதாயங்களை முடித்தபின் ஐயர் கெட்டிமேளம் கூற சிறப்பான முறையில் ஆதர்ஷினி திருமதி ஆதர்ஷினி சமர் செல்வனாக மாறினாள். சமர் குடும்பத்தில் உள்ளவர்கள் வேறு வழயில்லாமல் அட்சதை தூவ மற்றவர்கள் மனநிறைவுடன் அட்சதை தூவி அவர்களை வாழ்த்தினார்கள்.



அடுத்த சில நிமிடங்களில் அருள் செல்வனுக்கும் கார்த்திகா இருவருக்கும் அழகான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. அதன் பிறகு நடக்கும் சம்பிரதாயங்கள் அனைத்தையும் இரண்டு ஜோடிகளும் சிறப்பான முறையில் செய்து முடித்தனர்.



மணவரை சுற்றில் வலம் வருவதற்கு ஆதர்ஷினி சார்பாக ஆதவன் அண்ணன் முறையில் இருக்க, கார்த்திகா சார்பாக கார்த்திக் உடன்பிறந்தவர் முறையில் இருந்தான். நடந்த சடங்குமுறை அனைத்திலும் சமர் எந்தவித மறுப்பும் சொல்லாமல் கலந்துகொண்டது அவன் சார்பாக நின்று கொண்டிருந்தவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது.



மாங்கல்யம் அணிவித்தும் போதும் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது காலில் மெட்டியை மாட்டும் போதும், அக்னியை சுற்றி வலம் வரும் நிகழ்வின்போது என அனைத்து நிகழ்வுகள் நடக்கும்போதும் தன்னையறியாமல் இரண்டு ஜோடிகளுக்கும் ஒரு சிலிர்ப்பு ஏற்பட தான் செய்தது. ஆனால் அந்த சிலிர்ப்பை சமர் முழுமனதாக அனுபவிக்க முடியாமல் அவன் மீதே கோபம் கொண்டான்.



அவனுடைய முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை அவனுடைய நலன் விரும்பிகள் அனைவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். ஆனாலும் யாராலும் அப்போது அவனுக்கு அருகில் சென்றே இருவர் ஆறுதல் கூற முடியாத நிலை அவர்களும் நடப்பதை ஒருவித இன்பத்தோடு துன்பத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.



அனைத்து சடங்குகளும் முடிந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க போகும் நேரத்தில் சமர் அசையாமல் அங்கேயே நின்று விட்டான்.



அவன் அப்படியே நிற்பதை பார்த்து அவன் வீட்டில் உள்ள பெரிய மனிதர்கள் மிகவும் மகிழ்ந்து போனார்கள். ஆனால் அவனை அப்படியே விட்டுவிடுவாளா அவன் மனைவி அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு தன் அருகில் நின்று கொண்டிருந்த கார்த்திகாவை பார்த்தாள்.



அவள் பார்த்த பார்வையிலே ஏதோ ஒரு வில்லங்கத்தை செய்யப்போகிறாள் என்பதை அங்கிருந்த அனைவரும் புரிந்து கொண்டனர். அதனால் மகிழ்ச்சியாக நடப்பவற்றை வேடிக்கை பார்க்க முடிவு செய்தனர்.



"கார்த்தி யார் யார் எனக்கும் என் புருஷனுக்கும் ஆசிர்வாதம் பண்றாங்களோ, அவங்க கிட்ட மட்டும் தான் நீயும் ஆசிர்வாதம் வாங்க போகனும். வேற யாருகிட்டயும் ஆசீர்வாதம் வாங்க கூடாது பெரிய மனுஷங்க இருந்தால் எல்லாரையும் ஒரே மாதிரி தான் நடத்தவும் செய்வாங்க நல்ல மனசோட ஆசிர்வாதமும் பண்ணுவாங்க. அப்படி என்னையும் என்னோட புருஷனையும் ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுக்கு மட்டும் ஆசிர்வாதம் பண்ணினா அவங்க மனசுல நல்ல எண்ணங்கள் இல்ல அப்படின்னு அர்த்தம். அப்படிப்பட்ட யார்கிட்டயும் நீ ஆசீர்வாதம் வாங்க வேண்டாம் வாங்கினாலும் நீ நல்லா இருப்ப அப்படின்னு சொல்ல முடியாது சரியா" என்று கேட்டாள்.



"இத நீ சொல்லித்தான் நான் செய்யணுமா நம்ம வீட்ல எப்பவுமே நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சி பார்த்தது கிடையாது. அதே மாதிரி நாம ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும் அப்படின்னு சொல்லி தான் ஒரே வீட்டுல கல்யாணம் பண்ணி கொடுக்குறாங்க. அதனால எது நடந்தாலும் நம்ம ரெண்டு பேருக்கும் ஒன்னாவே நடக்கட்டும் ஆசீர்வாதமும் எல்லாரும் ஒன்னாவே பண்ணட்டும் நீ முன்னாடி பின்னாடி நாங்க அவங்க கிட்ட வந்து ஆசிர்வாதம் வாங்க வருகிறோம் என்னங்க நாங்க சொல்றது சரிதானே" என்று இவ்வளவு நேரம் தன் உடன் பிறந்தவளை பார்த்து பேசிக் கொண்டிருந்தவள், இறுதியாக தன் கணவனைப் பார்த்து கேள்வியாக முடித்தாள்.



"பொண்டாட்டி பேச்சுக்கு மறுபேச்சு ஏது என் செல்லம் எப்பவுமே சரியாக சொல்லும் அதனால நீ யார் யார் கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு சொல்லுரியோ அவங்க கிட்ட மட்டும் நாம ஆசிர்வாதம் வாங்கினா போதும்" என்று ஒரு நல்ல கணவனாக தன் மனைவிக்கு ஆமா சாமி போட்டான்.



அருள் சமர் இருவரும் மனைவிக்கு அடங்கி போகவும் குணம் கொண்டவர்கள் அல்ல ஆனாலும் மனைவியின் சொல்லில் ஏதாவது நல்லது இருந்தால் நிச்சயமாக கேட்டுக் கொள்ளும் குணமுடையவர்கள். தான் தன் அண்ணனுக்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கி வேலை செய்வான். இப்போதும் அது போலவே அவன் கூறியதை கேட்டு அவன் வீட்டில் உள்ள பெரியவர்கள் மூஞ்சியில் ஈயாடவில்லை ஆனால் செல்வராஜ் மற்றும் வீட்டு பெண்கள் சிறுவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.



சமருக்கு நடக்கும் அனைத்தையும் பார்க்கும் போது நிச்சயம் ஆதர்ஷினி ஒரு முடிவோடுதான் தன்னைத் திருமணம் செய்து இருக்கிறாள் என்பது தெள்ளத் தெளிவாக புரிந்தது.



"ஐயோ இன்னும் இவ என்னென்ன பண்ண போறா அப்படின்னு தெரியலையே நம்ம வேற இவ மேல கோவத்துல இருக்கோம் அதனால எந்த ஒரு விஷயத்தையும் இங்க வச்சு அவ கிட்ட பேச முடியாது, கண்டிப்பா பேசினா பெரிய சண்டையா தான் வந்து நிற்கும். இப்போ இவ பேசியிருக்க விஷயத்துக்கு நம்ம வீட்டுல உள்ளவங்க பிடிக்காமல் இருந்தாலும் நமக்கு ஆசீர்வாதம் பண்ணி தான் ஆகணும். இல்லனா அருள் ஆசீர்வாதம் வாங்க போகமாட்டான் நமக்கும் போக விருப்பம் இல்ல ஆனா இவ பண்ணி வச்சிருக்க வேலைல ஐயோ" என்று பற்களை நறநறவென்று கடித்தபடி முனுமுனுத்தான்.



இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த தர்ஷினி மற்றும் ஆதவன் குடும்பத்தினருக்கு இவர்களின் ஒற்றுமை மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் இவர்கள் ஒற்றுமையை பிடிக்காத சிலர் என்றால் அவர்களை சமர் மேல் வெறுப்பில் இருந்த அவன் அப்பா சித்தப்பா பாட்டி தாத்தா அனைவரும் தான் அதிலும் அருளும் தன் மனைவிக்கு ஆமாம் போடுவதை கண்டவர்கள் ஒரு நிமிடம் நெஞ்சில் கை வைக்காத குறையாக தான் நின்று கொண்டிருந்தனர்.



"ஆத்தி போற போக்க பாத்தா நம்ம பேரன் நம்மளை எல்லாம் மனுஷங்களா கூட மதிக்க மாட்டான் போல. பொண்டாட்டி இவங்க எல்லாம் வேணும்னா நம்ம எங்கேயாவது தனியா போயிடலாம் அப்படின்னு சொன்னா பின்னாடியே வான்னு சொல்லி போயிடுவாங்க போல. இனிமேல் நம்ம செல்ல பேரன் நம்ம கூட இருக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம் போலையே இப்பவே இந்தப் போடு போடுறான் அவ என்னடா அப்படின்னு சொன்னா அப்படியே அவ அக்காக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கா. இனி என்னென்ன பண்ண போறாங்களோ தெரியல முதல்ல இந்த கார்த்திகா புள்ளைய அவ அக்கா கிட்ட இருந்து பிரிக்கணும் அப்பதான் நம்ம குடும்பம் நிம்மதியா இருக்கும். அவ கூட சேர்தனாலதான் இந்த பிள்ளையும் இப்படி ஆகி போயிருக்கும். முடிஞ்ச அளவுக்கு பாசம் காட்டி அந்த புள்ள ஏன் நம்ம பக்கம் கூட்டிட்டு வர வச்சுக்கணும்" என்று எண்ணிக் கொண்டிருந்தார் பாட்டி பரிபூரணம்.



அவருடைய எண்ணத்திற்கு ஏற்றார் போல் தான் அவர் கணவரும் இரண்டு மகன்களும் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மனதிலும் இதே எண்ணங்கள்தான் ஓடியிருக்கும் என்பதை யோசித்து கொண்டவர் அனைவருமாக சேர்ந்து பார்த்துக்கொள்ளலாம் என்று கண்மூடி திறந்தார்.



அதன்பிறகு ஆதர்ஷினி சமரை பிடித்திருந்த கையில் அழுத்தம் கொடுக்க அவனும் எதுவும் கூறவும் முடியாமல் திட்டவும் முடியாமல் அமைதியாக முதலில் தன் தாத்தா-பாட்டி அருகில் சென்றான் அவர்களும் வேறு வழியில்லாமல் புன்னகைத்தபடியே ஆசீர்வதிக்க பின்னாடியே அருள் கார்த்திகா சென்றனர்.



இப்படியாக வரிசையாக தன் அண்ணனையும் அண்ணியையும் பின்தொடர்ந்து தன் மனைவியோடு அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கினான் அருள்செல்வன்.



அதன் பிறகு உறவினர்கள் வருகை போட்டோ எடுப்பது என்று நேரங்கள் செல்ல அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிடும் இடத்தில் எந்த வித இடையூறும் இல்லாமல் அவரவர் அவரவருக்கு பிடித்த உணவுகளை விரும்பி சாப்பிட்டு முடித்து வெளியே வந்தனர்.

நேரங்கள் செல்ல பெண்கள் இருவரையும் மாமியார் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கியது அப்பொழுது தான் அங்கு இருந்த பலருக்கு பதற்றம் உண்டானது.


ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு விதமாக மாற ஆரம்பித்தது. ஒருபுறம் சமர் தன் சித்தப்பாவிடம் ஏதோ கூறிக்கொண்டிருக்க, ஆதர்ஷினி கார்த்திகா அருள் மற்றும் அவ்வீட்டில் உள்ள வாண்டுகள் தங்களுக்குள் ஏதோ மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.


சமர் தங்கள் வீட்டிற்கு வருவானா மாட்டானா என்ற ஏக்கத்தில் தாய்மார்கள் இருக்க எங்கே அவன் வந்து விடுவானோ என்ற பயத்தில் தாத்தா பாட்டி சித்தப்பா மற்றும் அவனது அப்பா இருந்தனர்.


ஆதர்ஷினி குடும்பத்தினர் இதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் நிச்சயம் அவள் ஏதாவது ஒரு தீர்வு வைத்திருப்பாள் என்று எண்ணி அமைதி காத்தனர். ஆனால் அவள் எண்ணப்படியே சமர் அவனுடைய வீட்டிற்கு செல்வானா அல்லது தன் தோட்டத்தில் இருக்கும் வீட்டிற்கே சென்று விடுவானா என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.


தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari