• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன் ) 13

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
திருமணம் நல்ல முறையில் நடந்து முடிய அடுத்து சமர் அவனுடைய தோட்டத்து வீட்டிற்கு செல்வானா? அல்லது அவனுடைய குடும்பத்திலுள்ள அனைவருடனும் இணைந்து இருக்கும் வீட்டிற்கு செல்வானா? என்ற எண்ணம்தான் அங்கிருந்த பலருக்கு எழுந்தது.



அவன் பட்ட அவமானங்கள் அனைத்தும் தெரிந்த ஊர் மக்கள் பலர் அவன் இனி அந்த வீட்டிற்கு செல்ல மாட்டான் என்றே எண்ணினார்கள். அதற்கு ஏற்றார்போல் சித்தப்பாவிடம்



"சித்தப்பா நீங்க எனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சீங்க நானும் உங்களுக்காக எந்தவித மறுப்பும் சொல்லாமல் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன். இந்த கல்யாணம் நடக்கிறதா முடிவு பண்ணதுல இருந்து யாருமே என்னோட பேச்சை கேட்கவும் இல்லை, எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லவும் இல்லை. ஆனால் நான் எல்லாத்துக்குமே கட்டுப்பட்டு போனேன், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் சொல்றத கேளுங்க, இவ்வளவு நாள் நான் எப்படி இருந்தேனோ அப்படியே இருந்துக்க ஆசைப்படுறேன். அதனால தயவு செஞ்சு அந்த வீட்டிற்கு வரச்சொல்லி மட்டும் என்கிட்ட கேட்காதீங்க. நீங்க கேட்டா என்னால அதற்கு மறுத்து பதில் சொல்ல முடியாது. அதனால தான் நீங்க கேக்குறதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட இந்த விசயத்தை சொல்லிட்டேன்" என்று கூறி முடித்து அவர் முகத்தைப் பார்த்தான்.



அவன் கூறியது அவருக்கு வருத்தமாக இருந்தாலும் இப்போது தான் ஏதாவது மறுத்து கூறினால் இன்னும் மனதளவில் பாதிக்கப்படுவான் என்பதை உணர்ந்து கொண்டவர் "சரிடா நான் உன்னை வற்புறுத்தல இவ்வளவு நாள் நான் சொன்னத மதிச்சு நீ அமைதியா செஞ்சது போதும் நீ ஆசைப்பட்டபடி உன்னோட வீட்டுக்கு உன்னோட மனைவிய கூட்டிட்டு போ. நான் தடுக்க மாட்டேன் நீ உன்னோட வாழ்க்கையிலும் சந்தோசமா இரு" என்று வாய் வார்த்தையாக கூறியவர் மனதில்



'நிச்சயமா உன்னை தனியா விடுறதுக்கு உன்னோட பொண்டாட்டி ஆசைப்பட மாட்டா அவ ஏதாவது பண்ண தான் போறா கண்டிப்பா எங்க எல்லார் கூடவும் ஒன்னா சந்தோஷமா இருக்க தான் போற' என்று எண்ணிக்கொண்டார்.



இவர்கள் இருவரும் இங்கு பேசிக்கொண்டிருந்ததை சுற்றியிருந்த அனைவரும் கவனிக்க தான் செய்தனர். அங்கே என்ன பேச்சு வார்த்தை ஓடியிருக்கும் என்பதை உணர்ந்து கொண்டவர்கள், சிலர் அடுத்து நடக்கப் போகும் சேட்டையை கவனிக்க ஆயத்தம் ஆனார்கள். ஏனென்றால் இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே சமயம் ஆதர்ஷினி அவ்வீட்டில் உள்ள வாண்டுகள் உடன் பேசிக் கொண்டிருந்தாள்.



"டேய் பசங்களா இவ்வளவு நேரமும் நம்ம எல்லாரும் வச்சு செஞ்சதுக்கு இப்போ உங்க அண்ணன் நம்ம எல்லாரையும் வச்சு செய்ய பிளான் போடுவான். அவனுக்கு மேல போயி நாம ஏதாவது பிளான் போடணும், அதனால நான் என்ன பண்ணாலும் ஆமா சாமி போடணும் யாரும் தேவையில்லாம அனாவசியமா வாயைத் திறந்து என்கிட்ட வாங்கி கட்டிக் கொள்ளக் கூடாது. உங்க அண்ணன் உங்க கூட வந்து இருக்கணும் அப்படின்னு ஆசை இருந்தா நான் என்ன பேசினாலும் அமைதியா இருக்கணும் புரியுதா" என்று கேட்டாள்.



"நல்லாவே புரியுது அண்ணி ஆனா நீங்க பேசுறது இன்னும் அண்ணனுக்கு கஷ்டமா இருந்தா அண்ணன் மனசு ரொம்பவே கஷ்டப்படும் தானே! நீங்கள் பொறுமையாக பேசி புரிய வைக்கலாம் தானே" என்று சோகமாக கேட்டான் சரண்.



"டேய் ஒரு காயத்தை குத்தி கிளறினால் மட்டும்தான் அந்தக் காயத்தைப் சீக்கிரம் ஆறுதலாக வைக்க முடியும். ஆறிடும் ஆறிடும் அப்படின்னு விட்டு கொண்டே இருந்தா என்னைக்குமே அந்த காயம் ஆறாது. அது போல தான் உன்னோட அண்ணன் மனசுல இருக்க காயமும், நம்ம அந்த காயத்தை எவ்வளவுக்கு எவ்வளவு கிளருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவனோட காயங்கள் வெளியே வர ஆரம்பிச்சுரும். இல்ல அப்படின்னு சொன்னா அவன் அவனோட கூட்டுக்குள்ளே ஒதுங்கி தான் இருப்பான் என்னதான் அவன் கஷ்டப்பட்டாலும் அவனுக்கு தோள் கொடுத்து தாங்க நானும் இருக்கேன் நீங்களும் இருக்கீங்க அதனால கவலைப்படாதீங்க" என்று தெளிவாக புரிய வைத்தாள்.



அதன்பிறகுதான் அனைவரும் சம்மதமாக தலையசைத்து நின்று கொண்டிருந்தனர். அந்த நேரத்திற்குள் ஆதர்ஷினி அருகில் வந்த சமர் "சரி வா நேரமாச்சு நாம நம்மோட வீட்டுக்கு கிளம்பி போகலாம். இங்க இருந்தே நம்ம நம்மளோட வீட்டுக்கு போயிடலாம். மத்தவங்க எல்லாம் அவங்கவங்க வீட்டுக்கு போயிடுவாங்க, இதுக்கு மேல எந்த வாக்குவாதமும் பண்ணாம பேசாம கிளம்பி வா. உன் கூட சண்டை போடுற அளவுக்கு எனக்கு மனசுல இப்போ சக்தி இல்லை" என்று கூறினான்.



"நீங்க சொல்லி நான் கேட்காமல் இருக்க போறேனா ஏன்னா உங்க பேச்சுக்கு மறுபேச்சு ஏது? வாங்க கிளம்பலாம் நீங்க எங்க இருக்கீங்களோ அந்த இடம்தான் எனக்கு சொர்க்கம் அதனால கவலையே பட வேண்டாம் நான் எதுவுமே சொல்லாமல் உங்க கூட வாரேன் "என்று பணிவாக கூறிய ஆதர்ஷினி முகத்தை அனைவரும் குழப்பமாக தான் பார்த்தனர்.



ஏன் சமர் கூட 'இவ உண்மையாவே நாம சொல்றதுக்கு ஒத்துகிட்டு வரதா சொல்றாளா? இல்ல வேற ஏதாவது புதுசா பிளான் பண்ணி இருக்காளா? எதுவுமே புரிய மாட்டேங்குது' என்று எண்ணிக் கொண்டான்.



அவன் எண்ணத்தின் நாயகியோ அசராமல் அனைவரின் தலையிலும் அடுத்த இடியை இறக்கினாள்.



சரி வா என்று கூறி சமர் யோசனையுடன் முன்னே நகர ஆதர்ஷினி "கார்த்தி வா போகலாம் நாம ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே வீட்ல இருக்கணும், அப்படிங்கிற ஆசையில்தான் நம்ம அம்மா அப்பா நமக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இப்போ என்னோட புருஷன் அவரோட வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போக போறாரு அப்போ நீயும் அங்க தானே வந்து இருக்கணும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்படின்னு சொன்னா அவரு தப்பித்தவறி கூட அவருடைய தம்பிய கூப்பிடல. அதனால உன்னோட புருஷனுக்கு அங்க வர அனுமதி இல்லை நீ மட்டும் தான் என் கூட வர போற வரியா இல்ல கிளம்பி உன் புருஷன் கூட போறியா?" என்று கேட்டாள்.



அவள் கூறியதை கேட்டு அவர் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட கார்த்திகா பதில் கூறுவதற்கு முன்பு அருள் "இதெல்லாம் அநியாயம் என் பொண்டாட்டி நான் இல்லாமல் இருக்கக்கூடாது" என்று கூறி தன் வீட்டு பெரியவர்களின் முகம் பார்த்தான். அவர்கள் முகத்தில் இப்போது ஒரு புன்னகையை வர அதைக் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டே "என்னோட அண்ணனுக்கு எப்பவுமே நான் தம்பி தான். அதனால என்னோட அண்ணன் வீட்டுக்கு நான் வராமலா? அதேமாதிரி என்னோட பொண்டாட்டியோட அக்கா வீட்டுக்கு நான் வரலாம். அதுல யாரும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வளவு விஷயம் இருக்க காரணத்தினாலே நானும் என் பொண்டாட்டி கூட சேர்ந்து உங்க கூடயே தான் வருவேன்" என்று சிரித்த முகத்துடன் கூறினான்.



"அக்கா என்னோட புருஷன் உன்னோட வீட்டுக்கு வர்றதோ வராம இருக்கிறதோ அவங்க அண்ணன் தம்பி பிரச்சனை. ஆனா நீ எங்க கூப்பிடுவியோ அங்க தான் நான் வருவேன். இப்போ மாமா உன்ன எங்க கூட்டிட்டு போறாங்களோ அங்கேயே தான் உன் கூட நான் வருவேன்" என்று திட்டவட்டமாக கூறினாள் கார்த்திகா.



தன் மனைவி தன்னை கண்டுகொள்ளாமல் பேசியதைப் பார்த்த அருள் நேராக தன் அண்ணனிடம் சென்று "அண்ணா நான் உன்னோட வீட்டுக்கு வரக்கூடாதா? நீ என்ன கூட்டிட்டு போக மாட்டியா? உன் கூட வந்து அங்க நான் தங்க கூடாதா? பாரு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னையும் உன் கூட கூட்டிட்டு வர மாட்டேன்னு சொல்றாங்க. ப்ளீஸ் அண்ணா நீயாச்சும் என்ன கூட்டிட்டு போயேன்" என்று இவ்வளவு நாள் தன் அண்ணனிடம் பேச முடியாத சிறு பிள்ளை போல் பேசினான் அருள்.



அனைத்து விஷயங்களிலும் மிகவும் வளர்ந்தவனாக முடிவு எடுப்பவன் தன் அண்ணனிடம் சிறு குழந்தை போல் பேசுவதை பார்த்தவர்கள் அவர் நடிக்கிறானா என்ற ரீதியில் கூர்ந்து பார்த்தனர். ஆனால் அவன் கண்களில் சிறுவயது முதல் தன் அண்ணனிடம் பழக முடியாத ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது. அதை பார்த்த நல்லுள்ளம் கொண்டவர்கள் அவனின் உண்மையான மனநிலையை புரிந்துகொண்டு மெலிதாக புன்னகை செய்தனர்.



நடக்கும் அனைத்தையும் பார்த்து கடுப்பான சமர் நேராக தன் மனைவியிடம் சென்று "என்ன தாண்டி நெனச்சிட்டு இருக்க ஒரு முடிவோட தான் என்ன கல்யாணம் பண்ணி இருக்க, அதை தெள்ளத் தெளிவா எல்லாருக்கும் காட்டிகிட்டு இருக்க. உன்ன மட்டும் தானே என் கூட வா அப்படின்னு கூப்பிட்டேன். நீ என்னடா அப்படின்னு சொன்னா உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வரதுக்கு ரெடியாயிருக்க. அப்ப என் தம்பி வாழ்க என்ன் ஆகும் இதுல அவனும் வரக்கூடாதாம், என் தம்பி என்னோட வீட்டுக்கு வரதில்ல உனக்கு என்ன பிரச்சனை? இப்ப எதுக்கு நீ இந்த வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்க உனக்கு இப்ப என்னதான் வேணும்?" என்று கடுகடுப்புடன் கேட்டான்.



"இங்க பாருங்க நானும் என்னோட தங்கச்சியும் இதுநாள் வரைக்கும் ஒரே ரூம்ல தூங்காமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒரே வீட்ல தான் இருந்து இருக்கோம். அதே மாதிரி ஒரே வீட்ல உள்ள அண்ணன் தம்பியதான் நாங்க கல்யாணம் பண்ணி இருக்கோம், இதிலிருந்து நாங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் ஒன்றாக இருப்போம் அப்படிங்கிற சந்தோஷம் நிறைய பேருக்கு இருந்தது, இப்ப என்னடான்னா நீங்க உங்க வீட்டுக்கு கூப்பிடுறீங்க அப்போ என் தங்கச்சியை விட்டு என்னால் எப்படி வரமுடியும்.



ஏற்கனவே உங்க வீட்டுல உள்ளவங்க எல்லாரும் உங்க ராசி சரி இல்ல அப்படின்னு சொல்லிட்டு உங்களை ஒதுக்கி வச்சிருக்காங்க. என் தங்கச்சி அங்க உள்ள போற நேரம் ஏதாவது பிரச்சனையானா என் தங்கச்சியும் ஒதுக்கி தான வைப்பாங்க. நீ இவ்வளவு நாள் எதையுமே வெளியே காண்பிக்காமல் உள்ளே வச்சி இருக்கலாம் ஆனா என் தங்கச்சிக்கு அப்படி ஒரு பழக்கம் கிடையாது.



எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒன்னு என்கிட்ட சொல்லிடுவா இல்லனா அழுதது அந்த கவலையை மறக்க நினைப்பா. உங்க வீட்டுக்கு போய் தினம் தினம் என் தங்கச்சி அழுவதை எல்லாம் என்னால சகித்துக் கொண்டு இருக்க முடியாது. ஒன்னு 4 பேரும் அந்த வீட்டுக்கு போவோம் இல்லியா நாம மூணு பேரும் உங்க வீட்டுக்கு போவோம். உங்க தம்பி வருவதும் வராததும் உங்களுக்கும் அவனுக்கும் உள்ள விஷயம்.



என் தம்பி என் கூட தான் இருப்பான் அப்படின்னு நீங்க முடிவெடுத்தாலும் சரி, இல்ல உங்க வீட்ல உள்ளவங்க அவனை பிரிந்து இருக்க மாட்டாங்க அப்படிங்கிற காரணத்துக்காக அவனை வீட்டுக்கு போக சொன்னாலும் சரி, நான் எங்க இருக்கேனோ அங்க தான் என்னோட தங்கச்சியையும் நான் இருக்க வைப்பேன்" என்று அழுத்தம் கொடுத்து கூறி முடித்தாள்.



அவை முழுவதையும் கூறி முடித்ததை கேட்ட சமர் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு ஒரு பக்கம் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் உள்ளவர்களுக்கு கலக்கமாக இருந்தது.



சமர் ஆதர்ஷினி கூறிய அனைத்தையும் உள் வாங்கியபடி இனி என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கும் நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக அவனுடைய மற்ற தம்பி தங்கைகள் நேராக அவனிடம் சென்று "அண்ணா இது நாள் வரைக்கும் நாங்க உங்க எல்லாரையும் விட்டு பிரிஞ்சி இருந்தது போதும். எங்க எல்லாருக்கும் அண்ணி ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தவுடனே என்னென்ன பண்ணனும் அப்படின்னு நிறைய ஆசைகள் இருந்துச்சு.



இப்போ நீங்க நாலு பேரும் வீட்டுக்கு வராம உங்க தோட்டத்துக்கு வீட்டுக்கு போற மாதிரி இருந்தா நாங்களும் அங்கேயே வந்து விடுவோம். ஏற்கனவே எங்களுக்கு ஸ்கூல்ல என்ன பிரச்சனை வந்தாலும் நீங்கதான் பார்க்கிறீங்க போற வழியில எந்த பிரச்சனையும் வராம உங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்காங்க.



அதனால உங்க கூடவே இருந்தான் நாங்க இன்னும் பாதுகாப்பா தான் இருப்போம். ப்ளீஸ் அண்ணா இனியாவது நாம எல்லாரும் சேர்ந்து இருக்கலாம். அது நம்ம வீடா இருந்தாலும் சரி இல்ல தோட்டத்து வீடாக இருந்தாலும் சரி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் நாங்களும் சேர்ந்து தான் வருவோம்" என்று கூறினார்கள்.

இவர்கள் அனைவரின் ஒற்றுமையை நினைத்து சமரின் அன்னைக்கும் சித்திக்கும் கண்கள் கலங்கியது. அவர்களுக்குமே தன் பிள்ளைகள் தன்னை விட்டு செல்கிறார்களே என்ற கவலை துளிக்கூட இல்லை. இனியாவது அவர்கள் அவர்கள் அண்ணனோடு மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.


நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்த சமர் தான் இப்போது குழப்பமான நிலைக்கு வந்தான்.


"இப்ப நான் என்னதான் செய்றது மொத்தமா எல்லாரையும் என் கூட கூட்டிட்டு போய் வச்சிக்கிறது எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது. அவங்க எல்லாரையும் நான் இதுவரைக்கும் பத்திரமாக பார்த்து கொண்டது போல ரொம்ப கவனமா பார்த்துப்பேன். அதே மாதிரி என்னால சம்பாதிச்சு என்னோட தங்கச்சிகளுக்கும் தம்பிகளுக்கும் நல்ல படிப்பையும் ஒரு நல்ல எதிர்காலத்தையும் அமைத்து கொடுக்க முடியும். ஆனா அப்பா அம்மா கூட இல்லாம வளர்வது எவ்வளவு கஷ்டம் அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும். அதே கஷ்டத்தை இவங்க எல்லாருக்கும் நான் கொடுக்கணுமா இல்ல இவங்க எல்லாருக்காகவும் சேர்ந்து அந்த வீட்டுக்குள்ள நான் போகனுமா! அப்படி நான் போனா இவங்களும் அதே வீட்ல இருப்பாங்க ஆனா நான் போறது அங்க உள்ள ஒரு சிலருக்கு தான் பிடிக்காது என்னதான் முடிவு பண்றது" என்று தனக்குள் எண்ணிக் கொண்டிருந்தான்.


இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் பார்த்து பொறுமை இழந்த முருகன் நேரடியாக தன் பிள்ளைகளான சரண் மற்றும் சரண்யா இருவரிடமும் சென்றார்.


"என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் அவன்கூட போறேன் அப்படின்னு அசால்ட்டா சொல்லிட்டு இருக்கீங்க. உங்கள இவ்வளவு நாள் பார்த்து கிட்ட நாங்க எல்லாம் யாரு அந்த ராசி கெட்டவன் கூடவே இருந்து உங்களை நீங்களே கஷ்டப்படுத்த போறீங்களா? உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம் இருக்கணும், இவ்வளவு நாள்களாக பாசமா பார்த்து பொத்தி பொத்தி வளர்த்தா இன்னைக்கு வந்து நின்னுக்கிட்டு அவன்தான் வேணும் அவன் கூட போறேன்னு யார்கிட்டயும் எதைப்பற்றியும் கேட்காமல் நீங்களா முடிவு எடுக்கிறீர்கள்" என்று கூறி அவர்கள் இருவரையும் அடிக்க கையை ஓங்கினார்.


எங்கே தங்களுடைய தந்தை அடித்து விடுவாரோ என்ற பயம் இருவருக்கும் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "நீங்க மட்டும் உங்களோட அண்ணன் கூட சந்தோஷமா இருக்கீங்க. ஆனா நாங்க எங்க அண்ணனை விட்டு பிரிஞ்சு இருக்கனுமா அதெல்லாம் எங்களால முடியாது. ஏன் இவ்வளவு நாள் நீங்க எல்லாராலயும் தான் எங்களால சரியா கூட பேச முடிந்தது இல்ல. ஆனா எங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் உங்களுக்கு தெரியுரதுக்கு முன்னாடி அண்ணனுக்கு தெரிஞ்சு அண்ணன் தான் அதை சரி பண்ணிக்கிட்டு இருக்கான். அதனால இதுக்கு மேல எங்களால அண்ணனை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது" என்று தங்களது குரலில் கூறினார்கள்.


இதில் இன்னும் ஆத்திரம் அடைந்தவர் அவர்கள் இருவரையும் அடிப்பதற்கு நெருங்கி விட்டார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் இருவரையும் அடிக்க விடாமல் தன் பக்கம் இழுத்து சமர் தன் சித்தப்பாவின் கையை அழுந்த பற்றிக்கொண்டான்.


"உங்க எல்லாருக்கும் இவ்வளவு தான் மரியாதை. இவ்வளவு நாள் நீங்க என்ன வேணும்னாலும் பேசிட்டு போங்க அப்படின்னு நான் அமைதியா இருந்து இருக்கேன். ஆனா இவங்கள அடிச்சீஙக அப்படின்னு சொன்னா என்னோட இன்னொரு முகத்தை பார்ப்பீங்க. இதுநாள் வரைக்கும் என்கிட்ட இவங்க பேசினா நீங்க இவங்க எல்லாரையும் கஷ்ட படுறீங்க அப்படின்னு சொல்லி தான் நான் அமைதியாக இருந்தேன்.


ஆனா இவங்க எல்லாரோட மனசுலயும் பெரிய கஷ்டமா மாதிரி இருக்குன்னு இன்னைக்கு தான் எனக்கு தெரிஞ்சது. இதுக்கு மேல இவங்க யாரையும் கஷ்டப்படுத்த விரும்பல, இன்னைல இருந்து நானும் என்னோட பொண்டாட்டியோட அந்த வீட்டுல தான் இருக்கப் போறேன். உங்களால முடிஞ்சத நீங்க பாத்துக்கோங்க. என்ன அந்த வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு உங்க அப்பாக்கு கூட உரிமை கிடையாது.
ஏன்னா அது பரம்பரை சொத்து அந்த குடும்பத்தில் பிறந்த யார் வேணும்னாலும் அந்த வீட்ல இருக்கலாம். நீங்க எல்லாரும் என்ன அந்த வீட்ல இருக்க கூடாது அப்படின்னு நினைச்சா நான் உங்க அண்ணனுக்கு பிறக்கவே இல்ல அப்படின்னு நீங்க நிரூபிக்க முடியுமா? உங்களால முடிஞ்சா அத செய்யுங்க இல்லனா அமைதியா போங்க நானும் இனி அந்த வீட்ல தான் இருப்பேன்" என்று தன் தம்பி தங்கைகளை அடிக்கப் போகிறார் என்ற ஆதங்கத்தில் திட்டவட்டமாகவும் அழுத்தமாகவும் தன்னுடைய முடிவை கூறிவிட்டான். அப்போது அவன் மனதில் தன்னுடைய கஷ்டங்கள் எதுவும் பெரிதாக தெரியவில்லை என்பதுதான் உண்மை.

இதற்காகவே காத்திருந்தது போல் நேராக அவனிடம் வந்த செல்வராஜ் "வாங்கடா நல்ல நேரம் முடிவதற்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு அதுக்குள்ள வீட்டுக்குபோயிடலாம்" என்று யாரையும் எதுவும் பேச விடாமல் 4 ஜோடிகளையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.


நடந்த அனைத்து விஷயங்களிலும் கடுப்பில் நின்றுகொண்டிருந்த பரிபூரணம் பாட்டி இப்பொழுது சமருக்கு ஆரத்தி எடுக்க தோன்றாமல் மெல்ல நடந்து வந்தார். அதை பார்த்த ஆதர்ஷினி "என்ன கிழவி இவ்வளவு நேரம் கால் எல்லாம் நல்லா தான் இருந்துச்சு. இப்போ வரமாட்டேங்குது நீயா வந்து ஆரத்தி எடுக்குறியா இல்ல இந்த ஊர்ல இருக்க எல்லார்கிட்டயும் நீ பண்ற வேலை எல்லாத்தையும் சொல்லி உன்ன திட்டுவாங்க வைக்கவா" என்று நக்கலாக கேட்டாள்.


ஆதர்ஷினி கூறியதைக் கேட்டு ஒன்றும் செய்ய இயலாத கடுப்போடு மௌனமாக வந்து இரண்டு ஜோடிகளுக்கும் ஆரத்தி எடுத்தார் பரிபூரணம் பாட்டி அவர் பின்னே அந்த வீட்டின் மருமகள்களும் மகிழ்ச்சியோடு வந்து ஆரத்தி எடுத்தனர்.


ஆதர்ஷினி பேசும்போதுதான் தன்னுடைய முழு சுயநினைவிற்கு வந்தவன் ஒரு அவசரத்தில் தான் எடுத்த முடிவை நினைத்து நொந்து கொண்டான்.


'அய்யய்யோ இந்த பய புள்ளைங்க மேல் உள்ள பாசத்தில் அவசரப்பட்டு இந்த வீட்டுக்குள்ள வர்றேன் என்று முடிவு எடுத்துட்டோமோ இனி இங்க நடந்தது எல்லாம் நமக்கு ஞாபகம் வருமே நம்மளால இந்த வீட்டில சமாளிக்க முடியுமா? இன்னொரு விஷயம் நம்ம பொண்டாட்டி கிட்ட மாட்டிக்கிட்டு இவங்க எல்லாரும் என்ன பாடுபடுத்த போறாங்களோ? அதை நினைக்கும் போதே இன்னொரு பக்கம் கஷ்டமாகவும் இருக்கே' என்று எண்ணிக் கொண்டிருந்தான்.


அதேநேரம் பரிபூரணம் பாடி ஆரத்தி எடுக்கும் போது அவர் கண்களில் இருந்த வெறுப்பும் அதன் பின்பு ஆரத்தி எடுத்த தாய்மார்களின் கண்களில் இருந்த மகிழ்ச்சியும் அழகை அவனுக்கு யாரெல்லாம் இந்த வீட்டில் தங்கி எவ்வளவு தூரத்திற்கு தேடி இருக்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியது. அதனால் குழப்பம் கலக்கம் மகிழ்ச்சி கலந்த கலவையாக நின்றுக் கொண்டிருந்தான்.


அவனது எண்ணத்தை சரியாக புரிந்து கொண்ட ஆதர்ஷினி அவன் கையை அழுத்திப் பிடிக்க மறுபக்கம் அருள் தன் அண்ணன் கையை ஒரு கையால் தன் மனைவி கையை ஒருகையால் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய ஆயத்தமானான்.


ஆகமொத்தம் அவ்வீட்டில் உள்ள அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது வலது காலை எடுத்து வைத்து தன் கணவனுடன் உள்ளே நுழைந்தால் நம் நாயகி அவளுக்கு உறுதுணையாக இருக்கப் போற அவர்களும் மகிழ்ச்சியாக அவள் பின்னே உள்ளே நுழைந்தனர்.


இனி என்ன நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari