• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 5

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
வண்டியில் சென்று கொண்டு இருந்த ஆதர்ஷினி மனதில் "என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா நீ என்னோட மனசை புரிஞ்சு கொள்வாய் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நீ என்னை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டாய் என்கின்ற விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு தெரிகிறது இருந்தாலும் உன்னுடைய மனதில் உள்ள காயம் அனைத்தும் என்னிடம் நெருங்க விடாமல் தடுக்கிறது என்பதையும் நீ அவ்வப்போது காட்டிக் கொண்டு இருக்கிறாய் இதற்கு விரைவில் ஒரு தீர்வை கண்டு பிடிக்கிறேன்" என்று எண்ணிக்கொண்டு சென்று கொண்டே இருந்தவள் கண்ணில் அதற்கான தீர்வு பட்டது.

அதை பார்த்த அவள் சிரித்துக்கொண்டே தன்னுடைய வீட்டிற்கு கிளம்பி சென்றாள். அவள் பின்னே அமர்ந்து இருந்த பவானி மனதில் ஆதர்ஷினி கூறிய விஷயமே ஓடிக்கொண்டு இருந்தது. அதாவது பவானி மற்றும் ஆதவன் இருவருக்குமான திருமண விஷயம் எனென்றால் பவானி சுத்தமாக இந்த விஷயத்தை யோசிக்கவில்லை தன்னுடைய தோழி தன்னுடைய நலனுக்காக இவ்வளவு யோசிப்பாள் என்று நிச்சயமாக அவள் நினைக்கவில்லை என்னதான் இருந்தாலும் சமரின் நிலைமையை நினைத்து ஆதவன் தன்னுடைய திருமணத்தை பற்றி யோசிக்க மாட்டான் என்ற விஷயத்தை பவானி அறிந்திருந்தாள். இதனால் சில சமயம் அவனை நினைத்து வருந்தும் செய்வாள் ஆனால் அதை எப்பொழுதும் தன்னுடைய தோழியிடம் காட்டிக் கொண்டது கிடையாது.

ஆனால் அதை ஆதர்ஷினி அறிந்து இவ்வளவு தூரத்திற்கு கொண்டு செல்வாள் என்று பவானி நிச்சயமாக நினைக்கவில்லை தன்னுடைய தோல்வியை நினைத்து அவள் அறியாமல் கண் கலங்கியது ஆனால் அதை தர்ஷினி அறியாமல் மறைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

அப்போதுதான் அவளுடைய அமைதியை உணர்ந்த தர்ஷினி "அடியே பானிபூரி ரொம்ப பீல் பண்ணாத இன்னும் நிறைய விஷயம் பண்ண வேண்டியது இருக்கு என்ன என்ன பண்ணனும் அப்படின்னு வரிசையா சொல்றேன் எல்லாத்தையும் மண்டையில் ஏற்றுக்கொள் ஏன்னா இனிதான் நம்ம பண்ண வேண்டியது நிறைய இருக்கு" என்று வரிசையாக செய்ய வேண்டிய அனைத்தையும் கூறினாள்.

தன் தோழி கூறிய அனைத்தையும் கேட்ட பவானி "அடியே ஆத்திசூடி என்ன தைரியத்துல இப்படி எல்லாம் பண்ணலாம் அப்படின்னு நீ முடிவெடுத்து இருக்க எல்லாருமா சேர்ந்து நம்மள கும்மி எடுத்துடுவாங்க ஏண்டி இப்படி விபரீதமாக யோசிக்கிற இதுல என்னையும் வேற கூட்டு சேர்க்கிற கொஞ்சமாச்சும் பாவம் பாக்குறியா" என்று கதற ஆரம்பித்தாள்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஆதர்ஷினி "அதெல்லாம் உன்னை விட முடியாது நான் சொன்ன மாதிரி ஒன்னு ஒன்னா பண்ணனும். அதனால இந்த விஷயத்திலிருந்து கழண்டுகலாம் அப்படின்னு கொஞ்சம் கூட ஆசைப்படாத அதெல்லாம் நடக்கவே செய்யாது இதில் நீ மட்டும் இல்ல நம்ம வீட்ல உள்ள எல்லாரையும் சேர்த்துதான் இழுத்துவிடுவேன் அதனால எது வாங்குவதாக இருந்தாலும் மொத்தமா சேர்த்து தான் வாங்குவோம் கவலை படாம நிம்மதியா வா" என்று கூறினாள்.

பவானி வெளியே தன்னுடைய தோழியை திட்ட முடியாமல் மனதிலேயே 'இவ ஒருத்தி எனக்கு பிரண்டா கிடைக்க போய் அப்பப்போ ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது இப்ப பண்ண போற விஷயம் எவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று எல்லாம் தெரிஞ்சும் இவ்வளவு ரிஸ்க் எடுத்து எல்லாம் பண்ண போகிறாளே இதுல இவ சொல்ற மாதிரி வீட்ல உள்ள எல்லாரும் வேற இவளுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க ஆத்தா மகமாயி நீதான் உன்னோட பிள்ளையோட உயிர இவங்க எல்லாரோட கையில இருந்து காப்பாத்தனும்' என்று வேண்டிக் கொண்டு வந்தாள். சரியாக ஸ்கூட்டி நிறுத்தும் சத்தம் கேட்க தன்னுடைய வீடு வந்துவிட்டது என்பதை உணர்ந்தவள் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அமைதியாக சென்றாள்.

அவளுடைய அமைதியை பார்த்து சிரித்துக்கொண்டே தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் ஆதர்ஷினி. எப்பொழுதும் அவள் முகத்தில் இருக்கும் சிறு வருத்தம் இல்லாமல் அமைதியாக மட்டுமல்லாமல் தெளிவுடன் ஒரு புத்துணர்ச்சியாக இருப்பதை பார்த்த அவளுடைய பெற்றோர் முகத்திலும் புன்னகை வந்தது.

அனைவரையும் பார்த்து புன்னகை செய்தவள் "அம்மா அப்பா பெரியம்மா பெரியப்பா ரெண்டு பேரையும் கிளம்பி இங்க வர சொல்லுங்க எல்லார்கிட்டயும் கொஞ்சம் முக்கியமா பேசணும் அவங்க வர்றதுக்குள்ள நான் போய் பிரஷ் ஆகிட்டு வந்துடறேன்" என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றாள்.
அவர்களும் அவள் முகத்தில் இருந்த உற்சாகத்தை பார்த்து நிச்சயமாக விரைவில் நல்லது நடக்கப் போகிறது என்று எண்ணி மகிழ்ந்து கொண்டு ஆதவன் பெற்றோருக்கு செல்போனில் அழைத்தார் பாண்டியன்.

இவர்களுடைய அழைப்பை பார்த்த உடனேயே என்னவோ என்று அட்டன் செய்தவர்கள் காதில் வைத்த உடன் ஆதர்ஷினியின் தந்தை பாண்டியன்"அண்ணா அண்ணிய கூட்டிக்கிட்டு உடனடியா வீட்டுக்கு வாங்க பாப்பா உங்ககிட்ட என்னமோ பேசணும் அப்படின்னு சொல்றா முகத்தில் ஒரு சந்தோஷம் தெரியுது எனக்கு தெரிஞ்சு என்னமோ நல்ல விஷயம் நடக்க போகுது அப்படின்னு நினைக்கிறேன் எதுவா இருந்தாலும் நமக்கு சந்தோஷம்தான் இருக்கும் அதனால சீக்கிரம் கிளம்பி வாங்க" என்று கூறிவிட்டு அவர்களுடைய பதிலுக்காக காத்து இருந்தார்.

அவர்களோ எப்போது ஆதர்ஷினி வீட்டிற்கு வர கூறியிருக்கிறாள் என்ற செய்தி புத்தகம் அப்போதே வீட்டை எல்லாம் பூட்டி வைத்து அங்கிருந்து கிளம்பி இருந்தனர். அதனால் ஆதர்ஷினி தந்தை பேசி முடித்துவிட்டு பதிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவர்கள் வீடு அருகே நெருங்கி இருந்தனர் அதைப் பார்த்தவர் சிரித்துக் கொண்டே அவர்களை வரவேற்றார்.
"வாங்க அண்ணா அண்ணி பாப்பா இப்ப தான் பிரஸ் ஆக போயிருக்கா உட்காருங்க உங்களுக்கு காபி கொண்டு வரே சொல்றேன் குடிச்சிக்கிட்டே அமர்ந்து இருப்போம் அவளும் வந்து காபி குடிச்சி முடித்தபிறகு மொத்தமா பேசிக்கலாம்" என்று கூறினார் ஆதர்ஷினியின் தந்தை பாண்டியன்.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருந்த நேரத்திலேயே ப்ரஷ் ஆகி வெளியே வந்த தர்ஷினி அனைவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு அனைவரும் அமர்ந்திருந்த இடத்தில் அவர்களுடன் சேர்ந்து காபி குடிக்க ஆரம்பித்தாள் அனைவரும் குடித்து முடித்தவுடன் அனைவருடைய முகத்தையும் பார்த்தவள்.

ஆதர்ஷினி"அம்மா அப்பா பெரியம்மா பெரியப்பா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அது என்ன அப்படின்னு சொன்னா இவ்வளவு வருஷம் நானும் சமர் மனசு மாறும் அப்படின்னு காத்து இருந்து பார்த்தாச்சு ஆனால் அதற்கான வாய்ப்பு சமர் கொடுக்கிற மாதிரியே தெரியல என் மேல சில நேரங்களில் ஆசை வந்தாலும் ஏதோ ஒன்று அவனை தடுத்து கிட்டே இருக்கு அதனால இப்படியே போனா சரிப்பட்டு வராது எப்படியாவது நீங்க என்ன சமாளிச்சு வேற யாருக்காவது கல்யாணம் பண்ணி வச்சீ விடுவீங்க அப்படிங்கற தைரியத்தில் அவன் இருக்கான் அதெல்லாம் நடக்காது அப்படின்னு இப்ப காட்டுவதற்கு நமக்கு நேரமில்லை ஆனா அதுக்கு பதிலா வேற ஒரு வழி கிடைச்சிருக்கு இதன் மூலமா சமரோட வீட்ல இருக்க எல்லாரோட தலைமையிலும் சமர நான் கல்யாணம் பண்ணிக்கலாம் நீங்க எல்லாரும் எனக்கு உதவியா இருப்பீங்களா" என்று கேட்டாள்.

அனைவருக்கும் முதலில் அவள் கூறும் போது 'எங்கே இன்னும் சமர் மனது மாறவில்லை இனி வேண்டாம் என்று கூறி விடுவாளோ' என்றுதான் நினைத்தனர் ஆனால் போகப்போக அவள் கூறியது அனைத்தும் அனைவரின் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எப்படி சமர் வீட்டில் உள்ள அனைவரும் சமரின் திருமணத்திற்கு சம்மதித்து அங்கு வந்து நிற்பார்கள் என்ற கேள்வி அங்கிருந்த அனைவருக்கும் உதயமானது. அதே கேள்வியோடு அவளுடைய முகத்தை பார்க்க அனைவரையும் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாள் ஆதர்ஷினி.

அந்த சிரிப்பே சொன்னது அவள் ஏதோ ஒரு திட்டத்தை தீட்டி விட்டாள் என்று ஆனால் அது என்ன திட்டம் என்று கேட்கும் ஆவலில் அனைவரும் காத்துக்கொண்டு இருந்தனர்.
அனைவருடைய முகத்தில் இருந்த ஆர்வத்தை பார்த்து சிரித்த ஆதர்ஷினி அவளுடைய திட்டத்தை படிப்படியாக விளக்கினாள். அவள் கூறிய அனைத்தையும் கேட்டவர்களுக்கு அதில் ஒருசில அதிர்ச்சியும் இருந்தது இருந்தாலும் அனைத்தும் நல்லதற்கே என்று எண்ணிக் கொண்டனர். அதனால் அவள் கூறியது அத்தனையும் கேட்டு அதில் எந்தவித பிரச்சனையும் இல்லாத காரணத்தினால் அதை அனைத்தையும் செய்வதற்கு சம்மதமாக தலையசைத்தனர்.

அதை பார்த்து உண்மையில் மகிழ்ந்து போன ஆதர்ஷினி தங்கவேல் மற்றும் பாண்டியன் இருவரையும் பார்த்து "அப்பா பெரியப்பா எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் எதுவுமே ஆதவன் அண்ணாக்கு தெரியக்கூடாது ஏன்னா ஏதாவது ஒரு நிலைமையில சமர் வருத்தப்படுற மாதிரி ஆச்சு அப்படின்னா அண்ணா மறைக்காம எல்லா விஷயத்தையும் சமர் கிட்ட போய் சொல்லிடுவாங்க அந்த நிமிஷத்துல இருந்து நம்மளோட பிளான் மொத்தமா சொதப்பி போயிடும் சமர் என்ன விட்டு ஒதுங்கி இருக்கிற வரைக்கும் என்னால எதுவுமே பண்ண முடியாது எப்ப சமர என்னோட பக்கத்திலேயே வைத்துக் கொள்கிறேனோ அப்ப இருந்து அவனோட சந்தோஷம் எல்லாத்தையும் திருப்பி கொடுக்க முடியும்" என்று தெளிவாக கூறினாள்.

அனைவரும் அதன்பிறகு மகிழ்ச்சியாக இரவு உணவை முடித்து விட்டு நாளை முதல் என்னென்ன செய்ய வேண்டும் என்று தங்களுக்குள் எண்ணிக் கொண்டு தூங்க சென்றனர்.
மறுநாள் காலை முதல் பெரியவர்கள் அனைவரும் தர்ஷினி கூறியபடி அனைத்தையும் செய்ய ஆரம்பித்தனர். இங்கே வயலில் வேலை செய்து கொண்டு இருந்த சமர் மற்றும் ஆதவன் இருவரையும் சந்திக்க சமரின் சித்தப்பா செல்வராஜ் வந்தார்.

இவர்கள் இருவரும் அவர் வருகையை கவனிக்காமல் தங்களுடைய வேலையில் கவனமாக இருக்க அதை பார்த்து சிரித்தவர் "டேய் பசங்களா கொஞ்சமாச்சும் வர்றவங்க போறவங்க எல்லாரையும் பாருங்க முழுசா அதுக்குள்ள மூழ்கி போயிடாதீங்க சுத்தி இருக்கிறவன் என்ன பண்றான்னு கூட தெரியாது எப்போ எவன் எங்கே இருந்து வந்து என்ன பண்ணுவான் அப்படின்னு கூட தெரியாது வேலையில கவனமா இருந்தாலும் சுத்தி நடக்குற விஷயத்துலயும் கொஞ்சம் கவனமா இருங்க" என்று கூறினார்.

அவருடைய சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த இருவரும் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அவரை பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவரை நோக்கி வந்தனர். செல்வராஜ் இருவரின் புன்னகை முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார் அவர்கள் இருவரும் கை கால்களை கழுவி வரும்வரை பார்த்துக் கொண்டு இருந்தார்.

அவர்கள் இருவரும் வந்தவுடன் முதலில் இருவரையும் நலம் விசாரித்து முடித்தவர் அதன்பிறகு சமர் முகத்தை அழுத்தமாக பார்த்து "உன்னோட தம்பிக்கு கல்யாணத்துக்கு அவசரம் வந்துடுச்சாம் அவன் ஏதோ ஒரு பொண்ண காதலிக்கிறானாம் ஆனா அந்த பொண்ணோட வீட்ல மூத்த பையன் இருக்கும்போது இரண்டாவது பையனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க மாட்டேன் அப்படின்னு சொல்லுவாங்க போல இவன் நேரடியா அவங்க வீட்டுக்கு போய் பேசி இருக்கிறான் ஆனால் அவங்க உனக்கு கல்யாணம் முடியாமல் அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டோம் அப்படின்னு ரொம்ப தெளிவாக பேசி இருக்காங்க இன்னும் வீட்ல யாருக்கும் தெரியாது என் கிட்ட வந்து இவ்வளவு விஷயத்தையும் சொன்னான்.

எனக்கு உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும் அப்படின்னு ஆசை இருக்குது உனக்கு கல்யாணம் முடியாமல் வேறு யாருக்கும் கல்யாணம் பண்ண நானும் விடவே மாட்டேன். இந்த விஷயத்துல நீ சொல்ற எதையுமே நான் கேட்க போறது கிடையாது ஒன்னு உனக்கு ஏதாவது பொண்ணை பிடிச்சி இருந்தா சொல்லு அந்த பொண்ணையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் இல்லையா நான் ஏதாவது ஒரு பொண்ணு பார்க்கிறேன் அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கோ உனக்கு ஒரு வாரம் டைம் தரேன் யோசிச்சு முடிவெடு" என்று கூறியவர் ஆதவனை பார்த்து ஒரு தலையசைப்பு கொடுத்து விட்டு கிளம்பிவிட்டார்.

சமருக்கு அவன் சித்தப்பா கூறியதிலிருந்து என்ன செய்வது என்றே தெரியவில்லை ஏனென்றால் அவனுக்கு திருமணம் செய்து ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கவில்லை அப்படி ஏதாவது நடந்தால் பிரச்சனைகள் வேறு மாதிரியாக வருமோ என்று எண்ணிக்கொண்டு அதை அனைத்தையும் ஒதுக்கி வைத்து இருந்தான் ஆதர்ஷ்னி மேல் அவனுக்கு ஒருவிதமான பாசம் மற்றும் ஆசை இருந்தாலும் அதை வெளிக்காட்டி அவளுடன் காதல் செய்து தன்னால் அவளுக்கும் ஏதாவது பிரச்சனை வர வைத்துக் வாழ்வதற்கு அவன் மனது இடம் கொடுக்கவில்லை அதனால்தான் அவளை முறைத்து க்கொண்டு சுற்றிக் கொண்டு இருக்கிறான்.

இதில் அவன் சித்தப்பா வேறு கண்டிப்பாக ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியது சமருக்கு உள்ளுக்குள் எங்கேயோ அபாய மணி அடித்தது. ஒரு வாரம் அவர் அவனுக்கு யோசிக்க நேரம் கொடுத்து இருந்த காரணத்தினால் எதுவாக இருந்தாலும் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால் அவனுக்கு அவனுடைய தம்பி செய்தது நினைத்து யோசனையாக இருந்தது நிச்சயமாக தன்னுடைய வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் அவன் இவ்வாறு செய்கிறான் என்று அவனுடைய மனதில் தோன்ற ஆரம்பித்தது இருந்தாலும் அனைத்தையும் யோசிக்கும்போது குழப்பமான சூழ்நிலை தான் அவனை சுற்றி வந்தது இப்போது என்ன யோசித்தாலும் நிச்சயமாக அதற்கு பதில் கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டவன் அமைதியாக மறுபடியும் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

ஆனால் ஆதவன் மனதில் "ஏதோ ஒன்று நமக்கு தெரியாம நடக்குது கண்டிப்பா அது இவனோட கல்யாணமா தான் இருக்கும் எல்லாம் நல்லதா நடந்தால் சந்தோசம் தான் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவன் வந்து கஷ்டப்பட்டு விடக்கூடாது சந்தோஷமாக இருக்க வேண்டும்" என்று எண்ணிக் கொண்டு தன் நண்பனுடன் வேலையில் இறங்கிவிட்டான்.

அன்றைய நாள் முழுவதுமாக ஆதர்ஷினி சமரை சந்திக்க வரவில்லை ஏனோ சமருக்கு அவளைக் காணாமல் ஏதோ ஒரு விதத்தில் மனம் பதற ஆரம்பித்தது ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ என்று எண்ணி உள்ளுக்குள் கஷ்டப்பட ஆரம்பித்தான் ஆனால் அதை வெளியே கேட்டு அனைவரும் அவனை கேள்வியாக பார்ப்பதை அவர் விரும்பவில்லை அதனால் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டான்.

இப்படியே நாட்கள் செல்ல ஆரம்பித்தது தினமும் ஆதர்ஷினி வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனான் ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருந்தான் என்னதான் இருந்தாலும் தன் நண்பனின் முகத்தை வைத்தே அனைத்தையும் அறிந்தவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு அவனுடன் அமைதியாக இருந்து விடுவான்.

ஆனால் ஆதர்ஷினி தன்னுடைய திட்டப்படி அனைத்தையும் செயல்படுத்த ஆரம்பித்தாள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து தெளிவாக செய்தாள். அதற்கான பலனும் அவளுக்கு கைகூடி வந்தது அதனால் அவள் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்தாள்.

சில நாட்களுக்குப் பிறகு

மணமேடையில் தன்னுடைய கோபம் ஆற்றாமை வருத்தம் சிறிது மகிழ்ச்சி என்று எதையும் வெளியே காண்பிக்க முடியாமல் இறுகிப்போன முகத்துடன் அமர்ந்து இருந்தான் சமர் செல்வன் அவன் அருகே மிகவும் மகிழ்ச்சியோடு அழகு பதுமையாக அமர்ந்து இருந்தாள் ஆதர்ஷினி. சரியாக அந்த நேரம் முகூர்த்தத்திற்கு நேரமாகவே ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொல்ல அங்கே சுற்றி இருந்த அனைவரின் ஆசீர்வாதத்தோடு சமர் செல்வனின் மனைவி ஆனாள் ஆதர்ஷினி.

ஆனால் சமர் முகத்தில் அதற்கான மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதைப் பார்த்து அங்கிருந்த ஒரு சிலருக்கே வருத்தமாக இருந்தது ஆனாலும் அவன் மனைவி இனி அனைத்தையும் பார்த்துக் கொள்வாள் என்று நினைத்து அமைதி காத்தனர்.

ஆனாலும் அங்கே இருந்த ஒரு சிலர் முகத்தில் வேண்டாவெறுப்பாக நின்று கொண்டிருப்பது அப்படியே தெரிந்தது அதை அனைத்தையும் மனதில் குறித்துக் கொண்ட ஆதர்ஷினி புன்னகைத்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

இதற்கிடையில் நடந்தது என்ன என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari