ஆதர்ஷினி தன்னுடைய வீட்டிற்கு வரும் வழியில் தன்னுடைய தங்கை கார்த்திகா சமரின் தம்பி அருள்செல்வன் இருவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள் அது பார்ப்பதற்கு இருவரும் தோழர்களை போல பேசிக் கொண்டிருப்பதாக தெரியவில்லை ஏற்கனவே இவர்கள் இருவரைப் பற்றியும் அரசல்புரசலாக தர்ஷினி அறிந்து இருந்தாள்.
அதனால் அதை வைத்தே அனைத்தையும் நடத்த திட்டமிட்டாள். அதன்படி வீட்டில் உள்ள அனைவரிடமும் "அம்மா அப்பா பெரியம்மா பெரியப்பா உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அது என்ன அப்படின்னு சொன்னா சமர் கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான். ஆனா அவன ஒத்துக்க வைக்க ஒரே ஒரு வழி இருக்கு அது என்ன வழி அப்படின்னு சொன்னா என்னோட அருமை தங்கச்சி கார்த்திகா சமரோட தம்பி அருள காதலிக்கிறாள் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புறாங்க இவங்க ரெண்டு பேரோட காதலை வச்சு தான் எங்க கல்யாணத்தை நடத்த முடியும்" என்று கூறினாள்.
கார்த்திகா காதலிப்பது அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியான விஷயமே ஆனாலும் அவள் வேறு எந்த மோசமான குணத்தை கொண்டவனையும் காதலிக்காமல் அருளை காதலித்தது அனைவருக்கும் ஒரு விதத்தில் நிம்மதியை தந்தது. ஆனாலும் இதை வைத்து எவ்வாறு கல்யாணத்தை ஆதர்ஷினி உடன் நடத்துவது என்று குழப்பமாகவே அவள் முகம் பார்த்தனர்.
அனைவருக்கும் எந்த மாதிரியான குழப்பம் வந்து இருக்கும் என்பதை கண்டறிந்த ஆதர்ஷினி சிரித்துக்கொண்டே தன்னுடைய திட்டங்களை கூறி முடித்தாள்.
அதன்படி மறுநாள் முதல் அவள் சமர் இருக்கும் பக்கம் கூட செல்லவில்லை அதற்கு பதிலாக நேரடியாக அருள் மற்றும் கார்த்திகா இருவரும் சந்திக்கும் இடத்திற்கு சென்றாள்.
முந்தைய நாள் ஆதர்ஷினி தங்கள் இருவரையும் பார்த்து விட்டு சென்றதை அறிந்து இருந்த அருள் தன்னுடைய காதலியிடம் கூறினால் நிச்சயமாக ஏதாவது யோசித்து குழப்பிக் கொள்வாள் என்று நினைத்து அவளிடம் கூறாமல் இருந்து இருந்தான். இப்போது அவள் நேரடியாக தங்களை சந்திக்க வந்ததை வைத்தே ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்பதனை கண்டுகொண்டான்.
அதனால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வரவேற்றான் கார்த்திகா ஏற்கனவே கூடிய விரைவில் தன்னுடைய அக்காவிடம் சிக்கி விடுவோம் என்று தெரிந்து வைத்து இருந்த காரணத்தினால் அவளும் பெரிதாக பதட்டம் அடையவில்லை பவானி தான் மனதில் 'இதுங்க ரெண்டும் மாட்டிக் கொண்டோமே அப்படிங்கிற வருத்தத்துல நிற்கிறார்களா பாரு அதே மாதிரி தன்னோட தங்கச்சி காதலிக்கிற விஷயத்தை கண்டுபிடிச்சு அதுக்காக கோவத்துல நிற்கிறாளா பாரு மூணும் அமைதியா பல்ல காட்டிகிட்டு நிக்குது' என்று இவர்கள் மூவரையும் பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தாள்.
ஆதர்ஷினி நேரடியாக அருளை பார்த்து "கொழுந்தனாரே உன்ன வெச்சி ஒரு காரியம் ஆக வேண்டியது இருக்கு எனக்கு உன்னோட அண்ணன கல்யாணம் பண்ணனும் அப்படி என்கிற ஆசை இருக்கிறது உனக்கு தெரியும் ஆனா அதுக்கு உன்னோட அண்ணன் பிடி கொடுக்கவே மாட்டேன் அப்படின்னு நிற்கிறான்.
உனக்கு உன்னோட அண்ணன் மேல பாசம் உண்டு அப்படி என்கிற விஷயமும் எனக்கு தெரியும் இப்போ முக்கியமான விஷயம் என்ன அப்படின்னு சொன்னா என்ன தான் உன்னோட வீட்ல எல்லாருமே சமரை ஒதுக்கி வைத்து இருந்தாலும் அனைவருக்கும் உன் மீது பாசம் அதிகம் என்கின்ற விஷயம் எனக்கு தெரியும் இப்போ உன்னோட காதல வச்சிதான் எங்க கல்யாணத்தை நடத்த போகிறேன் அதற்கு நீ முழு ஒத்துழைப்பு தர வேண்டும் தருவாயா" என்று கேட்டாள்.
அருளுக்கு ஏற்கனவே இவர்களது காதல் விஷயம் தெரியும் அதுமட்டுமல்லாமல் சமர் மனதில் ஏதோ ஒரு வகையில் சிறு சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்கின்ற விஷயமும் தெரியும் ஆனால் தன்னுடைய அண்ணன் வாழ்வில் திருமண அத்தியாயத்தை தொடங்குவதற்கு மிகவும் தயங்கி நிற்கிறானே என்று பலமுறை அருள் வருந்தி இருக்கிறான்.
இப்போது தன்னால் தன்னுடைய அண்ணனுக்கு அனைவர் முன்பாக திருமணம் நடக்கும் அதுமட்டுமல்லாமல் அவனும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து மகிழ்ச்சியாக இருப்பான் என்ற விஷயத்தை கேள்விப்பட்ட உடன் வேறு எந்தவிதமான எதிர்ப்பையும் கூறாமல் "நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன் என்ன செய்யணும் அத மட்டும் தெளிவா சொல்லுங்க" என்று கேட்டான்.
ஆதர்ஷினி சிரித்துக்கொண்டே "முதல்ல நீ போய் உன்னோட வீட்ல கார்த்திகாவை காதலிக்கும் விஷயத்தை கூறு கண்டிப்பாக உன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு கூறுவதற்கு அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உன்னுடைய சித்தப்பா செல்வராஜிடம் நான் கூறி தான் இதையெல்லாம் செய்கிறாய் என்ற விஷயத்தை கூறிவிடு மற்றபடி வீட்டில் உள்ள யாரிடமும் இதை பற்றி கூற வேண்டாம் உன்னுடைய காதல் விஷயத்தை மட்டும் கூறு அதற்கு அவர்கள் எப்போது திருமணம் வைத்துக்கொள்ளலாம் யார் அந்தப் பெண் யாரிடம் சென்று பெண் கேட்க வேண்டும் என்ற விஷயத்தை எல்லாம் கேட்டார்கள் என்றால் உடனடியாக எனக்கு அலைபேசி வாயிலாக தொடர்பு கொள் அதன் பிறகு நான் நீ எப்படி எல்லாம் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று அனைத்தையும் கூறுகிறேன் அதன்படி அவ்வாறே செய்" என்று கூறினாள்.
அனைத்தையும் தெளிவாக கேட்ட அருள் அவளது முகம் பார்த்து "நீங்க சொல்றபடி எல்லாத்தையுமே நான் செய்கிறேன் ஆனால் எனக்காக நீங்க ஒரு விஷயம் செய்யணும் செய்ய முடியுமா" என்று கேட்டான்.
அவன் என்ன கேட்க வருகிறான் என்பதை புரிந்து கொண்ட ஆதர்ஷினி "கண்டிப்பா கல்யாணம் முடிஞ்சு உன்னோட அண்ணனான தனியா கூட்டிட்டு போக மாட்டேன். அதே வீட்ல ஒன்னாதான் இருக்க வைப்பேன் உன் வீட்ல யார் யார் அவன் வேணாம் அப்படின்னு நினைத்தார்களோ அவங்க எல்லாமே அவங்க தப்பை உணர்ந்து அவன் கிட்ட சந்தோஷமா மகிழ்ச்சியாக பேசுற மாதிரி வைப்பேன். அதனால அத நெனச்சி நீ கவலை படாதே" என்று தெளிவாகக் கூறினாள்.
இப்போது முழுவதுமாக தெளிந்த அருள் தன்னுடைய காதலியை பார்த்து கண்ணடித்துவிட்டு அவளிடம் அலைபேசி வாயிலாக பேசுவதாக கூறி விட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
அவன் சென்றதை உறுதிப்படுத்திய கார்த்திகா "அக்கா நீ நெனைக்கிற மாதிரி எல்லாமே எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடக்குமா இவ்வளவு நம்பிக்கையா சொல்ற எந்தவித பிரச்சினையும் வராது எல்லாத்தையும் நாம பாத்துக்கலாம்னு ஏற்கனவே அங்கு இருக்க யாருக்குமே பிடிக்காது அவங்க எப்படி உன்னோட கல்யாணத்துல சந்தோஷமாக கலந்து கொள்வார்கள்" என்று யோசனையாக கேட்டாள்.
ஆதர்ஷினி"அதெல்லாம் நடக்கும்போது நீயே பாப்ப அதனால எதையும் யோசித்து குழம்பாதே உனக்கும் சேர்த்துதான் கல்யாணம் இருக்கும் அதனால அதை நினைச்சு சந்தோஷப்பட்டு கனவு கண்டு கொண்டு இரு" என்று தன்னுடைய தங்கைக்கு ஆறுதல் அளித்தாள்.
அதில் சற்று தெரிந்தவள் வீட்டிற்கு கிளம்ப தயாரானாள். நடந்த அனைத்தையும் தலையில் கைவைத்து பார்த்துக் கொண்டு நின்றிருந்த பவானியை பிடித்து இழுத்த ஆதர்ஷினி "அடியே பானி பூரி வா என்னோட ஆளுக்கு தெரியாமல் அவனை சைட் அடிச்சிட்டு வருவோம் "என்று அவளுடைய பதிலை கூட கேட்காமல் விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு சென்றாள்.
இவள் திருந்துவது மாதிரி தெரியவில்லை என்று எண்ணிய பவானி வேறுவழியில்லாமல் அவள் இழுத்த இழுப்பிற்கு அவளுடன் சென்றாள். எப்பொழுதும் சமர் முன்பு சென்று ஏதாவது பேசி விட்டு வருபவள் இன்று அவனுக்கே தெரியாமல் அவனைப் பார்த்துவிட்டு உடனடியாக கிளம்பி விட்டாள்.
இங்கே ஆதர்ஷினி கூறியதுபோல வீட்டிற்கு சென்ற அருள் முதலில் சந்தித்தது தன்னுடைய சித்தப்பா செல்வராஜை தான் அவர் தனியாக அவருடைய அறையில் இருப்பதை பார்த்து அங்கு சென்று கதவை மூடி தாளிட்டு விட்டு அவர் அருகில் சென்றான்.
அருள் இவ்வாறு செய்வதை பார்த்த செல்வராஜ் கண்டிப்பாக ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை பேசப் போகிறான் என்பதை உணர்ந்துகொண்ட அதனால் அவரும் என்னவென்று கேட்பதற்காக தான் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளை அப்படியே வைத்துவிட்டு அவன் புறம் திரும்பினார்.
தன் சித்தப்பாவின் செய்கைகளை பார்த்து உள்ளுக்குள் மெச்சிய அருள் "சித்தப்பா உங்களுக்கு ஏற்கனவே நானும் கார்த்திகாவும் காதலிக்கிற விஷயம் தெரியும் அதேமாதிரி சமர் அண்ணாவை ஆதர்ஷினி காதலிக்கிற விஷயமும் தெரியும் இப்போ சமர் அண்ணாக்கு ஒரு நல்லது நடப்பதற்கு ஆதர்ஷினி ஒரு யோசனை சொல்கிறாள். அதற்கு உங்கள் மூலமாக ஒரு சில உதவிகள் தேவைப்படுகிறது உங்களால் செய்ய முடியுமா" என்று கேட்டான்.
செல்வராஜ் மிகவும் மகிழ்ச்சியாக "அவன் வாழ்க்கையில ஒரு நல்லது நடந்தால் ரொம்ப சந்தோஷ படுகிற ஆளா நான் தான் இருப்பேன் உனக்கு என்ன உதவி வேணும் சொல்லு" என்று கேட்டார்.
அருள் முதலில் ஆதர்ஷினி கூறிய அனைத்தையும் கூறிவிட்டு பின்பு "சித்தப்பா நாம வீட்ல பேசுவதற்கு முன்பாக முதல்ல அண்ணன் கிட்ட போய் இந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லுங்க கூடவே இன்னொரு விஷயம் என்ன சொல்லுங்க அப்படின்னு சொன்னா அந்த வீட்ல பையனுக்கு முன்னாடி ஒரு பையன் இருக்கிற காரணத்தினாலே அவளுக்கு கல்யாணம் முடிஞ்சா தான் கல்யாணம் பண்ணி கொடுப்பேன் அப்படின்னு சொல்லிட்டாங்க என்று அண்ணன் கிட்ட போய் பேசுங்க அதே மாதிரி ரொம்ப தெளிவா தீர்க்கமா பேசுற மாதிரி எல்லாத்தையும் பேசிட்டு வாங்க அதுக்கு அண்ணா எந்த மாதிரி முடிவு எடுக்குது அப்படின்னு பார்த்துவிட்டு வீட்ல நாளைக்கு எல்லா விஷயத்தையும் சொல்லுவோம். ஆனா வீட்ல நான் பேசும்போது உங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரி காட்டி கொள்ளவே செய்யாதீங்க" என்று கூறினான்.
செல்வராஜ்க்கு மனது மிகவும் நிறைந்து போனது அதனால் அவனுக்கு சம்மதமாக தலையை அசைத்தவர் உடனடியாக கிளம்பி சென்று சமரிடம் அனைத்தையும் பேசிவிட்டார். இறுதியில் சமரின் முகத்தைப் பார்த்தவர் அந்த முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை பார்த்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
செல்வராஜின் வருகையை ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருந்த அருள் அவர் முகத்தில் இருந்த சிரிப்பு வைத்தே போன காரியம் நல்லபடியாக முடிந்தது என்று யூகித்து விட்டான் அருளுக்கும் நிச்சயமாக தன்னுடைய அண்ணன் உடனடியாக சம்மதம் தெரிவிக்க மாட்டான் என்ற விசயம் தெரியும்.
ஆனால் ஏதோ ஒரு வகையில் அவன் குழம்பி போயிருக்கிறான் அதுவே நமக்கு நல்லதுதான் என்று எண்ணிக்கொண்டு தன்னுடைய வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடிப்பதற்காக காத்திருந்தான். ஏனென்றால் சாப்பிட்டு முடித்த பிறகு பெரும்பாலும் அனைவரும் ஒன்றுகூடி ஏதாவது பேசிக்கொண்டே இருப்பர் அந்த நேரத்தில் இந்த விஷயத்தை பேசலாம் என்று எண்ணி அமைதி காத்தான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வழக்கம் போல் ஒன்று சேரும் நேரத்தில் அருள் அமைதியாக யோசித்து கொண்டு இருப்பதைப் பார்த்து அனைவருக்கும் அவன் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை பேசப் போகிறான் என்ற விஷயம் தெரிந்து விட்டது.
இருந்தாலும் அவன் வாயிலிருந்து வரும் வரை எதை பற்றியும் கேட்க வேண்டாம் என்று நினைத்து அமைதி காத்தனர். அனைத்தும் தெரிந்த செல்வராஜ் கூட அமைதியாக இருப்பது போல் காட்டிக் கொண்டார்.
அருள் அனைவரது முகத்தையும் பார்த்தவன் அனைவரையும் நேர் பார்வை பார்த்து "எனக்கு ஒரு பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா காதலிச்சுட்டு இருக்கேன். நான் முதல்ல என்னோட காதலை அவகிட்ட சொல்லும்போது அவ ஒத்துக்கவே இல்லை ஆனா என்னால அவள விட்டுட்டு இருக்க முடியும் அப்படிங்கற நம்பிக்கை இல்லை மறுபடியும் மறுபடியும் அவகிட்ட போய் பேசும்போது என்னுடைய காதல் புரிஞ்சு அவ என்னோட காதல ஒத்துகிட்டா ஆனால் ஓடிப்போய் கல்யாணம் பண்றதும் வீட்டுக்கு தெரியாம வாழ்வதோ அவளுக்கு பிடிக்காது எனக்கு இஷ்டமில்லை.
அதனால நான் நேரடியாக அவளோட வீட்ல போய் பேசினேன் என்ன இருந்தாலும் பெண்ணை பெத்தவங்க அவங்க அதனால அவங்களுக்கு நம்பிக்கை வந்தா தான் நான் ஒரு பையனா பிறந்து இருக்கிறது பெருமை. அதனால நானே நேரடியா போயி அவங்க வீட்ல பேசலாமே அப்போ அவங்க சொன்ன ஒரு விஷயம் என்ன அப்படின்னா நம்ம வீட்ல ஏற்கனவே ஒரு பையன் இருக்கான் என்னதான் நீங்க கொஞ்ச பேர் அவனை வேண்டாம் அப்படின்னு ஒதுக்கி வைத்து இருந்தாலும் அவன் இந்த வீட்டோட மூத்த வாரிசு தான்.
அவளுக்கு கல்யாணம் முடிஞ்சா தான் எனக்கு என்னுடைய காதலியை கல்யாணம் பண்ணி தருவேன் அப்படினு சொல்றாங்க என்னால அவ இல்லாம வாழ முடியாது. உங்க எல்லாருக்கும் உண்மையாவே என் மேல பாசம் இருந்தா ஒழுங்கா அவனுக்கு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க அப்படி இல்லையா சித்தப்பா யாராவது பொண்ணு பார்ப்பாங்க நீங்க எல்லாரும் அமைதியா வந்து கல்யாணத்துல நின்னுகிட்டு போங்க" என்று கூறியவன் அமைதியாக அனைவரது முகத்தையும் பார்த்தான்.
அங்கே இருந்த ஒரு சிலர் கோபமாக ஏதோ கூற வர அதை புரிந்து கொண்ட அருள் மறுபடியும் "இப்போ அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் முக்கியமா அப்படிங்கிற கேள்வியை என்கிட்ட கேட்காதீங்க அவளுக்கும் கல்யாணம் பண்ணி வச்சு தான் ஆகணும். என்னதான் அவன் எல்லாரையும் விட்டு ஒதுங்கி போய் தனியாக இருந்தாலும் எனக்கு மூத்தவன் அவன் தான் அதுல எந்தவித மாற்றமும் இல்லை இப்போ உங்க எல்லாரையும் இழுத்துப்போட்டு எல்லா வேலையையும் நான் பார்க்க சொல்லல ஆனால் அவனுக்கு கல்யாணம் நடந்தால் தான் எனக்கு கல்யாணம் நடக்கும். வேணும்னா ரெண்டு கல்யாணத்தையும் ஒரே நாள்ல வச்சுக்கலாம் நீங்க எல்லாரும் என்னோட கல்யாணத்துல நின்னு இருந்ததா நினைச்சுக்கோங்க இதுக்கு மேல எனக்கு சொல்றதுக்கு எதுவும் இல்லை யோசித்து முடிவெடுங்கள் ஆனால் என்னோட முடிவுல எந்தவித மாற்றமும் கிடையாது" என்று கூறிவிட்டு தன்னுடைய சித்தப்பா செல்வராஜை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றுவிட்டான்.
அங்கிருந்த அனைவருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை இளவட்டங்கள் மற்றும் பெண்களில் பாட்டியை தவிர அனைவருக்கும் இதன் மூலமாவது சமருக்கு ஒரு நல்லது நடக்கும் என்று எண்ணிக் மகிழ்ந்து கொண்டனர்.
அங்கிருந்த சிலருக்கு அருள் கூறி சென்ற விஷயத்தில் சிறிதுகூட ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும் அருள் விருப்பம் என்று வரும்போது மற்ற அனைத்தையும் சிறிது ஒதுக்கி வைக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் அவர்களாக எதுவும் செய்வதற்கு அவர்களுடைய மனதில் சுத்தமாக இடம் கொடுக்கவில்லை அதனால் பொதுவாக செல்வராஜை பார்த்த தாத்தா "நீயே அவனுக்கு ஏதாவது ஒரு பொண்ணு பார்த்து சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி ஒரே நாளில் எல்லாம் கல்யாணம் வைக்க வேண்டாம்" என்று கூறினார்.
அவர் இவ்வாறுதான் கூறுவார் என்பதை ஏற்கனவே யோசித்து வைத்து இருந்த செல்வராஜ் மெதுவாக "சமர் கல்யாணம் அருள் கல்யாணம் அன்னைக்கு நடந்துச்சு அப்படின்னு சொன்னா நீங்க பொதுவா நின்னுட்டு போய்விடலாம். இல்ல ரெண்டு பேருக்கும் தனித்தனியா கல்யாணம் நடந்தா நீங்களும் ரெண்டு கல்யாணத்தையும் நின்னு தான் ஆகணும் ஏன்னு உங்களுக்கே தெரியும் அப்படின்னு நினைக்கிறேன் ஒரு குடும்பத்தில் மூத்த பிள்ளைக்கு கல்யாணம் பண்ணும் போது நாம என்ன பண்றோம் அப்படிங்கிரதை பார்த்து தான் அடுத்த பிள்ளைகளுக்கு வாழ்க்கை அமையும் இதிலேயே நீங்க ஒதுங்கி போயிட்டா மொத்தமாவே அருள் காதல் கேள்விக்குறி தான் இதுக்கு மேல நான் எதுவுமே சொல்ல விரும்பல நீங்களே முடிவெடுத்துக் கோங்க" என்று கூறி விட்டு கிளம்ப தயாரானார்.
தன்னுடைய அண்ணன் கூறியதை கேட்ட முருகன் கடுப்பாக "இப்ப என்ன அவன் கல்யாணத்தை அருள் கல்யாணம் நடக்கும் அன்று வைக்க வேண்டுமா வைக்கலாம் ஆனால் நாங்கள் அருள் கல்யாணத்துக்கு மட்டும்தான் தேவையான எல்லா வேலையும் பார்ப்போம் அவனுடைய கல்யாணத்துக்கு தேவைப்பட்டால் நீயே பார்த்துக்கோ எங்க கிட்ட வந்து நிக்காத நாங்க செய்யவும் மாட்டோம்" என்று திட்டவட்டமாக கூறினார்.
செல்வராஜ் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்து ஒரு விதமாக சிரித்துக்கொண்டே "நீ யாருமே எதுவுமே பண்ண வேண்டாம் ஆனா அவனோட கல்யாணத்துல அவனுக்காக ஓடியாடி வேலை செய்வதற்கு எத்தனை பேர் வர்றாங்க அப்படிங்கிற விஷயத்தை நீங்களே பார்ப்பீர்கள் இவ்வளவு வருஷம் நாங்க தான் இந்த ஊர்ல பெருசு அப்படின்னு பேசிக்கிட்டு இருந்த உங்க எல்லாரையும் விட அவன் தான் பெருசு அப்படிங்கற விஷயம் இந்த கல்யாணத்துல உங்களுக்கு தெரியும் அன்னைக்கு எல்லாரும் மூஞ்சியை எங்க போய் வச்சி கொள்ளப் போகிறீர்கள் என்று நானும் பாக்குறேன்" என அனைவரையும் பார்த்து கூறிய அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் சென்றதும் தான் தாமதம் பின்னாடியே இளவட்டங்கள் அனைத்தும் சென்று விட்டது. அதேபோல் அவருடைய மனைவியும் தன்னுடைய கணவனை குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்ற ரீதியில் சென்றுவிட்டார்.
அனைவரும் தன் பின்னால் வந்ததைப் பார்த்த செல்வராஜ் ஏற்கனவே அங்கு தன்னுடைய அறையில் தனக்காக காத்துக் கொண்டிருந்த அருள் முகத்தை பார்த்துவிட்டு அனைவரையும் அமர சொன்னார். பின்பு இனி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார் அப்போது சரியாக ஆதர்ஷினி அருள் போனுக்கு கால் செய்தாள்.
அவன் அதை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட அனைவரும் இருப்பதை சத்தத்தின் மூலம் உணர்ந்து கொண்ட ஆதர்ஷினி பொதுவாக நலம் விசாரித்து விட்டு தற்போதைய நிலவரம் அனைத்தையும் கேட்டு அறிந்தவள். அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறினாள் செல்வராஜ் தனக்கு தோன்றியவற்றை கூற அதையும் ஏற்றுக்கொண்டு அடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் செயல்படுத்த ஆரம்பித்தாள்.
இனி என்ன நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.