வணக்கம் மக்களே விக்கிரம பாண்டியபுரம் அத்தியாயம் -2 இதோ உங்களுக்காக.
சொற் பிழை, பொருள் பிழை எது இருந்தாலும் தயவு செய்து அதை மன்னித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே…அடுத்த அத்தியாயம் நாளை….
சில நூறு வருடங்களுக்குப் பிறகு..
தென் தமிழகம் முகலாயர் படையெடுப்புக்கு அஞ்சிக் கொண்டிருந்த காலம்…
விக்கிரம பாண்டியபுரம் ஊர் முழுக்க பரபரபப்பாக இருந்தது. அனைவரின் முகங்களிலும் கலவரம் அப்பிக் கிடந்தது. படையெடுப்பு காலத்தின் பயம் அவர்களை தூங்கவொட்டாமல் செய்திருந்தது.
கொற்றவையின் கருவறை பொக்கிஷங்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என திகைத்தது அவர்களின் மனது. ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்ல ஊரே கூடி அந்த தேரையும் வாளையும் கோவிலின் குளத்தருகே புதைத்து வைப்பது என்று முடிவெடுத்தது.
எக்காலத்திலும் அந்த ரகசியத்தை வெளியூர் ஆட்களிடம் சொல்ல மாட்டோம் என அனைவரும் கொற்றவை முன்பு சத்தியம் செய்தனர். வழி வழியாக அந்த ஊருக்குள் மட்டும் அந்த கொற்றவை கோவிலின் கதை செவி வழிச் செய்தியாக சொல்லப்பட்டு வந்தது.
படையெடுப்புகள் முடிந்து ஆங்கிலேயர் ஆதிக்கம் முடிந்து அந்த செவி வழிக் கதைகள் மருவி மருவி, அந்த கொற்றவை கோவிலைப் போல அனைத்தும் சிதைந்து போயிருந்தது.
இன்று….
“கள்ளன்… கள்ளன்… கள்ளன்….” அந்த கிளி பஞ்ச வர்ணம் வீடு முழுக்க படபடத்தது.
“அடிங்க… திருட்டுத் தா….ளி, என்னையவா கள்ளன்ங்கிற.. ஒன்னைய…”, பெருங்குரலெடுத்து அதை பிடிக்க துரத்தினான் உண்டியல்.
“புடிடா உண்டியலே…”, கிளியும் பதிலுக்கு வாயாடியபடி வீட்டின் நடுவிலிருந்த உத்திரத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.
“அடியேய் இன்னைக்கு இருக்குடி உனக்கு…”
“இன்னைக்கு இருக்குடி உனக்கு..”, இருவரும் வீட்டுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க, பின் வாசல் வழியே தலை துவட்டியபடி உள்ளே வந்தான் ஊமையன்..
“தாத்தோய் உங்கிளிய கடைசியா பாத்துக்க.. ” என உண்டியல் சொல்ல
“கடைசியா பாத்துக்க” , கிளியும் திருப்பி படித்தது.
இருவரின் கூச்சலும் பொறுக்காத ஊமையன் தன் கையில் இருந்த துண்டை அவர்களை நோக்கி வீச
“கள்ளன்… கள்ளன்… கள்ளன்….” என்றவாறே மீண்டும் கத்தியபடி வெளி திண்ணைக்கு பறந்து சென்றது கிளி.
“உன்னைய கதிர் அண்ணே கூட்டியார சொல்லுச்சு…”, கீழே கிடந்த துண்டை பார்த்தபடி சொல்லி விட்டு வெளியில் போய் நின்று கொண்டான் உண்டியல்.
பிறவியில் இருந்தே வாய் பேச முடியாததாலோ என்னவோ சத்தம் பொறுக்காது ஊமையனுக்கு. அவனின் கோபம் புரிந்த இருவரும் வெளியே சென்று விட தானும் கிளம்பியவன், காலையிலேயே தங்கள் வயல் வேலைக்கு சென்று விட்ட அவனின் மனைவி முத்தம்மாள் கரைத்து வைத்திருந்த கஞ்சியை தனக்கும் உண்டியலுக்கும் செம்பில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் ஊமையன்.
உப்பு போட்டு கரைத்த கஞ்சியில் கை விட்டு கலக்கியவன் அடியில் இருந்து எடுத்த கொஞ்சம் சோற்றை பஞ்ச வர்ணத்துக்கு வைத்தான். மூவரும் காலை உணவை முடித்து விட்டு பெரிய வீட்டுக்கு கிளம்பினார்கள்.பேச்சுக்கள் ஏதுமின்றி அவர்கள் நடையை எட்டிப் போட பத்து நிமிட நடையில் பெரிய வீடு வந்துவிட்டது.
“கதிரண்னே.. கதிரண்னே…”, உண்டியல் திண்ணையில் அமர்ந்து குரல் கொடுக்க,
“கதிரண்னே.. கதிரண்னே…”, என பஞ்ச வர்ணம் நிலைக் கதவிலமர்ந்து கத்தியது.
“வர்றேன்டா.. ”, அவர்களுக்கு பதில் சொல்லியவாறே வெளியே வந்தான் கதிர் வேலன். பெரிய வீட்டின் இன்றைய வாரிசு.
“வர்றேன்டா.. ”, அதையே திரும்ப படித்த பஞ்ச வர்ணம் அவனின் தோளில் அமர்ந்து கொள்ள, உண்டியல் பல்லைக் கடித்தான்.
“கோயில்ல உத்தரவு வாங்க போகணும் மாமா, போவோமா?”, கதிர் வேலன் கேட்க ஊமையனின் உடல் சிலிர்த்து அடங்கியது. இந்த பேச்சு ஆரம்பித்ததில் இருந்து எல்லாம் தன் கையை மீறி நடப்பதாக தோன்றியது. வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் யாரும் கேட்பதாய் இல்லை.
‘நாம் போய் உத்தரவு கேட்டால் கிடைத்து விடுமா?. அது பலி கேட்காதா? எதுக்கு இப்போ நாமளே இதை கிளறணும், இப்படியே இருந்து விட்டால் என்ன? இப்போ என்ன குறைச்சலா இருக்கு’, இது தான் ஊமையனின் எண்ணம்.
“பே… பே பே…”, சைகையால் அதை ஊமையன் வேண்டாம் என மறுக்க,
“ஏன் மாமா?, மறுபடியும் முதல்ல இருந்தா,, வாய்யா போலாம்..”, அவரின் தோளை சுற்றி கை போட்டு அணைத்துக் கொண்டவாக்கிலேயே , வீட்டை விட்டு வெளியேற,, அவனின் கைபேசி அலறியது.
“ஹலோ..”, என்றவன் செவியில் வந்து மோதிய செய்தியில் அடுத்து எதுவும் பேசவில்லை. மெல்ல ஊமையனின் தோளில் கிடந்த தன் கையை விலக்கிக் கொண்டான்.
“இந்தா வாரேன்”, என்று விட்டு கைபேசியை அணைத்தான். ஏதோ தவறு எனப் புரிந்தது ஊமையனுக்கு.
“என்னாச்சுண்னே ”, உண்டியல் கேட்க,
“என்னாச்சுண்னே ” பஞ்ச வர்ணமும் கேட்டது.
“கோவில் குளத்துல சினை ஆடு செத்து மிதக்குதாம்”, உணர்வுகளற்று அவன் சொல்ல அதிர்ந்து போனார்கள் மற்றவர்கள்.
` -கொற்றவை அருள்வாள்.