• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதி முறைகளும் - வழிமுறைகளும்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
374
63
Tamil Nadu, India
வைகை தளத்தில்/பதிப்பகத்தில் சேர, விதிமுறைகளும் வழிமுறைகளும்...!!!

வணக்கம்,

சென்ற ஆடி பதினேழாம் தேதி, வைகை தமிழ் நாவல்கள் தளத்தின் திரி, எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் முன் பெரும் வரவேற்ப்புக்கு மத்தியில் திறக்கப்பட்டது. இப்போது தளத்தில், ஒரு எழுத்தாளராகச் சேர விரும்புவர்களுக்குச் சில விதிமுறைகளும் வழிமுறைகளும்...

வழிமுறை:

1. vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புக்கொண்டு பேசலாம்.

2. தளத்தில் உரிமையாளரின் எண்: +91 94868 02859, இதில் வாட்ஸ்ஆப் செயலி மூலம் செய்தி/அழைப்பின் வழி மூலம் தொடர்புக்கொள்ளலாம்.

3. முகபுத்தகத்தில், கீழ் காணும் திரியில் கிடைக்கப்படும் கணக்குகளில் தொடர்புக்கொண்டு பேசலாம்.

* https://www.facebook.com/rajeshwari.prabu.3

4. வைகை தளத்தில் கணக்கை தொடங்கி, தள நிர்வாகிகள் கணக்குகளின் மூலம் தொடர்புக்கொள்ளலாம்.

* https://vaigaitamilnovels.com/forum/members/vathani.3/


விதிமுறைகள்:

தளத்தில் சேர இரண்டு பிரிவுகள் உள்ளது.

EXCLUSIVE WRITERS – எங்கள் தளத்தில் சிறப்பு எழுத்தாளாராகச் சேர விரும்புபவர்கள். வேறு எந்தத் தளத்திலோ, செயலியிலோ (except e - publishing apps like kindle/Pustaka) உங்கள் படைப்பை பதிய கூடாது. (பிரதிலிபி மற்றும் அமேசான் கிண்டில் தவிர்த்து)

Exclusive என்பது எழுத்தாளர்களுக்கே சேரும், அவர்களின் படைப்பை அல்ல! முழுதும் நிலையுமாக வைகையின் மட்டுமே எழுதுதல் வேண்டும்.

இவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் அம்சங்கள்!

1. Exclusive writers ஆகச் சேருபவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு சிறப்பு அம்சம், மூன்று முழு நாவல் படைப்புகள் எங்கள் தளத்தில் வெளியிடும் பட்சத்தில், கதையின் ரீச் மற்றும் slot இருப்பைக் கொண்டு எங்கள் பதிப்பகத்திலேயே புத்தகம் பதித்துத் தரப்படும்.

2. இவர்கள், வேறு எந்தத் தளத்திலும் தங்கள் எழுத்தை/படைப்பை பதிய கூடாது. (பிரதிலிபி மற்றும் கிண்டில் தவிர்த்து)

3. ஏதேனும் நாவல் போட்டிகளில் மின் தளங்கள் வழி கலந்துக்கொள்ளப் போகிறீர்கள் என்றால், எங்களிடம் தெரிவித்தல் நல்லது. ரிலே கதைகள், சிறுகதை/கவிதை போட்டிகள் என அனைத்தும் இதில் அடக்கம். (இதற்குத் தடுப்பு ஏதுமில்லை. ஜஸ்ட், எங்களுக்கு ஒரு செய்தியாகக் கூறினால் போதுமானது.)

4. Exclusive இருந்து regular ஆக மாறும் பட்சத்தில் எங்களிடம் ஒரு வார்த்தையாவது கூறுதல் வேண்டும்! அதே சமயம், காலத்தின் வாய்ப்பில் வைகை பதிப்பகத்தில் உங்கள் புத்தகம் வெளியாகப் போகும் / வெளியாகியிருக்கும் பட்சத்தில், பாதியில் exclusive writing என்பதில் இருந்து விலக முடியாது.

(அப்படி வேண்டுமென்றால், இவை இரண்டிற்குமே, தள உரிமையாளரிடம் தெளிவாகப் பேசிய பின்பே உங்கள் முடிவை எடுப்பது இருபக்க நபர்கள் மத்தியில் சூமூக உறவை நிலைக்கச் செய்யும்..)

5. Exclusive writer ஆக இருப்பவர்கள் வெளி பதிப்பகம் அல்லது சொந்த வெளியீடு செய்யத் தடையில்லை. ஆனால், அதனை கொண்டு தளத்தை விட்டு விலகுதல் என்பது வேண்டாம் என கேட்டுக்கொள்ள படுகிறது.

REGULAR WRITERS – வைகைக்கும் மேற்ப்பட்ட தளங்கள் அல்லது செயலிகளில் ஒரே சமயத்தில் எழுதலாம்.

1. ஒரே சமயத்தில் வைகைக்கும் மேற்ப்பட்ட தளத்தில் பதியும் போது ஒரே பதிவை ஒரே சமயத்தில் பதியுதல் அவசியம். வேறு தள அல்லது செயலிகளின் திரியை முன்பே பதிந்துவிட்டுப் பின் வைகை தளப் பதிவின் திரியை காலம் தாழ்த்தி பதியுதல் கூடாது.

2. வைகை பதிப்பகத்தில் புத்தக வெளியீடு செய்வது சற்றுச் சிரமமாக இருக்கும். காலம் எடுக்கலாம்!

3. அப்படி வைகை பதிப்பகத்தின் கீழ் உங்கள் புத்தகம் வெளியாகும் பட்சத்தில், அந்த நேரத்தில் இருந்து நீங்கள் வைகையின் exclusive writer ஆக மாறும் சூழல் ஏற்ப்படலாம்.

பொது விதிமுறைகள்:

1. வைகை தளத்தில் எழுதும் எவரின் படைப்பும் (18+ CONTENT, VULGAR CONTENT, IMMORAL & UNETHICAL THINGS/ISSUES) போல் இருக்கக் கூடாது. அதாவது,

• வன்புணர்வை ஊக்கப்படுத்தும் வரிகள் கூடாது.
• குடும்ப வன்முறையை சிறப்பித்து எழுத கூடாது.
• நம் பண்பாடு, ஒழுங்குமுறைகளை உடைப்பது போன்ற தவறாகச் சித்தரித்தல் கூடாது.
• அளவிற்கு மீறிய தாம்பத்திய உறவு / பலாத்கார காட்சிகள், முறையற்ற உறவுமுறை இவையெல்லாம் தவிர்த்தல் வேண்டும்.
• பாலுணர்வை தூண்டுவது போல், சிற்றின்பத்தை ஊக்குவிப்பது போல் அளவிற்கு மீறிய நெருக்கக் காட்சி அமைத்தல், கதையின் போக்கு அமைத்தல் வேண்டாம்.
• புகைப்பிடித்தல், குடிப்பது, போதை மருந்துகள் போன்ற பழக்கங்களை நல்லது என்பதுப்போல் சித்தரித்தல்
இதையெல்லாம் சமூதாய அக்கறையின் கீழ் நாம் தவிர்த்தல் அவசியமாகும். (கருதுக, நல்லவையாக தான் எழுத கூடாது, எழுதவே கூடாது என்பதற்கல்ல)

2. தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்புவது போல் வாசகர்களிடமோ, பிற எழுத்தாலர்களிடமோ பிரச்சனையைக் கிளப்ப கூடாது. அப்படி எதாவது உங்களுக்குப் பிரச்சனையாக அமைய ஆரம்பித்தால், எந்நேரமும் தள உரிமையாளர்கள் – நிர்வாகிகளைத் தொடர்புக்கொள்ளவும். நீங்களே பேசி சரி செய்கிறேன் என்று பெரிது பண்ணிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள படுகிறது.

3. மற்றவர்களின் படைப்பை உங்கள் படைப்பாகவோ அல்லது ரசனையின் பேரிலோ, அல்லது பகிரும் எண்ணத்திலோ, அந்தப் படைப்பின் உரிமையாளரிடம் அனுமதி வாங்காமல் பதிய கூடாது.

(அப்படியாக பதியப்படும் படைப்புகளுக்கு தளம் பொறுப்பேற்க்காது. புகார்கள் வரும் பட்சத்தில், அதன் உண்மை தன்மை கொண்டு திரிகள் நீக்கப்படும்)

4. google drive திரிகள் / PDF / பிற தளத்தில் செயலியில் வெளியாகி இருக்கும் மின் புத்தகத் திரிகளை இங்கே பகிர கூடாது. வைகை தவிர வேறு எழுத்துச் சமந்தப்பட்ட திரிகளை இங்கே பகிர கூடாது.

காலம் -
Exclusive writer ஆக மாறும் பட்சத்தில் கண்டிப்பாக ஐந்தாண்டுகள் வைகை தளத்தில் எழுத வேண்டும். மேலும் வருடம் ஒரு புத்தகம் வைகை பதிப்பகத்தில் பதிப்பித்து தரப்படும். மேலும் உங்கள் கதைகளை வைகை யூ டியூப் சேனலில் ஆடியோ நாவலாக போட வேண்டும். (இதற்கு வைகை தளத்தில் இருந்து பணம் கொடுக்கப்படும்.)

வைகை தளத்தில் முடிந்த கதைகள் தலத்தில் இருந்து நீக்கப்படாது. அது முடிவடைந்த கதைகள் தொகுப்பில் மாற்றி வைக்கப்படும்.

பதிப்பக விதிமுறைகள்:
1. வைகை தளத்தில் exclusive writer ஆக இருந்தால் மட்டுமே வைகை பதிப்பகத்தில் வெளியிட வாய்ப்பு முதன்மை நிலையில் கொடுக்கப்படும்

2. வைகை தளத்தில் முழு மூன்று நாவல்கள், exclusive ஆக வைகையில் பதித்த பிறகே வைகை பதிப்பகத்தில் தட்டச்சுப் புத்தகமாக உங்கள் படைப்பு வெளியிடப்படும் (கதையின் தன்மை, ரீச், சிறந்த எழுத்துநடை இவை எல்லாம் பொறுத்து மூன்றாம் புத்தகம் தொடக்கத்திலேயே கூட உங்கள் படைப்பு ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது.)

3. பதிப்பகத்தின் ஆரம்பம் என்பதால், இரண்டாம் புத்தக வெளியீடின் பின்பே பரிசுரத்தில், எழுத்தாளர் பங்கு கொடுக்கப்படும்.

4. வைகை பதிப்பகத்தின் கீழ் உங்களுக்குச் சொந்த வெளியீடு செய்து தரப்படும். (உங்கள் செலவின் கீழ், வைகை பதிப்பக பெயரின் கீழ் பதித்துத் தரப்படும்)

குறிப்பு: ஏதேனும் சந்தேகம், குழப்பம் இருப்பின் தயங்காமல் தள நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. ஆரம்பித்த பின் அனுசரிப்பதை விட, அனுசரணையின் புரிந்தளோடு ஆரம்பிப்போம்.

நன்றி.
வைகை குழு.
 
Last edited: