அத்தியாயம் 2
அன்று நாள் முழுவதும் அக்கம்பக்கத்தினரும், சில முக்கியமான விருந்தினர்களும் மட்டும் வந்து சென்று கொண்டிருந்தனர். தூரத்தில் இருக்கும் விருந்தினர்களும் திருமணத்திற்காக வந்து தங்கியவர்களும் விடைபெற்றுச் சென்று கொண்டிருந்தனர். அனைவரையும் உபசரித்தே அந்த நாளும் ஓடி விட ஆழியன் மட்டும் வீட்டிற்கு வந்த பாடில்லை. பொறுமையை இழந்து வீட்டில் இருக்கும் அனைவரும் அவனுக்குத் தொடர்பு கொண்டாலும் முதலில் அழைப்பை எடுத்து வேலை என்றவன் பிறகு அவனது உதவியாளர் ராகுலை வைத்தே தான் மீட்டிங்கில் இருப்பதாகத் தெரியப் படுத்தினான். அங்கு அனைவரும் கயலைப் பார்க்கத்தான் சங்கடமாக உணர்ந்தனர்.
ஆனால் கயலிற்கோ அந்த நிலை மிகவும் நல்லதாகவே பட்டது. எப்படியும் அவள் மனதில் இருப்பதைப் பேச வேண்டும் என்றால் அவளுக்குத் தனிமை வேண்டும். அது இத்தனை உறவினர்களுக்கு இடையில் கிடைக்காது என்று நினைத்தாள். அதைப் பற்றிப் பேசாமலும் அவனுடன் சகஜமாகப் பேச இயலும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. தன் கணவனுடன் பேசத் தனிமைக்காகக் காத்திருந்தவளுக்கு அவனுடன் பேசும் வாய்ப்பு கூடக் கிடைக்காது என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.
இரவு வெகுநேரம் ஆனதும் லதாவிற்கு ஆழியனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தியே வந்தது. அதுவும் அவன் வரத் தாமதம் ஆகும் என்று. அதுவரை தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த ஆழியனின் தந்தை மாணிக்கம் அவரது பொறுமையை மொத்தமாக இழந்து விட்டார்.
"அவன் என்னதான்மா நினைத்துக் கொண்டிருக்கின்றான்? வளர்ந்து சொந்தமாக ஒரு தொழிலை நடத்தினால் மட்டும் போதுமா? ஆள் வளர்ந்த அளவு அறிவும் வளர வேண்டாமா?" எனக் கத்த தொடங்கிய தந்தையை லதா குறுக்கிட்டு
"அப்பா! பொறுங்கள். இப்படி சத்தம் போட்டால் உங்கள் உடல் நிலை என்ன ஆவது? அதோடு கயலின் காதில் விழுந்தால் அவள் என்ன நினைப்பாள்?" என்றாள்.
"ஆமாம் இப்போது மட்டும் அந்தப் பெண் என்ன நல்ல விதமாகவாமா நினைக்கக்கூடும்?" என்றார்.
அவரது குரலிலிருந்த அலுப்பே மகன்மீது இருந்த அதிருப்தியைக் காட்டியது. ஆனால் லதாவால் தான் என்ன செய்ய இயலும்?
'ஒரே தம்பி படிப்பிலும் முதலிடம். சொந்தமாகத் தொழில் தொடங்கவும் அதிலும் முதலிடத்தை எட்டி பிடித்திருந்தான். இவ்வளவும் இருந்தும் என்ன செய்வது? முக்கியமான விஷயத்தில் இப்படி கோட்டை விட்டு விட்டானே!' என்று அவள் நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் போதே மாணிக்கம் மேலும் பேசத் தொடங்கினார்.
"அவனுக்குத் தொடர்பு கொண்டு பேசுமா. இப்போது அவன் வருகிறானா அல்லது நான் சென்று அழைத்து வர வேண்டுமா என்று கேட்டுச் சொல்" என்றார்.
அவரது குரலிலிருந்த திடம் நிச்சயம் அவர் அதைச் செய்யும் முடிவில் இருப்பதையே லதாவிற்கு உணர்த்தியது. சில மாதங்களாகவே தந்தைக்கும் தம்பிக்கும் இடையில் அதிகம் மாட்டிக் கொண்டு முழிப்பது லதா தான். தற்போதும் அதே நிலையில் தான் லதா இருந்தாள்.
தம்பி என்னதான் வேலை என்று கூறி வெளியிலிருந்தாலும் அதன் காரணத்தைக் கயலைத் தவிர அந்த வீட்டில் அனைவரும் அறிவார்கள்தான். இப்போது மாணிக்கம் அங்குச் சென்றால் பிரச்சனை இன்னும் அதிகமாகத்தான் வாய்ப்பு என்று தோன்றவும் தன் தொலைப்பேசியை எடுத்துத் தம்பிக்கு அழைத்துப் பார்த்தாள். ஆனால் அவனிடமிருந்து பதில் வராததால் வேறு வழியின்றி அவனது எண்ணிற்கு அவர்கள் தந்தை கூறியதை ஒரு குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தாள். குறுஞ்செய்தி சென்ற சில வினாடிகளிலேயே அவனிடமிருந்து பதில் வந்தது.
'அரைமணி நேரத்தில் நானே வருகிறேன் என்று சொல்' என்றிருந்தது அக்குறுஞ்செய்தி.
அதைப் பார்க்கும் போதே லதாவிற்கு கோவம் ஒரு புறம் வந்தாலும், தன் தந்தையை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது. சிறுவயதிலிருந்தே தன் தந்தையிடம் பார்க்கும் குணம் தான் இது. யாரை எப்படி வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
'ஏன் ஆழியனை கூட அப்படிதானே இக்கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைத்தார்' என்று எண்ணிக் கொண்டே தன் தந்தையின் அறைக்குச் சென்று நடந்ததைக் கூறினாள்.
"சரிமா. காத்திருந்தது இருந்தாயிற்று. இன்னும் அறை மணி நேரம் தானே அதையும் பார்ப்போம்" என்றவர் அதற்கு மேல் எதுவும் கூறாமல் ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போனார்.
ஆழியனின் குடும்பத்தினரின் நிலை அவனது வருகைக்காகக் காத்திருக்கக் கயலின் நிலையோ வேறு மாறி இருந்தது. ஆழியனிடம் அவள் பேசக் காத்திருந்த தலைப்பைப் பற்றியே அவளது சிந்தனை இருந்தது. அதை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்கின்ற பயம் அவளது மனம் முழுக்க பரவி இருந்தது.
ஆனால் இரவு வெகுநேரம் ஆனதாலோ அல்லது இரண்டு நாட்களாக இருந்த அசதியோ அவள் அறியாமல் அன்றும் அமர்ந்திருந்த இடத்திலேயே உறங்கிவிட்டாள்.
தமக்கையிடம் கூறியதை போலவே அரைமணி நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த ஆழியன் நேராகத் தன் தந்தையின் அறைக்குள் சென்றான். தம்பி வேகமாகத் தன் கார நிறுத்தி விட்டுத் தந்தையின் அறைக்குள் செல்வதைப் பார்த்த லதாவும் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.
தமக்கை பின் தொடர்வதைப் பார்த்திருந்த ஆழியன் தந்தை அறையினுள் சென்றவுடன் அவளிடம் திரும்பி
"என் வாழ்க்கையில் நான் தான் அடுத்தவர் கையில் இருக்கும் பொம்மையென ஆகி விட்டேன். இப்போது தொழிலிலும் அடுத்தவர் சொல்வதைக் கேட்டுத் தான் ஆட வேண்டுமா?" என்றான்.
என்ன தான் அவன் சத்தமாகப் பேசவில்லை என்றாலும் அவனுள் இருந்த கோபத்தை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் அவன் அடுத்தவர்கள் என்று கூறியதும் அவனது தந்தையைத் தான் என்பதும் கூட மற்ற இருவருக்கும் நன்றாகவே புரிந்ததுதான். ஆனால் இப்போது அவன் இருக்கும் மனநிலையில் அவனிடம் சமாதானமாகப் பேசி எந்த உபயோகமும் இல்லை என்று மாணிக்கம் நன்றாகவே அறிவார். அவனுக்கே தந்தை அல்லவா அவனைப் போலவே அவரும் தனது மகளைப் பார்த்து
"பொம்மையாக இருப்பது, முட்டாளாய் இருப்பதை விடவும் நல்லது என்று சொல்லம்மா" என்றவர் அவன் அவரைப் பார்த்து முறைப்பதைப் பார்த்து விட்டு மீண்டும் லதாவிடமே திரும்பி
"இங்கே பாரம்மா எந்த வேளையிலும் தனக்கெனவும் தன் குடும்பத்திற்கு எனவும் நேரம் ஒதுக்க முடியும். அதற்குத் தேவை எல்லாம் நேரம் ஒதுக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் தான். இன்றைய நிலையே நாளையும் தொடர்ந்தாலோ அல்லது மீண்டும் இதுபோல் நடந்தாலோ என்னை மனுசனாகப் பார்க்க முடியாது என்று உன் தம்பியிடம் கூறிவை. இப்போது இருவரும் கிளம்பலாம். போய் உறங்குங்கள்." என்று முடித்துக் கொண்டார்.
இப்போது என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்த லதா ஆழியன் அறையை விட்டுக் கோவமாக வெளியேறவும் அவனைப் பின் தொடர்ந்தாள். வேகமாக அவன் பின் சென்று
"ஆழியா..." என்று அவள் அழைக்கவும் நின்றவன், அவள் புறம் திரும்பி
"என்னக்கா? உன் பங்கிற்கு எதுவும் கூற வேண்டுமா?" என்று எரிச்சலுடன் கேட்டான்.
"இல்லையடா. நடந்த அனைத்தையும் விடு ஆழியா. இப்போது உன்னை மட்டுமே நம்பி ஒரு பெண் வந்திருக்கிறாளே அவளைப் பற்றியும் கொஞ்சம் யோசி டா. அவள் என்ன தவறு செய்தாள்? அவள்மீது ஏன் உன் கோபத்தைக் காட்டுகிறாய்? அவள் என்ன நினைப்பாள் சொல்" என்றாள்.
லதாவின் பேச்சைக் கேட்கவும் ஆழியனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
'இவர்கள் அனைவரிடமும் பேசுவதை விட ஏன் நேராக அவளிடமே பேசக் கூடாது' என்று தோன்றவும் லதாவிடம் பதில் ஏதும் கூறாமல் அவனது அறைக்குள் சென்றான்.
அவன் பதில் ஏதும் கூறாமல் போகவும் 'அடுத்து என்ன செய்யப் போகிறானோ!' என்றிருந்தது லதாவிற்கு.
அறையினுள் நுழைந்த ஆழியனுக்கோ கிடைத்தது எல்லாம் தறையில் உறங்கிக் கொண்டிருந்த அவனது மனைவியின் தரிசனம் தான். அதற்குள் உறங்கி விட்டாளா என்று தோன்றவும் மணியைப் பார்த்தான். அது இரவு பதினொன்று என்று காட்டியது.

விதி தொடரும்..