அத்தியாயம் 47
அத்தை மகளுக்கும் அன்பு மனைவிக்கும் இடையில் மாட்டுக் கொண்டு விழிபிதுங்கும் படி ஆகிவிட்டது சித்தின் நிலை.
அனு வேறு சும்மாயில்லாமல் மாமா மாமா என்று அவனிடம் பேசி பேசியே அமுதியைக் கடுப்பேற்றிக் கொண்டேயிருந்தாள். ஏற்கனவே அனுவும் சித்துவும் நண்பர்கள் போல் தான் வம்பிழுப்பதும் சண்டை போடுவதுமாக இருப்பார்கள் இளவயதில். அவளுடனான திருமணம் நின்ற பிறகு அவளிடம் பேச்சு வார்த்தை இல்லை. அமுதிக்கும் அது தெரியும் தான். இருந்தாலும் அவள் வந்த பிறகு 'தன்னைக் கண்டுகொள்ளவில்லை. அதுவும் வேலையை பாதியிலே விட்டு வந்து அவளிடம் கதையளந்துக் கொண்டிருக்கிறானே. இந்த அனு மேனாமினிக்கி வேற வேனும்னே பண்றா சே' என்று உள்ளுக்குள் பொறுமிக் கொண்டிருந்தாள்.
"எனக்கு ஜூஸ் வேனும்" என்று அமுதியிடம் சொல்லிவிட்டு சாவகாசமாய் அமர்ந்து சித்துவிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாள்.
சித்துவின் மேல் உள்ள கடுப்பில் சாத்துக்குடியை பிழிபிழியென பிழிந்தெடுத்துக் கொண்டிருந்தாள் அமுதி. சரி போனால் போகிறது மருத்துவத்திற்காக அதுவும் தன் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்தவளுக்கு செய்வதில் தவறில்லை என்று நினைத்தால் இவள் அவளை வேலைக்காரி போல் வேலை ஏவிக் கொண்டிருந்தாள்.
அதைக் கண்ட சித்துவோ, 'ஆத்தாடி.. செம கோவத்துல இருக்கா போலயே. சாத்துக்குடி இடத்துல நம்ம தலை இருக்கிற மாதிரியே பீல் ஆகுதே. நேத்து தான் ஏதேதோ சொல்லி சமாதானம் பண்ணி வச்சேன். இப்போ தான் நாங்களே சேர்ந்திருக்கோம். அதுக்குள்ள இந்த அனு எங்களை பிரிச்சு விட்டு போயிடுவா போலயே. ஆமா.. என்னைக் கல்யாணம் பண்ண மாட்டேனு சொல்லும் போதுலாம் மாமா ஓமாலாம் தெரியல. இப்போ வந்து மாமா மண்ணாங்கட்டினு..' என்று அனுவை மனதில் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தான்.
பேச்சு அனுவிடம் இருந்தாலும் பார்வை அமுதியிடமே இருந்தது. அவள் முறைக்க இவன் கண்களால் கெஞ்ச என்று விழியாலே பேசிக் கொண்டிருந்தனர். 'ரூம்க்கு வரும் போது பார்த்துக்கிறேன்' என்று அமுதி விழியாலே முறைக்க, 'அய்யோ.. இன்னைக்கு ரூம்க்கே போக கூடாது. சிவனேனு நைட் சிப்ட் போயிடலாமா..' என்று கூட யோசித்தான்.
காலிங் பெல் சத்தம் கேட்க அமுதி போய் கதவைத் திறந்ததும், "அத்தை.." என்று ஓடி வந்து கட்டிக் கொண்டான் அரவிந்த்.
"அரவிந்த் செல்லம்.. எப்பிடி இருக்கேங்க?. ஊருல இருந்து எப்போ வந்தேங்க"
"அப்பா கூட வந்தேன்" என்று பின்னால் நின்ற வசந்த்தைக் காண்பித்தான்.
"உள்ளே வாங்கண்ணா"
"ஏய் அர்விந்த் எப்படி இருக்க. மாமாவை மறந்துட்ட பார்த்தியா"
"மறக்கல மாமா. நல்லா ஞாபகம் இருக்கு" என்றான்.
"அண்ணா ஆனந்தியும் குட்டிபாப்பாவும் எப்போ வர்றாங்க"
"அடுத்த வாரம் வர்றதா ப்ளான் மா. அதான் இந்த வீக் கொஞ்சம் வீட்டை எல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்கனும். இவன் என்கூட இப்பவே வர்றேன் சரணை பார்க்கனும்னு அழுகை. அதான் கூப்டு வந்தேன்"
"அப்படியா அர்விந்த். ஆனா சரண் ஊர்ல இருக்கானே"
"அச்சோ" என்று அவன் முகம் வாடி விட்டது.
"எதுக்கு உம்முனு ஆயிட்ட? நாளைக்கு கிளம்பி நாளன்னைக்கு வந்துடுவாங்க. அதுவரைக்கும் அத்தைக் கூட இரு. ஓகே வா"
"ம் ஓகே" என்றான் சோகமாக.
அங்கிருந்த அனுவைக் கண்ட வசந்த், 'இவ சித்துவோட அத்தை மக தான? இவ இங்க என்ன பண்றா?' என்று நினைத்தவன், கண்களாலே சித்துவிடம் கேட்க அவனும் கண்களாலே அப்புறம் சொல்றேன் என்றான். 'இவங்களுக்குள்ளே இப்போ தான் ஒரு புரிதலே வந்துருக்கு. அன்னைக்கு ஊர்ல வச்சே அந்தப் பேச்சு பேசுச்சு. இப்போ கூடவே இருக்கு. ஏதாவது குட்டைய கெளப்பாம இருந்தா சரி' என்று வசந்தும் நினைத்துக் கொண்டான்.
அரவிந்த் அமுதியிடம் இருக்க வச்ந்த் மட்டும் வீட்டை ஒழுங்கு படுத்தும் வேலைகளை கவனிக்கச் சென்றான். அமுதி அரவிந்த்க்கு பால் ஆற்றிக் கொடுக்க, குடித்து விட்டு அவள் பின்னாலே வளவளவென்று பேசிக் கொண்டே அலைந்தான்.
"யாரு மாமா இது?" என்றாள் அனு.
"என் ப்ரண்ட் தான். அவங்க வொய்ப் டெலிவரிக்காக ஊருக்கு போயிருந்தாங்க. அடுத்த வாரம் தான் வர்றாங்க"
"ஓஓ.. இந்தப் பையன் எப்படி அமுதி கூட இவ்ளோ க்குலோஸ்ஆ இருக்கான்"
"அமுதி கூட பேசுனா கொஞ்ச நாள்லே எல்லாருக்கும் அவளை பிடிக்க ஆரம்பிச்சுரும்"
"அதான் உங்களுக்கும் பிடிச்சு போச்சோ" என்க, "ம் ஆமா" என்றான்.
இடையில் அனுவுக்கு மருத்துவமனை சென்று காண்பித்து விட்டு வந்தார் கொடிமலர். இரண்டு நாட்களில் சந்திரமதியும் குழந்தைகளும் ஊரிலிருந்து வந்து விட்டனர். கொடிமலருக்கு சந்திரமதி வந்த பின்னே பொழுது போனது. அவருடன் கதைத்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்ட சரணும் ஞாபகம் வைத்து அவருடன் பேசினான்.
ஹாசினியும் சரணும் சித்துவைக் கட்டிக் கொண்டு கொஞ்சித் தீர்த்தனர். அதைப் பார்த்த அனு முகம் சுழித்து விட்டு, "எப்படி மாமா நீங்களும் அத்தையும் யாரோ ஒருத்தனோட புள்ளைய கொஞ்சுறேங்க. ஒரு மாதிரி இல்ல.. என்ன இருந்தாலும்.." என்று அவள் அடுத்து பேசுவதற்குள், "இங்க பாரு அனு.. உனக்கு அன்னைக்கே சொல்லிட்டேன். இது நான் பிடிச்சு வாழ்ந்துட்டு இருக்குற வாழ்க்கை. அமுதியை பத்தியோ குழந்தைங்களை பத்தியோ பேச உனக்கு எந்த ரைட்ஸ்ம் கிடையாது. நீ வேற அமுதி வேற.. உன்ன மாதிரி மனசை காயப்படுத்துற மாதிரி அவளால பேச முடியாது. அதுனால அவகிட்ட இது மாதிரி பேசிடாத அவ தாங்கமாட்டா. அவ உடைஞ்சு போறத பாத்துட்டு நானும் சும்மா இருக்க மாட்டேன். உனக்கும் எனக்கும் ரத்த உறவு மட்டும் தான். ஆனா அவ என் ஆயுளுக்கும் கூட வரப்போறவ. என்னோட நல்லது கெட்டதுல பங்கெடுத்துக்க போறவ. அதுனால எனக்கு தான் முதல் உரிமை அது இதுனு அவகிட்ட பேசாத. உன்கிட்ட வந்தனைக்கே சொல்லிருப்பேன். குழந்தைக்காக ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்க. உன் மனசு சங்கடப்படக் கூடாதுனு தான் எதுவும் சொல்லல. குழந்தைங்களைப் பார்த்து அவங்க கூட பேசி சிரிச்சு மனசை சந்தோஷமா வச்சுக்கோ. அப்போ தான் நல்லது நடக்கும்" என்று தன் மனைவியையும் குழந்தைகளைப் பற்றியும் இனிமே பேசக்கூடாது என்று நேரடியாக இல்லாமல் மறைமுகமாக எச்சரிக்கை செய்தான்.
"ஆமா பெரிய பொண்டாட்டி. என்னை விட உனக்கு அவ முக்கியமா" என்று முனுமுனுத்தாள்.
'கல்யாணமாகி இத்தனை நாள் குழந்தை இல்லாமல் இருக்கிறாள். அப்போதும் கூட குழந்தைகளைப் பார்த்தால் கண்ணில் கூட ஒரு ஆசை வரவில்லையே. இவள் எப்படி குழந்தையை தூக்கி கொஞ்சுவாள்.. கடவுள் தான் இவளை திருத்தனும்' என்று மானசீகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.
சரணும் ஹாசினியும் கொடிமலரிடம் சகஜமாக ஆச்சி என்றழைத்து விளையாடினர். அனுவை வித்தியாசமாக போகும் போதும் வரும் போதும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் வந்த பிறகே அர்விந்த் சிரித்து விளையாட ஆரம்பித்தான்.
"அத்தை ஹனி என்னைத் தேடுனாலா நான் இல்லாத போது" என்று ஏக்கமாக கேட்டான்.
"இல்லையே. ஏன்டா"
"இல்லையா.." என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான்.
"என் ஞாபகமே வரல ஹனிக்கு. பின்ன எப்படி அத்தை ஹனி என்னை கல்யாணம் பண்ணிப்பா" என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ள, "அடேய் இப்பவே அத்தைக்கிட்ட பொண்ணு கேட்க ஆரம்பிச்சிட்டியா.. வாலுப்பையன் டா நீ" என்று சந்திரமதி சொல்ல அங்கு சிரிப்பலை எழுந்தது. அனுஷா தான் அதில் எதிலும் கலந்து கொள்ளாமல் தனித்து அமர்ந்திருந்தாள்.
அன்று இரவு அரவிந்தும் அவர்களோடு சாப்பிட்டு ஐக்கியமாகி விட, அங்கேயே தூங்கியும் விட்டான். அரவிந்த், சரண் மற்றும் ஹாசினி மூவரும் கட்டிலை ஆக்கிரமித்துக் கொள்ள, சித்துவும் அமுதியும் தரையில் மெத்தை விரித்து படுத்திருந்தனர்.
"என்ன சார் பலமான யோசனையில இருக்கேங்க"
"எல்லாம் அனுவைப் பத்தி தான்"
"என்னாது.. இங்கயும் அவளைப் பத்தி தான் நினைக்கனுமா.."
"ஏய் அமுதி.. அதுலாம் ஒன்னுமில்ல. அவ ஏன் இப்டி இருக்கானு யோசிக்கேன். அத்தைலாம் இப்டி இல்ல. இவ மட்டும் எப்படி தான் இப்படி வந்து பொறந்தாளோ. எங்கத்தை குணம் கொஞ்சமாவது இருக்க கூடாது. சரி அவளை விடு. காலையிலிருந்து மேடம் என்னை ரொம்ப நேரமா சைட் அடிச்சிட்டு இருந்தேங்க. மாமா மேல அம்புட்டு ஆசையா.."
"ஆமா மாமா மேல அம்புட்டு ஆசை. நான் கோவமா இருக்கிறது கூட தெரியாம நல்லா அத்தை மக கூட நல்லா சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தேங்களை.." என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
'ஓஹோ.. அப்போ ஆசை இல்ல. சரி விடு.. அத்தை மகளே ஆசையா இருக்கும் போது எதுக்கு உன்கிட்ட கேட்கனும்"
"ம் கேட்பேங்க கேட்பேங்க.." என்று அவள் மென்கையால் அவன் தோளில் இரு அடி விழ, அதையெல்லாம் அவனுக்கு தூசி போல் தட்டினான்.
"அமுதி உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு இருந்தேன். இரு வர்றேன்" என்று எழுந்து ஒரு பைலை எடுத்து வந்தான்.
"அமுதி என் மேல நம்பிக்கை இருந்தா இதுல சைன் போடு"
நம்பிக்கை அந்த ஒரு வார்த்தை போதாதா.. அதை படித்துக் கூட பார்க்காமல், ஏன் என்று ஒரு வார்த்தைக் கேட்காமல் அவன் கேட்கும் இடங்களில் சைன் பண்ணிக் கொடுத்தாள். "இந்தாங்க எல்லாம் போட்டுட்டேன்"
அவன் சிரித்து விட்டு, "என்மேல் அவ்ளோ நம்பிக்கையா". அவள் எதுவும் சொல்லவில்லை, 'இதை சொல்லித்தான் தெரியனுமா' என்று சிரித்து விட்டு அவன் தோள் சாய்ந்து கொண்டாள். அதுவே அவன் கேட்ட கேள்விக்கு பதிலானது.
மறுநாள் அமுதி ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, சரணும் அரவிந்தும் அருகில் அமர்ந்து கொண்டு அவளிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். அவளும் ம்ம் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் அங்கு வந்த அனு, சிறிது நேரம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் வெகுநேரம் தன்னைக் கவனிப்பதை அறிந்த அமுதி, "ஏதாவது வேனுமா அனு" என்றாள்.
வேண்டாம் என்று தலையாட்டி விட்டு, "இவங்களோட அப்பா உயிரோட இருக்காரா இல்லை நீங்க டைவர்ஸ் வாங்கிட்டு வந்தேங்களா.."
இப்போது தான் அப்பா என்ற இடத்தில் அகிலனை அழித்து விட்டு சித்தை வைத்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான் சரண். 'இப்போ நான் என்ன சொல்ல.. சித்துவை மனதார ஏற்றுக் கொண்டதன் பிறகு அகிலனை அந்த இடத்தில் வைத்து சொல்லக்கூட பிடிக்கவில்லை'. கண்களில் குளம் கட்ட ஆரம்பித்து விட்டது. 'உன் கணவன் எங்கே என்று கேட்டிருந்தால் கூட இதோ இவன் தான் என் கணவன்' என்று சித்தைக் காண்பித்திருப்பாள். உன் பிள்ளைகளின் அப்பா யாரென்று கேட்டது அவள் இதயத்தை ஊசியால் குத்தியது போல் இருந்தது..
"இல்லை நீங்க விவாகரத்தானங்களா? இல்ல விடோவா.. சும்மா தெரிஞ்சுக்கலாம் கேட்டேன்"
'இவகிட்டலாம் அடங்கிப்போனா வேலைக்கு ஆகாது' என்றெண்ணி "என் புருஷன் சித்துனா என் பசங்களுக்கு அப்பா அவரா தான இருக்க முடியும் அனு" என்றாள் தைரியமாக.
"பேசுறதுக்கு வேணா நல்லா இருக்கும். என்ன இருந்தாலும் எங்க மாமாவோட ரத்தம் இல்லயே.. உங்களுக்கு தாலி கட்டுனதுனால மனைவி ஆகிட்டேங்க. ஆனா உங்க பசங்க.." என்று அவளை நோக்க, அமுதி அமைதியானாள்.
"சொல்லுங்க அமுதி.."
"என்ன சொல்லனும் அனு?" என்று பின்னால் வந்து நின்றான் சித்..
தொடரும்..