• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 22

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை...!
சிவகுருநாதன் கௌசல்யா

அத்தியாயம் 22

வாழ்க்கை பல இன்ப துன்பங்களை உள்ளடங்கிய கலவையாகும். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எல்லா செயல்களுக்கும் பலன் நிச்சயம் உண்டு.

"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்" என்ற பழமொழிக்கிணங்க நாம் என்ன செய்கின்றோமோ அதுவே நமக்கும் கிடைக்கும். நாம் ஒருவருக்கு நல்லது செய்தால் நல்லதாகவே கிடைக்கும். மாறாக கேடு விளைவித்தால் நமக்கும் கேடு நிச்சயம்.

அது போல தான் இந்த நள்ளிரவிலும் ஒவ்வொருத்தர் தாங்கள் செய்த செயல்களில் இருந்து கிடைத்த பலன்களில் இருந்தும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தது.

ஐ. சி. யுள் உள்ளே இருந்த மாயாவோ தான் கொல்ல நினைத்த இருவரும் தன்னை காப்பாற்றியதை நினைத்து குற்ற உணர்வாளும், காயம் தந்த வலியாளும், துடித்துக்கொண்டு இருந்தாள் . வெளியே இருந்த மாயாவின் அம்மா திரும்பி வந்த வாசுதேவனிடம் டாக்டர் கூறியதை கூறி வேதனை அடைந்தார். தங்கள் ஒரே மகளை ஒழுங்காக வளர்க்காமல் அவளின் பிடிவாதத்திற்கு முன்னுரிமை வழங்கியதால் தான் இந்த நிலை என
இருவரும் தங்கள் மேல் பழியை போட்டுக்கொண்டு வந்தனர்.

சிவராமனோ வர்ஷனும், பார்வதியும் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மனதிலே நொந்துக்கொண்டு இருந்தார். இதில் வெறும் பார்வையாளராக இருந்த கவிநிலாவின் முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை. எல்லா குழந்தைகளுக்கும் தந்தையே முதல் ஹீரோ ஆனால் இன்று அந்த நிலைமை முற்றாக மாறி காசுக்காக குழந்தைகளை பணயம் வைத்த பெயர் வந்து விட்டதை எண்ணி கவலையடைந்தார். நாளை கண்டிப்பாக வாசுதேவ்விடம் பேசி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எண்ணிகொண்டு தனது வீட்டில் உள்ள அலுவலக அறையில் அமர்ந்துக்கொண்டிருந்தார். தனது ஒரே மகன் தனக்கு திருமணமானதை மறைத்ததை நினைத்தும், கணவனின் கேவலமான திருமண ஒப்பந்தத்தை நினைத்தும் பூஜை அறையில் அமர்ந்தவாறு மனதிலே அழுதுகொண்டுடிருந்தார் பார்வதி,
கவியோ நிக்கிலிடம் வீட்டில் நடந்ததை தொலைபேசில் கூறிக்கொண்டு அழுதுக்கொண்டு இருந்தால்.

அங்கே ஆரா அமுதா அகரனிடம் நாளை பேசி சம்மதம் வாங்கிவிடுவாள். இனி எந்த பிரச்னையும் தன் காதலுக்கு இல்லை, அகரன் தனக்கு மட்டுமே சொந்தம் என்று தலையணையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கட்டிலில் புரண்டுக்கொண்டு இருந்தால். ஆனால் அவள் அறியவில்லை நாளை இந்த சந்தோஷம் நிலைக்காதென்று....

அமுதாயழினியோ அகரம் அவளை அம்மா ஸ்தானத்தில் வைத்துள்ளான் என நினைக்கும் போதே ஆனந்த கண்ணீர் ஊற்றியது. இருக்காத பின்ன அவளுக்கு அவனும் அவனுக்கு அவளும் தானே இத்தனை நாள் உறவாக இருந்தனர். இனியாவது அகரம் சந்தோசமா வாழ வேண்டும் என்று உடனடியாக கடவுளிடம் கோரிக்கையை வைத்தாள். பின் உறங்க தயாராகிக்கொண்டு இருக்கும் போது மதுவர்ஷனிடம் இருந்து அழைப்பு வந்தது.

" என்ன இந்த டைம் கால் பண்ணுறாரு ஏதாச்சும் பிரச்னையோ " என பயந்துக் கூறிக்கொண்டு அழைப்பை எற்றாள்.

" ஹலோ வர்ஷன் என்ன இந்த டைம் கால் பண்ணி இருக்கீங்க " ஏதும் ப்ரோப்லம் இல்லையே? "

வர்ஷன் " ஓய் ரிலாக்ஸ் எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற. எந்த பிரச்சனையும் இல்ல. உன்ன பாக்கணும் போல இருக்குமா. அது தா கால் பண்ணே."

அமுதா சிரித்துக்கொண்டே " என்னங்க விளையாடுறிங்களா இப்ப மிட் நைட். எப்படி பாக்க முடியும்.?. காலைல கோவில் வாங்க மீட் பண்ணுவோ. இப்ப சமத்து புள்ளையா தூங்குக.

வர்ஷன் " ப்ளீஸ் அம்மு நா உங்க வீட்டு மாடில இருந்து தா பேசுறே. எனக்கு கண்டிப்பா உன்ன பாக்கணும் போல இருக்கு பாஸ்ட்டா மேல வா " என தொடர்பை துண்டித்தான். அமுதாக்கு பயத்தில் உடல் வியர்வையால் நனைந்துவிட்டது. சித்திக்கு தெரிந்தால் அவ்வளவு தான். ஆனால் அவனின் குரலில் உயிர் இல்லை. ஏதோ வருத்தத்தில் உள்ளான் என நினைத்துக்கொண்டு மெதுவாக பூனைப்போல் மாடி படி ஏறினால். அங்கே வர்ஷன் அமுதாவை கண்டதும் தாயைக்கண்ட சேயை போல ஓடி வந்து அனைத்துக்கொண்டான். அந்த அணைப்பில் காமம் இல்லை. மாறாக சிறு பிள்ளை தாயை அணைப்பது போல இருந்தது. அமுதா மெதுவாக அவனின் முதுகை தடவிக்கொண்டுத்தால். ஓர் இரு வினாடிகள் இந்த அணைப்பு நீடித்தது.

வர்ஷனுக்கு தன் தந்தை தன்னை நம்பாமல் தன்னை வைத்து அவரின் கம்பனியை காப்பாற்றுவதை நினைத்து வேதனை நெஞ்சை அடைத்தது. தன்னவளை கண்டால் சற்று நிம்மதியாக இருக்கும் என நினைத்தே இந்த அர்த்த ராத்திரிலும் தனது வாகனத்தில் பறந்து வந்து பைப் லைன் வழியாக ஏறி மொட்டைமாடிக்கு வந்தான். வந்ததும் தன்னவளை அழைத்து அவள் வந்தவுடன் அவளை அணைத்து தன்னுடைய மனஅழுத்தத்தை குறைத்துக்கொண்டு இருக்கின்றான். பின்பு அவளை விட்டுவிலகி

"சாரிடா உன்ன தூங்க விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டே " என வருத்தத்துடன் கூறினான்.

அமுதா " ஐயோ!.. என்னங்க ஏ கிட்ட சாரி எல்லா சொல்லிக்கிட்டு. சரி என்ன ப்ரோப்லம் ஏ ஒரு மாறி நெவெர்ஸ்ஸா இருக்கிங்க "

வர்ஷன் " அது ஓன்னும் இல்ல கொஞ்சம் ஒர்க் ப்ரெசர். அது தா இப்ப உன்ன கட்டிப்பிடிச்சதும் ரிலாக்ஸ்ஸா இருக்கு " என கண் சிமிட்டி கூறினான்.

அமுதாக்கு அவன் கூறிய காரணம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் வேலை விஷயத்துக்கு கண்டிப்பாக இவ்வளவு உணர்ச்சிவசப்படமாட்டான். இருந்தும் இப்பொழுது ஏதும் கேட்டு அவனை கஷ்டப்படுத்த வேண்டாம் என முடிவெடுத்து,

" ஓ....... கட்டிப்புடி வைத்தியமோ "

வர்ஷன் " அதே அதே......ம்ம் சரிடா நீ போய்ட்டு தூங்கு நா வந்த வழியாவே போயிறே"

அமுதா " ஓகே... சித்தி கண்ணுல மாட்டுனோ அவ்வளவு தா. நீங்க கவனமா டிரைவ் பண்ணுங்க பாய் " என கூறி வேகமா செல்ல பார்த்தவளை எட்டி கையை பிடித்தான். அவளை வேகமா இழுத்ததும் அவனின் மார்பில் மோதினால் பாவை.. அவள் நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தத்தை வைத்து,

" இப்ப போ "

அமுதாவின் தலை தானாகவே ஆடியது. திரும்பி போன வர்ஷானையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தால். அதன் பின் தன் நெற்றில் உள்ள ஈரத்தை தொட்டுப்பார்த்து சிரித்துக்கொண்டே நித்ராதேவிடம் தஞ்சமடைய சென்றாள்.

என்ன நடந்தாலும் காலம் நின்றுவிடாமல் சூரிய பகவான் கிழக்கில் உதித்து இரவு உறங்கிய அனைவருக்கும் அன்றைய நாளில் செய்ய வேண்டிய கடமைகளை நினைவுப்படுத்தினார். இரவு அலுவலக அறையில் உள்ள மேசையில் தலைவைத்து உறங்கிய சிவராமனுக்கு கண்விழித்ததும் சில வினாடிகள் தான் இருந்தயிடம் புரியவே சில வினாடிகள் சென்றன. கடிகாரத்தை பார்த்தார். மணி காலை ஏழைக் காட்டியது. இவ்வளவு நேரம் உறங்கி விட்டோம் என வேகமாக எழுந்து கீழே சென்றார்.

எப்பொழுதும் காலையில் தெய்வாம்சமாக காணப்படும் இல்லம் இன்று ஏதோ இருள் அடைந்தது போல தோன்றியது. சிவராமன் கீழே வரும் போது நேற்று எந்த இடத்தில் பார்வதி அமர்ந்து இருந்தாரோ அதே இடத்தில் இன்னும் அமர்ந்து இருந்தார். அவருக்கு தன் மனைவின் நிலையை கண்டதும் நெஞ்சில் சொல்ல முடியாத வேதனை குடிகொண்டது. தினமும் காலைலேயே எழுந்து குளித்து மஞ்சள் பூசி விளக்கேற்றி காப்பியுடன் சிரித்த முகமாக தன்னை எழுப்ப வருபவள் இன்று அந்த முகம் கலை இழந்து காணப்பட்டது. சிவராமனைக் கண்டதும் வேகமாக தனது அறைக்குச் சென்றார். இதற்கு காரணம் தன் கையாலாகாத செயல் என நினைத்து வேகமா புறப்பட சென்றார் வாசுதேவ்வைக் காண.

சிவராமன் எடுக்கும் முடிவு எத்தகையதோ? அந்த முடிவுக்கு வாசுதேவ் சம்மதிப்பாரா? ..... விதியின் விளையாட்டில் கடைசியில் பதில் தெரியும்............

இங்கே ஆராதானா காலையிலேயே குளித்து அழகான வெள்ளை நிற சல்வாரை அணிந்து சிறிய ஜிமிக்கி போட்டு, வெள்ளை நிற மூக்குத்தி மூக்கில் மின்ன, அந்த மோதிரம் உள்ள செயினை கழுத்தில் அணிந்து அளவான ஒப்பானையில் தேவதை போல ஜொலித்துக்கொண்டு அகரனைக்கான தயாராகினால். அவளின் காதல் இன்று நிறைவேறும் என நினைக்கும் போதே சந்தோசத்தில் அவளின் அழகு மேலும் கூடியது.

ஆம் அவள் அம்முவை தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள் தன் தாயை சமாதானம் செய்து.. அவள் தானே அகரனிடம் தனக்காக பேசப் போவது.. அவள் இங்கே இல்லை என்றால் எப்படி தான் அகரனுடன் சேர முடியும் என்ற நினைவுடன் அனைத்து தடைகளையும் தகர்த்து அழைத்து வந்து விட்டாள் அமுதாவை..

"அம்மு அம்மு " என கத்திக்கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்தாள்.

சோபனா " ஏண்டி காலைலயே இப்டி அந்த தரித்திரோ புடிச்ச பேர கூவிட்டு வார " என அவரும் பேசிக்கொண்டே அறையில் இருந்து வந்தார். ஆராவைக் கண்டதும் ஒரு நிமிடம் இமைக்க மறந்தார்.

ஆரா " என்னம்மா இப்டி பாக்குற "

சோபனா "அச்சோ....இவ்வளவு அழக எங்கடி வச்சி இருந்த. ஏ கண்ணே பட்டுரும் போல இருக்கு. சரி எங்க கிளம்பிட்ட. இன்னைக்கு உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி இருக்கு. அதுனால கண்டிப்பாக நேரத்துக்கு வீட்டுக்கு வரணும் சரியா "

ஆரா " வாவ் அம்மா உனக்கும் ஒரு சப்ரைஸ் இருக்கு. ஆமா அம்மு எங்க? "

சோபனா " அடியே நைட்க்கு நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வராங்க. அதுக்கு இப்பவே எல்லா ரெடி பண்ண சொன்னே. அது தா அவ கிட்சேன்ல வேலையா இருக்கா. "

ஆரா " ஐயோ!... அம்மா நீயே ரெடி பண்ணு. அவ ஏ கூட இப்பவே வரணும். அவ வந்து சம்மதம் சொன்னா தா அகரம் என்ன லவ் பண்ண சம்மதிப்பா."

சோபனா " என்ன டி சொல்லுற " என மனதில் பல கேள்விகளை சுமந்துக்கொண்டு கேட்டார்.

ஆரா " அம்மா அகரம் சொன்னா அமுதா வந்து சரினு சொன்னா என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணுவானம். அவனுக்கு அம்மு தா எல்லாமே. சோ அவ சரி சொன்னா அவனுக்கு எந்த பிரச்னையும் இல்ல "


சோபனா " ஓ......... உன்ன அவனும் விரும்புறானா ?..... "

ஆரா "ஹ்ம்ம்ம் ஆமா அம்மா. அவனுக்கு அமுதா ஏதாச்சும் நினைச்சிருவான்னு தா பயம். அவ ஓகே சொன்ன ஏ லவ் சக்சஸ். "

திடீரென கணீர் என்ற சத்தத்துடன் ஆரா "அம்மா " என்று அலறியப்படி தள்ளி விழுந்தாள். என்ன நடந்தது என்றே அவளுக்கு விளங்கவில்லை. தலை சுற்றியது கண்ணம் எரிந்தது. அப்பொழுது தான் உணர்ந்தால் அவளை அடித்தது அவளின் பாசமான தாய் சோபனா என்று. அவர் கோவத்தின் உச்சத்தில் நின்றுக்கொண்டு இருந்தார். ஆரா அலறிய சத்தத்தில் சமையல் அறையில் இருந்த அமுதா என்னவோ ஏதோ என்று ஓடி வந்தாள் நடுக்கூடத்துக்கு.

அமுதா " ஆச்சோ..... அடி பட்டுட்டா.. "

சோபனா " நில்லுடி ஆங்கயே.... இதுக்கு எல்லா காரணமும் நீ தா....இவள முத கவனிச்சிட்டு அப்புறமா ஓ கிட்ட வாரே. "
ஆரா இவ்வளவு நாள் அடிக்காத அம்மா இன்று அடித்ததை எண்ணி அதிர்ச்சில் இருந்தால்.

சோபனா " என்ன டி அந்த பிச்சைக்கார நாய கல்யாணம் பண்ண போறியா?.. வெக்கமா இல்ல எனக்கு பொறந்துட்டு இப்டி இருக்க. ஒனக்கு ஓ அப்பே புத்தி தானே இருக்கு.. நா இப்ப சொல்லுறே இன்னைக்கு வாரதே உன்ன பொண்ணு பாக்க தா. ஒழுங்கா நா காட்டுறவனுக்கு கழுத்த நீட்டு "

அமுதாக்கு அகரனை அவள் சித்தி நாய் என்று கூறியதை கேட்டதும் கோவம் வந்துவிட்டது. இருந்தும் இப்பொழுதும் மௌனம் காத்தாள். ஆனால் தனக்கு இன்று திருமணம் நிச்சயக்கப்படுவதை கேட்டதும் துடித்துவிட்டாள் ஆரா. கோவமாக எழுந்து,

ஆரா " யார கேட்டு இந்த முடிவுக்கு வந்த. எனக்கு விருப்பம் இல்ல. உனக்கு தெரியும் தானே நா அகரன லவ் பண்ணது. இப்ப இப்டி பேசுற நா கல்யாணம் பண் ணா அகரன தவிர யாரையும் பண்ண மாட்டே "

சோபனா "ஆமா தெரியும். ஆனா நீ மட்டும் தா அப்டி சொல்லி சுத்திக்கிட்டு இருந்த. அவே உன்ன கண்டுக்கவே இல்ல. உனக்கு இப்ப சொன்னாலும் புரியாது. அவே கண்டுக்காம இருந்தானால நீ கொஞ்ச நாள்ல மாறிருவனு நினைச்சே... ஆனா நீ கல்யாணம்னு வந்து நிக்குற. அவனுக்கு இருக்கு. பணக்கார வீட்டு பொண்ணு கேக்குதோ..

ஆரா "ஐயோ!.. அம்மா அவே பின்னாடி சுத்துனது நா. அவனுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்ல. அகரன் ஒன்னும் பணத்தாச புடிச்சவன் இல்ல. ஏ வாழ்க்கைல கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது அகரன் கூட மட்டும் தா.

சோபனா "இங்க பாரு என்ன மீறி அந்த அகரன நீ கல்யாணம் பண்ண முடியாது. அது நடக்காது. " என அவளை இழுத்துக்கொண்டு போய்ட்டு அறையில் தள்ளி கதவை அடைத்து சாவியை எடுத்தாள்.

அகரன் ஆரா காதல் கை கூடுமா?......