• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 1

"கூறு கெட்டவன் தான் படிச்சவனா இருப்பான்.. ஏன் நம்ம ஊர்ல மாப்பிள்ளைக்கா பஞ்சம்? என்னத்துக்கு பட்டிணத்துல போய் மாப்பிள்ளைய தேடணும்? என்னால எல்லாம் உங்களை விட்டுட்டு அம்புட்டு தூரம் போக முடியாது.. இங்கனைக்குள்ள எவன் கிடைக்குறானோ அவனை பாருங்க.. நான் கழுத்த நீட்டுதேன்" பாவாடையை உதறி இழுத்து இடுப்பில் சொருகியபடி கூறிவிட்டு நடுவீட்டில் அமர்ந்தாள் கல்யாணி.

"அதான் அப்பா சொல்லுதாக இல்ல.. கம்முன்னு இரேன் டி.. பேசி முடிச்சி வரட்டும்.. அதுக்குள்ள என்ன நாட்டாம பண்ணிட்டு இருக்க?" என தாய் அன்னம் அடித் தொண்டையில் இருந்து பேச,

"நீ சும்மா இருத்தா.. பொம்பள புள்ளைனாலும் அதுக்கும் ஆச இருக்காம போவுமா? அவன்பாட்டுக்கு அசலூர்ல சம்மந்தம் பேசி முடிச்சா என் பேத்தி என்னனு கேட்கமா விட்ருவாளா?" என்று கல்யாணியை இன்னும் ஏற்றிவிட்டார் அவளின் அப்பத்தா வடிவு.

"ஏத்த! நீங்க சும்மா இருங்க.. அவ தான் பொசக் கெட்டத் தனமா பேசுதான்னா.. நீங்க வேற எடுத்து குடுத்துகிட்டு"அன்னம் மாமியாரிடம் கூற,

"யாரும் என்னத்தையும் குடுக்க வேண்டாம்.. என்ன பொருத்தமும் இருந்துட்டு போவட்டும்.. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.. ஊரு விட்டு ஊரு போயி எல்லாம் பொழப்ப பாக்க முடியாது.. அவன் தான் மாப்பிள்ளையா வரணும்னு நீங்க நினைச்சியன்னா ஒன்னு நீங்க கட்டிக்கோங்க.. இல்லின்னா இந்தா வெறும் உரல இடிக்குதே... இந்த அப்பத்தாக்கு காவலுக்கு கட்டி வையுங்க.. என் பேச்சை கேட்காம எவனாவது வீட்டு வாசப்படில கால எடுத்து வைக்கட்டும்.. பொறவு இருக்கு" என்று கூறிய கல்யாணி அன்னம் வேகமாய் விளக்கமாத்துடன் அவளருகே வருவதை பார்த்ததும் எழுந்து ஓடிவிட்டாள் அவள் அறைக்கு.

"அப்பன் வீட்டுல இல்லன்னதும் வாயி எகுறுதோ? வரட்டும் அந்த ஆளு.. உனக்கு இருக்கு இன்னிக்கு" என்றபடி கீழே எறிந்தார் துடப்பத்தை.

"அப்பத்தா!" உள்ளிருந்தே கல்யாணி அப்பத்தாவை துணைக்கு அழைக்க,

"ஏத்தா! என்னத்துக்கு அவள வையுத.. அவ நினைக்கிததும் சரி தான.. நீ சொல்லு.. கட்டி குடுத்த பொறவு அங்க இருந்துட்டு உடம்பு நோவுதுன்னு ஒரு போன போட்டா இங்க இருந்து குதிச்சுகிட்டு ஓடுவியா நீயி? எம்புட்டு நேரமாவும் அங்கன போயி சேர?" என்று தனக்கு தோன்றியதை வடிவு கூற,

"எனக்கு மட்டும் புரியாமலா கிடக்கு.. உங்க புள்ளைய எதுத்து பேச முடியுமாக்கும்.. அதுவும் அந்த ஜாதகக்காரன் வேற இந்த இடம் மாதிரி இன்னும் எத்தன வரனப் பாத்தாலும் கிடைக்காதுன்னு சொல்லி வச்சுட்டான்.. அதுக்கு போறவு எங்க இந்த மனுசனை கையில புடிக்க?" என்றவருக்கும் வெளியூருக்கு மகளை அனுப்புவதை நினைத்து உள்ளுக்குள் கவ்வ தான் செய்தது.

ஆனாலும் மகளுக்கு காட்டி விடவில்லை. ஏற்கனவே ஆடுபவளிடம் இதை சொல்லிவிட்டாள் அப்பனிடமும் எதிர்த்து பேசி விடுவாள்.

வெளியே பேசும் அனைத்து சம்பாசனைகளும் உள்ளே கேட்டுக் கொண்டு தான் இருந்தது கல்யாணிக்கு.

தாயும் தன்னைப் பிரிய விரும்பமாட்டார் என்பது தெரிந்தாலும் தன் எதிர்ப்பைக் காட்டாவிட்டால் ஆட்டுவிக்கும் பொம்மை ஆக்கி விடுவார் தந்தை என்பதாலேயே கிடைக்காது என்றாலும் எதிப்பைக் காட்ட மறக்கமாட்டாள் அவள்.

அரசன் வீட்டுற்குள் நுழையும் பொழுது வடிவு திண்ணையில் அமர்ந்திருந்தவர் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அதை கவனித்தாலும் அசட்டை செய்து உள்ளே சென்றார்.

"தண்ணியக் கொண்டு வா டி!" என்ற சத்தத்திற்கு நீருடன் ஓடி வந்தார் அன்னம்.

"ராசு அண்ணே என்ன சொல்லிச்சுங்க?" அன்னம் கேட்க, திண்ணையில் இருந்த வடிவு காதை தீட்டி வைத்துக் கொண்டார் இவர்கள் பக்கம்.

"என்னத்த சொல்லுவாக.. அதான் முடிவு பண்ணியாச்சு இல்ல.. சனிக்கிழமை நாளு நல்லா இருக்காம்.. மாப்பிள்ள வீட்டாளுங்கள வர சொல்லட்டுமான்னு கேட்டாக.. நானும் சரினுட்டேன்.. அன்னைக்கு ஏதாச்சும் தேவைபடுதான்னு பாரு.. என்னவாச்சும் வாங்கணுமான்னு பாத்து கல்யாணிய எழுத சொல்லு.. வாங்கியாறேன்.." என்று அரசன் சொல்ல,

"அவகிட்ட ஒன்னும் கேக்காம என்னத்தலே பண்ணுத நீ? புள்ள மருவிகிட்டு கிடக்கு.. தெரியலையாக்கும் உனக்கு?" என்று அரசன் அருகே வந்து வடிவு சத்தம் போடா,

"புரியாம பேசாத ஆத்தா! வெளியூருங்குறத தவிர என்ன குறய கண்டுட்ட நீ? தங்கமா பாத்துகிடுவாங்க.. நேருல காணாம எண்ணத்தையாவது சொல்லிக்கிட்டு அவளையும் மாத்தி உடாத ஆத்தா" என்றவர்,

"ஏத்தா கல்யாணி" என்று அழைக்க, அனைத்தையும் காதவோரம் நின்று கேட்டவள் தந்தை அருகே வந்தாள்.

"பையன் வீட்டுல போட்டோ குடுத்தாவ.. நீயே மொதல்ல பாரு.. இதப் பாத்து எல்லாம் உன் அப்பன் கல்யாணத்துக்கு சரினு சொல்லல.. வீட்டாளுக மனசு இருக்கு பாரு.. அந்த ஒன்னு தான்.. பையனும் அப்படி தான் இருப்பான்.." என்று அவருக்கு தோன்றியதை எல்லாம் கூற,

ஐயன் இப்போது இலகுவாய் பேசியதில் அவர் மனநிலை அறிந்தவள் மெதுவாய் பக்குவமாய் பேச முயற்சித்தாள்.

ஆம்! முயற்ச்சி தான்.. வீண் முயற்சி ஆனது.

"ஏப்பா! நம்மூர்ல என்ன பயலுங்களா இல்ல? அம்புட்டு தூரத்துக்கு என்னய தள்ளி உடுதீங்க?" கல்யாணி கேட்க,

"அவகளா வந்து கேட்காவ த்தா..அதுவும் மாப்பிள்ளை அளவுக்கு எல்லாம் நம்ம படிப்பு பத்தாதுன்னு சொல்லியும் பொண்ணு மட்டும் குடுங்கன்னு கேக்குதாக.. அவக மனச பாரு.." என்று கூற,

"என்னய வெளியூருக்கு அனுப்ப பாக்கிங்க.. என்னால எப்படி உங்கள விட்டு போய் சுவமா இருக்க முடியும்?" விசும்பலுடன் கேட்டாள் கல்யாணி.

அவள் கோபமாய் கேட்டிருந்தால் அரசன் உதறி தள்ளி இருப்பார்.. அவளின் விசும்பல் ஆயுதமாகி இருந்தது.

"உனக்கு நான் நல்லது செய்யுவேன்னு நம்புதியா இல்லையா த்தா நீயி? விசாரிக்காமலா செய்யுவேன்? தூர இருந்தா நினப்பு விட்டு போயிருமா என்ன? சாயங்கால பஸ்ஸ புடிச்சா காலையில வந்துர போறோம்" என்ற அரசன்,

"புள்ளைக்கு இத கூட எடுத்து சொல்லாம என்ன வேல கிடக்கு உனக்கு?" என அன்னத்திடம் பாய்ந்தார்.

கல்யாணிக்கு அதற்கு மேல் பேச வாய்ப்பு கொடுக்காமல் மனைவியை திட்டிவிட்டு அரசன் உள்ளே சென்றுவிட, அடுத்து என்ன என்று சிந்தித்து நின்றாள் கல்யாணி.

ஒரு மாதத்திற்கு முன் சந்தைக்கு சென்றிருந்த அரசனை பேருந்து நிலையத்தில் வைத்து கண்டார் பவன். அரசனின் பால்யகால நண்பன்.

பொதுவாய் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக அரசன் சொல்ல, சென்னையில் வசிக்கும் தன் தம்பி குடும்பத்தை கூறி தம்பியின் மகனிற்கு அவர் கேட்க, பாத்துக்குவோம் என்றபடி அன்று கிளம்பி விட்டார் அரசன்.

சென்னை என்றதுமே அவருக்கு முதலில் விருப்பம் இல்லை. நீண்ட காலங்களுக்கு பின் பார்த்த நண்பன் மனம் நோகாமல் இருக்க அவர் அந்த பேச்சை அப்படியே விட்டிருக்க, அடுத்த நாளே அலைபேசியில் அழைத்துவிட்டார் பவன்.

நீண்ட பல வார்த்தையாடல்களுக்கு பின் நட்புக்காக மட்டும் அலைபேசியில் வந்த ஜாதகக் குறிப்புடன் பொருத்தம் பார்க்க சென்றவரிடம் இதை போல ஒரு பொருத்தம் எங்கும் கிடைக்காது என்று சொல்லி அனுப்பிவிட்டார் ஜாதகக்காரர்.

அடுத்த ஒரு வாரத்தில் பவனின் சொந்த ஊருக்கு பவன் தம்பியும் தம்பி மனைவியும் இளைய மகனுடன் வந்திருக்க, அரசனுக்கு அழைத்து வந்து பார்த்து பேசும்படி பவன் அழைக்கவும் அரசனும் கிளம்பிவந்துவிட்டார்.

பவன் அவரின் தம்பி சரவணன் உடன் அவரது மனைவி ராணியும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரே அமர்ந்திர்ந்தார் அரசன்.

"வீட்டுல பேசிட்டியா அரசா? எல்லாம் நல்ல செய்தி தான கொண்டு வந்திருக்க?" பவன் கேட்க,

"வீட்டுல எல்லாருக்கும் சம்மதம் தான் டா.. பொருத்தமும் அத்தனையும் இருக்குறதா சொன்னாங்க" என்ற அரசனின் விழுங்கும் பேச்சில்,

"எதுவா இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க சார்.. என்னனு தெரிஞ்சா எங்களால ஆனதை செய்வோம் இல்ல?" என்று சரவணன் கூற,

"இல்ல.. பொம்பள புள்ளனாலும் ஒத்த புள்ளையா போச்சு.. வாய் பேசுனாலும் எங்கள விட்டு இருந்தது இல்ல.. நீங்க சென்னைகாரங்கனு சொன்னது தான் யோசிக்க வேண்டியதா இருக்கு.. வேற எந்த குறையும் இல்ல" என்று அரசனும் மனதில் இருந்ததை கூறி இருந்தார்.

"எப்படினாலும் பொண்ணுன்னா கல்யாணம் பண்றது தானே? கல்யாணியை எங்க பொண்ணா பார்த்துப்போம்" ராணி சிரித்த முகமாய் கூற, அவர் கூறுவது உண்மை என்றதோடு ராணியின் அந்த முகமும் குரலும் என மறுக்க தோன்றவில்லை.

"சரி தான்.. மனசு நல்லதை தட்டி கழிக்க வேண்டாம்னு தான் சொல்லிச்சு.. ன் தான் என்ன என்னவோ யோசிச்சுட்டேன்.. சரி.. நீங்களே பேசி என்னைக்கு பொண்ணு பாக்க வர்றிங்கனு சொல்லுங்க" என்று நல்ல பதிலாய் பேசி விடைபெற்று சென்றிருந்தார்.

"இப்போ என்னத்தா பண்ண போற? உன் அப்பன் கேக்குற மாதிரி தெரியலியே!" என்று வடிவு கல்யாணியிடம் கவலை கொண்டு கூற,

"புள்ளைய நல்லா வளத்து வுட்ருக்க கிழவி.. உன் பேச்ச ஒரு நாளாச்சும் கேக்குதா? எப்படித்தான் தாத்தன் உன்கிட்ட குடும்பம் நடந்துச்சோ" என்று கல்யாணி தகப்பனிடம் காட்ட முடியாத கோபத்தை தகப்பனை பெற்றவளிடம் காட்டினாள்.

"நீங்க தான் அத்த அவளை கெடுக்க போதுமான ஆளு.." என மாமியாரிடம் கூறிய அன்னம்,

"கேட்டல்ல.. சனிக்கிழம தயாரா இரு" என்று மகளிடமும் கூறிவிட்டு உள்ளே சென்றார்.

"சாரி! நான் உன்கிட்ட பிரண்ட்டா தான் பழகினேன்.. உனக்கு இப்படி ஒரு தாட் இருக்கும்னு நான் நினச்சு கூட பார்த்தது இல்ல.." சொல்லிவிட்டு எழுந்து சென்றவளைப் பார்த்து கவலை இல்லாமல் கையில் இருக்கும் கோக்கை உறிஞ்சினான் ப்ரணித்.

"இந்த வெக்கம், மானம், சூடு, சொரணைனு சொல்லுவாங்க இல்ல? அதுல எதாவது ஒன்னு இருந்தா இந்நேரம் இந்த காபி ஷாப்ல இவன் தொங்கி இருக்க வேணாம்?" நண்பன் அருண் மற்றொரு நண்பன் விவேக்கிடம் கேட்க,

"அதெல்லாம் எனக்கு இருக்குன்னு நான் எப்பவாச்சும் சொல்லி இருக்கேனா என்ன?" என்று அசால்ட்டாய் தோள்களை குலுக்கினான் ப்ரணித்.

"எங்களுக்கு இருக்கு டா.. எங்களுக்கு அசிங்கமா இருக்கு.. இத்தோட தொன்னுத்தி ஒன்பது.. இன்னும் ஒருத்தி உன்னை ரிஜெக்ட் பண்ணினா செஞ்சுரி.." விவேக் கூற,

"ஏன் நூறுக்கு மேல நம்பர்ஸ் இல்லையா இல்ல பொண்ணுங்க தான் இல்லையா?" என்றான் ப்ரணித் தனது காதலியை கண்டுபிடித்தே தீருவேன் என்ற முயற்சியில்.

அவன் காதல் யாரோடு என்று எழுதி வைத்தானோ கடவுள்? அதை அறியாமல் விட்டு பின் அறிந்து என பல இன்னல்களை கடந்து எப்போது தெரிந்து கொள்வானோ இந்த மானுடன்.

Thodarum
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
கல்யாணம் செய்து
கொள்ளலாம் ஆனால் தூரம்
கடந்து வேண்டாம் என கூறும் கல்யாணி .....
காதல் வேண்டாம் என பெண்கள்
கழற்றி விட்டாலும்
கவலைப்படாத பிரணித் பிரமாதம் கல்யாணின் கண்களில் காதலை காண்பானோ
கணவன் பிரனித்...
🤩🤩🤩🤩🤩💐
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
கல்யாணம் செய்து
கொள்ளலாம் ஆனால் தூரம்
கடந்து வேண்டாம் என கூறும் கல்யாணி .....
காதல் வேண்டாம் என பெண்கள்
கழற்றி விட்டாலும்
கவலைப்படாத பிரணித் பிரமாதம் கல்யாணின் கண்களில் காதலை காண்பானோ
கணவன் பிரனித்...
🤩🤩🤩🤩🤩💐
😂😂