• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 10

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 10

"அங்கை! ஸ்வீட் எல்லாம் ரெடி தானே?" என ராணி கேட்க,

"எல்லாமே தயாரா இருக்கு மா.. அவங்க வந்தாங்கன்னா சரியா இருக்கும்" என்றார் அங்கை.

"சரி எல்லாம் எடுத்து வை!" என்று கிட்சனில் இருந்து வெளியே வர,

"ராணிமா! என்ன இன்னும் ப்ரணியை காணும்?" என்றார் சரவணன்.

"இப்ப தான் போன் பண்ணேன்ங்க.. மண்டபத்துல இருந்து பிரண்ட்ஸ் எல்லாருமா அவுட்டிங் போனாங்கல்ல.. அங்கே லேட் ஆகிடுச்சாம்.. இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவான்" என்றார்.

"அவங்க வந்த அப்புறம் வந்தா நல்லாவா இருக்கும்? ஆமா ஸ்ரே எங்கே போனான்?"

"அவனை நான் தான் வெளில அனுப்பினேன்.. இப்ப வந்துடுவான்" எனும் பொழுதே வந்துவிட்டான் ஸ்ரேயாஸ்.

"எப்ப வர்றாங்களாம் மா? போன் பண்ணினாங்களா?" என ஸ்ரேயாஸ் கேட்க,

"கிளம்பிட்டாங்களா ஸ்ரே! வர்ற நேரம் தான்.." என்றார் ராணியும்.

"ப்ரணி தான் என்ன சொல்வானோனு இருக்கு எனக்கு" சரவணன் கூற,

"என் மகன் என் பேச்சை கேட்பான்" என அப்போதும் உறுதியாய் கூறினார் ராணி.

"நெய் வாசம் தூக்குது மா!" என்று கிட்சேன் புறமாய் ஸ்ரேயாஸ் செல்ல,

"டேய்! அவங்க வந்துட்டு போகட்டுமே!" என்றார் சரவணன்.

"இவனுக்கு தனியா அங்கையை எடுத்து வைக்க சொன்னேன்ங்க.. இவன் தானே ஸ்வீட்னா விரும்பி சாப்பிடுவான்.." என்றவர் இங்கிருந்தே அங்கைக்கு குரல் கொடுக்க, மைசூர்பாகுடன் வெளிவந்தான் ஸ்ரேயாஸ்.

"ஆமா பியூட்டியும் வர்றாங்க தானே?" என்று ஸ்ரேயாஸ் கேட்க,

"அவங்க இல்லாமலா? பேத்தி கல்யாணத்துக்கு அவங்க தானே முன்னாடி நிற்கணும்? மண்டபத்துல சரியா பேச முடியல.. வரட்டும் பேசலாம்" என்றார் ராணி.

"பத்திரம் த்தா!.. போய்ட்டு சீக்கிரமா வந்துருவோம்" என்று அரசன் கூற,

"அதான் நான் இருக்கேனே மாமா.. நான் பார்த்துக்குறேன்.. நீங்க போய்ட்டு வாங்க" என்று கை காட்டினாள் ரெஜினா.

"ஆத்தா இங்கன இருந்து புள்ளைங்கள பாத்துக்குட்டா நல்லாருக்கும்.. வருவேன்னு அடம் புடிக்குது" என்று அரசன் கூற,

"இங்கே பயப்பட ஒன்னும் இல்ல மச்சான்.. ரெஜி பார்த்துக்குவா.. நீங்க வாங்க.." என்றவர்,

"பேத்தி வாழப் போற வீட்டை பார்க்கணும்னு அப்பத்தாக்கு ஆசை இருக்கும்ல" என்று சிரிக்க,

"அதுலாம் எங்க இவனுக்கு புரிய போது.." என்ற வடிவு,

"சூதனமா இருங்க டி!" என்று பேத்திகளிடம் கூற,

"கட்சி மாறிட்ட இல்ல.. அங்குன போயிட்டு நல்லா பெரிய ஆப்பு வாங்கிட்டு வா" என்று முறைத்தாள் கல்யாணி.

"நீயும் பார்க்க தான டி போற" என வடிவும் முறைத்துக் கொண்டு செல்ல,

"ஆச்சி உனக்கு புடிக்காததை செய்யுமா கல்யாணி?" என்று சமாதானம் செய்தாள் ரெஜினா.

"எல்லாம் செய்யும்.. அதுக்கு புடிச்சிருந்தா போதும்.. என்னவேனா செய்யும்" என்றாள் கல்யாணியும்.

"எனக்கு இந்த கல்யாணம் நடந்தா ரொம்ப சந்தோசம்.. என்னோட நீயும் இந்த ஊர்ல இருப்பியே அதனால.. இல்லைனாலும் உனக்கு புடிச்சமாதிரி நடந்தா சந்தோசம் தான்" என்று ரெஜினா கூற,

"ஒரு பக்கமா வேண்டிக்கோ டி.. சாமியே குழம்பி தவிக்க போவுது" என கிண்டல் செய்து சென்றவர்கள் வரும் வரை நேரத்தை கடத்தி தள்ளினாள் கல்யாணி.

"காமெடி பண்ணாத டா!" என ஸ்ரேயாஸ் கூறும் பொழுது சிரித்த ப்ரணித் அன்னை சொல்லில் அப்படியே நின்றான்.

கல்யாணி குடும்பத்தினர் வருகைக்கு சில நிமிடங்கள் முன்பே வீடு வந்து சேர்ந்தந்திருந்தான் ப்ரணித்.

"என்னம்மா சொல்றிங்க?" என்று மீண்டும் ஒரு முறை கேட்க வைத்தது அன்னை முகத்தில் இருந்த தீவிரம்.

"நிஜமா தான் டா சொல்றேன்.. பொண்ணு வீட்டுல இருந்து கிளம்பிட்டாங்க.. எப்ப வேணா வந்துடுவாங்க" என்று ராணியும் கூற, தந்தையோடு தம்பியையும் திரும்பிப் பார்த்தான் ப்ரணித்.

"முடிவே பண்ணிட்டிங்களா?" ப்ரணித் கேட்க,

"கிட்டத்தட்ட! இன்னும் அவங்க தான் முடிவை சொல்லல" என்று ராணி கூற,

"அப்ப நீங்க முடிவு பண்ணிட்டீங்க இல்ல? ஏன் மா என்கிட்ட சொல்லல?" - ப்ரணித்.

"உன்கிட்ட சொல்லாம என்ன டா நடந்திச்சு.. அதான் கல்யாணியே கால் பண்ணினா இல்ல?"

"ம்மா! ஆனா பேசலையே?"

"பேச விடலைன்னு சொல்லு.. அது யார் தப்பு?" மீண்டும் மீண்டும் அன்னை அவன் வாயை அடைக்க,

"இவ்வளவு சீரியசா பார்ப்பீங்கனு நினைக்கல ம்மா" என்றான் ஏதோ சிந்தித்தவாறு.

"உனக்கான டைம் கொடுத்தாச்சு ப்ரணி! இனியாவது அம்மா சொல்றதை கேளு.. அம்மா சொல்றதை கேட்ப தானே?"

"ம்மா! நீங்க சொல்லி கேட்காம இருப்பேனா? பட் மை ட்ரீம் கேர்ள்?" என்றவன்,

"இட்ஸ் ஓகே! சரி ஓகே! பார்த்துக்கலாம்.. ஆனா எனக்கும் புடிக்கணும்.. டீல் ஓகே?" என்று கேட்க,

"பரவால்லையே! அண்ணாவை ஒத்துக்க வச்சுட்டீங்களே மா!" என்றான் மெச்சுதலாய் ஸ்ரேயாஸ்.

வார்த்தைகளின்றி சரவணனும் மெச்சுதலாய் பார்க்க, ராணி சிரிக்க,

"ஆமா பொண்ணு யார்னு சொன்னிங்க?" என்றான் ப்ரணித்.

"யார்னு இன்னும் சொல்லவே இல்லை ண்ணா.. நாங்க ஊருக்கு போனோம்ல.. அங்கே தான் அண்ணியைப் பார்த்தோம்.. எங்களுக்கு எல்லாம் புடிச்சிருக்கு.. அண்ணி கூட...."

"வெயிட்! வெயிட்! யூ மீன் பட்டிக்காடு?" ப்ரணித் கேட்க,

"நோ ண்ணா! இட்ஸ் ப்யூர் பிளெஸ்டு வில்லேஜ்!" என்றான் திருத்தமாய் ஸ்ரேயாஸ்.

"ஓஹ் காட்! ம்மா! வாட் இஸ் திஸ்?" சலிப்புடன் அதிருப்தியாய் அவன் கேட்க,

"என்ன பிரணி?" என்றார் அன்னை.

"ம்மா ப்ளீஸ்! என்னை தெரியாதா உங்களுக்கு? என் ட்ரீம்ஸ் என்னனு என்னை விட உங்களுக்கு நல்லா தெரியும்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்" என்று ப்ரணித் கூற,

"தெரிஞ்சதனால தான் ஏற்பாடு பண்ணினேன்" என்றவரை ப்ரணித் அப்படியே பார்த்து நிற்க,

"கல்யாணி பத்தி நான் சொல்லும் போது எதுவுமே கேட்காமல் நான் பேசிக்கிறேன் ம்மானு சொன்னியே! அப்ப அம்மா மேல இருந்த நம்பிக்கை இப்ப எங்கே போச்சு?" என்று கேட்டார் அவன் பார்வை புரிந்து.

மெதுவாய் நிதானமாய் யோசித்த பொழுது தன் கனவுகளோடு அந்த ஹரிணியும் நியாபகம் வர, உடன் மதுவும் அவளின் அர்ரெஞ்டு திருமணத்தின் மகிழ்ச்சியும் என சிந்தனைக்குள் நின்றான் ப்ரணித்.

"நீ சந்தோசமா வாழனும்ன்றதை தவிர அம்மாக்கும் வேற என்ன வேணும் சொல்லு" ராணி கேட்க,

"மதர் செண்டிமெண்ட் வச்சு உன் அம்மா லாக் பண்ணிடுவா போலையே!" என்று ஸ்ரேயாஸிடம் சரவணன் கூற,

"அப்ப அம்மா நல்லது செய்யலைன்னு சொல்றிங்களா ப்பா?" என்றான் ஸ்ரேயாஸ்.

"நீயும் அம்மாபுள்ளை தான்னு நிரூபிச்சிட்ட டா"

"ஐ அண்டர்ஸ்டாண்ட் மா.. ஆனா சட்டுனு சரினு சொல்ல முடியலை.. ஒரே ஒரு சான்ஸ்.. நான் ஒரு டைம் பேசட்டுமா உங்க கல்யாணிகிட்ட.. எனக்கு நிறைய க்வஸ்டின் இருக்கு.. மீன்ஸ்! லைஃப் பத்தி என்னோட தாட்ஸ் எல்லாம் வேற ம்மா!"

"தாராளமா பேசலாம்" என்று ராணி கூறவும் ப்ரணித் புன்னகைக்க,

"ஆனா! இப்ப வர்றவங்களுக்கு எல்லாம் புடிச்சி சம்மதம்னு சொல்லிட்டா நீயும் கல்யாணிகிட்ட பேசிட்டு சம்மதம்ன்ற பதில் தான் சொல்லணும்.. விச் மீன்ஸ் நீ எஸ் மட்டும் தான் சொல்லணும்"

"ம்மா!" என்று ப்ரணித் ஆயாசமாய் அழைக்க,

"அத்தோட மாப்பிள்ளையையும் மாப்பிள்ளை வீட்டையும் தான் பார்க்க வர்ராங்க.. பொன்னையும் போற இடத்துக்கு எல்லாம் கூட்டிட்டு வர மாட்டாங்க.." என்றார் ராணி.

"ப்ச்! என்ன ராணி! அதான் அவன் சொல்றான் இல்ல" மகனுக்காய் சரவணன் பேச,

"அதான்ங்க நானும் சொல்றேன்.. அவன் தாராளமா பேசட்டும்.. ஆனா அவங்க முடிவு தான் எனக்கு முக்கியம்.. எனக்கு என் பையனை தெரியும்" என்ற ராணி,

"எல்லாரும் வந்துட்டாங்க நினைக்குறேன்.. அப்புறமா பேசிக்கலாம் ப்ரணி!" என்று வாசல்பக்கமாய் செல்ல, குழப்பமான மனநிலையுடன் உடன் சென்றான் ப்ரணித்.

"வாங்க! வாங்க!" என்ற அழைப்புக்கு பதில் வாழ்த்தும் வணக்கமுமாய் அனைவரும் உள்ளே நுழைய, பார்த்ததும் வடிவினை கண்டு கொண்டான் ப்ரணித்.

"வாங்க ஆச்சி!" என தெரிந்தவராய் அவரிடம் போய் ப்ரணித் நிற்க,

"எய்யா ராசா!" என்ற வடிவிற்கு அத்தனை சந்தோஷம் அவன் தன்னை கண்டு கொண்டான் என்பதோடு நல்லவிதமாய் பேசியதில்.

உள்ளுக்குள் பல பரிதவிப்பு வடிவிற்கு. கல்யாணி கூறியதை போல இவன் எதுவும் கூறியோ செய்தோ வைத்துவிட கூடாதே என.

இருந்தாலும் கடவுள் மீது மட்டும் நம்பிக்கையை வைத்து எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

"என்ன பியூட்டி! எங்க அண்ணனை புடிச்சிருக்கா? இல்ல பாட்டுப் பாட அப்புறம் டான்ஸ் ஆட எல்லாம் சொல்லனுமா?" ஸ்ரேயாஸ் கிண்டலாய் கேட்க,

"உன்னையத் தான் தேடுனேன்.. என் பேரன் பேச்சு நட எல்லாம் எனக்கு அத்துப்படி அப்பு. நாங்க தான் வந்த உடனயே பாத்து பேசினு ப்ரண்டு ஆயிட்டோம்ல" என்றார் வடிவு.

மெதுவாய் எங்கோ ஒரு மூளையில் முடிச்சு அவிழ்வதை போலிருக்க சத்தமின்றி அவர்கள் பேசுவதை கேட்டபடி இருந்தான் ப்ரணித்.

"நீங்க தான் சொல்லனும்.. நேராவே கேட்குறோம்... உங்களுக்கு எங்களை எங்க பையனைப் புடிச்சிருக்கா? நீங்களும் உடைச்சே சொல்லிடுங்களேன்!" ராணி கேட்க,

"ஏத்தா உன்னைய தான்த்தா எனக்கு ரொம்ப புடிச்சி போச்சி.. கள்ளமில்லாம பேசுத" என வடிவு கொஞ்ச,

"நானும் அங்கனையே சொன்னது தான்.. உங்கள உங்க குடும்பத்தனு எனக்கு பாத்ததுல இருந்து மனசுக்கு சரின்னு நிம்மதி தான் படுது.. அதுவும் தம்பிய பாத்ததும் இன்னும் சந்தோசம்தேன்.. உங்களுக்கு தம்பிக்குன்னு எல்லாருக்கும் சரின்னா இனிம மேல்கொண்டு பேசலாம்" என தன் சம்மதத்தை தெரிவித்தார் அரசன்.

"ம்மா! மார்னிங் ஆச்சி கூட ஒரு பொண்ணைப் பார்த்தோமே அது தான் கல்யாணியா?"

அம்மா ஆமாம் என்று சொல்ல வேண்டுமா இல்லை என்று சொல்ல வேண்டுமா என எந்த கேள்வியும் இல்லாது தானே யூகித்து ப்ரணித் கேட்க,

"அழகு டா நீ! எப்படி கண்டுபுடிச்ச?" என்று ராணி கேட்கவும்,

"டோட்டல்லி காலி!" என்றான் அன்னையிடம்.

"ஏன்? கல்யாணிக்கு என்னவாம்?" ராணி கேட்க,

"அந்த ஊருக்கே வர மாட்டேன்னு சொன்னேன்.. அதுக்கு பழி வாங்குற மாதிரி ஒரு வேளையை செஞ்சு வச்சு என்னையும் வச்சு செய்யுறிங்க மா.. ஆச்சி மாதிரியே தான் அந்த பொண்ணும் இருந்துச்சி.. அன்னைக்கே கேட்டேன்ல அந்த பொண்ணு ஸ்லாங் சம்திங் டிப்பரென்ட்னு.. ப்ச்! எப்படி மிஸ் பண்ணினேன்" சிணுங்கலாய் ப்ரணித் கிசுகிசுக்க,

"விச் மீன்ஸ்?" என ஒட்டு கேட்ட ஸ்ரேயாஸ் கேட்க,

"பட்டிகாட்!" என்றான் ஹஸ்கியாய் ப்ரணித்.

"டேய்!" என அன்னை மிரட்ட,

"என்ன சொல்லுதான் என் பேரன்?" என்று வடிவு கேட்க,

"அண்ணா கல்யாணம் எப்பனு கேட்குறாங்க பியுட்டி!" என அன்னைக்கு ஸ்ரேயாஸ் உதவ,

"இட்ஸ் டூ மச் டா!"

"அப்போ உனக்கு இஸ்டம் தானப்பு?" என்ற வடிவின் கேள்விக்கு திரும்பி அன்னையைப் பார்த்தான் ப்ரணித்.

தொடரும்..
 

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
பிரணித் கல்யாணியை கண்டுகிட்டானே, என்ன அழிச்சாட்டியம் பண்ண போறானோ 😳😳😳😳😳😳😳
யார் பண்ண போறாங்களோ 😂😂