அத்தியாயம் 14
"ம்மா! அவ்ளோ தான்.. இப்ப எனக்கு வேற ட்ரெஸ் தரல.. கடுப்பாகிடுவேன்" ப்ரணித் கூற,
"டேய் ஆளுங்க வந்துட்டு இருக்கப்ப டிஷர்ட், ஷார்ட்ஸ்ன்னு கேட்டுட்டு இருக்க.. உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மணி நேரம் தான் ஆகுது" கண்டிக்கும் விதமாய் ராணி கூற,
"ண்ணா! நானே கெத்தா வேஷ்டில நிக்குறேன்.. உனக்கு என்ன?" என்று ஸ்ரேயாஸ் கூற,
"இது கிராமம் ப்ரணி.. வர்றதுல முக்கால்வாசி வயசானவங்க தான்.. அதுவும் அந்த காலத்து ஆளுங்க பத்தி நான் உனக்கு சொல்லனுமா?" என்று ராணி கேட்டார்.
"இவன் எப்ப வேஷ்டி கட்டினான்? இவ்வளவு நேரம் மெயின்டைன் பண்ணினதே பெரிய விஷயம்.. உன் ட்ரெஸ் எல்லாம் அம்மா பேக் பண்ணி கொண்டு வந்திருந்தா ப்ரணி.. அதுல பேண்ட் ஷர்ட் கூட இருக்கு.. அது உனக்கு கம்ஃபார்டேபிள் தானே? அதை மாத்திட்டு வா" என்று கண்ணன் கூறவும்,
"மச் பெட்டெர்!" என்ற ப்ரணித் உள்ளே திரும்ப,
"இரு டா!" என்ற ராணி,
"கல்யாணி!" என்று குரல் கொடுக்க,
"சொல்லுங்க ராணிம்மா!" என வந்தாள் உள்ளிருந்து.
"உன் ரூம்ல ஒரு பேக் வச்சேன்ல? அதுல இவனுக்கு ஒரு டிரஸ் எடுத்து கொடு.. டேய் போ டா" என்று கூற,
சரி என்று சென்றவள் பின்னால் அன்னையைப் பார்த்து சிரித்தபடி சென்றான் ப்ரணித்.
"இம்புட்டு இருக்கு.. எது வேணுமோ எடுத்து போட்டுக்கோங்க" என்று பேகை திறந்து கட்டிலில் அவள் வைக்க, அவள் பாஷையில் மட்டும் முகம் அங்கும் இங்குமாய் சென்று வந்தது ப்ரணித்திற்கு.
"நீ என்ன படிச்சிருக்க?" ப்ரணித் கேட்க,
"தெரியாமத்தேன் கல்யாணம் பண்ணிக்க வந்தீங்களாக்கும் இம்புட்டு தூரத்துக்கு?" என்றாள் ஏற்கனவே கோபமாய் இருந்தவள் அவன் வேண்டும் என்றே கேட்பதாய் நினைத்து.
"நிஜமா தெரியாது.. சொல்லு!" என்று அவன் கேட்க,
"ஸ்கூல் எல்லாம் முடிச்சிட்டேன்.. உங்களுக்கு ரொம்ப கம்மியால்லாம் படிக்காம இல்ல.. உங்களோட படிப்புக்கு ஒரு மூணு நாளு வருசம் தேன் வித்யாசப்படும்.." என்று கூற,
"ஓஹ்! எந்த ஸ்கூல்?" என்றான்.
"எதுக்கு கேக்கீங்க?" என்றாள் சந்தேகமாய்.
"சொல்லு.. சொல்றேன்!" என்று கேட்கவும் அவள் கூற,
"ஓஹ்! ஊருக்கு வெளில இருக்குதே அந்த ஸ்கூலா?" என்றான்.
"ஆமா ஆமா! சீக்கிரம் இத எடுங்க.. வெளியில என்னைய தேடமாட்டாங்க?" கல்யாணி கூற,
"அதெல்லாம் தேட மாட்டாங்க.. ஆமா! இப்படி தான் எப்பவுமே பேசுவியா நீ?"
"இப்டின்னா? தமிழ்ல தான பேசுதேன்.."
"தமிழ் பல வகைப்படும்னு உன் ஊருக்கு வந்த பின்னாடி தான் எனக்கு தெரியுது.. உனக்கு எப்படி சொல்றது? ஆஹ்ன்! இப்ப நான் பேசுறேன்ல... அந்த மாதிரி எல்லாம் பேசுவியா?" என்றவனை மேலிருந்து கீழ் வரை அவள் பார்க்க,
"என்ன பண்ற நீ?" என்றான் அவள் பார்வை புரியாமல்.
"நல்லா தான இருக்கிய? அப்பமே ஒரு சந்தேகம்.. அம்புட்டு படிப்பு, பெரிய ஊருன்னு இருந்துட்டு இங்க எதுக்கு பொண்ணு எடுக்கணுமுன்னு.. இப்போ நீங்க கேக்குதத பாத்தா ஒரு குற இருக்குமோன்னு சந்தேகம் தான் வருது.." என்றாள் அவனை முறைத்து.
"ப்ச்! என்னவோ பேசுற.. அதை புரிஞ்சிக்குறதுக்குள்ள.." என்று அவன் தலையை புரியாமல் அசைக்க,
"முத நாவே இம்புட்டு வித்யாசப்படுதோம்.." என்றவள் விழிகள் எங்கோ பார்த்து இருக்க, கலக்கமும் அதில்.
"இது புரியுது.. நிஜமும் கூட! பட் நமக்கு டைம் இருக்கு" என்று கூறி அவன் புன்னகைக்க, அவனை திரும்பிப் பார்த்தவள் எதுவும் கூறாமல் பேகை அவன் பக்கமாய் நகட்டினாள்.
"உன்னை தானே எடுத்து தர சொன்னாங்க? எடுத்துக் குடு" என்று கைகட்டி நின்றுவிட,
'இவே கொஞ்சம் சேட்டை புடிச்சவனா தான் இருப்பான் போலக்க..' என நினைத்தபடி மேலிருந்த ஒன்றை எடுத்து கொடுக்க, அதை வாங்கிக் கொண்டான்.
"வெளில போக போறியா?" அவன் கேட்க,
"ஏன் போட்டும் விடணுமா? ராணிம்மா அத எல்லாஞ் சொல்லல.. வேணுமுன்னா போட்டுக்கிட்டு வாங்க.." என்றவள் சென்றுவிட, ஒரு சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டான் ப்ரணித்.
அவள் கூறியதன் அர்த்தமும் சொல்லிச் சென்ற விதமும் என அதிர்ந்து நின்றவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது அவள் பாணியில்.
சென்னையில் இருந்து குடும்பமாய் வந்திருந்த வீரனும் அன்றே திருமணம் முடிந்ததும் ஊருக்கு கிளம்பினார்.
"மறந்துடாம நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரணும் எல்லாரும்" என கண்ணகி கூற, சரி என்றாள் கல்யாணி.
ரெஜினாவும் கல்யாணியிடம் வாழ்த்துக் கூறி வீட்டிற்கு அழைத்துவிட்டு விடைபெற்றாள்.
"கிளம்புறேன் டா!" என வந்து நின்றாள் மது தன் கணவனுடன்.
"கிளம்பிட்டியா? சாப்பிட்டீங்களா?" என ப்ரணித் கேட்க,
"அதெல்லாம் ஆச்சு.. அருண், விவேக் ரெண்டும் வர்றேன்னு சொன்னானுங்க.. கார் ஓட்ட எப்படியும் தேவைப்படுமேன்னு சரினு சொல்லிட்டேன்" என்று மது கூற,
"அடியேய்! பாசத்துல கூட்டிட்டு போறான்னு நினச்சா டிரைவரா கூட்டிட்டு போறியா நீ?" என்றான் விவேக்.
"பின்ன! அதுக்காகவாச்சும் யூஸ் ஆகுறீங்களே!" என்ற மது,
"உன் வைஃபை கூப்பிடு டா.. சொல்லிட்டு கிளம்புறோம்" என்றதும் அவன் அழைக்க, அருகில் வந்து நின்றாள்.
"எல்லாரும் கிளம்புறேன்னு சொல்றாங்க" ப்ரணித் கூற,
"இப்போமா? இந்நேரத்துக்கு போயி நடுராத்திரில அங்கன என்ன பண்ண போறிய?தங்கிட்டு போவலாம் தான?" என்று கல்யாணி கேட்க,
அவள் பாஷையில் கண்களை இறுக்க மூடி உதட்டை ஒரு பக்கமாய் வளைத்து பல் கடித்து ஒற்றை கண்ணை திறந்து நண்பர்களைப் பார்க்க,
"சோ ஸ்வீட்! நீங்க கேட்டதே போதும்.. நாங்கல்லாம் ராக்கோழிங்க தான்.. மிட்நைட் எல்லாம் எங்களுக்கு மதியம் பன்னிரண்டு மணி மாதிரி.. அங்கே தானே வரப் போறீங்க.. நீங்களே தெரிஞ்சுப்பிங்க" என பதில் கூறிக் கொண்டிருந்தாள் மது.
அவர்களுக்கு பதில் அளித்து விடை கொடுத்து வடிவு அழைக்கவும் கல்யாணி அந்த பக்கமாய் நகர்ந்து விட,
"வில்லேஜ் இல்ல.. அதான்.. போக போக தான் நம்ம ஸ்லங் வரும்" என ப்ரணித் கல்யாணி பேசியதில் நண்பர்கள் எண்ணம் என்னவாய் இருக்கும் என நினைத்து அவனே விளக்கம் கொடுக்க,
"டேய்! என்ன நீ? எவ்ளோ க்யூட்டா பேசிட்டு போறாங்க.. அதுக்கு போய் எம்பரஸ் ஆகுற.. இன்னும் பழைய ப்ரணியா ட்ரீம்ஸ்லேயே இல்லாம கல்யாணியை நீயும் உன்னை கல்யாணியும் புரிஞ்சிட்டு நிஜ லைஃபை ஜாலியா கொண்டு போங்க.. என் ட்ரீம்ஸ் என்ன ஆகுறதுன்னு அந்த பொண்ணை மாத்த ட்ரை பண்ணிடாத டா.." என்றாள் தோழியாய்.
"ஆமா ப்ரணி! அடுத்தவங்களுக்காக இல்லாம ரியல்லா இருக்காங்க.. நம்ம சிட்டில எத்தனை பொண்ணுங்க இந்த மாதிரி இருப்பாங்க சொல்லு?" என்றான் விவேக்கும்.
"என்ன மதும்மா கிளம்பிட்டீங்களா?" என்று ராணி வர, அவர்களிடமும் விடைபெற்று கிளம்பினர் நண்பர்கள்.
நண்பர்களின் பேச்சு ஒரு புறம் மூளையில் ஓடிக் கொண்டிருந்தாலும் சென்னையில் நட்பு வட்டத்தைத் தாண்டி கல்யாணியின் கல்யாணியிடம் என மற்றவர்கள் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற சிந்தனையில் நின்றான் ப்ரணித்.
கல்யாணியை அன்னை கூறியதற்காக என்றாலும் முழு மனதாய் ஏற்று கொண்டான் தான். ஆனாலும் அவளின் இந்த பேச்சு மட்டும் ஒரு மூளையில் உறுத்திக் கொண்டிருந்ததை அவனால் தவிர்க்க முடியவில்லை.
பவனிற்கு ஏக சந்தோசம்.. தன் நண்பன் தான் கூறியதைக் கேட்டு தன் தம்பி மகனுக்கு அரசன் பெண் கொடுத்திருக்கிறான் என்பதில்.
திருமண வேலைகள் அனைத்திலும் அவரும் அரசனுடன் இருந்து கலந்து கொண்டு அனைத்து வேலைகளையும் முன்னின்றே நடத்தி இருந்தார்.
"டேய்! நாளு நாளைக்கு அப்புறம் தான் மத்த சடங்கு எல்லாம்.. ஜோசியர் சொன்னதை உன்கிட்ட சொல்ல மறந்துட்டோம்.. புரியுது தானே?" என்று ராணி இருட்டும் நேரம் ப்ரணித் அருகே வர,
"வெரி குட் ம்மா.. எனக்குமே.." என்றவன் வார்த்தைகளை நிறுத்தி விட, ராணி அவனை சந்தேகமாய் பார்த்தார்.
"ஒன்னும் இல்லை ம்மா.. சரினு சொல்ல வந்தேன்" என்றுவிட்டான்.
"ம்ம்! ஊருக்கு சனிக்கிழமை கிளம்பலாம்.. ரெண்டு நாள் தானே? நீ அப்பாக் கூட தங்கிக்கோ.. நான், கல்யாணி அம்மா, கல்யாணி எல்லாரும் அவ ரூம்ல தங்கிக்கிறோம்" என்றார்.
"இது தான் வேணாங்குறது.. என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?" என்று ப்ரணித் முறைக்க,
"இப்ப தான் உன் செஞ்சுரி கதையை எல்லாம் பேசிட்டு இருந்தோம் அருண் அண்ணா கூட.. அப்புறம் எப்படி தெரியாம இருக்கும் ண்ணா உங்களை பத்தி?" என்று வந்தான் ஸ்ரேயாஸ்.
"உனக்கு இங்கே என்ன டா வேலை.." என்று ராணி கேட்க,
"ம்க்கும் நான் என்ன சின்ன குழந்தையா? இந்த இயர் காலேஜ் முடியுது.." என்று ஸ்ரேயாஸ் பெருமைப்பட,
"அதை சொல்லிட்டு போக தான் வந்தியா?" என்றார் ராணி.
"ப்ச்! அவனை விடுங்க ம்மா.. மேரேஜ் முடிஞ்சிருச்சு.. நீங்க சொன்னபடி நான் செஞ்சாச்சு.. சரியா! இப்ப எங்களுக்கான டைம்.. நாங்க பேசிக்க தெரிஞ்சுக்கன்னு நிறைய இருக்கு.. சோ!" என்று கையெடுத்து கும்பிட,
"எனக்கு புரியுது டா நீ சொல்றது.. இதுவே நம்ம வீடுன்னா சரினு விட்ருக்கலாம்.. இது கிரா..."
"ம்மா ப்ளீஸ்! சும்மா என்ன பேசினாலும் கிராமம் கிராமம்ன்னு.. ஏன் கிராமத்துல எல்லாம் கல்யாணமே நடந்தது இல்லையா?" என்று ப்ரணித் கொஞ்சமாய் குரல் உயர்த்த,
"என்னவாம் டா புது மாப்பிளைக்கு? வயிறு வலிக்குதாமோ?" என்று வந்தார் வடிவு.
"ஹாய் பியூட்டி.. நீங்க இன்னும் தூங்கலையா? ஒன்னும் இல்ல அண்ணாக்கு அண்ணி ரூம்ல இடம் வேணுமாம்" என்று ஸ்ரேயாஸ் கூற,
"டேய்! டேய்!" என ராணி தடுக்கும் முன்பு அப்படி அவன் கூறியிருக்க தலையில் அடித்துக் கொண்டான் ப்ரணித்.
"யாத்தே! இத நான் எங்குட்டு போயி சொல்லுவேன்.. நாலு பேருக்கு தெரிஞ்சா..." என்று வடிவு மூக்கை சீந்த ஆரம்பிக்க, கையெடுத்து மொத்தமாய் கும்பிட்ட ப்ரணித் அரசனின் அறைக்கு தானே சென்றுவிட்டான்.
"ஏத்தா! இங்குன ரெண்டு நாளைக்கு நான் காவலுக்கு கிடப்பேன்.. அங்குன போயி உன் மவனுக்கு பாவப்பட்டு உள்ள இடத்த குடுத்துறாத.. சொன்னா சொன்ன மாதிக்கு இருக்கனும் ஆத்தா!" என்ற வடிவு கல்யாணி உடன் இரண்டு பேர் இருந்த போதிலும் அவள் அறைக்கு வெளியேவே பாயை விரித்து படுத்துக் கொண்டார்.
தொடரும்..